Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2024 at 10:07, MEERA said:

சாதான்… கோசான் கூறுவதை பலர் ஆமோதிக்கிறார்களே? அதுவும் சிறீலங்கா பக்கம் அண்மையில் போகாதவர்கள்…. 

சென்றவருடம் போனவர்களின் கருத்துக்கள் கூட 2024 இன் நிலை என்று மறுதலிக்கப்படுகிறதே?

இது தாயகத்தில் வாழும் யாழ் கள உறவு ஒருவரின் முகநூல் பதிவு. 

நாடு நன்றாக இருக்கிறது என அந்நாட்டு மக்களே சொல்ல வேண்டும் மாறாக நாற்பது நாளில் நாட்டைசுற்றிப்பார்த்து விட்டு மிக பிரமிப்பாக இருக்கிறது என சொல்ல முடியாது.

இன்றைய நடுத்தர வர்க்கத்தினரையும் , நாள்கூலி வரை பிரட்டிப் போட்டுள்ள நாட்டின் பொருளாதார சரிவு மக்களை எப்போது மீட்டெடுக்க முடியும் என சொல்ல முடியாது மாறாக அடகு வைக்கப்பட்டுள்ளார்கள். அடகு வைத்தும் வாழ்வை தொடர்கிறார்கள். என்றே சொல்லலாம்.

கொழும்பில் இருந்து பாரக்கும் போது அழகாக தெரியும் போட் சிற்றி ,தாமரை கோபுரம்,அடுக்கு மாடி உல்லாச விடுதிகள் கொள்ளை அழகுதான் போட்டிருக்கும் காப்பட் வீதிகள் கூட  

ஆனால் உங்கள் நாட்டின் காசின் பெறுமதிக்கு இலங்கை இலகுவாக இருக்கும் தரமாகவும் இருக்கும் ஐம்பது சதம் காசுக்கு வாங்கிய ரொபி ஒன்று 10 ரூபாய். உழைப்புக்கு ஊதியம் என்பது பாம்பாட்டி விரித்திருக்கும் துண்டில் விழும் சில்லறை போல எடுத்து எண்ணுவதற்குள் சிதறி விடுகிறது.

எங்கோ ந சட்டமக்கும் ஓர் மாற்றம் வாழ்வியலில் நிகழ்ந்து விடாதா என ஏங்கும் சாமானிய மக்களே இங்கு இலங்கையில். 

ஆனால் நடப்பதோ எரிவதில் பிடுங்குவது இலாபம் என்ற நோக்கு .

https://www.facebook.com/share/p/QGe169avBt5AkuP7/

Edited by விசுகு
எழுத்து பச்சைப்பிழை

  • Replies 364
  • Views 38k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பாகம் II   ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான  இடைவெளி போதாமையால், ம

  • Thumpalayan
    Thumpalayan

    எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
On 28/3/2024 at 02:18, விசுகு said:

பயணக் கட்டுரை சுருங்கி விட்டது

பயணக்கட்டுரை சுருங்கினாலும் 6 பக்கங்களுக்கு திரி வந்துட்டுது விசுகு அண்ணா🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இது தாயகத்தில் வாழும் யாழ் கள உறவு ஒருவரின் முகநூல் பதிவு. 

நாடு நன்றாக இருக்கிறது என அந்நாட்டு மக்களே சொல்ல வேண்டும் மாறாக நாற்பது நாளில் நாட்டைசுற்றிப்பார்த்து விட்டு மிக பிரமிப்பாக இருக்கிறது என சொல்ல முடியாது.

இன்றைய நடுத்தர வர்க்கத்தினரையும் , நாள்கூலி வரை பிரட்டிப் போட்டுள்ள நாட்டின் பொருளாதார சரிவு மக்களை எப்போது மீட்டெடுக்க முடியும் என சொல்ல முடியாது மாறாக அடகு வைக்கப்பட்டுள்ளார்கள். அடகு வைத்தும் வாழ்வை தொடர்கிறார்கள். என்றே சொல்லலாம்.

கொழும்பில் இருந்து பாரக்கும் போது அழகாக தெரியும் போட் சிற்றி ,தாமரை கோபுரம்,அடுக்கு மாடி உல்லாச விடுதிகள் கொள்ளை அழகுதான் போட்டிருக்கும் காப்பட் வீதிகள் கூட  

ஆனால் உங்கள் நாட்டின் காசின் பெறுமதிக்கு இலங்கை இலகுவாக இருக்கும் தரமாகவும் இருக்கும் ஐம்பது சதம் காசுக்கு வாங்கிய ரொபி ஒன்று 10 ரூபாய். உழைப்புக்கு ஊதியம் என்பது பாம்பாட்டி விரித்திருக்கும் துண்டில் விழும் சில்லறை போல எடுத்து எண்ணுவதற்குள் சிதறி விடுகிறது.

