Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

image

இந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. மூன்று வாரங்கள் கூட நீடிக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

எனக்கும் பெரும்பான்மை இருக்கவில்லை, அனுரகுமார திசநாயக்கவிற்கும்  பெரும்பான்மையில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்படியென்றால் எங்கள் இருவருக்கும் இடையில்   என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தேர்தலில் தோல்வியடைந்தால் என்னை வீட்டிலிருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனக்கு பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன், நான் பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி.

நான் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கோருவதற்காக உங்கள் முன்னால் வந்துள்ளேன்.

நாடு வீழ்ச்சியடைந்த போது பொறுப்பேற்க எவரும் இருக்கவில்லை. சஜித்தும் இல்லை அனுரவும் இல்லை.

பிரதமராவதற்கு எவரும் இருக்கவில்லை.

ஒருநாள் நிமால் லான்ச பிரதமராக தயாரா என என்னிடம் கேட்டார் நான் எப்படி என வினவினேன்.

அதற்கு அவர் அனைவரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என தெரிவித்தார், அதன் பின்னர் நான் ஜனாதிபதியை சந்திக்கசென்று சவாலை ஏற்றுக்கொண்டேன்.

அந்த சமயம ஜனாதிபதி பதவியை துறந்தவேளை நாடாளுமன்றம் சுற்றிவளைக்கப்பட்ட வேளை எவரும் இருக்கவில்லை, தற்போது தலைமைத்துவத்தை கோரும் அனைவரும் தப்பியோடினார்கள்.

நாங்கள் இராணுவத்தை பயன்படுத்தி இந்த நாட்டை காப்பாற்றினோம்.

மக்கள் அனுரகுமார திசநாயக்க மூன்று மாதங்களிற்கே பதவி வகிப்பார் என தெரிவிக்கின்றனர். நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை. அவர் தனது பதவியை தொடரவேண்டும். அவரது கட்சியிலிருந்து அரசியல் குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்படுமா தெரியாது. அவ்வாறான விடயங்களை செய்யக்கூடாது.

ஆனால் அவர்களின் பட்டியலை பார்த்தால் இந்த அரசாங்கம்  மூன்று மாதங்கள் கூட  நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. மூன்று வாரங்கள் கூட நீடிக்காது.

ஆகவே நாட்டிற்கு தலைமை தாங்ககூடியவர்களிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். 

அனுபவசாலிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால் ஜனாதிபதியால் மூன்று வருடங்கள் ஆட்சி செய்ய முடியும்.

அவ்வாறான சூழ்நிலை காணப்படாவிட்டால் நாட்டில் வரிசைகள் யுகம் உருவாகும். தற்போதைய தேங்காய் வரிசைகளிற்கு பதில் புதிய வரிசைகள் உருவாகும்.

தோல்வியடைந்தால் வீட்டில் இருக்குமாறு அனுர எனக்கு தெரிவித்தார். நான் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். நான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன் எனக்காக வாக்களியுங்கள் என மக்களை கேட்டுக்கொண்டிருந்தேன். பெரும்பான்மையானவர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை, அதனால் நான் தோல்வியடைந்தேன். ஆனால் எங்கள் இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை தானே 51வீதமானவர்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை.

ஆகவே அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் நான் பெரும்பான்டையில்லாத முன்னாள் ஜனாதிபதி அவர் பெரும்பான்மையில்லாத ஜனாதிபதி அவரை போல எனக்கு பெரும்பான்iயில்லை. ஆகவே இதில் என்ன விசேடமானது  நாங்கள் இருவரும் ஒரேமாதிரியானவர்கள்.

அவர் கஸ்டப்படுகின்றார் என நான் தெரிவிக்கின்றேன்.

https://www.virakesari.lk/article/197266

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்

ஒரு பழுத்த அரசியல்வதியே இதைச் சொல்லும்போது ..யாழ் கணணனி ஆய்வாளர்கள்  எப்படி ஏ.கே டிதான் அரசு அமைக்கும் என்று சொல்லுவினம் ...அண்மையில் நடந்த பிரதேச சபை தேர்தலில் கூட 17 500 வோட்தான் எடுத்தவர் ...அதுவும் மொத்தம் 56000 வோட்டில்...

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஏராளன் said:

அனுபவசாலிகள் நாடாளுமன்றத்தில் இருந்தால் ஜனாதிபதியால் மூன்று வருடங்கள் ஆட்சி செய்ய முடியும்

சூனியம் வைத்து விட்டாரா? இப்படி உறுதியாக சொல்கிறாரே?  என்னமாதிரி இருந்த நாட்டை சுடுகாடாக்கியது, அனுபவ சாலிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் நாடாளுமன்றத்தில், அரசியலில் இருந்துதானே அதை சாதித்தார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, satan said:

சூனியம் வைத்து விட்டாரா? இப்படி உறுதியாக சொல்கிறாரே?  என்னமாதிரி இருந்த நாட்டை சுடுகாடாக்கியது, அனுபவ சாலிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் நாடாளுமன்றத்தில், அரசியலில் இருந்துதானே அதை சாதித்தார்கள்.

சூனியம் வைத்தவர் அவரல்ல அனுரவேதான் தனக்கு தானே சைனாவின் உதவிகளை கடன் முறிவுகளை தள்ளி போடுவதுடன் பழைய கடனுக்கான பகுப்பாய்வுகளை தீவிரமாக்கியதின் பலன் ......

Edited by பெருமாள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பெருமாள் said:

சூனியம் வைத்தவர் அவரல்ல அனுரவேதான் தனக்கு தானே சைனாவின் உதவிகளை கடன் முறிவுகளை தள்ளி போடுவதுடன் பழைய கடனுக்கான பகுப்பாய்வுகளை தீவிரமாக்கியதின் பலன் ......

இதனை தெளிவாக கூறமுடியுமா? நீங்கள் கூறும் கடன் முறிகளை (BOND) கடந்த அரசு ஐ எம் எப் கடன் வழங்குனர்களின் மூலம் எட்டப்பட்ட தீர்மானத்தினால் 2028 வரை அதற்கான கொடுப்பனவுகளை நிறுத்தி வைப்பதன் மூலம் இலங்கை கடனை மூழ செலுத்துவதற்கான கால அவகாசத்தினை பெற்றுக்கொண்டது அந்த அரசுகளாலேயே கடன் மறு சீரமைப்பினையும் செய்தார்கள், புதிய அரசு இதில் ஏதாவது மாற்றம் செய்துள்ளார்களா? அல்லது நீங்கள் கூறும் விடயத்தினை தவறாக புரிந்து கொண்டுள்ளேனா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, alvayan said:

அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்

ஒரு பழுத்த அரசியல்வதியே இதைச் சொல்லும்போது ..யாழ் கணணனி ஆய்வாளர்கள்  எப்படி ஏ.கே டிதான் அரசு அமைக்கும் என்று சொல்லுவினம் ...அண்மையில் நடந்த பிரதேச சபை தேர்தலில் கூட 17 500 வோட்தான் எடுத்தவர் ...அதுவும் மொத்தம் 56000 வோட்டில்...

அல்வாயன், இது புது முறையில்நடைபெறும் தேர்தலால் வந்தது. பாராளுமன்ற தேர்தல் பழைய விகிதாசார முறைப்படி தான் என்பதால் இப்பிடி வராது.யாழ்ப்பாணத்திலையே கனக்க பிரதேசசபைகள் இயங்கஏலாமல் இருந்தது இந்த கலப்பு முறைத்தேர்தலால் தான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, vasee said:

இதனை தெளிவாக கூறமுடியுமா? நீங்கள் கூறும் கடன் முறிகளை (BOND) கடந்த அரசு ஐ எம் எப் கடன் வழங்குனர்களின் மூலம் எட்டப்பட்ட தீர்மானத்தினால் 2028 வரை அதற்கான கொடுப்பனவுகளை நிறுத்தி வைப்பதன் மூலம் இலங்கை கடனை மூழ செலுத்துவதற்கான கால அவகாசத்தினை பெற்றுக்கொண்டது அந்த அரசுகளாலேயே கடன் மறு சீரமைப்பினையும் செய்தார்கள், புதிய அரசு இதில் ஏதாவது மாற்றம் செய்துள்ளார்களா? அல்லது நீங்கள் கூறும் விடயத்தினை தவறாக புரிந்து கொண்டுள்ளேனா?

சைனாவின் புதிய  3௦மில்லியன் டொலர் கடன் தொகைக்கு மண்டையை ஆட்டியவர் அனுராதானே ?

 

கடன் ஒத்தி வைப்பு சில நிபந்தனைகளின் மேல் கொடுக்கப்பட்ட ஒன்று அந்த நிபந்தனைகளின் ஐந்து வீதம் கூட பூர்த்தி ஆக்கப்படவில்லை என்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, பெருமாள் said:

சைனாவின் புதிய  3௦மில்லியன் டொலர் கடன் தொகைக்கு மண்டையை ஆட்டியவர் அனுராதானே ?

 

கடன் ஒத்தி வைப்பு சில நிபந்தனைகளின் மேல் கொடுக்கப்பட்ட ஒன்று அந்த நிபந்தனைகளின் ஐந்து வீதம் கூட பூர்த்தி ஆக்கப்படவில்லை என்கிறார்கள் .

சீனா மேலதிகமாக 30 மில்லியன் கடன் இலங்கைக்கு வழங்குகிறதா (புதிய கடன்)? அல்லது சீனாவின் கடன் மீளளிப்பை 2028 மேலாக இலங்கை தள்ளிப்போடுகிறதா? சிறிது விளக்கமாக கூறமுடியுமா?

ஐ எம் எப் தனது உதவியினை இலங்கை அரசு நிபந்தனைகளை நிறைவேற்றினாலேயே அடுத்த கட்ட நிதி வழங்கப்படும், அந்த அடிப்படையில் அடுத்த கட்ட கடன் தொகையினை ஊழியர் மட்டத்தில் (Pre approval) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் இங்கு பதியப்பட்டிருந்தனவே?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, alvayan said:

அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்

ஒரு பழுத்த அரசியல்வதியே இதைச் சொல்லும்போது ..யாழ் கணணனி ஆய்வாளர்கள்  எப்படி ஏ.கே டிதான் அரசு அமைக்கும் என்று சொல்லுவினம் ...அண்மையில் நடந்த பிரதேச சபை தேர்தலில் கூட 17 500 வோட்தான் எடுத்தவர் ...அதுவும் மொத்தம் 56000 வோட்டில்...

