Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அண்மைக் காலங்களில் நான் வசிக்கும் ஜேர்மன் நாட்டில் சிறு பிள்ளை பாலியல் கொடுமைகள். ஜேர்மனியர்கள் தம் மண்ணில்  சர்வ சாதாரணமாக நடந்து சென்றுகொண்டிருக்கும் போது அல்லது பயணித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஒரு சமூகத்தினரால் கொலைகள் செய்யப்படுகின்றார்கள். கொலை செய்யப்படுகின்றவர்கள் எதுவுமறியாத அப்பாவிகள்.எதுவுமறியாத சிறுவர் சிறுமிகள்.

இப்படியான நடத்தைகளை செய்பவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாட்டிலிருந்து வந்த அகதி தஞ்சம் கோரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாருங்கள் என வரவேற்றவர்களின் நெஞ்சிலே இன்று குத்துகின்றார்கள்.

ஒரிருவர் இந்த தவறுகளை செய்தால் பரவாயில்லை என்றாலும் ஆயிரமாயிரம் இப்படியான மனநிலை உள்ளவர்கள் ஜேர்மனிய மண்ணில் உலாவுகின்றார்கள் என் இன்றைய செய்திகள் கூறுகின்றன.உண்மையை சொல்ல வேண்டுமானால் மக்கள் ஏதோவொரு அச்சத்துடனேயே உலாவுகின்றார்கள் என சொல்லலாம்.

பல் வேறு நாடுகளில் அரசியல் குழப்பங்களால் தமது நாடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக வருபவர்களை இன் முகத்துடன் வரவேற்று சகல உதவிகளையும் அதாவது உடை உறைவிட வசதி,பண வசதி,தொழில் கல்வி கற்க வசதி என சகல வசதிகளும் செய்து கொடுக்கின்றார்கள்.

ஜேர்மனிய இன்றைய சமுதாயமும்  எவ்வித பாரபட்சமின்றி இவர்களுடன் கைகோர்த்து நட்புறவுடனேயே பழகுகின்றார்கள். பல இளம் சமுதாயத்தினர் தங்கள் வீடுகளில்  அகதிகளாக வருபவர்களுக்கு  ஒரு அறையை அவர்களுக்கென்றே ஒதுக்கி கொடுத்தும் உள்ளார்கள்.

பல குடும்பங்களில் அகதி என முத்திரை கொடுக்காமல் அவர்களும் மனிதர்கள் எனும் மனப்பான்மையில்  பிள்ளைகளாக தத்தெடுத்து பொறுப்பேற்றும் உள்ளார்கள்.

இன்னும் பல இடங்களில் இளையவர்கள் இன மத பேதமில்லாமல் காதல் செய்தும் உள்ளார்கள்.காதல் கருத்து வேறுபாடு வந்து பிரியும் போது கொலைகளும் செய்துள்ளார்கள் அந்த அகதி கயவர்கள். இது ஜனநாயக நாடு,தனிமனித  உரிமையுள்ள நாடு என தஞ்சம் புகுந்து விட்டு தமது மத/இன கலாச்சாரத்தை மனதில் வைத்து கொலைகளை செய்கின்றார்கள்.

இந்த நாடு அரசியல் சுதந்திரம் உள்ள நாடு. யாரும் எந்த அரசியலுக்கும் எந்த கருத்தும் வைக்கலாம். நன்றி அரசியலை எதிர்பார்க்காத நாடு.  அப்படிப்பட்ட நாடுகளுக்கு வந்தவர்கள் கொலை,பாலியல் கொலை,பாலியல் வன்முறை,மதம் சம்பந்தப்பட்ட கொலைகளை செய்கின்றார்கள்.

மத சுதந்திரம் அதிகமாக கொடுக்கும் நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. அப்படியான நாட்டில் இஸ்லாமுக்கு மாற்றுக்கருத்து வைத்த ஒரு மனிதரை அகதி தஞ்சம் கோரிய ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் கத்தியால் முகம் மற்றும் ஏனைய இடங்களில் கூரிய கத்தியால் குத்தியுள்ளார்.
அதை தடுக்க சென்ற பொலிஸ் அதிகாரியை தலையின் பின்புறம் கத்தியால் குத்தி..... அவசர சிகிச்சையின் பின் அந்த பொலிஸ் அதிகாரி காலமாகிவிட்டார்.
அஞ்சலிகள்

இப்படியான செயல்களினால் ஜேர்மனிய மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியாத அளவிற்கு அகதிகள் மீதான வெறுப்புணர்வை வளர்த்துக்கொண்டு வருகின்றார்கள். சில இடங்களில் அகதிகள் மீதான வெறுப்பில்லாமல் பயம் காரணமாகவே போராட்டங்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

சில தினங்களுக்கு முன் ஒரு ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர்  ஜேர்மனிய குடிமகன் மீது கத்திக்குத்து நடத்திய சம்பவம்.

காணொளி பார்க்க

31. Mai 2024: Der Afghane Sulaiman A. (25) geht auf den Polizisten los. Polizeihauptkommissar Rouven L. (29) beugt sich gerade über einen Mann, der irrtümlich auf einen Helfer eingeprügelt hatte

In einem seiner Videos, das vor der Attacke auf den Polizisten in Mannheim hochgeladen wurde, posiert der Hass-Islamist mit nacktem Oberkörper und einem langen Messer. Dann beginnt er, fast wie von Sinnen damit herumzufuchteln

நன்றி கெட்ட உலகமிது..😡

  • Like 4
  • Thanks 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெர்மனி மட்டுமல்ல சிறுவர் துர்பிரயோகம்  எல்ல நாட்டிலும் நடக்கிறது இதற்கு போதை முதற் காரணம்.மண்டைபிசகு இன்னொரு காரணம் சிறார்களை நம்பி எவரிடமும் பழக விட முடியாமல் இருக்கிறது . நிறைய அறிவுரைகளை ,கண்காணிப்பை எடுக்க வேண்டியுள்ளது .    

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, நிலாமதி said:

ஜெர்மனி மட்டுமல்ல சிறுவர் துர்பிரயோகம்  எல்ல நாட்டிலும் நடக்கிறது இதற்கு போதை முதற் காரணம்.மண்டைபிசகு இன்னொரு காரணம் சிறார்களை நம்பி எவரிடமும் பழக விட முடியாமல் இருக்கிறது . நிறைய அறிவுரைகளை ,கண்காணிப்பை எடுக்க வேண்டியுள்ளது .    