எங்கோ ந சட்டமக்கும் ஓர் மாற்றம் வாழ்வியலில் நிகழ்ந்து விடாதா என ஏங்கும் சாமானிய மக்களே இங்கு இலங்கையில். 

ஆனால் நடப்பதோ எரிவதில் பிடுங்குவது இலாபம் என்ற நோக்கு .

https://www.facebook.com/share/p/QGe169avBt5AkuP7/

 நிறையப் பேரை நெளிய வைத்து விட்டது, யாழிணையத்தில் போட்டால் முகநூலில் ரியாக் ஷன் வரும் அளவுக்கு இருக்கிறது.

இதில் இருக்கும் எல்லாவற்றையும் கோசானின் கட்டுரை சுட்டிக் காட்டியிருக்கிறது. 50 பைசா புல்டோ ரொபி இன்னும் 50 பைசாவுக்கு கிடைக்காதா என்று ஏங்குவதை nostalgia என்று தான் அழைக்க முடியும்😂.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித எதிர்பார்ப்புகளுடன் இலங்கைக்குப் போவதால் அவரவர் அனுபவங்களும் வேறுபடுகிறது.. 

என்னைப் பொறுத்தவரையில் எனது அனுபவங்களின் படி அங்கே உள்ளவர்களுடன் 2009 முன் 2009 பின் பற்றி கதைப்பதை விரும்புவதில்லை, ஏனென்றால் எனது தந்தை கூறுவது நீ இங்கே வந்து ஏதாவது சொல்லிவிட்டு போய்விடுவாய் பிறகு ஏதும் என்றால் எங்களுக்குத் தானே கஷ்டம் என்று. அது உண்மை என்பதால் தேவையில்லாமல் கதைப்பது இல்லை. 

அதேபோல எனது அம்மாவின் மறைவிற்குப் பின் அனேகமாக ஒவ்வொரு வருடமும் போவதால் சில விடயங்கள் /பழக்கவழக்கங்கள்  முன்னரை விட அதிகரித்துள்ளது போலவும்.. சில விடயங்களில் முன்னேற்றம் போல இருந்தாலும் எங்களுடைய அடையாளத்தை இழக்கிறோமோ என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. சில நேரங்களில் வளங்கள் இருந்தும் அநியாயமாக வீணக்குகிறார்கள் அல்லது பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என கவலைப்பட்டிருக்கிறேன். உதாரணத்திற்கு ஆடம்பரங்கள், தேவைக்கு அதிகமான திருமண மண்டபங்கள் தேவைதானா  என்றெல்லாம் யோசிப்பதுண்டு..ஆனால் பல விடயங்களில் அவர்களாக உணராமல் ஒன்றும் கதைத்து பயனில்லை என்பதால் பேசாமல் இருப்பதுண்டு. 

இப்பொழுதெல்லாம் புலம்பெயர்ந்தோர், அங்கே வாழ்வோர் என ஒப்பிட்டுப் பார்ப்பதை கூடியளவு தவிர்ப்பதையே விரும்புகிறேன். ஆனால் ஊருக்கு போய்விட்டு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் எங்களது தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன்.  
 
ஊருக்குப் போகிறேன்.. பார்க்கிறேன்..திரும்ப அவுஸ் வருகிறேன் என்ற ரீதியில்தான் எனது பயணங்கள் உள்ளன. 

ஒரு மாதிரி 5 பக்கங்களையும் வாசித்து எனது எண்ணத்தையும் பகிர்ந்துள்ளேன்.😅

பயண அனுபவத்திற்கு நன்றி கோஷான்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2024 at 03:26, satan said:

பெரிய வீடுகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் குடிசைகள் யார் கண்ணிலும் படுவதில்லை, பார்க்க விரும்புவதுமில்லை. 

கொழும்பில் மாநகர எல்லைக்குள் குடிசைகளை காண்பது மிக அரிதென நினைக்கிறேன். தோட்டங்கள் வத்தைகள் உள்ளன. அங்கேயும் கூட அநேகம் கல்வீடுகளும் அஸ்பெஸ்டட் சீட்டுகளும்தான்.  கோட்ட அபய காலத்திலேயே பலருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டுவிட்டன.

ஆனால் தெகிவளளை, கல்கிசை தாண்டியதும் கடற்கரையோரம், சேரிகள் என சொல்லத்தக்க குடியிருப்புக்கள் உருவாகியுள்ளன. ஆனால் இவை எப்போதும் கொழும்பை அண்டி இருந்தவனவே.

இன்னொரு விடயம். வர்க்க ஏற்றத்தாழ்வு எங்கும் உண்டு. இலண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து அதிக தூரம் போகத்தேவையில்லை, ஒப்பீட்டளவில் மிகவும் வறுமைப்பட்ட இடங்களை அடைய.

