Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் யாழில் சந்திப்பு

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின், பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் க.துளசி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/309932

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 இல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கூட்டணியக 9 பேர் மட்டுமே யாழ் தேர்தல் மாவட்டத்திற்குப் போட்டியிடலாம். ஆனால் இந்தக் கூட்டணியி; 9 இற்கு மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றனவே.

எல்லோரும் நடக்கவே ஏலாமல் நடந்து போகிறார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
21 minutes ago, புலவர் said:

யாழ் மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 இல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கூட்டணியக 9 பேர் மட்டுமே யாழ் தேர்தல் மாவட்டத்திற்குப் போட்டியிடலாம். ஆனால் இந்தக் கூட்டணியி; 9 இற்கு மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றனவே.

எல்லோரும் நடக்கவே ஏலாமல் நடந்து போகிறார்கள்.

இவர்கள்... 7 பேர் பாராளுமன்றம்  போயும், என்னத்தை வெட்டி வீழ்த்துகின்றவர்கள்.
இவர்களுக்கு பாரளுமன்ற பதவி.... கௌரவத்துக்கும், பணம் சம்பாதிக்கவும், வயிறு வளர்க்கவும்தான் உதவியிருக்கு. 
animiertes-gefuehl-smilies-bild-0438.gif
பேசாமல்... வேலைக்குப் போய், உழைத்து சாப்பிடட்டும். 😂

Edited by தமிழ் சிறி
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு விடையம் சிலவேளை எல்லோருக்கும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தலாம்,

தாயகத்திலிருந்து வரும் செய்திகள் அவ்வளவு நல்லதாக இல்லை தவிர புலம்பெயர்தேசங்களிலிம் தமிழர்கள் மாற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். முதாலவ்து தாயகத்தில் எங்களது அரசியல்வாதிகளது தகிடிதித்தங்களால் வெறுப்படைந்தோர் குறிப்பாக இளையோர் அனுரவுக்கு வாக்களித்தல் என்ன எனும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

இரண்டாவது புலம்பெயர் சிங்களவர்களது ஒன்றுபட்ட நிலைப்பாடு அனுரவர பெரிதும் உதவியது அதை தாயகத்தில் உள்ள அவர்களது உறவுகளும் ஆமோதித்தனர். ஆனால் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களது உறவுகள் கூறும் அபிப்பிராயங்களுக்கு தாயகத்தில் வேறு விதமான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் உதாரணமாக படிப்பிப்பாட்டைவிட்டு வெளிநாட்டுக்குக் கழுவப் போனவர்கள் எங்களுக்குப் புத்தி சொல்லக்கூடாது எனும் சிந்தனை எல்லா அரசியல் தலைவர்களிலிருந்து அடிமட்ட வாக்காளன் வரைக்கும் இருக்குது என அறிய வருகிறது.

அனேகமாக இனிமேல் 

தமிழ் அரசியல்வாதிகளை வழிக்குக் கொண்டுவருவதாகில் அனுரவுக்கு வாக்களிப்பதே நல்லது என்பதே தாயகத்து மக்களது அபிப்பிராயம்

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேசுங்கள். நல்லதொரு விடயம். இளைஞர்களுக்கு வழி விட்டு அடுத்த கட்டங்களுக்கு நகராதுவிடின் .....???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, தமிழ் சிறி said:

இவர்கள்... 7 பேர் பாராளுமன்றம்  போயும், என்னத்தை வெட்டி வீழ்த்துகின்றவர்கள்.
இவர்களுக்கு பாரளுமன்ற பதவி.... கௌரவத்துக்கும், பணம் சம்பாதிக்கவும், வயிறு வளர்க்கவும்தான் உதவியிருக்கு. 

தமிழ் அரசியல்வாதிகள் என்று கொள்ளைகார கூட்டத்தை வளர்த்து வைத்து இருக்கிறம் .

34 minutes ago, Elugnajiru said:

தமிழ் அரசியல்வாதிகளை வழிக்குக் கொண்டுவருவதாகில் அனுரவுக்கு வாக்களிப்பதே நல்லது என்பதே தாயகத்து மக்களது அபிப்பிராயம்

பதவிக்கு வந்த ஒரு இரு நாட்களில் அவரின் செய்கைககளை பார்த்து முடிவுகள் பிழையாகிவிடும் பக்கத்தில் இந்தியா எனும் சகுனி இருக்கும்மட்டும் அந்த தீவு மக்களுக்கு விமோசனம் கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, விசுகு said:

பேசுங்கள். நல்லதொரு விடயம். இளைஞர்களுக்கு வழி விட்டு அடுத்த கட்டங்களுக்கு நகராதுவிடின் .....???

