Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, குமாரசாமி said:

இதுதான் என் கருத்தும்.
இனியும் மோட்டுத்தனமாய் நடக்காமல்....
எங்களை வாழ விடு நீயும் வாழ்வாய்.

காச  மட்டும் தாங்கோ மிச்சத்த நாங்க பாத்துக்கிறம் பீலிங்....🤣

 வெய்ட் பண்ணுங்க அண்ணை, நிலாந்தன் மாஸ்டர் ஆய்வு எழுதிக்கொண்டிருக்கிறாராம்! உங்கட பீலிங்ஸுக்கெல்லாம் பதில் தருவார்!🤣

  • Like 1
  • Replies 283
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரசோதரன்

👍.......... என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம்.......... இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை............🤣. ஆனாலும் அங்கு படிக்கு

Kapithan

இது புலம்பெயர்ஸ்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி.  புலம்பெயர்ஸ்  இனியாவது நிலத்தில் உள்ள மக்களின் மனநிலையறிந்து தேவையறிந்து செயற்பட வேண்டும்.  தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. 

ரசோதரன்

தாங்களும் ஒரு பிரதேச வல்லரசு, அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் உலக வல்லரசு ஆகி விடுவோம் என்ற ஒரு ஆசை தான்..................🤣. சுற்றிவர இருக்கும் நாடுகளில் பூட்டானைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் வேறு

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ri Lanka Presidential Election 2024

LIVE
Presidential Final Result *
  • NPP
    NPP5740179
    Anura Kumara Dissanayake
    55.89%
     
  • SJB
    SJB4530902
    Sajith Premadasa
    44.11%
     
Presidential Second Status
  • NPP
    NPP105264
    Anura Kumara Dissanayake
    38.54%
     
  • SJB
    SJB167867
    Sajith Premadasa
    61.46%
     
Presidential First Toppers
  • NPP
    NPP5634915
    Anura Kumara Dissanayake
    42.31%
     
  • SJB
    SJB4363035
    Sajith Premadasa
    32.76%
     
  • IND16
    IND162299767
    Ranil Wickremesinghe
    17.27%
     
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

// நான் இல்லை என்றாலும் இந்தத் தேசத்தில் அரசியல் என்றாலே கசப்பாக இருக்கு ஒரு தருணத்தில், எனது ஜே.வி.பி. சகோதரர் ஒருவர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவார்.

அவர் பிறப்பில் செல்வந்தராகவோ, பணக்காரராகவோ இருக்க மாட்டார். //

- ரோஹன விஜேவீர. -

எப்படிப்பட்ட   தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இன்று நிதர்சனமாகி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சஜித்   வடக்கு-கிழக்கிலும் பதுளை, நுவரேலியாவிலும் முன்னணியில் வந்துள்ளார். சிறுபான்மையினர் அதிகமாக உள்ள பகுதிகள் அநுரகுமாரவுக்கு சாதகமாக அமையவில்லை. ஜேவிபியின் இனவாதம், இந்திய வெறுப்பை விட சிங்களவர்கள் ஒரு பாரிய மாற்றத்தை அவாவித்தான் சஜித்தையும், ரணிலையும் தவிர்த்து அநுரவுக்கு வாக்களித்துள்ளனர்.

சூட்டோடு சூட்டாக அநுர பாராளுமன்றத் தேர்தலையும் வைக்கக்கூடும்!

large.IMG_9375.jpeg.a716634dea3ca478c79e32de5743a8ac.jpeg

 

large.IMG_9376.jpeg.7bda47e03fd4095184d650991986a2e6.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

ஒரு விடயம் தொடர்பாக இது சரிவராது, இது சரிவராது என்று ஒருவர் அடிக்கடி சொல்கிறார் என்றால், அது சரிவராது என்று அர்த்தம் அல்ல. அது சரிவரக்கூடாது என்பது அவரது விருப்பமாகவும், தெரிவாகவும் இருக்கிறது என்று அர்த்தம்.

உங்கள் ஆசையில் நான் மண்ணை அள்ளிக் கொட்டும் ஆளல்ல விசுகர். 

ஆதலால் உங்கள் விருப்பம் போலாகட்டும்  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, விசுகு said:

அனுராவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். 

வாழு வாழவிடு. இரு இனங்களும் மனசு வைச்சால் இலங்கை சொர்க்க பூமியாகும். 

👍..........

என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம்.......... இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை............🤣.

