Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன். 

வாசகர்கள் முடிவு செய்யட்டும்.

16 hours ago, பெருமாள் said:

அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆

அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே.

மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣

  • Replies 364
  • Views 38.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பாகம் II   ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான  இடைவெளி போதாமையால், ம

  • Thumpalayan
    Thumpalayan

    எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

@goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி…

ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா?

நீங்கள் குறிப்பிட்டவாறு

தமிழ்தேசிய கூட்டமைப்பு 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் மக்கள் கூட்டணி

ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 

வருகை, கருத்துக்கு நன்றி.

இரெண்டு வாரம் இல்லை. மாதம்.

ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான்.

ஒரு ஊக கணிப்புத்தான்.

பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள்.

இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.

 ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது.

பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை”

இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?

உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.

 

5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்).

இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50?

ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?

பிகு

எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நிச்சயமாக இல்லை.

இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன்.

நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல.

5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?

1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம். 

2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது.

3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு.

4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை.

5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை.

6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை.

நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும்.

இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம். 

2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது.

3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு.

4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை.

5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை.

6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை.

நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும்.

இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.

 

இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

//நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//

 

அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..

நல்ல கருத்து

எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது

 

ஆனால் நீங்கள்  குறிப்பிடும் 

(ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்)

இவர்கள்  எத்தனை  வீதம்??

இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...

 

  • கருத்துக்கள உறவுகள்+
On 26/3/2024 at 18:11, goshan_che said:

பாகம் II

 

ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான  இடைவெளி போதாமையால், மடக்கி கொண்டிருக்கும் கால்கள் வலிக்கும்.  அதே விமானப்பயணத்தில் அனுகூலம் யாதெனில், இந்த கால் வலிக்கும் பிரச்சனயை சாட்டி, சிப்பந்திகள் பகுதியில் போய் நின்றபடி, அவர்களிடம் கோப்பி வாங்கி குடித்துக்கொண்டே கடலை போடலாம். 

இப்படியாக இந்த பயணத்தில் அமைந்த கடலைக்காரிதான் தமாரா. பெயருக்கேற்ற தாமரை இலை போன்ற அகன்ற முகம், அதில் சிங்கள வெட்டோடு அழகிய கண்கள். கொஞ்சம் உதட்டாலும், அதிகம் கண்களாலும் பேசிக் கொண்டாள். சீனி மட்டும் இல்லை, பால் இல்லாமல் குடித்தும், அன்று அந்த கோப்பி கசக்கவே இல்லை.

மத்திய கிழக்கு விமானங்களில் இலங்கையர்கள் பணிப்பெண்களாக பொதுவாக வேலை செய்வதில்லை. இதை தமாராவிடம் கேட்ட போது, தானும் சிறிலங்கனில்தான் முன்பு வேலை செய்ததாயும், நிச்சயமற்ற நிலை காரணமாக இங்கே மாறி வந்ததாயும் கூறிக்கொண்டாள். அப்படியே பேச்சு வாக்கில், சிறிலங்கனில் டிக்கெட் போடாதே, செலவை மிச்சம் பிடிக்க they are cutting corners in maintenance (விமானப் பராமரிப்பில் கைவைக்கிறார்கள்) என்பதாயும் ஒரு எச்சரிக்கையை தந்து வைத்தாள் தமாரா.

நீ இங்கே இருக்க நான் ஏன் சிறிலங்கனில் புக் பண்ண வேணும் என ஒரு அசட்டு ஜோக்கை அடித்தாலும்,  தமாரா தந்த அறிவுரையும், இதுவரை வாசித்து அறிந்த விடயங்களும் இலங்கையில் இந்த முறை நிலைமை மிக மோசமாக இருக்கும் என்பதையே கட்டியம் கூறுவதாக மனது நினைத்துகொண்டது.

தமாராவை தவிர அதிகம் அலட்டி கொள்ள ஏதுமற்ற விமானப்பயணம் ஒருவழியாக முடிந்து, கட்டு நாயக்க நோக்கி விமானம் கீழிறங்கி, தென்னை மர உச்சிகள் கண்ணில் புலப்படத்தொடங்க, அத்தனை கிலேசங்களையும் தாண்டி மனதில் ஒரு நேச உணர்வு படர ஆரம்பித்தது.

கட்டுநாயக்காவில் அதிக மாற்றம் ஏதும் இல்லை. பேப்பர் தட்டுப்பாட்டால் உள் நுழையும் சீட்டு முன்னர் தருவதில்லை என்றனர், ஆனால் இப்போ அது தாராளமாக சிதறி கிடந்தது.

ஏலவே நுழைவு அனுமதி எடுத்தபடியால், அதிக அலுப்பின்றி குடிவரவை கடந்து, பொதிகளை எடுத்து கொண்டு, முப்பத்தியொரு டொலருக்கு இரெண்டு வாட் 69 போத்தல்களையும் வாங்கி கொண்டு, அழைக்க வந்திருந்த நண்பனின் வாகனத்தில் ஏறினால்….கண்களின் முன்னே காட்சியாக விரிந்தது இலங்கை.

முதலில், முகத்தில் அறைந்தது போல் ஒரு நல்ல மாற்றம்…விமான நிலையத்தில், வழமையாக ஜனாதிபதிகளின் படம் இருக்கும் இடத்தில் ரணிலின் படத்தை காணவில்லை.

அதேபோல, முன்னர் போல் வீதிகளிலும் தலைவர்களின் ஆளை விட பெரிய பதாதைகளை காணவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதுவும் சிரச டீவி தனது விளம்பரத்துக்காக “பசில் திரும்பி வந்து விட்டார்” என்பதாக ஒரு பாரிய படத்துடன் கூடிய பதாதையை வைத்ததை கண்டேன். 

களனிப் புதியபாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் வழியே நேரடியாக ஏர்போர்ட் ஹைவேயில் இருந்து பேஸ்லைன் வீதிக்கு வாகன நெரிசலை ஓரளவு தவிர்த்து இறங்க கூடியதாக உள்ளது.  

இங்கே இருந்து பொரளை வழியாக, தமிழர் தலைநகரமாகிய வெள்ளவத்தைக்கு போகும் வழியில், 2010களுக்கு முந்திய காலம் போல அன்றி, கடைகள், வீடுகள் என பலதில் வெளிப்படையான தமிழர் அடையாளங்களினை பார்க்க முடிகிறது. நரெஹேன்பிட்ட, கிருலப்பன, திம்பிரிகசாய, ராஜகிரிய வரையும், மறுபுறம் பம்பலபிட்டிய தொடங்கி, கிட்டதட்ட இரத்மலான தாண்டி, மொரட்டுவ ஆரம்பம் வரையும் காலி வீதியின் இருமருங்கிலும் தமிழர் “ஆக்கிரமிப்பு”🤣, நடந்துள்ளமையை தெளிவாக காணமுடிகிறது. 

களனிப் பாலமும், அதன் நேர் எதிர் திசையில் இருக்கும் தாமரை கோபுரமும் இரவில் அலங்கார விளக்குகளால் ஜொலி, ஜொலிக்கிறது. மின்சார தட்டுப்பாடு உள்ள நாட்டில் இது ஏன்? யாரும் கவலை கொள்வதாக தெரியவில்லை.

போன மாதம் மக்களுக்கான மின்சார கட்டணத்தை 25% ஆல் குறைத்ததாக ஒரு செய்தியையும் படித்தேன்.