இந்த "தலைமையேற்கக் காத்திருக்கும்" இளைஞர்கள் யார்? ஒருவரையாவது சுட்டிக் காட்டுங்கள். இவர்களின் வழியை யார், எப்படி அடைத்துக் கொண்டு நிற்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Justin said:

இந்த "தலைமையேற்கக் காத்திருக்கும்" இளைஞர்கள் யார்? ஒருவரையாவது சுட்டிக் காட்டுங்கள். இவர்களின் வழியை யார், எப்படி அடைத்துக் கொண்டு நிற்கிறார்கள்?

அவர்கள் அனைவரும் நடந்து வரவே சிரமப்படுவதை பார்த்தபோது அவ்வாறு எழுதத் தோன்றியது. பார்க்கலாம் 

(சீரியசான விடயம் என்பதால் சிரிப்பு குறி இடவில்லை)

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

இவர்கள்... 7 பேர் பாராளுமன்றம்  போயும், என்னத்தை வெட்டி வீழ்த்துகின்றவர்கள்.
இவர்களுக்கு பாரளுமன்ற பதவி.... கௌரவத்துக்கும், பணம் சம்பாதிக்கவும், வயிறு வளர்க்கவும்தான் உதவியிருக்கு. 
animiertes-gefuehl-smilies-bild-0438.gif
பேசாமல்... வேலைக்குப் போய், உழைத்து சாப்பிடட்டும். 😂

அப்படியென்றால் வாக்கை யாருக்கு போடுவது,..    சுமத்திரனுக்கு???????? 🤣🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Elugnajiru said:

ஒரு விடையம் சிலவேளை எல்லோருக்கும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தலாம்,

தாயகத்திலிருந்து வரும் செய்திகள் அவ்வளவு நல்லதாக இல்லை தவிர புலம்பெயர்தேசங்களிலிம் தமிழர்கள் மாற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள். முதாலவ்து தாயகத்தில் எங்களது அரசியல்வாதிகளது தகிடிதித்தங்களால் வெறுப்படைந்தோர் குறிப்பாக இளையோர் அனுரவுக்கு வாக்களித்தல் என்ன எனும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

இரண்டாவது புலம்பெயர் சிங்களவர்களது ஒன்றுபட்ட நிலைப்பாடு அனுரவர பெரிதும் உதவியது அதை தாயகத்தில் உள்ள அவர்களது உறவுகளும் ஆமோதித்தனர். ஆனால் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களது உறவுகள் கூறும் அபிப்பிராயங்களுக்கு தாயகத்தில் வேறு விதமான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் உதாரணமாக படிப்பிப்பாட்டைவிட்டு வெளிநாட்டுக்குக் கழுவப் போனவர்கள் எங்களுக்குப் புத்தி சொல்லக்கூடாது எனும் சிந்தனை எல்லா அரசியல் தலைவர்களிலிருந்து அடிமட்ட வாக்காளன் வரைக்கும் இருக்குது என அறிய வருகிறது.

அனேகமாக இனிமேல் 

தமிழ் அரசியல்வாதிகளை வழிக்குக் கொண்டுவருவதாகில் அனுரவுக்கு வாக்களிப்பதே நல்லது என்பதே தாயகத்து மக்களது அபிப்பிராயம்

எதிர்வரும் மாவீரர் தினத்தில் இலங்கை சனாதிபதி காலிமுகத்திடலில்,  மதத் தலைவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஒரு வாழைத்தண்டில் ஒரு சிட்டி விளக்கில், ஆயுதப் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒரு அஞ்சலி செலுத்தினால் அத்துடன் UN விசாரணைகளும் உள்ளூர் அரசியல்வாதிகளின் பிரச்சனையும் முடிவுக்கு வரும். 

நிலைமை அப்படி மாறிக்கொண்டிருக்கிறது. 

இனிவரும் காலம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிம்மசொற்பனமாக அமையும். அவர்கள் கத்தியில் நடக்க வேண்டி ஏற்படும். 