On 31/3/2024 at 03:26, satan said:

அதையே கவிஞரும் பாடினார், "மாடி வீட்டு யன்னல் கூட சட்டை போட்டிருக்கு, சேரிக்குள்ளே சின்னப்ப பிள்ளை அம்மணமாய் நிண்டிருச்சு." பார்த்த இடமெல்லாம் ஸ்கூட்டியும் மொடல் கைபேசிகளுமாக இளந்தலை முறை ஒன்று  அலையும் அதேநேரம் கால்நடையா அலைவோரும் உண்டு. அவர்களை ஸ்கூட்டியில் போவோர் வினோதமாக பார்க்கிறார்கள். இது சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள்.

மறுக்க ஏதும்மில்லை. உலகில் சகல நாட்டிலும் இது உண்டு. இலங்கையில் முன்புக்கு அதிகமாக இந்த வேற்றுமை அதிகரித்ததாக நான் உணரவில்லை.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2024 at 03:26, satan said:

கோசான் சொன்னவைகளில் சில உண்மைகளுமுண்டு,  அதற்காக எல்லாமும் உண்மையில்லை. அவையெல்லாம் அரசாங்கத்தின் சாதனையுமல்ல. அரச உத்தியோகத்தர், ஓய்வூதியக்காரருக்கு   எந்த   சலுகைகளுமில்லை சமுதாயத்தில் அவர்களுக்கு அனுதாபமுமில்லை. 

எது உண்மை என்பது ஒவ்வொரு வாசகரும் தாம் இலங்கை போய் பார்க்கும் போது உணரப்படும்.

இவை அரசின் சாதனை என நான் எங்கும் கூறவில்லை.

மாத சம்பளகாரரின் நிலையை சுட்டிக்காட்டி - அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை, ஆனால் வீதிக்கு வராமல் சமாளிக்கிறார்கள் என எழுதியுள்ளேன்.

On 31/3/2024 at 03:26, satan said:

இந்த தாமரை கோபுரத்திலிருந்து அதிக தூரத்திலில்லை அரக்கலியா போராட்டம் நடந்த இடம் அதைப்பற்றி யாரும் கதைப்பதில்லை இப்போ. காப்பற் வீதிகளை பற்றி வியந்து பேசுவோர் அதற்குள் மறைந்து, மறைக்கப்பட்ட உடல்களையும் எலும்புகளையும் நினைப்பதில்லை

இது இலங்கை போவோர் எல்லாம், அல்லது உண்மையை கண்டு வந்து எழுதுவோர் எல்லாம் துரோகிகள் என்ற உங்கள் எண்ணத்தின் வெளிப்பாடே . காப்பெட் ரோட் நல்லாக உள்ளது என்பதால், நடந்த கொடுமைகளை அப்படி எழுதுபவர்கள் மறந்துவிட்டார்கள் என்பதல்ல.

அதேபோல் கொடுமை செய்தார்கள் என்பதால் மட்டும், நல்ல இருக்கும் காப்பெட் ரோட்டை குண்டும் குழியுமாக உள்ளது என எழுதவா முடியும்?

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2024 at 03:26, satan said:

இராணுவத்தினரின் உல்லாச விடுதிகளில் தங்கி ரசித்து ருசிப்போர் அது அமைந்த இடத்தின் உரிமையாளர் யார் என கேட்பதுமில்லை

ஏன் என்றால் அதில் ஒரு நிலம் எனது பாட்டனாரினதும் என்பதால். 

On 31/3/2024 at 03:26, satan said:

இது சிங்களத்தின் ஒரு வெற்றியே.

நான் போய், கண்டு, உண்டு, கேட்டு, உணர்ந்து எழுதியதல்ல…

குறிப்பாக நீங்கள் சிலாகிக்கும் அரகளயவுக்கு பின்…

நாம் எல்லோரும் இலங்கையர் என்ற ஒரு மனோநிலை வடக்கு, கிழக்கில் மிக விரைந்து உருவாகி வருகிறது. உருவாகி விட்டது.

தெற்கிலும் இதே மனநிலை உருவாகதவிடத்து இது தமிழர் இன நலனுக்கு குந்தகமானது.

இதை உருவாக்கியதுதான் சிங்களதின் வெற்றி. அதை நான் கண்டு வந்து சொல்வதல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2024 at 03:26, satan said:

எனது இந்த கருத்துக்கு நூறு எதிர்கருத்துகள் வரலாம்

வராது.

இப்படியான மனநிலையை, கருத்தியலை, கடந்து போகும் நிலைக்கு மக்கள் புலத்திலும், புலம்பெயர் நாட்டிலும் வந்து விட்டார்கள்.

நான் கூட திரியினை தொடங்கியதால் பதில் அளித்தேன்.

