Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

 

நான் பொன் ராதாகிருஷ்ணன் 3 ஆம் இடத்தில் வருவார் என நான் கணித்து இருந்தேன், ஆனால் 2 ஆம் இடத்திற்கு வந்திருக்கின்றார். கிருபன் சரியாக 2 ஆம் இடத்தில் வருவார் என கணித்திருப்பதால், 2 புள்ளி அல்லது 3 புள்ளிகள் என்னை விட அதிகமாக எடுத்து இப் போட்டியில் கிருபன் முதலாவதாக வந்து பெற்றி அடைவார்.

  • Replies 255
  • Views 22.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பா

  • கந்தப்பு
    கந்தப்பு

    17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)  -  2 தொகுதிகள்  சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், சுவி, கிருபன், நுணாவிலான், பிரபா, புலவர் 1)கிருபன் - 90 புள்ளிகள் 2)நிழலி - 88 புள்ளிகள்

  • கிருபன்
    கிருபன்

    யாழ்கள தமிழக நாடாளுமன்றப் போட்டியில் முதலாவதாக வென்றால் பரிசு தருவேன் என்ற சொல்லை காக்கவேண்டும் என்பதற்காக @வீரப் பையன்26 எனக்குப் பரிசுத் தொகையை அனுப்பவேண்டும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் விடாப்பிடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - 39 தொகுதிகள்

39 தொகுதிகள் - 5 புள்ளிகள் 
38 தொகுதிகள் - 4 புள்ளிகள்
37 தொகுதிகள் - 3 புள்ளிகள்
36 தொகுதிகள் - 2 புள்ளிகள்
35 தொகுதிகள் - 1 புள்ளி

சரியாக பதில் அளித்தவர்கள் - நிழலி, கிருபன் 
1)நிழலி - 88 புள்ளிகள்
2)கிருபன் - 88 புள்ளிகள்
3)பிரபா - 76 புள்ளிகள்
4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 68 புள்ளிகள்
5)தமிழ்சிறி - 62 புள்ளிகள்
6)கோஷான் சே - 60 புள்ளிகள்
7)நுணாவிலான் - 59 புள்ளிகள்
8)பாலபத்ர ஓனாண்டி - 49 புள்ளிகள்
9)வாத்தியார் - 49 புள்ளிகள்
10)சுவி - 43 புள்ளிகள்
11)கந்தையா57 - 43 புள்ளிகள்
12)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள்
13)புலவர்- 34 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 1 -  16,18 - 43 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 42 கேள்விகளுக்கு (98 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

 

நான் பொன் ராதாகிருஷ்ணன் 3 ஆம் இடத்தில் வருவார் என நான் கணித்து இருந்தேன், ஆனால் 2 ஆம் இடத்திற்கு வந்திருக்கின்றார். கிருபன் சரியாக 2 ஆம் இடத்தில் வருவார் என கணித்திருப்பதால், 2 புள்ளி அல்லது 3 புள்ளிகள் என்னை விட அதிகமாக எடுத்து இப் போட்டியில் கிருபன் முதலாவதாக வந்து பெற்றி அடைவார்.

போட்டியில் சேர முதலே இதை நான் சொல்லியிருந்தேன்😁

@வீரப் பையன்26

On 21/4/2024 at 15:27, கிருபன் said:

நானும் பங்குபற்றுகின்றேன். அநேகமாக முதல் இடத்தைப் பிடிப்பேன்😂

என்னையே நான் மெச்சிக்க கன்யாகுமரி மகளுக்கு நன்றி😍

On 21/4/2024 at 16:22, வீரப் பையன்26 said:

பெரிய‌ப்பா அப்ப‌டி நீங்க‌ள் முத‌ல் இட‌ம் பிடிச்சா

உங்க‌ளுக்கு பிடிச்ச‌ அனைத்து ஜ‌ட‌ங்க‌ளையும் டென்மார்க்கில் இருந்து ல‌ண்ட‌னுக்கு அனுப்பி வைக்கிறேன்

