Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானசீகத் தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு 61 members have voted

  1. 1. இந்த தேர்தலில் நீங்கள் ஒரு இலங்கை வாக்காளர் எனில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்

    • தமிழரசுக் கட்சி
      13
    • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
      15
    • தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
      1
    • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி
      0
    • தமிழ் மக்கள் கூட்டணி
      0
    • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
      1
    • ஐக்கிய மக்கள் கூட்டணி (சஜித்)
      0
    • தேசிய மக்கள் சக்தி(அனுர)
      14
    • சுயேட்சை குழு -அருச்சுனா
      7
    • கருணாவின் கட்சி
      0
    • இலங்கை பொதுஜன முன்னணி (நாமல்)
      0
    • புதிய சனநாயக முன்னணி (ரணில்)
      0

This poll is closed to new votes

Poll closed on 11/14/24 at 11:59

Please sign in or register to vote in this poll.

Featured Replies

24 minutes ago, colomban said:

என்னுடய தெரிவு ரஞ்சன் ரமனாயக்க. ஆனால் இவர் கட்சி இங்கு லிஸ்டில் இல்லையே என்ன காரணம்? . எனவே அடுத்த தெரிவு அனுரவுக்கு இட்டுள்ளேன். 

நான் நினைக்கிறேன் நீங்கள் ரஞ்சனதும் ஹிருணிக்காவினதும் leak ஆன அந்த தொலைபேசி உரையாடலை கேட்ட பின் தான் அவரை ஆதரிக்க முடிவெடுத்தீர்கள் என..,😜

  • Replies 223
  • Views 11.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapo

  • ஐயகோ அவர்களையும் தவற விட்டுவிட்டேனே….. தவராசா, தவறாக நினைக்கப்போறார். மாம்பழ வாக்காளர் மன்னிக்கவும். விரும்பினால் மேலே வாக்களிக்காமல் கருத்து களத்தில் தெரிவை மாம்பழம் என எழுதவும்.

  • ரசோதரன்
    ரசோதரன்

    என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன். இங்கு களத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தேசிய பற்றும், ஆதரவும் உள்ளவர்கள் என்பது வெள்ளிடை மலை. நானும் என் இனத்திற்கோ அல்லது என்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

நான் நினைக்கிறேன் நீங்கள் ரஞ்சனதும் ஹிருணிக்காவினதும் leak ஆன அந்த தொலைபேசி உரையாடலை கேட்ட பின் தான் அவரை ஆதரிக்க முடிவெடுத்தீர்கள் என..,😜

அந்தத் தொலைபேசி உரையாடல் என்ன என்று எங்களுக்கும் சொல்லுறது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, island said:

மக்கள் போராட்ட முன்னணி.  சிங்களப்  பிரதேசங்கள் எங்கும் தமிழரின் போராட்டத்தில்  உள்ள தார்மீக நியாயப்பாட்டை எடுத்து சொல்லும் கட்சி.  கொழும்பில் என்றால் அதற்கு தான் வாக்களிப்பேன். 

நீங்கள் சுவஸ்திகா சேர்ந்து இருக்கும் கட்சியை சொல்கின்றீர்கள்
ஆனால் தமிழ் பிரதேசங்களில் ஜேவிபி என்கின்ற சிங்கல பிசாசு தான் போட்டியிடுகின்றது🙆‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

உங்கள் வாக்கை மாம்பழத்துக்கு ஒதுக்கி உள்ளேன். இனி மாத்த முடியாது.

இதுதான் சரி இந்தத் திரியில்.2 வாக்குப் போட்டால் செல்லாத வாக்கு.

16 hours ago, விசுகு said:

என்னால் வாக்களிக்க முடியவில்லை. எனக்கு முடிவுகள் தான் தெரிகிறது?