இதைப்போல் சிந்திப்போர் யாழுக்கு வருவது அதிகம். இங்கே கூட உங்கள் கருத்துக்கு நாலு பச்சை மட்டும்தான்.

8 hours ago, விசுகு said:

இது தாயகத்தில் வாழும் யாழ் கள உறவு ஒருவரின் முகநூல் பதிவு. 

நாடு நன்றாக இருக்கிறது என அந்நாட்டு மக்களே சொல்ல வேண்டும் மாறாக நாற்பது நாளில் நாட்டைசுற்றிப்பார்த்து விட்டு மிக பிரமிப்பாக இருக்கிறது என சொல்ல முடியாது.

இன்றைய நடுத்தர வர்க்கத்தினரையும் , நாள்கூலி வரை பிரட்டிப் போட்டுள்ள நாட்டின் பொருளாதார சரிவு மக்களை எப்போது மீட்டெடுக்க முடியும் என சொல்ல முடியாது மாறாக அடகு வைக்கப்பட்டுள்ளார்கள். அடகு வைத்தும் வாழ்வை தொடர்கிறார்கள். என்றே சொல்லலாம்.

கொழும்பில் இருந்து பாரக்கும் போது அழகாக தெரியும் போட் சிற்றி ,தாமரை கோபுரம்,அடுக்கு மாடி உல்லாச விடுதிகள் கொள்ளை அழகுதான் போட்டிருக்கும் காப்பட் வீதிகள் கூட  

ஆனால் உங்கள் நாட்டின் காசின் பெறுமதிக்கு இலங்கை இலகுவாக இருக்கும் தரமாகவும் இருக்கும் ஐம்பது சதம் காசுக்கு வாங்கிய ரொபி ஒன்று 10 ரூபாய். உழைப்புக்கு ஊதியம் என்பது பாம்பாட்டி விரித்திருக்கும் துண்டில் விழும் சில்லறை போல எடுத்து எண்ணுவதற்குள் சிதறி விடுகிறது.

எங்கோ ந சட்டமக்கும் ஓர் மாற்றம் வாழ்வியலில் நிகழ்ந்து விடாதா என ஏங்கும் சாமானிய மக்களே இங்கு இலங்கையில். 

ஆனால் நடப்பதோ எரிவதில் பிடுங்குவது இலாபம் என்ற நோக்கு .

https://www.facebook.com/share/p/QGe169avBt5AkuP7/

ஒவ்வொருவருக்கும் அவரவர் அரசியல் உள்ளது இல்லையா?

என்னதான் பைடன் நாட்டை சொர்க்கமாக்கினாலும் டிரம்ப் ஆதரவாளர்கள் குறையாகத்தான் எழுதுவார்கள். 

ஆனால் நாட்டை அடகு வைத்து வாழ்கிறார்கள் என்பதில் உடன்பாடே.

அடகு இல்லை, பலாலியில் இருந்து மத்தள வரை விற்கப்போகிறார்கள்.

இது எமக்கு நல்லதும்தான் (மறைமுக

காலனியத்துவம்).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

ஆனால் உங்கள் நாட்டின் காசின் பெறுமதிக்கு இலங்கை இலகுவாக இருக்கும் தரமாகவும் இருக்கும்

இது தப்பு.

முன்னர் ஒரு பவுண்ட் 270. இப்போ 390. பெறுமதி இரெட்டிப்பு அளவால் கூட அதிககரிக்க இல்லை. ஆனால் இலங்கையில் பொருட்களின் விலை 3 தொடக்கம் 5 மடங்கால் கூடியுள்ளது.

ஆகவே எமது காசும் முன்னர் போன அளவு போவதில்லை.

அதேபோல் முன்னர் யூகேயில் ஒரு பவுண்டுக்கு வாங்கிய பல பொருட்கள் இப்போ ஒன்று எழுபது. இரெண்டு.

ஆகவே இது உலகளாவிய பிரச்சனையும் கூட.

6 hours ago, P.S.பிரபா said:

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித எதிர்பார்ப்புகளுடன் இலங்கைக்குப் போவதால் அவரவர் அனுபவங்களும் வேறுபடுகிறது.. 

என்னைப் பொறுத்தவரையில் எனது அனுபவங்களின் படி அங்கே உள்ளவர்களுடன் 2009 முன் 2009 பின் பற்றி கதைப்பதை விரும்புவதில்லை, ஏனென்றால் எனது தந்தை கூறுவது நீ இங்கே வந்து ஏதாவது சொல்லிவிட்டு போய்விடுவாய் பிறகு ஏதும் என்றால் எங்களுக்குத் தானே கஷ்டம் என்று. அது உண்மை என்பதால் தேவையில்லாமல் கதைப்பது இல்லை. 