அப்போது யார் சரி யார் பிழை என்று தெரிய வரும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Elugnajiru said:

தமிழ் அரசியல்வாதிகளை வழிக்குக் கொண்டுவருவதாகில் அனுரவுக்கு வாக்களிப்பதே நல்லது என்பதே தாயகத்து மக்களது அபிப்பிராயம்

நிச்சயமாக அவர் சட்டத்தின் ஆட்சியை உறுதிபடுத்தினால். குற்றவாளிகளுக்கு இன மத  கல்வி  பணம். போன்ற வித்தியாசம் இல்லாதது அனுவருக்கும். ஒரே மாதிரியான ஆட்சியை தருவாராயின். 

100 % அவருக்கு வாக்கு போடலாம்   🙏🥰

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, Justin said:

இந்த "தலைமையேற்கக் காத்திருக்கும்" இளைஞர்கள் யார்? ஒருவரையாவது சுட்டிக் காட்டுங்கள். இவர்களின் வழியை யார், எப்படி அடைத்துக் கொண்டு நிற்கிறார்கள்?

மாவை    சுமத்திரன்  சுரேஷ் செலவம். சிறிதரன்.  அரியம் யோகேஷ்வரன்.    டக்ளஸ் விக்கி. .......இவர்கள் சுயமாக   தன்னிச்சையாக பதவி விலகும் போது    அந்த இடத்துக்கு வரும் இளைஞர்களை இனம்  காண முடியும்   இந்த வயோதிபர்கள்.  பதவி விலகுவார்களா?? 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, Kandiah57 said:

அப்படியென்றால் வாக்கை யாருக்கு போடுவது,..    சுமத்திரனுக்கு???????? 🤣🤪

எனக்கு… கெட்ட கோவம், வரப் பண்ணாதேங்கோ… 😂 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுராவின் கட்சிக்கு தமிழ் பிரதேசங்களில் ஒரு சில தொகுதிகளாவது வரும் பாராளுமன்ற தேர்தலில் கிடைக்க வேண்டும்.  அவ்வாறு தெரிவு  செய்யப்படுபவர் கல்வி அறிவுள்ள நேர்மையான இளையவராக இருக்கவேண்டும். பழைய கறள் கட்டிய வெற்று கோஷங்களுடன்  மாயைகளை பேசுபவர்கள் வயதில் இளையவர் என்றாலும் அவரை மக்கள் நிராகரிக்க வேண்டும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, Kandiah57 said:

அப்படியென்றால் வாக்கை யாருக்கு போடுவது,..    சுமத்திரனுக்கு???????? 🤣🤪

அட கோமாளியே விடுங்கையா கட்டு சோறு க்குள்  புகுந்த பெருச்சாளி அது .

2 minutes ago, island said:

அனுராவின் கட்சிக்கு தமிழ் பிரதேசங்களில் ஒரு சில தொகுதிகளாவது வரும் பாராளுமன்ற தேர்தலில் கிடைக்க வேண்டும்.  அவ்வாறு தெரிவு  செய்யப்படுபவர் கல்வி அறிவுள்ள நேர்மையான இளையவராக இருக்கவேண்டும். பழைய கறள் கட்டிய வெற்று கோஷங்களுடன்  மாயைகளை பேசுபவர்கள் வயதில் இளையவர் என்றாலும் அவரை மக்கள் நிராகரிக்க வேண்டும். 

உங்கள் சிந்தனை வலுபெற இறைவன் ஆசி உண்டாகட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, island said:

அனுராவின் கட்சிக்கு தமிழ் பிரதேசங்களில் ஒரு சில தொகுதிகளாவது வரும் பாராளுமன்ற தேர்தலில் கிடைக்க வேண்டும்.  அவ்வாறு தெரிவு  செய்யப்படுபவர் கல்வி அறிவுள்ள நேர்மையான இளையவராக இருக்கவேண்டும். பழைய கறள் கட்டிய வெற்று கோஷங்களுடன்  மாயைகளை பேசுபவர்கள் வயதில் இளையவர் என்றாலும் அவரை மக்கள் நிராகரிக்க வேண்டும். 

வருவார்கள்’’ 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Elugnajiru said:

ஒரு விடையம் சிலவேளை எல்லோருக்கும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தலாம்,

இரண்டாவது புலம்பெயர் சிங்களவர்களது ஒன்றுபட்ட நிலைப்பாடு அனுரவர பெரிதும் உதவியது அதை தாயகத்தில் உள்ள அவர்களது உறவுகளும் ஆமோதித்தனர்.

