Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
24 SEP, 2024 | 11:18 AM
image

2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டு 1.69% வாக்குகளை பெற்றது குறித்து தனது கருத்தினை தமிழ் தேசிய கூட்டடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டும் என்ற எண்ணக்கரு உதயமான பொழுதிலிருந்தே அதனை மிகக் கடுமையாக நான் எதிர்த்தது அனைவரும் அறிந்ததே. அவ்வெதிர்ப்புக்கான காரணங்கள் பல தருணங்களிலே வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும் இச் சமயத்திலே மீண்டும் அவற்றை நினைவுபடுத்துவது நல்லது என்று நினைக்கின்றேன். 

1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது. 

2. அப்படியான சூழ்நிலையில் தேவையில்லாத இந்த விஷப்பரீட்சையை செய்து தோற்பதன் விளைவு என்ன? 

3. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷை இனியும் நிரூபிக்கப்பட வேண்டியதொன்றல்ல. அப்படியிருக்க இந்த நேரத்தில் இதைச் செய்வது எவரும் இதுவரை கேள்விக்குட்படுத்தாத எமது அரசியல் நிலைப்பாட்டை காட்டிக் கொடுப்பதாகவே இருக்கும். 

4. 2022 மக்கள் போராட்டத்தின் பின்னரான இன்றைய சூழ்நிலையில் சிங்கள பௌத்த இனவாதம் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது. பிரதான வேட்பாளர் ஒருவர் கூட இனவாதத்தை தூண்டாத விதத்தில் நாம் அவர்களோடு பேரம் பேசுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. 

5. இரண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தருணத்தை விட, மூன்று பேர் வெற்றி வாய்ப்புள்ளவர்களாக காணப்படும் போது எமது பேரம்பேசும் சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளது. 

6. இப்படியான அருமையான சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் எமது மக்கள் நலன் சார்ந்து எமக்கு எஞ்சியிருக்கின்ற ஒரே பலமான வாக்குரிமையை பேரம்பேசி பயன்படுத்துதல் வேண்டும்.

இலங்கை தமிழரசுக்கட்சி எத்தருணத்திலும் தமிழ்ப் போதுவேட்பாளரை நிறுத்துகிற முயற்சியில் பங்கெடுக்கவில்லை. மாறாக பிரதான வேட்பாளர்கள் மூவரோடும் கட்சியின் முடிவின்படி உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். எமது கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவரைத் தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்திய போது அவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்து, அவருக்கு சார்பாக பிரச்சாரம் செய்யும் எமதுகட்சி உறுப்பினர்களை எச்சரித்தோம். பிரதான வேட்பாளர்கள் மூவரினதும் தேர்தல் அறிக்கைகள் வெளிவந்தவுடனேயே எமது மத்திய செயற்குழு கூடி அவற்றை ஆராய்ந்தது. இந்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்த ஐந்தாவது கூட்டம் 01.09.2024 அன்று வவுனியாவில் கூடி பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றினர். 

1. தமிழ்ப் பொது வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திரு. பா. அரியநேத்திரனுக்கு நாம் ஆதரவளிப்பதில்லை. 

2. தேர்தலிலிருந்து விலகிக் கொள்ளுமாறு திரு. அரியநேத்திரனைக் கோருவது. 

3. ஜனாதிபதி தேர்தல் 2024 இல் இலங்கை தமிழரசுக்கட்சி திரு. சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது.

எமது கோரிக்கைக்கு அமைவாக வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் வாக்களித்ததன் காரணமாக ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் திரு. சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருக்கின்றார்.

வடக்கு கிழக்கிலே அண்ணளவாக 80 % இனர் நாம் அடையாளம் கண்ட மூன்றுபிரதான வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இதுஎமது கட்சி எடுத்த நிலைப்பாட்டிற்கான மாபெரும் அங்கீகாரம் மாறாக திரு.அரியநேத்திரனுக்கு வடக்குகிழக்கில் 14 % இற்கு குறைவாகவே வாக்குகள் கிடைத்துள்ளன.

