Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

1) உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை. ஏனெனில் அவை யதார்த்தத்தை விடுத்து பழி வாங்கும் நோக்கம் கொண்டவை மட்டுமே. 

2) என் இனத்திற்கு நான் என்றும் உணர்வாளனாக பணியாளனாக பங்களிப்பாளியாக நன்றி உள்ளவனாக இருந்து இருக்கிறேன் இருக்கிறேன்.

ஆனால் எம் மீது ஆக்கிரமிப்பை 3) மேற்கொண்டு அதிகாரத்தை எம் மீது திணிக்க எனக்கு போடப்பட்ட பிச்சைகளுக்கு அல்ல. அதை ஒரு போதும் நான் ஏற்கவில்லை. ஏற்கவும் மாட்டேன். வாழு வாழ விடு என்பதே என்றும் எனது நிலைப்பாடு. 

4) பிச்சைகளை போட்டு ஆக்கிரமிப்பு செய்து ஆபிரிக்க மக்களை அதிகாரம் செய்தார்கள் என்று மேற்கை வசை பாடுவதும் அதையே செய்யும் சிங்களத்தை கனம் செய்யும் படி என்னை தூண்டுவதும்

5) உங்கள் இரட்டை வேடத்தை இங்கே உரிந்து விட்டது. டொட். 

🤦🏼‍♂️

""உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை. ஏனெனில் அவை யதார்த்தத்தை விடுத்து பழி வாங்கும் நோக்கம் கொண்டவை மட்டுமே. ""

உங்கள் கற்பிதம்  தவறு. Rational thinking இல்லை என்பதுதான் மேலே நீங்கள் கூறுவது காட்டுகிறது.  

1) உங்களைப் பழிவாங்க எனக்கு ஒரு காரணமும் இல்லை. 

2) அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. மகிழ்ச்சியே. 

3)

4) உங்களை எப்போது சிங்களத்தைக் கனம் பண்ணும்படி கோரினேன்? 

5) அதற்கான தேவை எனக்கு இல்லை. 

உங்கள் சிந்தனைகள் நடைமுறைச் சாத்தியம் அற்றவை. ஒன்றுக்கொன்று முரணானவை என்று சுட்டிக் காட்டுவதுதான் எனது நோக்கம். 

மற்றும்படி உங்கள் தேசியம் மீதான பற்றில் எனக்கு எந்தச் சந்தேகமும் எனக்கு இல்லை. 

 

 

 

 

மேற்குலகு NATO முழுவது சேர்ந்து அடித்தும் தங்கள் நோக்கம் நிறைவேறவில்லை என்கிற கவலை சில பலருக்கு,.🤣

  • Replies 144
  • Views 8.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வீடியோவை கூர்ந்து கவனிக்காமலே  அது ஒரு வீடியோகேம் போன்ற சோடிக்கப்பட்ட காட்சி  என்பது தெளிவாக தெரிகிறது. சுதந்திரம் கேட்டார்கள் என்பதற்காக சோவியத் காலத்தில் ஏறக்குறைய 70 லட்சம் உக்ரேனியர்களை பட்டி

  • 1991இல்  சோவியத் உடைவிலிருந்து உக்ரேன் உருவானபோதே அமெரிக்கா உக்ரேனுடன் உறவினை ஏற்படுத்திக்கொண்டது, பின்னர் தனது தற்பாதுகாப்புக்காக உக்ரேன் மேற்குலகுடன் நெருங்கி சென்றது. ரஷ்யா மட்டுமல்ல, அமெரிக்க

  • என்னது  உங்களை போன்றவர்களுக்கு பம்ம  வேண்டுமா.  மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது உங்களின் பாரிய பிரச்சனையே மற்றவர்களை மட்டம் தட்ட பார்ப்பது. நீங்கள் பிடித்ர்க முயகுக்கி 3 கால் என நிற்பது. இதனை நீங்க

6 hours ago, குமாரசாமி said:

அதுசரி உக்ரேனின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ரஷ்ய பொதுமக்களையும் ஐரோப்பிய நாடுகள் உக்ரேன் அகதிகளை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்றது போல் அவர்களுக்கும் அகதி தஞ்சம் கொடுப்பார்களா? 🤣

ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கு இரண்டு வழிகளைத் திறக்கப் போவதாக உக்ரெய்ன் அறிவித்துள்ளது. ஒன்று ரஷ்யாவை நோக்கியது மற்றையது உக்ரெய்னை நோக்கியது. ரஷ்ய அகதிகளை உக்ரெயின் உள்வாங்கப் போகிறது. 😃

ஏற்கனவே ரஷ்ய அரசியல் அகதிகளுக்கு ஐரோப்பிய நடுகள் புகலிடம் கொடுத்துள்ளன.  எந்த நாடென்று பாரபட்சம் பாராமல் அகதிகளாக வந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது போலவே ரஷ்ய அகதிகளுக்கும் வழங்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, இணையவன் said:

  பாராமல் அகதிகளாக வந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது போலவே ரஷ்ய அகதிகளுக்கும் வழங்கப்படும்.

அவர்களாவது அரவணைத்து உயிர் தந்த நாடுகளில் குண்டு வைக்காமல் நன்றி உணர்வோடு இருக்க கடவது.

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனின் பயங்கரவாதம் அப்பட்டமாக வெளிப்பட்ட பின்னும் ஜேர்மனி வெக்கரோசமில்லாமல் உக்ரைனுக்கு வால்பிடிப்பது கேவலம்.

ஜேர்மனிக்கு எரிவாயு காவி வந்த பைப் லைனை வெடி வைச்சு தகர்த்தது உக்ரைன் நீரோடிகள் என்பதும்.. அதற்கு அமெரிக்க கப்பல்கள் உதவி உள்ளமையும் வெளிவந்து.. இப்போ.. பிடிவிறாந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்...