வாருங்கள் என வாரி அணைத்தவர்கள் மீது கத்தியை நீட்டுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, குமாரசாமி said:

அண்மைக் காலங்களில் நான் வசிக்கும் ஜேர்மன் நாட்டில் சிறு பிள்ளை பாலியல் கொடுமைகள். ஜேர்மனியர்கள் தம் மண்ணில்  சர்வ சாதாரணமாக நடந்து சென்றுகொண்டிருக்கும் போது அல்லது பயணித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஒரு சமூகத்தினரால் கொலைகள் செய்யப்படுகின்றார்கள். கொலை செய்யப்படுகின்றவர்கள் எதுவுமறியாத அப்பாவிகள்.எதுவுமறியாத சிறுவர் சிறுமிகள்.

இப்படியான நடத்தைகளை செய்பவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாட்டிலிருந்து வந்த அகதி தஞ்சம் கோரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாருங்கள் என வரவேற்றவர்களின் நெஞ்சிலே இன்று குத்துகின்றார்கள்.

ஒரிருவர் இந்த தவறுகளை செய்தால் பரவாயில்லை என்றாலும் ஆயிரமாயிரம் இப்படியான மனநிலை உள்ளவர்கள் ஜேர்மனிய மண்ணில் உலாவுகின்றார்கள் என் இன்றைய செய்திகள் கூறுகின்றன.உண்மையை சொல்ல வேண்டுமானால் மக்கள் ஏதோவொரு அச்சத்துடனேயே உலாவுகின்றார்கள் என சொல்லலாம்.

பல் வேறு நாடுகளில் அரசியல் குழப்பங்களால் தமது நாடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக வருபவர்களை இன் முகத்துடன் வரவேற்று சகல உதவிகளையும் அதாவது உடை உறைவிட வசதி,பண வசதி,தொழில் கல்வி கற்க வசதி என சகல வசதிகளும் செய்து கொடுக்கின்றார்கள்.

ஜேர்மனிய இன்றைய சமுதாயமும்  எவ்வித பாரபட்சமின்றி இவர்களுடன் கைகோர்த்து நட்புறவுடனேயே பழகுகின்றார்கள். பல இளம் சமுதாயத்தினர் தங்கள் வீடுகளில்  அகதிகளாக வருபவர்களுக்கு  ஒரு அறையை அவர்களுக்கென்றே ஒதுக்கி கொடுத்தும் உள்ளார்கள்.

பல குடும்பங்களில் அகதி என முத்திரை கொடுக்காமல் அவர்களும் மனிதர்கள் எனும் மனப்பான்மையில்  பிள்ளைகளாக தத்தெடுத்து பொறுப்பேற்றும் உள்ளார்கள்.

இன்னும் பல இடங்களில் இளையவர்கள் இன மத பேதமில்லாமல் காதல் செய்தும் உள்ளார்கள்.காதல் கருத்து வேறுபாடு வந்து பிரியும் போது கொலைகளும் செய்துள்ளார்கள் அந்த அகதி கயவர்கள். இது ஜனநாயக நாடு,தனிமனித  உரிமையுள்ள நாடு என தஞ்சம் புகுந்து விட்டு தமது மத/இன கலாச்சாரத்தை மனதில் வைத்து கொலைகளை செய்கின்றார்கள்.

இந்த நாடு அரசியல் சுதந்திரம் உள்ள நாடு. யாரும் எந்த அரசியலுக்கும் எந்த கருத்தும் வைக்கலாம். நன்றி அரசியலை எதிர்பார்க்காத நாடு.  அப்படிப்பட்ட நாடுகளுக்கு வந்தவர்கள் கொலை,பாலியல் கொலை,பாலியல் வன்முறை,மதம் சம்பந்தப்பட்ட கொலைகளை செய்கின்றார்கள்.

மத சுதந்திரம் அதிகமாக கொடுக்கும் நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. அப்படியான நாட்டில் இஸ்லாமுக்கு மாற்றுக்கருத்து வைத்த ஒரு மனிதரை அகதி தஞ்சம் கோரிய ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் கத்தியால் முகம் மற்றும் ஏனைய இடங்களில் கூரிய கத்தியால் குத்தியுள்ளார்.
அதை தடுக்க சென்ற பொலிஸ் அதிகாரியை தலையின் பின்புறம் கத்தியால் குத்தி..... அவசர சிகிச்சையின் பின் அந்த பொலிஸ் அதிகாரி காலமாகிவிட்டார்.
அஞ்சலிகள்

இப்படியான செயல்களினால் ஜேர்மனிய மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரியாத அளவிற்கு அகதிகள் மீதான வெறுப்புணர்வை வளர்த்துக்கொண்டு வருகின்றார்கள். சில இடங்களில் அகதிகள் மீதான வெறுப்பில்லாமல் பயம் காரணமாகவே போராட்டங்களும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

சில தினங்களுக்கு முன் ஒரு ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர்  ஜேர்மனிய குடிமகன் மீது கத்திக்குத்து நடத்திய சம்பவம்.

காணொளி பார்க்க

31. Mai 2024: Der Afghane Sulaiman A. (25) geht auf den Polizisten los. Polizeihauptkommissar Rouven L. (29) beugt sich gerade über einen Mann, der irrtümlich auf einen Helfer eingeprügelt hatte

In einem seiner Videos, das vor der Attacke auf den Polizisten in Mannheim hochgeladen wurde, posiert der Hass-Islamist mit nacktem Oberkörper und einem langen Messer. Dann beginnt er, fast wie von Sinnen damit herumzufuchteln

நன்றி கெட்ட உலகமிது..😡

நிச்சயமாக  சிரியா  ஆப்கானிஸ்தான்   பெடியள். படுமோசம்.   15......16,.வயது ஜேர்மன் பெட்டைகளை   தங்களுடைய நாட்டுக்கு அழைத்து சென்று  கொடுமை படுத்தி  சித்திரவதை செய்துள்ளனர்  இவர்களை விட  அந்த நாலு கால் பிரணி  மிகவும் நன்றியுள்ளது  பகிர்வுக்கு நன்றிகள் பல.  