மிகக் குறைவான அளவு வாக்குகளைப்பெற்றதன் மூலமும், பிரதான தமிழ்க் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவு மறுக்கப்பட்ட நிலையிலும், திரு.அரியநேத்திரனின் படுதோல்வி தமிழ் மக்களின் தோல்வியாக சித்தரிக்கப்படுவதிலிருந்து தப்பியிருக்கின்றது. 

1982 ஆம் ஆண்டு திரு.குமார் பொன்னம்பலம் 2.67% வாக்குகளைப் பெற்றிருந்தார். வெறும் 1.69% வாக்குகளையே பெற்றதன் மூலம் திரு. அரியநேத்திரன் தமிழ் மக்களால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என்பது நிரூபணமாகியிருக்கின்றது.

இந்தத் தடவை மக்களது மதி நுட்பத்தால் இந்தப் பெரும் அபாயத்திலிருந்து நாம் தப்பித்துக்கொண்டுள்ளோம். இனிமேலும் இவ்விதமான விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் என்று தமிழ்ப் பொதுக் கட்டமைப்பினர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோரிடம் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/194654

  • Replies 131
  • Views 7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.  தமிழ்ப்பொதுவேட்பாளர் இத்தேர்தலில் போட்டியிட்டது ஜனாதிபதியாகும் நோக்கத்தில் இல்லையென்று எத்தனை முறை கூறினாலும்

  • சுமந்திரன் சாணக்கியன் சொல்லி சஜித்திற்கு வாக்கு விழுந்திருக்காது. ரணிலுக்கு வாக்குகள் விழ பொருளாதாரம் 2027 இன் பின் என்ன ஆகப் போகிறது என்ற பயம் காரணம். சஜித் வாக்குகளின் காரணம், ரணிலின் தீர்வு தொடர்பா

  • பிழம்பு
    பிழம்பு

    // 2004-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2015-ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பா. அரியநேத்திரன், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் தேர்வாகவி

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான் வேதம் ஓதுகிறது .

  • கருத்துக்கள உறவுகள்

வாட்ஸப்பில் கண்டது…..

அனுராவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தமிழ் அதிகார வர்க்கத்தினர் பலர் சமூக வலைத்தளங்களின் பிதற்றுகின்றனர். உங்களுக்கு ரணில் நல்லவர் சஜித் நல்லவர், சரத் பொன்சேகா நல்லவர், சஜித்தோடு இருந்த  G.L பீரிசு நல்லவர். ஆனால்  அனுரா இனவாதி.வடக்கு  கிழக்கை  பிரித்த கட்சியைச் சேர்த்தவர். என்னங்கடா உங்கட நியாயம் .  ரணில் சஜித்,சரத் பொன்சேகா, சஜித்தோடு இருந்த  G.L பீரிசு எல்லோரும் வடக்கு கிழக்கிலே தேனும் பாலும் ஓடவிட்டவங்களா ? விடுதலை புலிகள் இஸ்லாமியர்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதை வைத்துக்கொண்டு, அது தவறு என்பதை புலிகள் ஏற்றுக்கொண்ட பின்பும்  இன்றளவும்  புலிகள் எங்களை இன  சுத்திகரிப்பு செய்தவர்கள் பயங்கர வாதிகள் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது .உங்களுக்குள் யாரும் பிரதேச வாதிகள்  இல்லையா ? சாதி வெறியர்கள் இல்லையா?