,யாரோ உங்கள் வாக்கை கள்ள வாக்குப் போட்டு விட்டார்கள்.இந்தக் கற்பனைத்திரி என்ன ஓட்டம் ஓடுகிறது.கோஷான் நீங்கள் படம் தயாரித்துப் பார்க்கலாம். மொக்கைப் படம் என்றாலும் சக்கை போடு போடும்.விளம்பரத்திற்கு தண்டோரர சிறியை மன்னிக்கவும் தமிழ்சிறியை நாடவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

என்னுடய தெரிவு ரஞ்சன் ரமனாயக்க. ஆனால் இவர் கட்சி இங்கு லிஸ்டில் இல்லையே என்ன காரணம்? . எனவே அடுத்த தெரிவு அனுரவுக்கு இட்டுள்ளேன்.

மன்னிக்கவும் கொழும்பான், வடக்கு-கிழக்கு மாவட்டங்களை மையப்படுத்தியே இந்த வாக்கெட்டுப்பு நடத்தப்படுகிறது. முழு இலங்கையிம் என்றால் தெரிவுகள் அதிகமாகி போய்விடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அந்தத் தொலைபேசி உரையாடல் என்ன என்று எங்களுக்கும் சொல்லுறது. 😂

இப்பதான் மோகன் அண்ணா திரிக்கு பின் குத்தி உள்ளார்.

அடுத்து 18+ 🔞 போட வைப்பியள் போல கிடக்கே😆

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய நிலவரம்

அருச்சுனா பிந்தங்கி அதே இடத்தில் நிண்டு சுத்துறார்…..

சைக்கிள், வீட்டை விட 3 வாக்கு முன்னிலையில்…

பிள்ளையான் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு….

அனுர தேள்வடி நகர்வால் தீடீரென முன் பாய்ந்து சைக்கிளை விட வெறும் 2 வாக்குகளே பின்னால் நிக்கிறார்!!!!

சைக்கிளை முந்துவாரா அனுர?

ஆகவே….

All to play for …..

வாக்கை செலுத்தவும்.

வாக்களிக்க முன் முடிவுகளை பார்க்க வேண்டாம். உங்களால் வாக்களிக்க முடியாது போய்விடும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

அடுத்து 18+ 🔞 போட வைப்பியள் போல கிடக்கே😆

அட... அது, கிசு கிசு விவகாரமா? 😍
@ஏராளன் அந்த விசயத்தை, யாழ் களத்தில் செய்தியாக கூட இணைக்கவில்லைப் போலுள்ளது. 😂
அதுதான்... என் கண்ணில் அந்த விவகாரம் எத்துப் படவில்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

அட... அது, கிசு கிசு விவகாரமா? 😍
@ஏராளன் அந்த விசயத்தை, யாழ் களத்தில் செய்தியாக கூட இணைக்கவில்லைப் போலுள்ளது. 😂
அதுதான்... என் கண்ணில் அந்த விவகாரம் எத்துப் படவில்லை. 🤣

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவுகள், சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியானதை அடுத்து ஏற்பட்ட கொதிநிலை அடங்குவதற்குள், அவர் நேற்றும் நேற்று முன்தினமும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் வெளிப்படுத்திய தகவல்கள் இலங்கை அரசியலிலும் அதற்கு அப்பாலும் மேலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரஞ்சன் ராமநாயக்க, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 100 பேரிடம் மதுபானசாலை நடத்தும் அனுமதிப்பத்திரம் உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 75 பேர் மணல் ஏற்றும் பெர்மிட் வைத்துள்ளதாகவும், இருவர் போதைத் தூள் வியாபாரம் செய்வதாகவும், இன்னொருவர் சூதாட்ட வியாபாரம் (காசினோ) நடத்துவதாகவும் தெரிவித்திருந்தமை பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் எனக் கூறப்படும் சில ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகத் தொடங்கின. அவற்றில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நீதிபதிகள், ஊடகவியலாளர்கள், போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடிய ஒலிப்பதிவுகள் முக்கியமானவையாகும்.