ஜேர்மனி மக்களை இதர ஐரோப்பிய மக்களை பாதிக்கக் கூடிய இந்த பயங்கரவாதத் தாக்குதலை ஜேர்மனி கண்டிக்காதது ஏனோ..?!

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

உக்ரைன் ஊடுருவலின் விளைவு: விம்ப உடைப்பு. 

அந்த விம்ப உடைப்பு தானே பெரிய பிரச்சனையாக உள்ளது. புதினை   நெருங்க முடியாத மாபெரும்  வீரனான உருவாக்கி வைத்திருந்த  விம்பம் உடைந்து இப்போது  விழுவது தான் புதின் இரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

அவை எவை என்று எழுதினால் நாங்களும் ஆராயலாம். 

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் முதலாக இன்னொரு நாட்டின் இராணுவம் ரசியாவுக்குள் வந்திருக்கிறது என்பதை விட வரும் தைரியத்தை பெற்றிருக்கிறது. இன்னொரு நாட்டின் இராணுவத்திற்கு பயந்து மக்களை வெளியேற்றி அவசரகால நிலையை கொண்டு வரும் அளவுக்கு ரசியா பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை புட்டின் உணர்ந்து கொண்டால் பாரிய மாற்றங்கள் உலக ஒழுங்கில் நடக்கும். உணராவிட்டாலும் நடக்கும். 

325 பக்க அறிக்கையில் எவ்வாறு இரஸ்சியாவினை பலவீனப்படுத்துவது என ஆராயப்பட்டுள்ளது.
1. பொருளாதார ரீதியாக - பொருளாதார தடை, எரிபொருள் விலையில் வீழ்ச்சி ஏற்படுத்துதல், பெலரஸில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தல்.
2. பூகோள அரசியல் - உக்கிரேன், சிரியாவில் இரஸ்சியாவிற்கு எதிரான சூழ்நிலைகளை உருவாக்கல்.
3.இராணுவ ரீதியான - இரஸ்சியாவிற்கெதிராக ஐரோப்பா நேட்டோ உதவியினூடாக இராணுவ அச்சுறுத்தலை உருவாக்குதல்
4.இரஸ்சியாவின் ஸ்திரத்தன்மையினை குலைத்தல் - அரசிற்கெதிராக சீர்குலைக்கும் நடவடிக்கைகளை ஏற்படுத்தல்.

7 hours ago, Justin said:

சாதகமோ, பாதகமோ உக்ரைன் தன் நலன்களுக்கு ஏற்புடையதைத் தான் செய்ய முடியும்.

"உக்ரைன் சுருண்டு விடாமல் ரஷ்யாவை எதிர்த்து போர் தொடங்கியதால், லண்டனில் நான் சலாட்டிற்குப் போடும் மரக்கறியின் விலை ஏறி விட்டது!" 😎என்று முறைப்பாடு செய்யும் உக்ரைனியர் அல்லாத நோக்கர்களின் நலன்களுக்காக உக்ரைன் முடிவுகளை எடுக்க வேண்டியதில்லை.

நான் ஊகிப்பது, உக்ரைன் குறுகிய காலப் போக்கில் கிழக்கில் இருக்கும் இராணுவ அழுத்தத்தை சிறிது தளர்த்த முயன்றிருக்கிறது. நீண்ட காலப் போக்கில் "தற்கால ரஷ்யா, 40 களில் இருந்த சோவியத் இராணுவ வல்லமையைக் கூட கொண்டிருக்கவில்லை" என்ற விம்பம் ஏற்பட்டிருக்கிறது.

இது ரஷ்ய ஆதரவாளர்களுக்கே உறைத்திருக்கும் போது, யாழ் களத்தில் இருக்கும் ஓரிரு "புரினின் புருஷன்மாருக்கு" (நீங்கள் அல்ல) உறைக்காமல் விடுமா😂?  

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மத்தியவங்கி தாக்குதல் (பொருளாதார இலக்கு), கூட்டுப்படை தலைமையகத்தாக்குதல் (இராணுவ இலக்கு) கொலன்னாவ தாக்குதல் (பொருளாதார இலக்கு), இந்த பெரிய தாக்குதல் தவிர சிறிய தாக்குதல்கள் அரசியல் தலைவர்கள் இராணுவ தலைவர்கள் கொலைகள் என்பன புலிகளின் பயங்கரவாத தாக்குதல் என மேற்கால் வகைப்படுத்தப்பட்ட தாக்குதல்கள் கூட ஏதோ ஒரு வகையான இராணுவ, பொருளாதார, அரசியல் நோக்கம் கொண்டனவாக இருந்தது, ஆனால் இந்த தாக்குதல் நீங்கள் கூறுவது போல ஒரு திசை திருப்பத்தாக்குதலுக்க்காக  நல்ல பயிற்சி பெற்ற ஒரு டிவிசன் படையினரை  வழங்கல் அற்ற ஒரு பகுதிக்குள் அனுப்பியது உக்கிரேன் படையினை நீண்ட காலத்தில் பலவீனப்படுத்தும் ஒரு முயற்சி, நிச்சயமாக இராணுவ அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்சிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள இன்றைய காணொளியில் பிடிக்கப்பட்ட உக்ரைன் படையினர்களை காட்டினார்கள்.

இன்று உக்ரைன் தானாகவே ஒரு கிலோமீட்டர் அல்லது இரண்டு கிலோமீட்டர் தான் போனது என்று கூறியுள்ளது.. ஆக வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் இருந்து கிழக்கு ஐரோப்பாவுக்கான எரிவாயு வழங்கல் இப்பவும் நடப்பதால்.. குறிப்பாக ஈயுவின் சொல்வழி கேட்காத ஹங்கேரிக்கும்.. இந்த பிரதேசத்தை ரஷ்சியா இராணுவ வலமற்ற பகுதியாகவே பராமரித்து வந்துள்ள நிலையில்.. அந்தப் பலவீனத்தை வைச்சு//நேட்டோ உக்ரைன் கோமாளிகளை வைத்து வெடி கொழுத்தி விளையாடி வருகின்றது. ஏலவே எரிவாயு லைனை கடலில் குண்டு வைச்சு தகர்த்தது உக்ரைன் என்றாகி விட்டது. அதனை மூடி மறைக்க அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் போட்ட நாடகம் இருக்கே சொல்லி மாளாது.