ஆனாலும் அங்கு படிக்கும் நாட்களில் ஒருநாள் எங்கள் வகுப்பில் இருவருக்கு கன்னத்தை பொத்தி விழுந்ததும் நல்லாவே ஞாபகத்தில் இருக்குது...............🫢

  • Like 1
  • Thanks 1
  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

final-result.jpg

தேர்தல் இறுதி முடிவுகள்

10 minutes ago, ரசோதரன் said:

என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம். இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை.

அண்ணை பிறகென்ன யாழிலையும் புதிய ஜனாதிபதியின் வகுப்புத் தோழன் இருக்கிறார் என நாங்களும் எழுதுவமெல்லோ!!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, ரசோதரன் said:

👍..........

என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம்.......... இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை............🤣.

ஆனாலும் அங்கு படிக்கும் நாட்களில் ஒருநாள் எங்கள் வகுப்பில் இருவருக்கு கன்னத்தை பொத்தி விழுந்ததும் நல்லாவே ஞாபகத்தில் இருக்குது...............🫢

ஒரு ஜனாதிபதியின் batchmate உடன் யாழ்.களத்தில் கருத்தாடிக் கொண்டு இருக்கின்றோம் என்பதில், எங்களுக்கும் பெருமை. 😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒன்பதாவது ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார் அநுரகுமார!

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் ஐம்பது வீதத்தைப் பெறாததால் தேர்தல் ஆணைக்குழு இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ண வேண்டியிருந்தது.

அனுர திஸாநாயக்க – 5,634,915 – 42.31%

சஜித் பிரேமதாச – 4,363,035 – 32.76%

https://ibctamil.com/article/sri-lanka-new-president-2024-1727004144

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
48 minutes ago, ஏராளன் said:

அண்ணை பிறகென்ன யாழிலையும் புதிய ஜனாதிபதியின் வகுப்புத் தோழன் இருக்கிறார் என நாங்களும் எழுதுவமெல்லோ!!

44 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு ஜனாதிபதியின் batchmate உடன் யாழ்.களத்தில் கருத்தாடிக் கொண்டு இருக்கின்றோம் என்பதில், எங்களுக்கும் பெருமை. 😁

நீங்கள் இரண்டு பேர்களும் கன்னத்தில் விழுந்த அந்தப் பகுதியை வசதியாக பார்க்காத மாதிரி இருக்கிறீர்கள்..........🤣.

அடி வாங்கியதில் ஒருவன் இன்னமும் இலங்கையில் தான் இருக்கின்றான். அவன் யாருக்கு வாக்குப் போட்டான் என்று ஒரு சலனமும் இல்லை.

இவர்களில் சிலரை இன்னமும் நல்லாவே ஞாபகம் இருக்கின்றது. இவர்களின் பேச்சுத்திறமை தனித்துவமானது, அத்துடன் இவர்கள் இலங்கையின் சில பகுதிகளில் இருந்தே வந்திருந்தனர். சிலர் படிப்பிலும் மிகவும் கெட்டிக்காரர்கள். ஆனால் எந்த சித்தாந்தத்திலும் பயிற்சியோ அல்லது தெளிவோ இருந்தது போன்று அன்று தெரியவில்லை. ஒரு ஆவேசமே தெரிந்தது.

நாங்களும் தான், ஒவ்வொருவரும், அன்றிலிருந்து இன்று வரை எவ்வளவு மாறியிருக்கின்றோம். சிலர் முற்றாக தலைகீழாகவும் மாறியுள்ளனர். இவர்களிலும் மாற்றங்கள் வந்திருக்கும், எல்லோரையும் அரவணைத்துப் போவார்கள் என்று நம்புவோம்..........

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ரசோதரன் said:

நீங்கள் இரண்டு பேர்களும் கன்னத்தில் விழுந்த அந்தப் பகுதியை வசதியாக பார்க்காத மாதிரி இருக்கிறீர்கள்..........🤣.

அடி வாங்கியதில் ஒருவன் இன்னமும் இலங்கையில் தான் இருக்கின்றான். அவன் யாருக்கு வாக்குப் போட்டான் என்று ஒரு சலனமும் இல்லை.

இவர்களில் பலரை இன்னமும் நல்லாவே ஞாபகம் இருக்கின்றது. இவர்களின் பேச்சுத்திறமை தனித்துவமானது, அத்துடன் இவர்கள் இலங்கையின் சில பகுதிகளில் இருந்தே வந்திருந்தனர். சிலர் படிப்பிலும் மிகவும் கெட்டிக்காரர்கள். ஆனால் எந்த சித்தாந்தத்திலும் பயிற்சியோ அல்லது தெளிவோ இருந்தது போன்று அன்று தெரியவில்லை. ஒரு ஆவேசமே தெரிந்தது.

