Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

இன்றையதினம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன் போது முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடங்கிய குழு ஒன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அவர்கள் அந்த தாக்குதலை எதிர்த்தனர்.

இந்நிலையில் திரும்பிச் சென்ற குழு சுமார் 30 பேர் அடங்கிய குழுவினரை அழைத்து வந்து அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் மீது மீண்டும் கொலை வெறி தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு பெண் உட்பட மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவிலும் ஏனைய இருவரும் 24 ஆம் இலக்க விடுதியிலும் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகிறது.இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/197203

  • கருத்துக்கள உறவுகள்

EPDP,..? 🤨

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

EPDP,..? 🤨

சுமந்திரன்?😜

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

EPDP,..? 🤨

May be an image of 11 people

சுமந்திரனின் அல்லக்கைகள் ஆயுதத்துடன் ஊருக்குள் நடமாடுவதை பார்க்க,
மணிவண்ணனின்  தமிழ் மக்கள் கூட்டணியின் மீது,  தாக்குதல்களை நடத்தியவர்கள் இவர்களாகவும் இருக்கலாம். 
😮

சொந்த ஊருக்குள், வாக்குச் சேகரிக்க ஆயுதம் எதற்கு?
இதே  ஆயுதத்துடன் சுமந்திரன்... சிங்கள, முஸ்லீம் பகுதிகளில் ஒரு அடி  எடுத்து வைத்து நடந்து விட முடியுமா?  சிங்களவனும், சோனகனும்... சுமந்திரனை,  "*****" எடுத்து விடுவார்கள்.

சொந்த இனத்தவனை வெருட்டி... வாக்குச் சேகரித்து பாராளுமன்றம் போக வேண்டிய "ரவுடி" அரசியலை, சுமந்திரன் செய்வது ஏன்?  

இது மற்றைய கட்சிகளுக்கும் முன்னுதாரணமாகி.. ஆயுதத்தை தூக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது கூட தெரியாத... *********** ************  சுமந்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 11 people

சுமந்திரனின் அல்லக்கைகள் ஆயுதத்துடன் ஊருக்குள் நடமாடுவதை பார்க்க,
மணிவண்ணனின்  தமிழ் மக்கள் கூட்டணியின் மீது,  தாக்குதல்களை நடத்தியவர்கள் இவர்களாகவும் இருக்கலாம். 
😮

சொந்த ஊருக்குள், வாக்குச் சேகரிக்க ஆயுதம் எதற்கு?
இதே  ஆயுதத்துடன் சுமந்திரன்... சிங்கள, முஸ்லீம் பகுதிகளில் ஒரு அடி  எடுத்து வைத்து நடந்து விட முடியுமா?  சிங்களவனும், சோனகனும்... சுமந்திரனை,  "*****" எடுத்து விடுவார்கள்.

சொந்த இனத்தவனை வெருட்டி... வாக்குச் சேகரித்து பாராளுமன்றம் போக வேண்டிய "ரவுடி" அரசியலை, சுமந்திரன் செய்வது ஏன்?  

இது மற்றைய கட்சிகளுக்கும் முன்னுதாரணமாகி.. ஆயுதத்தை தூக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது கூட தெரியாத... **************  சுமந்திரன்.

இதில் என்ன அதிசயம் இருக்கிறது?  

 நீலன் திருச்செல்வம், கதிர்காமர் வரிசையில் தன்னுடைய   பெயருக்கும்  கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுவதை அவர் விரும்பவில்லை. அதுதான் அவர் தன்னுடைய பாதுகாப்பில்  கொஞ்சம் கவனம் எடுக்கிறார்.  

இல்லாவிட்டால் புலம்பெயர்ஸ் அல்லது இந்தியாவோ அவரைப் போட்டுவிட்டு விபு க்களின் மீது பழிபோட  வாய்ப்பிருக்கிறதல்லவா? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

நீலன் திருச்செல்வம், கதிர்காமர் வரிசையில் தன்னுடைய   பெயருக்கும்  கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுவதை அவர் விரும்பவில்லை.

அப்போ.... அவர்களின் பணியை இவர் தொடர்கிறார் என்று சொல்கிறீர்கள்? ஒத்துகொண்டமைக்கு நன்றி! கவனம், பாதுகாப்பு கொடுப்பவர்களே போட்டுத்தள்ளிவிட்டு, புலம்பெயர்ந்தோர் செய்தார்கள் என்று சொல்வார்கள். அதற்குத்தானே புலனாய்வு பாதுகாப்பு கொடுத்தீர்கள் என்று கேட்டால், மெய்ப்பாதுகாவலரின்  துப்பாக்கி தவறுதலாக வெடித்து விட்டது என்றும் மாற்றுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, satan said:

 இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்தால் போட்டுத்தள்ளி விடுவீர்கள் என்று ஒத்துக்கொண்டமைக்கு நன்றி. 

😏

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு சேவை செய'ய என்னமா அடி படுறானுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இதில் என்ன அதிசயம் இருக்கிறது?  