குறிப்பு,....இப்போது வயறு எப்படி சுகம?? 😂🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, குமாரசாமி said:

வாருங்கள் என வாரி அணைத்தவர்கள் மீது கத்தியை நீட்டுகின்றார்கள்.

இங்கேயும் அதே பிரச்சனை தான்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கேயும் அதே பிரச்சனை தான்.

புதிய சட்டங்களை கொண்டு வர இருக்கின்றார்கள். அவை பயனளிக்கப்போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். பல விடயங்களில் இந்த குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடியாத அவலம் இன்னும் மகா கொடுமை.

20bfac84a9ad21313eba2f52a952ebd7-3041f2d5.webp

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, Kandiah57 said:

நிச்சயமாக  சிரியா  ஆப்கானிஸ்தான்   பெடியள். படுமோசம்.   15......16,.வயது ஜேர்மன் பெட்டைகளை   தங்களுடைய நாட்டுக்கு அழைத்து சென்று  கொடுமை படுத்தி  சித்திரவதை செய்துள்ளனர்  இவர்களை விட  அந்த நாலு கால் பிரணி  மிகவும் நன்றியுள்ளது  பகிர்வுக்கு நன்றிகள் பல.  

சிரியா,ஈராக்,ஆப்கானிஸ்தான்  போன்ற நாட்டவர்கள் ஜேர்மனியில் ஆக மோசமாக இருக்கின்றார்கள்.  மனித சுதந்திரம் கலாச்சார சுதந்திரம் உள்ள நாடுகளுக்கு வந்தவுடன் அவுத்து விட்ட ஆடுகள் போல் தலைகால் புரியாமல் திரிகின்றார்கள். இதில் கொடுமை என்னவெனில் இவர்கள் செய்யும் அகோர அட்டூளியங்களுக்கு இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் எவ்வித கருத்துக்களோ,அறிக்கைகளோ,கண்டன அறிக்கைகளோ வெளியிடுவதில்லை.

நான் நினைக்கிறேன்  அந்த நாடுகளில் இருக்கும் அடக்குமுறை சட்டங்கள் சரியானதே என.....😷

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர்களுடன் வேலை செய்துள்ளேன், பழகியுள்ளேன். ஊத்தைகள் எந்த நாடும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/6/2024 at 00:15, குமாரசாமி said:

அப்படியான நாட்டில் இஸ்லாமுக்கு மாற்றுக்கருத்து வைத்த ஒரு மனிதரை அகதி தஞ்சம் கோரிய ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் கத்தியால் முகம் மற்றும் ஏனைய இடங்களில் கூரிய கத்தியால் குத்தியுள்ளார்.
அதை தடுக்க சென்ற பொலிஸ் அதிகாரியை தலையின் பின்புறம் கத்தியால் குத்தி..... அவசர சிகிச்சையின் பின் அந்த பொலிஸ் அதிகாரி காலமாகிவிட்டார்.
அஞ்சலிகள்

கடமையில் இறந்த அதிகாரிக்கும்,

கொல்லப்பட்டவருக்கும் அஞ்சலிகள்.

கொல்லப்பட்டவர் ஒரு இனத்துவேச, வலதுசாரி அடிப்படைவாதி என்பது உண்மையா?

எந்த கருத்து முரணுக்கும் வன்முறை பதில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெரும்பாலான  ஜேர்மனியர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிக விருப்பு உடையவர்கள். அவர்களிடம் இந்த சிரிய, ஆப்கானிய முஸ்லீம் குரங்குகள்...  தகாத முறையில் நடப்பது மிகவும் கண்டிக்கப் பட வேண்டிய விடயம்.
துருக்கியர்  கூட... இதனை கண்டிக்காதது அவர்கள் இதனை ஆதரிக்கின்றார்கள் என்றே கருத வேண்டி உள்ளது. 

  • Like 1
Posted

முக்கியமான ஒன்று இக் கட்டுரையில் விடுபடப்பட்டுள்ளது. ஜேர்மனி இராணுவம் எந்த உரிமையில் 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் காலூன்றியிருந்ததோ அதே உரிமை ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக ஜேர்மனிக்குள் வருவதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. அது மட்டுமின்றி அகதிகளை உள்வாங்குதல் சர்வதேச/ஐரோப்பிய உடன்படிக்கைகளின்படி கட்டாயமான ஒன்று. பாவம் பரிதாபம் பார்த்து அவர்களை ஜேர்மன் ஆதரிக்கவில்லை.

வந்தவர்கள் விதிமுறைகளை மீறுவதை வேறு விதமாக அணுக வேண்டும். இது மதத் தீவிரவாதம். தங்கள் சமுதாயம் மேற்குலகினால் பாதிக்கப்பட்டதால் பழவாங்கும் நோக்கத்தோடு வருபவர்கள், மேற்குலகின் வெறுப்பை உள்மனதில் வைத்துக் கொண்டு வருபவர்கள் மற்றும் மூளைச்சலவை செய்யப்படுபவர்களே பெரும்பாலும் இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள்.

இன்னுமொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஜேர்மனி இனவாதக் கட்சியான AfD இந்த வருட ஆரம்பத்தில் இரகசிய கூட்டம் ஒன்றில் தாம் ஆட்சிக்கு வந்தால் ஜேர்மனியிலிருந்து வெளிநாட்டவர்கள் அனைவரையும் வெளியேற்றுவது தொடர்பாக ஆலோசித்தது. இதற்கு எதிராக ஜேர்மனி மக்கள் இலட்சக்கணக்கில் (14 இலட்சம் என்று கூறப்படுகிறது) நாடெங்கிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பலர் AfD கட்சியினைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரினர்.  https://www.lefigaro.fr/international/deuxieme-jour-de-manifestations-en-allemagne-contre-le-parti-d-extreme-droite-afd-20240121

  • Like 2
Posted

ஜேர்மனியில் இனவாத கட்சி இரண்டாவதாக வந்தது இனவாத மக்களின் வாக்குகளால் என எடுக்கலாமா?

Posted
2 minutes ago, nunavilan said:

ஜேர்மனியில் இனவாத கட்சி இரண்டாவதாக வந்தது இனவாத மக்களின் வாக்குகளால் என எடுக்கலாமா?