புலம் பெயர் சிங்களவர்கள் யார் தாயக சிங்களவர்களுக்கு பாடம் எடுக்க?🤣
சிங்களவர்கள் தாயகத்திலிருந்து உயிருக்கு பயந்து, ஒடி வந்து விட்டு,(இதில் சில சிங்கள‌ படை அதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடக்கம்) இங்கிருந்து எப்படி பாடம் எடுக்கலாம்..🤣
அவர்களது பிள்ளைகள் இங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தாயக மக்களின் பிள்ளைகளை வரிசையில் நின்று பாண் வாங்க சொல்லுவது என்ன நியாயம்.🤣
அவர்களது பிள்ளைகள் சொகுசு கார்கள் ஒன்றுக்கு இரண்டு வைத்து கொண்டு எப்படி சிங்கள தாயக  பிள்ளைகள் ஒரு கார் வைத்திருப்பது தான் நியாயம் என சொல்லலாம்...🤣

52 வருடங்களாக இவர்களது கட்சி இரத்தம் சிந்தி ,உயிர் தியாகம் செய்து ,சித்திரைவதைப்பட்டு ,பல ஜனநாயக வழிகளில் போராடி(இதில் வன்முறையை இந்த கட்சியினர் பாவித்தது வேறு கதை) இப்பொழுது அந்த கட்சியை சேர்ந்தவர் நாட்டின் ஜனதிபதியாக வந்திருக்கிறார் பாராட்டலாம்...

இதற்கு சிங்கள டயஸ்பாரக்கள் உரிமை கோருவது எற்புடையது அல்ல...
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

இந்த "தலைமையேற்கக் காத்திருக்கும்" இளைஞர்கள் யார்? ஒருவரையாவது சுட்டிக் காட்டுங்கள். இவர்களின் வழியை யார், எப்படி அடைத்துக் கொண்டு நிற்கிறார்கள்?

இந்த சொத்தி கதையத்தான் 14 வருடமாய் சொல்கிறீர்கள் ஏன் நீங்கள் போய் நிக்க வேன்டியதுதானே ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, island said:

பழைய கறள் கட்டிய வெற்று கோஷங்களுடன்  மாயைகளை பேசுபவர்கள் வயதில் இளையவர் என்றாலும் அவரை மக்கள் நிராகரிக்க வேண்டும். 

அது மிகவும் கவனத்தில் எடுத்து கொள்ளபட வேண்டிய உண்மை.தமிழ் அரசியல்வாதிகளிடம்  மாயைகள் வெற்று கோஷங்களில் நன்றாக பயிற்சி பெற்ற இளையவர்களும் உள்ளனர் அவர்களை நிராகரிக்க வேண்டும்.

1 hour ago, island said:

அனுராவின் கட்சிக்கு தமிழ் பிரதேசங்களில் ஒரு சில தொகுதிகளாவது வரும்

ஆரம்பத்தை பார்த்தால் கூட வரும் போல் தெரிகின்றதே எனக்கு வடசப்பில் வந்த தமிழ்விடியோக்களில் முன்பு சுயநிர்ணய சுதந்திர தாயகம் என்ற யூரியுப்பர்கள் இப்போ தலை கிழாக மாறி இலங்கை அனுரா தலைவன் என்கின்றார்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கே அரியண்ணை பற்றி தேடுதல்களையும் ஆய்வுகளையும் பார்க்கும் போது அவரை தலைவராக ஏற்க எல்லோரும் தயாராகி விட்டது தெரிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

இவர்கள்... 7 பேர் பாராளுமன்றம்  போயும், என்னத்தை வெட்டி வீழ்த்துகின்றவர்கள்.
இவர்களுக்கு பாரளுமன்ற பதவி.... கௌரவத்துக்கும், பணம் சம்பாதிக்கவும், வயிறு வளர்க்கவும்தான் உதவியிருக்கு. 
animiertes-gefuehl-smilies-bild-0438.gif
பேசாமல்... வேலைக்குப் போய், உழைத்து சாப்பிடட்டும். 😂