இவ்வாறு வெளியான தொலைபேசி உரையாடல்கள் பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ரஞ்சனுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் நீதிவான் தம்மிக்க ஹேமபால மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் பிலப்பிட்டிய ஆகியோர் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-51218089

ஹிருணிக்காவைப் பற்றி எந்த செய்தியையும் காணவில்லை அண்ணை!

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

பிள்ளையான் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு….

625.500.560.350.160.300.053.800.900.160.

விஜய் on X: "மக்களவை தேர்தலில் போட்டி இல்லை; எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை -  நடிகர் ரஜினிகாந்த் #இன்னுமாடா இந்த ஊரு இவரை நம்பிகிட்டு இருக்கு ...

 பிள்ளையான் மைண்ட் வாய்ஸ்.  😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவுகள், சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியானதை அடுத்து ஏற்பட்ட கொதிநிலை அடங்குவதற்குள், அவர் நேற்றும் நேற்று முன்தினமும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் வெளிப்படுத்திய தகவல்கள் இலங்கை அரசியலிலும் அதற்கு அப்பாலும் மேலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரஞ்சன் ராமநாயக்க, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 100 பேரிடம் மதுபானசாலை நடத்தும் அனுமதிப்பத்திரம் உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 75 பேர் மணல் ஏற்றும் பெர்மிட் வைத்துள்ளதாகவும், இருவர் போதைத் தூள் வியாபாரம் செய்வதாகவும், இன்னொருவர் சூதாட்ட வியாபாரம் (காசினோ) நடத்துவதாகவும் தெரிவித்திருந்தமை பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் எனக் கூறப்படும் சில ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகத் தொடங்கின. அவற்றில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நீதிபதிகள், ஊடகவியலாளர்கள், போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடிய ஒலிப்பதிவுகள் முக்கியமானவையாகும்.

இவ்வாறு வெளியான தொலைபேசி உரையாடல்கள் பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ரஞ்சனுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் நீதிவான் தம்மிக்க ஹேமபால மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் பிலப்பிட்டிய ஆகியோர் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-51218089

ஹிருணிக்காவைப் பற்றி எந்த செய்தியையும் காணவில்லை அண்ணை!

தேடி எடுத்து தந்தமைக்கு  நன்றி ஏராளன். 👍
ஹிருணிக்காவைப் பற்றி இல்லை என்றாலும், 
ரஞ்சன் என்ன பேசி இருப்பார் என்று ஊகிக்க முடிகின்றது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லோருக்கும் பொதுவானது.

இங்கு எந்த  கட்சி எந்த நிலையில் உள்ளது என்பதை அறிவிப்பது, தெரிவில் செல்வாக்கு செலுத்தும்.

 இங்கு அந்த செல்வாக்கு முக்கியமானது, தெரிவாளர்களின்  எண்ணிக்கை குறைவாக இருப்பதால்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kadancha said:

இது எல்லோருக்கும் பொதுவானது.

இங்கு எந்த  கட்சி எந்த நிலையில் உள்ளது என்பதை அறிவிப்பது, தெரிவில் செல்வாக்கு செலுத்தும்.

 இங்கு அந்த செல்வாக்கு முக்கியமானது, தெரிவாளர்களின்  எண்ணிக்கை குறைவாக இருப்பதால்.

நீங்கள் சொல்வது சரிதான்…

ஆனால்….

யாழ் வாசகர் தமது அரசியல் நிலைப்பாட்டை சீர்தூக்கி பார்த்தே வாக்களிப்பரே தவிர, வெல்லும் அணிக்கு போடும், அல்லது தோற்க்கும் அணியை தூக்கி விடும் எண்ணத்தில் வாக்களிப்பர் என நான் நினைக்கவில்லை.