இந்த முறை யாழ்பாணம் போனால் எப்படியும் ஒரு டிஜே நைட்டில் கலந்து கொள்ளவேண்டும் என நினைத்திருந்தேன்.

ஆனால் யாழில் இப்படி எதுவும் நானிருந்த காலத்தில் ஏற்பாடாகவில்லை. ஆனால் ஒரு கலை நிகழ்ச்சிக்கு விஐபி வரிசையில் டிக்கெட் இனாமாக வந்தது என போய், பெரும்பாடாகி போய்விட்டது 🤣.  இனாமாக டிக்கெட் தந்தவருக்காக மேலதிக தகவல்களை தவிர்கிறேன்.

ஆனால் கொழும்பில் சில தமிழ் டிஜே நைட்டுகளில் கலந்து கொள்ள முடிந்தது. ஆண்களும், பெண்களும் வரம்பை மீறியும் மீறாமலும் மகிழ்ந்திருந்தார்கள்.

வெளிப்படையாக அதீத போதை பொருட்கள் பாவிப்பதை இந்த இடங்களில் நான் காணவில்லை. ஆனால் எங்கும் பரவலாக சிவ மூலிகைப்பாவனை இருக்கிறது. மது, தண்ணீராக ஓடுகிறது.

யாழிலும் எல்லாரும் போதை பொருளை இட்டு கதைக்கிறார்கள். ஆனால் ஐரோப்பிய நகர்களில் வெள்ளி இரவுகளில் தெரிவதை போல் அப்பட்டமாக இது தெரியவில்லை.

ஆனால் ஒவ்வொருவரும் அவர்கள் நட்பு வட்டத்தில் இப்படி நாசமாகிய ஒரு இளையோரை பற்றி சொல்லும் அளவுக்கு நிலமை மோசமாகவே உள்ளது.

கொழும்பில் மூலைக்கு மூலை பெட்டிங் (சூது) கடைகள், ஸ்பா எனப்படும் மசாஜ் மையங்கள் உள்ளன. வடக்கு, கிழக்கில் இதை நான் காணவில்லை.

ஆனால், யாழிலும், மட்டகளப்பிலும் சில பிரபல விடுதிகளை சொல்லி, அங்கே பள்ளிகூட வயது பெண் பிள்ளைகள் வந்து போவார்கள் என சிலர் சொன்னார்கள்.  எந்தளவு உண்மை என தெரியவில்லை.

ஆனால் வடக்கு, கிழக்கில் ஒவ்வொரு முறை போகும் போதும், சில விடயங்கள் மேலும் மேலும் தளர்வதை உணர முடிந்தது.

ஆனால் புலம்பெயர் நாட்டில் சிலர் சித்தரிப்பதை போல், எல்லாமும் நாசாமாகி விட்டது என்பதும் இல்லை.

கொழும்பு, மேல் மாகாணத்தை தாண்டியும் சில சிங்கள பகுதிகளில் இந்த முறை நேரம் செலவிட்டேன். அம்பலாங்கொட போன்ற 99% சிங்கள மக்கள் வசிக்கும் இடங்களில் அடுக்கடுக்காக தமிழர் நகைக்கடைகள் இருந்தன. அதே போல் அனுராதபுரத்தில், பொலநறுவையில், கெக்கிராவ போன்ற இடங்களில் முஸ்லிம் மக்கள், வியாபாரங்கள், மசூதிகள் என பரவலாக வெளிப்படையாக காண முடிந்தது. சிலாபம் போன்ற இடங்களில் தமிழ், முஸ்லிம் பெயர்களில் கடைகளை கண்டேன்.

பெளத்த மதத்தின் மீதான பற்று, சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் அப்படியே உள்ளதை மத அனுஸ்டானங்களும், ஞாயிறு பள்ளிகளும் காட்டி நிற்கிறன. கொழும்பின் மதச்சார்பற்ற பிரபல பாடசாலைகளில் கூட, மாதாந்த பிரித் உட்பட பல வகையில் மதம் புகுத்தபடுவதாக பலர் விசனப்பட்டனர்.

 மேல்மாகாண, மலையகத்தில் இருந்து மேல்மாகாணம் வந்த தமிழர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு படி மேலே போயுள்ளனர். அதே போல் முஸ்லிம் சமூகம், வியாபாரத்தில் பல படி உயர்ந்து நிற்கிறது.

வட கிழக்கு  தமிழ்ச் சமூகமும் அவ்வளவு மோசமில்லை. 

ஆனால் ஓட்டு மொத்த இலங்கையும் வெளி நாட்டு மோகத்தில் தவிக்கிறது.

நிற்க,

நாட்டில் வறுமை தலைவிரித்தாடும், வீதி எங்கும் பிச்சைகாரர் இருப்பர், 80 களில் சென்னை தி. நகர் போனால் கிடைக்கும் அனுபவம் கிடைக்கும் என நினைத்துப்போன எனக்கு, அப்படி எந்த அனுபவமும் கிடைக்கவில்லை.

பிச்சைகாரர் எண்ணிக்கை முன்னர் போலவே உள்ளது. இலண்டனில் வீதி விளக்கில் நிற்போர் அளவுக்குத்தான்  இருப்பதாக படுகிறது.

அடிக்கடி வேலை நிறுத்தங்கள் வருகிறது. ஆனால் ஓடும் போது ரயில் பஸ்சுகள் ஓரளவு நேரத்துக்கு ஓடுகிறன.

யாழ், கல்முனை/அக்கரைபற்றுக்கு நல்ல பஸ்சுகள் ஓடுகிறன. அதுவும் அக்கரைபற்றுக்கு, தெற்கு விரைவு  சாலை வழியாக, விரைவாக, சுகமாக போக முடிகிறது.

குருநாகலவில் ஒரு கொஞ்ச தூரம் கண்டி விரைவுச்சாலையின் ஒரு பகுதி மட்டும் பாவனைக்கு வந்து, தொங்கி கொண்டிருக்கிறது. ஆனால் யாழ் பஸ் புத்தளம் வழியேதான் போகிறது. புத்தளம், அனுராதபுரம் இடையே உள்ள சேர்வீஸ் நிலையம், நல்ல தரமாயும், சுத்தமான கழிவறையுடனும் உள்ளது.

அதேபோல் மாத்தறை விரைவுச்சாலையில் மேநாட்டு பாணியில் மிக திறமான சேர்விஸ் நிலையங்கள் இரு பக்கமும் உள்ளன.

மருந்துகள் உட்பட எந்த பொருளும் இல்லை என்று இல்லை. ஆனால் எல்லாமுமே 2019 உடன் ஒப்பிடின் குறைந்த பட்சம் மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது.

மேநாடுகளில் சாமான்யர்களின் பொருளாதாரத்தை பாணின் விலையை கொண்டு மதிப்பீடு செய்யும் ஒரு அடிப்படையான முறை உள்ளது.

இலங்கையில் அதை மாட்டிறைச்சி கொத்து ரொட்டியின் விலையை கொண்டு அணுகலாம் என நினைக்கிறேன். முன்னர் 250-350 என இருந்த விலை இப்போ, 850-1000 ஆகி உள்ளது. அதே போல் 100க்கு கீழே இருந்த லீட்டர் பெற்றோல், இப்போ 400க்கு அருகே.

ஆனால் மாதச்சம்பளம் இந்த அளவால் அதிகரிக்கவில்லை. 