ஸ்ரீலங்காவிலே முதல் தடவையாக இனவாதத்தை மூலதனமாக வைக்காமல் ஒருவர் தேர்தலிலே  வென்றிருக்கிறார். சிங்கள இளைய தலை முறை மாற்றத்தை விரும்புகிறது . ஆனால் நீங்கள் ? மாறமாட்டோம்  என்று அடம் பிடிக்கிறீர்கள் 

1971 ல் நடத்திய ஆயுத போராடத்திலே அவர்கள் 13000 பேரை இழந்தார்கள். அதன் பின் மீண்டெழுந்து 1987-89 ல் நடத்திய ஆயுத போராட்ட த்திலே  60000 பேரை இழந்தார்கள் .அவர்களது தலைவர்கள் உயிருடன் எரிக்கப்படடார்கள்.அதன் பின்பும் அவர்கள் மீண்டுவந்தார்கள். ஆயினும் எங்களுக்குள் இருந்ததை போலச் சில புல்லுருவிகள் அவர்களுக்குள்ளும் ஆதிக்கம் பெற்றதால் தடம்புரண்டு விழுந்து எழும்பினார்கள் , பின்னர் தங்களது தவறுகளிலிருந்து   படிப்பினைகளை  பெற்று தங்களை மறுசீரமைத்துக்கொண்டு  இன்று வெற்றியடைந்திருக்கிறார்கள்.
ஆனால் நீங்கள் ....... நான்  அவற்றை  எழுத விரும்பவில்லை 

