Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: RAJEEBAN

25 SEP, 2024 | 02:48 PM
image

By SHIHAR ANEEZ

ECONOMYNEXT –

இலங்கையின் திறந்த பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றும்போது மார்க்சிச  ஜேவிபியின் செயற்பாட்டாளர் போன்று சமூக அநீதிகளிற்கு எதிராக கருத்து தெரிவித்தவேளை அவர் கேலி செய்யப்பட்டார்.

எனினும் இலங்கையின் பிரதமராவேன் என ஹரிணி ஒருபோதும் எண்ணவில்லை.

கொழும்பின் உயர்குழாமை சேர்ந்த குடும்பத்தின் இளையவரான 55 வயதான ஹரிணி இலங்கையின் 16 வது பிரதமராக பதவிபிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் அவர்.

பிஷப் கல்லூரியின் பழைய மாணவியான அவர் இளவயதிலேயே அநீதிக்கு எதிராக குரல்கொடுத்தவர். அது தனது தந்தையிடமிருந்து சுவீகரித்துக்கொண்ட விடயம் என அவர் கருதுகின்றார்.

1990 இல் சமூக சுகாதார உத்தியோகத்தராக பணியாற்ற ஆரம்பித்தவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட - எயிட்சினால் பாதிக்கப்பட்ட - புறக்கணிக்கப்பட்ட பெண்கள் மத்தியில் அவர் பணியாற்றினார்.

Harini.jpeg

இது அவர் சமூகத்தின் பலதரப்பட்டவர்களுடன் தொடர்புகொள்ளும் நிலையை ஏற்படுத்தியது, தொழில்சார் வல்லுனர்கள் முதல் கல்வியறிவற்றவர்கள் வரை, வறியவர்கள் முதல் செல்வந்தர்கள் வரை, உயர் குழாத்தினர் முதல் மிகவும் வறுமையில் உள்ளவர்கள் என பலதரப்பட்டவர்களை எதிர்கொண்டார்.

எனக்கு குழந்தையில்லாத போதிலும் நான் முழு சமூகத்திற்குமான தாய், என அவர் சமீபத்தில் ஹரி தொலைக்காட்சிக்கு தெரிவித்திருந்தார்.

அவர் தனது வாழ்க்கை முழுவதும் ஒரு சீர்திருத்தவாதியாக, உரிமை செயற்பாட்டாளராக, புத்திஜீவியாக செயற்பட்டு வந்துள்ளார்.

1960 இல் தனது முதலாவது பெண் பிரதமரை தெரிவு செய்த உலகின் பழமையான ஜனநாயகத்தின் மூன்றாவது பெண் பிரதமர் இவர்.

இலங்கையின் முதலாவது பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க முதல் பிரதமர் எஸ்டபில்யூஆர்டி பண்டாரநாயக்கவின் மனைவி, இரண்டாவது பிரதமர் அவரின் மகள்.

2020 இல் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க்கும் வரை ஹரிணிக்கு அரசியல் பின்னணி எதுவும் இருக்கவில்லை.

அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர்

ஹரிணி அமரசூரிய தனது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த பின்னர் அரசசார்பற்ற அமைப்பொன்றில் சமூக சுகாதார பணியாளராக பணிபுரிந்தார் அதன் பின்னர் ஒருவருடம் கெயர் அமைப்பில் பணியாற்றினார்.

அதன் பின்னர் அவர் சுயாதீன ஆராய்ச்சியாளராக மாறினார், சமூக மானுடவியலில் ஆர்வம்கொண்டிருந்த அவர் பின்னர் எடின்பேர்க் பல்கலைகழகத்தில் தனது கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்தார்.

எனக்கு வர்த்தகத்தில் ஈடுபடும் திறமையில்லை என்னிடம் வர்த்தகம் இல்லை என அவர் தெரிவிக்கின்றார்.

தனது அரசியல் வாழ்க்கை காரணமாக  உறங்குவதற்கான நேரத்தை இழந்தது குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கையை இழந்தது குறித்தும் கவலைப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

நான் தனிமையில் அதிக நேரத்தை செலவிட விரும்பும் ஒருவர் எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்கின்றார்  அவர்.

harni55.jpg

இலங்கையின் தொழில்சார் வல்லுனர்கள் மத்திய தரவர்க்கத்தினரின் ஆதரவு ஜேவிபிக்கு கிடைப்பதற்கான முக்கிய திருப்பு முறை ஹரிணி என்கின்றனர் ஆய்வாளர்கள்.

1971- 88- 89 இரத்தக்களறி மிக்க கிளர்ச்சிகளில் ஈடுபட்ட ஜேவிபியை விட தேசிய மக்கள் சக்தியை அதிகளவு நம்பத்தொடங்கினார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஜேவிபிக்கான மாற்றத்தை ஏற்படுத்தியவர் இவர் என பலர் கருதுகின்றனர். ஜேவிபியின் தோற்றத்தை இடதுசாரி மார்க்சிச கட்சி என்பதிலிருந்து சீர்திருத்த முற்போக்கு குழுவாக மாற்றினார்.

அவரது ஆங்கில சிங்கள புலமை இதற்கு உதவியது

harini2.jpg.

சிறந்த விதத்தில் உரையாற்றும் திறன் கொண்ட ஹரிணி  ஜேவிபியின் நிர்வாக திறன் குறித்து வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியவேளை இவ்வாறு பதிலளித்தார்

'நிச்சயமாக நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளும் அனுபவம் எங்களிற்கு இல்லை, நாட்டை கட்டியெழுப்புவதில் அனுபவத்தை பெறுவோம்' என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/194766

Posted

இவர் பற்றி Tamilguardian இல் விரிவாக வந்த கட்டுரை இது. ஆங்கிலத்தில் உள்ளது.