மேலும் பலர் தாம் வாக்களித்ததை சொல்லும் போது…தனியே ஒரு கட்சி வாக்காளர் மட்டும் அதிகமாக இப்படி எழுதும் போது அந்த கட்சி பெரு வெற்றி பெறுவதான ஒரு தோற்றப்பாடும் எழும் (வாக்களிப்பின் ஆரம்பத்தில் சைக்கிளின் வாய்புகள் பற்றி இப்படி ஒரு தோற்றப்பாடு எழுந்தது).

இடைக்கிடை நிலவரத்தை அப்டேட் பண்ணுவது இந்த எபெக்டை குறைக்கும் என எண்ணுகிறேன்.

அத்தோடு….இது முற்று முழுதான நிஜத்தேர்தலும் இல்லை, அதே நேரம் முடிவை ஊகிக்கும் போட்டியும் அல்ல.

யாழ்கள உறவுகளின் தற்போதைய மனநிலையை படம் பிடிக்கும் முயற்சி மட்டுமே.

அதில் நீங்கள் சொன்ன confirmation bias இருக்கும். ஆனால் அதையும் மனதில் நிறுத்தி, உறவுகள் தம் உண்மையான தெரிவுக்கு மட்டுமே வாக்கு போடுவார்கள் என நம்புவோம்.

1 hour ago, தமிழ் சிறி said:

தேடி எடுத்து தந்தமைக்கு  நன்றி ஏராளன். 👍
ஹிருணிக்காவைப் பற்றி இல்லை என்றாலும், 
ரஞ்சன் என்ன பேசி இருப்பார் என்று ஊகிக்க முடிகின்றது. 🙂

ஏராளன் @ஏராளன் அச்சா பெடியன் அவரிட்டை கேட்டால் இப்படி சைவ மேட்டராத்தான் தருவார்🤣.

அசைவர் @நிழலி வரட்டும் பொறுங்கோ😂.

@தமிழ் சிறி. இப்போதைக்கு ஒரு க்ளூ…

#பின்னாடி பத்திரம்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

ஏராளன் @ஏராளன் அச்சா பெடியன் அவரிட்டை கேட்டால் இப்படி சைவ மேட்டராத்தான் தருவார்🤣.

அசைவர் @நிழலி வரட்டும் பொறுங்கோ😂.

@தமிழ் சிறி. இப்போதைக்கு ஒரு க்ளூ…

#பின்னாடி பத்திரம்🤣

Tamilmirror Online || ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் முன்னிலை

எதற்கும், நிழலி... ரஞ்சன் ராமநாயக்கவின் செய்தியை கொண்டு வருவார் என்று 
வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றேன். 🤣
# ரஞ்சன் ராமநாயக்க... வண்ணத்து பூச்சி   ரணிலின் நண்பரா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

Tamilmirror Online || ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் முன்னிலை

எதற்கும், நிழலி... ரஞ்சன் ராமநாயக்கவின் செய்தியை கொண்டு வருவார் என்று 
வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றேன். 🤣
# ரஞ்சன் ராமநாயக்க... வண்ணத்து பூச்சி   ரணிலின் நண்பரா? 😂

நம்ம ஐனதிபதி  அனுர கட்சி   எத்தனையாமிடத்தில்.  உள்ளது??? 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

நம்ம ஐனதிபதி  அனுர கட்சி   எத்தனையாமிடத்தில்.  உள்ளது??? 🤣😂

1) தமிழ் தேசிய மக்கள் முன்னணி. (கஜேந்திரன்ஸ்)  
2) அனுர 
3) தமிழரசு. (சுமந்திரன்ஸ்)
4) அர்ச்சுனா 
5) பிள்ளையான்.

வடக்கு, கிழக்கில்.... சுமந்திரனின் தமிழரசு கட்சியை, சிங்களவன் முந்தி விட்டான்.   😂

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

ரஞ்சன் ராமநாயக்க... வண்ணத்து பூச்சி   ரணிலின் நண்பரா? 😂

சகலதுறை ஆட்டக்காரர் என்று கேள்வி. 