தற்போது அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பியுள்ள  கலாநிதி  லயனல் போபகே தெரிவித்துள்ள கருத்துக்களை படித்துப் பாருங்கள். 
 கலாநிதி லயனல் போபகே, ரோஹன விஜேவீர  தலைமையிலான ஜேவிபி இன் முதலாவது பொதுச் செயலாளரக இருந்தவர் . இருவரும் சம காலத்தவர்கள் மற்றும் ஒரே மாதிரியான சமூகப்  பின்னணியை கொண்டவர்கள். 
இவர்கள் இருவரும் 1947 பாராளுமன்றத் தேர்தலின்போது  மாத்தறை மாவட்டத்தில் யுஎன்பி  ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்ட  வன்முறைச் சம்பவங்களால் பாதிப்புகளை எதிர்கொண்ட கம்யூனிஸ்ட்  குடும்பங்களின் வாரிசுகள்.
1960 களில் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் மாணவராக இருந்த போபகே ஜேவிபி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.  1971 கிளர்ச்சியின்போது கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார் . 
பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில்   தோற்றுவதற்கென 1972 இல் கண்டி போகம்பரை சிறைச்சாலையிலிருந்து  அவர் பேராதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
மீண்டும் 1983 இல் 'தமிழர்களுக்கெதிரான வன்முறையைத் தூண்டினார்கள்' என்ற பொய் குற்றச்சாட்டின் பேரில் ஜே ஆர் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட 21 இடது சாரி செயற்பாட்டாளர்களில் அவரும் ஒருவர்.
"கறுப்பு ஜூலை அட்டூழியங்கள் தொடர்பாகச் சிரில் மத்தியூ மற்றும் காமினி திஸாநாயக்க போன்றவர்களைக் கைது செய்து, சிறையில் அடைக்காமல் எங்களைக் கைது செய்தது ஏன்? யுஎன்பி யைத்தடை செய்வதற்குப் பதிலாக, ஜேவிபியை தடை செய்தது ஏன்"  எனக் கேட்டு, அச்சந்தர்ப்பத்தில் போலிஸாருடன்  வாதிட்டதை நினைவு கூருகிறார் போபகே. 
ஆனால், இரண்டு முதன்மையான விடயங்களின் அடிப்படையில் ரோஹன விஜேவீரவுடன் முரண்பட்டுக் கொண்ட  அவர் 1983 இல் தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து, ஜேவிபி இலிருந்து வெளியேறினார். 
சிறுபான்மை இனங்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்தமை மற்றும் ஜேவிபி மீண்டும்  வன்முறையை ஓர் அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்திருந்தமை ஆகிய இரண்டு நிலைப்பாடுகள் தொடர்பாக விஜேவீரவுக்கும், அவருக்குமிடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் தோன்றின. அந்த நிலையில், கட்சியிலிருந்து வெளியேறுவதைத் தவிர அவருக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை . அதன் பின்னர்  தொடர்ந்து ஜேவிபி இன் மீது அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கிறார். 
தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வரும் கலாநிதி  லயனல் போபகே 'இலங்கையில் ஜனநாயகத்துக்கான குரல்' என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். இந்நாட்டில் வாழ்ந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலைச் சமூகங்கள் ஆகியோரின் அரசியல், கலாசார உரிமைகளுக்காக அந்த அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. 
தற்போது  நாடு திரும்பியிருக்கும் அவர் ஒரு யூடியூப் தளத்தில் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரியுடன் நடத்திய விரிவான உரையாடலொன்றில் இலங்கையின் இன்றைய அரசியல் நிலவரங்கள்குறித்து  தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். 
'' தேசிய இனப் பிரச்சினை தொடர்பான ஜேவிபி நிலைப்பாடு  மற்றும்  அதன் வன்முறைச் சாய்வு ஆகிய இரண்டு முக்கியமான விடயங்களின் அடிப்படையில் நீங்கள் 1983 ன் பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறி, அதன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், இன்று ஜேவிபி யின் புதிய அவதாரமான தேசிய மக்கள் சக்தியை (NPP) ஆதரிக்கும்  ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள். இது ஏன் என விளக்க முடியுமா''? என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர் - 
''தேசிய இனப் பிரச்சினை மற்றும் வன்முறை ஆகிய விடயங்கள் தொடர்பான என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் அவற்றுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற்று, சமத்துவமான பிரஜைகளாகக் கண்ணியத்துடன் வாழக்கூடிய  ஒரு சூழல் நாட்டில் உருவாக  வேண்டும் என்பதே எனது அவா." 
 "2016 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தப் பிரச்சினைகள் தொடர்பான ஜேவிபி யின் அணுகுமுறையில் படிப்படியான ஒரு மாற்றம் ஏற்பட்டு வருவதை அவதானித்திருக்கிறேன். இப்பொழுது அந்த அணி 'சுய நிர்ணய உரிமை' என்ற வார்த்தையை நேரடியாகக் கூறாவிட்டாலும் கூட, தமிழ் மக்களையும்   உள்ளிட்ட இலங்கையின் சிறுபான்மை சமூகங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன என்ற விடயத்தையும், அப்பிரச்சினைகள் ஒவ்வொன்றும் புறம்பான விதத்தில் கையாளப்பட வேண்டும் என்ற விடயத்தையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றது. 
"அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வழிமுறைகளை அவர்கள் விரிவாக விளக்கிக் கூறாவிட்டாலும் கூட அதுவே ஒரு குறிப்பிட்டுச்  சொல்லக்கூடிய மாற்றம் என நான் நினைக்கிறேன்".
"மேலும் இன்று தேசிய மக்கள் சக்தி  பல முற்போக்கு அமைப்புகளையும், குழுக்களையும்,  பன்முகப்பட்ட தொழில்வாண்மையாளர் கழகங்களையும் உள்வாங்கிய ஒரு பரந்த முன்னணியாக எழுச்சியடைந்திருக்கின்றது."
"மாகாண சபைகள் தொடர்பாக NPP இன்னமும் ஒரு சில மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்த போதிலும், 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டும் என்ற  விடயத்தை அது ஏற்றுக் கொள்கின்றது. குறிப்பாக, தமிழ் தரப்புடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என்றும் அது கருதுகிறது." என்று கூறினார். 
" 'பழைய ஜேவிபி இப்பொழுது  என்பிபி என்ற முகமூடியுடன் களமிறங்கியிருக்கிறது. அது எந்த ஒரு நேரத்திலும் மீண்டும் வன்முறையைக் கையில் எடுக்க முடியும்' என ஒரு சில விமர்சகர்கள் கூறி வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்" என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், 
"இலங்கை சமூகத்தின்  அனைத்துத் தரப்புக்களையும் உள்வாங்கி ஒரு பாரிய மக்கள் இயக்கமாக எழுச்சியடைந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி இனிமேல் எந்தவொரு காரணத்திற்காகவும் வன்முறையை நாட வேண்டிய  தேவை அறவே  இருந்து வரவில்லை" என ஆணித்தரமாகக்  கூறினார்.
"1987 - 1989 கிளர்ச்சியின்போது ஜேவிபி ஒரு தீவிர சிங்கள   தேசியவாத நிலைப்பாட்டை எடுத்திருந்தது. அந்தப் பின்னணியிலேயே வன்முறைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன. 
"ஆனால், இன்றைய என்பிபி  யில் அந்தக் கருத்தியலுக்கு  இடமில்லை. என்கிறார்  கலாநிதி போபகே.