சாராம்சம்: இவர் மனித உரிமைகளுக்காகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், காணாமல் போனோர் தொடர்பாகவும் நியாயமான கொள்கைகளை எண்ணங்களை கொண்டு இருந்தவராகவும், அதை வெளிப்படுத்தக் கூடிய இடங்களில் வெளிப்படையாக வெளிப்படுத்தியவராகவும் உள்ளார்.

அடடா சிங்கள பிரதமருக்கு வக்காளத்து வாங்குகின்றார் நிழலி என்று ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத அதி தீவிர தமிழ் தேசியவாதம் கதைப்பவர்கள் இதை நான் இங்கு இணைத்தமைக்காகவும் தாரளமாக ஆத்திரப்படலாம்.

 24 September 2024
 
harini%20amarasuriya.jpg

Sri Lanka's new president has appointed Dr Harini Amarasuriya, a parliamentarian with his National People’s Power (NPP) coalition, as the new prime minister.

Anura Dissanayake’s appointment of Amarasuriya, comes amidst reports that Sri Lanka’s parliament will shortly be dissolved.

We look back on Amarasuriya’s previous remarks on Eelam Tamils, racism in Sri Lanka and on devolution of powers through the 13th Amendment.

Black July

1983%20rioters%20fire%20%281%29-3.jpg

Sinhala rioters celebrate as they pause in the destruction of homes and businesses in Tamil sectors of Colombo

In a 2020 interview with Women For Politics, Amarasuriya recalled the 1983 Black July pogrom, when government-backed Sinhala mobs killed thousands of Tamils.

She was asked:

What was growing up like amidst the conflict in Sri Lanka? Especially for women to have lived through a difficult period such as this?

I have particular memories of living through the conflict. Like, the ethnic riots in 1983. I lived in an area with a lot of Tamil neighbours. I was 13 years old and I remember feeling really confused and scared.

You know something is really wrong because some of your neighbours have disappeared suddenly. School had changed drastically as a lot of our Tamil friends were no longer in school. A lot of our teachers had left. I remember my father used to step out to check the roads in the morning before we started school.

But, I had the privilege of being from a majority community and I lived in the south.

I also came from a family that was very politically conservative. I remember having arguments with my father about things that were going on and decisions that have been made by the government in responding to the insurrection in the south and the issues in the north and east.

It's something that really shapes the way you see the world growing when you grow up with that kind of culture around you.

On Tamil women

Speaking to The Federal earlier this year, Amarasuriya was asked:

You have written and spoken decisively about women and children being the worst victims of the long civil war in Sri Lanka. How would you bring their voices to the truth and reconciliation process in a post-civil war era?

The women in this country, particularly those affected by the civil war, have repeatedly expressed what they want. Numerous commissions have sought the views of women victims regarding the reconciliation process, compensation, and grievance mechanisms they want. It is time for the government to take action on these issues. Women have been demanding these changes for years. They are seeking the truth about what happened to their family members. This must be taken seriously. The people need to know what happened to the members of their families who were handed over to security forces and to those who disappeared. Some form of answers is necessary.

A truth-seeking mechanism is crucial for people to come to terms with what happened, allowing them to mourn their losses, and grieve. All of this must be recognised and respected. Moving forward, we need a process that provides a sense of justice. This could include methods similar to those used in South Africa, where forgiveness-seeking mechanisms were explored. However, most of all, people need to be acknowledged that this happened and they must be allowed to grieve.

Currently, even acts of remembrance are seen as crimes, which is unacceptable. The process of healing needs to begin.

To note, Tamils across the North-East, including the women who make up families of the disappeared have repeatedly rejected any domestic truth seeking mechanism and repeatedly demanded international accountability through the International Criminal Court (ICC).

2024-3-13%20-%20Families%20of%20the%20di

Tamil families of the disappeared protesting and demanding Sri Lanka be referred to the International Criminal Court.

In another 2020 interview, Amarasuriya said,

Women in the North and East as well as in the South organised themselves to protest against government atrocities and these were instrumental in mobilising resistance against the government at the time. Even today, women in the North of the country have not given up their fight asking questions about their loved ones who were disappeared during the final stages of the war between the military and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in 2009.

On Sinhala racism

Writing in The Wire in May 2020, Amarasuriya said,

Post-independence Sri Lanka has been marked by the struggles between a majority community often described as a ‘majority with a minority complex’, and minority communities faced with reduced influence and marginalisation in the face of majority rule. This manifested in a 30-year war with the Liberation Tigers of Tamil Eelam (LTTE), fighting for a separate homeland for the Tamil community, which was brought to a bloody end in 2009. But the military defeat of the LTTE has not eased ethno-religious tensions in Sri Lanka by any means.

It seems as if nurturing constant tension with an ethnic/religious ‘other’ is essential for doing politics in Sri Lanka. So, since 2009, there has been a rise in Islamophobia – one that is carefully nurtured, sustained and facilitated. It would not be an exaggeration to say that no event of ethnic or religious violence in Sri Lanka has taken place without the complicity of the political party in power – at the very least, by turning a blind eye or delaying taking action.

 Most calls for ‘unity’, a ‘Sri Lankan identity’, also reflect the majority preoccupation of ‘taming’ the minorities and bringing them under the benevolent control of the majority community. Many Sinhalese who would consider themselves cosmopolitan, democratic and tolerant, would not see the implicit exclusions and violence, in enforcing a totalising identity in a society such as Sri Lanka. COVID-19 and its impact on the Muslim community show the extent to which a majoritarian mindset that is comfortable with demonising minority communities – or any other community that is seen as a threat to the majority community – has become normalised in Sri Lankan society and polity.