ஆனாலும் பட்டினிசாவு, பிச்சை எடுக்கும் நிலை என்று பரவலாக இல்லை.

அப்படியாயின் எப்படி சமாளிக்கிறார்கள்?

பலரிடம் நயமாக கேட்ட போது, ரோலிங், கடன் அட்டை, சிலதை குறைத்துள்ளோம் என்பது பதிலாக வருகிறது. இதில் முதல் இரெண்டையும் அதிக காலம் செய்ய முடியாது. உண்மையில் மாத சம்பள ஆட்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் சமாளிக்கிறார்கள்.

சகல கடைகளிலும், நாடெங்கிலும் சனம். பொருட்கள் வாங்குதலில், உணவு கடைகளில், விழாக்களில், திருவிழாக்களில், திருமணங்களில்….ஒரு குறையும் தெரியவில்லை.

ஒரு எள்ளுபாகு 50 ரூபாய் என்றதும் ஒரு கணம் ஜேர்க் ஆகவே செய்தது. ஆனால் கல்கிசை-வெள்ளவத்த பஸ் கட்டணம் 70 ரூபா என்றால் கணக்கு சரியாகவே தெரிந்தது.

அம்மாச்சியில் மட்டும் எல்லாமுமே கொள்ளை மலிவு. வெளியே குறைந்தது 400 விற்கும் பப்பாசி பழ ஜூஸ், இங்கே 100! எப்படி முடிகிறதோ தெரியவில்லை.

பொரித்த கச்சான் 100 கிராம் 100 ரூபாய், மஞ்சள் கடலை 100 கிராம் 150 ரூபாய், அவித்த சுண்டல் குறைந்த அளவு விலை 100 - என முன்னர் 20 ரூபாய் இருந்த இடத்தில் இப்போ 100 ரூபாய் இருக்கிறது.

வாகனங்கள் இறக்குமதி இல்லை என்பதால் இன்னும் அதிகமாக விலை ஏறி உள்ளன. தகவல் தொழில் நுட்ப disruptive technologies ஆகிய ஊபர், ஊபர் உணவு, பிக் மி என்பன யாழ் உட்பட எங்கும் கிடைக்கிறது.

ஓரளவு பெயர் உள்ள கடைகளில் எல்லாம் contactless அட்டைகள் நாடெங்கும் பாவிக்க முடிகிறது ( தனியே பூட்சிட்டி, கீள்ஸ் மட்டும் அல்ல, உள்ளூர் ஆட்களின் சுப்பர் மார்கெட்டுகளிலும், பேக்கரிகளிலும் கூட).

யாழில் காங்கேசந்துறை கடற்கரையை நேவி பராமரிப்பில் மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்கள்.  ஒரு இராணுவ நகரின் (cantonment) நெடி இருக்கத்தான் செய்கிறது. உள்ளூர்வாசிகளும், இராணுவத்தினரை காண வரும் சிங்கள குடும்பத்தினரும் என ஒரு கலவையாக இருக்கிறது அந்த இடம். நேவியே கோப்பி, சோர்ட் ஈட்ஸ் விற்கிறது.

பண்ணை கடற்கரை பூங்கா அதே போல் தொடர்கிறது. நான் கண்டவரை முன்னிரவில் ஜோடிகள் சுதந்திரமாக கைகோர்த்தபடி ஆபாசம் இல்லாமல் மகிழ்ந்திருக்கிறார்கள். அருகேயே உணவு கடைகளும், சிறுவர் பூங்காவும், நடை பயிலும் பாதையும், அங்காடி பெட்டி கடைகளும் என சந்தோசமாக மக்கள் இருப்பதை காண சந்தோசமாக இருந்தது.

ஆரிய குளமும் நன்றாக உள்ளது. நடைபாதை அருகே பெஞ்சுகள், மின் விளக்குகள், உணவு வண்டிகள் என நன்றாக உள்ளது.

எமிரோன் என்ற ஒரு யாழ் நொறுக்குதீனி கடை மேற்கத்திய பாணியில் பல கடைகளை திறந்துள்ளார்கள். கொழும்பில் கூட. அதே போல் தினேஸ் பேக்கவுசும் ஒரு பாரிய தொகுதியை கொக்குவிலில் திறந்துள்ளனர், மேலும் மூன்று கிளைகள் உள்ளன.

யாழுக்கு பீட்சா ஹட் இரெண்டு வந்துள்ளது.

இலங்கையில் தன் முகவரான அபான்ஸ் உடன் முறுகிகொண்டு மக்டொனால்ஸ் தன் கடைகளை மூடியுள்ளது.

யாழின் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்வதாகவே நான் உணர்கிறேன். வலிகாமத்தில் யாழ் நகரை அண்டிய சிறு நகர்களில், பிரதான வீதியோர காணிகள், கண்ணை மூடி கொண்டு பரப்புக்கு ஒரு கோடி என்கிறார்கள்.

மட்டு நகரை அண்டிய வீதியோர காணிகளிலும் பேர்சுக்கு இதே விலைதான்.

யாழ் தனியார் பேரூந்து நிலையம் இயங்குகிறது. ஆனால் ஒருமாதம் முன்பும், பொது பேரூந்து நிலையத்தை அடைத்து, தனியார் ஆட்கள் போராட்டம் நடத்தி கலைந்து சென்றார்கள்.

தனியார் மருத்துவமனை வியாபாரமும் நாடெங்கும், குறிப்பாக யாழில், மட்டக்களப்பில் கொடி கட்டி பறக்கிறது.

அதே போல் மேல் மாகாணத்தில் இருக்கு சில திருமண மண்டபங்கள்….இலண்டனில் கூட அந்த வகை ஆடம்பரமாக இல்லை.

நீர்கொழும்பு பெரிய முல்ல பகுதி கிரீஸ், சைப்பிரஸ் போல ஒரு இரவு வாழ்க்கை மையம் போல மாறியுள்ளது. தென்னிலங்கையில், களுத்தற முதல் காலி, மிரிச, வெலிகம வரை ரஸ்யர்களால் நிரம்பி வழிகிறது. கடைகளில் சிங்களம், ஆங்கிலம், ரஸ்யனில் போர்டு வைப்பது சாதாரணமாக உள்ளது. ரஸ்யர்கள் தாமே வியாபாரங்களில் ஈடுபட்டு தமது வருவாயை குறைப்பதாக சுதேசிகள் முறையிட்டு இப்போ அரசு விசாரிக்கிறது.

சகலதும் விலை கூடினாலும் வேகமாக ஓடி பொலிசிடம் மாட்டுப்பட்டால் கொடுக்கும் விலை மட்டும் இன்னும் 1000 ரூபாயாகவே உள்ளது.

பொலிஸ் நிலையம், ஓய்வூதிய அலுவலகம், பட்டினசபை - மூன்றுக்கும் போன அனுபவத்தில் அலட்சிய போக்கு முன்பை விட குறைந்துள்ளதாக பட்டது (எனது அதிஸ்டமாகவும் இருக்கலாம்).

அண்மையில் கொழும்பு, யாழ், கண்டி, காலியில் பெரும் கிரிகெட் போர்கள் (பிக் மேட்ச்) நடந்தன.  நான் போனவற்றில் மது ஆறாக ஓடியது. ஆனால் ரகளை குறைவு, இல்லை என்றே சொல்லலாம்.