மொத்த வாக்குகளில் 16 வீதம் இந்தக் கட்சி பெற்றுள்ளது. மீதி 80 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை இனவாதத்துக்கு எதிரானதாக எடுக்கலாமா ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, இணையவன் said:

மீதி 80 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை இனவாதத்துக்கு எதிரானதாக எடுக்கலாமா ?

இல்லை

மிகுதி 80% இல்

20  % வெளிநாட்டவர்களுக்கு அதிக சலுகை கொடுக்கக் கூடாது எனும் பகுதி.

ஆனால் வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம்.

இன்னும் ஒரு 20  % வெளிநாட்டவர்களை தங்கள் அடிமைகளாக நினைத்து அவர்கள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த நினைப்பவர்கள். 

அதனால்   வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம்

மிகுதி 20  வீதத்தினர் வெளிநாட்டவர்கள் தங்களைவிடப் பொருளாதாரத்தில் முன்னேறுவதை பிடிக்காதவர்கள் .

அதுவரை வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம்.

இன்னும் 20 வீதமானவர்கள் நித்திரை போல நடிப்பவர்கள்

தங்களுக்குள்ளேயே வெளிநாட்டவர்களுக்கு எதிராகப் பேசிக்கொள்வார்கள் நல்லவர்களை போல நடித்துக் கொண்டிருப்பார்கள் .

நேரம் வரும்போது AFD   எனும் கட்சியை விடப் பலமடங்கு துவேசத்தைக் காட்டுவார்கள் .

ஆனாலும் அதுவரை  வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம்

  • Like 2
Posted
1 hour ago, இணையவன் said:

மொத்த வாக்குகளில் 16 வீதம் இந்தக் கட்சி பெற்றுள்ளது. மீதி 80 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை இனவாதத்துக்கு எதிரானதாக எடுக்கலாமா ?

16 வீத வாக்குகளை எடுத்து 2 ம் இடத்தை எப்படி எடுக்கலாம்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழ்தேசியம் எழும்.. சீமான் வாக்கு இன்னும் அதிகரித்துக்கொண்டே போகும்…!!

இன்றைய ஜரோப்பிய ஒன்றிய தேர்தலில் பிரான்ஸில் யாரும் நினைத்துப்பார்க்காத ஒன்று நிகழ்ந்திருக்கிறது.. ஆம் மரின் லூ பென் கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற்று ஜரோப்பிய ஒன்றிய தேர்தலில் வெற்று பெற்றிருக்கிறது.. பிரான்ஸ் பிரான்ஸ் இனற்கே என்ற முழக்கத்தை முன்வைத்தவர்..

ஏன் வெற்றி பெற்றார்..?

தமிழ் நாட்டில் திருப்பூர் பங்களாதேஸ் ஆகிவிட்டதாக அங்கு வாழும் தமிழர்களால் சொல்லப்படுகிறது

இன்னொரு இடத்தில்( பெயர் மறந்துவிட்டது) விரட்டி விரட்டி வடநாட்டவர்களால் அவ்வூர்க்காரர்கள் அடிக்கப்பட்ட காணொளிகள் வெளிவந்தன..

மத்திய அரசு தமிழை புறக்கணித்து கிந்தியை திணிப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்கிறது

மத்திய அரசின் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இருந்து அனைத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கின்றனர்..

மெல்ல மெல்ல சீமான் வளர்கிறார் இந்த இடத்தில்.. இனியும் இந்த வளர்ச்சி நிகழத்தான் போகிறது.. கிறவுண்ட் றியாலிற்றியை கீபோர்ட் கிறுக்கர்களால் உணரமுடியாது..

இலங்கையில் யுத்ததின் பின்னும் இனவாதத்தால் தமிழர்களின் கலை கலாச்சாரம் வேலைவாய்ப்புக்கள் அனைத்திலும் புறக்கணிப்படுவதாக உணர்வதால் தொடர்ந்தும் பிழைகளை பொறுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் தமிழ்தேசிய கட்சிகளுக்கே வாக்களிக்கின்றனர்.. இது தொடரும்..

மேற்கு நாடுகளில் கட்டற்ற புலம்பெயர்வால் அந்நாடுகளின் சமநிலை குழம்பி கலை கலாச்சாராம் மொழி மதம் என அனைத்திலும் பூர்வகுடியான தாம் சிறுபான்மையினராவதாக உணர்கின்றனர்.. லண்டன் வீதிகளில் ஆங்கிலத்தை கேட்கமுடியவில்லை என்று ஆங்கிலேயர் கூறினர்.. பிரான்சில் அராபிய நாட்டு கலாச்சாரமும் மொழியும் எங்கும் பிரான்சின் விழுமியங்களை குக்கிராமங்களில் மட்டும்தான் காணப்படுகின்றது என்று பொங்கினர்..

குடியேற்ற வாசிகளின் அதிகரிப்பு, பொருளாதாரத்தில் ஜரோப்பிய நாட்டவர்களின் சரிவு நிலை, வெளிநாட்டு கொள்கை, வெளிநாட்டவர்களால் பறிக்கப்படும் ஜரோப்பிய நாட்டவர்களின் வேலைவாய்ப்பு, ஜரோப்பிய மக்களின் வரிப்பணத்தில் வெளிநாட்டில் நடத்தப்படும் தேவையற்ற போர் என அனைத்தும் அம்மக்களின் அந்தந்த ஜரோப்பிய பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் சுதேச இனங்களின் அடிப்படை இருப்பையே சீரழிக்க ஆரம்பிந்திருக்கிறது.. 

விளைவு..

பிரித்தானியா ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்தது.. சுனக் புலம்பெயர்தலுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.. 

பிரான்ஸ் frexit இற்கு தயாராகிறது.. இன்றைய ஜரோப்பிய ஒன்றிய தேர்தலில் வலதுசாரிகள் வென்றதை தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவொட்டது.. 2026 இல் நடக்க வேண்டிய தேர்தல் இந்த மாத இறுதியில் நடக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன..

இது அந்தந்த நிலத்தின் மக்கள் தம் மொழியை பற்றி உரிமைகளை பற்றி சிந்திக்க ஆரம்பித்திருக்கும் காலம்.. புறநிலை அழுத்தங்கள் அவர்களை சிந்திக்க வைத்திருக்கிறது..

