Jump to content

Recommended Posts

Posted
23 minutes ago, புலவர் said:

நிலாந்தன் மாஸ்டரின் அடுத்த கட்டுரைத் தலைப்பு என்ன?

"தமிழ் தேசிய அரசியலையும் உணர்வையும் மேலும் நீர்த்து போகச் செய்வது எவ்வாறு"

  • Like 1
  • Replies 283
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரசோதரன்

👍.......... என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம்.......... இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை............🤣. ஆனாலும் அங்கு படிக்கு

Kapithan

இது புலம்பெயர்ஸ்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி.  புலம்பெயர்ஸ்  இனியாவது நிலத்தில் உள்ள மக்களின் மனநிலையறிந்து தேவையறிந்து செயற்பட வேண்டும்.  தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. 

ரசோதரன்

தாங்களும் ஒரு பிரதேச வல்லரசு, அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் உலக வல்லரசு ஆகி விடுவோம் என்ற ஒரு ஆசை தான்..................🤣. சுற்றிவர இருக்கும் நாடுகளில் பூட்டானைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் வேறு

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அரியநேந்திரனுக்கு வடக்கில் (யாழ்ப்பாணம் - வன்னி தேர்தல் தொகுதிகளில்) கிடைத்த வாக்குகளாக ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 65 வாக்குகளை பெற்றிருக்கிறார்... இவருக்கு எதிர்த்தரப்பில் போட்டியிட்ட சிங்களக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கியுள்ள வாக்குகள் 4 லட்சத்து இரண்டாயிரத்து 228… தமிழ் பொதுவேட்பாளருக்கு வழங்கிய வாக்குகளைவிட தமிழ் மக்கள் சிங்களக் கட்சியினருக்கு வழங்கியுள்ள வாக்குகள் கிட்டத்தட்ட முன்று மடங்கு அதிகம்… 

 கிளிநொச்சியில் (யாழ்ப்பாணத்தில்தான் கொஞ்ச முஸ்லீம் சிங்கள மக்கள் இருக்கிறார்கள் ஆனால் கிளிநொச்சியில் தூய தமிழ் ஏரியா) தமிழ்ப் பொது வேட்பாளரைவிட (20348) சிங்களக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகள் இரண்டு மடங்கு அதிகம் (40558)..

ஒவ்வொரு தொகுதியிலும் இதுதான் நிலமை…

அவ்வளவு பந்தி எழுத்துக்கள் இணைய பத்திரிகை பிரச்சாரங்கள் புலம்பெயர்ஸ் பலரின் ஆதரவு நிதிபங்களிப்பு பிரச்சாரம், பெரிய தமிழ் அரசியல்கட்சிகள் பலவற்றின் அங்கத்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மற்றும் பிரச்சாரம் இவற்றுடன் வலம் வந்து அரியம் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுகையில் எந்தப் பிரச்சாரமும் செய்யாத - யாருமே ஆதரவளிக்காத - சிவாஜிலிங்கம் 2019 தேர்தலில் பெற்ற வாக்குகள் 12 ஆயிரத்துச் சொச்சம்... வடக்கு கிழக்கிலுள்ள 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் வாக்குகளில் அரைவாசிக்கு மேலாவது எடுத்திருக்கவேண்டாமா அரியம்? இவரைவிட சிவாஜி  பெற்றவாக்குகள் 12 ஆயிரத்துச் சொச்சம் வாக்குகள் தர்மப்படி அதிகம்..

பொதுவேட்பாளர் கோமாளிகள் இல்லாவிட்டால் அனுராவின் வெற்றி கடினமாகி இருந்திருக்கும்.. அனுரா தரப்பு யுத்தத்துடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படாதது.. யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பையும் அரசியலில் இருந்து அகற்றியாச்சு.. 