 

பாவிக்கும் போத்த‌ல்க‌ள்

1 விஸ்கி போத்த‌ல் 5

2 விரான்டி போத்த‌ல் 5

3 சிமினொவ் போத்த‌ல் 5

4 வ‌க்காடி போத்த‌ல் 5

 

இவை அணைத்தையும் குடிக்கும் போது தொட்டு ந‌க்க‌ ஊர் ஊருவாய் போத்த‌ல் 5

இவையாவும் அனுப்ப‌ ப‌டும்

முக‌வ‌ரியை த‌னி ம‌ட‌லில் அனுப்பி வைக்க‌வும்🤣😁😂...............................

🍾🍷🍺🍻🥃

On 21/4/2024 at 17:11, பாலபத்ர ஓணாண்டி said:

முகவரி ஒன்டும் தேவை இல்லை..ஆள் ரூட்டிங் பக்கமா பக்கத்தில்தான் இருக்கு.. சீலன் கடை இல்லா யாழ் கபேக்கு வரேக்க குடுக்கிறன் போத்தல் முழுவதையும் என்னிடம் தரவும்.. நேரில் வந்து வாங்குகிறேன் அப்புடியே டென்மார்க் கொலிடே வந்ததும் ஆகுது..

நான் இப்ப ட்ரிங்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கேன்! ஓணாண்டியிடம் கொடுத்தாலும் காரியமில்லை!

On 21/4/2024 at 18:33, வீரப் பையன்26 said:

ஓணாண்டி நான் நினைச்சேன் நீங்க‌ள் வ‌சிப்ப‌து க‌ன‌டா என்று.........................

வாங்கோ ஓணாண்டி டென்மார்க் உங்க‌ளை அன்புட‌ன் வ‌ர‌வேற்க்குது........................

 

பின் குறிப்பு நான் குடிப்ப‌தில்ல்லை பெரிய‌ப்ப‌ர‌ குசி ப‌டுத்த‌ அப்ப‌டி எழுதினேன்.....................பிற‌க்கு நேரில் வ‌ந்து கேட்க்க‌ கூடாது ம‌ச்சி போத்த‌ல‌ திற‌க்க‌ சொல்லி😁..................................

போட்டில‌ பெரிய‌ப்ப‌ர் வென்றால் க‌ண்டிப்பாய் அனுப்புவேன்

அவ‌ர் சொல்லும் முக‌வ‌ரிக்கு🙏🥰..................................

ஓணாண்டி, முகவரி ப்ளீஸ்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)  -  2 தொகுதிகள் 

சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், சுவி, கிருபன், நுணாவிலான், பிரபா, புலவர்
1)கிருபன் - 90 புள்ளிகள்
2)நிழலி - 88 புள்ளிகள்
3)பிரபா - 78 புள்ளிகள்
4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 70 புள்ளிகள்
5)தமிழ்சிறி - 62 புள்ளிகள்
6)நுணாவிலான் - 61 புள்ளிகள்
7)கோஷான் சே - 60 புள்ளிகள்
8)பாலபத்ர ஓனாண்டி - 49 புள்ளிகள்
9)வாத்தியார் - 49 புள்ளிகள்
10)சுவி - 45 புள்ளிகள்
11)கந்தையா57 - 43 புள்ளிகள்
12)புலவர்- 36 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள்

போட்டியில் வெற்றி பெற்றவர் கிருபன் ( அ துவும் 100 க்கு 90 புள்ளிகள். இம்பீரியல் கல்லூரியில் படித்தவர் என்று மீண்டும் நீருபித்திருக்கிறார்).   அதிவிசேட சித்தியில் போட்டியில் சித்தி(வெற்றி) பெற்ற கிருபன்,நிழலி, பிரபாவுக்கும் வாழ்த்துகள்.  இந்த பரீட்சையில் (போட்டியில்) பங்கு பெற்றி சித்தி பெற்ற ( சித்தி பெற 35 புள்ளிகள் எடுக்க வேணும்) அனைத்து போட்டியாளர்களுக்கும் பாராட்டுகள்.  