தமிழ் நாட்டிலும் இது நிகழும்.. தமிழ்தேசியம் எழும்.. இது அந்தந்த மண்ணின் மக்களின் காலம்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
Posted (edited)
40 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் வலதுசாரிகளின் வெற்றியை நீங்கள், "மண்ணின் மைந்தர்களின்" வெற்றியாக கருதி, நா.த. கட்சியையும் அவர்களைப் போன்றவர்களே என்று சொல்கின்றீர்கள். அதாவது 16 வீதம் எடுத்து இரண்டாவதாக வந்த இனவாதக் கட்சியையும் நா.த.க வினரையும் ஒன்றாக ஒப்பிடுகின்றீர்கள்.

தமிழகத்தில் தமிழ் தேசியத்தின் எழுச்சி, ஐரோப்பாவில் வலதுசாரிகளின், இனவாத அரசியல் சக்திகளின் எழுச்சிக்கு ஒப்பானது என்றும் சொல்கின்றீர்கள். 

இந்த இனவாத எழுச்சியைத் தான் நா.த.க வினரும் செய்கின்றனர் என நம்புகின்றீர்கள்.

இங்கு நான் உட்பட நா.த,க வின் அரசியலை வெறுப்பதன் காரணமும் இதுதான்.

நாம் எழுதவேண்டிய பல விடயங்களை நீங்களே, இரண்டு தரப்பினரையும் ஒன்றாக தராசில் வைத்து எழுதியமைக்கு நன்றி

Edited by நிழலி
சிலவற்றை சேர்க்க
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, நிழலி said:

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் வலதுசாரிகளின் வெற்றியை நீங்கள், "மண்ணின் மைந்தர்களின்" வெற்றியாக கருதி, நா.த. கட்சியையும் அவர்களைப் போன்றவர்களே என்று சொல்கின்றீர்கள். அதாவது 16 வீதம் எடுத்து இரண்டாவதாக வந்த இனவாதக் கட்சியையும் நா.த.க வினரையும் ஒன்றாக ஒப்பிடுகின்றீர்கள்.

தமிழகத்தில் தமிழ் தேசியத்தின் எழுச்சி, ஐரோப்பாவில் வலதுசாரிகளின், இனவாத அரசியல் சக்திகளின் எழுச்சிக்கு ஒப்பானது என்றும் சொல்கின்றீர்கள். 

இந்த இனவாத எழுச்சியைத் தான் நா.த.க வினரும் செய்கின்றனர் என நம்புகின்றீர்கள்.

இங்கு நான் உட்பட நா.த,க வின் அரசியலை வெறுப்பதன் காரணமும் இதுதான்.

நாம் எழுதவேண்டிய பல விடயங்களை நீங்களே, இரண்டு தரப்பினரையும் ஒன்றாக தராசில் வைத்து எழுதியமைக்கு நன்றி

அப்போ பிரான்சில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அதுவும் படித்த ஜனநாயகத்தை விரும்புகின்ற உலகத்துக்கே புரட்சியை அறிமுகப்படுத்திய பிரெஞ்சு மக்கள் இனவாதிகள் என்றால் தமிழர்களும் நாம் தமிழரும் இனவாதிகளாகவே இருந்திட்டு போகட்டும்..

நீங்கள் குடியேறிகளால் உருவான ஒரு நாடு கனடாவில் இருந்துகொண்டு பூர்வீகக்குடிகள் வாழும் நாடுகளில் அவர்கள் சமூகங்களும் மொழியும் விழுமியங்களும் பண்பாடும் சுதேச குழந்தைகளின் எதிர்காலமும் பொருளாதாரமும் பற்றிய அந்த சுதேச மக்களின் கவலைகளை புரிந்து கொள்ள முடியாமல் என்னில் பிழை காண்கிறீர்கள்.. கிரவுண்ட் றியாலிற்றி என்ற ஒன்றை  மறுதலித்து நீங்கள் என்ன பேசினாலும் இப்படியான தேர்தல்களின் முடிவுகளில் அந்தந்த நாடுகளின் பூர்வகுடி உள்ளூர் மக்களின் யதார்த்தம் வந்து உங்கள் போன்றவர்களின் முகத்தில் அடிக்கும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
Posted
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் குடியேறிகளால் உருவான ஒரு நாடு கனடாவில் இருந்துகொண்டு பூர்வீகக்குடிகள் வாழும் நாடுகளில் அவர்கள் சமூகங்களும் மொழியும் விழுமியங்களும் பண்பாடும் சுதேச குழந்தைகளின் எதிர்காலமும் பொருளாதாரமும் பற்றிய அந்த சுதேச மக்களின் கவலைகளை புரிந்து கொள்ள முடியாமல் என்னில் பிழை காண்கிறீர்கள்.. கிரவுண்ட் றியாலிற்றி என்ற ஒன்றை  மறுதலித்து நீங்கள் என்ன பேசினாலும் இப்படியான தேர்தல்களின் முடிவுகளில் அந்தந்த நாடுகளின் பூர்வகுடி உள்ளூர் மக்களின் யதார்த்தம் வந்து உங்கள் போன்றவர்களின் முகத்தில் அடிக்கும்..

கனடாவில் வாழும் சுதேச குடிகளின் எதிர்காலத்தை, அவர்களின் பொருளாதாரத்தை நான் புரிந்து கொள்ளவில்லை என்று எந்த அடிப்படையில் சொல்கின்றீர்கள்.

அத்துடன் இங்கு குடியேற்றவாசிகளிற்கு எதிரான மனநிலையோ, குடியேற்றவாசிகளை வெளியேற்று என்ற கோரிக்கையோ அந்த பூர்வீக குடிகளின் மத்தியில் எழுவில்லை. அவ்வாறான எண்ணம் வெளிப்படுவது எல்லாம் பூர்வீக மக்களின் வாழ்வாதாராத்தை சிதைத்து அதன் மேல் தம் பொருளாதாரத்தை கட்டமைத்த, ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய வெள்ளையினத்தவர்களிடம் இருந்தே. அப்படியான வெள்ளையினத்தவர்களின் எண்ணிக்கையும் மிக மிக குறைவு இங்கு. ஒட்டு மொத்த கனடாவில் ஒரு சிறு தேர்தல் தொகுதியில் கூட அவர்களால் (தீவிர வெள்ளையின வலதுசாரிகளால்) வெற்றி பெற முடியாது.

