Jump to content

பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!

Vhg அக்டோபர் 02, 2024
1000344843.jpg

யாழ்ப்பாண பகுதியில் வசித்து வந்த 22 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவர் 47 வயதான கனடா தமிழ் குடும்பஸ்தருடன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் தலைமறைவான மாணவியின் தந்தையின் நெருங்கிய நண்பர் என தெரியவருகின்றது.

கனடா செல்வதற்கு முன்னரே வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இருவரும் பாடசாலை நண்பர்களாகவும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர்.

அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து சென்ற சந்தேக நபர் தனது பாடசாலை நணபனான மாணவியின் தந்தையுடன் பல இடங்களுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந் நிலையிலேயே சந்தேக நபர் தனது நண்பனின் மகளுடன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் காணாது தேடி மாணவியின் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதே மாணவி தான் சந்தேக நபருடன் குடும்பம் நடாத்திவருவதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னைத் தேட வேண்டாம் எனவும் தனது தாயாருக்கு கூறியதாகத் தெரியவருகின்றது.

சந்தேக நபரான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் தங்கியிருந்த அக்காவின் வீட்டுக்குச் சென்ற தந்தை அங்கு கலவரத்தில் ஈடுபட்டதுடன் சந்தேக நபரின் பொருட்களை அடித்து உடைத்து அட்டகாசம் செய்ய முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
https://www.battinatham.com/2024/10/blog-post_2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் நம்பிக்கைத் துரோகி இந்த நபர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறுத்து தொங்க விடணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாலி said:

பெரும் நம்பிக்கைத் துரோகி இந்த நபர்!

இவர் மட்டுமல்ல அந்த நண்பரின் மகளும் தான்   

தன்னுடைய பெற்றோருக்கும்.   

தகப்பனின். நண்பனின்   மனைவிக்கும்.  

நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

அறுத்து தொங்க விடணும். 

நீங்கள் எழுதலாம்  ஆனால் நடைமுறை சாத்தியமற்ற விடயம்  உங்களால் அந்த நபருடைய உடம்பில் கை வைக்க முடியாது 

இந்த பெண்  அதாவது அவரின் நண்பனின் மகள்  

ஒரு. பல்கலைக்கழக மாணவியர்  ...ஒன்றும் பால்குடி. பிள்ளை இல்லை. அந்த பல்கலைக்கழக மாணவி. 

பலாத்காரம் செய்யப்படவில்லை 

அவளுக்கு இந்த நபர்  ஏற்கனவே திருமணம் செய்து  மனைவி பிள்ளைகள் கனடாவில் இருப்பது நன்கு தெரியும்  

அவளது  பூரண விருப்பத்துடன் தான்  இந்த நிகழ்வுகள் நடந்து உள்ளது”  ஆகவே  நீங்கள் அறுக்கும் போது   அந்த பல்கலைக்கழக மாணவி.  உங்களை சும்மா விடப்போவதில்லை 🙏

எங்கள் சமூகத்தில்   சீதனம். சாதி ......போன்ற பிரச்சனையால்   குறிப்பிடதக்க  எண்ணிக்கை பெண்கள் 40 வயது 50வயது   திருமணம் செய்யமுடியவில்லை  

ஏழை குடும்பங்களில். வாழும் பெண்கள்  15. வயதிலேயே  எனக்கு திருமணம் நடக்குமா??   என்று சிந்திக்க தொடங்கி விடுவார்கள்  இதற்கான தீர்வு உங்களிடம் உண்டா ???

குறிப்பு,..நான் இதனை ஆதரிக்கவில்லை     2017. ஆம் ஆண்டு இலங்கையில் நின்ற போது  எனது மைத்துனர் முறையனவரின். மனைவியின் தமக்கை   வயது 45    திருமணம் செய்யவில்லை  வறுமைப்பட்ட குடும்பம்   அவள் சொன்னாளாம். நான் திருமணம் செய்யவில்லை  தங்கச்சிக்கு   திருமணத்தை செய்து வையுங்கள் என்று    🙏

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் செய்திக்கும், முக்கியமான நிகழ்வுகளுக்கும் பஞ்சமா? இப்படியான தனிப் பட்ட குடும்ப நிகழ்வுகளையெல்லாம் மெனக்கெட்டு கிசு கிசு பாணியில் செய்தியாக்கி, அதைப் பகிர்ந்து - தொழில் இல்லாமல் சும்மா நிறையப் பேர் இருக்கிறார்கள் போல இருக்கு😂!