வெற்றி பெற்றவர்களுக்கு தனது சொந்த செலவில்பரீசில்களை இந்த போட்டியில் அதிக கருத்துக்களை பகிர்ந்த வீரப்பையன் வழங்குவார்.  😀

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடத்தி ஒப்பேற்றியதற்கு நன்றி கந்தப்பு.........!  👍

கிருபன், நிழலி, பிரபா வுக்கும் வாழ்த்துக்கள்......... பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள் ........!

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

போட்டியில் வெற்றி பெற்றவர் கிருபன் ( அ துவும் 100 க்கு 90 புள்ளிகள்

😊

spacer.png

போட்டியைத் திறமாக நடாத்திய @கந்தப்பு வுக்குப் பாராட்டுக்கள்!

பல கேள்விகளுக்கு பதிலளிக்க நிறைய வாசிக்கவேண்டி இருந்தது! நிறையத் தரவுகள் இணையத்தில் இருந்ததால், நம்பகமான தரவுகளை மின்னம்பலம் சேர்வேயில் இருந்தே எடுத்தேன். 24வது கேள்விக்கு மாத்திரம் தரவை மீறி விருப்பமான பதிலைப் போட்டேன்! புள்ளி கிடைக்கவில்லை!

ஆகவே ஃபீலிங்ஸ்ஸை விட்டுவிட்டு data ஐ நம்மவேண்டும்! 

தொடர்ந்தும் முன்நிலையில் நின்ற @நிழலிக்கும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் பாராட்டுக்கள்!

2026 தேர்தலில் கூட்டணி எப்படி அமைகின்றது என்பதை வைத்து போட்டியில் வெல்லலாம்😁

 

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியீட்டிய கிருபன், நிழலி, பிரபாவுக்கு வாழ்த்துக்கள்.
போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்புவுக்கு நன்றி.
பங்கு பற்றிய அனைவரும் மனம் தளராமல் மீண்டும்  ஒரு போட்டியில் சந்திப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

 

தொடர்ந்தும் முன்நிலையில் நின்ற @நிழலிக்கும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் பாராட்டுக்கள்!

 

திமுக கூட்டணி 39 இடங்களை பிடிக்கும் என்ற பதிலை பார்த்ததும் நீங்கள் அல்லது நிழலிதான் வெல்லுவார்கள் என நினைத்தேன். இதனால் மற்றவர்கள் ( கோஷான், தமிழ்சிறி )கொஞ்ச காலம் முன்னிலையில் நிற்பதற்கு ஏற்றதாக கேள்விகளை தெரிவு செய்து புள்ளிகளை முதலில் வழங்கினேன்.  பிறகு உங்கள் இருவரில் நீங்கள்தான் வரப்போகிறீர்கள் எனத் தெரிந்தினால் நிழலி சரியாக சொன்ன பதிலுக்கு முதலில் புள்ளிகள் வழங்கினேன்.😀

போட்டியை சிறப்பாக நடத்திய கந்தப்புக்கு நன்றி.

போட்டியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து முதலிடத்தினை பெற்ற கிருபனுக்கு வாழ்த்துகள். நான் கேள்விகளுக்கு பதில் அளிக்க முன், விகடன் செய்திகள் மற்றும் சேர்வே, இந்து தமிழ் செய்திகள், தேர்தல் பிரச்சாரத்தில் கூறப்பட்ட விடயங்கள் என்பனவற்றின் அடிப்படையில் பதில்களை வழங்கியிருந்தேன். கிருபன் சொல்லியுள்ளது போல் Data முக்கியம்.