On the 13th Amendment and devolution of powers

harini%20amarasuriya%202.jpg

Asked to explain the NPP stand on the implementation of the 13th Amendment earlier this year, Amarasuriya said:

“It has been presented as a solution to the national problem. It is already there in the Constitution and we believe that it should be implemented, but we have a debate whether it could be a tenable solution for the national problem. Our standpoint is that a government with genuine intention of addressing the issues of Tamil people must bring about solutions to the national problem, and we have no faith in other parties, but only the NPP could do that.”

She also stated,

“In terms of devolution, the NPP has had a robust discussion internally about resolving the national issue. We know a fair resolution is necessary. Currently the 13A is in the Constitution and the minority community expects its implementation. We intend to honour that. However, we also think that the 13A does not necessarily address and resolve the issues of minorities because those are more rooted in a kind of institutionalised racism which the State has to address in different ways.”

“The NPP would like greater democracy; we want people to be more involved in the decision-making process and we would like to see a stronger parliamentary process where there is greater public involvement. We also think that there needs to be a systematic solution to how democracy, which will lead to majoritarian rule, doesn’t lead to exclusion of minority communities – be it ethnic, religious, or any other.”

Despite Amarasuriya’s pledge, other senior officials within her party have openly spoken out against implementing the 13th Amendment, which was established through the 1987 Indo-Lanka Accord. The JVP staged two insurrections against the state in the early 1970s and the late 1980s. The latter of these was chiefly in response to the Indo-Lanka accord and the 13th Amendment which sought to devolve powers to Tamils in the North-East. Tens of thousands were killed.

In 2010, Dissanayake himself said the JVP will oppose if a new political constitution devolving powers to the Northern and Eastern provinces was to be created.

Related Articles: 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, நிழலி said:

இவர் பற்றி Tamilguardian இல் விரிவாக வந்த கட்டுரை இது. ஆங்கிலத்தில் உள்ளது.

சாராம்சம்: இவர் மனித உரிமைகளுக்காகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், காணாமல் போனோர் தொடர்பாகவும் நியாயமான கொள்கைகளை எண்ணங்களை கொண்டு இருந்தவராகவும், அதை வெளிப்படுத்தக் கூடிய இடங்களில் வெளிப்படையாக வெளிப்படுத்தியவராகவும் உள்ளார்.

அடடா சிங்கள பிரதமருக்கு வக்காளத்து வாங்குகின்றார் நிழலி என்று ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத அதி தீவிர தமிழ் தேசியவாதம் கதைப்பவர்கள் இதை நான் இங்கு இணைத்தமைக்காகவும் தாரளமாக ஆத்திரப்படலாம்.

இந்தம்மா மட்டுமல்ல இன்னும் சிலர் இதே மாதிரியான கொள்கைகளைக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

எதிர்க் கட்சியில் இருக்கும் போது குய்யோ முறையோ என்று கத்துகிறவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும் எல்லாவற்றையும் மறந்து ஆட்சியில் இருந்தவர்கள் எதைச் செய்தார்களோ அதையே இவர்களும் செய்வார்கள்.

ஆனாலும் ஜேவிபியை வித்தியாசமான கண்ணோட்டத்தோடு எல்லோரும் பார்க்கிறார்கள்.நாங்களும் பார்ப்போம்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர். 

புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.  

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

அடடா சிங்கள பிரதமருக்கு வக்காளத்து வாங்குகின்றார் நிழலி என்று ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத அதி தீவிர தமிழ் தேசியவாதம் கதைப்பவர்கள் இதை நான் இங்கு இணைத்தமைக்காகவும் தாரளமாக ஆத்திரப்படலாம்.

அப்படிச் செய்ய மாட்டார்கள் நிழலி. Tamil guardian அன்ரன் பாலசிங்கம் இலண்டனில் இருந்த காலத்தில் தொடங்கப்பட்டது.  அந்தப் பத்திரிகையைப் பிடித்தபடி பிரபாகரன் இருக்கும் புகைப்படமும் இருக்கிறது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரசோதரன் said:

அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர். 

புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.  

பேராசிரியர் அபயக்கோன் ஒரு நல்ல தெரிவு. உங்கள் காலத்துக்கு பிறகு இவர் கனடா சென்று, பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்துவிட்டு, நாங்கள் படித்து முடிக்கும் காலத்தில் மீண்டும் பேராதனை பொறியியல் பீடத்துக்கு விரிவுரையாளராக வந்தார். எல்லோருடனும் நன்றாக பழகுவார், எனது ஊர் நண்பன் இவர் கனடா Vancouver நகரில் இருக்கும் பொது இவருடன் நல்ல பழக்கம், அதன் காரணமாக அப்பொழுது இவருடன் சில தடவைகள் தனிப்பட்டும் உரையாட முடிந்தது. எல்லோராலும் விரும்பப்படும் ஒருவர், முக்கியமாக தமிழ் மாணவர்களால் விரும்பப்பட்ட ஒருவர்

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரசோதரன் said:

அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர். 

புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.  

இந்த ஆட்சி முழுக்க முழுக்க ரசோதரன்.   ஆள்களாக.  இருக்கிறது 

உண்மையில் தமிழ் ஈழம் கிடைத்த மாதிரி தான்    🤣🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, Kandiah57 said:

இந்த ஆட்சி முழுக்க முழுக்க ரசோதரன்.   ஆள்களாக.  இருக்கிறது 

உண்மையில் தமிழ் ஈழம் கிடைத்த மாதிரி தான்    🤣🤣

🤣.....