நாங்களும் தான், ஒவ்வொருவரும், அன்றிலிருந்து இன்று வரை எவ்வளவு மாறியிருக்கின்றோம். சிலர் முற்றாக தலைகீழாகவும் மாறியுள்ளனர். இவர்களிலும் மாற்றங்கள் வந்திருக்கும், எல்லோரையும் அரவணைத்துப் போவார்கள் என்று நம்புவோம்..........

கோபம் இருக்கிற இடத்தில் தான் குணமிருக்கும் அண்ணை!

நம்பிக்கை தானே வாழ்க்கை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, வாலி said:

புலம்பெயர் புண்ணியவான்கள் கம்மெண்டு இருந்தாலே போதுமானது.  தாயகத்து மக்கள் தமது அரசியலைத் தகவமைத்துக்கொள்ளுவார்கள்!

IMG-2693.jpg
 

இப்படியா?

2009 இற்கு பின்னர் ஒரு தடவையே தமிழர்கள் ஆதரவு வழங்கிய வேட்பாளர் வென்றுள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விசுகு said:

இது போன்று தமிழ் மக்கள் சார்ந்து நீங்கள் நிறுத்த வேண்டும். 

 

மக்களை கவனித்தால் அவர்களை உங்கள் சார்பாக ஈர்க்க முடியும். ஆனால் எத்தனை பேரை உங்களால் கவனிக்க முடியும். போட்டியில் வெற்றி பெறுவதற்கு ஆகும் செலவை ஈடுசெய்ய முடியுமா?

நான் ஆட்டோ ஒன்றில் ஒரு அலுவலாக சென்றசமயம் ஓட்டுனருடன் நாட்டு நிலவரம் பற்றி பேச்சு கொடுத்தேன். அவர் ஒரு முன்னாள் போலிஸ் கமாண்டோ. சிறப்புப்பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர் அநுர குமா வெற்றி பெறுவார் என கூறினார். அநுர குமாரவிற்கு இயல்பான ஆதரவு கிடைத்தது. நாமல் போன்றோர் ஆட்களுக்கு வாகனம் விட்டு ஏற்றி இறக்கி, உணவு, இதர வசதிகள் கொடுத்து கவனித்து, காசும் கொடுத்து கூட்டங்களுக்கு கூப்பிடப்படுவதாய் சொன்னார். இல்லாவிட்டால் அவர்கள் கூட்டங்களுக்கு ஆட்கள் செல்ல மாட்டார்கள் என கூறினார். 

பசி வந்தால் பத்தும் பறந்து போகும். அது சிங்களம், தமிழ், முஸ்லீம் என வேறுபாடு பார்ப்பது இல்லை.

6 hours ago, Elugnajiru said:

எங்கையிருந்து இந்தக்காசு வந்தது? 
ஏன் குவாடரையும் கோழிப்புறியாணியையும் மறந்துவிட்டார்கள்?  
வெற்றிலையை வைத்து குழதைமேல் சத்தியம் வாங்கினார்களா?

இனிமேல் தமிழ்நாட்டு மக்களை விமர்சிக்க எவருக்கும் யோக்கியதை இல்லை.

 

நாட்டு நிலவரம் அப்படி. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தக்கன பிழைக்கும் என்பார்கள்.. தப்பி பிழைத்து வாழ்ந்து இனத்தை பெருக்கும் முஸ்லீம்களைப்போல் வாழ ஊரில் இப்பொழுது கற்றுத்தேறிக்கொண்டிருக்கிறார்கள் எம்மக்கள்..

இன்னும் இரண்டொரு தேர்தலுக்குள் புலம்பெயர் பொதுவேட்பாளர் ஆதரவு கோஸ்ட்டிகள் ஊரில் இருப்பவர்களுக்கு துரோகிப்பட்டம் வழங்குவார்கள்.. என்ன அவ்வளவு சனத்துக்கும் வழங்க பெரிய துரோகிப்பட்டமாய் வேணும்..

யாரும் கணக்கில் எடுக்கமாட்டார்கள்..