எல்லாரும் ரணில் அல்லது ஏகேடி என்றே சொல்கிறார்கள். சொந்த வீடு உள்ள, வாடகைக்கு அடுத்த வீட்டை விடும் ஆட்கள் கூட ஏகேடி ஆதரவாய் இருப்பது முரண்நகையாக படுகிறது.

ஆனால் மேல்தட்டு வர்க்கம் ரணிலின் பின்னால் நிற்பது கண்கூடு.

முடிவுரை

வெளியில் இருந்து நினைத்தை போல் நாட்டின் நிலை அவ்வளவு மோசம் இல்லை. அல்லது மோசமாய் இருந்து, ரணில் வந்த பின் முன்னேறியுள்ளது.

நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.

(முற்றும்)

🙏

சுக்ரியா மேரே (b) பையா🙏.

பிளேன் எடுக்க முன்னம் நிறையை மீண்டும் அளந்து, போதிய எரிபொருளோடுதான் எடுப்பினம் என நினைக்கிறன். 

அத்தோட எல்லாரும் முழு அளவுக்கு வெயிட்டோட வாறேல்ல தானே.  கூடவே சின்ன பிள்ளையள், குழந்தையள் எல்லாம் சேர்த்தா…நோ பிராப்ளம்.

அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே.

புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நிச்சயமாக இல்லை.

இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன்.

நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல.

5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 

நன்றி கோசான்!
நேரமின்மை போன்ற பல சிரமங்களின் மத்தியிலும் அனைவரின் கருத்துகளுக்கும் பண்பான முறையில் உங்களது கருத்துகளுக்கு.

பெரும்பாலானோர் இந்த பயணக்கட்டுரைகளை நேரமின்மையால் வாசிப்பதில்லை அவை மிக சிறப்பாக இருந்தாலும், உங்களது கட்டுரை மிக சாதாரணமானது (சுவாரசியத்திற்காக திருப்பங்கள், மர்மங்கள், திகில்கள் என சுவாரசியத்திற்கான எந்த அம்சமும் இல்லாமல்) ஆனால் பலரையும் கவர்வதற்கான காரணம் (அல்லது எனக்கு பிடித்ததிற்கான காரணம்) மக்களின் மேல் கொண்ட அக்கறையால் அந்த சமூகத்தின் பகுதியாக உள்ள அனைவரும் ஒவ்வொருவரும் உங்கள் பயணத்துடன் கூட பயணிக்கிறார்கள்.

எனது கேள்விக்கான காரணம் ஒன்றிரண்டு மாதங்கள் இருக்கலாம், இலஙகையில் உள்ள ஒருவருடன் கதைக்கும் போது இங்கு யாழ்கள உறவு ஒருவரது கருத்தினடிப்படையில் இலங்கையில் அனைத்து வசதிகளும் பிரச்சினை இல்லாமல் கிடைக்கிறதாம் எனக்கேட்டேன், அதற்கு அவர் கோபமாக பதிலளித்தார்.

அவர் சுற்றுலாவுக்காக வருபவர்கள் என நினைத்து பதிலளித்திருந்தார் அவரிடம் நிரந்தரமாக அங்கு தங்குபவர்கள் எனும் கருத்தினை கூட கூற முடியாதளவில் கோபமாக இருந்தார், இத்த்னைக்கும் அவர் என்னிடமிருந்து எந்த உதவியினையும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாவிற்கு சென்றுவரும் ஒருவரை மனதில் வைத்து (அவரது சகோதரர்) கூறினாரா என தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்).

இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50?

ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?

பிகு

எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.

எனக்கு தெரிந்த கடைக்காரர்களிடம் விசாரித்ததில் எள்ளுப்பாகு இங்கேயே தயாரிக்கப்படுகிறது.

மேலும் கடைக்காரர்களின் இலாபம் 40% ற்கும் மேல். விற்பனை விலை £ 3.50 எனில் கொள்வனவு விலை ஆகக் குறைந்தது £ 2.50. மேலும் இங்கு 1kg எள்ளின் விலை £ 12.00 

https://www.tesco.com/groceries/en-GB/products/259652136

மணித்தியாலத்திற்கு ஆகக்குறைந்தது £ 8 சம்பளம் என்று வைத்துக்கொண்டாலும் ஒருவரால் ஒரு மணித்தியாலத்தில் எத்தனை எள்ளுப் பாகினை தயாரிக்க முடியும்? அண்ணளவாக 50 எனின் ஓர் எள்ளுப் பாகினை தயாரிக்கும் செயவு 0.16p.

இனி மின்சாரக் கட்டணம் தயாரிப்பு செய்பவரின் வரி உட்பட மற்றைய செலவுகளை கூட்டிப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/3/2024 at 10:29, goshan_che said:

மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன்.

வெளிநாட்டில் இருந்து நான் நினைத்தது கூட்டமைப்பு கட்சிக்கு வாக்களிப்பவர்கள் எல்லாம் தனி ஈழம் அமைய வேண்டும் என்பவர்கள் . யாழ்களத்தில் வேறு ஒரு திரியில் ஏற்கெனவே நான் எழுதியது தான்  இலங்கைக்கு போன போது தான் தெரியவந்தது தனிநாடு வேண்டும் என்று கேட்காதவர்களும் தமிழ் தேசியகோட்பாட்டை ஆதரிக்காதவர்கள் அது என்ன என்றே தெரியாதவர்கள்  கூட்டமைப்பு கட்சிக்கு வாக்களித்தவர்கள் என்பதை

  • கருத்துக்கள உறவுகள்
On 28/3/2024 at 09:44, ஈழப்பிரியன் said:

உங்களுக்கில்லாததா.

முழுப்பெயரையும்,வங்கி இலக்கம்,கைபேசி இலக்கம் என்பவற்றை உடன் அனுப்புங்க.

ஆமா ...... அவர் சுற்றுலா  போய், உல்லாசம் அனுபவித்து, தான் ரசித்தது ருசித்தது எல்லாம் புளுகுகிறார், நீங்கள் போதாததற்கு பண முதலைகளுக்கு காசு அனுப்புகிறேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்? இவர் இலங்கையில் இருந்த காலத்தில் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது. மற்றவைகளை நினைத்துப்பாருங்கள்.... இவை நாளாந்த வாழ்வில் முக்கியமான பொருட்கள். சாதாரண விவசாயி எரிபொருள் விலையேற்றம், பசளை விலையேற்றம், கூலி அதிகம் கொடுத்து விவசாயத்தை தொடர முடியவில்லை. நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு முறிந்து திணறுகிறது. வெளிநாட்டு உதவியுள்ளவர்கள், சாதாரண பிறந்த நாளையே பிரமாதமாக கொண்டாடுகிறார்கள். சாதாரண மக்கள் தம் அன்றாட வாழ்வை ஓட்ட திணறுகிறார்கள். இவர் சந்தித்தவர்களும், இவரை சந்தித்தவர்களும் பணமுதலைகளே. அவருக்கு எப்படி ஏழைகளின் அவலம் புரியும்? அவர் கொடுத்த தலையங்கத்தை பாருங்கள்..... முன்பு எங்கோ கேட்ட நினைவு வருகிறதா என நன்றாக நினைவு படுத்திப்பாருங்கள். வெளிநாட்டுக்காரருக்கு அவர்களின் வாழ்க்கைச் செலவு சொற்பமாகத்தெரியும், அவர்களுக்கோ  சுமக்க இயலாதது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல ராசா!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