ரசோதர என்று என் பெயரை மாற்றிவிடப் போகின்றார்கள்....

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, Kandiah57 said:
4 hours ago, ரசோதரன் said:

அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர். 

புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.  

Expand  

இந்த ஆட்சி முழுக்க முழுக்க ரசோதரன்.   ஆள்களாக.  இருக்கிறது

அடுத்தடுத்த மாதங்களில் ரசோதரனையும் இலங்கையில் காணலாம்.

புனைபெயரில் இருக்கிறபடியால் கண்டு கொள்ளவில்லைப் போலும்.

50 minutes ago, Kandiah57 said:

இந்த ஆட்சி முழுக்க முழுக்க ரசோதரன்.   ஆள்களாக.  இருக்கிறது 

உண்மையில் தமிழ் ஈழம் கிடைத்த மாதிரி தான்    🤣🤣

இதுக்குள்ள @நீர்வேலியான்   யானின் ஆளும் இருக்கிறார் கண்டுக்கலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு புது ஆட்சியை பற்றி மூன்று மாதங்கள் சென்ற பின்னரே நல்லது கெட்டது சொல்ல முடியும்.:cool:
ஆடு அறுக்க முதல்  அதை அறுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, ஈழப்பிரியன் said:

அடுத்தடுத்த மாதங்களில் ரசோதரனையும் இலங்கையில் காணலாம்.

புனைபெயரில் இருக்கிறபடியால் கண்டு கொள்ளவில்லைப் போலும்.

நானும் இப்ப அஞ்சாறு நாளாய் பாத்துக்கொண்டு வாறன். இவர் @ரசோதரன் பெரிய கை போலத்தான் கிடக்கு.... அங்கை ஊரிலை எனக்கு காணிப்பிரச்சனை எக்கச்சக்கமாய் கிடக்கு. 
ஆளின்ர கைய புடிச்சால் சகலதும் சுபம் எண்டு ஒரு பட்சி சொல்லுது 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, நிழலி said:

Despite Amarasuriya’s pledge, other senior officials within her party have openly spoken out against implementing the 13th Amendment, which was established through the 1987 Indo-Lanka Accord. The JVP staged two insurrections against the state in the early 1970s and the late 1980s. The latter of these was chiefly in response to the Indo-Lanka accord and the 13th Amendment which sought to devolve powers to Tamils in the North-East. Tens of thousands were killed.

In 2010, Dissanayake himself said the JVP will oppose if a new political constitution devolving powers to the Northern and Eastern provinces was to be created.

நல்லதே நடக்கும் என  எண்ணுவோம் !!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்தடுத்த மாதங்களில் ரசோதரனையும் இலங்கையில் காணலாம்.

புனைபெயரில் இருக்கிறபடியால் கண்டு கொள்ளவில்லைப் போலும்.

இதுக்குள்ள @நீர்வேலியான்   யானின் ஆளும் இருக்கிறார் கண்டுக்கலையோ?

ஊரில் கோயில் கும்பாபிஷேகம் ஒன்று வருகுது.......... அதைச் சாட்டாக வைத்தாவது வேலைக்கு ஒரு மூன்று கிழமைகள் கட் அடிப்பமோ என்று நினைத்தனான்........... இப்ப வேண்டாம், அடுத்த கோயில் கும்பாபிஷேகம் வரட்டும்............🤣.

அங்கே படித்த எல்லாருக்கும் இவர்களைத் தெரியும். என்னையும், நீர்வேலியானையும் போல இங்கு களத்தில் இன்னும் சிலராவது இருப்பார்கள். ஆனால் அடக்கமாக இருக்கின்றார்கள்...... அவர்களுக்கு தான் பதவிகளோ தெரியவில்லை...........😜.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

நானும் இப்ப அஞ்சாறு நாளாய் பாத்துக்கொண்டு வாறன். இவர் @ரசோதரன் பெரிய கை போலத்தான் கிடக்கு.... அங்கை ஊரிலை எனக்கு காணிப்பிரச்சனை எக்கச்சக்கமாய் கிடக்கு. 
ஆளின்ர கைய புடிச்சால் சகலதும் சுபம் எண்டு ஒரு பட்சி சொல்லுது 😂

விளம்பரம் கொஞ்சம் கூடிப் போயிட்டுதோ...........🤣.

குமாரசாமி அண்ணை, வெளியில இருந்து போன இரண்டு பேர்களை அங்கே போன மாதமும், அதற்கு முதல் மாதமும் போட்டுத் தள்ளினவர்கள். காணிப் பிரச்சனை என்று தான் இப்ப கதை வருகுது.......... காணி போனால் போகட்டும், அண்ணை............  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, ரசோதரன் said:
3 hours ago, குமாரசாமி said:

நானும் இப்ப அஞ்சாறு நாளாய் பாத்துக்கொண்டு வாறன். இவர் @ரசோதரன் பெரிய கை போலத்தான் கிடக்கு.... அங்கை ஊரிலை எனக்கு காணிப்பிரச்சனை எக்கச்சக்கமாய் கிடக்கு. 
ஆளின்ர கைய புடிச்சால் சகலதும் சுபம் எண்டு ஒரு பட்சி சொல்லுது 😂

விளம்பரம் கொஞ்சம் கூடிப் போயிட்டுதோ...........🤣.