இப்போது ஐரோப்பாவுக்கான எரிவாயு ஏற்றுமதியில் அமெரிக்காவே முன்னிலை வகிக்கிறது. எனி கணக்கை நீங்களே போட்டுப் பாருங்கள்... இந்த உக்ரைன் கோமாளியின் தற்கொலை முயற்சி எதற்கு என்பது புரியும். 

தீச்சுவாலை சொறீலங்கா படைகளின் நடவடிக்கையின் போது சொன்னவை தான் ஞாபகத்துக்கு வந்து போகிறது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கு இரண்டு வழிகளைத் திறக்கப் போவதாக உக்ரெய்ன் அறிவித்துள்ளது. ஒன்று ரஷ்யாவை நோக்கியது மற்றையது உக்ரெய்னை நோக்கியது. ரஷ்ய அகதிகளை உக்ரெயின் உள்வாங்கப் போகிறது. 😃

ஏற்கனவே ரஷ்ய அரசியல் அகதிகளுக்கு ஐரோப்பிய நடுகள் புகலிடம் கொடுத்துள்ளன.  எந்த நாடென்று பாரபட்சம் பாராமல் அகதிகளாக வந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கியது போலவே ரஷ்ய அகதிகளுக்கும் வழங்கப்படும்.

மக்களை கேடயமாக வைத்து உக்கிரேன் இராணுவம் பின்வாங்கும் தந்திரோபாயமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

உக்ரேனின் ராணுவ உடைக்குள் நேட்டோ அணி புகுந்துள்ளதாக பல ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

உத்தியோக பூர்வமாக நேட்டோ இல்லை.

அனால் அவைகள் நிலை எடுத்து இருப்பது பின்புறம்.

3 hours ago, vasee said:

நல்ல பயிற்சி பெற்ற ஒரு டிவிசன் படையினரை  வழங்கல் அற்ற ஒரு பகுதிக்குள் அனுப்பியது

 மிக முக்கியமாக வழங்கலை தக்கவைக்க. 

பிரச்சனை என்றால் விலத்துவதும் வசதி.

முன்னோக்கி செல்வது / சென்றது  உக்கிரைன் அணிகள்.

(அனால், இந்த உக்கிரைன் அணிகள் நெப்போலியன், ஹிட்லர் படைகளை ருசியர்கள் எதிர்கொண்டு சிக்கவைத்த  வியூகத்தில் சிக்கி விட்டதாக சொல்லப்படுகிறது, அதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்) 

உக்கிரைன் படைகளின் அசைவு இப்போது முன்னோக்கி செல்வது தடுக்கப்பட, கரை வழியாக  அசைவு.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

ரஷ்ய சார்பு ஆய்வாளர்கள் இப்படி சொல்லத்தானே வேண்டும்? இல்லாமல், "உக்ரைன் படைகளை எதிர்க்க இயலாமல் ரஷ்யா தடுமாறுகிறது" என்று அவர்கள் ஒப்புக் கொள்வார்களா😂?

ஆனால், ரஷ்யாவின் இராணுவ பலத்தை (அல்லது பலமில்லாமையை) தோலுரித்துக் காட்டிய 3 வது சந்தர்ப்பம் இது: 1. கியேவ் நோக்கி டீசல், தண்ணீர் எதுவும் கொண்டு வராமல் வந்து முன்னேற இயலாமல் திரும்பிப் போனது, 2. பிரிகொஷினின் கூலிப் படை மொஸ்கோ நோக்கி முன்னேறும் போது தடுக்காமல் றோட்டைக் கிண்டியது. இப்போது இது!

எனவே, இது தான் உக்ரைன் ஊடுருவலின் விளைவு: விம்ப உடைப்பு. 

ரஸ்யாவை உக்ரேன் பிடித்து நல்லாட்சி செய்யும் என்று சொல்லும் வித்துவான்களும் இங்கு உளர்.🙃

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படையெடுப்பு Kursk பகுதியில் இருக்கும் அணுமின் நிலையத்தைக் கைப்பற்றும் அதிவிரைவுத் தாக்குதலாக திட்டமிடப்பட்டிருந்தது என்றும் ஆனால் உக்ரேனியர்களின் திட்டம் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றும் இரஸ்ய உளவுத்துறைத் தலைவர் கூறியுள்ளார். 

இவரது கூற்று சரி என்றே தோன்றுகிறது.  ஏனென்றால் களத்தில் ஏற்கனவே தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும்  உக்ரேனியப் படைகள்,  நிச்சயம் அற்ற, பயன் அற்ற அல்லது மிகவும் நன்மை பயக்காத  ஒரு படையெடுப்பை மேற்கொள்வார்களா என்பது  நியாயமான கேள்வியே. 

ஒன்று மட்டும் உறுதியாகக் கூற முடியும். அதாவது  உந்தத் தாக்குதல் படு தோல்வியை ஆளணி தளபாட இழப்பை உக்ரேனுக்குக் கொடுக்கப் போகிறது. 

அந்தத் தோல்வியை மேற்குலக ஊடகங்கள் வெற்றிகரமான பின்வாங்கலாகக் கூறப்போகிறது. 

அதை நம்புவதற்கும்  பலர்  ஆயத்தமாக இருப்பார்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய மண்ணில் யுக்ரேனின் அசாத்திய நடவடிக்கை - அடுத்து என்ன நடக்கும், புதின் என்ன செய்ய போகிறார்?