உங்களுக்கு தமிழ் தேசிய எழுச்சி என்பதிலும் தெளிவு இல்லை, கனடா அரசியலிலும் தெளிவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழ்தேசியம் எழும்.. சீமான் வாக்கு இன்னும் அதிகரித்துக்கொண்டே போகும்…!!

இன்றைய ஜரோப்பிய ஒன்றிய தேர்தலில் பிரான்ஸில் யாரும் நினைத்துப்பார்க்காத ஒன்று நிகழ்ந்திருக்கிறது.. ஆம் மரின் லூ பென் கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற்று ஜரோப்பிய ஒன்றிய தேர்தலில் வெற்று பெற்றிருக்கிறது.. பிரான்ஸ் பிரான்ஸ் இனற்கே என்ற முழக்கத்தை முன்வைத்தவர்..

ஏன் வெற்றி பெற்றார்..?

தமிழ் நாட்டில் திருப்பூர் பங்களாதேஸ் ஆகிவிட்டதாக அங்கு வாழும் தமிழர்களால் சொல்லப்படுகிறது

இன்னொரு இடத்தில்( பெயர் மறந்துவிட்டது) விரட்டி விரட்டி வடநாட்டவர்களால் அவ்வூர்க்காரர்கள் அடிக்கப்பட்ட காணொளிகள் வெளிவந்தன..

மத்திய அரசு தமிழை புறக்கணித்து கிந்தியை திணிப்பதற்கான எல்லா வேலைகளையும் செய்கிறது

மத்திய அரசின் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இருந்து அனைத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கின்றனர்..

மெல்ல மெல்ல சீமான் வளர்கிறார் இந்த இடத்தில்.. இனியும் இந்த வளர்ச்சி நிகழத்தான் போகிறது.. கிறவுண்ட் றியாலிற்றியை கீபோர்ட் கிறுக்கர்களால் உணரமுடியாது..

இலங்கையில் யுத்ததின் பின்னும் இனவாதத்தால் தமிழர்களின் கலை கலாச்சாரம் வேலைவாய்ப்புக்கள் அனைத்திலும் புறக்கணிப்படுவதாக உணர்வதால் தொடர்ந்தும் பிழைகளை பொறுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் தமிழ்தேசிய கட்சிகளுக்கே வாக்களிக்கின்றனர்.. இது தொடரும்..

மேற்கு நாடுகளில் கட்டற்ற புலம்பெயர்வால் அந்நாடுகளின் சமநிலை குழம்பி கலை கலாச்சாராம் மொழி மதம் என அனைத்திலும் பூர்வகுடியான தாம் சிறுபான்மையினராவதாக உணர்கின்றனர்.. லண்டன் வீதிகளில் ஆங்கிலத்தை கேட்கமுடியவில்லை என்று ஆங்கிலேயர் கூறினர்.. பிரான்சில் அராபிய நாட்டு கலாச்சாரமும் மொழியும் எங்கும் பிரான்சின் விழுமியங்களை குக்கிராமங்களில் மட்டும்தான் காணப்படுகின்றது என்று பொங்கினர்..

குடியேற்ற வாசிகளின் அதிகரிப்பு, பொருளாதாரத்தில் ஜரோப்பிய நாட்டவர்களின் சரிவு நிலை, வெளிநாட்டு கொள்கை, வெளிநாட்டவர்களால் பறிக்கப்படும் ஜரோப்பிய நாட்டவர்களின் வேலைவாய்ப்பு, ஜரோப்பிய மக்களின் வரிப்பணத்தில் வெளிநாட்டில் நடத்தப்படும் தேவையற்ற போர் என அனைத்தும் அம்மக்களின் அந்தந்த ஜரோப்பிய பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் சுதேச இனங்களின் அடிப்படை இருப்பையே சீரழிக்க ஆரம்பிந்திருக்கிறது.. 

விளைவு..

பிரித்தானியா ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்தது.. சுனக் புலம்பெயர்தலுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.. 

பிரான்ஸ் frexit இற்கு தயாராகிறது.. இன்றைய ஜரோப்பிய ஒன்றிய தேர்தலில் வலதுசாரிகள் வென்றதை தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவொட்டது.. 2026 இல் நடக்க வேண்டிய தேர்தல் இந்த மாத இறுதியில் நடக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன..

இது அந்தந்த நிலத்தின் மக்கள் தம் மொழியை பற்றி உரிமைகளை பற்றி சிந்திக்க ஆரம்பித்திருக்கும் காலம்.. புறநிலை அழுத்தங்கள் அவர்களை சிந்திக்க வைத்திருக்கிறது..

தமிழ் நாட்டிலும் இது நிகழும்.. தமிழ்தேசியம் எழும்.. இது அந்தந்த மண்ணின் மக்களின் காலம்..

அடி ஆத்தி?? நீங்க நல்லவரா கெட்டவரா😂?

இப்படி தமிழ் நாட்டில் எழும் தனித்தமிழ் ஆட்சியில், எந்த பரிசோதனையை வைத்து தமிழ், சுத்த தமிழ், அரைத்தமிழ் என்று தீர்மானிப்பார்களாம்? நாசிகள் செய்தது போல, ஒரு பாட்டன்/பாட்டி யூதராக இருந்தால் ஓகே, இரு பக்க பாட்டி/தாத்தாக்களும் யூதரெனின் "Juden- யூதன்" என்றது போல ஏதாவது செய்வாங்களா😅?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/6/2024 at 14:32, தமிழ் சிறி said:

பெரும்பாலான  ஜேர்மனியர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிக விருப்பு உடையவர்கள். அவர்களிடம் இந்த சிரிய, ஆப்கானிய முஸ்லீம் குரங்குகள்...  தகாத முறையில் நடப்பது மிகவும் கண்டிக்கப் பட வேண்டிய விடயம்.
துருக்கியர்  கூட... இதனை கண்டிக்காதது அவர்கள் இதனை ஆதரிக்கின்றார்கள் என்றே கருத வேண்டி உள்ளது. 