கடந்த 75 வருட நாடாளு மன்ற அரசியல் வரலாற்றில் தமிழினம் சந்தித்த  இன்னல்களுக்குச் சிங்கள பெளத்தஇனவாத  தலைவர்கள் மட்டுமல்ல அவர்களோடு திரை மறைவில் இரகசிய கூட்டு வைத்திருந்த தமிழ் தலைவர்களும் காரணமாகும்.

நன்றி: கிருபன் ஜீ.  

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சாத்தான் வேதம் ஓதுகிறது .

ஓதியது சாத்தன் ஆயினும் உரைக்கப்பட்ட வேதம் உண்மை போல் உள்ளதே?

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வரும்போது இதை உறுதிப்படுத்தலாம். 

Edited by நியாயம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

சாத்தான் வேதம் ஓதுகிறது .

1 hour ago, நியாயம் said:

ஓதியது சாத்தன் ஆயினும் உரைக்கப்பட்ட வேதம் உண்மை போல் உள்ளதே?

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வரும்போது இதை உறுதிப்படுத்தலாம். 

எங்களில் பலருக்கு ஓதப்பட்டது என்ன என்பதைவிட ஓதியவர் யார், அவரின் பின்னணி என்ன என்பதுதான் முக்கியம். 

ஏனென்றால் இவர்களது  விமர்சனங்கள்  ஆய்வில் இருந்து வருவது இல்லை. மாறாக வெறுப்பில் இருந்து வருகின்றன. 

()

பலருக்கு ஜீரணிக்க கஷ்டம் என்றாலும் உண்மை இது தான்.

தமிழரசுக் கட்சி / சுமந்திரன் ஆகியோருக்கு தாம் பிரதிநிதிப்படுத்தும் மக்களின் தீர்மானம் பற்றி ஓரளவுக்கு ஏனும் தெளிவு இருந்திருக்கின்றது.  இவர்கள் சொல்லித்தான் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கில் சஜித்துக்கு வாக்களித்து இருக்கின்றனர் என்பது தவறு, ஆனால் மக்கள் இப்படித்தான் வாக்களிப்பினர் என்ற புரிதல் இவர்களுக்கு இருந்திருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

வித்துவான்கள் சுமந்திரன்  & சாணக்கியன் சொல்லி தான் யாழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்துள்ளார்களாம். அத்தோடு மிச்ச ஆட் களுக்கு அரசியல் தெரியாதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சாணக்கியன் சொல்லி சஜித்திற்கு வாக்கு விழுந்திருக்காது. ரணிலுக்கு வாக்குகள் விழ பொருளாதாரம் 2027 இன் பின் என்ன ஆகப் போகிறது என்ற பயம் காரணம். சஜித் வாக்குகளின் காரணம், ரணிலின் தீர்வு தொடர்பான பின்னடிப்பினால் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் கோபமும்.

இவை போல, பொது வேட்பாளருக்கு வாக்களிக்க மக்களுக்கு திண்மையான/தொட்டுணரக் கூடிய (tangible) காரணங்கள் எதுவும் இருக்கவில்லை. எனவே, பொது வேட்பாளர் தோற்றார்.

இந்த எளிய உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் பகுதியெண்ணைக் குறுக்கி "பொது வேட்பாளர் ஓரளவுக்கு வென்றார்" என்று காட்டும் முயற்சி நம்மை நாமே ஏமாற்றும் வேலை தான். இதையே, பொதுத் தேர்தல் வரை தொடர்ந்தால், இப்போது இருக்கும் பா.உ எண்ணிக்கையும் சுருங்கும்!  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

எமது கோரிக்கைக்கு அமைவாக வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் வாக்களித்ததன் காரணமாக ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் திரு. சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருக்கின்றார்.