குமாரசாமி அண்ணை, வெளியில இருந்து போன இரண்டு பேர்களை அங்கே போன மாதமும், அதற்கு முதல் மாதமும் போட்டுத் தள்ளினவர்கள். காணிப் பிரச்சனை என்று தான் இப்ப கதை வருகுது.......... காணி போனால் போகட்டும், அண்ணை.

ரசோதரனைப் பிடிப்பதென்றால் முதலில் என்னைக் கவனிக்கணும்.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 செப்டம்பர் 2024
 
harini%20amarasuriya.jpg

இலங்கையின் புதிய ஜனாதிபதி, தனது தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹரிணி அமரசூரியவை புதிய பிரதமராக நியமித்துள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என்ற தகவல்களுக்கு மத்தியில் அனுர திஸாநாயக்க அமரசூரியவை நியமித்துள்ளார்.

ஈழத் தமிழர்கள், இலங்கையில் இனவாதம் மற்றும் 13 வது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரப் பகிர்வு பற்றி அமரசூரிய முன்னர் கூறிய கருத்துக்களை நாம் திரும்பிப் பார்க்கிறோம்.

கருப்பு ஜூலை

1983%20rioters%20fire%20%281%29-3.jpg

கொழும்பில் தமிழ்த் துறைகளில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அழிக்கப்படுவதை நிறுத்திய சிங்களக் கலவரக்காரர்கள் கொண்டாடுகிறார்கள்

2020 ஆம் ஆண்டு பெண்கள் அரசியலுக்கு அளித்த நேர்காணலில் , அமரசூரிய 1983 கறுப்பு ஜூலை படுகொலையை நினைவு கூர்ந்தார் , அப்போது அரசாங்க ஆதரவு சிங்கள கும்பல் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றது.

அவளிடம் கேட்கப்பட்டது:

இலங்கையில் மோதல்களுக்கு மத்தியில் எப்படி வளர்ந்து கொண்டிருந்தது? குறிப்பாக பெண்களுக்கு இது போன்ற கடினமான காலகட்டம் இருந்ததா?

சண்டையின் மூலம் வாழ்ந்தது குறித்து எனக்கு குறிப்பிட்ட நினைவுகள் உள்ளன. 1983ல் நடந்த இனக்கலவரம் போல், நான் தமிழ் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் வாழ்ந்தேன். எனக்கு 13 வயது, நான் மிகவும் குழப்பமாகவும் பயமாகவும் உணர்ந்ததை நினைவில் கொள்கிறேன்.

உங்கள் அண்டை வீட்டாரில் சிலர் திடீரென்று காணாமல் போனதால் ஏதோ தவறு இருப்பதாக உங்களுக்குத் தெரியும். எங்கள் தமிழ் நண்பர்கள் பலர் பள்ளியில் இல்லாததால் பள்ளி வெகுவாக மாறிவிட்டது. எங்கள் ஆசிரியர்கள் பலர் வெளியேறிவிட்டனர். காலையில் நாங்கள் பள்ளியைத் தொடங்குவதற்கு முன்பு என் தந்தை சாலைகளைச் சரிபார்க்க வெளியே செல்வது எனக்கு நினைவிருக்கிறது.

ஆனால், நான் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவன் என்ற பாக்கியத்தைப் பெற்றிருந்தேன், நான் தெற்கில் வாழ்ந்தேன்.

நானும் அரசியல் ரீதியாக மிகவும் பழமைவாத குடும்பத்தில் இருந்து வந்தவன். தெற்கின் கிளர்ச்சி மற்றும் வடக்கு கிழக்கில் உள்ள பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் விஷயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எனது தந்தையுடன் விவாதித்ததை நான் நினைவில் கொள்கிறேன்.

உங்களைச் சுற்றியுள்ள அந்த வகையான கலாச்சாரத்துடன் நீங்கள் வளரும்போது உலகம் வளர்வதை நீங்கள் பார்க்கும் விதத்தை இது உண்மையில் வடிவமைக்கும் ஒன்று.

தமிழ் பெண்கள் மீது

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃபெடரலிடம் பேசிய அமரசூரியவிடம் கேட்கப்பட்டது:

இலங்கையில் நடந்த நீண்ட உள்நாட்டுப் போரில் பெண்களும் குழந்தைகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்பதைத் தீர்க்கமாக எழுதியும் பேசியும் இருக்கிறீர்கள். உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் அவர்களின் குரல்களை உண்மை மற்றும் நல்லிணக்க செயல்முறைக்கு எவ்வாறு கொண்டு வருவீர்கள்?

இந்த நாட்டிலுள்ள பெண்கள், குறிப்பாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்குத் தேவையானதைத் திரும்பத் திரும்ப வெளிப்படுத்தியுள்ளனர். பல ஆணைக்குழுக்கள் பாதிக்கப்பட்ட பெண்களின் நல்லிணக்க செயல்முறை, இழப்பீடு மற்றும் அவர்கள் விரும்பும் முறைப்பாடுகள் குறித்து கருத்துகளை கேட்டுள்ளன. இந்த விவகாரங்களில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. பல ஆண்டுகளாக பெண்கள் இந்த மாற்றங்களை கோரி வருகின்றனர். அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த உண்மையை தேடி வருகின்றனர். இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் காணாமல் போனவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை மக்கள் அறிய வேண்டும். சில வகையான பதில்கள் அவசியம்.

