Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி

Vhg அக்டோபர் 20, 2024
 
1000360008.jpg

தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்று (19-10-2024) மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை சீராகி வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜாவை அரசியல்வாதிகள் சிலர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

தமிழ் தேசிய ஒற்றுமை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தகர் பிருந்தாவன் மற்றும் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன் ஆகியோரே இவ்வாறு சென்று நலம் விசாரித்துள்ளனர்.

இதன்போது மாவை சேனாதிராஜாவின் உடல்நலம் தொடர்பாக விசாரித்ததோடு அவருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளனர்.

இவர் தொடர்ச்சியாக நலமோடு தமிழ் தேசிய ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.battinatham.com/2024/10/blog-post_958.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் முடிவை பார்க்கணும் தலைவா.

வெயிற் வெயிற் வெயிற்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

தேர்தல் முடிவை பார்க்கணும் தலைவா.

வெயிற் வெயிற் வெயிற்.

மாவைக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்காததால்.. 
ஏற்பட்ட மன உழைச்சலால்  சுகவீனம் ஏற்பட்டிருக்கலாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

மாவைக்கு வேட்பாளர் ஓட்டியலில் இடம் கிடைக்காததால்.. 
ஏற்பட்ட மன உழைச்சலால்  சுகவீனம் ஏற்பட்டிருக்கலாம்.

பொறுத்த பொறுத்த நேரங்களில் அண்ணனுக்கு வருத்தம் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஈழப்பிரியன் said:

பொறுத்த பொறுத்த நேரங்களில் அண்ணனுக்கு வருத்தம் வருகிறது.

464143127_9232603430133755_7782697383548

நல்லாய்  இருந்த மனுசனை, 
ஆஸ்பத்திரியில்  போய் படுக்க வைத்த பெருமை சுமந்திரனையே சேரும்... 

Prashanthan Navaratnam

  • கருத்துக்கள உறவுகள்

ABA6.jpg

மாவைக்கு ஏதாவது நடந்தால்... சுமந்திரனின் கொடும்பாவி கட்டி எரிக்கப்படும்.
-மாவை ரசிகர் மன்றம்.-
ஜேர்மன் கிளை.  😂

@Kandiah57@குமாரசாமி, @nochchi,  @Paanch🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

464143127_9232603430133755_7782697383548

நல்லாய்  இருந்த மனுசனை, 
ஆஸ்பத்திரியில்  போய் படுக்க வைத்த பெருமை சுமந்திரனையே சேரும்... 

Prashanthan Navaratnam

பூமிக்கும் பாரம், சோற்றிற்கும் கேடாய் இருப்பதைவிட போய்ச் சேரலாம்.  

எத்தனை இலட்சம் மக்களை நடுத் தெருவில் இவரும் இவர்களைச் சேர்ந்தவர்களும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்?  

எங்கள் மக்கள் சிந்திய இரத்தில் சிங்களத்திற்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ அதேயளவு பங்கு இவர்களுக்கும் இருக்கிறது. 

போய்ச் சேரட்டும்.  

😏

19 minutes ago, தமிழ் சிறி said:

ABA6.jpg

மாவைக்கு ஏதாவது நடந்தால்... சுமந்திரனின் கொடும்பாவி கட்டி எரிக்கப்படும்.
-மாவை ரசிகர் மன்றம்.-
ஜேர்மன் கிளை.  😂

தலைவர் தமிழ்சிறீ. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

ABA6.jpg

மாவைக்கு ஏதாவது நடந்தால்... சுமந்திரனின் கொடும்பாவி கட்டி எரிக்கப்படும்.
-மாவை ரசிகர் மன்றம்.-
ஜேர்மன் கிளை.  😂

@Kandiah57@குமாரசாமி, @nochchi,  @Paanch🤣

அழைப்புக்கு நன்றி, நான் வருவேன்.  எந்த இடத்தில் என்பதை இரகசியமாகச் வைத்திருக்கவும். பிறகு சும் விசுவாசிகள் கும்மியடித்துவிடுவார்கள். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

31 minutes ago, Kapithan said:

பூமிக்கும் பாரம், சோற்றிற்கும் கேடாய் இருப்பதைவிட போய்ச் சேரலாம்.  