அடுத்த தேர்தல் வந்து கதவைத் தட்டுகிறது.

போய்ப் பார்த்து கவனமாக திறவுங்கள்.

கடேசி மட்டும் தூங்காதீங்க.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

வித்துவான்கள் சுமந்திரன்  & சாணக்கியன் சொல்லி தான் யாழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்துள்ளார்களாம். அத்தோடு மிச்ச ஆட் களுக்கு அரசியல் தெரியாதாம்.

460963708_1058312669637815_6001598680015

சுமந்திரனின் சொந்த ஊர் பருத்தித்துறை மக்களே.... 
அரியநேத்திரனுக்குத்தான் அதிக வாக்குகளைப் போட்டுள்ளார்கள். 
இதற்குள் தான் சொல்லித்தான் தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்குப் போட்டது என்று 
பச்சைப் பொய் சொல்லி, தனக்குத்தானே... முதுகு  சொறிந்து  விடுகிறார் பித்தலாட்டக் காரன். 🤣

கூரை ஏறி... கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போனாராம்.
இந்தக் கதையைப் போய்  முழு  லூசுகளுக்கு சொன்னால் நம்புவார்கள். 😃
அதை விட்டுட்டு... சுமந்திரன்  தான் செய்த முட்டாள் தனத்துக்கு... 
விளக்கமும், வியாக்கியானமும்  சொல்லிக் கொண்டு இருக்கிறாராம். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, nunavilan said:

வித்துவான்கள் சுமந்திரன்  & சாணக்கியன் சொல்லி தான் யாழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்துள்ளார்களாம். அத்தோடு மிச்ச ஆட் களுக்கு அரசியல் தெரியாதாம்.

பெரும்பாலான மக்களுக்கு அரசியல்  தெரியும். அதனாலதான் தனிப் பிரதிநிதித்துவத்திற்கு ஆதரவளிக்கவில்லை. மக்களுக்குத் தேவை தூர நோக்குடைய அரசியல்  தலைமைத்துவமே.  உணர்ச்சி அரசியலோ அல்லது சொல் புத்தி அரசியலோ அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

460963708_1058312669637815_6001598680015

சுமந்திரனின் சொந்த ஊர் பருத்தித்துறை மக்களே.... 
அரியநேத்திரனுக்குத்தான் அதிக வாக்குகளைப் போட்டுள்ளார்கள். 
இதற்குள் தான் சொல்லித்தான் தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்குப் போட்டது என்று 
பச்சைப் போய் சொல்லி, தனக்குத்தானே... முதுகு  சொறிந்து  விடுகிறார் பித்தலாட்டக் காரன். 🤣

கூரை ஏறி... கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போனாராம்.
இந்தக் கதையைப் போய்  முழு  லூசுகளுக்கு சொன்னால் நம்புவார்கள். 😃
அதை விட்டுட்டு... சுமந்திரன்  தான் செய்த முட்டாள் தனத்துக்கு... 
விளக்கமும், வியாக்கியானமும்  சொல்லிக் கொண்டு இருக்கிறாராம். 😂

சிரியருக்கு அரியரின் படுதோல்வியை ஜீரணிக்க  முடியவில்லை. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் அடிபலமாக விழுந்திருக்கின்றது! ஆனால் விழாதமாதிரி நடிக்கமுடிகிறது பலருக்கு!😂

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

பெரும்பாலான மக்களுக்கு அரசியல்  தெரியும். அதனாலதான் தனிப் பிரதிநிதித்துவத்திற்கு ஆதரவளிக்கவில்லை. மக்களுக்குத் தேவை தூர நோக்குடைய அரசியல்  தலைமைத்துவமே.  உணர்ச்சி அரசியலோ அல்லது சொல் புத்தி அரசியலோ அல்ல. 