"2 k kids "யூ டியுப் ஆய்வாளர்களே அப்படி சொல்லும் பொழுது யாழ்கள ஆய்வாளர்கள் ஆய்வு எப்படியிருக்கும் அதுவும் 20 வருடத்திற்கு மேலாக யாழ் களத்தில் அரசியல் ஆய்வு செய்து Phd பெற்றவர்கள் அல்லோ😅

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:

20 வருடத்திற்கு மேலாக யாழ் களத்தில் அரசியல் ஆய்வு செய்து Phd பெற்றவர்கள்

யாழ் களத்தில் 20 வருடத்திற்கு மேலாக  அரசியல் ஆய்வுகள்   செய்து  Phd பெற்ற  டொக்டர்கள்  நிலை அனுரகுமார திசநாயக்கவுக்கு ஊது குழலாக இருப்பதில் முடிவடைந்துள்ளது 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, alvayan said:

அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்

ஒரு பழுத்த அரசியல்வதியே இதைச் சொல்லும்போது ..யாழ் கணணனி ஆய்வாளர்கள்  எப்படி ஏ.கே டிதான் அரசு அமைக்கும் என்று சொல்லுவினம் ...அண்மையில் நடந்த பிரதேச சபை தேர்தலில் கூட 17 500 வோட்தான் எடுத்தவர் ...அதுவும் மொத்தம் 56000 வோட்டில்...

அங்கே தேர்தலில் 36,825 வாக்குகள் தான் மொத்தமாக செலுத்தப்பட்டிருக்கின்றது, அல்வாயன். அதில் 520 செல்லாத வாக்குகள். ஆக 36,305 வாக்குகளில் 17, 295 வாக்குகளை இவர்கள் பெற்றிருக்கின்றார்கள். இவர்கள் 47.6 வீத வாக்குகள் பெற்றிருப்பது ஆச்சரியமே..............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேர்தலுக்கு பின்தான் அனுராவுக்கு உண்மையான பிரச்சனையே என்கிறார்கள் பார்ப்பம் சொன்னதை நிறைவேற்றுகிறாரா என்று .

2 hours ago, vasee said:

சீனா மேலதிகமாக 30 மில்லியன் கடன் இலங்கைக்கு வழங்குகிறதா (புதிய கடன்)? அல்லது சீனாவின் கடன் மீளளிப்பை 2028 மேலாக இலங்கை தள்ளிப்போடுகிறதா? சிறிது விளக்கமாக கூறமுடியுமா?

அந்த இணைப்பை தேடிக்கொண்டு உள்ளேன் இங்கு இணைத்து விடுகிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/10/2024 at 08:44, ஏராளன் said:

 

ஆகவே அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் நான் பெரும்பான்டையில்லாத முன்னாள் ஜனாதிபதி அவர் பெரும்பான்மையில்லாத ஜனாதிபதி அவரை போல எனக்கு பெரும்பான்iயில்லை. ஆகவே இதில் என்ன விசேடமானது  நாங்கள் இருவரும் ஒரேமாதிரியானவர்கள்.

பின்கதவால் வந்தவர் முன்கதவால் வந்தவரைப் பார்த்து நீயும், நானும் ஒன்று தான் என்று சொல்வதற்கு மிக அகண்ட ஒரு பார்வை வேண்டும்.................🤣.

16 சமையல்காரர்களும், 40 குடைகளும் வேண்டும் என்று கேட்ட செய்தி வெளியில் வந்த பின், இவர் மீது மரியாதை ஏதும் எவர் மனதிலாவது இருக்கும் என்று நினைக்கத் தோன்றவில்லை. வெறும் பதவி ஆசை பிடித்த ஒரு மனிதனாகவே தெரிகின்றார்...........

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/10/2024 at 16:44, ஏராளன் said:

மக்கள் அனுரகுமார திசநாயக்க மூன்று மாதங்களிற்கே பதவி வகிப்பார் என தெரிவிக்கின்றனர். நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை. அவர் தனது பதவியை தொடரவேண்டும். அவரது கட்சியிலிருந்து அரசியல் குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்படுமா தெரியாது. அவ்வாறான விடயங்களை செய்யக்கூடாது.

ஆனால் அவர்களின் பட்டியலை பார்த்தால் இந்த அரசாங்கம்  மூன்று மாதங்கள் கூட  நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. மூன்று வாரங்கள் கூட நீடிக்காது.

இவர் தான் நரி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்😁 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, satan said:

சூனியம் வைத்து விட்டாரா? இப்படி உறுதியாக சொல்கிறாரே?  என்னமாதிரி இருந்த நாட்டை சுடுகாடாக்கியது, அனுபவ சாலிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் நாடாளுமன்றத்தில், அரசியலில் இருந்துதானே அதை சாதித்தார்கள்.

ரணில் நினைக்கிறார்  போராட்டம் நடக்கும்  அரசாங்கம் கவிழும்

நான் மீண்டும் ஐனதிபதி ஆகலாம் என்று  ஆனால்     போராட்டம் நடத்தியவார்கள். தான்   இப்போது ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது அவருக்கு தெரியவில்லை  ..........போராட்டம் நடத்த ஆள்களில்லை என்றால்  எப்படி அரசாங்கம் கவிழ்ந்து விடும்???   

அனுபவசாலிகள்.  பலவகைப்படும்.   

பல இனங்கள் வாழும்  இலங்கை போன்ற நாட்டை ஆளும் அனுபவம்  இவர்களுக்கு ஒரு வீதம் கூட இல்லை   

போர். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்குமானால். இலங்கை கடன்காராரக. மாறும் என்பது  தெரியவில்லை காரணம் அனுபவம் இல்லை   அனுபவம் இருந்து இருந்தால்  தமிழருடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டிருக்கலாம். 

இந்த உலகில் பேச்சுவார்த்தை மூலம்  ஏமாற்றி. இலகுவாக தீர்வை   வழங்க கூடிய ஒரே இனம்  தமிழ் இனம் தான்    🙏🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரசோதரன் said:

16 சமையல்காரர்களும், 40 குடைகளும் வேண்டும் என்று கேட்ட செய்தி வெளியில் வந்த பின், இவர் மீது மரியாதை ஏதும் எவர் மனதிலாவது இருக்கும் என்று நினைக்கத் தோன்றவில்லை. வெறும் பதவி ஆசை பிடித்த ஒரு மனிதனாகவே தெரிகின்றார்...........

இருப்பதே இரண்டு பேர், இவர்களுக்கு பதினாறு சமையல் காரர் எதற்கு? ஹோட்டல் ஏதும் நடத்துகிறாரா தெரியவில்லை? இவரிடமே இத்தனை சமையல் காரர் கேட்க்கிறார் என்றால், இவரது ஆட்சிக்காலத்தில் எவ்வளவு பேரை நியமித்திருப்பார்? நாட்டை எப்படி கெடுத்து குட்டிச் சுவராக்கினார்கள் என்பது இப்போது புரியுது. அதைவிட இலக்கத்தகடுகள் இல்லாமல், உரிமை பெறாமல் பாவனையில் இருந்த பல வாகனங்கள் அங்கங்கு கைவிடப்பட்டுள்ளன. இதை யாரும் கணக்கெடுக்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை. சாதாரண மக்கள் பசியினால் களவெடுத்தால் நீதிமன்றத்துக்கு கொண்டு போகிறார்கள், பாராளுமன்றம் கள்ளர்களால் நிறைந்திருந்திருக்கிறது. இதற்கு மேல் அனுபவம் வாய்ந்த அரசியலாளர் என்று தம்மை வேறு அழைக்கிறார்கள். திருட்டுகூட்டம்.

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, vasee said:

சீனா மேலதிகமாக 30 மில்லியன் கடன் இலங்கைக்கு வழங்குகிறதா (புதிய கடன்)? அல்லது சீனாவின் கடன் மீளளிப்பை 2028 மேலாக இலங்கை தள்ளிப்போடுகிறதா? சிறிது விளக்கமாக கூறமுடியுமா?

 

6 hours ago, பெருமாள் said:

அந்த இணைப்பை தேடிக்கொண்டு உள்ளேன் இங்கு இணைத்து விடுகிறேன் .

இதுவா அண்ணை அந்தத் திரி.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

 

இதுவா அண்ணை அந்தத் திரி.

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுரகுமாரவின் ஆட்சி எவ்வளவு காலங்கள்வரை நீடிக்கும்? சிங்கள மக்களின் மனோநிலை என்ன ?

லங்கை அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டங்களில் வெவ்வேறு விதமான பிரச்சினைகளை பெரும்பான்மை மக்கள் எதிர்கொண்டபோது ஆட்சியாளர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுத்தார்கள் என்பதற்காக ஒரே தரப்பினருக்கு தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தினை சிங்கள மக்கள் வழங்கியதில்லை.
2009 வரைக்கும் நாட்டில் இடம்பெற்ற கொடூர யுத்தம்தான் முதன்மைப் பிரச்சினையாக இருந்தது. அதனை முடிப்பவர்களே சிங்கள மக்களின் கதாநாயகர்கள் என்ற பார்வை இருந்தது.
ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அதில் தோல்வியடைந்ததனால், மகிந்த ராஜபக்ச அரசு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. அதனால் சிங்கள மக்கள் மகிந்தவை எல்லாளன் மன்னனை தோற்கடித்த துட்டகைமுனு மன்னனுக்கு இணையாக கொண்டாடினர்.
மகிந்தவின் ஆட்சியை இன்னும் இருபது வருடங்களுக்கு அசைக்க முடியாதென்ற பார்வை அப்போது இருந்தது. ஆனால் 2015 இல் நியாயமான காரணங்களின்றி மகிந்தவை வீட்டுக்கு அனுப்பினார்கள்.
2019 இல் 69 இலட்சம் வாக்குகளை பெற்று கோட்டா ஆட்சிபீடம் ஏறியதும் ராஜபக்ச குடும்பத்தை அசைக்க முடியாது. நாமலின் புதல்வர் வரைக்கும் ராஜபக்சவின் குடும்பமே தொடர்து ஆட்சி செய்யும் என்றனர். ஆனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது முழுமையாக ஆட்சி செய்யவிடாமல் அவரை துரத்தியடித்தனர்.
சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் மக்கள் வறுமையில் துன்பப்பட்டபோது ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் 1977 இல் ஜே.ஆர் ஜெயவர்த்தன ஆட்சிபீடம் ஏறி வறுமையை போக்கினார். ஆனாலும் 1983 இல் பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கு பயத்தினால் ஊழல் நிறைந்த சர்வசன வாக்கெடுப்பினை நடத்தி தன்னை காத்துக்கொண்டார்.
1994 இல் 62.28 வீத வாக்குகளினால் வெற்றிபெற்ற சந்திரிக்கா அவர்கள் 1999 இல் சிங்கள மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்ப இருந்த நிலையில் நடைபெற்ற புலிகளின் தற்கொலை தாக்குதலில் காயமடைந்தார். இதனால் ஏற்பட்ட அனுதாபத்தினால் தோல்வியிலிருந்து மயிரிழையில் தப்பித்துக்கொண்டார்.
அதுபோலத்தான் தற்போது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஊழல் நிறைந்த முதலாளித்துவ தலைவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அனுரகுமார திசாநாயக்காவுக்கு அதிகாரத்தினை வழங்கியுள்ளதுடன், நடைபெற உள்ள தேர்தலில் அவர்களே ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.
ஆனாலும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான சக்தி அனுரகுமாரவிடம் உள்ளது. அதன்பின்பு தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தினை சிங்கள மக்கள் வழங்குவார்களா ? எவ்வளவு காலத்துக்கு வழங்குவார்கள் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

https://www.importmirror.com/2024/10/blog-post_831.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஏராளன் said:

 

இதுவா அண்ணை அந்தத் திரி.