அவர்கள்  துருக்கியர்கள். வன்முறையை பார்க்கவில்லை   மதத்தை பிர்க்கிறார்கள்.   அவர்கள் வன்முறையை  பார்க்க வேண்டுமெனில்   ஒரு துருக்கி கன்னிப் பெணணை  பிடித்து .... .........சிரிய ஆப்கானிஸ்தான்  இளைஞர்கள் விடலைகள். செய்வது போன்று செய்ய வேண்டும் ......நேரம் உண்டா??  வாருங்கள்…  இருவரும்   முயற்சிக்கலாம்  🤣🤣🤣🙏

குறிப்பு,..சும்மா பகிடிக்கு எழுதினேன் உண்மை என நினைக்க வேண்டாம்   🤪

Just now, Kandiah57 said:

பார்க்கிறார்கள் 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nunavilan said:

16 வீத வாக்குகளை எடுத்து 2 ம் இடத்தை எப்படி எடுக்கலாம்???

பல கட்சிகள் போட்டு இட்டால் சாத்தியம் தான்   தமிழ்நாட்டில் 47 % வாக்குகள் பெற்ற கூட்டணி தான்  39 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்று உள்ளது   மிச்சம் 50%மேற்படட வாக்காளர்களுக்கு   பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, இணையவன் said:

மொத்த வாக்குகளில் 16 வீதம் இந்தக் கட்சி பெற்றுள்ளது. மீதி 80 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை இனவாதத்துக்கு எதிரானதாக எடுக்கலாமா ?

அவர்கள் இன்னொரு கிட்லர். ஆட்சியை விரும்பாதவர்கள்  AfD கட்சி வளர்ச்சி  கூடியது 20 % அல்லது அகக கூடியது 25%  இவர்கள் ஒருபோதும் ஜேர்மனியை ஆளப்போவதில்லை   மற்ற கட்சிகள் இவர்களுடன்  கூட்டணி வைக்க மாட்டார்கள்   இந்த கட்சியை தவிர்த்து தான் கூட்டணி அமைத்து ஆட்சி செய்வார்கள்   இவர்களால் ஜேர்மனியருக்கு  நல்ல ஆட்சி கொடுக்க முடியாது      வெளிநாட்டவர்கள் வெளியோறினால். 50 வீதமான. தொழிற்சாலைகள். மூட வேண்டும்   வேலைக்கு ஆள்கள். இல்லை   கூலி தொழிலாளர்கள் மட்டுமல்ல  மருத்துவர் பொறியாளர்,.......போன்றோருக்கும் தட்டுப்பாடு    எமது பிள்ளைகள் சொல்லுகிறார்கள்   இங்கே படித்தவர்கள். தேவைக்கேற்பப் இல்லை மிகவும் குறைவு     இந்த கட்சி ஒருமுறை ஆண்டாள்   அடுத்து வரும் தேர்தலில்   5 % கூட எடுக்க மாட்டார்கள்   இவர்கள் பிள்ளை. பெறவும் தெரியாது  வேலை செய்யவும் தெரியாது  எப்படி நாடு முன்னேற்றம் அடையும் ??

1 hour ago, நிழலி said:

உங்களுக்கு தமிழ் தேசிய எழுச்சி என்பதிலும் தெளிவு இல்லை, கனடா அரசியலிலும் தெளிவில்லை.

ஆமாம் சரியாக சொன்னீர்கள்    அவருக்கு தமிழ்நாட்டில் சீமானை  தவிர மற்ற கட்சிகள் எல்லாம்  தமிழ் உணர்வு அற்றவர்கள் தான்   🤣

Posted
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழ் நாட்டிலும் இது நிகழும்.. தமிழ்தேசியம் எழும்.. இது அந்தந்த மண்ணின் மக்களின் காலம்..

சீமான் ஆதரவை நியாயப்படுத்த ஐரோப்பிய அரசியலை ஒப்பிட்ட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு கதைக்கு உங்களுக்கு ஒரு மகன் இருந்து அவர் பாடசாலையில் சக மாணவரோடு விளையாடும்போது அவர்கள் வந்தேறு குடி என்று விளித்திருந்தால் அதனை உங்கள் மகன் உங்களிடம் முறையிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் மகனிடம், மகனே அவர்கள் திட்டியது நியாயமானது. வந்தேறு குடிகளான நாம் அதைப் பொறுத்துக் கொண்டு அதிகம் படித்து புத்திசாலியாகி பெரிய பதவிகளிலோ அரசியல் பதவிகளிலிருந்தோ ஐரோப்பியரை ஆளாமல் கொஞ்சமாகப் படித்து அவர்களுக்குக் கீழ்படிந்து வாழ்வதே நியாயமானது என்று சமாதானம் செய்வீர்களா ?

சீமானின் இனவாதத்தை வரவேற்றால் அடிமையாக வந்து அமெரிக்காவை ஆண்ட கறுப்பினத்தவர் முதல் புலம்பெயர்ந்த  தமிழர்களின் அடுத்த சந்ததியின் அரசியல் பிரவேசம் வரை எதிர்ப்பவராக இருக்க வேண்டும்.

நீங்கள் குறிப்பிட்ட பிரெஞ்சுப் புரட்சி இந்தத் தூய ஆட்சியை எதிர்த்து உருவானது. புரட்சி முடிந்து அடுத்த வருடம் 1790 ஆம் ஆண்டு அவர்கள் இயற்றிய சட்ட வரைபில் வெளிநாட்டு நபர் ஒருவர் 5 வருடம் பிரான்சில் இருந்து பிரெஞ்சு ஆணையோ பெண்ணையோ திருமணம்  செய்திருந்தால் அல்லது பிரான்சில் சொத்து வைத்திருந்தால் அவர் பிரெஞ்சுப் பிரஜையாகக் கணிக்கப்படுவார் என்று எழுதியுள்ளனர். 1804 இல் நெப்போலிய மன்னன் பிரெஞ்சுக் கல்வியறிவு உள்ளவரும் பிரெஞ்சுப் பிரஜையாவார் என்று சில மாற்றங்களைச் செய்திருந்தார்.

மரின் லுபெனின் தந்தை இரண்டாம் உலகப் போரில் இறந்த இராணுவத்தினர் பொதுமக்களுக்கான நினைவு நாளில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதைக் கூட பிரெஞ்சு மக்கள் விரும்பவிலை. காரணம் ஹிட்லரின் செயல்களை இவர் தொடர்ச்சியாக ஆதரித்து வந்தவர்.