ஆனாலும், இந்த தேர்தலில் பா,ஜ.க தமிழகத்தில் இரண்டாவதாக பல இடங்களில் வரும் என நம்பியிருக்கவில்லை. அண்ணாமலை உட்பட எல்லாரும் 3 ஆம் இடத்தில் தான் வருவர் என நினைத்து இருந்தேன். அ.தி,மு.க ஒரு இடத்திலும் வெல்லாது என தெரியும், ஆனால் 3 ஆம் இடத்தைக் கூட பறி கொடுக்கும் என நினைக்கவில்லை.

கடந்த சட்டசபைத் தேர்தலில் 7 சதவீத வாக்குகளைப் பெற்ற நா.த.கட்சியின் வாக்கு வங்கியில் பா.ஜ.க கை வைக்கும் என எதிர்பார்த்ததால் 7 சதவீதத்தை விட குறைவாக பெறும் என கணித்து இருந்தேன். ஆனால் ஒரு சதவீதம் அதிகமாக நா.த.க. பெற்று இருக்கின்றது.

அனேகமாக பா.ஜ.க, வின் மேலிடம் இனி நா.த.க. இற்கு கடும் குடைச்சலைக் கொடுக்கும் என எதிர்பார்க்கின்றேன்.  அனேகமாக அவர்களின் நிதி திரட்டலில் (திரள் நிதி) கைவைக்கும். நிதி மூலத்தை ஆராய முற்பட்டு, சிலரை கைது செய்வது வரைக்கும் செல்லும். அ.தி.மு.க. வை பலவீனப்படுத்தியாச்சு, இனி நா.த.க. வினரை பலவீனப்படுத்தினால், திமுக விற்கான எதிர் வாக்குகளை அப்படியே அள்ளலாம் என பா,ஜ.க. கணக்கு போடும் என நம்புகின்றேன்.


 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியில் வெற்றி பெற்ற @கிருபன்  க்கு வாழ்த்துக்கள்.

இந்த சிரமமான போட்டியை நடாத்திய @கந்தப்பு க்கு பாராட்டுக்கள்.

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்புவுக்கு நன்றி.
பங்கு பற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்பு அண்ணாவுக்கும் போட்டியில் வென்ற‌ பெரிய‌ப்புக்கும் வாழ்த்துக்க‌ள்..........................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கந்தப்பு said:

திமுக கூட்டணி 39 இடங்களை பிடிக்கும் என்ற பதிலை பார்த்ததும் நீங்கள் அல்லது நிழலிதான் வெல்லுவார்கள் என நினைத்தேன். இதனால் மற்றவர்கள் ( கோஷான், தமிழ்சிறி )கொஞ்ச காலம் முன்னிலையில் நிற்பதற்கு ஏற்றதாக கேள்விகளை தெரிவு செய்து புள்ளிகளை முதலில் வழங்கினேன்.  பிறகு உங்கள் இருவரில் நீங்கள்தான் வரப்போகிறீர்கள் எனத் தெரிந்தினால் நிழலி சரியாக சொன்ன பதிலுக்கு முதலில் புள்ளிகள் வழங்கினேன்.😀

போட்டியை நடத்தியமைக்கு பாராட்டும் நன்றியும்.

ஜிக்கும் நிழலிக்கும், பிரபாவுக்கும் பாராட்டுகள்.

 

6 hours ago, கிருபன் said:

ஆகவே ஃபீலிங்ஸ்ஸை விட்டுவிட்டு data ஐ நம்மவேண்டும்! 

நானும் டேட்டாவை தான் நம்பினேன்…விஜய பிரபாகர், செளமியா நூலிழை தோல்விகள் அவர்களை போலவே என்னையும் தடக்கி பொழுது விட்டது.

நயினார் தோல்வி, விசிக வட தமிழகத்தில் பாமக எதிர் கூட்டணியில் வெற்றி - எதிர்பாராதது.