ஆமா ...... அவர் சுற்றுலா  போய், உல்லாசம் அனுபவித்து, தான் ரசித்தது ருசித்தது எல்லாம் புளுகுகிறார், நீங்கள் போதாததற்கு பண முதலைகளுக்கு காசு அனுப்புகிறேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்? இவர் இலங்கையில் இருந்த காலத்தில் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது. மற்றவைகளை நினைத்துப்பாருங்கள்.... இவை நாளாந்த வாழ்வில் முக்கியமான பொருட்கள். சாதாரண விவசாயி எரிபொருள் விலையேற்றம், பசளை விலையேற்றம், கூலி அதிகம் கொடுத்து விவசாயத்தை தொடர முடியவில்லை. நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு முறிந்து திணறுகிறது. வெளிநாட்டு உதவியுள்ளவர்கள், சாதாரண பிறந்த நாளையே பிரமாதமாக கொண்டாடுகிறார்கள். சாதாரண மக்கள் தம் அன்றாட வாழ்வை ஓட்ட திணறுகிறார்கள். இவர் சந்தித்தவர்களும், இவரை சந்தித்தவர்களும் பணமுதலைகளே. அவருக்கு எப்படி ஏழைகளின் அவலம் புரியும்? அவர் கொடுத்த தலையங்கத்தை பாருங்கள்..... முன்பு எங்கோ கேட்ட நினைவு வருகிறதா என நன்றாக நினைவு படுத்திப்பாருங்கள். வெளிநாட்டுக்காரருக்கு அவர்களின் வாழ்க்கைச் செலவு சொற்பமாகத்தெரியும், அவர்களுக்கோ  சுமக்க இயலாதது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல ராசா!

சாதான்… கோசான் கூறுவதை பலர் ஆமோதிக்கிறார்களே? அதுவும் சிறீலங்கா பக்கம் அண்மையில் போகாதவர்கள்…. 

சென்றவருடம் போனவர்களின் கருத்துக்கள் கூட 2024 இன் நிலை என்று மறுதலிக்கப்படுகிறதே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.

இது இருக்கிறது….ஆனால் targeted ஆக இருக்கிறது.

இது மிகவும் தந்திரமாகவும், சிங்களத்தை பொறுத்த வரை வினைத்திறனாகவுக் கையாளப்படுகிறது.

முன்னர் போல் பொத்தாம் பொதுவாக அன்றி.  பாடசாலை மாணவர் முதல் முன்னாள் போராளிகள் வரை புலி ஆதரவு ஆட்கள் என இனம் கண்டு மிரட்டப்படுகிறனர்.  அலைக்கழிக்கப்படுகிறனர். ஒரு அளவுக்கு மேல் உயிரச்சமும் உண்டு.

இதனால் - ஏனையோர் நான் புள்ளி 4 இல் சொன்னது போல் ஏனக்கேன் வம்பு என விலகி நடக்க, இயற்கையாகவே உணர்வு காயடிக்கப்படுகிறது.

இப்போ உங்களையே எடுங்கள். நாளைக்கு இருபாலையில் போய் ஒரு மாசம் நிற்கிறீர்கள்.  ஒருவர் வந்து காணாமல் போனோர் போராட்டத்துக்கு அழைக்கிறார். அவர் ஏலவே புலனாய்வால் நோட்டட்.

நீங்கள் போவீர்களா? நீங்களே போனாலும் அருகில் உள்ள அங்கே வசிப்போர் என்ன சொல்வார்கள்? உங்களால் எமக்கும் தொல்லை என உங்கள் சகவாசத்தை வெட்டி விடுவார்கள் இல்லையா?

இவ்வாறாக உண்மையில் இன விடிவை பற்றி யோசிப்பவர்களை, எமது மக்களே விட்டொதுங்கும் நிலையை மிக தந்திரமாக இலங்கை அமைத்துள்ளது.

இப்படி ஒரு நிலையை 1995 க்கு பின்பே யாழிலும், 1990 க்கு பின்பே மட்டகளப்பு நகரிலும் உருவாக்கி விட்டனர்.

ஆனால் அப்போ இன்னொரு பிந்தளத்தில் புலிகள் இருந்த படியால்- இது முழு வெற்றி அளிக்கவில்லை.

அவர்களின் தோல்விக்கு பின், இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் கூத்து அரசியல் பிண்ணனியில், இளையோர், புதிய சுவாரசியங்கள் அதிகமாக இந்த அணுகுமுறை இலங்கைக்கு கைமேல் பலன் கொடுக்கிறது.

நான் நினைக்கிறேன் மிஞ்சி மிஞ்சி போனால் 5000 பேர் யாழில் புலனாய்வால் கண்காணிக்கப்படக்கூடும். மிகுதியை நம் மக்களே பார்த்து கொள்கிறார்கள்.

இன்னொரு தகவல்: 2009 க்கு பின் நான் இலங்கை அணிக்கு கிரிகெட்டில் சப்போர்ட் செய்வதில்லை. ஆனால் நான் யாழில் பேசிய 30 வயதுக்கு கீழ் பட்ட அனைவரும் (10 பேர் வரையில்) - இலங்கை அணியை,  சி எஸ் கே யை ஆதரிக்கிறனர்.

17 hours ago, vasee said:

நன்றி கோசான்!
நேரமின்மை போன்ற பல சிரமங்களின் மத்தியிலும் அனைவரின் கருத்துகளுக்கும் பண்பான முறையில் உங்களது கருத்துகளுக்கு.

பெரும்பாலானோர் இந்த பயணக்கட்டுரைகளை நேரமின்மையால் வாசிப்பதில்லை அவை மிக சிறப்பாக இருந்தாலும், உங்களது கட்டுரை மிக சாதாரணமானது (சுவாரசியத்திற்காக திருப்பங்கள், மர்மங்கள், திகில்கள் என சுவாரசியத்திற்கான எந்த அம்சமும் இல்லாமல்) ஆனால் பலரையும் கவர்வதற்கான காரணம் (அல்லது எனக்கு பிடித்ததிற்கான காரணம்) மக்களின் மேல் கொண்ட அக்கறையால் அந்த சமூகத்தின் பகுதியாக உள்ள அனைவரும் ஒவ்வொருவரும் உங்கள் பயணத்துடன் கூட பயணிக்கிறார்கள்.

எனது கேள்விக்கான காரணம் ஒன்றிரண்டு மாதங்கள் இருக்கலாம், இலஙகையில் உள்ள ஒருவருடன் கதைக்கும் போது இங்கு யாழ்கள உறவு ஒருவரது கருத்தினடிப்படையில் இலங்கையில் அனைத்து வசதிகளும் பிரச்சினை இல்லாமல் கிடைக்கிறதாம் எனக்கேட்டேன், அதற்கு அவர் கோபமாக பதிலளித்தார்.

அவர் சுற்றுலாவுக்காக வருபவர்கள் என நினைத்து பதிலளித்திருந்தார் அவரிடம் நிரந்தரமாக அங்கு தங்குபவர்கள் எனும் கருத்தினை கூட கூற முடியாதளவில் கோபமாக இருந்தார், இத்த்னைக்கும் அவர் என்னிடமிருந்து எந்த உதவியினையும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாவிற்கு சென்றுவரும் ஒருவரை மனதில் வைத்து (அவரது சகோதரர்) கூறினாரா என தெரியவில்லை.

நன்றி வசி,

நீங்களும், மீராவும், சசியும் நான் சொன்னதை பிழையாக விளங்கி கொண்டுள்ளீர்கள்.