Batting all rounder. தேவைப்பட்டால் பந்தும் வீசுவாராம். 

ஆதாரம் கேட்க மாட்டியள்தானே🤣

ஆனால் டேப்பில் இருப்பது அவர் பெண் தொடர்புகள் பற்றிய ஆதாரம் மட்டுமே.

The rest of course, and this forms the vast majority of what the tapes contain, are Ranjan’s sleazy chats with film actresses, prostitutes and women of dubious character who show they are on the same wave length when the conversation turns to their favourite topic. The tapes focus on Ranjan’s sexual proclivities, his sexual predilections and the sexual acts he has performed with other girls and would like to perform with the girl he is speaking with and what she must dress in when she comes to meet him.

https://www.sundaytimes.lk/200119/columns/ranjans-kiss-and-tell-tapes-continue-to-top-the-hit-parade-388143.html

பிகு

@Nathamuni இல்லாத குறையை நிர்வர்த்தி செய்ய முயல்கிறேன்.

கிசு கிசுவின் நாயகனே திரும்பி வாரும் ஐயா🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நன்றி கோசான். ரஞ்சன் ராமநாயக்கவின் லீலைகள் இவ்வளவு பகிரங்கத்திற்கு வந்த பின்பும்... துணிந்து ஒரு கட்சியை தொடங்கி, எதிர்க் கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார் என்றால்... எவ்வளவு துணிவு இருக்க வேண்டும்.

உண்மையில் இப்படியான செய்திகள் வெளியே வர முன்பே... @Nathamuniயின் மூக்கு வேர்க்கத் தொடங்கி, தமிழ்ப் பத்திரிகைகளில் செய்தி  வருவதற்கு  முன், சுயமாக... ஆங்கில, சிங்களப் பத்திரிகைகளில் செய்தி சேகரித்து யாழ்.களத்திற்கு வழங்கி விடுவார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாக்கு தமிழ் தேசிய முன்னணிக்கு என்று எழுதி விடுகிறேன். காரணம் ஒப்பீட்டளவில் ஊழல் மற்றும் இரகசிய பேச்சுவார்த்தைகள் இல்லை அத்துடன் தேசியம் நிச்சயம் வாழணும். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வாக்களித்த மற்றும் அவர்களின் கருத்துக்களை பாக்கும் போது பாரம்பரயத்திலுருந்து வெளியில் வர முடியாதவரகளவே இருக்குகிறார்கள்.இங்கு ஊரில் நான் இருக்கும்  இடத்தில் அரசியல் தெளிவின்மையுள்ளவர்கள தங்கள் மாமன் மச்சான் பக்கதது வீட்டுக்காறார் என்டு போடப் போகினமாம்.அதுவும் போட்ட மாதிரித்தான்.உண்மையில் கோசானுக்கு நன்றி சொல்ல வேணும் இதை தொடங்கயமைக்கு.காரனம் அப்பதான் தெரியும் புலம் பெயர்ந்தவர்களளின் மன ஓட்டமும் புலத்தில் உள்ளவர்களின் மன நிலமையைும் அறிய ஒரு சந்தர்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, சுவைப்பிரியன் said:

இதில தமிழ்நாட்டு உறவுகளை அதே பழைய ஊழல் கட்சிகளுக்கு மாத்தி மாத்தி வாக்களிக்கினம் எண்டு திட்டினபடி.. ஏதோ தாங்கள் முற்போக்கான ஆக்கள் மாதிரி.. மாற்றத்தை எங்களில் இருந்து தொடங்காமல் எப்படி மாற்றம் வரும்..?