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

- தொழில் இல்லாமல் சும்மா நிறையப் பேர் இருக்கிறார்கள் போல இருக்கு😂!

நான் அப்படி நினைக்கவில்லை இதற்கு முன் உங்களை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தாயகத்தில் செய்திக்கும், முக்கியமான நிகழ்வுகளுக்கும் பஞ்சமா? இப்படியான தனிப் பட்ட குடும்ப நிகழ்வுகளையெல்லாம் மெனக்கெட்டு கிசு கிசு பாணியில் செய்தியாக்கி, அதைப் பகிர்ந்து - தொழில் இல்லாமல் சும்மா நிறையப் பேர் இருக்கிறார்கள் போல இருக்கு😂!

செய்தியை,..இணைப்பை அகற்றி விடுங்கள்    பிரச்சனை இல்லை  

கவலையும் இல்லை 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

செய்தியை,..இணைப்பை அகற்றி விடுங்கள்    பிரச்சனை இல்லை  

கவலையும் இல்லை 🙏

நாங்க தப்பி வந்து விட்டோமா ஜஸ்ரின் சொல்வது போல் இந்த திரியை நிர்வாகம் நீக்கி விடுங்க புலம் பெயருக்கு தேவை அற்ற செய்தியா இது ? 😃

******

12 hours ago, Justin said:

தாயகத்தில் செய்திக்கும், முக்கியமான நிகழ்வுகளுக்கும் பஞ்சமா? இப்படியான தனிப் பட்ட குடும்ப நிகழ்வுகளையெல்லாம் மெனக்கெட்டு கிசு கிசு பாணியில் செய்தியாக்கி, அதைப் பகிர்ந்து - தொழில் இல்லாமல் சும்மா நிறையப் பேர் இருக்கிறார்கள் போல இருக்கு😂!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் யாரோடு ஓடிப்போனது என்பதெல்லாம் ஒரு செய்தி? 

🤮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகளை செய்தியாக்குவது, அந்தக் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கு இழுத்து தலைகுனிய வைப்பது எந்த வகையில் ஊடக தர்மம் ஆகும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோல் சில வாரங்களுக்கு முன் சுவிசை சேர்ந்த 52 வயது ஒரு நபர் ஒருவர் பணம் இழந்ததாக செய்தி வந்ததே.

இது சிரிக்க கூடிய ஒரு விடயமல்ல. சிந்திக்க வேண்டியது. நான் இதை பஸ்ஸிலும், இரயிலிலும் பயணிக்கும் போது இவ்வாறான நிறைய ஜோடிகளை நிறைய காண்கிறேன். இது தமிழர் மத்தியில் குறைவென்றாலும் சிங்களவர் மத்தியில் அதிகம். இது வீட்டில் துணையிடம் கிடைக்காத "ஏதோ" ஒன்று இந்த உறவுவின் மூலம் இவர்களுக்கு கிடைக்கின்றது.  

இதை பற்றி நான் இணயத்தில் தேடியபோது (The Psychology Behind Why Younger Women Prefer Older Men) சுவரஸ்யமான விடையங்களை அறிந்து கொண்டேன். 
முக்கியாமாக 50, 52 அஜித் வய‌தில் இருக்கும் ஆண்களிடம் இருக்கும் நிதானமும், பொறுமையும், முதிர்ச்சியும், நிதி நிர்வாகத்தில் இவர்கள் சுதந்திரமாக இருப்பதுமே இவ்வாறு  இருக்கும் ஆண்களை நோக்கி இந்த இளம் பெண்கள் ஈர்க்கப்பட காரணம்.   

ஆனாலும் ஒரு பெண்குழந்தையின் தகப்பனாக எனக்கு இதை ஏற்ற்றுக்கொள்ள முடிவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

தாயகத்தில் செய்திக்கும், முக்கியமான நிகழ்வுகளுக்கும் பஞ்சமா? இப்படியான தனிப் பட்ட குடும்ப நிகழ்வுகளையெல்லாம் மெனக்கெட்டு கிசு கிசு பாணியில் செய்தியாக்கி, அதைப் பகிர்ந்து - தொழில் இல்லாமல் சும்மா நிறையப் பேர் இருக்கிறார்கள் போல இருக்கு😂!