 

2 hours ago, பெருமாள் said:

நன்றி 

சீனா வெள்ளநிவாரண நிதியாக 30 மில்லியன் நன் கொடையாக வழங்கியுள்ளது, ஐ எம் எப் கூட இதுவரை எந்த வித எதிர்மறையான கருத்துக்களை கூறவில்லை, ஆனால் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல 400 பில்லியன்  ரூபாவினை (பாதீட்டிற்கு மேலாக என கருதுகிறேன்) புதிய அரசு செலவழித்துள்ளது என்பது உண்மையானால் அதற்கான நிதியத்தினை எங்கிருந்து பெற்றது எனும் கேள்வி எழுகிறது.

இந்த செய்தி அந்த எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டான கருத்திற்கு  கூறப்பட்ட பதிலாக இருக்கலாம், ஆனால் உண்மையினை நீண்ட காலத்திற்கு மறைக்க இயலாது, அந்த செய்தி உண்மையாக இருக்குமா(400 பில்லியன்  ரூபாவினை) என்பதில் கொஞ்சம் நம்பிக்கை குறைவாக உள்ளது ஏனெனில் ஐ எம் எப் இன் கணக்காய்விற்கு வராமல் செய்ய முடியுமா எனத்தெரியவில்லை.

அப்படி செய்திருந்தால் ஐ எம் எப் இன் ஆதரவை இழக்க வேண்டிய நிலை உருவகும் அதன் மூலம் மேலதிக நிதி உதவி பெறுவதில் சிக்கல் நிலை உருவாகும் ஆனால் 2028 இல் தான் இலங்கை கடன் திருப்பி செலுத்தும் நிலையில் உள்ளதால் அதுவரை ஐ எம் எப் இன் உதவியில்லாமல் இலங்கையினால் சமாளிக்க முடியும் என கருதுகிறேன் (ஐ எம் எப் கடனுதவி 2 பில்லியன் மொத்தமாக என கருதுகிறேன்) ஆனால் கடன் வழங்கியவர்கள் கடுமையான நிபந்தனைகளை ஐ எம் எப் இல்லாவிடில் விதிக்கக்கூடும் என கருதுகிறேன்.

ஆனால் இந்த செய்தி உண்மையானால் இலங்கையிற்கு ஒரு மோசமான ஆட்சியின் மூலம் மோசமான எதிர்காலம் உருவாகலாம், அது இலங்கை தொடர்பான மோசமான விம்பத்தினை சர்வதேச நிதிச்சந்தையில் உருவாக்கிவிடும் அது ஒரு நீண்டகால பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/10/2024 at 11:44, ஏராளன் said:

இந்த அரசாங்கம் மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. மூன்று வாரங்கள் கூட நீடிக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

 

இவர் ஒருவர் உழைத்து தின்ன வக்கில்லை.

எப்ப பார் மலட்டு சொத்துக்கு ஆசைப்பட்டவன் மாதிரியே இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, vasee said:

 

சீனா வெள்ளநிவாரண நிதியாக 30 மில்லியன் நன் கொடையாக வழங்கியுள்ளது, ஐ எம் எப் கூட இதுவரை எந்த வித எதிர்மறையான கருத்துக்களை கூறவில்லை, ஆனால் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல 400 பில்லியன்  ரூபாவினை (பாதீட்டிற்கு மேலாக என கருதுகிறேன்) புதிய அரசு செலவழித்துள்ளது என்பது உண்மையானால் அதற்கான நிதியத்தினை எங்கிருந்து பெற்றது எனும் கேள்வி எழுகிறது.

இந்த செய்தி அந்த எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டான கருத்திற்கு  கூறப்பட்ட பதிலாக இருக்கலாம், ஆனால் உண்மையினை நீண்ட காலத்திற்கு மறைக்க இயலாது, அந்த செய்தி உண்மையாக இருக்குமா(400 பில்லியன்  ரூபாவினை) என்பதில் கொஞ்சம் நம்பிக்கை குறைவாக உள்ளது ஏனெனில் ஐ எம் எப் இன் கணக்காய்விற்கு வராமல் செய்ய முடியுமா எனத்தெரியவில்லை.

அப்படி செய்திருந்தால் ஐ எம் எப் இன் ஆதரவை இழக்க வேண்டிய நிலை உருவகும் அதன் மூலம் மேலதிக நிதி உதவி பெறுவதில் சிக்கல் நிலை உருவாகும் ஆனால் 2028 இல் தான் இலங்கை கடன் திருப்பி செலுத்தும் நிலையில் உள்ளதால் அதுவரை ஐ எம் எப் இன் உதவியில்லாமல் இலங்கையினால் சமாளிக்க முடியும் என கருதுகிறேன் (ஐ எம் எப் கடனுதவி 2 பில்லியன் மொத்தமாக என கருதுகிறேன்) ஆனால் கடன் வழங்கியவர்கள் கடுமையான நிபந்தனைகளை ஐ எம் எப் இல்லாவிடில் விதிக்கக்கூடும் என கருதுகிறேன்.

ஆனால் இந்த செய்தி உண்மையானால் இலங்கையிற்கு ஒரு மோசமான ஆட்சியின் மூலம் மோசமான எதிர்காலம் உருவாகலாம், அது இலங்கை தொடர்பான மோசமான விம்பத்தினை சர்வதேச நிதிச்சந்தையில் உருவாக்கிவிடும் அது ஒரு நீண்டகால பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

மேலுள்ள திரியில் உள்ள காணொளியில் வெளிநாட்டு தனியார் கடன்கள் 700 மில்லியன் டொலர்கள் அடுத்த மாதமோ/ஆண்டோ திருப்பி செலுத்த வேண்டும் என பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் அவர்கள் கூறுகிறார். அத்தோடு தற்போதைய அந்நியச் செலாவணிக் கையிருப்பு 6 பில்லியன் டொலர்கள் எனவும் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஏராளன் said:

மேலுள்ள திரியில் உள்ள காணொளியில் வெளிநாட்டு தனியார் கடன்கள் 700 மில்லியன் டொலர்கள் அடுத்த மாதமோ/ஆண்டோ திருப்பி செலுத்த வேண்டும் என பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் அவர்கள் கூறுகிறார். அத்தோடு தற்போதைய அந்நியச் செலாவணிக் கையிருப்பு 6 பில்லியன் டொலர்கள் எனவும் கூறினார்.

நன்றி ஏராளன், காணொளியினை இன்னமும் பார்க்கவில்லை, ஆனால் நீங்கள் கூறுவது சரிதான் என நினைக்கிறேன், நான் 2028 இல் தான் அனைத்து கடன்ங்களும் மீழளிக்கபடும் என நினைத்திருந்தேன் ஆனால் நீங்கள் கூறுவது போல தனியார் வர்த்தக கடஙள் அதற்கு முன்னதாகவே குறைந்த வட்டியுடன் திருப்பி செலுத்தப்படும் 12.5 பில்லியன் கடனில் 28% முகப்பெறுஅம்தியும் 11% வட்டிக்கழிவுடன் மீழ் கடன் செலுத்தல் MLB வகையான பணமுறி மூலம் திருப்பி செலுத்தப்பட உள்ளது, இலங்கை வளர்ச்சிப்பதையில் சென்றால் முகப்பெறுமதி கழிவு 15% ஆக குறைவடையும் (பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப மாறும் கடன் மீழளிப்பு)

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்: பொருளாதார நிவாரணமா அல்லது கடனாளியின் வீழ்ச்சியா?

நாட்டின் அபிவிருத்தி மற்றும் மக்கள் நலனைக் காட்டிலும் கடனாளிகளின் இலாபங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சுரண்டல் உலகளாவிய கடன் அமைப்பில் இலங்கையை மேலும் சிக்கவைக்கிறது இந்த ஒப்பந்தம்.

ரதீந்திர குருவிட்ட
ஜூலை 09, 2024
 
 
 
 
 
 
 
 
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்: பொருளாதார நிவாரணமா அல்லது கடனாளியின் வீழ்ச்சியா?

இலங்கையின் கொழும்பில் ஜூன் 26, 2023 அன்று ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர் ஒரு தொலைக்காட்சி உரையைப் பார்க்கும்போது உற்சாகப்படுத்துகிறார், அதில் இலங்கை ஜனாதிபதி இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தங்களை எட்டியுள்ளதாக அறிவித்தார், இது தீவின் நாட்டின் பொருளாதார மீட்சியின் முக்கிய படியாகும். 2022 இல் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதிலிருந்து,

நன்றி: AP புகைப்படம்/எரங்க ஜெயவர்தன

முக்கிய இருதரப்பு கடன் வழங்குனர்களுடனான ஒப்பந்தங்களின் முடிவில் , இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் வர்த்தக கடன் வழங்குநர்களுடன் (நாட்டின் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை (ISBs) வாங்கியவர்கள்) கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை எட்டியுள்ளதாக அறிவித்தது.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நாட்டின் $37 பில்லியன் வெளிநாட்டுக் கடனில், ISBகள் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் $12.5 பில்லியன்களாக இருந்தது. ஜூலை 3 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி , முதலீட்டாளர்கள் பத்திரங்களின் அசல் மீது 28 சதவிகிதம் பெயரளவு குறைப்புக்கு ஒப்புக்கொண்டனர். இந்த ஒப்பந்தத்தில் மேக்ரோ-இணைக்கப்பட்ட பத்திரங்கள் (MLB) அடங்கும், அதன் செலுத்துதல்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் சாத்தியமான ஆளுகை-இணைக்கப்பட்ட பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் பொருளாதார ஆய்வாளர் தனுஷ கிஹான் பத்திரன, அரசாங்கமும் பத்திரப்பதிவுதாரர்களும் உடன்படிக்கையை 28 வீத "முடி வெட்டு" என முன்வைக்கும் போது, ஒரு சொத்தின் பெறுமதியைக் குறைத்து, பத்திரதாரர்கள் அதனை மேலும் 15 வீதமாகக் குறைக்க முடியும் என்று கூறினார். சில பொருளாதார நிலைமைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

வளரும் நாடு கைச்சாத்திட்டுள்ள கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் இது மிகவும் பாதகமான ஒன்று என பத்திரன கூறினார். "இது ஜாம்பியாவின் 18 சதவிகிதம் மற்றும் கானாவின் 37 சதவிகிதம் முடி வெட்டுக்களை விட கணிசமாக சிறியது " என்று பத்திரனா கூறினார். இலங்கையைப் போலவே, ஜாம்பியாவும் கானாவும் கோவிட் தொற்றுநோயின் தாக்கங்களால் இயல்புநிலைக்கு வந்தன, மேலும் வலிமிகுந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இருவரும் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் நுழைந்தன .

ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை 2028 ஆம் ஆண்டு வரை சுமார் 3.75 வீதமான குறைந்த வட்டியை செலுத்த வேண்டும், ஆனால் 2028 ஆம் ஆண்டிலிருந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி 100 பில்லியன் டாலர்களைத் தாண்டினால், பத்திரதாரர்களுக்கு 8.2 சதவீத எடையுள்ள வட்டியை இலங்கை செலுத்த வேண்டும் என்று பத்திரன கூறினார். தற்போதைய போக்குகள், அதாவது, 2023 இல் பெயரளவு GDP மதிப்பு சுமார் 14 சதவீதம் அதிகரித்துள்ளது, இது மிகவும் சாத்தியம். அசல் வட்டி விகிதங்கள் 5 முதல் 7 சதவிகிதம் வரை இருந்ததால், பத்திரதாரர்களுக்கு இது ஒரு பெரிய விஷயம்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

விவாதங்களின் வரலாறு

அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் 2023 முதல் Ad-Hoc Group (AHG) உடன் நடைபெற்று வரும் விவாதங்களின் உச்சகட்டமாகும் . இலங்கையின் மிகப் பெரிய சர்வதேச ISB களை உள்ளடக்கிய AHG, வெளிநாட்டுக் கட்சிகள் வைத்திருக்கும் ISBகளில் சுமார் 50 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகிறது. நிதி ஆலோசகர்கள் ரோத்ஸ்சைல்ட் & கோ மற்றும் சட்ட ஆலோசகர்களான ஒயிட் & கேஸ் ஆகியோரால் ஆலோசனை செய்யப்பட்ட ஒரு வழிகாட்டுதல் குழுவால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.

ஒரு அறிக்கையில், இலங்கையின் நிதியமைச்சகம், "IMF இன் புதிய கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வு (DSA) கட்டமைப்பின் அடிப்படையில் கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்ட முதல் நாடுகளில்" நாடு உள்ளது என்று கூறியது. DSA இன் படி, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கு இலங்கை பல இலக்குகளை அடைய வேண்டும், 2022ல் 128 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்தில் இருந்து 2032க்குள் 95 சதவீதத்திற்கும் குறைவாக, மொத்த நிதி தேவைகளை (GFN) ஒரு சதவீதமாக குறைத்தல். 2022 இல் GDP 34.6 சதவீதத்தில் இருந்து 2027-2032 இல் சராசரியாக 13 சதவீதத்திற்கும் குறைவாகவும், மற்றும் 2022 இல் GDP இன் 9.2 லிருந்து 2027-2032 காலகட்டத்தில் 4.5 க்கும் குறைவாக வெளிநாட்டு நாணயக் கடன் சேவையின் சதவீதத்தை GDP இன் சதவீதமாகக் குறைக்கிறது.

வெளி கடனாளிகளை ஆறு குழுக்களாகப் பிரித்துள்ளதாகவும், அனைவருக்கும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்யும் போது அவர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் நிதி அமைச்சகம் கூறியது. இந்த கடன் வழங்குநர் குழுக்கள் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களின் (பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பானின் இணைத் தலைவர்) உத்தியோகபூர்வ கடன் குழுவாகும், அவர்கள் $5.8 பில்லியன் இலங்கைக் கடனைக் கொண்டுள்ளனர்; சீனா எக்ஸிம் வங்கி ($4.2 பில்லியன்); பிற உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் (குவைத், சவுதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் - $0.3 பில்லியன்); ISB வைத்திருப்பவர்கள் ($14.2 பில்லியன்); சீனா டெவலப்மென்ட் வங்கி ($3.2 பில்லியன்) மற்றும் பிற வணிக கடன் வழங்குபவர்கள் ($0.2 பில்லியனுக்கு கீழ்). இலங்கை கடந்த ஆண்டு உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை இறுதி செய்தது .

இருதரப்பு கடனாளர்களுடனான கலந்துரையாடல்கள் முன்னேற்றமடைந்து வருவதாகத் தோன்றினாலும், உத்தியோகபூர்வ கடன் குழு மற்றும் சீனாவின் எக்சிம் வங்கி ஆகியவை நாட்டை ஆதரிக்க ஒப்புக்கொண்டதால் , பத்திரதாரர்களுடனான விவாதங்கள் குறித்து கவலைகள் இருந்தன. இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை குறைத்து மதிப்பிட்டுள்ளதாக AHG நம்புகிறது. 2022ல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 74.85 பில்லியன் டாலர்களாக இருந்தது. 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.3 வீதத்தால் வீழ்ச்சியடைந்த போதிலும், 2024 ஆம் ஆண்டில் 2.2 வீதமாகவும் 2025 ஆம் ஆண்டில் 2.5 வீதமாகவும் வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது அதிக விகிதத்தில் வளர்ச்சியடையும் என்று பத்திரதாரர்கள் வாதிடுகின்றனர், இதனால் நாடு அதிக வட்டி வீதங்களை செலுத்த முடியும். தனியாருக்குச் சொந்தமான கடனின் மறுசீரமைப்பின் போது புதிய தொடர் பத்திரங்கள் வெளியிடப்படும்.

இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களில் இரு தரப்பினரும் இந்த வேறுபாடுகளை களைந்துள்ளதாக தெரிகிறது.  உத்தியோகபூர்வ கடன் குழு (OCC) மற்றும் சீனாவின் Exim Bank உடன் இலங்கை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட ஒரு நாளுக்குப் பிறகு, "AHG மற்றும் இலங்கை ஜூன் 27 - 28 தேதிகளில் பாரிஸில் கட்டுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியது" என்று நிதி அமைச்சகம் கூறுகிறது . இலங்கையின் கவலைகளை நிவர்த்தி செய்யும் புதிய பிரேரணையை AHG சமர்ப்பித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் வலியுறுத்துகிறது, அதாவது அடிப்படை அளவுருவின் தேர்வு, எதிர்மறையான அபாயத்தை உள்ளடக்கியமை, தூண்டுதலின் தேர்வு மற்றும் தலைகீழ் பங்கு.

IMF-ஆதரவு திட்டத்தின் ஜூன் 2024 இரண்டாவது மதிப்பாய்விலிருந்து இந்த ஒப்பந்தம் அடிப்படையை எடுக்கிறது மற்றும் அடிப்படை அளவுருவின் தேர்வாகப் பயன்படுத்தப்படும் என்று நிதி அமைச்சகம் கூறுகிறது . பாதகமான அபாயங்களைப் பகிர்ந்துகொள்வதில் உள்ள கவலைகளை நிவர்த்தி செய்ய, இரு தரப்பினரும் கூடுதலான பாதகமான சூழ்நிலைகளை இணைத்துள்ளனர். தூண்டுதலைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக, உண்மையான GDP வளர்ச்சியைக் காட்டிலும் நாணய மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே பெயரளவிலான அமெரிக்க டாலர் GDP அதிகரிக்கும் அபாயம் காரணமாக, Ad Hoc குழுவின் ஒற்றைத் தூண்டுதலுக்கான விருப்பம் குறித்து இலங்கை கவலை கொண்டுள்ளது. இது அரசாங்கத்தின் கட்டணத் திறனை அதிகரிக்காமல் அதிக பணம் செலுத்துவதற்கு வழிவகுக்கும். எனவே, உண்மையான GDP வளர்ச்சியைக் கைப்பற்றும் ஒரு "கட்டுப்பாட்டு மாறி" ஒப்புக்கொள்ளப்பட்டது. கூடுதலாக, கடனாளிக்கும் கடனாளிக்கும் இடையே உள்ள தலைகீழ் பங்கின் சமநிலையை உறுதி செய்வதற்காக, தலைகீழ் வரம்புகள் மற்றும் செலுத்துதல்கள் சரிசெய்யப்பட்டன.

கடனாளிகளுக்கு ஒரு வெற்றி

பத்திரப்பதிவுதாரர்களுடனான ஒப்பந்தத்தை தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களைக் கவருவதற்கான வெற்றியாக அரசாங்கம் சித்தரிக்கும் அதே வேளையில், 2038 ஆம் ஆண்டில் நாட்டின் ஐஎஸ்பி கடனைத் திருப்பிச் செலுத்தும் தொகையை 19.6 பில்லியன் டாலராக அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் பத்திரன சுட்டிக்காட்டினார். மோசமான சுமை மற்றும் நாட்டை மற்றொரு இயல்புநிலைக்கு அமைக்கிறது. லண்டன் பங்குச் சந்தை தாக்கல் படி , மறுகட்டமைக்கப்பட்ட கடனின் மொத்த அளவு $14.43 பில்லியன் ஆகும், இதில் $1.889 பில்லியன் காலாவதியான வட்டியும் அடங்கும்.

"மறுசீரமைப்பு ஒப்பந்தம் முதலில் $12.55 பில்லியன் மதிப்புள்ள பத்திரங்களின் மீதான 28 சதவீத கடனைக் குறைக்கிறது. எவ்வாறாயினும், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட பழமைவாத வரம்புகளுக்கு அப்பால் வளர்ந்தால், சலுகைகள் 28 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்படலாம். இதன் பொருள் பொருளாதார வளர்ச்சியின் பலன் மக்களுக்கு அல்ல, ஆனால் கடனாளிகளுக்கே கிடைக்கும்” என்று பத்திரன கூறினார்.

மற்ற நாடுகளின் அனுபவத்திற்கு கவனத்தை ஈர்த்து, பத்திரனா குறிப்பிட்டார், " கானா 2023 இல் 37 சதவீத கடன் குறைப்பை அடைந்தது மற்றும் நீண்ட முதிர்வு தேதிகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஜாம்பியா 18 சதவீத குறைப்பைப் பெற்றது மற்றும் அதன் முதிர்வுகளை 2030-2053 வரை நீட்டித்தது. ஈக்வடார் மற்றும் அர்ஜென்டினாவும் நீட்டிக்கப்பட்ட முதிர்வுகளுடன் பத்திரங்களை மீண்டும் வெளியிட முடிந்தது. மாறாக, இலங்கையின் ஒப்பந்தம் 2028 முதல் 2038 வரை முதிர்வு தேதியை நீட்டிக்கிறது, இது ஒப்பீட்டளவில் குறுகியதாகும்.

பத்திரன கூறுகையில், பத்திரதாரர்கள் இலங்கைக்கு அதிக வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கினர், வளரும் நாடு எதிர்பார்த்த கடனைத் திருப்பிச் செலுத்தாமல், நாட்டைக் கடன் சுழலில் சிக்க வைத்தது, ஆனால் கடன் மறுசீரமைப்பினால் கணிசமான இழப்புகளைச் சுமக்கவில்லை.

"இந்த இயக்கவியல் அதிக வட்டி விகிதங்களுடன் வளரும் நாடுகளுக்கு நியாயமற்ற முறையில் சுமைகளை ஏற்படுத்துகிறது, ஆனால் அதிக வட்டி சுமைகள் இறையாண்மைகளை இயல்புநிலைக்கு தள்ளும் சுய-நிறைவேற்ற தீர்க்கதரிசனத்தை உருவாக்கும் அபாயமும் உள்ளது. உண்மையில், கடன் மறுசீரமைப்பிற்கு முன்னும் பின்னும் பத்திரப்பதிவுதாரர்கள் வெற்றிபெறுவதைக் காணலாம், அதே சமயம் நாடுகளின் கடன் மறுசீரமைப்பு மற்றும் அவர்களின் குடிமக்கள் நிதி நெருக்கடியில் காத்திருப்பதைக் காணலாம்," பத்திரன கூறினார்.