அதேபோல எனது அம்மாவின் மறைவிற்குப் பின் அனேகமாக ஒவ்வொரு வருடமும் போவதால் சில விடயங்கள் /பழக்கவழக்கங்கள்  முன்னரை விட அதிகரித்துள்ளது போலவும்.. சில விடயங்களில் முன்னேற்றம் போல இருந்தாலும் எங்களுடைய அடையாளத்தை இழக்கிறோமோ என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. சில நேரங்களில் வளங்கள் இருந்தும் அநியாயமாக வீணக்குகிறார்கள் அல்லது பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என கவலைப்பட்டிருக்கிறேன். உதாரணத்திற்கு ஆடம்பரங்கள், தேவைக்கு அதிகமான திருமண மண்டபங்கள் தேவைதானா  என்றெல்லாம் யோசிப்பதுண்டு..ஆனால் பல விடயங்களில் அவர்களாக உணராமல் ஒன்றும் கதைத்து பயனில்லை என்பதால் பேசாமல் இருப்பதுண்டு. 

இப்பொழுதெல்லாம் புலம்பெயர்ந்தோர், அங்கே வாழ்வோர் என ஒப்பிட்டுப் பார்ப்பதை கூடியளவு தவிர்ப்பதையே விரும்புகிறேன். ஆனால் ஊருக்கு போய்விட்டு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் எங்களது தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன்.  
 
ஊருக்குப் போகிறேன்.. பார்க்கிறேன்..திரும்ப அவுஸ் வருகிறேன் என்ற ரீதியில்தான் எனது பயணங்கள் உள்ளன. 

ஒரு மாதிரி 5 பக்கங்களையும் வாசித்து எனது எண்ணத்தையும் பகிர்ந்துள்ளேன்.😅

பயண அனுபவத்திற்கு நன்றி கோஷான்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபா.

நீங்களும் திருமண மண்டபங்கள் போன்றவற்றில் செல்வ செழிப்பு உள்ளது என்பதை ஏற்றாலும், ஆனால் அவை வினைதிறனானவையா என எண்ணுகிறீர்கள் என நினைக்கிறேன்.

எனக்கு இதில் அதிகம் மாற்றுக்கருத்து இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

இது தப்பு.

முன்னர் ஒரு பவுண்ட் 270. இப்போ 390. பெறுமதி இரெட்டிப்பு அளவால் கூட அதிககரிக்க இல்லை. ஆனால் இலங்கையில் பொருட்களின் விலை 3 தொடக்கம் 5 மடங்கால் கூடியுள்ளது.

ஆகவே எமது காசும் முன்னர் போன அளவு போவதில்லை.

அதேபோல் முன்னர் யூகேயில் ஒரு பவுண்டுக்கு வாங்கிய பல பொருட்கள் இப்போ ஒன்று எழுபது. இரெண்டு.

ஆகவே இது உலகளாவிய பிரச்சனையும் கூட.

சரி சகோ

ஒரு கேள்வி

ஒரு பவுண்ஸ்=ஒரு ரூபாய் என்று இருந்தால் எத்தனை பேர் ஊர் போவார்கள் எத்தனை முறை போவார்கள்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

சரி சகோ

ஒரு கேள்வி

ஒரு பவுண்ஸ்=ஒரு ரூபாய் என்று இருந்தால் எத்தனை பேர் ஊர் போவார்கள் எத்தனை முறை போவார்கள்???

மிக சிலர். மிக குறைவாக. இலண்டனில் இருந்து நோர்வேக்கோ, சுவிசுக்கோ, ஐஸ்லாந்துக்கு அடிக்கடி சுற்றுலா போவதில்லை, ஆனால் ஸ்பெயினுக்கு முனுக்கென்றால் போய்வருவார்கள். அதே கணக்குத்தான்:

1£=1Rs என்ற நிலை வருமாயின், சராசரி மனிதன் பணம் ஈட்டும் இயலுமையும் இலங்கை=யூகே என ஆகிவிடும். அதே போல் நாடும் குறைந்தது மலேசியா அளவுக்காவது சுதந்திர நாடாக இருக்கும்.

அப்படி நடப்பின், மிக பெருவாரியான

முதல் தலைமுறை புலம்பெயர் ஈழத்தமிழர் ஊருக்கே திரும்பி போய்விடுவார்கள் என நினைக்கிறேன்.

நிச்சயமாக 10 வருடத்துக்குள் வெளிநாடு வந்தோர் திரும்பி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

சரி சகோ

ஒரு கேள்வி

ஒரு பவுண்ஸ்=ஒரு ரூபாய் என்று இருந்தால் எத்தனை பேர் ஊர் போவார்கள் எத்தனை முறை போவார்கள்???