இலங்கையில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை உள்ளது என நான் சொல்லவில்லை. 

எல்லாம் இருக்கிறது…விலை பல மடங்காகி உள்ள்து என்றே சொல்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, MEERA said:

எனக்கு தெரிந்த கடைக்காரர்களிடம் விசாரித்ததில் எள்ளுப்பாகு இங்கேயே தயாரிக்கப்படுகிறது.

மேலும் கடைக்காரர்களின் இலாபம் 40% ற்கும் மேல். விற்பனை விலை £ 3.50 எனில் கொள்வனவு விலை ஆகக் குறைந்தது £ 2.50. மேலும் இங்கு 1kg எள்ளின் விலை £ 12.00 

https://www.tesco.com/groceries/en-GB/products/259652136

மணித்தியாலத்திற்கு ஆகக்குறைந்தது £ 8 சம்பளம் என்று வைத்துக்கொண்டாலும் ஒருவரால் ஒரு மணித்தியாலத்தில் எத்தனை எள்ளுப் பாகினை தயாரிக்க முடியும்? அண்ணளவாக 50 எனின் ஓர் எள்ளுப் பாகினை தயாரிக்கும் செயவு 0.16p.

இனி மின்சாரக் கட்டணம் தயாரிப்பு செய்பவரின் வரி உட்பட மற்றைய செலவுகளை கூட்டிப் பாருங்கள்.

நான் இங்கே தயாரிப்பவை பற்றி எழுதவில்லையே மீரா.

நான் கதைத்தது ஒரு 70 வயதான பெண் குடும்ப தலைவியிடம். 14 நாள், மிகவும் நன்றாக உலர்த்தினால் 1 மாதம் கெடாமல் செய்து தருகின்றார்.

தன்னிடம் வெளிநாட்டுக்கு அனுப்ப என வியாபாரிகள் பக்கெட் பண்ணி ஆனால் லேபல் ஒட்டாமல் பக்கெட் 2500 க்கு வாங்குவதாக சொன்னார். நானும் அதே விலையில் வாங்கினேன்.

இவைதான் இங்கே வேறு லேபல் ஒட்டி 3.50 க்கு விற்கிறது என நான் நினைக்கிறேன்.

வியாபாரிகள் எப்போதுதான் கொள்ளை இலாபம் அடித்ததை ஏற்று கொண்டுளார்கள்?

யுத்த காலத்கில் பனடோலில் கொள்ளை இலாபம் பார்த்த ஆட்கள் அல்லவா நம் வியாபாரிகள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

ஆமா ...... அவர் சுற்றுலா  போய், உல்லாசம் அனுபவித்து, தான் ரசித்தது ருசித்தது எல்லாம் புளுகுகிறார், நீங்கள் போதாததற்கு பண முதலைகளுக்கு காசு அனுப்புகிறேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்? இவர் இலங்கையில் இருந்த காலத்தில் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது. மற்றவைகளை நினைத்துப்பாருங்கள்.... இவை நாளாந்த வாழ்வில் முக்கியமான பொருட்கள். சாதாரண விவசாயி எரிபொருள் விலையேற்றம், பசளை விலையேற்றம், கூலி அதிகம் கொடுத்து விவசாயத்தை தொடர முடியவில்லை. நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு முறிந்து திணறுகிறது. வெளிநாட்டு உதவியுள்ளவர்கள், சாதாரண பிறந்த நாளையே பிரமாதமாக கொண்டாடுகிறார்கள். சாதாரண மக்கள் தம் அன்றாட வாழ்வை ஓட்ட திணறுகிறார்கள். இவர் சந்தித்தவர்களும், இவரை சந்தித்தவர்களும் பணமுதலைகளே. அவருக்கு எப்படி ஏழைகளின் அவலம் புரியும்? அவர் கொடுத்த தலையங்கத்தை பாருங்கள்..... முன்பு எங்கோ கேட்ட நினைவு வருகிறதா என நன்றாக நினைவு படுத்திப்பாருங்கள். வெளிநாட்டுக்காரருக்கு அவர்களின் வாழ்க்கைச் செலவு சொற்பமாகத்தெரியும், அவர்களுக்கோ  சுமக்க இயலாதது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல ராசா!

நீங்கள் ஊருக்கே போகாமல் நான் பண முதலைகளை சந்தித்து விட்டு வந்து எழுதுவதாக நீங்கள் சொல்வது சிரிப்பாக இருக்கிறது.

நான் அத்தனை தரப்பட்ட மக்களுடனும் பழகிய அனுபவத்யே எழுதுகிறேன்.

ஏழ்மையும், வர்க்க வேறுபாடும் இலங்கைக்கு புதிதல்ல.

நான் தெளிவாக எழுதியுள்ளேன்…2019 இல் 20 ரூபா இருந்த இடத்தை இப்போ 100 ரூபா நிரப்பி உள்ளது என.

உண்மையில் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மாச சம்பளம் எடுப்போர், ஓய்வூதியகாரார், வங்கியில் வட்டி எடுத்கு வாழ்வோர் போன்றோர்தான்.

மீன் பிடிப்பவரை பொறுத்தவரை, பெற்றோல் விலை கூடியுள்ளது ஆம், ஆனால் அதகேற்ப மீனின் விலையும் கூடி உள்ளது.

தோட்டம் செய்பவருக்கும் இதேதான்.

கூலி வேலைக்கான கூலி கூட இதே அளவால் கூடித்தான் இருக்கிறது.

யாழின் காங்கேசன் துறை முதல்- கொக்குவில் வரை ரயில் பாதை அருகே உள்ள தோட்டங்கள் எல்லாம் நல்ல பயிர்செய்யகையாகியே உள்ளது.

ஆனால் இலண்டனில் இருப்பது போல் ஏழைகளுக்கான food bank எனப்படும் மக்களால் மக்களுக்கு நடத்தபடும் இலவச உணவு முகாம்கள் அங்கே இல்லை. ஜனசக்தியோ, உணவு முத்திரையோ மக்கள் எப்படியோ சமாளிக்கிறார்கள்.

அதே போல் சோமாலியாவில் இருந்தது போல் என்பும் தோலுமாக மக்கள் இல்லை. 2019 க்கு முன்பு இருந்தததை விட போஷாக்கின்மை கூடி இருப்பதாக நம்பதகு தகவல்கள் சொல்கிறன. ஆனால் பட்டினிச்சாவு நிலை இல்லை.

இதை கண்டு வந்து சொல்ல கொஞ்சம் சமூக அக்கறையும், இரெண்டு கண்ணும் போதும்.

இரெண்டு மாதம் மூட்டை தூக்கி விட்டு அல்லது கரைவலை இழுத்து விட்டு அல்லது தோட்டம் கொத்தி விட்டுத்தான் இதை உணர மில்முடியும் என்பதல்ல.

 

4 hours ago, MEERA said:

சாதான்… கோசான் கூறுவதை பலர் ஆமோதிக்கிறார்களே? அதுவும் சிறீலங்கா பக்கம் அண்மையில் போகாதவர்கள்…. 

சென்றவருடம் போனவர்களின் கருத்துக்கள் கூட 2024 இன் நிலை என்று மறுதலிக்கப்படுகிறதே?

நீங்கள் அங்கேயே வாழும் @பாலபத்ர ஓணாண்டி சொல்வதை மறுதலிக்கிறீர்களே?