உலகளாவிய கடன் நீதி அமைப்புகளும் அறிஞர்களும் ஒரு புதிய பாதைக்காக வாதிடுகின்றனர், கடன் நீதியை தொடரும் தொலைநோக்கு மற்றும் வலிமை கொண்ட அரசாங்கத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர். கொள்ளையடிக்கும் தனியார் கடனாளிகளை பொறுப்புக்கூற வைப்பதற்கு குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நள்ளிரவு உடன்படிக்கை வெற்றியல்ல, மாறாக நாட்டின் அபிவிருத்தி மற்றும் மக்கள் நலனை விட கடனாளிகளின் இலாபங்களை முதன்மைப்படுத்தும் சுரண்டல் உலகளாவிய கடன் அமைப்பில் இலங்கையை மேலும் சிக்க வைக்கும் ஆபத்தான ஏமாற்று வேலையாகும். இந்த சுழற்சியில் இருந்து விடுபட்டு இலங்கைக்கு நிலையான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு கடன் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கிய தீவிர அரசியல் மாற்றம் அவசரமாக தேவைப்படுகிறது.

த டிப்ளோமற் இணைய தள செய்தி கூகிள் மொழிபெயர்ப்பின் உதவியினூடாக.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏராளன் நீங்கள் கூறியது போல இலங்கை 5.9 பில்லியன் அன்னிய செலாவணி இருப்பை கொண்டுள்ளது மாதம் ஒன்றிற்கு 200 மில்லியன் தொடக்கம் 350 மில்லியன் வரை அன்னியசெலாவணி இருப்பு  அண்ணளவாக அதிகரிக்கிறது

https://tradingeconomics.com/sri-lanka/foreign-exchange-reserves

அவ்வாறாயின் பேராசிரியர் கூறியதாக கூறிய 700 மில்லியன் (1.4 பில்லியன் ஆண்டிற்கு வரும் என கருதுகிறேன்) கொடுப்பனவுகள் 3 -4 ஆண்டுகளுக்கு பிரச்சினை ஏற்படாது என கருதுகிறேன் (இலங்கையில் ஒரு குழப்பமும் நிலவாவிட்டால்).

ஆனால் கத்தியில் நடப்பது போலவே நிலமை இருக்கிறது, தற்போதய அரசின் செலவீடுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் நிலமை மோசமாகலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த ஆட்சியை இலகுவில் கவிழ்த்துவிடவே முடியாது; அநுர சூளுரை

“அறுகம்பே சம்பவத்தை அடிப்படையாக வைத்தேனும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

களுத்துறையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

“ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் டொலரின் பெறுமதி 400 ரூபா வரை செல்லும் என பிரச்சாரம் செய்தனர். இன்று அவ்வாறு நடந்துள்ளதா? இல்லை.

எமது பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதித்துடன் பேச்சு நடத்தி வருகின்றனர். சாதகமான பிரதிபலன் கிட்டியுள்ளது. மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

எமது ஆட்சியில் அஸ்வெசும இல்லாமல் செய்யப்படும் என்றனர். அதுவும் நடக்கவில்லை. அன்று கூறிய அனைத்தும் பொய்யென உறுதியாகியுள்ளது.

எனவே, பொய்களை நம்பி எவரேனும் ஏமாந்திருந்தால் அவர்களும் இன்று உண்மையை உணர்ந்திருப்பார்கள்.

எனவே, எமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை மக்கள் வழங்குவார்கள். இதனால் சிலர் குழம்பிப் போயுள்ளனர். ஏதேனும் சிறு சம்பவம் நடந்தால்கூட ஆட்சி கவிழுமா என எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

அறுகம்பே சம்பவம் தொடர்பில் அனைவரும் ஊடக சந்திப்புகளை நடத்துகின்றனர். அதன் மூலமாகவேனும் ஆட்சி கவிழுமா என்ற சந்தோசத்தில் அவர்கள் உள்ளனர்.

மூன்று வாரங்களுக்கு முன்னரே எமக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுற்றுலாத்துறையும் பாதிக்காத வகையில் திட்டமிட்ட அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் அதேவேளை திட்டமிட்டவர்களையும் கைது செய்வதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/311314



