Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!

கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!

அமெரிக்காவின்  நியூயார்க் நகரத்திலிருந்து லண்டனுக்கு 60 நிமிடங்களுக்குள் பயணம் செய்யும் வகையில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையொன்றை அமைக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் எலான் மஸ்குக்கு சொந்தமான தி போரிங் கம்பெனி சார்பாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதைகளை அமைத்து போக்குவரத்தை ஏற்படுத்த அவர் திட்டமிட்டு இருப்பதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சுரங்க பாதையானது 3,000 மைல்கள் அதாவது 4800 கிலோமீற்றர் நீளம் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது.

அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு அதில் அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என்பதே எலான் மஸ்கின் கனவாகும். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையினான பயண நேரத்தை 1 மணிநேரமாகக் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்கு  விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. . இதற்கு முன்பு இது போன்ற சுரங்கப்பாதைகளை அமைப்பதற்கான தொழில் நுட்பங்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் இந்த திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டிருந்தார்.

ஆனால் தற்போது அவருக்கு சொந்தமான போரிங் கம்பெனி சுரங்கப்பாதை அமைப்பதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்துள்ளதால் தனது கனவை நனவாக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1413381

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதில மிஞ்சுர தளபாடங்களைக் கொண்டு குறிகாட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் ஒன்று போட்டுவிடுங்க சார் புண்ணியமாய் போகும் . ..........!   😴

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்காவின்  நியூயார்க் நகரத்திலிருந்து லண்டனுக்கு 60 நிமிடங்களுக்குள் பயணம் செய்யும் வகையில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையொன்றை அமைக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

என்ர 75வது பிறந்த நாளுக்கு சேர்  @ஈழப்பிரியன் அவர்கள் ஒரு நாளிலையே வந்துட்டு  திரும்பி போகலாம் 😎

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, குமாரசாமி said:

என்ர 75வது பிறந்த நாளுக்கு சேர்  @ஈழப்பிரியன் அவர்கள் ஒரு நாளிலையே வந்துட்டு  திரும்பி போகலாம் 😎

அந்த வண்டி லண்டனுக்குத்தான் வருகுது சார் . ....... அங்கிருந்து உங்க வீட்டுக்கு வருவதற்கு பத்து மணித்தியாலம் வேணும் . ........ ஹா . .....ஹா . ...... விரும்பினால் கோஷான் சே யை சந்தித்து ஒரு கோப்பி குடித்துவிட்டுத் திரும்பிப் போகலாம் . ..........!  😂

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

அதில மிஞ்சுர தளபாடங்களைக் கொண்டு குறிகாட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் ஒன்று போட்டுவிடுங்க சார் புண்ணியமாய் போகும் . ..........!   😴

சரி, கேட்டதை அப்பிடியே நெடுந்தீவுக்கும் சேர்த்துப் போடச்சொன்னாப் புண்ணியமாப்போகுமெல்லே...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, nochchi said:

சரி, கேட்டதை அப்பிடியே நெடுந்தீவுக்கும் சேர்த்துப் போடச்சொன்னாப் புண்ணியமாப்போகுமெல்லே...

சரி . ......சரி ....ஆகட்டும் பார்க்கலாம் . .....!  😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, suvy said:

சரி . ......சரி ....ஆகட்டும் பார்க்கலாம் . .....!  😁

உங்கள் பெருந்தன்மைக்கும், மனதுக்கும் நன்றி ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எலான் முன்னர் அறிவித்தது போல் முதலில் கலிபோர்னியா   நகரங்களான லொஸ்  ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ இடையே மணிக்கு 700 மைல் வேகத்தில் செல்லும் ஹப்பர் லூப் திட்டத்தை நிறைவேற்ற எலானிடம்  சொல்லுங்க அதன் பின் பார்க்கலாம் .

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.