இனிமேல் ஆட்சியில் இருப்பவர்களை போரின் பங்காளிகளாக விரல்காட்டி நீதிகோரும் அழுத்தங்களை வழங்கமுடியாது…

சிங்களத் தரப்பினர் தமிழர்கள் விடயம் உட்பட சகலதிலும் புதிய அணுகுமுறையோடு களத்திற்கு வந்திருக்கிறார்கள்…

யுத்தமும் அதன் பின் நீண்ட ஒன்றரை சகாப்தமும் முடிந்து இப்பொழுது சிங்களதேசம் கடந்தகால யுத்தங்களை, வெற்றிகளை பேசி உசிப்பேத்த முடியாத( ஏனெனில் அதில் பங்கெடுக்காத படியால்) ஒருதரப்பை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறது..

இவர்களுக்கும் கடந்தகால போருக்கும் போர்க்குற்றங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சர்வதேசத்துக்கும் தெரியும்..

ஆக இன்று பெரும் இக்கட்டில் மாட்டியிருப்பது தமிழர் தரப்பு… மாட்டவைத்ததில் பொதுவேட்பாளர் கோமாளிகளின் பங்கும் உண்டு.. 

தமிழ் தேசியத்தின் வீழ்ச்சிக்கான முதல் ஆணியை பொதுவேட்பாளர் கூட்டம் அடிச்சு விட்டிருக்கு..

அது இருக்க இங்கு யாழில் பொதுவேட்பாளருக்கு முட்டுக்கொடுப்பவர்கள் இவர்கள் பொதுவேட்பாளர்கள் தரப்பு சந்திக்கப்போகும் சர்வதேசம் யார் என்று சொல்லிட்டு போங்க… யார் யார் அந்த செய்தியை கொண்டு போகப்போறாங்க..?

இந்த பொதுவேட்பாளர் கூட்டே இந்த தேர்தலுக்கு மட்டுமே ஒப்பந்தம் போட்டு சேர்ந்த கூட்டு.. இன்றுடன் அந்த ஒப்பந்தங்களும் காலாவதியாகின்றன.. இனிமே இந்த பொதுவேட்பாளர் கூட்டில் யார் இருப்பார்கள்..? அதன் எதிர்காலம்..??

சிந்திக்க வேண்டிய கருத்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

latest-update.jpg

 

final.jpg

விருப்பு வாக்கிற்கு முந்தைய இறுதித் தேர்தல் முடிவுகள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

பொதுவேட்பாளர் கோமாளிகள் இல்லாவிட்டால் அனுராவின் வெற்றி கடினமாகி இருந்திருக்கும்.. அனுரா தரப்பு யுத்தத்துடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படாதது.. யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பையும் அரசியலில் இருந்து அகற்றியாச்சு.. 

 

அனுராவிற்கும் சஜித்திற்கும் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசம். அரியம் எடுத்தது 2 லட்சம் மட்டுமே. அவரின் முழு வாக்குகளும் சஜித்திற்கு விழுந்தாலும் சஜித் முன்னுக்கு வந்திருக்க முடியாது. அண்ண கணக்கில கொஞ்சம் வீக் போல இருக்கு. அதுசரி கூட்டமைப்போ, தமிழரசுக்கட்சியோ ஆதரித்த எந்த வேட்பாளர் ஜனாதிபதியாக வந்துள்ளார்? முதலில் வெல்லப்போகும் குதிரையில் பந்தயம் கட்டவேண்டும் இல்லையா மூடிக்கொண்டு ஓரமா படுக்கவேண்டும்.

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1.3 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் அநுரக்கு வெற்றி...! உறுதிப்படுத்தும் நாடாராளுமன்ற உறுப்பினர்

1.3 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் அநுர குமார வெற்றி பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருப்பதாக விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

அநுரகுமார ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளார் எனவும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுரகுமார வெற்றி

வேட்பாளர்கள் எவரும் 50 சதவீதத்திற்கு மேல் பெறாததால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது, இறுதி முடிவுகள் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணுவது இறுதி முடிவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/presidential-election-2024-anura-kumara-won-1727001338

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

குளத்தோடு கோவித்துக்கொண்டு  குண்,... கழுவாவிட்டால் நட்டம் குளத்துக்கல்ல.