நான் சொன்னதை இலங்கையில் இப்போ வாழும் யாழ்கள உறவுகள் யாரேனும் மறுதலிக்கிறார்களா?

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2024 at 14:04, நன்னிச் சோழன் said:

அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே.

புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 

 வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நன்னி.

புத்தர் சிலைகள் பொறுத்த இடங்களில் எல்லாம் முளைத்த படிதான் உள்ளன. ஊரில் ஒரு இடத்திக் காம்ப் அல்லது பொலிஸ் ஸ்டேசன் இருந்தால் அருகிலோ, வெளியிலோ சின்ன புத்தராவது இருப்பார் போல படுகிறது. 

கொழும்பில் ஒவ்வொரு பாடசாலையிலும் ஒன்று வைக்கும் ஒரு மறைமுக வேலைத்திட்டம் உள்ளதாயும். முதலில் சிங்களவர் படிக்கும் பாடசாலைகள் எல்லாவற்றிலும் வைக்கும் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது எனவும் சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
35 minutes ago, goshan_che said:

 வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நன்னி.

புத்தர் சிலைகள் பொறுத்த இடங்களில் எல்லாம் முளைத்த படிதான் உள்ளன. ஊரில் ஒரு இடத்திக் காம்ப் அல்லது பொலிஸ் ஸ்டேசன் இருந்தால் அருகிலோ, வெளியிலோ சின்ன புத்தராவது இருப்பார் போல படுகிறது. 

கொழும்பில் ஒவ்வொரு பாடசாலையிலும் ஒன்று வைக்கும் ஒரு மறைமுக வேலைத்திட்டம் உள்ளதாயும். முதலில் சிங்களவர் படிக்கும் பாடசாலைகள் எல்லாவற்றிலும் வைக்கும் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது எனவும் சொன்னார்கள்.

தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

சாதான்… கோசான் கூறுவதை பலர் ஆமோதிக்கிறார்களே? அதுவும் சிறீலங்கா பக்கம் அண்மையில் போகாதவர்கள்…. 

தாமரை கோபுரம்  எப்படி இருக்கும் என்று  அறியாதவர்களும் செய்திகளில் படித்தறிந்தவர்களும் யாரோ இணைத்த படத்தை பார்த்து  இதெல்லாம் நமக்கு தேவையா? நம்மால் பார்க்க முடியவில்லையே என்று ஏங்குபவர்களும் உண்டு. வெளிநாட்டில் இருந்து வந்து பார்த்து, அனுபவித்து,  ரசிப்பவர்களும் உண்டு. பெரிய வீடுகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் குடிசைகள் யார் கண்ணிலும் படுவதில்லை, பார்க்க விரும்புவதுமில்லை.  உண்மையில் நான் சொன்னவை நான்கண்டு அனுபவித்தவையே, பச்சை மிளகாய் ஒன்று, நூறு கிராம் மரக்கறி என்று வாங்குவோரும் உண்டு. அதையே கவிஞரும் பாடினார், "மாடி வீட்டு யன்னல் கூட சட்டை போட்டிருக்கு, சேரிக்குள்ளே சின்னப்ப பிள்ளை அம்மணமாய் நிண்டிருச்சு." பார்த்த இடமெல்லாம் ஸ்கூட்டியும் மொடல் கைபேசிகளுமாக இளந்தலை முறை ஒன்று  அலையும் அதேநேரம் கால்நடையா அலைவோரும் உண்டு. அவர்களை ஸ்கூட்டியில் போவோர் வினோதமாக பார்க்கிறார்கள். இது சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள். கோசான் சொன்னவைகளில் சில உண்மைகளுமுண்டு,  அதற்காக எல்லாமும் உண்மையில்லை. அவையெல்லாம் அரசாங்கத்தின் சாதனையுமல்ல. அரச உத்தியோகத்தர், ஓய்வூதியக்காரருக்கு   எந்த   சலுகைகளுமில்லை சமுதாயத்தில் அவர்களுக்கு அனுதாபமுமில்லை.  இந்த தாமரை கோபுரத்திலிருந்து அதிக தூரத்திலில்லை அரக்கலியா போராட்டம் நடந்த இடம் அதைப்பற்றி யாரும் கதைப்பதில்லை இப்போ. காப்பற் வீதிகளை பற்றி வியந்து பேசுவோர் அதற்குள் மறைந்து, மறைக்கப்பட்ட உடல்களையும் எலும்புகளையும் நினைப்பதில்லை. இராணுவத்தினரின் உல்லாச விடுதிகளில் தங்கி ரசித்து ருசிப்போர் அது அமைந்த இடத்தின் உரிமையாளர் யார் என கேட்பதுமில்லை அவர்களால் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளை ஆண்டுக்கணக்காய் தேடி தெருவில் அலைவோரை பார்த்து ஆறுதல் சொல்வாருமில்லை. இவையெல்லாம் பார்க்கப்படாத மறைக்கப்பட்ட உண்மையின் மறுபக்கங்கள். நாட்டில் பாதுகாப்பில்லை என்று ஓடியோர் சொர்க்கபுரியாக வர்ணிக்கும் நாள் அதிக தூரமில்லை. இது சிங்களத்தின் ஒரு வெற்றியே. அது எங்கிருந்து இந்தப்பணத்தை பெற்று ஏன் இப்படி அலங்கரிக்கிறது என்று யாரும் சிந்திக்கபோவதுமில்லை. எனது இந்த கருத்துக்கு நூறு எதிர்கருத்துகள் வரலாம் ஆனால் அவர்கள் பார்க்காத கதைக்க விரும்பாத உண்மைகள் இவை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிற்சேர்க்கை II

குப்பை கூழம்.

ஒப்பீட்டளவில் தெற்காசியாவில் சுத்தமான நாடு என் இலங்கையை சொல்லலாம் என்பதை நம்மில் பலர் ஏற்போம் என நினைக்கிறேன்.

ஆனால் இந்த நிலை விரைந்து கெட்டு வருகிறது.

கிராமப்புறங்கள், சிறு நகர்கள் முன்னர் போல இருந்தாலும். நகரங்களில் இது ஒரு பாரிய பிரச்சனையாக மாறி வருகிறது.

யாழில் நகரத்தில் ஒரு குப்பை தொட்டியை தேடி அரை கிலோ மீட்டர் நடந்தாலும் கிடைப்பதில்லை. அதே போல் நடைபாதைகளும் சரியாக இல்லை. என்னதான் வீட்டில் கொசு வலையில் படுத்தாலும், ஏசி பஸ்சில் போனாலும், யாழில் அதிகாலையில் இறங்கி ஆட்டோவுக்கு காத்திருக்கும் அந்த பத்து நிமிடத்தில் - நுளம்புகள் உடலை மொத்தமாகவும், சில்லறையாகவும் துவம்சம் செய்து விடுகிறன.

இவை அருகில் நீர்தேங்கி நிற்கும் வடிகாலில் இருந்து வருவது கண்கூடு.

அதே போல் இன்னும் சில இடங்களில் ஊறணிகள், கேணிகளும் பாசி படர்ந்து, குப்பை சேர்ந்து இளம்பச்சை நிறத்தில் நாற்றம் எடுக்கும் நிலையில் உள்ளதை கண்டேன்.

புகையிலைக்கு தடை என செய்தியில் இரு வருடம் முன் வாசித்த நினைவு. ஆனால் யாழில் புகையிலை பயிர்செய்கை முன்னை போலவே தொடர்கிறது. கேட்டபோது, அறகலவுக்கு பின் தடை பெயரளவில் மட்டுமே என்கிறனர்.