 நீலன் திருச்செல்வம், கதிர்காமர் வரிசையில் தன்னுடைய   பெயருக்கும்  கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுவதை அவர் விரும்பவில்லை. அதுதான் அவர் தன்னுடைய பாதுகாப்பில்  கொஞ்சம் கவனம் எடுக்கிறார்.  

இல்லாவிட்டால் புலம்பெயர்ஸ் அல்லது இந்தியாவோ அவரைப் போட்டுவிட்டு விபு க்களின் மீது பழிபோட  வாய்ப்பிருக்கிறதல்லவா? 

🤣

"படம் பார் பாடம் படி" ரீம் தலீவர் இணைத்த படத்தில் ஆயுதங்கள் இருக்கின்றனவா? ஏதோ கடைத்தெருவில் சுமந்திரன் நடந்து செல்லும் படத்தில் ஒரு கடை வாயிற்காப்பாளர் இருக்கிறார். இவரை "ஆயுதப் படை" என்று நம்பும் அளவுக்கு தாயகத்தை கார்ட்டூனில் பார்த்து கருத்தெழுதும் புலப் பட்டாசு ரீமிற்காக மட்டும் இது இணைக்கப் பட்டிருக்கிறது😎.

அவையள் வெடிக்கட்டும், நீங்கள் ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

 இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்தால் போட்டுத்தள்ளி விடுவீர்கள் என்று ஒத்துக்கொண்டமைக்கு நன்றி. 

😏

ஆமாம் அதற்கு தான் நீலனை போட்டு தள்ளிவிட்டு  விடுதலைக் கூட்டணியை  அதற்கு எதிராக வாக்களித்து  அந்த அரசியல் சட்டத்தை நிறைவேற விடாமல் செய்து விட்டு இன்று ஏன் அந்த  தீர்வை நடைமுறைப்பட்டுத்தவில்லை என்று தினாவெட்டாக கேட்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

ஏதோ கடைத்தெருவில் சுமந்திரன் நடந்து செல்லும் படத்தில் ஒரு கடை வாயிற்காப்பாளர் இருக்கிறார்.

ஜனாதிபதி பொது வேட்பாளருக்கும் பாதுகாப்பு கிடைத்ததாகக் கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

ஆமாம் அதற்கு தான் நீலனை போட்டு தள்ளிவிட்டு  விடுதலைக் கூட்டணியை  அதற்கு எதிராக வாக்களித்து  அந்த அரசியல் சட்டத்தை நிறைவேற விடாமல் செய்து விட்டு இன்று ஏன் அந்த  தீர்வை நடைமுறைப்பட்டுத்தவில்லை என்று தினாவெட்டாக கேட்பார்கள். 

உண்மையில் கதிர்காமரையும் நீலனையும் பிறேமதாசாவையும் கொன்றதில் இந்தியாவின் பின்புலம் இருப்பதாகத் தோன்றுகிறது.

ஏனென்றால் அதனால் பயனடைந்தது இந்தியா மட்டுமே. எமக்கு மிகப்பெரிய பாதிப்பு மட்டுமே  ஏற்பட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kavi arunasalam said:

ஜனாதிபதி பொது வேட்பாளருக்கும் பாதுகாப்பு கிடைத்ததாகக் கேள்வி

அது அமெரிக்கப் பொலிஸ் பாதுகாப்புக் கொடுத்ததால் கண்டு கொள்ளாமல் விட்டிருப்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சுவைப்பிரியன் said:

மக்களுக்கு சேவை செய'ய என்னமா அடி படுறானுங்கள்.

இவ‌ர்க‌ளுக்கு ம‌க்க‌ள் மீது அம்ம‌ட்டு ப‌ற்று சுவை அண்ணா😁.....................

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

 இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்தால் போட்டுத்தள்ளி விடுவீர்கள் என்று ஒத்துக்கொண்டமைக்கு நன்றி. 

😏

ஏன் கதிர்காமரும் நீலன் திருச்செல்வமும் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டார்கள் என்று புதுப்புரளியை கிளப்புகிறீர்கள்? அப்படியானால்; சுமந்திரனுக்கு இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று புலுடா விட வேண்டிய அவசியமில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்கு விலங்கு - தாக்குதலாளிகளை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸ்!

1202069223.jpg

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பொலிஸார் மருத்துவமனையில் கைவிலங்கிட்டுள்ளனர். 

தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மான் சின்னத்திற்கு ஆதரவு கோரி நேற்றைய தினம் சனிக்கிழமை நீர்வேலி கரந்தன் பகுதியில் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்த வேளை ,ABT 1763 எனும் இலக்கமுடைய பச்சை நிற முச்சக்கர வண்டியில் நால்வர் கொண்ட வன்முறை கும்பல் அவர்களுடன் முரண்பட்டுள்ளனர். 

பின்னர் முச்சக்கர வண்டியில் வந்த கும்பல் அங்கிருந்து சென்று சுமார் 30 பேருடன் வந்து பிரச்சார பணிகளில் ஈடுபட்டிருந்த ஆண்கள் , பெண்கள் என இருபாலர் மீது மிக மோசமான தாக்குதலை மேற்கொண்டனர் 

தாக்குதலில் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முறைப்பாட்டினை ஏற்க பின்னடித்துள்ளார். 