இந்த அரசு நிலைத்தால், அது நடக்கக்கூடியதல்ல. ஒவ்வொருவன் உண்ணும் உணவுக்கும் கஸ்ரப்பட்டே உண்ணவேண்டும். ஆதலால் இந்த அரசை நிலைக்க விடமாட்டார்கள், சும்மா இருந்து வயிறு வளர்த்தவர்கள், லஞ்சம் பெற்றவர்கள். விசேடமாக லஞ்சம், ஊழல் ஒழிப்பு, உழைப்பே முக்கியமாக கருதப்படும். இந்தியாவின் நிலையை சீனா முழுமையாக எடுக்கும். இந்த அரசில் இவர் எடுக்கும் முயற்சிகள் பாராட்டப்படவேண்டியதாயினும் அவசரம் எல்லாவற்றையும் தலை கீழாக்கிவிடும். நாட்டை சுரண்டியதுகள் சும்மா இராதுகள். இனவாதம், ஊழல் கருவிலேயே ஊறி விருட்ஷமாய் நிக்கிறது. அதை  அதன் பாட்டில் போய் மெதுமெதுவாகவே களைய வேண்டும். எனக்கென்னவோ நேர்மையான தேர்தலை நடத்த, மாற்றங்களை ஏற்படுத்த போய் கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்து விடுவாரோ என தோன்றுகிறது.

சிறியர் விசுக்கிற விசையை பாத்தா ஒருவரும் தாங்க மாட்டார்கள். இனிமேல் வெளிநாட்டுக்கும் தப்பி ஓட முடியாதே. அரசியல் வாதிகளின் பெஞ்சன் எல்லாம் இனி குறைக்கப்பட்டு, அவர்கள் ஆற்றிய சேவையை கணக்கீடு செய்து அதற்கு தகுந்தவாறு வரையறை செய்தால்; நாடு முன்னேறும், மக்களின் நிலை புரியும் இவர்களுக்கு. மக்களின் பணத்தில் இவர்கள் சொகுசு வாழ்க்கை, மக்கள் அடிமை வாழ்வு.  

14 minutes ago, விசுகு said:

இங்கே அரியண்ணை பற்றி தேடுதல்களையும் ஆய்வுகளையும் பார்க்கும் போது அவரை தலைவராக ஏற்க எல்லோரும் தயாராகி விட்டது தெரிகிறது 

ஐயோ! களத்தில் கலவரம் வெடிக்கப்போகுது, நான் ஓட்டம்.

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

இந்த சொத்தி கதையத்தான் 14 வருடமாய் சொல்கிறீர்கள் ஏன் நீங்கள் போய் நிக்க வேன்டியதுதானே ?

அவர் இளைஞர் இல்லை   🙏.  🤣

2 hours ago, பெருமாள் said:

அட கோமாளியே விடுங்கையா கட்டு சோறு க்குள்  புகுந்த பெருச்சாளி அது .

என்னுடைய கேள்வி வாக்கை யாருக்கு போடுவது??? என்பது தான்   

2 hours ago, தமிழ் சிறி said:

எனக்கு… கெட்ட கோவம், வரப் பண்ணாதேங்கோ… 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, விசுகு said:

இங்கே அரியண்ணை பற்றி தேடுதல்களையும் ஆய்வுகளையும் பார்க்கும் போது அவரை தலைவராக ஏற்க எல்லோரும் தயாராகி விட்டது தெரிகிறது 

இது பொய்     சுமத்திரனும். ரணில் மாதிரி   பாராளுமன்றம் இனிமேல் வரப்போவதில்லை என்று அறிவித்தல் எப்படி இருக்கும்  ??   

சஜித் கட்சியின் முல்லைத்தீவு அமைப்பளார். கைதடியை சேர்ந்த இளைஞர்    பல்கலைக்கழகம். வரை படித்தவர்.  கட்சிக்காக நன்றாக வேலை செய்துள்ளார்   அவருடைய பிரச்சாரகர்கள் பற்றி முகநூலில். பதிவார்.  200 கிராமங்களில் மக்கள் சந்திப்புகளை நடத்தி உள்ளார்   இதனால் தான்  சஜித் கட்சி   அங்கே வென்றது   முதல் முதலாக   கைதடி மகன்  ஒருவர் பாராளுமன்றம் போகும் வாய்ப்புகள் உண்டு. மகிழ்ச்சியே 🙏🙏🥰.இவரின் பெயர் லக்சயன்.  தகப்பன். முத்துகுமாரசாமி    கொழும்பு இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர்   

 சுமத்திரன். தான் சொல்லி தான்   மக்கள் வாக்கு போட்டார்கள் என்பது சிரிப்புக்குரியது 🤣

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காரணங்கள் வெவ்வேறு இருக்க, இவரொருவர் தான் சொல்லித்தான் நடந்ததென்கிறார். பாராளுமன்ற தேர்தலில் தெரியும் இவரின் விலாசம் எங்கே என்று. 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.