 கழுவாதவன் நாறிப்போய்விடுவான். குழமும் வற்றிச் செல்கிறது,.. .☹️

கூத்தமைப்பான் கைகாட்டியதால் முக்கியமாக கருமாந்திரம் கை காட்டியதால் 
என்னுடைய குடும்பத்தில் மட்டும் அண்ணளவாக 30 வாக்குகள் அனுராவிற்கு விழுந்திருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் : ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

புதிய இணைப்பு

ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதி தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையெனவும் இது திருப்திகரமாகவுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.    

இரண்டாம் இணைப்பு

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தை எட்டாத நிலையில் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

விருப்பு வாக்கு தேர்தவுக்காக அநுர குமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டனர்.

நாட்டின் தேர்தல் விதிகளின்படி, வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதியாக வெற்றிபெற மொத்த வாக்குகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது விருப்பு தேர்விற்கு நகர்ந்துள்ளது.

முன்னிலை வகிக்கும் இரண்டு வேட்பாளர்கள்

எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மையை பெறாத நிலையில் முன்னிலை வகிக்கும் முதல் இரண்டு வேட்பாளர்களான அநுர மற்றும் சஜித்தை தவிர்த்து ஏனைய வேட்பாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச்சீட்டிலிருந்து இரண்டாவது விருப்பத்தேர்வுகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு முதல் இரு வேட்பாளர்களுக்கும் வழங்கப்படும்.

ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் : ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Srilanka Presidential Election Final Result Update

இரண்டாம் விருப்பு வாக்களிப்பில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும், தேர்தல் அலுவலர்கள் இந்த செயன்முறையை கையாள்வதில் முழுமையாக பயிற்சி பெற்றுள்ளதாக ரத்நாயக்க பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

மேலும் இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணும் பட்சத்தில், மாவட்டம் ரீதியாக முடிவுகள் அறிவிக்கப்படும். இதனால் இறுதி முடிவுகள் இன்று பிற்பகல் அல்லது நாளை முற்பகல் வரை தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது.

முதலாம் இணைப்பு 

ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையகம் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு, வெற்றியாளரின் அறிவிப்பு இன்று (22) பிற்பகல் அல்லது நாளை (23) முற்பகல் வரை தாமதமாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையேயான வாக்கு எண்ணிக்கை இடைவெளி குறைவடைந்து வருகிறது.

ஜனாதிபதித் தேர்தல்

இந்தநிலையில், வாக்குகள் 50.1 சதவீதத்தை எட்டாது என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் : ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Srilanka Presidential Election Final Result Update

எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளார் என்று தேர்தல் ஆணையகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/srilanka-presidential-election-final-result-update-1726989972#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அவ்வளவு பந்தி எழுத்துக்கள் இணைய பத்திரிகை பிரச்சாரங்கள் புலம்பெயர்ஸ் பலரின் ஆதரவு நிதிபங்களிப்பு பிரச்சாரம், பெரிய தமிழ் அரசியல்கட்சிகள் பலவற்றின் அங்கத்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மற்றும் பிரச்சாரம் இவற்றுடன் வலம் வந்து அரியம்

அத்துடன் வெறியூட்டும் சக்தி வாய்ந்த தமிழ் இனவெறி பிரசாரமும் அரியநேத்திரனுக்கு மேற்கொள்ளபட்டது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சன்டைக்காரன் காலில் விழுவது நல்லது என்று முடிவெடுத்த ஈழ தமிழர்களுக்கு எனது ராயல் சல்யூட். இந்தியாவின் அழுகிய பின்மூச்சை இனியும் ஈழ தமிழர்கள் மணந்து கொண்டு திரிய தயாரில்லை என்பதை பதிவுசெய்திருக்கின்றனர். பாராளுமன்ற தேர்தலில் கூத்தமைப்பானுகள் இதே போன்று அடிவாங்கும் அந்த நன்நாள் எனது பொன் நாள்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேர்தலில் புதிய திருப்பம்: முதல் சுற்றில் 15 மாவட்டங்களில் அநுர முன்னிலை

2024 ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 22 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை பெற்றுள்ளார்.