அது தொடர்பில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தொலைபேசி ஊடாக தமிழ் மக்கள் கூட்டணியினர் அறிவித்த போது , பொறுப்பதிகாரி தான் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டதாக பொய்யுரைத்துள்ளார். பின்னர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுத்தலின் பிரகாரம் முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்டனர். 

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாக்குதலுக்கு இலக்கான நபர்களுக்கு பொலிஸார் கைவிலங்கிட்டுள்ளனர். 

அது தொடர்பில் பொலிஸாரிடம் தமிழ் மக்கள் கூட்டணியினர் கேட்ட போது, தமக்கு மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவுக்கு அமையவே கைவிலங்கிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். 

தாக்குதல் சம்பவம் நடைபெற்று 24 மணி நேரம் கடந்துள்ள நிலையிலும் தாக்குதலாளிகள் எவரையும் கைது செய்யாத பொலிஸார் , தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு கைவிலங்கிட்டுள்ளமை அச்சுறுத்தும் செயற்பாடே என தமிழ் மக்கள் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். 

கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி நேற்றைய தினம் முறைப்பாட்டை ஏற்காது பின்னடித்தமை , இன்றைய தினம் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு கைவிலங்கிட்டுள்ளமை , 24 மணித்தியாலங்கள் கடந்தும் தாக்குதலாளிகளை கைது செய்யாமை போன்ற செயற்பாடுகள் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னால் பெரும் அரசியல் தலையீடு இருக்கலாம் என தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.  (
 
https://newuthayan.com/article/யாழில்_தாக்குதலுக்கு_இலக்கானவர்களுக்கு_விலங்கு_-_தாக்குதலாளிகளை_கைது_செய்ய_பின்னடிக்கும்_பொலிஸ்!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kavi arunasalam said:

சுமந்திரன்?😜

அங்கஜன்😁

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

 இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்தால் போட்டுத்தள்ளி விடுவீர்கள் என்று ஒத்துக்கொண்டமைக்கு நன்றி. 

😏

எலோய் உங்க ஆள் 14 வருடமாய் முயற்சிக்கிறார் இன்னும் தீர்வு பிறக்கவில்லை அவர் மலடனா ?  நல்ல வைத்தியரிடம் காட்டுங்க பாஸ் .😄

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, satan said:

ஏன் கதிர்காமரும் நீலன் திருச்செல்வமும் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டார்கள் என்று புதுப்புரளியை கிளப்புகிறீர்கள்? அப்படியானால்; சுமந்திரனுக்கு இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று புலுடா விட வேண்டிய அவசியமில்லையே?

பிறகேன் போட்டுத் தள்ளினீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

பிறகேன் போட்டுத் தள்ளினீர்கள்? 

8 hours ago, Kapithan said:

உண்மையில் கதிர்காமரையும் நீலனையும் பிறேமதாசாவையும் கொன்றதில் இந்தியாவின் பின்புலம் இருப்பதாகத் தோன்றுகிறது.

ஏனென்றால் அதனால் பயனடைந்தது இந்தியா மட்டுமே. எமக்கு மிகப்பெரிய பாதிப்பு மட்டுமே  ஏற்பட்டது. 

நீங்கள் தான் எல்லாம், யானொன்றும் அறியேன் பராபரமே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, Kapithan said:

பிறகேன் போட்டுத் தள்ளினீர்கள்? 

ஆர் போட்டுத்தள்ளினது?

Magesh Iyer على LinkedIn: CNG, PNG Prices Set To Drop As Centre Revises Gas  Pricing Guidelines | ١٨ من التعليقات

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kapithan said:

பிறகேன் போட்டுத் தள்ளினீர்கள்? 

நான் நினைத்தேன்  கதிர்காமரை போட்டது சந்திரிகா என. இதெல்லாம் உங்கள் காதுக்கெட்டாதோ??

46 minutes ago, Kapithan said:

பிறகேன் போட்டுத் தள்ளினீர்கள்? 

உங்களுக்கு வரவு செலவு  கணக்கு ரொம்ப வீக்காக உள்ளது. நாலு பக்கமும் அலசி ஆராய வேண்டும் புரோ. விடிய எழும்பி கருத்து எழுதினால் மட்டும் போதாது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

உங்களுக்கு வரவு செலவு  கணக்கு ரொம்ப வீக்காக உள்ளது. நாலு பக்கமும் அலசி ஆராய வேண்டும் புரோ. விடிய எழும்பி கருத்து எழுதினால் மட்டும் போதாது.

திருத்துங்க  புரோ... விடிய விடிய இருந்து எதிர்க் கருத்து எழுதினால் காணாது... என்று....

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kapithan said:

பிறகேன் போட்டுத் தள்ளினீர்கள்? 

கதிர்காமர் தமிழருக்கு செய்த நன்மைகளை பட்டியல் இடவும்?

போட்டு தள்ளியது பற்றி பிறகு ஆராயலாம்.

தமிழர் பிரதமர் ஆவது பற்றி சிங்கள இனவாதிகள் எப்படி இருந்தார்கள் என்பது பற்றிய கட்டுரையை நீங்கள் வாசிக்க மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.