பெரும்பாலான யாழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்து எதனை சாதித்துள்ளார்கள். ?
யாரென்றே தெரியாத பியதாசாவுக்கு வாக்களித்தவர்கள் அரசியல் தெரிந்தவர்களா?
ஜனாதிபதி தேர்தலில் வென்ற அனுர எத்தனை பாராளுமன்ற ஆசனங்களை பெறுவார்?
சொல்லுங்கள் உங்கள் தூர நோக்கங்களை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்த எளிய உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் பகுதியெண்ணைக் குறுக்கி "பொது வேட்பாளர் ஓரளவுக்கு வென்றார்" என்று காட்டும் முயற்சி நம்மை நாமே ஏமாற்றும் வேலை தான். இதையே, பொதுத் தேர்தல் வரை தொடர்ந்தால், இப்போது இருக்கும் பா.உ எண்ணிக்கையும் சுருங்கும்!  

தம்மை தாமே ஏமாற்றிவிட்டு, தாம் உருவாக்கிய மாயைகளை தாமே நம்பி அதற்கு பலியாகிவிட்டு ஐயோ,  உலகம் ஏமாற்றிவிட்டது என்று புலம்பல் வேறு. 😂

  • கருத்துக்கள உறவுகள்

மூவருடனும் பேசியபோது என்ன பேசினீர்கள்? மற்றவர்களைவிட சஜித் எதை கூடத்தருவதாக உறுதியளித்தார் என்பதையும் கூறலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Eppothum Thamizhan said:

மூவருடனும் பேசியபோது என்ன பேசினீர்கள்? மற்றவர்களைவிட சஜித் எதை கூடத்தருவதாக உறுதியளித்தார் என்பதையும் கூறலாமே?

சொன்னால்தான் தாங்கள் என்ன நம்பவாபோகிறீர்கள்? இல்லையல்லவா. பிறகேன் கேட்கிறீர்கள்? 

1 hour ago, nunavilan said:

பெரும்பாலான யாழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்து எதனை சாதித்துள்ளார்கள். ?
யாரென்றே தெரியாத பியதாசாவுக்கு வாக்களித்தவர்கள் அரசியல் தெரிந்தவர்களா?
ஜனாதிபதி தேர்தலில் வென்ற அனுர எத்தனை பாராளுமன்ற ஆசனங்களை பெறுவார்?
சொல்லுங்கள் உங்கள் தூர நோக்கங்களை?

 குவழைக்குள் தேனீரை ஊற்ற வேண்டும் என்றால் குவழை வெறுமையாக இருக்க வேண்டும். குவழை நிரம்பியிருந்தால் அதனுள் தேனீரை ஊற்றுவதால் பயனில்லை. 

தங்கள் மனம் சுமந்திரன் என்பவர் மீதான வெறுப்பால் நிரம்பியுள்ளது. எதைக்கூறினாலும் அதில் இருக்கும் உண்மையும் நியாயமும் உங்கள் கண்களுக்குப் புலப்படாது. 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

சொன்னால்தான் தாங்கள் என்ன நம்பவாபோகிறீர்கள்? இல்லையல்லவா. பிறகேன் கேட்கிறீர்கள்? 

 குவழைக்குள் தேனீரை ஊற்ற வேண்டும் என்றால் குவழை வெறுமையாக இருக்க வேண்டும். குவழை நிரம்பியிருந்தால் அதனுள் தேனீரை ஊற்றுவதால் பயனில்லை. 

தங்கள் மனம் சுமந்திரன் என்பவர் மீதான வெறுப்பால் நிரம்பியுள்ளது. எதைக்கூறினாலும் அதில் இருக்கும் உண்மையும் நியாயமும் உங்கள் கண்களுக்குப் புலப்படாது. 

கபிதன்…. @Eppothum Thamizhan ம், @nunaviIan னும் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே.😂 உங்களிடம் அதற்கு பதில் இல்லை என்று தெரிந்தால்… அதற்கு ஏன், சால்ஜாப்பு காரணம் எல்லாம் சொல்லி உங்களை தாழ்த்திக் கொள்கின்றீர்கள்.