இதேவேளை சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம், நுவரெலியா, பதுளை, திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வன்னி ஆகிய சிறுபான்மையின மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

அந்தவகையில், சற்றுமுன் வெளியான முதல் சுற்று முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு

சஜித் பிரேமதாச 4,363,035  (32.76%) வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன்  (17.27%) மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

தேர்தலில் புதிய திருப்பம்: முதல் சுற்றில் 15 மாவட்டங்களில் அநுர முன்னிலை | Presidential Election 2024 Sri Lanka Results

நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ச 342,781 (2.57%) வாக்குகளுடனும் மற்றும் பா.அரியநேத்திரன் 226,343 (1.7%) வாக்களுடனும் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.

இதற்கமைய, வாக்குகள் அடிப்படையில் வெற்றிப் பெற்ற அநுர குமார திஸாநாயக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால் தற்போது இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள்

தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலில் புதிய திருப்பம்: முதல் சுற்றில் 15 மாவட்டங்களில் அநுர முன்னிலை | Presidential Election 2024 Sri Lanka Results

ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதித் தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையென தெரிவித்து இது திருப்திகரமாகவுள்ளதெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://ibctamil.com/article/presidential-election-2024-sri-lanka-results-1727003951

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, அக்னியஷ்த்ரா said:

கூத்தமைப்பான் கைகாட்டியதால் முக்கியமாக கருமாந்திரம் கை காட்டியதால் 
என்னுடைய குடும்பத்தில் மட்டும் அண்ணளவாக 30 வாக்குகள் அனுராவிற்கு விழுந்திருக்கிறது 

மாற்றம் ஒன்றே மாறாதது. அனுர நன்மை செய்வார் என்று நம்புவோம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kapithan said:

மாற்றம் ஒன்றே மாறாதது. அனுர நன்மை செய்வார் என்று நம்புவோம். 

புலம்பெயர் புண்ணியவான்கள் கம்மெண்டு இருந்தாலே போதுமானது.  தாயகத்து மக்கள் தமது அரசியலைத் தகவமைத்துக்கொள்ளுவார்கள்!

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, satan said:

வயிற்றெரிச்சலால் சம்பந்தமில்லாமல் ஏதோ புலம்புகிறார் அவர், அவருக்கு நம் இழப்புகள், தேவைகள் தெரிவதுமில்லை, கவலையுமில்லை, இன உணர்வுமில்லை. விழுந்து போன தன் இனத்தை பார்த்து தோல்வியை எள்ளி நகையாடுபவர் அந்த இனத்துக்கு வேண்டியவருமில்லை. விடுங்கள் அவரை, அவர்பாட்டில் களைத்ததும் ஓய்ந்து விடுவார்.

தேசிய உணர்வு என்பது அரியத்தாருக்கு ஆதரவு அளிப்பது அல்ல சாத். 

வடக்கு கிழக்கில் அரியத்தாரை மக்கள் நிராகரித்துவிட்டார்கள,. அவர்களெல்லாம் "நம் இழப்புகள், தேவைகள் தெரிவதுமில்லை, கவலையுமில்லை, இன உணர்வும் இல்லாத ." ஆட்கள் என்கிறீர்களா? 

உங்கள் கருத்தின்படி நான் அண்மையில் கனடாவில் இடம்பெற்ற தமிழர் திருவிழாவில் பாடகர் சிறீநிவாஸ் அவர்களுக்குக் கல்லெறிந்திருக்க வேண்டும். அல்லது அரியத்தாருக்கு ஆதரவாக அலட்ட வேண்டும். அப்போதுதான் நான் டமில் தேசியவாதி. 

அதாகப்பட்டது மூழையைத் கழட்டி ஒருபக்கம் கடாசிவிட்டு புலம்பெயர்ஸ் போடும் காட்டுக் கூச்சலுக்கு அதலையை ஆட்னால் மட்டும்தான் நான்  டமில்த் தேசியவாதி. சுயமாகச் சிந்தித்தால் துரோகி. 