யாழின் சதுப்பு நிலம் என கூறத்தக்க புங்கங்குளம் - நாவற்குழி பகுதியில் சட்ட விரோத குப்பை கொட்டும் போக்கு அதிகரித்திருப்பதாக சொல்கிறனர்.

பொம்மைவெளியின் யாழ் நகரை அண்டிய பகுதி, கோம்பையன் மணல் சுடுகாட்டுக்கு எதிரே உள்ள பகுதிகள்,  கிட்டதட்ட 90% அளவில் நிரப்பி கட்டி, மேட்டு நிலம் போல காட்சி அளிக்கிறது. கட்டிடங்களும் எழும்பியுள்ளன.

 இவை சட்டவிரோத கட்டுமானம் என்றே ஆட்கள் சொல்கிறார்கள். மாரி காலத்தில் வெள்ள காடாக இருக்கும் flood plain இது.

சென்னையை போல வருடம் ஒரு தரம் வெள்ள அனர்த்தம் வரும் நகராக யாழை மாற்றி வருகிறார்களோ என எண்ணத்தோன்றியது.

கொழும்பில் கோட்டா காலத்தை போல அன்றி நகரின் அழகுறுத்தல், தூய்மை குன்றியே உள்ளது. வெள்ளவத்தை, தெகிவளை கால்வாய்கள் உட்பட சகல கால்வாய்களும் கடக்கும் போது நாற்றம் எடுக்கிறன.

சரிந்து விழுந்து பலரை காவு கொண்ட, கொலன்னாவ குப்பை மலை, கைவிடப்பட்டுள்ளது. அதன் மேல் செடிகளும், மரங்களும் வளர்ந்து, முழுவதும் பசுமையாகி ஏதோ காட்டு மலை போல  தோன்றுகிறது.

கொழும்பை விட்டு வெளியேறும் மூன்று ரயில் தடங்களிலும் கணிசமான அளவு தூரம் நகரமயமாதல், குப்பை கொட்டலை அவதானிக்க முடிகிறது.

உலகின் மிக ரம்மியமான ரயில் பயணங்களில் ஒன்று என நான் கருதும் கொழும்பு-காலி ரயில் தடத்தில், தெஹிவள-களுத்தற வரை அழகிய கரையோரம் எங்கும் குப்பையை கொட்டி, பற்றவும் வைத்து, நாசமாக்கி உள்ளார்கள். 

பிரதான வீதிகளை பொறுத்த மட்டில், வடக்கில் நன்றாக உள்ளது, ஆனால் வடக்கை போல அன்றி கிழக்கிலும், தெற்கிலும் வீதிகள் காப்பெட் ஆகி 15 வருடம் ஆக போகிறது. இந்த வீதிகள் பராமரிப்பின்றி உடைய தொடங்கி விட்டன. 2019 இல் அருமையாக இருந்த வீதிகள் சில இப்போ குன்றும் குழியுமாக உள்ளன.

இவற்றை பராமரிக்க அரசிடம் பணம் இல்லை என்பது கண்கூடு. நிலமை இப்படியே தொடர்ந்தால் 90களில் இருந்த நிலைக்கு வீதி கட்டமைப்பு விரைவில் வந்து விடும்.

யாழ்பாண 1ம் வகுப்பு ஏசி ரயில் இருக்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உடைந்தே உள்ளன. இந்திய தரம் பல்லிளிக்கிறது. உண்மையில் இரெண்டாம் வகுப்பு வசதியால இருக்கிறது.

புதிதாக எத்தனையோ பெட்டிகள் போனவருடம் வந்ததாக சொன்னாலும், நான் காணவில்லை. கொழும்பு புறநகர் ரயில் இன்னும் 1990இல் பிரேமதாசா தருவித்த அதே பெட்டிகளுடந்தான் ஓடுகிறது.

யாழ் வவுனியா 1ம் வகுப்பு 1000, இரெண்டாம் வகுப்பு 650, முன்றாம் வகுப்பு 400 என நினைவு.

அரச பஸ், ரயில்களின் நாட்டின் காசில்லாததன்மை தெளிவாக தெரிகிறது.

சுனாமிக்கு பின்னான கடற்கரையோர கட்டுமானத்தடை இருக்கிறதா இல்லையா என தெரியவில்லை அந்தளவுக்கு சட்டபூர்வ/விரோத கட்டுமானங்கள், குடியிருபுகள் எழும்பியுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோசான்.இப்ப தான் இந்தப்பதிவைக் கன்டேன்.முழவதுமாக வாசித்து முடித்தேன்.இங்குள்ள நிலவரங்களை அனுபவ ரீதியாக எழுதியமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2024 at 12:28, goshan_che said:

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….

இலங்கைப் பயணகட்டுரை 

GF7F8LHWMAA6WcS.jpg

கோசான் ஊருக்குப் போன நேரம்தான் தமன்னாவின் நிகழ்ச்சியும் நடந்தது.     
எனக்கென்னவோ பனையில் ஏறி நிற்பது... கோசான் மாதிரி இருக்குது. 😂

இரண்டு தோணியில் கால் வைத்த மாதிரி நிற்கும் நீங்கள், எப்படி இறங்கினீர்கள்.
அந்த இரகசியத்தை எங்களுக்கும் சொல்லுங்களேன்.  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

வணக்கம் கோசான்.இப்ப தான் இந்தப்பதிவைக் கன்டேன்.முழவதுமாக வாசித்து முடித்தேன்.இங்குள்ள நிலவரங்களை அனுபவ ரீதியாக எழுதியமைக்கு நன்றி.

நன்றி சுவை அண்ணா. வரவுக்கும் கருத்துக்கும் மட்டும் அல்ல. நான் எழுதியவை அனுபவபூர்வமானவை என்பதை சொன்னமைக்கும்🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

GF7F8LHWMAA6WcS.jpg

கோசான் ஊருக்குப் போன நேரம்தான் தமன்னாவின் நிகழ்ச்சியும் நடந்தது.     
எனக்கென்னவோ பனையில் ஏறி நிற்பது... கோசான் மாதிரி இருக்குது. 😂

இரண்டு தோணியில் கால் வைத்த மாதிரி நிற்கும் நீங்கள், எப்படி இறங்கினீர்கள்.
அந்த இரகசியத்தை எங்களுக்கும் சொல்லுங்களேன்.  🤣

மேலே இனாமாக கிடைத்த வி ஐ பி டிக்கெட் என்றேனே அப்போதே நாந்தான் அந்த பனங்காட்டு நரி என்பதை கண்டு பிடித்திருக்க வேண்டும் அல்லவா🤣

கந்தர்மடமும் போனேன் - ஆஸ்பத்திரிகள், ஷோரூம்கள் என லக..லக…என்று இருக்கிறது உங்கள் ஊர். யாழ்ப்பாணத்தில் பச்சை குத்த (டட்டூ) இப்போ உங்கள் ஊர் கடை ஒன்றுதானாம் பேமஸ்.

கொழும்பு புதுக்கடையில் சாப்பிட்ட போது, உங்களையும் நீங்கள் சிலாகிக்கும், நான் அனுபவித்திராத மொக்கன் கடையையும் நினைத்துக்கொண்டேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

 

அய்யா அடிக்கடி காணாமல் போய்விடுகின்றீர்கள் 😄

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.