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு குழந்தையின் இறப்பில் மகிழ்சி கொள்ளும் ஒருவன் இருந்தும் பிணம் இறந்தும் பிணம்.
    • கவலைப்படாதீர்கள், அடுத்த தேர்தலில்,  மக்கள் உங்கள் ஆலோசனையின்படி அனுராவை தெரிந்தெடுத்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள்! அப்போ....மக்கள் அவருக்கு வாக்குப்போட வில்லையா? ஏன் அவர்கள் அனுராவிடம் கேட்க வேண்டும்? சாணக்கியன் இந்தப்பிரச்சனையில் தலையிடத்தேவையில்லையா? அல்லது அதை கதைக்க தைரியமில்லையா? அவருக்கு வாக்குப்போட்ட மக்களை அவமதிக்கிறீர்கள் நீங்கள் இப்படிச்சொல்லி!              
    • இதில் என்ன சந்தேகம்,.. கயாலாகாதவர்கலால்  தமிழரசுக் கட்சி நிறைந்திருக்கும்வரை  சும்மும் இருப்பார்.  🤣  
    • படிகள் | அரவிந்தன் ஓவியம்: Gautam Mukherjee   “நல்லவேளை, எலும்பு எதுவும் முறியல. இன்னும் கொஞ்சம் பெசகியிருந்தா கணுக்கால் எலும்பு முறிஞ்சிருக்கும்” என்றார் டாக்டர். நீலகண்டன் அவர் கட்டுப் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். “குறைஞ்சது மூணு நாளாவது இந்தக் காலுக்கு ரெஸ்ட் குடுங்க. கூடியவரைக்கும் நடக்காதீங்க. நடந்தாலும் இந்தக் கால்ல உடம்பைத் தாங்காதீங்க. உக்காரும்போதும் படுக்கும்போதும் காலை மேல தூக்கி வெச்சிக்கங்க. எவ்வளவுக்கு எவ்வளவு ரெஸ்ட் குடுக்கறீங்களோ அவ்வளவு சீக்கிரம் சரியாகும்.” கட்டு, கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தது. நீலகண்டன், டாக்டரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். உடன் வந்திருந்த சந்திரமோகனின் தோளைப் பற்றியபடி மெதுவாக நடந்து வெளியில் வந்தான். இருவரும் ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். நல்லவேளை என்று டாக்டர் சொன்னது நீலகண்டனின் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. நல்லவேளைதான். இடுப்பில் அடிபடவில்லை. காலையில் அந்தப் பல்லங்காடிக்குச் சென்றபோது மனம் மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருந்தது. வழக்கத்தைக் காட்டிலும் வண்டியை வேகமாக ஓட்டினான். வண்டியை நிறுத்திவிட்டு நடந்து வருகையில் வழக்கத்தைக் காட்டிலும் நடை வேகம் கூடியிருந்தது. சொல்லப்போனால் சிறு துள்ளல் இருந்தது. பக்கத்தில் வந்த சந்திரமோகன் வியப்பாகப் பார்த்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அங்காடியின் நுழைவாயிலுக்கு முன்பு மூன்று படிகள் இருந்தன. நீலகண்டன் தரையிலிருந்து தன்னையறியாமல் துள்ளி மூன்றாம் படிக்குத் தாவினான். மூன்றாம் படியில் காலை வைக்கும்போது கால் பிரண்டு தடுமாறி விழுந்தான். சந்திரமோகன் பதறிப்போய்த் தாங்கிப் பிடித்தான். நீலகண்டன் சுதாரித்தபடி எழுந்து நின்றான். லேசாக வலித்தது. அங்காடியின் நுழைவாயிலில் இருந்த காவலர் தன்னுடைய நாற்காலியில் உட்காரச் சொன்னார். சந்திரமோகன் உள்ளே சென்று தண்ணீர் வாங்கிவந்து குடிக்கச் சொன்னாள். நேரமாக ஆகக் கால் வலி கூடியபடி இருந்தது. ஏதேனும் பெரிதாக அடிபட்டிருக்குமோ என்று பயந்த நீலகண்டன் கால் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க எழுந்து நின்றான். மறுகணம் உடல் முழுவதும் உதறலெடுக்க, சடாரென்று உட்கார்ந்துகொண்டான். காலைக் கீழே வைக்கையில் பொறுக்க முடியாத வலி உடல் முழுவதையும் உலுக்கியது. சந்திரமோகன் பயந்துபோனான். “என்ன ஆச்சு நீலா…” என்று அவன் தோள்களைப் பற்றினான். நீலகண்டன் சற்று ஆசுவாசமடைந்ததும் சந்திரமோகன் கீழே மண்டியிட்டு அமர்ந்து நீலகண்டனின் காலைப் பார்த்தான். “செருப்ப கழட்டு” என்றான். நீலகண்டன் கழற்றினான். சந்திரமோகன் அவன் காலைத் தொட்டதும் நீலகண்டன் விறுக்கென்று காலை இழுத்துக்கொண்டான். சந்திமோகன் கவலையுடன் நீலகண்டனின் முகத்தைப் பார்த்தான். “ஃப்ராக்சரா இருக்குமோன்று தோணுது நீலா…” என்றான் தணிந்த குரலில். நீலகண்டனின் முகத்தில் வலியின் வேதனை படர்ந்திருந்தது. இடுப்பில் ஏதாவது ஆகியிருக்கிறதா என்று லேசாக இடுப்பை அசைத்துப் பார்த்தான். நல்லவேளை. ஒன்றுமில்லை. “எதுக்கு சார் ஜம்ப் பண்ணி வந்தீங்க?” என்று காவலர் கவலையோடு கேட்டார். நீலகண்டன் தலையைக் குனிந்துகொண்டான். சந்திரமோகன் கேட்க விரும்பிய கேள்விதான் அது என்றாலும் இந்த நேரத்தில் அதைக் கேட்கக் கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். ஆட்டோ பிடித்து இருவரும் மருத்துவமனை சென்றார்கள். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த டாக்டர் எலும்பு முறிவு இல்லை என்று சொன்னார். உள்ளே பலமாக அடிபட்டிருக்கிறது என்றார். அவனை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போன சந்திரமோகன், நீலகண்டன் மனைவியிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டுக் கிளம்பினான். வண்டியை மாலையில் கொண்டுவருவதாகச் சொன்னான். “உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? படியில ஒழுங்கா ஏற மாட்டீங்களா? அவ்வளவு என்ன அவசரம்?” என்று கேட்டாள் மஞ்சு. நீலகண்டன் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து மஞ்சுவே தொடர்ந்தாள். “ரொம்ப பாத்து பாத்துதானே படில ஏறுவீங்க? இன்னிக்கு என்ன ஆச்சு?” என்றாள். நீலகண்டன் பதில் சொல்லவில்லை. அவனுடைய அமைதியைக் கண்டு மஞ்சுவும் அமைதியானாள். அவள் முகத்தில் தெரிந்த வேதனை நீலகண்டனை வருத்தியது. “டீ போட்டு தரயா?” என்றான் நீலகண்டன். மஞ்சு எழுந்து உள்ளே போனாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்காடியின் படிகளில் துள்ளி ஏறிய கணம் திரும்பத் திரும்ப அவன் மனதில் தோன்றியபடி இருந்தது. தெருவின் முனையில் இருந்த பிள்ளையார் கோவிலை ஒட்டித் திரும்பியதும் அவன் கண்கள் ரயில் நிலையத்தின் மதில் சுவருக்கு அப்பால் நீளும் தண்டவாளத்தைப் பார்த்தன. ரயில் வருவது தெரிந்தது. ஓட்டமெடுக்கத் தொடங்கினான். இங்கிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ரயில் நிலைய வாசல். பிறகு 22 படிகள். பிறகு 50 அடி நடைபாதை. அதன் பிறகு 22 படிகள். நடந்துபோனால் ரயில் வந்துவிட்டுப் போய்விடும். வேகமாக ஓடி ரயில் நிலையத்தை அடைந்து, மக்கள் கூட்டத்திடையே புகுந்து ஓடி, மூன்று மூன்று படிகளாகத் தாவி ஏறி, படிகளுக்கிடையில் இருந்த பாதையை வேகமாகக் கடந்து மூன்று மூன்று படிகளாகத் தாவி இறங்குவதற்கும் ரயில் நிலையத்திற்குள் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. ரயிலில் ஏறி ஓரமாக நின்றுகொண்டான். இது அடிக்கடி நடப்பதுதான். 8.36க்கு மாம்பலம் வர வேண்டிய ரயில் இரண்டு மூன்று நிமிடங்கள் தாமதமாக வருவது வழக்கம். நீலகண்டன் 8.35க்குள் ரயில் நிலையத்துக்குள் வந்தால் போதும். ஆனால், அப்படி வருவது அபூர்வம். தாமதமாக வந்து இப்படி ஓடியும் தாவியும் ரயிலைப் பிடிப்பதே வழக்கமாகிவிட்டது. சில சமயம் கணக்குச் சற்றுப் பிசகி ரயில் கிளம்பியிருக்கும். அப்படியும் விடாமல் ஓடி அது ரயில் நிலையத்தைக் கடக்கு முன் தாவி ஏறிவிடுவான். பள்ளியில் படிக்கும்போது நீலகண்டன் எல்லா விளையாட்டுக்களிலும் கலந்துகொள்வான். கபடி, கோகோ, வாலிபால், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் என்று எல்லாவற்றிலும் தீவிரமாக ஈடுபடுவான். விளையாட்டின் வேகம் விளையாடாதபோதும் உடல் முழுவதும் பரவியிருக்கும். எதையும் மெதுவாகச் செய்யும் வழக்கம் இல்லை. எனவே நடந்து வந்து ஆசுவாசமாக ரயிலில் ஏறவில்லை என்ற குறையே அவனுக்குத் தெரியவில்லை. ஓடி வந்து ஏறுவதையே இயல்பானதாக அவன் மனம் கருதியது. ஓடி வந்து ரயிலில் ஏறுவது, படிகளில் தாவித் தாவி ஏறுவது, இறங்குவது, சைக்கிளை வேகமாக ஓட்டுவது, மழைக்காலங்களில் சாலைகளில் இருக்கும் சிறிய நீர்த்தேக்கங்களைத் தாண்டிக் கடப்பது என வேகமான இயக்கம் உடலில் இயல்பாகிவிட்டது. தேநீர் இதமாக இருந்தது. மஞ்சு மீண்டும் எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்ததுக் கொண்டிருந்தான். மாத்திரைகள் இன்னும் வேலைசெய்ய ஆரம்பிக்கவில்லை. வலி குறையவில்லை. அவன் கவனம் வலியில் இல்லை. அங்காடியின் முன் படிகளில் தாவி ஏறிய கணம் மனதில் மின்னலடித்துக் கொண்டிருந்தது. மாலதி புன்னகைத்தாள். “என்ன இது, சின்னப் பையன் மாதிரி” என்றாள். “எது!” என்றான் அவள் வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றியவாறே. அவன் உள்ளே வர ஒதுங்கி வழிவிட்ட மாலதி, “வாசப்படில ஏறி வர்ரதுக்குப் பதிலா தாண்டி வந்தீங்களே அதைச் சொன்னேன்” என்றாள். நீலகண்டன் சிரித்தான். “தாவியா வந்தேன்? எனக்குத் தெரியல. இதையெல்லாம் யோசிச்சா செய்வாங்க?” என்றான். மாலதியும் சிரித்தாள். “பரவால்ல. நீங்க நேச்சுரல் அத்லீட்தான்” என்றாள். நீலகண்டன் அந்தப் பாராட்டைப் புன்னைகையுடன் ஏற்றுக்கொண்டான். “டீயா, காஃபியா?” “ம்… டீ. கொஞ்ச நேரம் கழிச்சு. இப்பதான் காஃபி சாப்ட்டேன்.” “ஓ.