தைரியமான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட ஊருடுவல் மூலம் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை யுக்ரேன் கைப்பற்றியது

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, தைரியமான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட ஊருடுவல் மூலம் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை யுக்ரேன் கைப்பற்றியது கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிராங்க் கார்ட்னர்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ரஷ்யாவில் கடந்த ஒரு வாரமாக கைப்பற்றிய சிறிய பகுதியை நிரந்தரமாக ஆக்கரமிக்கப்போவதில்லை என யுக்ரேனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இப்படி ஒரு அறிவிப்பை யுக்ரேன் வெளியிட்டிருந்தாலும், அது ஒரு கடினமான தேர்வினை எதிர்கொண்டு வருகிறது. ரஷ்யா மீதான அழுத்ததை அதிகரிக்க படைகளை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டுமா அல்லது தனது ராணுவத்தை பின்வாங்க வேண்டுமா? என்பதுதான் அது

ஒவ்வொரு நாளும் ரஷ்யவின் டிரோன்கள், ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை யுக்ரேனின் ராணுவப்படையினர் எதிர்கொண்டது. இதனால் ஊக்கமிழந்த யுக்ரேனின் ராணுவத்தின் முன்களப்படை, டான்பாஸில் பின்னடைவை சந்தித்தது. இத்தகைய சூழலில், கோடை காலத்தில் ஒரு நல்ல செய்திக்காக யுக்ரேன் காத்திருக்க வேண்டியிருந்தது.

தைரியமான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட ஊருடுவல் மூலம் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை யுக்ரேன் கைப்பற்றியது அந்த காத்திருப்புக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது.

நிகரற்ற ஒருங்கிணைப்பு

பிரிட்டிஷ் ராணுவத்தை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த அதிகாரி பிபிசியிடம் பேசியபோது, "இந்தத் தாக்குதலின் மிகவும் சுவாரஸ்யமான விஷயம், யுக்ரேனிய ராணுவத்தின் அசாதாரண ஒருங்கிணைப்புதான். காலாட்படை, வான் பாதுகாப்பு, மின்னணு போர் அமைப்புகள் மற்றும் பீரங்கிகளும் இந்த தாக்குதல் நடவடிக்கையில் இடம்பெற்றிருந்தன. இது ஒரு சிறப்பான செயல்பாடு ." என கூறினார்.

யுக்ரேன் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து பெற்ற நவீன ஆயுதங்களை பயன்படுத்தி இருப்பது போல தெரிகிறது.

கடந்த ஆண்டு கோடைகாலத்தில் யுக்ரேனின் தென்-கிழக்கு மாகாணங்களில் இருந்து ரஷ்ய ராணுவத்தை வெளியேற்றும் முயற்சியில் தோல்வியடைந்த யுக்ரேன்,இம்முறை இந்த ஆயுதங்களை சிறந்த முறையில் உபயோகப்படுத்தி உள்ளது

ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துள்ள யுக்ரேனின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

 

யுக்ரேன் புதினின் வீட்டுக்குள் (ரஷ்யா) போரை எடுத்துச்செல்ல விரும்பியது, இதன் மூலம் புதினின் மக்களும் சண்டையின் வலி என்ன என்பதை உணர்வார்கள் என கருதியது.

மேலும், சமீபத்தில் டான்பாஸ்-இல் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு யுக்ரேன் தன்னால் இன்னும் வெற்றிகரமாக தாக்குதலை நடத்த முடியும் என்பதை வெளிக்காட்ட விரும்பியது. இந்த நடவடிக்கை மூலம், அதிநவீன ஆயுதங்கள் உதவியுடன், தங்களால் போரில் ஈடுபட முடியும் என்பதை யுக்ரேன் நிரூபித்துள்ளது.

இப்போது ரஷ்யா மீண்டும் தனது முழு படையுடன் யுக்ரேன் வீரர்களை கொல்வதற்கு முன் அல்லது யுக்ரேன் ஆக்கிரமித்த இடத்தை கைப்பற்றும் முன், மரியாதையுடன் யுக்ரேன் ரஷ்ய எல்லைகளில் இருந்து திரும்ப வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை யுக்ரேன் ராணுவம் பின்வாங்கினால், இரு குறிக்கோள்கள் சாதிக்க முடியாமல் போகலாம். ரஷ்யா மீது கூடுதல் அழுத்தம் செலுத்தி, அதன் படைகளை டான்பாஸ் பகுதியில் இருந்து பின்வாங்க செய்வது, மற்றொன்று, ரஷ்யாவின் நிலத்தை கையகப்படுத்தி, எதிர்கால அமைதிப் பேச்சுக்களில் அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது.

யுக்ரேன் இராணுவம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, உக்ரைன் ரஷ்ய பகுதிகளில் எவ்வளவு காலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்று சொல்வது கடினம்.

உக்ரைனின் இந்த நடவடிக்கை வெற்றி அடைந்துள்ளதா?

இங்கிலாந்தின் எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் பிளாக்டன் இதுகுறித்து கூறுகையில், "யுக்ரேன் ரஷ்ய மண் மீது கொண்டிருக்கும் தனது பிடியை இறுக்கும் பட்சத்தில், ரஷ்ய ஆக்கிரமித்திருக்கும் தனது நிலத்தை திரும்பப்பெற அழுத்தம் செலுத்த முடியும். ரஷ்ய மக்கள் இடைய இருக்கும் சக்திவாய்ந்த தலைவர் புதினின் என்ற பிம்பத்தை இதன் மூலம் யுக்ரேன் உடைக்க முடியும்."