6 hours ago, கந்தப்பு said:

திமுக கூட்டணி 39 இடங்களை பிடிக்கும் என்ற பதிலை பார்த்ததும் நீங்கள் அல்லது நிழலிதான் வெல்லுவார்கள் என நினைத்தேன். இதனால் மற்றவர்கள் ( கோஷான், தமிழ்சிறி )கொஞ்ச காலம் முன்னிலையில் நிற்பதற்கு ஏற்றதாக கேள்விகளை தெரிவு செய்து புள்ளிகளை முதலில் வழங்கினேன்.  பிறகு உங்கள் இருவரில் நீங்கள்தான் வரப்போகிறீர்கள் எனத் தெரிந்தினால் நிழலி சரியாக சொன்ன பதிலுக்கு முதலில் புள்ளிகள் வழங்கினேன்.😀

நன்றி. நானும் இப்படித்தான் செய்கிறீர்கள் என்பதை ஊகித்துவிட்டேன். 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

ஆகவே ஃபீலிங்ஸ்ஸை விட்டுவிட்டு data ஐ நம்மவேண்டும்! 

Data, எக்சிட் போல் எல்லாமே corrupted and cooked. யாரைத்தான்  நம்புவதோ?

உலகின் முதல் எக்சிட் போல் பங்குச்சந்தை ஊழல்..? இந்திய முதலீட்டாளர்களின் தலையில் துண்டு..?!!
 

இந்தியப் பங்குச்சந்தை கடைசிக் கட்ட வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் முதல், கடந்த வார வெள்ளிக்கிழமை வரை அதிகப்படியான தடுமாற்றத்தைப் பதிவு செய்தது. சென்செக்ஸ் ஓரே நாளில் டபுள் மடங்கு உயர்ந்தது முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் சென்செக்ஸ் 6100 புள்ளிகள் சரிவது வரையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களைத் திக்குமுக்காட வைத்தது.

இந்த நிலையில் உலகின் முதல் எக்சிட் போல் பங்குச்சந்தை ஊழல் இந்தியாவில் நடித்துள்ளது என பிரவீன் சக்ரவர்த்தி டெக்கான் ஹெரால்டு பத்திரிக்கையில் எழுதியுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மட்டும் அல்லாமல் ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிட்டிக்ஸ் துறையின் தலைவர் ஆவார்.

பிரவீன் சக்ரவர்த்தி-யின் கட்டுரை இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது மட்டும் அல்லாமல், மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் தேர்தலுக்கு முன்னதாக தொலைக்காட்சி பேட்டியில் பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசனை வழங்கியது குறித்து ராகுல் காந்தி-யின் விமர்சனத்திற்கு இக்கட்டுரை கூடுதல் வலு சேர்க்கிறது.

Read more at: https://tamil.goodreturns.in/news/world-s-first-exit-poll-stock-market-scam-happened-in-india-what-praveen-chakravarty-said-046421.html?_gl=1*17rjka0*_ga*MjAyOTk2MTI2Ny4xNzE4MDYyOTA1*_ga_09Y63T23W1*MTcxODEzNzEwNC44LjEuMTcxODEzODgwOS4wLjAuMA..

Edited by பிரபா

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடத்தி உற்சாகமான   முறையில்  முடிவுகளை அறிவித்த சகோதரன்  கந்தப்பு  அவர்கட்கும் போட்டியில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும் போட்டியில் வென்ற கிருபன், நிழலி மற்றும் பிரபா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியீட்டிய கிருபன், நிழலி, பிரபாவுக்கு வாழ்த்துக்கள். 👍
வித்தியாசமான கேள்விகளுடன்  போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்புவுக்கு நன்றி. 👌
போட்டியில் பங்கு பற்றிய உறவுகளுக்கு வாழ்த்துக்கள். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கந்தப்பு said:

திமுக கூட்டணி 39 இடங்களை பிடிக்கும் என்ற பதிலை பார்த்ததும் நீங்கள் அல்லது நிழலிதான் வெல்லுவார்கள் என நினைத்தேன். இதனால் மற்றவர்கள் ( கோஷான், தமிழ்சிறி )கொஞ்ச காலம் முன்னிலையில் நிற்பதற்கு ஏற்றதாக கேள்விகளை தெரிவு செய்து புள்ளிகளை முதலில் வழங்கினேன்.  பிறகு உங்கள் இருவரில் நீங்கள்தான் வரப்போகிறீர்கள் எனத் தெரிந்தினால் நிழலி சரியாக சொன்ன பதிலுக்கு முதலில் புள்ளிகள் வழங்கினேன்.😀

தெய்வமே !  கிருபன், நிழலி , கோஷான், சிறியரை உச்சியில் ஏற்றிவிட்ட நீங்கள் ஒரு நிமிஷம் யோசித்து நம்ம ஈழப்பிரியனை ஒரு நாள் முதல்வராகவேனும் உச்சியில் ஏற்றி அழகு பார்த்திருக்க எண்ணம் வரவில்லையா.......!   😢

962df7edc60a4ae4e4ac2f6a4cf794bf.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

தெய்வமே !  கிருபன், நிழலி , கோஷான், சிறியரை உச்சியில் ஏற்றிவிட்ட நீங்கள் ஒரு நிமிஷம் யோசித்து நம்ம ஈழப்பிரியனை ஒரு நாள் முதல்வராகவேனும் உச்சியில் ஏற்றி அழகு பார்த்திருக்க எண்ணம் வரவில்லையா.......!   😢

962df7edc60a4ae4e4ac2f6a4cf794bf.gif

முதல் 4 கேள்விக்கும் தேர்தல் வாக்குகள் வர வர புள்ளிகள் வழங்கினேன். மறுநாள் வேலைக்கு செல்லும்  போது புகையிரதத்தில் பயணிக்கும் போதும் , வேலையில் ஒய்வு கிடைக்கும் போது இலகுவாக புள்ளிகள் வழங்கக்கூடிய கேள்விகளுக்கு மட்டுமே புள்ளிகள் வழங்கினேன். கைதொலை பேசியினுடாக கேள்விகளையும் பார்த்து விடைகளையும் பார்த்து புள்ளிகளை வழங்கினேன்.  

பிறகு வந்த நாட்களில் வீட்டில் இருந்து வேலை செய்ய கூடியதாக இருந்தினால் நேரம் எடுத்து சிலரை ஒருநாள் முதல்வராக்கினேன். அப்பொழுது நீங்கள் உட்பட வேறு சிலரையும் முதல்வராக்கலாமென்றால் உங்களுக்கும் அப்பொழுது முதல்வராக இருந்தவர்களுக்குமிடையிலான புள்ளிகள் அதிகமாக இருந்தது. என்ன செய்தாலும் முதல்வராக்க முடியாது என்று உணர்ந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒரு பகிடிக்கு திரியை கொஞ்சம் இழுத்துக் கொண்டு போகலாம் அத்துடன் பிரியனுக்கும் கொஞ்ச ஆசை காட்டுவம் என்றுதான் ......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், நிழலி, பிரபாவுக்கு வாழ்த்துக்கள் 👏

  • கருத்துக்கள உறவுகள்

@suvy @ஈழப்பிரியன் அண்ணையள், நான் ஆட்சியமைத்த பொதெல்லாம் உங்கள் பாத ரட்சையைத்தான் அரியணையில் வைத்தேன்🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

அண்ணையள், நான் ஆட்சியமைத்த பொதெல்லாம் உங்கள் பாத ரட்சையைத்தான் அரியணையில் வைத்தேன்🤣.