20k கிட்ஸ் வேற வெளிநாட்டில இருந்து ஊருக்கு போறவனையே கனக்கில எடுக்கமாட்டாங்கள் இதில வெளிநாட்டில இருந்து கூவி கேக்க போறான்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

20k கிட்ஸ் வேற வெளிநாட்டில இருந்து ஊருக்கு போறவனையே கனக்கில எடுக்கமாட்டாங்கள் இதில வெளிநாட்டில இருந்து கூவி கேக்க போறான்..

வரவேற்கத்தக்கது. இது வேண்டும் தேவை. ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் இன்னும் சில வருடங்களில் இங்கே இருக்கமாட்டார்கள் என்பது தான் களம் நிஜம். பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, விசுகு said:

வரவேற்கத்தக்கது. இது வேண்டும் தேவை. ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் இன்னும் சில வருடங்களில் இங்கே இருக்கமாட்டார்கள் என்பது தான் களம் நிஜம். பார்க்கலாம். 

இனி அசைலமும் ஒரு நாடும் குடுக்காது.. கடைசி நாடு கனடாக்காரனும் சுத்துப்போட்டிட்டான்.. இனி பட்டாளமாய் வெளிக்கிடுற கதை எல்லாம் முடிஞ்சிடும்.. இப்பவே குறைஞ்சிட்டு.. முந்தின மாதிரி ஒண்டு ரெண்டு வெளிக்கிடும்.. மற்றும்படி இப்ப கொஞ்சநாளாய் விசிற்விசாவில் ஊரே அள்ளுப்பட்ட கதை எல்லாம் முடிஞ்சு வந்திட்டு..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநுராவால் (அல்லது வேறு எவரானாலும்) ஒன்றும் செய்ய முடியாது.

இது சிங்களத்தின் யாப்பின் இறுக்கத்தன்மையையும், அதை நியாயாதிகப் படுத்தும் சட்டஅமைப்பின் இறுக்கத்தன்மையையும் சார்ந்தது.

சிங்களத்தின் முதல் அடியான பௌத்தத்துக்கு முதலிடம் என்பதே இறுக்கத்தின்  அடிப்படை பூட்டு.

(ஏனெனில், பெரும்பான்மை பௌத்தமாக இருப்பதால்,  இது மேலதிகமாக இறுக்கம் ஆகிறது. இதை வைத்தே சட்ட அடிப்படையில் எல்லாவற்றையும் மறுக்க கூடிய தன்மை யாப்பில் இருக்கிறது, சிங்களவருக்கு தமிழருடன் ஒத்து வராது என்பது வேறு விடயம்)

சிங்களவருடன் தர்க்கம் இன்றி கதைக்கும் போது தான் இறுக்கத்தின் சுயரூபம் வெளியில் தெரியவேண்டி வரும், அதற்கு கதைக்கும் சிங்களவர் விடயம் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இனி அசைலமும் ஒரு நாடும் குடுக்காது.. கடைசி நாடு கனடாக்காரனும் சுத்துப்போட்டிட்டான்.. இனி பட்டாளமாய் வெளிக்கிடுற கதை எல்லாம் முடிஞ்சிடும்.. இப்பவே குறைஞ்சிட்டு.. முந்தின மாதிரி ஒண்டு ரெண்டு வெளிக்கிடும்.. மற்றும்படி இப்ப கொஞ்சநாளாய் விசிற்விசாவில் ஊரே அள்ளுப்பட்ட கதை எல்லாம் முடிஞ்சு வந்திட்டு..

இதன் அர்த்தம் என்ன??

நாங்க தயார். இப்படியான சமூகம் தங்கமாட்டார்கள். இவர்களை தங்க வைத்தும் எதுவும் நடந்து விடப் போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இனி அசைலமும் ஒரு நாடும் குடுக்காது.. கடைசி நாடு கனடாக்காரனும் சுத்துப்போட்டிட்டான்.. இனி பட்டாளமாய் வெளிக்கிடுற கதை எல்லாம் முடிஞ்சிடும்.. இப்பவே குறைஞ்சிட்டு.. முந்தின மாதிரி ஒண்டு ரெண்டு வெளிக்கிடும்.. மற்றும்படி இப்ப கொஞ்சநாளாய் விசிற்விசாவில் ஊரே அள்ளுப்பட்ட கதை எல்லாம் முடிஞ்சு வந்திட்டு..

நீங்கள் உங்கட காலத்து அசைலத்திலிருந்து இன்னும் வெளியால வரல…

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, island said:

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட  அநுரா குமார திஸநாயக்காவுக்கு வாழ்த்துகள். 