இது ஒரு சமூகச் சீரழிவை வெளிக்கொண்டுவரும் மஞ்சள் பத்திரிகைச் செய்தி. புலம்பெயர் நாடுகளில் இருந்து தாயகத்திற்கு விடுமுறையில் போகும் ஒரு சிலர் தமது பகட்டாலும், பணத்தை வீசிச் செலவழித்தும் இவ்வாறு நடப்பது தொடர் செய்திகளாக வருகின்றது. அடுத்த சம்மர் சீஸனிலும் இன்னும் அதிகரிக்கும்!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கில், குறிப்பாக uk இல் (uk இப்போதும் பழமைசார் கலாசாரம்), ஆண் - பெண் நண்பர் இல்லாமல் இருப்பது மருத்துவ, வளர்ச்சி குறைபாடாக நோக்கப்படுகிறது.

ஆனால், ஓடிப்போவது (அதற்கான ஆங்கிலம், elope,  eloping) (எம்மைப்போல) இழிவு, இளக்ககரமாகவும், ஓடிப்போவரை மட்டும் அல்லாது, (எம்மை போல) முழுக்குடும்பத்தையும் இளக்ககரமாக தெரிந்தவர்கள், உள்ளூர் சமூகம் பார்க்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகள் வெளியே கொண்டுவரப்படாது என்பவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.😁 

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இப்படியான செய்திகள் வெளியே கொண்டுவரப்படாது என்பவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.😁 

நல்ல செ அடி🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இப்படியான செய்திகள் வெளியே கொண்டுவரப்படாது என்பவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.😁 

14 minutes ago, உடையார் said:

நல்ல செ அடி🤣🤣

முக்கியமான செய்திகள் இருக்கும் போது இது தேவையா என்பது தான் என் கேள்வி!

ஆனால், நேரடியாக பல இடங்களில் கருத்துக்களுக்கு முகம் கொடுக்காமல் ஓடும் "வீர தீரர்கள் " பெருமாளின் தலைமையில் திரண்டிருக்கிறார்கள் போல தெரிகிறதே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

முக்கியமான செய்திகள் இருக்கும் போது இது தேவையா என்பது தான் என் கேள்வி!

ஆனால், நேரடியாக பல இடங்களில் கருத்துக்களுக்கு முகம் கொடுக்காமல் ஓடும் "வீர தீரர்கள் " பெருமாளின் தலைமையில் திரண்டிருக்கிறார்கள் போல தெரிகிறதே😂

இள வயது பெண்ணை இந்த புழம் பெயர் கெழுப்பெடுத்த கிழடுகள் தங்கள் பண பலத்தின் வலையில் சிக்க வைத்து, அவர்களின் வாழ்கையே அழித்து நல்ல செயல், இதற்கு ஊடகங்கள் முக்கியம் கெடுத்து விழிப்புணர் செய்வது மிகவும் தவறு என்று செல்ல வருகின்றீர்களா Justin

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

முக்கியமான செய்திகள் இருக்கும் போது இது தேவையா என்பது தான் என் கேள்வி!

ஆனால், நேரடியாக பல இடங்களில் கருத்துக்களுக்கு முகம் கொடுக்காமல் ஓடும் "வீர தீரர்கள் " பெருமாளின் தலைமையில் திரண்டிருக்கிறார்கள் போல தெரிகிறதே😂

2 hours ago, குமாரசாமி said:

இப்படியான செய்திகள் வெளியே கொண்டுவரப்படாது என்பவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.😁 

நீங்கள் தான குசா சொன்ன ஆள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

தாயகத்தில் செய்திக்கும், முக்கியமான நிகழ்வுகளுக்கும் பஞ்சமா? இப்படியான தனிப் பட்ட குடும்ப நிகழ்வுகளையெல்லாம் மெனக்கெட்டு கிசு கிசு பாணியில் செய்தியாக்கி, அதைப் பகிர்ந்து - தொழில் இல்லாமல் சும்மா நிறையப் பேர் இருக்கிறார்கள் போல இருக்கு😂!

இப்படிப்பட்டவர்கள் எமது சமுதாயத்தை சீரழிக்கும் போது, உங்களின் கருத்து புல்லரிக்கின்றது அடக்கி வாசியுங்களென்று; 

இப்படி இன்னும் பல புலம் பெயர் பண கெழுப்பெடுத்த கிழடுகள் வருவார்கள், அவர்கள் இளவயதில் இருக்கும் பெண்களை  பணத்தையும்  காட்டி என்னவும் செய்யலாம் ஊடகங்களே அடக்கி வாசியுங்கள் என்று சொல்ல வருகின்றீர்களா,

முக்கியமான செய்திகளும் ஊர்புதினத்தில் இருப்பதும் உங்களுக்கு நன்றாக தெரியமென நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.