இதைவிட ஒரு மனிதன் வன்மத்தோடு சிந்திக்கமுடியாது. உடல்நலம் குன்றிருக்கும் வேளையில் ஒரு மனிதனாகவேணும் சிந்திக்க வேண்டாமா? அரசியல் என்பது ஒவ்வொருவர் பார்வை பட்டறிவின்பாற்பட்டு பொதுநலம் சார்ந்தது. ஒருவர் சரியோ தவறோ தமிரது அரசியலில் இருந்தார் தற்போது ஒதுங்கி இருக்கிறார். முந்தநாள் வந்தசிலர் தமிழினத்தைக் காட்டிக்கொடுத்ததைவிட திரு.மாவையவர்கள் ஒன்றும் செய்யவில்லைத்தானே.
நன்றி.நன்றி.நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nochchi said:

அழைப்புக்கு நன்றி, நான் வருவேன்.  எந்த இடத்தில் என்பதை இரகசியமாகச் வைத்திருக்கவும். பிறகு சும் விசுவாசிகள் கும்மியடித்துவிடுவார்கள். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

Sumanthiran கொடும்பாவி எரிப்பதற்கு ஆயத்தம்  செய்கிறீர்களோ? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nochchi said:

இதைவிட ஒரு மனிதன் வன்மத்தோடு சிந்திக்கமுடியாது. உடல்நலம் குன்றிருக்கும் வேளையில் ஒரு மனிதனாகவேணும் சிந்திக்க வேண்டாமா? அரசியல் என்பது ஒவ்வொருவர் பார்வை பட்டறிவின்பாற்பட்டு பொதுநலம் சார்ந்தது. ஒருவர் சரியோ தவறோ தமிரது அரசியலில் இருந்தார் தற்போது ஒதுங்கி இருக்கிறார். முந்தநாள் வந்தசிலர் தமிழினத்தைக் காட்டிக்கொடுத்ததைவிட திரு.மாவையவர்கள் ஒன்றும் செய்யவில்லைத்தானே.
நன்றி.நன்றி.நன்றி

 இத்தனை இலட்சம்  மக்களின் சிந்தப்பட்ட இரத்தத்திற்கும் மாவையரருக்கும்  பொறுப்பில்லை  என்கிறீர்களா? 

மரணத்தின் தறுவாயில் இருக்கும் அல்லது மூப்படைந்த மனிதர்களின் தவறுகளைத் தோண்டுவது எங்கள் சமூக வழக்கில் இல்லை என்பது உண்மைதான். ஆனால் மாவையர் தற்போதும் சிந்திக்கும்  ஆற்றலில் குறைபாடு ஏதுமற்றவர். தனது தவறுகளை அவர் ஒருபோதும்  ஏற்கவில்லை. தன்னை நம்பிய இனத்தை நட்டாற்றில் கைவிட்டதை ஏற்கவில்லை. அத்துடன்  தனது சுயநல அரசியலின் வெளிப்பாடாக தனது மகனையும் அரசியலில் தனது வாரிசாக முன்னிறுத்துபவர். இவை எவையுமே அவர் மனச்சாட்சியற்ற மனிதன் என்பதற்கு போதுமானதுது. இவர்கள் போய்ச் சேருவதுதான் தமிழ் இனத்திற்கு நன்மை பயக்கும். 

(நொச்சியருக்கு மாவையர் சொந்தமோ?  உணர்ச்சி வசப்படுகிறீர்கள்? வசப்படுகிறீர்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

464143127_9232603430133755_7782697383548

நல்லாய்  இருந்த மனுசனை, 
ஆஸ்பத்திரியில்  போய் படுக்க வைத்த பெருமை சுமந்திரனையே சேரும்... 

Prashanthan Navaratnam

பிரச்சாரத்திற்குப் போகமல் இருக்க நல்ல வழி.தனக்குப் பிடிக்காதவர்களுக்கு வாக்குக் கேட்பதை விடஆஸ்பத்திரியில் படுத்திருப்பது நல்லது

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சேலைன் போத்தலினுள்.. போனஸ் சீற் உங்களுக்கு என்று எழுதிப்போட்டு அதனை அவருக்கு ஏற்றினால் அய்யா  துள்ளி எழுவார்🙃

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

மாவைக்கு ஏதாவது நடந்தால்... சுமந்திரனின் கொடும்பாவி கட்டி எரிக்கப்படும்.
-மாவை ரசிகர் மன்றம்.-
ஜேர்மன் கிளை.

யேர்மனியில் இப்படியான செயல்களுக்கு அனுமதி இல்லை.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

நல்லாய்  இருந்த மனுசனை, 
ஆஸ்பத்திரியில்  போய் படுக்க வைத்த பெருமை சுமந்திரனையே சேரும்... 

மாவைக்கு என்ன வருத்தம் எண்டு சொன்னால் நல்ல மருந்து நான் தருவன்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியை வெல்ல வைக்கும் தென்னிந்திய பாணி அரசியல்??

ஆனாலும் மாவைக்கே தான் இப்ப எந்த கட்சி என்பது ஞாபகம் இருக்கணுமே???

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

ஒரு சேலைன் போத்தலினுள்.. போனஸ் சீற் உங்களுக்கு என்று எழுதிப்போட்டு அதனை அவருக்கு ஏற்றினால் அய்யா  துள்ளி எழுவார்🙃

இப்போ மகனுக்கு தான் சீற் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

மன உழைச்சலால்  சுகவீனம் ஏற்பட்டிருக்கலாம்.