உண்மையைத் தேடும் பொறிமுறையானது, மக்கள் தங்கள் இழப்புகளுக்கு இரங்கல் மற்றும் துக்கத்தை அனுமதிக்கும் வகையில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது. இவை அனைத்தும் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும். முன்னோக்கி நகரும், நீதியின் உணர்வை வழங்கும் ஒரு செயல்முறை நமக்குத் தேவை. மன்னிப்பு தேடும் வழிமுறைகள் ஆராயப்பட்ட தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற முறைகள் இதில் அடங்கும். இருப்பினும், எல்லாவற்றிற்கும் மேலாக, இது நடந்தது என்பதை மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும், மேலும் அவர்கள் துக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

தற்போது, நினைவூட்டும் செயல்கள் கூட குற்றங்களாக பார்க்கப்படுகின்றன, இது ஏற்றுக்கொள்ள முடியாதது. குணப்படுத்தும் செயல்முறை தொடங்க வேண்டும்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட வடக்கு-கிழக்கு முழுவதிலும் உள்ள தமிழர்கள் உள்நாட்டு உண்மையைத் தேடும் பொறிமுறையை மீண்டும் மீண்டும் நிராகரித்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மூலம் சர்வதேச பொறுப்புக்கூறலை மீண்டும் மீண்டும் கோரியுள்ளனர்.

2024-3-13%20-%20Families%20of%20the%20disappeared.jfif

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ் குடும்பங்கள் இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மற்றொரு 2020 நேர்காணலில், அமரசூரிய கூறினார்,

வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள பெண்கள் அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக தங்களைத் தாங்களே ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்பி இன்றும் வடக்கில் உள்ள பெண்கள் தமது போராட்டத்தை கைவிடவில்லை.

சிங்கள இனவாதம் பற்றி

மே 2020 இல் தி வயர் இதழில் அமரசூரிய எழுதுகையில் ,

சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையானது 'பெரும்பான்மை சமூகத்துடன் கூடிய சிறுபான்மை சமூகம்' என அடிக்கடி வர்ணிக்கப்படும் பெரும்பான்மை சமூகத்திற்கிடையேயான போராட்டங்களால் குறிக்கப்பட்டுள்ளது, மேலும் சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மை ஆட்சியின் முகத்தில் குறைந்த செல்வாக்கையும் ஓரங்கட்டலையும் எதிர்கொண்டன. இது  தமிழீழ விடுதலைப் புலிகளுடனான 30 ஆண்டுகால யுத்தத்தில் வெளிப்பட்டது . தமிழ் சமூகத்துக்கான தனியான தாயகத்திற்காகப் போராடி 2009 இல் இரத்தக்களரி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால் புலிகளின் இராணுவத் தோல்வி இனவாதத்தை தளர்த்தவில்லை. - இலங்கையில் எந்த வகையிலும் மத பதட்டங்கள்.

இலங்கையில் அரசியல் செய்வதற்கு ஒரு இன/மத 'மற்றவர்களுடன்' நிலையான பதற்றத்தை வளர்ப்பது இன்றியமையாதது போல் தெரிகிறது. எனவே, 2009 முதல், இஸ்லாமிய வெறுப்பு அதிகரித்து வருகிறது - இது கவனமாக வளர்க்கப்பட்டு, நீடித்த மற்றும் எளிதாக்கப்படுகிறது. இலங்கையில் இன அல்லது மத வன்முறைகள் எதுவும் அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சியின் உடந்தையின்றி - குறைந்த பட்சம் கண்ணை மூடிக்கொண்டு அல்லது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படவில்லை என்றால் அது மிகையாகாது.

 'இலங்கை அடையாளமான' 'ஒற்றுமை'க்கான பெரும்பாலான அழைப்புகள், சிறுபான்மையினரை 'கட்டுப்படுத்த' மற்றும் பெரும்பான்மை சமூகத்தின் கருணைமிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான பெரும்பான்மை ஆக்கிரமிப்பை பிரதிபலிக்கின்றன. தங்களைப் பிரபஞ்சம், ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்று கருதும் பல சிங்களவர்கள், இலங்கை போன்ற சமூகத்தில் மொத்த அடையாளத்தை நடைமுறைப்படுத்துவதில், மறைமுகமான விலக்குகளையும் வன்முறைகளையும் பார்க்க மாட்டார்கள். கோவிட்-19 மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மீதான அதன் தாக்கம், சிறுபான்மைச் சமூகங்களை - அல்லது பெரும்பான்மை சமூகத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் வேறு எந்த சமூகத்தையும் பேய்த்தனமாக சித்தரிப்பதில் வசதியாக இருக்கும் பெரும்பான்மை மனப்பான்மை இலங்கை சமூகத்திலும் அரசியலிலும் எந்த அளவிற்கு சாதாரணமாகிவிட்டது என்பதைக் காட்டுகிறது. .

13 வது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு

harini%20amarasuriya%202.jpg

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான NPP நிலைப்பாட்டை விளக்குமாறு கேட்டபோது, அமரசூரிய கூறினார் :

“தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இது முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ளது மற்றும் அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் , ஆனால் தேசிய பிரச்சனைக்கு இது ஒரு உறுதியான தீர்வாக இருக்குமா என்ற விவாதம் உள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கத்துடன் கூடிய அரசாங்கம் தேசியப் பிரச்சினைக்கான தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும், ஏனைய கட்சிகள் மீது எமக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் NPP யினால் மட்டுமே அதனைச் செய்ய முடியும்.