உந்த முட்டாள் கூட்டத்தின் பார்வையில் நான் டமில் தேசியவாதியாய் இருப்பதைவிட இவர்களால்  துரோகியாக கருதப்படுவதே மேல் என நினைக்கிறேன். 

 

15 minutes ago, வாலி said:

புலம்பெயர் புண்ணியவான்கள் கம்மெண்டு இருந்தாலே போதுமானது.  தாயகத்து மக்கள் தமது அரசியலைத் தகவமைத்துக்கொள்ளுவார்கள்!

100%

  • கருத்துக்கள உறவுகள்
Posted

images-9-1.jpg?resize=307,164

இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள்!

இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் மற்றும் அநுரவை பிரதான வேட்பாளராக கருதி இரண்டாவது விருப்பு வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார்.

சில வாக்கு எண்ணும் மையங்களில் தமது கட்சியின் முகவர்கள் இன்றி இரண்டாவது எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முகவர்கள் முன்னிலையில் இரண்டாவது எண்ணிக்கை நடக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்ட போதிலும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழைய எங்கள் முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1400688

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, MEERA said:

K.K. Piyadasa க்கும் வாக்களிக்கும் நிலையில் யாழ் வன்னி மக்கள் 🤪

ரெலிபோனுக்கும் கல்குலேட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல்🤣🤣🤣

May be an image of 3 people and text

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விருப்பு வாக்கிலையும் எந்த மாற்றமும் வர சந்தர்ப்பம் இல்லை ஏனென்றால் 1000களில் தான் வித்தியாசம்.

Posted

Presidential Election-2024

Preferential vote Result

 

SAJITH PREMADASA

SJB

44.05%

4,363,035 + 137,025 Votes

4,500,060 Total Votes

 

ANURA KUMARA DISSANAYAKE

NPP

55.95%

5,634,915 + 80,066 Votes

5,714,981 Total Vote

image.png

https://election.virakesari.lk/

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுராவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். 

வாழு வாழவிடு. இரு இனங்களும் மனசு வைச்சால் இலங்கை சொர்க்க பூமியாகும். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட  அநுரா குமார திஸநாயக்காவுக்கு வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநுரவின் இடைக்கால அரசின் பிரதமராக ஹரின் அமரசூர்ய நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மற்றைய ஜனாதிபதிகள் போல் ஒரு பக்க சார்பாக நடக்காமல்,
தமிழ் இனத்தின் கோரிக்கைகளையும் செவிமடுத்து,
புதிய பாதையில் அரசமைக்க….  அனுரவிற்கு வாழ்த்துக்கள்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஏராளன் said:

@ரசோதரன் அண்ணை உங்க ஆசை நிறைவேறிவிட்டது!!

இரண்டாம் சுற்று எண்ணப்படுகிறது.....

நான் இடையில் களைத்துப் போய் சொல்லிக் கொள்ளாமல் நித்திரைக்குப் போய்விட்டேன்...........எல்லாரும் நித்திரையில என்றால் எண்ணுகின்றவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிவிடுவினம் என்ற பயம் தான்...........🤣. ஆனால், பரவாயில்லை, சரியாகத்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்..............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட  அநுரா குமார திஸநாயக்காவுக்கு வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, விசுகு said:

வாழு வாழவிடு. இரு இனங்களும் மனசு வைச்சால் இலங்கை சொர்க்க பூமியாகும். 

இதுதான் என் கருத்தும்.
இனியும் மோட்டுத்தனமாய் நடக்காமல்....
எங்களை வாழ விடு நீயும் வாழ்வாய்.

1 hour ago, வாலி said:

புலம்பெயர் புண்ணியவான்கள் கம்மெண்டு இருந்தாலே போதுமானது.  தாயகத்து மக்கள் தமது அரசியலைத் தகவமைத்துக்கொள்ளுவார்கள்!

காச  மட்டும் தாங்கோ மிச்சத்த நாங்க பாத்துக்கிறம் பீலிங்....🤣

  • Thanks 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.