கெட்டாஸ்! செய்த களவை கூட  அழகான தமிழில் எழுதி என்னமாதிரி பினையிறார் பாருங்கோ....😂
 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

கெட்டாஸ்! செய்த களவை கூட  அழகான தமிழில் எழுதி என்னமாதிரி பினையிறார் பாருங்கோ....😂
 

thillana-mohanambal-padmini.gif

அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா அம்பி, அவர் ஒரு கோர்ட்டு போட்டுகொண்டு  கோர்ட்டுக்கு போகாத வக்கீல் தெரியுமோல்லியோ ....... அப்படித்தான் சொல்லுவார்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2024 at 18:53, வீரப் பையன்26 said:

போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்பு அண்ணாவுக்கும் போட்டியில் வென்ற‌ பெரிய‌ப்புக்கும் வாழ்த்துக்க‌ள்..........................

யாழ்கள தமிழக நாடாளுமன்றப் போட்டியில் முதலாவதாக வென்றால் பரிசு தருவேன் என்ற சொல்லை காக்கவேண்டும் என்பதற்காக @வீரப் பையன்26 எனக்குப் பரிசுத் தொகையை அனுப்பவேண்டும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் விடாப்பிடியாய நின்றார்.

லொட்டரி ரிக்கற் எடுக்காமல் இருப்பதையே ஒரு கொள்கையாக கொண்டுள்ள எனக்கு பரிசுத்தொகையைப் பெறமுடியாது என்று நயமாகச் சொல்லி, விரும்பினால் ஒரு சமூகத் தொண்டுக்கு உதவுமாறு சொன்னேன்.

இலண்டனில் ஏ லெவல் படிக்கும்போது அறிமுகமாகி விரைவிலேயே எனது buddy ஆகிய நண்பனின்  மகள் சஹானா இரண்டு வருடங்களுக்கு முன்னர் புற்றுநோயால் 14 வயதிலேயே மரணித்திருந்தார். அவரின் நினைவாக Sahana Foundation என்னும் அறக்கட்டளை அமைப்பை நிறுவி சாவகச்சேரிப் பகுதியில், தீராத நோய்களால் மரணத்தினை நெருங்கிய நோயாளிகளை கவனிக்கும் ஒரு இல்லத்தை,  Palliative Care hospice, பல தொண்டு அமைப்புக்களுடன் சேர்ந்து அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த இல்லத்திற்கு ஒரு அம்புலன்ஸ் வாங்குவதற்கான £75oo பவுண்ட்ஸ் பணம் சேர்க்க எனது இன்னொரு நண்பர் சூரி North of Wales Cotswold Way Challenge எனும் 50km கடினமான நடைபயணம் ஒன்றை அடுத்த ஞாயிறு (22 ஜூன்) மேற்கொள்கின்றார்.  

தாராள மனம்கொண்ட @வீரப் பையன்26 £1oo பவுண்ட்ஸைக் கொடுத்ததோடு கமிஸனாக £15 பவுண்ட்ஸையும் கொடுத்துள்ளார். அம்புலன்ஸ் வாங்கும் நிதி சேர்ப்புக்கு பங்களித்த பையனுக்கு நன்றி பல.

கள உறுப்பினர்கள் யாராவது பங்களிக்க விரும்பினால் பின்வரும் இணைப்பில் சென்று பங்களிக்கமுடியும். ஆனால் பையனைப் போல £15 கமிஸனைக் கொடுக்காமல் அதனை ஒரு பவுண்ட்ஸ் அல்லது அதற்கும் கீழாக மாற்றினால் நல்லது,

https://www.justgiving.com/crowdfunding/Soori?utm_source=whatsapp&utm_medium=socpledgemobile&utm_content=Soori&utm_campaign=post-pledge-mobile&utm_term=r4yXppEQw

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

லொட்டரி ரிக்கற் எடுக்காமல் இருப்பதையே ஒரு கொள்கையாக கொண்டுள்ள எனக்கு

ஏன்   ஐயா   பரிசு விழுந்து விடும் என்பதால் அல்லது ஒருபோதும் விழப்போவதில்லை  என்பதால்லா?? என்ன காரணம்?? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.