இங்கு ஒரு விஷயம் தெளிவாகிறது. யுக்ரேன் ஒரு சுதந்திர நாடாக இருக்கவே கூடாது என கருதும் புதினால், ரஷ்ய மண்ணை யுக்ரேன் ஆக்கிரமித்துள்ளதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

புதின் தன்னால் முடிந்த வரை இதைத் தவிர்க்கவும், டான்பாஸில் தனது ராணுவம் வலுவாக இருக்க வேண்டும் எனவும் விரும்புவார். அங்கு ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி யுக்ரேனின் தாக்குதலுக்கு டான்பாஸின் உள்ளூர் மக்களை தண்டிப்பார்.

ஒருவேளை யுக்ரேன் தொடர்ந்து ரஷ்ய பகுதிகளில் ஆக்கிரமிப்பை பலப்படுத்த முயற்சித்தால், ரஷ்யாவின் முழு பலத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இவ்வளவு பெரிய பகுதியைப் ஆக்கிரமித்து பாதுகாக்க யுக்ரேனுக்கு நிறைய ஆட்பலம் தேவைப்படும் என்று டாக்டர் பிளாக்டன் எச்சரிக்கிறார்.

ஆனால், ஒரு விஷயத்தை மறுக்க முடியாது - இதுதான் இந்த ஆண்டின் யுக்ரேனின் தைரியமான நடவடிக்கை மற்றும் அபாயகரமானதும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 

வீடியோவை கூர்ந்து கவனிக்காமலே  அது ஒரு வீடியோகேம் போன்ற சோடிக்கப்பட்ட காட்சி  என்பது தெளிவாக தெரிகிறது.

சுதந்திரம் கேட்டார்கள் என்பதற்காக சோவியத் காலத்தில் ஏறக்குறைய 70 லட்சம் உக்ரேனியர்களை பட்டினிபோட்டே கொன்றார் ஸ்டாலின் என்பது பலரும் அறிந்த வரலாறு.

அதுதான் நாகரிகம் பெரிதாக வளராத போர்காலம் என்றால் நாகரிகம் வளர்ந்த இக்காலத்திலும் சோவியத் உடைந்த பின்னரும் உக்ரேனின் பகுதிகளை ஆக்கிரமித்து தன்னோடு இணைத்துக்கொண்டது ரஷ்யா.

தொடர்ச்சியாக ஒருவர் அழுத்தத்தை பிரயோகித்தால் பலவீனமானவன் தன்னை காக்க பிறருடன் கூட்டு சேர்வான் அது மானுட தர்மம்.

நான் திருப்பி அடிக்க முடியாதவன் என்னை அடித்தால் அவனை அடிக்க சண்டியர்களை சக மனிதன் நாடுவது சகஜம்.

நேட்டோவினால் ரஷ்யாக்கு ஆபத்து நோட்டோவுடன் உறவு கொள்ளும் நாடுகளால் ஆபத்து என்றால் நேட்டோவில் அங்கம் வகிக்கும் துருக்கியுடன் மிக நெருங்கிய நட்பை ரஷ்யா பேணுவது எந்த வகையில் நியாயம்?

ரஷ்யாவுக்குள் உக்ரேன் சில ஆயிரம் படைகளை அனுப்பி ரஷ்ய பகுதிகளை ஆக்கிரமிப்பது தற்காலிக வெற்றிதான் அதனை தக்க வைக்க ரஷ்யா எனும் யானை ஒருபோதும் அனுமதிக்காது, ரஷ்யாவிற்குள் புகுந்து ரஷ்ய பகுதிகளை கைப்பற்றி நீண்டகாலம் நிலைகொண்டிருக்க உக்ரேனின் படை பலமும் அதற்கு ஒத்துழைக்காது.

ஆக்கிரமிப்பு எந்த திசையிலிருந்து வந்தாலும் அது தவறுதான், ஆக்கிரமிப்பை கற்றுக்கொடுத்த ரஷ்யா உக்ரேன் தமது பகுதியை ஆக்கிரமித்துவிட்டது என்று கூறுவது தான் கற்றுக்கொடுத்த மாணவன் தவறாக விடை சொல்கிறான் என்பது போலாகும்.

உக்ரேன் சொந்த ஆயுத தயாரிப்பு படை கட்டமைப்புடன் இருந்தால் மட்டுமே ரஷ்யாவை எதிர்காலத்திலும் எதிர் கொள்ள முடியும், அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்தை நம்புவது எனது இடுப்பு வேட்டியை இறுக்கிபிடி என்று நம்பி அடுத்தவனிடம் சொல்வதற்கு சமம் எப்போது வேண்டுமென்றாலும் அவன் கைவிட்டுவிட்டால் அம்மணமாகி போய்விடுவோம், உக்ரேனின் நிலமையும் அதுதான், 

இஸ்ரேல் காசா --ஹிஸ்புல்லா ஈரான் போர் மிக பெரும் போர் வடிவமெடுத்தாலோ அல்லது அது முடிவுக்கு வந்த பின்னரோ பொருளாதார செலவு கணக்கு வழக்குகளை மேற்குலகம் பார்க்கும்போது பெரும் நஷ்டத்தில் வீழ்ந்திருந்தால் உக்ரேனை படிப்படியாக அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் முழுமையாக கைவிடும் வாய்ப்புண்டு அப்போது ரஷ்யா மேற்குலகத்தை முழுமையாக வெறுப்பேத்தாத விதத்தில் உக்ரேனையும் தாண்டி போரை பரப்பாமல்  மட்டுப்படுத்த அளவில் உக்ரேனை மட்டும் விழுங்கிவிடும்.

Edited by valavan
ஒருவரி சேர்ப்புக்காக.,,

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, valavan said:

நேட்டோவினால் ரஷ்யாக்கு ஆபத்து நோட்டோவுடன் உறவு கொள்ளும் நாடுகளால் ஆபத்து என்றால் நேட்டோவில் அங்கம் வகிக்கும் துருக்கியுடன் மிக நெருங்கிய நட்பை ரஷ்யா பேணுவது எந்த வகையில் நியாயம்?