புலம்பெயர் என்ற கூட்டமே இருக்காது அண்ணேய் முக்கால்வாசி ஊரில்தான் நிக்கும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

ஆனால் தெகிவளளை, கல்கிசை தாண்டியதும் கடற்கரையோரம், சேரிகள் என சொல்லத்தக்க குடியிருப்புக்கள் உருவாகியுள்ளன. ஆனால் இவை எப்போதும் கொழும்பை அண்டி இருந்தவனவே.

இன்னொரு விடயம். வர்க்க ஏற்றத்தாழ்வு எங்கும் உண்டு. இலண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து அதிக தூரம் போகத்தேவையில்லை, ஒப்பீட்டளவில் மிகவும் வறுமைப்பட்ட இடங்களை அடைய.

மற்றவனின் வாழ்க்கை உதாரணங்களை காரணம் காட்டி எமது அவலங்களை சமப்படுத்துவது சரியல்ல என நினைக்கின்றேன்.
எமது நிலம் போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்.  ஆனால் சிங்கள பிரதேசங்கள் அப்படியல்ல. போர் தூசிகள் கூட அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாதவர்கள்.

அதே போல் பக்கிங்ஹாம் உதாரணத்தை இங்கேயும் கொண்டு வந்து புகுத்தினீர்கள் பாருங்கள்..பிரமாதம்.....மிக மிக பிரமாதம்.

இனிவரும் காலங்களில் பாண் இல்லையென்றால்  கேக் சாப்பிடுங்கள் என சொல்லும் மனப்பான்மையை இப்போதே கண்கூடாக பார்க்கின்றேன்.

வர்க்க ஏற்ற தாழ்வுகள் எங்கும் உண்டுதான். இன போர் நடந்த இடத்திலுமா என்பது கொஞ்சம் அடி வயிற்றை நோக வைக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிகு

நான் யூகே பணவீக்கம் = இலங்கை பணவீக்கம் என கூறவில்லை.

யூகேயில் விலை இரெட்டிப்பாகியுளது எனில், இலங்கையில்  4 மடங்காகி உள்ளது.

ஆனால் யூகே காசுக்கு முன்னர் இலங்கையில் இருந்த “வாங்கும் வலு” இப்போ சற்று குறைவு.

1 minute ago, குமாரசாமி said:

மற்றவனின் வாழ்க்கை உதாரணங்களை காரணம் காட்டி எமது அவலங்களை சமப்படுத்துவது சரியல்ல என நினைக்கின்றேன்.
எமது நிலம் போர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்.  ஆனால் சிங்கள பிரதேசங்கள் அப்படியல்ல. போர் தூசிகள் கூட அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாதவர்கள்.

அதே போல் பக்கிங்ஹாம் உதாரணத்தை இங்கேயும் கொண்டு வந்து புகுத்தினீர்கள் பாருங்கள்..பிரமாதம்.....மிக மிக பிரமாதம்.

இனிவரும் காலங்களில் பாண் இல்லையென்றால்  கேக் சாப்பிடுங்கள் என சொல்லும் மனப்பான்மையை இப்போதே கண்கூடாக பார்க்கின்றேன்.

வர்க்க ஏற்ற தாழ்வுகள் எங்கும் உண்டுதான். இன போர் நடந்த இடத்திலுமா என்பது கொஞ்சம் அடி வயிற்றை நோக வைக்கின்றது.

போர் முடிந்து 15 வருடங்கள் அண்ணை. முகமாலைக்கு வடக்கே போர் நடந்து 20. அரியாலைக்கு அப்பால் போர் நடந்து 25.

போரில் நாம் அடைந்த அழிவுகளையோ அதன் நீண்ட கால பாதிப்பையோ மறுக்கவில்லை.

ஆனால், இராணுவ பிரசன்னம், வலிகாமம் வடக்கு ஆக்கிரமிப்பை தவிர இப்போ போரின் பாதிப்பு என கண் முன் யாழ்பாணத்தில் காண்பது அரிது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் யுத்த விதைவைகள், அரசியல் கைதிகள், அங்கவீனமானோர், மன உளைச்சல் இவற்றை நான் சொல்லவில்லை. கண்ணுக்கு தெரிய கூடிய இழப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, விசுகு said:

ஒரு பவுண்ஸ்=ஒரு ரூபாய் என்று இருந்தால் எத்தனை பேர் ஊர் போவார்கள் எத்தனை முறை போவார்கள்???

செருப்பால் அடித்த மாதிரி இருக்கு...😎
இது
லண்டன்,சுவீஸ்,கனடா என  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

செருப்பால் அடித்த மாதிரி இருக்கு...😎
இது
லண்டன்,சுவீஸ்,கனடா என  🤣

🤣 ஆனால் இந்த செருப்படியில் மறந்த விடயம். ஒரு இலங்கை டிகெட் குறைந்தது £900.