அவள் மேலும் தெரிவித்தாள்,

“அதிகாரப் பகிர்வைப் பொறுத்தவரை, தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து NPP உள்நாட்டில் ஒரு வலுவான விவாதத்தை நடத்தியது . நியாயமான தீர்மானம் அவசியம் என்பதை நாங்கள் அறிவோம். தற்போது 13A அரசியலமைப்பில் உள்ளது மற்றும் சிறுபான்மை சமூகம் அதை செயல்படுத்த எதிர்பார்க்கிறது. அதைக் கௌரவிக்க எண்ணுகிறோம். எவ்வாறாயினும், 13A சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியமில்லை என்று நாங்கள் நினைக்கிறோம், ஏனெனில் அவை வெவ்வேறு வழிகளில் அரசு தீர்க்க வேண்டிய ஒரு வகையான நிறுவனமயமாக்கப்பட்ட இனவாதத்தில் வேரூன்றியுள்ளன.

“NPP அதிக ஜனநாயகத்தை விரும்புகிறது; முடிவெடுக்கும் செயல்பாட்டில் மக்கள் அதிகம் ஈடுபட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், மேலும் அதிக மக்கள் ஈடுபாடு உள்ள வலுவான நாடாளுமன்ற செயல்முறையை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். பெரும்பான்மை ஆட்சிக்கு வழிவகுக்கும் ஜனநாயகம், சிறுபான்மை சமூகங்களை - அது இனமாகவோ, மதமாகவோ அல்லது வேறு எந்த வகையாக இருந்தாலும் எப்படி விலக்கி வைக்காது என்பதற்கு முறையான தீர்வு தேவை என்றும் நாங்கள் நினைக்கிறோம்.

அமரசூரியவின் உறுதிமொழி இருந்தபோதிலும், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் நிறுவப்பட்ட 13 வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு எதிராக அவரது கட்சியில் உள்ள மற்ற மூத்த அதிகாரிகள் வெளிப்படையாகப் பேசினர் . 1970களின் முற்பகுதியிலும் 1980களின் பிற்பகுதியிலும் ஜே.வி.பி அரசுக்கு   எதிராக இரண்டு கிளர்ச்சிகளை நடத்தியது. இவற்றில் பிந்தையது முக்கியமாக இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் வடக்கு-கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க முயன்ற 13வது திருத்தத்தின் பிரதிபலிப்பாகும். பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுமாயின் ஜே.வி.பி எதிர்ப்பதாக 2010 இல் திஸாநாயக்கவே  கூறினார் .

தொடர்புடைய கட்டுரைகள்: 
 
நிழழி இணைத்த இணைப்பை கூகிள் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரோஸ்வெல்ட் கூறிய ஒரு வாசகம் சரியாக நினைவில்லை, ஒரு பெரிய தடியினை வைத்தபடி மென்மையாக பேச வேண்டும் எனும் வாசகம் நினைவில் வருகிறது.

பெருமளவில் இந்த புதிய அரசு தொடர்பான நம்பிக்கையூட்டும் தகவல்கள் பெருமளவில் வெளிவந்து கொண்டுதானிருக்கிறது, இலங்கையில் இவ்வாறான நம்பிக்கையூட்டும் வாசகங்கள் தேர்தலுக்கு முன்பாக வெளிவந்துள்லதால் இது எங்கேயோ கேட்ட குரல் உணர்வினை ஏற்படுத்துகிறது, அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தினை கடந்தகாலத்தில் சந்திரிக்கா அம்மையார் ஏற்படுத்தியிருந்தார், அவர் கூட ஒரு இடதுசாரி பின்புல கட்சியினை கொண்டவர்தான்.

இன்னொரு அமெரிக்க ஜனாதிபதி கூறிய ஒரு கதை,  ஒரு கட்சி கூட்டத்தின் பின்னர் (இங்கு கட்சி முக்கியம் அல்ல) குறித்த கட்சியின் பேரினால் ஒரு சிறுவன் பூனைக்குட்டியினை விற்பனை செய்வதற்காக குறித்தகட்சி பெயரினை கூறி அந்த கட்சின்யின் பூனைக்குட்டியினை வாங்குமாறு வந்திருந்தவர்களிடம் விற்பனை செய்து கொண்டிருந்தான்.

அந்த மனிதர் எதிக்கட்சியின் கூட்டத்திற்கு சென்ற போது அதே சிறுவன் அந்த எதிர்க்கட்சியின் பெயரால் பூனைக்குட்டிகளை விற்பனை செய்து கொண்டிருந்தான், அவனிடம் நீதானே அந்த கட்சிக்கூட்டத்திலும் பூனைக்குட்டி விற்றாய் இந்த அந்தகட்சி பூனைக்குட்டிக்கும் இந்தக்கட்சி பூனைக்குட்டிக்கும் என்ன வித்தியாசம் என கேட்டார்.

அதற்கு அந்த பூனைக்குட்டிகள் கண் திறக்கவில்லை என கூறினான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, ஈழப்பிரியன் said:

ரசோதரனைப் பிடிப்பதென்றால் முதலில் என்னைக் கவனிக்கணும்.

உங்களை கவனித்து என்ன பலன்.?? அனுரவின். அமைச்சரவையில்  டக்ளஸ் இடமில்லை ஏனெனில்  அவர் பல்கலைகழகத்தில் படிக்கவில்லை   மேலும் அனுர படித்த காலத்தில் படித்துமிருக்க. வேண்டும்  அப்படியொருவர். 

ரசோதரன் தான்   அனுர   தமிழ் அமைச்சராக  இவரை நியமிக்கலாம் எனவே அமெரிக்காவிலிருந்து  எப்பவும்  போய் விடலாம் 🙏😂 

இந்த முறை இலங்கை பாராளுமன்றம் ஒரு பல்கலைக்கழகம் ஆகும்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

ஒன்றாக படிக்காவிட்டால் என்ன

படிப்பித்திருக்கலாம் அல்லவா?