துருக்கி எண்ணையை விற்கும் ஒரு இடமாக மாற அதிக முயற்சி எடுக்கிறது.
இது  எண்ணை வாங்கும் மேற்குக்கும் நல்லது. எண்ணை விற்கும் ரஸ்யாவுக்கும் நல்லது.  
துருக்கி ரஸ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இலகுவாக உறவுகளை முறிப்பார்கள் என நினைக்கவில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, valavan said:

நான் திருப்பி அடிக்க முடியாதவன் என்னை அடித்தால் அவனை அடிக்க சண்டியர்களை சக மனிதன் நாடுவது சகஜம்.


யுக்ரேனை அமெரிக்கா நாடியதா அல்லது யுக்ரேன்   அமெரிக்காவை நாடியதா?
ரஸ்யாவை சுற்றியுள்ள நாடுகளில் எத்தனை அமெரிக்க தளங்கள் உள்ளன. அவை ஏன் உள்ளன? 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:


யுக்ரேனை அமெரிக்கா நாடியதா அல்லது யுக்ரேன்   அமெரிக்காவை நாடியதா?
ரஸ்யாவை சுற்றியுள்ள நாடுகளில் எத்தனை அமெரிக்க தளங்கள் உள்ளன. அவை ஏன் உள்ளன? 

1991இல்  சோவியத் உடைவிலிருந்து உக்ரேன் உருவானபோதே அமெரிக்கா உக்ரேனுடன் உறவினை ஏற்படுத்திக்கொண்டது, பின்னர் தனது தற்பாதுகாப்புக்காக உக்ரேன் மேற்குலகுடன் நெருங்கி சென்றது.

ரஷ்யா மட்டுமல்ல, அமெரிக்காவிற்கு சவாலாக அல்லது அமெரிக்காவுடன் மறைமுக மோதலில் ஈடுபட்டிருக்கும் எந்த நாடுகளை சுற்றியும் அமெரிக்கா படைதளங்களை அமைக்கும்.

அதற்கு சான்றாக அமெரிக்காவிற்கு எதிராக நிற்கும் சீனா வடகொரியாவை சுற்றி , தென்கொரியா ,ஜப்பான் அவுஸ்திரேலியாவில் படை தளங்களையும், நெருங்கிய நட்புநாடுகளின் மறைமுகமாக தனது கட்டுப்பாட்டில் சிங்கபூர் தாய்வான், பிலிபைன்ஸ், ,மலேசியா,இந்தோனேசியா  போன்ற நாடுகளிலும் சுற்றி வளைத்து கடை/படை விரித்துள்ளது,

மத்திய கிழக்கில் அமெரிக்கா எங்கெல்லாம் இருக்கிறது எப்படி வலைபின்னல் அமைத்திருக்கின்றது என்பது அனைவருமே அறிந்தது.

ஐரோப்பாவில் யூகே, ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் என்று வளைத்திருக்கிறது,

லத்தீன் அமெரிக்காவை எப்படி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதை சேகுவரா கொலையிலிருந்து, உலகிலேயே மத்திய கிழக்கைவிட  அதிக எண்ணெய்வளம் கொண்ட வெனிசுலாவை  உலகிலேயே பிச்சைக்காரநாடாக எப்படி வைத்திருக்கிறது என்பதுவரை நீளும்.

ஆகவே அமெரிக்காவின் படை பரப்பலை ரஷ்யாவை மட்டும் சுற்றியதான ஒன்று  என்பதாக பார்த்தல் தகாது.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

ஆக்கிரமிப்பு எந்த திசையிலிருந்து வந்தாலும் அது தவறுதான், ஆக்கிரமிப்பை கற்றுக்கொடுத்த ரஷ்யா உக்ரேன் தமது பகுதியை ஆக்கிரமித்துவிட்டது என்று கூறுவது

இந்த கூத்தை என்ன என்று சொல்வது இலட்சகணக்கான தனது இராணுவத்துடன்  உக்ரேனை ஆக்கிரமிப்பதற்காக வந்த ரஷ்யா இப்போது உக்ரேனை ஆக்கிரமிப்பாளர்கள் என்பதும் உக்ரேனின் துரோக தாக்குதல் என்பதும் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, valavan said:

1991இல்  சோவியத் உடைவிலிருந்து உக்ரேன் உருவானபோதே அமெரிக்கா உக்ரேனுடன் உறவினை ஏற்படுத்திக்கொண்டது, பின்னர் தனது தற்பாதுகாப்புக்காக உக்ரேன் மேற்குலகுடன் நெருங்கி சென்றது.

ரஷ்யா மட்டுமல்ல, அமெரிக்காவிற்கு சவாலாக அல்லது அமெரிக்காவுடன் மறைமுக மோதலில் ஈடுபட்டிருக்கும் எந்த நாடுகளை சுற்றியும் அமெரிக்கா படைதளங்களை அமைக்கும்.

அதற்கு சான்றாக அமெரிக்காவிற்கு எதிராக நிற்கும் சீனா வடகொரியாவை சுற்றி , தென்கொரியா ,ஜப்பான் அவுஸ்திரேலியாவில் படை தளங்களையும், நெருங்கிய நட்புநாடுகளின் மறைமுகமாக தனது கட்டுப்பாட்டில் சிங்கபூர் தாய்வான், பிலிபைன்ஸ், ,மலேசியா,இந்தோனேசியா  போன்ற நாடுகளிலும் சுற்றி வளைத்து கடை/படை விரித்துள்ளது,

மத்திய கிழக்கில் அமெரிக்கா எங்கெல்லாம் இருக்கிறது எப்படி வலைபின்னல் அமைத்திருக்கின்றது என்பது அனைவருமே அறிந்தது.