ப்ளீஸ்… இனிமேலாவது,  மாட்டைப் பற்றி எழுதச் சொன்னால்… மாடு கட்டி இருக்கின்ற கயிறைப் பற்றி எழுதாதீர்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

கபிதன்…. @Eppothum Thamizhan ம், @nunaviIan னும் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே.😂 உங்களிடம் அதற்கு பதில் இல்லை என்று தெரிந்தால்… அதற்கு ஏன், சால்ஜாப்பு காரணம் எல்லாம் சொல்லி உங்களை தாழ்த்திக் கொள்கின்றீர்கள்.

ப்ளீஸ்… இனிமேலாவது,  மாட்டைப் பற்றி எழுதச் சொன்னால்… மாடு கட்டி இருக்கின்ற கயிறைப் பற்றி எழுதாதீர்கள். 🤣

கட்டப்பட்டிடுப்பது ஆடா அல்லது மாடா என்றே தங்களுக்குப் புரியாதபோது,  எழுதியிருப்பது  கயிற்றைப்பற்றியா அல்லது  மாட்டைப்பற்றியா என்பது எங்கே உங்களுக்குப் புரியப்போகிறது. 

விட்டுத் தள்ளுங்கள் சிறியர். 

😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

கட்டப்பட்டிடுப்பது ஆடா அல்லது மாடா என்றே தங்களுக்குப் புரியாதபோது,  எழுதியிருப்பது  கயிற்றைப்பற்றியா அல்லது  மாட்டைப்பற்றியா என்பது எங்கே உங்களுக்குப் புரியப்போகிறது. 

விட்டுத் தள்ளுங்கள் சிறியர். 

😁

சரி… சரி…. புத்திசாலிகள் நீங்கள் சொன்னால் கேட்கிறம். (லொள்) 😂

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

சரி… சரி…. புத்திசாலிகள் நீங்கள் சொன்னால் கேட்கிறம். (லொள்) 😂

சுமந்திரனின் இடத்துக்குப்  போட்டி போடலாம்  என்று சொல்கிறீர்களோ? 🤣

2 hours ago, island said:

தம்மை தாமே ஏமாற்றிவிட்டு, தாம் உருவாக்கிய மாயைகளை தாமே நம்பி அதற்கு பலியாகிவிட்டு ஐயோ,  உலகம் ஏமாற்றிவிட்டது என்று புலம்பல் வேறு. 😂

யதார்த்ததை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்தை ஆக்கபூர்வமாகச் சிந்திப்பதுதான் எம்மினம் உய்ய உள்ள  ஒரே வழ. 

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி ஒன்று தயார் என்கிறார்கள்.

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

தம்பி சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி ஒன்று தயார் என்கிறார்கள்.

வாழ்த்துக்கள்.

அதுக்கு…. அவர், வாற பாராளுமன்றத் தேர்தலில் வெல்ல வேண்டுமே.
மக்கள் அவருக்கு வாக்குப் போட தயார் இல்லையே…
போன முறை மாதிரி… திருமதி ரவிராஜின் வாக்குகளை திருடிக் கொண்டு பின்கதவால் வந்தது போல், இந்த முறையும் ஆரையும் ஏமாத்தி, சுத்துமாத்து செய்துதான் பாராளுமன்றம் போய் அமைச்சு பதவி எடுக்க வேண்டும்.
சஜித்தை…. ஆதரித்து, அனுரவை எதிர்த்து பிரச்சாரம் செய்த ஆளுக்கு எப்படி  அமைச்சு பதவி கொடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

ரணிலுடன் கூடி ஏமாற்றப்பட்டு என்பதை மறந்ததேனோ??? 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நியாயம் said:

ஓதியது சாத்தன் ஆயினும் உரைக்கப்பட்ட வேதம் உண்மை போல் உள்ளதே?

வேண்டாப் பெண்டாட்டி கால் பட்டாலும் குற்றம் கை பட்டாலும் குற்றம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.