நம்பிக்கைத்துரோகிகளால் ஏற்பட்ட மனஉளைச்சல். விக்கியரை விரட்ட மாவையரை கொம்பு சீவினர், பின்னர் மாவையருக்கே குழி பறித்தார். பாவம் மாவையர், ஒரு வாயில்லாப்பூச்சி. சுமந்திரனை கட்சிக்குள் சேர்த்தவர் இவர்தான் என்று சொல்லிக்கொள்கிறார்கள். சம்பந்தர் இருந்தபோது அவர்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அவர் சொல்வதை தலைமேல் தாங்கினார். எதிர்த்து கதைத்தது கிடையாது. அவரை கதைக்க சம்பந்தர் விட்டதுமில்லை. தட்டி அடக்கியே வைத்திருந்தார். அதையே நேற்று வந்த சுமந்திரனும் கடைப்பிடித்தார். சுமந்திரனை எதிர்த்தால், கட்சியை நடுவீதிக்கு கொண்டு வந்து விடுவார் என்பதால் அமைதியாக இருந்தார். அதை தெரிந்துகொண்ட சுமந்திரன் அதையே தனது ஆயுதமாக பயன்படுத்தி தனது திட்டங்களை நிறைவேற்றத்தொடங்கினார். எது நடந்துவிடக்கூடாது என பயந்து மாவையர்  அமைதி காத்தாரோ அதுவே நடந்தது.  இப்போதும் கட்சியை பாதுகாப்பதற்காக மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தவரை வைத்தியசாலையில் கொண்டுபோய் விட்டிருக்கிறது. தன் வாழ்நாள் முழுவதையும்  வீட்டுக்காக செலவழித்தவர். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

நிலாந்தன் போன்று கற்பனைக் கதைகளை  எழுதக் கற்றுக்கொண்டுவிட்டீர்கள்.  வாழ்த்துக்கள். 🙏

  • கருத்துக்கள உறவுகள்

 ஏன், உங்களுக்கு மட்டுந்தான் கற்பனைக் கதை எழுத வருமோ?  அல்லது உங்கள் கதைமட்டுந்தான் உண்மையானதோ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இப்போ மகனுக்கு தான் சீற் தேவை.

மாற்றி எழுதிப் போட்டுட்டால் போச்சு..

  • கருத்துக்கள உறவுகள்

மாவைக்கு வயது 81 ,

ஒரு சராசரி மனிதனின் ஆயுட்காலத்தைவிட அதிகம்.

வயதின் மூப்பால் எலும்புகளும் திசுக்களும் தேய்வடைய முதுமையும் நோயும் இயற்கை எய்துவதும் கட்டில் படுத்திருக்கும் மாவையும் கருத்து சொல்லும் நானும்  எதிர்நோக்க வேண்டியதும் தப்பிக்க முடியாததும் ஒன்றுதான். 

மக்களில் ஒருவனாகிய நான் செத்தால் ஏன் செத்தான் என்று மட்டும் கேட்பார்கள், மக்கள் பிரதிநிதிகள் என்று தம்மை சொல்லிக்கொண்டவர்கள்  போய்விட்டால் என்ன செய்துவிட்டு போனார் என்று கேப்பார்கள்.

தள்ளாத வயது என்பதற்காக இவர்கள் செய்தவைபற்றி கேள்வி கேக்காமல் எவரும் தள்ளி வைத்துவிட்டு போகமாட்டார்கள்.

ஐயா குணமடையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

 ஏன், உங்களுக்கு மட்டுந்தான் கற்பனைக் கதை எழுத வருமோ?  அல்லது உங்கள் கதைமட்டுந்தான் உண்மையானதோ? 

 தாங்கள் கற்பனை செய்வது உண்மை என்று ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nochchi said:

அழைப்புக்கு நன்றி, நான் வருவேன்.  எந்த இடத்தில் என்பதை இரகசியமாகச் வைத்திருக்கவும். பிறகு சும் விசுவாசிகள் கும்மியடித்துவிடுவார்கள். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

இதைவிட ஒரு மனிதன் வன்மத்தோடு சிந்திக்கமுடியாது. உடல்நலம் குன்றிருக்கும் வேளையில் ஒரு மனிதனாகவேணும் சிந்திக்க வேண்டாமா? அரசியல் என்பது ஒவ்வொருவர் பார்வை பட்டறிவின்பாற்பட்டு பொதுநலம் சார்ந்தது. ஒருவர் சரியோ தவறோ தமிரது அரசியலில் இருந்தார் தற்போது ஒதுங்கி இருக்கிறார். முந்தநாள் வந்தசிலர் தமிழினத்தைக் காட்டிக்கொடுத்ததைவிட திரு.மாவையவர்கள் ஒன்றும் செய்யவில்லைத்தானே.
நன்றி.நன்றி.நன்றி

மனிசனும் ஒரு காலத்தில் சிறைக்கு சென்று போராடியவர் ...பொலிசாரின் சித்திரவதைக்கு உள்ளானவர்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.