ஐரோப்பாவில் யூகே, ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் என்று வளைத்திருக்கிறது,

லத்தீன் அமெரிக்காவை எப்படி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதை சேகுவரா கொலையிலிருந்து, உலகிலேயே மத்திய கிழக்கைவிட  அதிக எண்ணெய்வளம் கொண்ட வெனிசுலாவை  உலகிலேயே பிச்சைக்காரநாடாக எப்படி வைத்திருக்கிறது என்பதுவரை நீளும்.

ஆகவே அமெரிக்காவின் படை பரப்பலை ரஷ்யாவை மட்டும் சுற்றியதான ஒன்று  என்பதாக பார்த்தல் தகாது.

 

அமெரிக்காவிற்கு தாளம் போட வேண்டும் என்பதை இவ்வளவு நாசுக்காக சொல்ல அந்த அமெரிக்கனாலும் முடியாது.
அது கிடக்கட்டும்  உலகத்தில இருக்கிற பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவிற்கு எதிர்  என்றால் ஏன் எதற்காக? அதன் சிதம்பர ரகசியம் என்னவாக இருக்கும்?
ரஷ்யா இன்று வரைக்கும் எந்தவொரு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்பது என் கருத்து.😎

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்காவிற்கு தாளம் போட வேண்டும் என்பதை இவ்வளவு நாசுக்காக சொல்ல அந்த அமெரிக்கனாலும் முடியாது 

 

மீண்டும் ஒருமுறை நான் மேலே எழுதியதை படித்து பாருங்கள்,

அமெரிக்காவின் மேலாதிக்கம் பற்றி பேசி இருக்கிறேனா அல்லது அவர்கள் மேன்மையைபற்றி பேசியிருக்கிறேனா?

அவர்கள் மேன்மையானவர்கள் என்று எங்காவது ஒருவரி குறிப்பிட்டிருந்தால் தயக்கமின்றி சுட்டிகாட்டுங்கள்.

15 minutes ago, குமாரசாமி said:

அது கிடக்கட்டும்  உலகத்தில இருக்கிற பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவிற்கு எதிர்  என்றால் ஏன் எதற்காக? அதன் சிதம்பர ரகசியம் என்னவாக இருக்கும்?

பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவின் பிடியிலேயே உள்ளன, அதனை மீறி செயல்பட ரஷ்யா சீனாவால்கூட முடியாது காரணம் ஒன்றேதான் பொருளாதாரம். ராணுவரீதியில் அமெரிக்காவுக்கு  சீனா ரஷ்யாவை பார்த்து பயம் இருப்பது உண்மைதான்.

உலகில் அனைத்துநாடுகளையும்விட அமெரிக்காவால் பேரழிவை சந்தித்தநாடு ஜப்பான், ஆனால் இன்று அமெரிக்காவின் மிக நெருங்கியநட்பு நாடு பொருளாதார ரீதியிலும் ராணுவரீதியிலும்.  காரணம் ஒன்றேதான் பொருளாதாரம்.

21 minutes ago, குமாரசாமி said:

ரஷ்யா இன்று வரைக்கும் எந்தவொரு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்பது என் கருத்து

ரஷ்யா எந்த ஒரு நாட்டுக்கும் அச்சுறுத்தல் இல்லை என்கிறீர்கள் நீங்கள் வசிக்கும் ஜேர்மனிக்கும் கூடவா?

ரஷ்யா எந்தநாடுகளுக்கெல்லாம் அச்சுறுத்தலாய் இருக்கிறது என்பதற்கு ஒரு நீள் பட்டியலே உண்டு, அது அமெரிக்காவால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகளைவிட அதிகமாக இருக்ககூட வாய்ப்புண்டு.

அது உங்கள் பார்வைக்கு.

Untitledfff.png

https://www.aalep.eu/russia-enemy-list

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

இந்தப் படையெடுப்பு Kursk பகுதியில் இருக்கும் அணுமின் நிலையத்தைக் கைப்பற்றும் அதிவிரைவுத் தாக்குதலாக திட்டமிடப்பட்டிருந்தது என்றும் ஆனால் உக்ரேனியர்களின் திட்டம் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றும் இரஸ்ய உளவுத்துறைத் தலைவர் கூறியுள்ளார். 

ஒப்பீட்டளவில் பாதுகாப்பு அடர்த்தி குறைந்த இடம், தெரிவுக்கு ஒரு காரணம் , இதை உக்கிரேனே சொல்லி உள்ளது ,  ஏனெனில் இது பகுதியாக  அடர்ந்த காட்டுப் பகுதி.

இங்கு ஹங்கரிக்கு (ஸ்லோவோக்கியாவுக்கும்) எண்ணெய் வழங்கும் குழாய்  வலையமைப்பு சந்தி கொண்ட இடம், அதாவது வழங்கலை  முழுமையாக கட்டுப்படுத்தலாம் இந்த குழாய் வலையமைப்பு சந்தியில் இருந்து.     
  
இங்கு ருசியா புகையிரத முக்கிய சந்திகள், அதாவது ருசியா புகையிரத வலையைபில் இருக்கும் அனைத்து சேவை தவல்களையும் real-time இல்  பெறமுடியும் (இது உண்மை), அனால், உக்கிரேனின் கணக்கில் இது இருக்கிறதா என்பது தெரியாது. 

அநேகமாக புகையிரத சேனையில் தகவலை பெறமுடியும் என்றால் கட்டுப்படுத்தவும் முடியும், ஏனெனில் புகையிரத சேவைக்கன்னா தகவல் தொழிநுட்ப தொடர்பும், வலைப்பின்னலும் (பொதுவாக SCADA systems, Network என்ற வகைப்படுதலுக்குள் வருவது).  