இந்த செலவை கூட்டும் போது, அடிக்கடி போய் வரும் cheap destination அல்ல இலங்கை என்பது உறைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

🤣 ஆனால் இந்த செருப்படியில் மறந்த விடயம். ஒரு இலங்கை டிகெட் குறைந்தது £900.

இந்த செலவை கூட்டும் போது, அடிக்கடி போய் வரும் cheap destination அல்ல இலங்கை என்பது உறைக்கும்.

அப்படியில்லை....😎
ரிக்கற் பயங்கர விலையிலும் அடிக்கடி போய்......🤣

பாங்க் சிஷ்ரம் வேறை எண்டு நினைக்கிறன்...😂

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

புலம்பெயர் என்ற கூட்டமே இருக்காது அண்ணேய் முக்கால்வாசி ஊரில்தான் நிக்கும் .

இல்லை சகோ

இங்கே இருந்து போய் காசை கட்டு கட்டாக மாத்தி எடுத்து விசுக்கலும் ஆடம்பரம் காட்டுதலும் தேடித் தேடி வாய்க்குள் போட்டு குடித்து கும்மாளம் போடுவதும் அறவே அற்றுப் போகும். அதுவே தேவை. அந்த நிலை வரணும் வந்தால் அந்த மக்களும் இந்த படம் காட்டுதலை காணாது அங்கையே நிம்மதியாக வாழ வழி பிறக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

1£=1Rs என்ற நிலை வருமாயின், சராசரி

பெரிய பிரித்தானியாவில் இலங்கையர்கள். இருக்க மாட்டார்கள்  தமிழர் சிங்களவர் இரண்டு பகுதியும் தான்  ஆனால்   பிரித்தானியாரும். இலங்கைக்கு சுற்றுலா வரமாட்டார்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

இது தாயகத்தில் வாழும் யாழ் கள உறவு ஒருவரின் முகநூல் பதிவு. 

நாடு நன்றாக இருக்கிறது என அந்நாட்டு மக்களே சொல்ல வேண்டும் மாறாக நாற்பது நாளில் நாட்டைசுற்றிப்பார்த்து விட்டு மிக பிரமிப்பாக இருக்கிறது என சொல்ல முடியாது.

இன்றைய நடுத்தர வர்க்கத்தினரையும் , நாள்கூலி வரை பிரட்டிப் போட்டுள்ள நாட்டின் பொருளாதார சரிவு மக்களை எப்போது மீட்டெடுக்க முடியும் என சொல்ல முடியாது மாறாக அடகு வைக்கப்பட்டுள்ளார்கள். அடகு வைத்தும் வாழ்வை தொடர்கிறார்கள். என்றே சொல்லலாம்.

கொழும்பில் இருந்து பாரக்கும் போது அழகாக தெரியும் போட் சிற்றி ,தாமரை கோபுரம்,அடுக்கு மாடி உல்லாச விடுதிகள் கொள்ளை அழகுதான் போட்டிருக்கும் காப்பட் வீதிகள் கூட  

ஆனால் உங்கள் நாட்டின் காசின் பெறுமதிக்கு இலங்கை இலகுவாக இருக்கும் தரமாகவும் இருக்கும் ஐம்பது சதம் காசுக்கு வாங்கிய ரொபி ஒன்று 10 ரூபாய். உழைப்புக்கு ஊதியம் என்பது பாம்பாட்டி விரித்திருக்கும் துண்டில் விழும் சில்லறை போல எடுத்து எண்ணுவதற்குள் சிதறி விடுகிறது.

எங்கோ ந சட்டமக்கும் ஓர் மாற்றம் வாழ்வியலில் நிகழ்ந்து விடாதா என ஏங்கும் சாமானிய மக்களே இங்கு இலங்கையில். 

ஆனால் நடப்பதோ எரிவதில் பிடுங்குவது இலாபம் என்ற நோக்கு .

https://www.facebook.com/share/p/QGe169avBt5AkuP7/

நானும் அவதானித்தேன்..முழுப்பிழைகளையும் புலம் பெயர் உறவுகள் மேலேயே சுமத்துகிறார்கள்.எனக்கு ஒரு சின்ன  மன வருத்தம் என்னவென்றால் இந்த உறவும் ஏதோ ஒரு வெளி நாட்டிலிருந்து விட்டுத் தான் ஊர் திரும்பியவர் என்பதை மறந்து பேசும் எழுதும் தருணங்களில் செய்ய போகும் உதவிகளைக் கூட இவர்களின் வாய்ப் பேச்சுக்கள், எழுத்துக்கள் தடுத்து விடுகிறது...அவரது மனபிறள்வு எப்போதும் மாற்றிக் கொள்ள இயலாத ஒன்று இப்படித் தான் எழுதுவார்.முகப் புத்தகத்தில் புலம் பெயர் உறவுகளை தாக்குவதற்கு நெற் வேலை செய்யும் அதே நெற் யாழில் எழுத விடுகிறது இல்லயா...