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2024 at 04:13, தமிழ் சிறி said:

அன்பான யாழ்.கள உறவுகளே... 
மேலே உள்ள... இலங்கை பாராளுமன்ற, இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம்

எனது ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறதா ? ஏன் இவ்வாறு உள்ளது. தெரிவத்தாட்சி அதிகாரிகள் இதனை சரிசெய்வார்களா ? இரண்டு நாட்களாக முயற்சிக்கிறேன்.You do not have permission to vote in this poll, or see the poll results.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, சுவைப்பிரியன் said:

இங்கு வாக்களித்த மற்றும் அவர்களின் கருத்துக்களை பாக்கும் போது பாரம்பரயத்திலுருந்து வெளியில் வர முடியாதவரகளவே இருக்குகிறார்கள்.இங்கு ஊரில் நான் இருக்கும்  இடத்தில் அரசியல் தெளிவின்மையுள்ளவர்கள தங்கள் மாமன் மச்சான் பக்கதது வீட்டுக்காறார் என்டு போடப் போகினமாம்.அதுவும் போட்ட மாதிரித்தான்.உண்மையில் கோசானுக்கு நன்றி சொல்ல வேணும் இதை தொடங்கயமைக்கு.காரனம் அப்பதான் தெரியும் புலம் பெயர்ந்தவர்களளின் மன ஓட்டமும் புலத்தில் உள்ளவர்களின் மன நிலமையைும் அறிய ஒரு சந்தர்ப்பம்.

நன்றி கருத்துகளத்தில் எழுதிகொண்டிருக்கும் போது சட் என மனதில் தோன்றிய எண்ணம் இது. 

ஆனால் பல சுவாரசியமான trends ஐ அவதானிக்க முடிகிறது. தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டு பார்க்க,

புலம், புலம்பெயர் இடைவெளி கூடி, குறைந்து உள்ளதா எனவும் அனுமானிக்க முடியும்.

5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதில தமிழ்நாட்டு உறவுகளை அதே பழைய ஊழல் கட்சிகளுக்கு மாத்தி மாத்தி வாக்களிக்கினம் எண்டு திட்டினபடி.. ஏதோ தாங்கள் முற்போக்கான ஆக்கள் மாதிரி.. மாற்றத்தை எங்களில் இருந்து தொடங்காமல் எப்படி மாற்றம் வரும்..?

அப்படி நல்லா உறைப்பா கேளு(ங்க) தல!

3 minutes ago, நந்தி said:

எனது ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறதா ? ஏன் இவ்வாறு உள்ளது. தெரிவத்தாட்சி அதிகாரிகள் இதனை சரிசெய்வார்களா ? இரண்டு நாட்களாக முயற்சிக்கிறேன்.You do not have permission to vote in this poll, or see the poll results.

@ நிழலி மீண்டும் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். ஒருக்கால் பார்க்கவும்🙏.

சிலவேளை நந்தி கனநாட்கள் கழித்து வருவதால் அவர் உரிமைகள் மட்டுப்பட்டுள்ளதோ.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நந்தி said:

எனது ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறதா ? ஏன் இவ்வாறு உள்ளது. தெரிவத்தாட்சி அதிகாரிகள் இதனை சரிசெய்வார்களா ? இரண்டு நாட்களாக முயற்சிக்கிறேன்.You do not have permission to vote in this poll, or see the poll results.

6 minutes ago, goshan_che said:

@ நிழலி மீண்டும் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். ஒருக்கால் பார்க்கவும்🙏.

சிலவேளை நந்தி கனநாட்கள் கழித்து வருவதால் அவர் உரிமைகள் மட்டுப்பட்டுள்ளதோ.

கோசான்...  நந்திக்கு வாக்குப் போட முடியாமல் இருப்பதால்...
அவர் எந்தக் கட்சிக்கு  வாக்களிக்க விரும்புகின்றார்  என்பதை 
ஒரு பதிவாக இங்கு எழுத சொல்லி விடுங்களேன். 

தேர்தல் ஆணையாளர் நீங்கள் தான்... முடிவு எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கோஷன் வைக்கும் இந்த மானசீகத் தேர்தல் 2024லில், நான் தான் முதலில் வாக்களித்தேன் என்ற பெருமை எனக்கு ☺️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.