வாங்கோ வாங்கோ ! உங்களுக்கு தொப்பி புரட்டுவது ஒன்றும் புதிதல்லவே. காலாகாலமாக அதைத்தானே செய்துகொண்டிருக்கிறீர்கள். அனுராவின் பக்கம் நீங்கள் போனாலே செருப்படிதான் விழும் .

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Kapithan said:

அடுத்த 1000 வருடங்களுக்கு டமில் பொது வேட்பாளர் என யாரை நிறுத்தினாலும் அவர் தோல்வியடைவார் என்பது உறுதி. ஏனென்றால் அதன்  கருவிலேயே  சங்கு ஊதப்பட்டுள்ளது. 

தமிழர்களான குமார் பொன்னம்பலம்,சிவாஜிலிங்கம் போன்றோர் ஜனாதிபதி தேர்தலில் நின்ற போது இல்லாத வன்மம் அரியேந்திரன்  ஜனாதிபதி வேட்பாளராக நிற்கும்போது ஏன் வந்தது? 😎

நிற்க....

வீபூதி புகழ்  செல்லக் கள்ளன் விக்னேஸ்வரனை சில தினங்களாக காணவில்லை. கண்டால் வரச்சொல்லுங்கோ :cool:

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அனுர இனிமேல்தான் முக்கிய பிரச்சினைகளை கையாளப்போகின்றார், அது இலங்கை பிரச்சினை அல்ல உலக வல்லரசுகளின் போட்டியினை சாதுரியமாக சமாளித்தல்.

மற்ற நாடுகளில் உள்ள  வெஸ்மினிஸ்ரர் பாராளுமன்ற ஆட்சி முறைமையில் இலங்கையில் இல்லை (இங்கிலாந்து காலனித்துவ நாடுகளில் உள்ளதனை போன்ற), இலங்கை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையாக இருந்தாலும் பாராளுமன்ற தேர்தலில் அனுர கட்சி பெரும்பான்மையினை நிரூபிப்பது  அவசியமாகிறது.

தற்போது இந்த இங்கிலாந்து பாணியிலான பாரளுமன்ற ஆட்சி முறைமை கொண்ட பல நாடுகளில் பல உதிரிக்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததால் அதனை பயன்படுத்தி உலக வல்லரசுகள் அந்தந்த நாடுகளில் தலையாட்டும் பொம்மை அரசுகளை உருவாக்கி விட்டுள்ளது, அவர்கள் தம் விருப்பப்படி நடக்காவிட்டால் கூட்டணி கட்சிகள் ஆதரவை விலக்க ஆட்சி கவிழும் நிலை உருவாகும், இந்த நிலை உண்மையில் பெரும்பான்மை மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்காத உலக முடிவுகளில் எடுப்பதற்கு இந்த உதிரி கட்சிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன இந்த போக்கு உலக வல்லரசுக்களுக்கு வாய்ப்பாக உள்ளது.

இலங்கை ஜனாதிபதி முறைமை அவ்வாறில்லை பாராளுமன்றத்தினை விட அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதால் எப்போதும் கத்தி ஜனாதிபதிக்கு மேலேயே தொங்கிக்கொண்டிருக்கும், அதனை சமாளிக்க முடியாதவர்கள் கோத்தபாய போல ஓட வேண்டியிருக்கும்.

ஜுலி சங்கிற்கு இப்போதுதான் வேலையே தொடங்கியுள்ளது. பலரை சந்திக்கவேண்டும் முதலாவது ஜனாதிபதி அடுத்து இராணுவத்தளபதி என பல பேரை சந்திக்கவேண்டியுள்ளது.

இதற்குள் இந்தியாவையும் சமாளிக்க வேண்டும், பார்ப்போம் அனுர எவ்வளவு காலம் தாக்கு பிடிக்கிறார் என (புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்).

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுர, சஜித் மற்றும் ரணிலுக்கு மட்டுமே வாய்ப்பு..

 

 

Freelancer   / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 07:54 - 0      - 7whatsapp sharing button

இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களைத் தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியாகத் தெரிவான அனுரகுமார திஸாநாயக்க, இரண்டாம் இடத்தை பெற்ற சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு மாத்திரமே கட்டுப்பணத்தை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.

இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஊடாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு 50,000 ரூபாவும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R

Tamilmirror Online || அனுர, சஜித் மற்றும் ரணிலுக்கு மட்டுமே வாய்ப்பு..




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.