நாம் வங்கிகளில் கடன் படுவது அல்லது கடன் அட்டைகள் எடுப்பது என்றால் அதை  எடுத்தால் மறுபடி எப்படி கட்டி முடிப்போம்...... இது நமக்கு தேவையா என்று ஓன்றுக்கு பல தடவை யோசிப்போம்..ஆனால் ஊரில் இருப்பவர்களுக்கு வங்கியில் கடன் எடுப்பது என்றால் ஏதோ பக்கத்து விட்டில் வாங்குவது போலத் தான்...யாரோடு பேசினாலும் என்ன உதவி தேவை....எப்படி பட்ட உதவி தேவை என்று கேட்டால் வங்கியில் கடன் இருக்கிறது...எவ்வளவு கட்ட வேணும் ...லட்சக்கணக்கில் கடனிருக்கும்...பதில் வராது...அங்கே புலம் பெயர் உறவுகள் மேல் ஒரு வித வெறுப்பை காட்டுவது..இதற்கு எல்லாம் நாம் பொறுப்பாளிகள் அல்ல...

ஒரு மனிதனுக்கு இறப்பு என்பது எங்கு போய் மறைந்தாலும் வர வேண்டி இருந்தால் வந்தே தீரும்.அதற்காக நாம் இந்த இடம் சரியில் கொஞ்சம் நகரத்துக்கு போவம் அல்லது அதையும் தாண்டி கொஞ்சம் வசதியாக வாழ முயற்சிப்போம்.சொல்லப் போனால் புலம் பெயர் உறவுகளை விட ஊரில் இருப்பவர்கள் நாகரீக மோகத்துக்குள் போய் கொண்டே இருக்கிறீகள்.அப்படியே போய்க் கொண்டே இருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, P.S.பிரபா said:

தேவைக்கு அதிகமான திருமண மண்டபங்கள் தேவைதானா  என்றெல்லாம் யோசிப்பதுண்டு..ஆனால் பல விடயங்களில் அவர்களாக உணராமல் ஒன்றும் கதைத்து பயனில்லை என்பதால் பேசாமல் இருப்பதுண்டு. 

இது   அவர்கள் ஆடம்பரம் காட்டுவதற்காக பணத்தை வீணாக்குகிறார்களே என்ற நல்ல எண்ணத்தில் உங்களுக்கு வந்தது.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2024 at 09:11, goshan_che said:

சீனி மட்டும் இல்லை, பால் இல்லாமல் குடித்தும், அன்று அந்த கோப்பி கசக்கவே இல்லை.

வணக்கம் கோசென்.....இப்படியான சிட்டுவேசனில் வேப்பம்சாறும் இனிக்கும்  கண்டியளோ ...ஆண்களுக்கு ஆண்டவன் கொடுத்த வரம் ...

  • கருத்துக்கள உறவுகள்
On 28/3/2024 at 05:03, பெருமாள் said:

எல்லாரும் வெளி நாடு ஒடுவதுக்கு காரணம் அதுதான் .

உயிரை பணயம் வைத்து ரஸ்யா,யுக்கிறைன்  இராணுவத்திலும் சேர்கின்றனர் என்றால் பாருங்கோவன்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இல்லை சகோ

இங்கே இருந்து போய் காசை கட்டு கட்டாக மாத்தி எடுத்து விசுக்கலும் ஆடம்பரம் காட்டுதலும் தேடித் தேடி வாய்க்குள் போட்டு குடித்து கும்மாளம் போடுவதும் அறவே அற்றுப் போகும். அதுவே தேவை. அந்த நிலை வரணும் வந்தால் அந்த மக்களும் இந்த படம் காட்டுதலை காணாது அங்கையே நிம்மதியாக வாழ வழி பிறக்கும். 

1£=1Rs என ஆகினால் நீங்கள் சொன்ன இந்த படம்காட்டல் மட்டும் அல்ல அண்ணை,

சுற்று மதில் கட்டுகிறோம், இதர தர்ம காரியங்களை படம் எடுத்து போட்டு படம் காட்டுவதும் அடங்கி விடும் அண்ணை. 

24 minutes ago, putthan said:

உயிரை பணயம் வைத்து ரஸ்யா,யுக்கிறைன்  இராணுவத்திலும் சேர்கின்றனர் என்றால் பாருங்கோவன்...

இது வாழ்விட உரிமைக்காக அல்ல. உழைப்புக்கு.

இப்படி யோசித்துப்பாருங்கள்.

35,000 இலங்கை ரூபாவுக்காக யாழ்பாணத்தில் வந்து உயிரை விட்ட அதே ஆட்களில் இருந்து வருவோரே 3500 ஈரோவுக்காக ரஸ்யாவில் உயிரை விடுகிறனர்.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.