கே…. சொல்லுங்க நீலகண்டன்… ஈவன்ட எப்டி ப்ளான் பண்ணியிருக்கீங்க?” நீலகண்டன் விளக்க ஆரம்பித்தான். மாலதி உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய திருத்தமான புருவங்கள், அகன்ற விழிகள், நேர்த்தியான மூக்கு, எப்போதும் புன்னகையைப் பிரதிபலிக்கும் அழகிய உதடுகள், சற்றே துருத்தி நிற்கும் உருண்டையான மோவாய், புஷ்டியான கன்னங்கள், தலையாட்டும்போது அழகாக ஆடும் காதணிகள், அவ்வப்போது முகத்தில் வந்து விழுந்து அழகைக் கூட்டும் மயிர்க் கற்றைகள், அதை விலக்கிவிடும் அவள் விரல்களின் நேர்த்தியான அசைவுகள் என அவளுடைய அழகை ரசித்தபடி நீலகண்டன் பேசிக்கொண்டிருந்தான். “ஜஸ்ட் எ மினிட்” என்று மாலதி எழுந்துகொண்டாள். அவள் வயதுக்குப் பெரிய உடம்புதான். எழுந்திருப்பதில் சிரமம் தெரிந்தது. மெல்ல நடந்து சென்று குளிர்பதனப் பெட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தாள். அதை அவன் கையில் கொடுத்துவிட்டு இருக்கையின் மீது இரு கைகளையும் ஊன்றியபடி மிகவும் கவனமாக அமர்ந்துகொண்டாள். நடமாட்டத்தில் அவள் பட்ட சிரமங்களைக் கண்டு நீலகண்டன் வருந்தினான். பாட்டிலைக் கீழே வைத்துவிட்டுக் கேட்டான். “எனக்குத் தண்ணி வேணும்னு ஒங்களுக்கு எப்படித் தெரிஞ்சிது?” மாலதி புன்னகைத்தாள். வசீகரமான அந்தப் புன்னகை நீலகண்டனை மயக்கியது. “நீங்க பேசும்போது உங்க நாக்கு ட்ரையா இருந்தது தெரிஞ்சுது” என்றாள். நன்றியைப் புன்னகையால் தெரிவித்த நீலகண்டன் பாட்டிலைக் கையில் எடுத்தபடி எழுந்துகொண்டான். “இஃப் யூ டோன்ட் மைன்ட், நானே உள்ள போய் நார்மல் வாட்டர் எடுத்துக்கலாமா? கோல்ட் வாட்டர் குடிக்கறதில்ல” என்றான். “ஓ ஸாரி…” என்றபடி எழுந்திருக்க முயன்றாள். அவள் நினைத்தாலும் சட்டென்று எழுந்திருக்க முடியாது என்பதை அறிந்த நீலகண்டன், “ப்ளீஸ்… நீங்க இருங்க. நா எடுத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் பாட்டிலை மீண்டும் குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிட்டு வெளியிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு வந்தான். போகும்போதும் வரும்போதும் தன்னுடைய வழக்கமான வேகத்தைக் கவனமாகக் குறைத்துக்கொண்டான். மீண்டும் பேசத் தொடங்கினான். “வீக் என்ட்ல டி.நகர், நுங்கம்பாக்கம் ஏரியல கூட்டம் அதிகமா இருக்கும்ன்றதால மாம்பலத்துல வெச்சிருக்கோம். நல்லவேளயா பார்க்கிங் ஸ்பேஸோட பெரிய இடம் கிடைச்சிருக்கு…” என்று சொன்னவன் மாலதி தன் உரையாடலைப் பின்தொடரவில்லை என்பதை அறிந்து பேச்சை நிறுத்தினான். அவள் கண்கள் எதிரில் இருந்த சுவரை வெறித்தபடி இருந்தன. அவள் தற்கணத்தில் இல்லை என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. அவளது பருத்த மார்புகள் விம்மித் தாழ்ந்தன. மடியின் மீது வைத்திருந்த கைகளின் பருமன் ஒரு கணம் அவனை அச்சுறுத்தியது. சற்று அகலமான அந்த இருக்கையில் தன்னைப் பொருத்திக்கொள்ள அவள் சிரமப்படுவது தெரிந்தது. அதே அளவுள்ள இருக்கை தனக்கு இடம் கொடுத்துக் கிட்டத்தட்டப் பாதி அளவு காலியாக இருப்பது அவனுக்கு உறைத்தது. இந்தப் பருமன் இயல்பானதல்ல என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. முகத்தின் அழகும் அதில் ததும்பும் குழந்தைத்தனமும் அவள் உடலுக்குச் சற்றும் பொருந்தாமல் இருந்தன. அதிகபட்சம் இவளுக்கு 30 வயது இருக்கலாம். சூமோ பயில்வானைப் போல உடல் இல்லாவிட்டால் அவளைப் பேரழகிகள் பட்டியலில் எளிதாகச் சேர்த்துவிடலாம். நல்ல உயரம். நீளமான விரல்கள். செதுக்கிய சிலை போன்ற முகம். இவளுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை என்று நீலகண்டன் வருந்தினான். “நீலன்…” என்றாள். தனிப்பட்ட முறையில் பேசும்போது நீலன் என்றுதான் அழைப்பாள். அவள் பேசவிருப்பது அடுத்த மாத நிகழ்வைப் பற்றியல்ல என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான். “யூ நோ… ஐம் எ க்லாஸிகல் டான்சர். போத் பரதம் அன்ட் வெஸ்டன்…” என்றாள். முகத்தில் விழும் மயிர்க் கற்றைகளை விலக்கிய விரல்களின் நளினத்திலும் தண்ணீர் பாட்லை நீட்டிய விதத்திலும் அவளுக்குள் இருந்த நடனமணியை உணர்ந்திருந்ததால் நீலகண்டனுக்கு இந்தத் தகவல் வியப்பளிக்கவில்லை. தான் கேட்க நினைத்ததை உணர்ந்து அவளே அதைப் பற்றிப் பேசத் தொடங்கியதுதான் வியப்பாக இருந்தது. “காலேஜ் கல்சுரல்ஸ், அவுட்டிங்னு எதுவா இருந்தாலும் என்னோட டான்ஸ் இல்லாம இருக்காது. அதுவும் பஸ்ல ஆடின ஆட்டமெல்லாம் மறக்க முடியாது. சிம்ரன் டான்ஸெயெல்லாம் கேட்டு கேட்டு ஆடச் சொல்லுவாங்க. ஒரு மணிநேரமெல்லாம் சலிக்காம ஆடுவேன்…” என்றாள். நீலகண்டன் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. அதற்குத் தேவையும் இல்லை என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. மாலதி தனக்குள் ஆழ்ந்திருந்தாள். தன்னியல்பாக அவள் குரல் ஒலித்தது. மார்புகள் விம்மித் தணிந்தபடி இருந்தன. “போன மாசம் நடந்த ஈவன்ட்ல நீங்க எனக்குப் பண்ணின உதவிய மறக்க மாட்டேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஆம்பளைங்க வயசு வித்தியாசம் இல்லாம என்னை சுத்தி சுத்தி வருவாங்க. நான் எப்பவும் மான்போலத் துள்ளிக்கிட்டே இருப்பேன். காலேஜ் பியூட்டி கன்டெஸ்ட்ல மூணு வருஷமும் நான்தான் வின்னர். பசங்க எங்கூட பேசவும் என்னோட நடந்து வரவும் என்ன வண்டில கூட்டிட்டு போகவும் தவம் கெடப்பாங்க. ஆனா இப்ப ஒருத்தனும் கிட்ட வர்ரதில்ல. என் ஒடம்பு அவங்கள மெரட்டி தொரத்தி அடிக்குது. தூரத்துலருந்தே ஒரு ஹாய், ஒரு ஸ்மைல்னு நிறுத்திக்கறாங்க. அழகில்லாத கேல்ஸ ஆம்பளைங்களுக்குப் பிடிக்கறதில்லன்னு நெனைக்கறேன். க்லோஸ் ஃப்ரென்ஸ்கூட கொஞ்சம் தள்ளிப்போக ஆரம்பிச்சபோதுதான் அந்த க்லோஸ்னஸ்ஸுக்கு அர்த்தம் புரிஞ்சிது. எனக்கு அண்ணன் தம்பி யாருமில்ல. அப்பா நான் சின்னவளா இருக்கும்போதே வீட்ட விட்டு ஓடிப்போயிட்டாரு. அவரை நேர்ல பாத்த ஞாபகம்கூட எனக்கு இல்ல. போட்டோல பாத்துருக்கேன். ரொம்ப அழகா, ஸ்லிம்மா, ஸ்மார்ட்டா இருப்பாரு. அம்மா பிரசவத்துக்கப்பறம் கொஞ்சம் குண்டடிச்சிட்டாங்க. சைல்ட் கேர், ஃபேமலி கேர், ஆஃபீஸ் வேலைன்னு மூழ்கிப்போனதுல அவங்க பழைய ஸ்டேஜுக்கு வரவேயில்ல. ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்ட நடக்கும். அப்பா கோபத்துல கத்தி எதையாவது தூக்கி வீசிட்டு போயிடுவாரு. அப்படி ஒருநாள் போனவர் திரும்பி வரவேயில்ல. அப்படியும் எப்பவோ ஒரு பொண்ணோட அவரை அம்மா எங்கயோ பாத்துருக்கா. அந்தப் பொண்ணு பாக்க நக்மா மாதிரி இருந்தான்னு எங்கிட்ட சொல்லும்போது அம்மா குமுறிக் குமுறி அழுதா. நக்மா மாதிரின்னா என்னன்னு புரிஞ்சிக்கற அளவுக்கு அப்ப எனக்கு வயசாயிருந்துது. அதுக்கு மேல எதுவும் பேசல. அம்மா இன்னும் அதிகமா குண்டாயிட்டே போனா. ஆனா என்ன ரொம்ப நல்லா பாத்துக்கிட்டா. டான்ஸ், கராத்தே, மியூஸிக் எல்லாம் கத்துக்க வெச்சா. அவளே கணக்கு, அக்கவுன்ட்ஸ் எல்லாம் சொல்லித் தருவா. ப்ரில்லியன்ட் டீச்சர். ஒரு வருஷத்து சுமையை ஒரே மாசத்துல கொறச்சிட்டா…” மாலதி மூச்சு வாங்கிக்கொண்டாள். கண்களை மூடிக்கொண்டாள். சிறிது நேரம் கழித்துத் தொடர்ந்தாள். “எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்ல? போன மாச ஈவன்ட்ல நான் படி ஏற கஷ்டப்பட்டபோது நீங்கதான் ஓடிவந்து ஹெல்ப் பண்ணினீங்க. உங்க தோள புடிச்கிக்கிட்டு பாதுகாப்பா படி ஏறினேன் இறங்கும்போதும் மறக்காம என்கூட வந்தீங்க. இவ்வளவு பெரிய ஹால்ல ஸ்டெப்ஸுக்குக் கைப்பிடி வெக்கணும்ன்ற அறிவுகூட இல்லாம கட்டியிருக்காங்க. நான் ஏதாவது ஹெல்ப் கேக்க மாட்டனான்னு என்ன பாத்து ஏங்கற ஆம்பளைங்களைப் பாத்து பாத்து சலிச்சிருக்கேன். அதே ஆம்பளைங்க இப்ப சம்பிரதாயமா ஹாய் சொல்லிட்டு ஒதுங்கறதயும் பாக்கறேன். ஆனா நீங்க அப்படி இல்ல. நீங்க பண்ணின உதவிய மறக்கவே மாட்டேன்…” நீலகண்டன் நெகிழ்ந்து போயிருந்தான். “அதெல்லாம் ஒரு ஹெல்ப்பா மாலதி? எனக்கு முதுடியலன்னா நீங்க கை குடுக்க மாட்டீங்களா?” “நானா, இப்ப இருக்கற நெலமைலயா?” என்று விரக்தியாகச் சிரித்த மாலதி, “அஃப்கோர்ஸ். நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியுது. அப்டி ஹெல்ப் பண்றதுதான் ஹ்யூமன் டென்டன்ஸி. அப்படித்தான் நானும் நம்பறேன். ஆனா அழகான பொண்ணுக்குக் கிடைக்கற உதவில நூத்துல ஒரு பங்குகூட அழகில்லாத பொண்ணுக்குக் கிடைக்காதுன்றத புரிஞ்சிகிட்டபோது மனசுல கூர்மையா ஒரு வலி வருது. அந்த வலியதான் தாங்க முடியல. அதுவும் எப்பவும் ஜென்ஸ் எங்கிட்ட கையேந்தி நிக்கறத பாத்து வளந்ததுனால இந்த வலி இன்னும் அதிகமாகுது…” மாலதி கண்களைத் திறக்கவில்லை. அவள் முகம் வாடியிருந்தது. நீலகண்டனால் எதுவும் பேச முடியவில்லை. அங்கு நிலவிய மௌனமே அவஸ்தையாக மாறத் தொடங்கியபோது நீலகண்டன் மௌனத்தைக் கலைத்தான். “எப்படி இந்த மாதிரி ஆச்சு மாலதி?” மாலதி கண்களைத் திறந்தாள். “பொண்ணா பொறந்த சாபம் நீலன். மென்ஸ்டுரல் ப்ராப்ளம்லதான் எல்லாம் ஆரம்பிச்சுது. இர்ரெகுலர் பீரியட்ஸ். சில சமயம் மூணு நாலு மாசம்கூட பீரியட்ஸ் வராது. அதுக்கு ட்ரீட்மென்ட் எடுக்கப்போய் அதோட சைட் எஃப்க்ட்ஸ் ஒடம்பையும் மனசையும் பாதிக்க ஆரம்பிச்சுது. நடுவுல யாரோ சொன்னாங்கன்னு டாக்டர மாத்தி, ஆல்ட்ர்னேட் மெடிசனுக்கு மாறி, மறுபடியும் ஆலோபதிக்கு வந்து அப்டீன்னு ஏகப்பட்ட அலக்கழிப்பு. இந்த வயசுல எப்பவும் மாத்தர சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்னு நெனச்சாலே கொலவெறி வரும். பீரியட்ஸ் வரதுக்காக கான்ட்ராசெப்டிவ் மாத்திரை சாப்பிட்டு அதனால ஒபிசிட்டி வந்து, ஒபிசிட்டியால டிப்ரஷன் வந்து, டிப்ரஷனால அதிகம் சாப்ட்டுன்னு விஷஸ் சர்க்கில்ல மாட்டிக்கிட்டேன். ஒருவழியா மாத்திரைகள்லேந்து விடுதலையாறதுக்குள்ள ஒடம்பு ரொம்ப பெருத்துப் போச்சு. அதைக் குறைக்கணும்னா டயட், எக்சர்சைஸ்னு எல்லாத்தையும் கவனிக்கணும். வேலைக்குப் போய்கிட்டே இதையும் கவனிக்க முடியல. ஒரு ஸ்டேஜ்ல போதுண்டா சாமின்னு எல்லாத்தையும் உட்டுட்டேன். ஒடமபு குண்டானதால கழுத்து வலி, இடுப்பு வலி, முட்டி வலின்னு இலவச இணைப்பா நெறய வலி. இத்தனையும் சுமந்துக்கிட்டு எதுக்காக இன்னும் உயிரோட இருக்கேன்னு எனக்கு நெஜமாகவே தெரியல…” மாலதியின் கண்கள் கலங்கியிருந்தன. கண்களைத் துடைக்க அவள் முயலவில்லை. பார்வை விட்டத்தில் நிலைகுத்தியிருந்தது. அவளுக்கு ஆறுதலாகச் சொல்ல அர்த்தமுள்ள ஒரு சொல்கூடத் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த நீலகண்டன் மௌனமாக அமர்ந்திருந்தான். “என் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம என் பின்னால ஓடிவந்த ஆம்பளைங்க, என் பக்கத்துல நின்னு பேசவே அவ்ளோ ஆசைப்பட்ட ஆம்பளைங்க இப்ப என்னைப் பாத்து அரை சிரிப்பு சிரிச்சிட்டு ஒதுங்கிப் போறததான் என்னால தாங்கவே முடியல…” “அது உண்மையிலேயே அவ்வளோ முக்கியமா மாலதி?” நீலகண்டன் மெல்லிய குரலில் கேட்டான். “ஆக்சுவலா பாத்தா இல்லதான். ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் இருந்த நிலமயோட கம்பேர் பண்ணும்போது மனசு கேக்க மாட்டேங்குது. இதுலேந்து எப்படி வெளில வரதுன்னு தெரியல. மேபி உங்கள மாதிரி இன்னும் ஒண்ணு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்போல இருக்கு.” அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைக்காமல் போக மாட்டார்கள் என்று சொல்ல நினைத்து நிறுத்திக்கொண்டான். இதுபோன்ற ஆயத்த பதில்கள் அவளை மேலும் சோர்வடையச் செய்யும் என்று நினைத்தான். “ஸாரி நீலன். ரொம்ப பேசிட்டேன்னு நெனைக்கறேன். ரொம்ப ஸாரி… நீங்க வந்த விஷயத்தையே மறந்துட்டேன். கொஞ்சம் இருங்க டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.” கஷ்டப்பட்டு எழ முயன்றவளுக்குக் கை கொடுத்து உதவிய நீலகண்டன், “வாங்க, ரெண்டு பேரும் சேந்து டீ போடலாம்” என்றான். “டீ போடறதுக்கு ரெண்டு பேரா” என்று சொன்னபடியே எழுந்துகொண்ட மாலதி கலகலவென்று சிரித்தாள். கல்லூரியில் அவள் வாங்கிய அழகிப் பட்டங்களுக்கான அடையாளமாய் இருந்தது அந்தச் சிரிப்பு. அந்த அழகான முகத்திற்குக் கீழே மெலிந்த கட்டுடலையும் அந்த உடல் ‘மனம் விரும்புதே’ பாடலுக்கு நடனமாடுவதையும் நீலகண்டன் ஒருகணம் கற்பனை செய்துபார்த்தான். “வலி இப்ப எப்படி இருக்கு?” என்றாள் மஞ்சு. தூக்கத்திலிருந்து முழுமையாக வெளியே வராத நீலகண்டன் காலை அசைத்துப் பார்த்தான் சுரீரென்று வலித்தது. வலியின் வெளிப்பாடு முகத்தில் தெரிந்ததைக் கண்ட மஞ்சு பதறினாள். “அடிபட்ட கால அசைக்கக் கூடாதுன்னு தெரியாதா? எதுக்கு இந்த வேல உங்களுக்கு” என்றாள். நீலகண்டன் அசையாமல் படுத்திருந்தான். “சாப்பிடறீங்களா?” என்றாள் மஞ்சு. “பாத்ரூம் போகணும்” என்றான். மஞ்சு கைத்தாங்கலாக அவனைக் கட்டிலிலிருந்து கீழே இறக்கிக் கழிவறைக்கு அழைத்துச் சொன்றாள். மனைவியாகவே இருந்தாலும் இன்னொருவரின் துணையோடு நடக்க வேண்டியிருப்பதை எண்ணி மனம் வருந்தியது. கல்லூரிகளுக்கிடையிலான வாலிபால் போட்டிக்கான பயிற்சிகளும் பயிற்சி ஆட்டமும் முடிய நெடுநேரம் ஆகிவிட்டது. சாம்பல் போர்வை பூமியின் மீது படர ஆரம்பித்திருந்தது. ஆடுகளத்திலிருந்து வண்டியை ஓடடிக்கொண்டு காலியாக இருந்த கல்லுரி வளாகத்தைத் தாண்டும்போது மதில் சுவரின் ஒரு கோடியில் ஏதோ சலனம் கண்டு திரும்பிப் பார்த்தான். யாரோ ஒருவன் இன்னொருவனைப் பலமாகத் தாக்கியது தெரிந்தது. அடி வாங்கியவன் தடுமாறிப் பின்னால் போனபோது இன்னொருவன் அவனை எட்டி உதைத்தான். அடி வாங்கியவன் பின்புறமாகத் தரையில் விழுந்தான். தடுமாறி எழுந்து ஓடப் பார்த்தவனை மூன்றாமவன் இடுப்பில் எட்டி உதைத்தான். அவன் சுருண்டு கீழே விழுந்தான். நீலகண்டனின் ரத்தம் கொதித்தது. “டேய்…” என்று பெரிதாகச் சத்தம் எழுப்பியவாறே வண்டியை அவர்களை நோக்கித் திருப்பினான். வளாகம் முழுவதும் எதிரொலித்த அந்த கர்ஜனையைக் கேட்டு அவர்கள் மூவரும் இவனை நோக்கித் திரும்பினார்கள். சில நொடிகளில் அந்த இடத்தை அடைந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி வேகமாக முன்னேறினான். கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தது அவன் நண்பன் மூர்த்தி. மூர்த்தியை அடித்த ஆட்களை நீலகண்டன் அந்தக் கல்லூரியில் பார்த்ததில்லை. தங்களை நோக்கி ஒண்டி ஆளாக ஒருவன் தைரியமாக முன்னேறுவதைக் கண்ட அந்த மூவரும் இவனைத் தாக்க ஆயத்தமானார்கள். அவர்களில் ஒருவனை நெருங்கிய நீலகண்டன் சட்டென்று இடது காலைத் தரையோடு முன்புறமாகச் சுழற்றி வலது காலுக்கு வலப்புறமாகக் கொண்டுசென்று அந்தக் காலை ஊன்றியபடி வலது காலைச் சுழற்றிப் பின்புறமாக உதைத்தான். சரியாக மோவாயில் இடிபோல இறங்கியது அந்த உதை. அடிபட்டவன் மல்லாந்து விழுந்தான். கோபத்துடன் தன்னை நெருங்கிய இரண்டாமவனைச் சற்றே குனிந்து இடுப்பில் தோள் கொடுத்துத் தூக்கி அப்படியே கீழே போட்டு இடுப்பில் உதைத்தான். ஒரு கணமும் தாமதிக்காமல் மூன்றாமவனின் தாடையில் எட்டி உதைத்தான். ஓரிரு கணங்களில் மூவரும் தரையில் கிடந்தார்கள். உதைக்கும்போது நீலகண்டன் எழுப்பிய ஹுங்காரங்களைக் கேட்டுச் சாலையிலிருந்து சிலர் எட்டிப் பார்த்தார்கள். அடி வாங்கிய மூவரும் ஆட்களின் தலைகள் தெரிவதைப் பார்த்து எழுந்து ஓடினார்கள். நீலகண்டன் மூர்த்தியைத் தோளில் தூக்கிக்கொண்டு மதில் சுவரைத் தாண்டிச் சாலையில் இறங்கி ஒரு ஆட்டோவை நிறுத்தினான். கழிவறையிலிருந்து படுக்கைக்கு வர ஐந்து தப்படிகள் போதும். நீலகண்டன் 18 தப்படிகள் நடந்து வர வேண்டியிருந்தது. மஞ்சு பிசைந்து தந்திருந்த உணவைப் படுக்கையில் சரிந்து உட்கார்ந்தபடி தேக்கரண்டியில் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான். அவனுக்குப் பிடித்தமான உணவாக இருந்தும் சாப்பாடு இறங்கவில்லை. வண்டியை வேகமாக ஓட்டும் பழக்கம் இருந்தாலும் விவஸ்தையில்லாமல் ஓட்டுவதில்லை. தவறு நேரக்கூடிய இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வான். என்றாலும் ஒரு சந்திலிருந்து வேகமாக வந்த வண்டி தன்மீது மோதாமல் இருப்பதற்காக வேகமாகத் திருப்பியவன் பின்னால் வந்த வண்டியின் மீது மோதிக்கொண்டான். மோதிய வேகத்தில் வண்டி ஒரு புறமும் அவன் ஒரு புறமுமாகக் கீழே விழுந்ததில் வண்டியின் ஒரு பக்கம் பலத்த சேதம். இவனால் எழுந்திருக்க முடியவில்லை. விளையாட்டிலும் சண்டைகளின்போதும் பலமுறை விழுந்து உடனே துள்ளி எழுந்திருக்கிறான். இப்போது அசைய முடியவில்லை ஆம்புலன்ஸ் வந்துதான் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. இடுப்பெலும்பு முறிந்ததில் அறுவை சிகிச்சை, சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவம் என எழுந்து நடக்க எட்டு மாதங்கள் ஆயின. சேமிப்பெல்லாம் கரைந்துபோனது. சம்பள இழப்பும் சேர்ந்துகொண்டது. அதையெல்லாம்விடப் பெரிய வலியை டாக்டரின் அறிவுரைகள் தந்தன. உங்களுக்கு இடுப்பில் கம்பி வைத்திருக்கிறோம். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேகமாக நடக்கக் கூடாது. அதிக தூரம் நடக்கக் கூடாது. ஓடவே கூடாது. காலில் இயக்கும் கியர் வைத்த வண்டியை விட்டுவிட்டுத் தானியங்கி கியர் வண்டியை வாங்கிக்கொள்ளுங்கள். படி ஏறும்போதும் இறங்கும்போதும் கவனம் தேவை. கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. யோகாசனம் செய்தால் முன்னால் வளையும் ஆசனங்களைத் தவிர்த்துவிடுங்கள். பேருந்தில் உட்கார்ந்தபடி நீண்ட பயணங்களைச் செய்யாதீர்கள். மாடி வீட்டில் இருந்தால் கீழ்த்தளத்துக்கு மாறிவிடுங்கள் அல்லது எப்போதும் லிஃப்ட் பயன்படுத்துங்கள். பளு தூக்காதீர்கள். உணவில் கட்டுப்பாடு தேவை. எடை கூடினால் இடுப்பில் வலி எடுக்கும். டாக்டர் சொல்லச் சொல்ல நீலகண்டன் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தான். பதில் தெரிந்திருந்தும் தவிர்க்க முடியாமல் அந்தக் கேள்வியைக் கேட்டான். “ஸ்போர்ட்ஸ்…?” டாக்டர் கருணையே இல்லாமல் தலையை இடவலமாக ஆட்டினார். “கேரம்போர்டு, செஸ் இதெல்லாம் ஆடலாம். அதிலும் ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாது.” சாப்பிட்ட தட்டை மஞ்சு எடுத்துக்கொண்டு போனாள். நீலகண்டன் மாத்திரை சாப்பிட்டான். வேகத்தைக் குறைப்பதற்கான ஐந்து ஆண்டுக் காலப் போராட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் காலையில் எங்கிருந்து அந்த வேகம் வந்தது? ஐந்து ஆண்டுக் காலப் பயிற்சி அந்த ஒரு கணத்தில் என்ன ஆயிற்று? அன்றாடம் எத்தனையோ படிகளைப் பொறுமையாக, மெதுவாக, ஒவ்வொரு படியாக ஏறி இறங்கும் பழக்கம் வந்துவிட்டது. அப்படியும் இந்தப் படியைப் பார்த்ததும் அந்தத் துள்ளல் ஏன் வந்தது? நல்லவேளை, பட்ட இடத்திலேயே படவில்லை. காலிலும் எலும்பு முறிவு இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது நடந்து மீண்டும் படுத்த படுக்கையாகும் நிலை வந்திருந்தால் என்று நினைக்கும்போதே மனம் நடுங்கியது. நீலகண்டனுக்கு மாலதி இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றியது. ‘மனம் விரும்புதே’ பாடல் நினைவுக்கு வந்தது. தொலைவில் ரயில் சத்தம் கேட்டது. மாலதிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். https://amruthamagazine.com/2024/11/29/281-aravindan-short-story/  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.