இவைகள் தான் அந்த இடத்தில் உக்கிரேனுக்கு உள்ள நன்மைகள். வேறும் இருக்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இந்த கூத்தை என்ன என்று சொல்வது இலட்சகணக்கான தனது இராணுவத்துடன்  உக்ரேனை ஆக்கிரமிப்பதற்காக வந்த ரஷ்யா இப்போது உக்ரேனை ஆக்கிரமிப்பாளர்கள் என்பதும் உக்ரேனின் துரோக தாக்குதல் என்பதும் 🤣

புட்டின் ஒரு அரைப் பைத்தியம். இந்த எதிரி நாட்டு படைகளின் நூறு வருடங்களுக்கு மேலாக  நடந்தே இருக்காத உள் நுழைவு மற்றும் பல நாட்களாக தாக்குதலுக்கு ஈடுகொடுத்தல் முழுப் பைத்தியம் ஆக்கி விடும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்த ரஸ்ய படையினரை மனிதாபிமான ரீதியில் நடத்துகின்றோம் - அந்த நாட்டிடம் ஒப்படைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் - உக்ரைன்

Published By: RAJEEBAN   15 AUG, 2024 | 12:40 PM

image
 

கடந்த வாரம் உக்ரைன் படையினர் கைப்பற்றிய ரஸ்யாவின் போர்கைதிகள் குறித்து ரஸ்ய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டுள்ளதாக மனித உரிமைகளிற்கான உக்ரைனின் நாடாளுமன்ற ஆணையாளர் டிமிட்ரோ லுபினெட்ஸ் தெரிவித்துள்ளார்.

russia_pow.jpg

நீங்கள் ரஸ்ய படையினர் சரணடைவதை பார்த்திருப்பீர்கள்என தெரிவித்திருப்பீர்கள் என குறிப்பிட்டுள்ள அவர் உக்ரைன் படையினர் ஜெனீவா சாசனத்தின் படி போர்கைதிகளை கையாள்வதை பார்த்திருப்பீர்கள்ரஸ்ய படையினரின் யுத்த கால உரிமைகளை உறுதி செய்வதை பார்த்திருப்பீர்கள் என தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட ரஸ்ய படையினரை எவரும் சித்திரவதை செய்வதில்லைஎவரும் சுடுவதில்லைஆனால் ரஸ்ய படையினர் அதனை செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட ரஸ்ய படையினரை விசேட முகாமிற்கு கொண்டு சென்றுள்ளோம்இ அவர்களை ரஸ்ய அரசாங்கத்திடம் ஒப்படைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவிற்குள் நுழைந்துள்ள உக்ரைன் படையினர் பல திசைகளில் தொடர்ந்தும் முன்னேறிவருகின்றனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

wsWAyAwe1aw043fS.jpg

கடந்த வாரம் ரஸ்யாவின் கேர்ஸ்க் பிராந்தியத்தின் மீது தீடிர் தாக்குதலை மேற்கொண்ட உக்ரைனிய படையினர் சில பகுதிகளை கைப்பற்றியதை தொடர்ந்து அந்த பகுதியில் ரஸ்யா அவசரகால நிலைமையை அறிவித்துள்ளது.

புதன்கிழமை காலை முதல் தனது படையினர் கேர்க்ஸ்கி;ல் மேலும் ஒன்றரை கிலோமீற்றர் தூரம் முன்னேறியுள்ளனர் என  உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

100 ரஸ்ய படையினரை கைதுசெய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

உக்ரைன் படையினரின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.

russia_pris_500.jpg

உக்ரைன் படையினர் எவ்வளவு பகுதியை கைப்பற்றியுள்ளனர் என்பதை உறுதி செய்ய முடியாமலுள்ளதாக தெரிவித்துள்ள பிபிசி  இருதரப்பும் முரண்பாடான தகவல்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/191139

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

மீண்டும் ஒருமுறை நான் மேலே எழுதியதை படித்து பாருங்கள்,

அமெரிக்காவின் மேலாதிக்கம் பற்றி பேசி இருக்கிறேனா அல்லது அவர்கள் மேன்மையைபற்றி பேசியிருக்கிறேனா?

அவர்கள் மேன்மையானவர்கள் என்று எங்காவது ஒருவரி குறிப்பிட்டிருந்தால் தயக்கமின்றி சுட்டிகாட்டுங்கள்.

பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவின் பிடியிலேயே உள்ளன, அதனை மீறி செயல்பட ரஷ்யா சீனாவால்கூட முடியாது காரணம் ஒன்றேதான் பொருளாதாரம். ராணுவரீதியில் அமெரிக்காவுக்கு  சீனா ரஷ்யாவை பார்த்து பயம் இருப்பது உண்மைதான்.

உலகில் அனைத்துநாடுகளையும்விட அமெரிக்காவால் பேரழிவை சந்தித்தநாடு ஜப்பான், ஆனால் இன்று அமெரிக்காவின் மிக நெருங்கியநட்பு நாடு பொருளாதார ரீதியிலும் ராணுவரீதியிலும்.  காரணம் ஒன்றேதான் பொருளாதாரம்.

ரஷ்யா எந்த ஒரு நாட்டுக்கும் அச்சுறுத்தல் இல்லை என்கிறீர்கள் நீங்கள் வசிக்கும் ஜேர்மனிக்கும் கூடவா?

ரஷ்யா எந்தநாடுகளுக்கெல்லாம் அச்சுறுத்தலாய் இருக்கிறது என்பதற்கு ஒரு நீள் பட்டியலே உண்டு, அது அமெரிக்காவால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகளைவிட அதிகமாக இருக்ககூட வாய்ப்புண்டு.

அது உங்கள் பார்வைக்கு.

Untitledfff.png

https://www.aalep.eu/russia-enemy-list

நீங்கள் தரவுகளை மெனக்கெட்டுக் கொடுத்திருக்கிறீர்கள். இதற்கெல்லாம் அமெரிக்க எதிர்ப்பு, புரின் புரியன்மாரிடம் "பூச்சிய வலு". சும்மா ஒரு யூ ரியூப் குப்பையை அல்லது கேலிச் சித்திரத்தை நீங்கள்  கொடுத்தால் "அப்படியே சாப்பிடுவார்கள்"😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.