Posted
2 hours ago, Kandiah57 said:

உங்களை கவனித்து என்ன பலன்.?? அனுரவின். அமைச்சரவையில்  டக்ளஸ் இடமில்லை ஏனெனில்  அவர் பல்கலைகழகத்தில் படிக்கவில்லை   மேலும் அனுர படித்த காலத்தில் படித்துமிருக்க. வேண்டும்  அப்படியொருவர். 

ரசோதரன் தான்   அனுர   தமிழ் அமைச்சராக  இவரை நியமிக்கலாம் எனவே அமெரிக்காவிலிருந்து  எப்பவும்  போய் விடலாம் 🙏😂 

இந்த முறை இலங்கை பாராளுமன்றம் ஒரு பல்கலைக்கழகம் ஆகும்.  

டக்ளஸ் யாழ் பல்கலைகழகத்தில் படித்தவர் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, nunavilan said:

டக்ளஸ் யாழ் பல்கலைகழகத்தில் படித்தவர் என நினைக்கிறேன்.

இல்லை, நுணா..!

வரதராஜப் பெருமாள் தான் அங்கு படித்தவர்…!

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, vasee said:

ரோஸ்வெல்ட் கூறிய ஒரு வாசகம் சரியாக நினைவில்லை, ஒரு பெரிய தடியினை வைத்தபடி மென்மையாக பேச வேண்டும் எனும் வாசகம் நினைவில் வருகிறது.

பெருமளவில் இந்த புதிய அரசு தொடர்பான நம்பிக்கையூட்டும் தகவல்கள் பெருமளவில் வெளிவந்து கொண்டுதானிருக்கிறது, இலங்கையில் இவ்வாறான நம்பிக்கையூட்டும் வாசகங்கள் தேர்தலுக்கு முன்பாக வெளிவந்துள்லதால் இது எங்கேயோ கேட்ட குரல் உணர்வினை ஏற்படுத்துகிறது, அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தினை கடந்தகாலத்தில் சந்திரிக்கா அம்மையார் ஏற்படுத்தியிருந்தார், அவர் கூட ஒரு இடதுசாரி பின்புல கட்சியினை கொண்டவர்தான்.

இன்னொரு அமெரிக்க ஜனாதிபதி கூறிய ஒரு கதை,  ஒரு கட்சி கூட்டத்தின் பின்னர் (இங்கு கட்சி முக்கியம் அல்ல) குறித்த கட்சியின் பேரினால் ஒரு சிறுவன் பூனைக்குட்டியினை விற்பனை செய்வதற்காக குறித்தகட்சி பெயரினை கூறி அந்த கட்சின்யின் பூனைக்குட்டியினை வாங்குமாறு வந்திருந்தவர்களிடம் விற்பனை செய்து கொண்டிருந்தான்.

அந்த மனிதர் எதிக்கட்சியின் கூட்டத்திற்கு சென்ற போது அதே சிறுவன் அந்த எதிர்க்கட்சியின் பெயரால் பூனைக்குட்டிகளை விற்பனை செய்து கொண்டிருந்தான், அவனிடம் நீதானே அந்த கட்சிக்கூட்டத்திலும் பூனைக்குட்டி விற்றாய் இந்த அந்தகட்சி பூனைக்குட்டிக்கும் இந்தக்கட்சி பூனைக்குட்டிக்கும் என்ன வித்தியாசம் என கேட்டார்.

அதற்கு அந்த பூனைக்குட்டிகள் கண் திறக்கவில்லை என கூறினான்.

தமிழர்களும் நல்ல பூனைகளை தேடும் எலிகளாகத்தான் உள்ளோம். எத்தனை தலைமுறை வலி. பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ரசோதரன் said:

விளம்பரம் கொஞ்சம் கூடிப் போயிட்டுதோ...........🤣.

குமாரசாமி அண்ணை, வெளியில இருந்து போன இரண்டு பேர்களை அங்கே போன மாதமும், அதற்கு முதல் மாதமும் போட்டுத் தள்ளினவர்கள். காணிப் பிரச்சனை என்று தான் இப்ப கதை வருகுது.......... காணி போனால் போகட்டும், அண்ணை............  

அதுவும் சரிதான்...😀

9 hours ago, ஈழப்பிரியன் said:

ரசோதரனைப் பிடிப்பதென்றால் முதலில் என்னைக் கவனிக்கணும்.

என்ன பெரிசு லொள்ளா? 😎
யாழ்களத்திலை இணைஞ்ச நாள் தொடங்கம் உங்களை கவனிச்சுக்கொண்டுதானே வாறன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, ரசோதரன் said:

அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர். 

புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.  

எங்களுக்கு ஆசிரியராகவும் டீன் ஆகவும் இருந்தவர். சிறந்தநிர்வாகியும் கூட

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, vasee said:

பெருமளவில் இந்த புதிய அரசு தொடர்பான நம்பிக்கையூட்டும் தகவல்கள் பெருமளவில் வெளிவந்து கொண்டுதானிருக்கிறது, இலங்கையில் இவ்வாறான நம்பிக்கையூட்டும் வாசகங்கள் தேர்தலுக்கு முன்பாக வெளிவந்துள்லதால் இது எங்கேயோ கேட்ட குரல் உணர்வினை ஏற்படுத்துகிறது,

அதில் வேடிக்கை என்ன என்றால் ஜேவிபி வெற்றி பெறுவதற்கு முன்பு வேறுவிதமாக சொன்ன தமிழர்களும் ஜேவிபியின் அரசசபை புலவர்களாக தற்போது மாறியது தான் 😂

  • Haha 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.