அண்மையில் இறந்த முன்நாள் அமைச்சர் Robert Badinter இன் அரச மரியாதையோடு நடந்த இறுதிக் கிரியையில் மரின் லுபென் கலந்து கொள்வதை Badinter குடும்பத்தினர் விரும்பவில்லை என்று அறிவித்திருந்தனர். இவர் பிரான்சில் சமத்துவம் தொடர்பான பல சட்டங்களை இயற்றக் காரணமானவர். நாம் பிரெஞ்சுப் புரட்சி முதல் இன்று வரை பல உயிர்களைத் தியாகம் சமத்துவத்திற்காக உழைத்து வந்திருக்கிறோம். ஆனால் இந்த இனவாதிகள் இவற்றையெல்லாம் உதறித் தள்ளக் கூடியவர்கள் என்று இவரது மனைவி தெரிவித்திருந்தார்.

இனத் துவேசம் அழிவை நோக்கியே செல்லும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/6/2024 at 05:48, goshan_che said:

கொல்லப்பட்டவர் ஒரு இனத்துவேச, வலதுசாரி அடிப்படைவாதி என்பது உண்மையா?

.

அவர் கொல்லப்படவில்லை. முகத்தில் கத்திக்குத்து காயத்துடன் தப்பி விட்டார்.அவர் Afd கட்சியை சேர்ந்தவர். இஸ்லாத்திற்கு எதிராக பேசியவர் என கேள்விப்பட்டேன்.
Afd  கட்சி உறுப்பினர்கள் அண்மைக்காலமாக  சீனாவிற்கும் ரஷ்யாவிற்குமாக ஒற்றர் வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டார்கள். அதனால் கொஞ்சம் இறங்கு முகத்துடன் இருந்தவர்கள் இந்த கத்திக்குத்துடன்  மீண்டும் ஏறு நிலைக்கு வந்துவிட்டார்கள். 😂

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொருளாதார வசதிகளில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக வருடம் தோறும் கிறி்ஸ்மஸ் பண்டிகையின் போது அவர்களுக்கு விருப்பமான பொருட்களை அனுப்பி  வைப்பது தான் Santa Claus & Co. KG Factory. யேர்மனியில் Aachen நகரில் இருக்கும் இந்த நிறுவனம் 1000 சதுர மீற்றர் பரப்பளவிலான ஒரு ஹோலில் பிள்ளைகளுக்கான பல பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறது. வருடம் தோறும் கிறிஸ்மஸ் நேரத்தில் சிறுவர் சிறுமிகள் தங்களுக்கு விருப்பமானவற்றை பட்டியலிட்டு அந்த நிறுவனத்து அனுப்பி வைப்பார்கள். Santa Claus & Co நிறுவனத்தினரும் தங்களால் முடிந்தளவு அந்தப் பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகளும் தங்களுக்கு  கிறிஸ்மஸ் தாத்தாதான் பரிசுகளை அனுப்பி வைத்தார் என புளகாங்கிதமடைவார்கள். இந்த வருடம் அவர்களுக்குக் கிடைத்த ஒரு கடித்தத்தில் இருந்த விடயம் அந்த நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மூன்று சகோதரர்கள். அதில் இருவர் பெண்கள். ஒருவன் ஆண். இதில் ஒரு சிறுமியே மற்ற இருவருக்குமாகச் சேர்த்து கடிதத்தை எழுதி அனுப்பியிருந்தாள். அந்தக் கடிதத்தில் இருந்த விடயம் இதுதான், “ எனது தாத்தா எங்கள் அம்மாவுக்கும், எங்களுக்கும்  செய்யும் விடயத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும். அவர் தவறு செய்கிறார் என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும்  அவர் எங்களைத் தொடக்கூடாது - அது அருவருப்பானது…….” சிறுவர்களின்  சோகமான விருப்பப்பட்டியலை Santa Claus & Co  நிறுவனம் பொலிஸுக்கு அறிவிக்க, அரச சட்டத்தரணியின் ஒப்புதலுடன் பொலிஸார், அந்தச் சிறுவர்களின் வீட்டிற்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள்.  குழந்தைகளின் தாத்தா (67) நீண்ட காலமாக தனது பேத்திகளை (10 மற்றும் 12) கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் தனது மருமகளை பல முறை பாலியல் வன்முறை புரிந்ததாகவும் தெரியவந்துள்ளது..  ஆக இந்த ஆண்டு அந்தச் சிறார்களின் கவலையான அவர்களது கிறிஸ்மஸ் விருப்பக் கோரிக்கையை கிறிஸ்மஸ் தாத்தா நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
    • அப்படியும் இருக்கலாம்.......... சமீபத்தில் அம்பாந்தோட்டையிலும் ராஜபக்‌ஷவின் சிலை விழுத்தப்பட்டது தானே.......... தமிழ்நாட்டில் பல இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும்........ இல்லாவிட்டால் இரவோடிரவாக உடைத்துவிடுவார்கள்............😌. அந்த மக்கள் பட்டபாடுகள் போதும், இவைகளிலிருந்து மீண்டு அவர்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தங்களின் பிரதேசங்களில் வாழும் நிலை வரவேண்டும். மத்திய கிழக்கில் பல நாடுகள் சத்தம் சந்தடியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அது போலவே சிரியாவும் வரவேண்டும் என்பது தான் அவா............ பார்ப்போம் என்று ஒரு நம்பிக்கையுடன் சொல்ல மட்டும் தான் முடிகின்றது...............   
    • பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன். இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.  
    • ஊழல் என்பதை விட, அனுபவமின்மையே இது காட்டுகின்றது என்று சொல்லவே வந்தேன், அல்வாயன். முன்னைய ஆட்சியில் சீனி இறக்குமதியில் ஒரு ஊழல் நடந்ததே......... அது போல இந்த அரசில் நடவாது. பசில் போல எதிலும் பத்து வீதம் கமிஷனும் இங்கே கேட்கமாட்டார்கள், ஆனால் பொருள் வந்து இறங்குவதற்குள் மக்களின் சீவன்கள் போய்விடும்.....................
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.