Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

1)இரட்டை வாழைப்பழம் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைப் பிள்ளைபிறக்கும்

2)அரிசியைத் தின்றால் நம்மகல்யாணத்தன்று அடை மழைபெய்யும்.

3) பொன்வண்ட புடிச்சு தீப்பெட்டியில அடச்சு வச்சா முட்டை போடும்.

4)பல்லி கத்துனா கெட்ட சகுனம்.

5)வானவில் போட்டால் மழை பெய்யாது. 

6)நரி ஊளையிட்டால் நல்ல சகுனம்.

7)பூனை குறுக்கே போனா போற வேலை நடக்காது.

8)கட்டிப் புடிச்சாலே புள்ள பொறந்துரும்.

9)படித்தால் வேலை கிடைக்கும்.

10) ஏதாவது பழ விதைகள் விழுங்கி விட்டால் வயிற்றில் மரம் முளைக்கும்.....

8ம் 9ம் சுப்பரப்பு சுப்பர்,🤣

  • Replies 113
  • Views 5.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    பதுனோராவதாக, சிறீதரனுக்கும் ‘பார்’ சிபாரிசுக்கும் தொடர்பில்லை என்பதையும் சேர்ததுக் கொள்ளலாம். முதல் பத்தும் சின்னவயதிலே நம்பிய பொய்கள். 

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    1)இரட்டை வாழைப்பழம் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்கும் வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைப் பிள்ளைபிறக்கும் 2)அரிசியைத் தின்றால் நம்மகல்யாணத்தன்று அடை மழைபெய்யும். 3) பொன்வண்ட புடிச்சு தீப்பெட்டியில

  • இதுவும் ஒரு நம்பிக்கைதான்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போரால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, 55,000 வீடுகள் கட்டித் தரப்படும்.

விடுதலைப் புலிகள் அமைப்பை... மீள கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்ட 
மூவர் இராமேஸ்வரத்தில்  கைது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

போரால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, 55,000 வீடுகள் கட்டித் தரப்படும்.

விடுதலைப் புலிகள் அமைப்பை... மீள கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்ட 
மூவர் இராமேஸ்வரத்தில்  கைது.

இதுக்கும்  உங்கள் சின்ன வயதுக்கும் என்ன சம்பந்தம்??   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

இதுக்கும்  உங்கள் சின்ன வயதுக்கும் என்ன சம்பந்தம்??   

ஒரு சம்பந்தமும் இல்லை. 😀
ஆனால்... நான், சம்பந்தப் படுத்திக் கொண்டேன். 😂

இதனால் கற்றுக் கொள்வது யாதெனில்.... 
ஏமாற்றுபவர்கள்... எப்பவும் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். 🤣

பொய் சொன்னால் சாமி கண்ணை குத்தும்

பாவம் செய்தால் சித்திரகுப்தனால் எண்ணேய் சட்டியில் வைத்து வறுக்கப்படுவீர்கள்

அம்மா சத்தியம் செய்து பொய் சொன்னால், அம்மா இறந்து விடுவார்

சரஸ்வதி பூசை செய்தால் படிப்பு நல்லா வரும்

சோதனைக்கு முன் அந்தோணியாருக்கு மெழுகுதிரி கொளுத்தினால் சோதனை பாஸ் செய்யலாம்

வலம்புரிச் சங்கை காதில் வைத்து கேட்டால் அதன் மூச்சு சத்தம் எப்பவும் கேட்கும்

5 hours ago, தமிழ் சிறி said:

 

8)கட்டிப் புடிச்சாலே புள்ள பொறந்துரும்.

 

இது பொய் என்று எப்ப எப்படி கண்டு பிடிச்சீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

இது பொய் என்று எப்ப எப்படி கண்டு பிடிச்சீர்கள்?

நீங்கள், கஸ்ரமான... கேள்வி கேட்கிறியள். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

1.  இரவில் சூரியன் மங்கியபின் பெரிய மரங்களுக்கு கீழ்  சென்றால் பேய் அடிக்கும். 
2. முடடை உப்பு  கடன் கொடுத்தால் உறவு முறியும். 
3. உணவு   கொண்டு செல்லும்போது கரித் துண்டு   வைக்க வேண்டும்
4. ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆ ண்டியாவான் 

  • கருத்துக்கள உறவுகள்

எங்காவது போகும்போது பூனை குறுக்கால் போனால் போன காரியம் நடக்காது

செருப்பு முன்னால் இருக்கக் கூடாது.

சாப்பிடும் போது மயிர் வந்தால் அதை கொட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

* சிறுவயதில் எல்லாக் கடவுள்களும் இருக்கின்றார்கள் என்று நம்பியிருக்கின்றேன். பதின்ம வயதுகளில் ஒரு கடவுளும் இல்லை என்று முடிவெடுத்தேன். இப்பொழுது எல்லாக் கடவுள்களும் எங்கே போய் விட்டார்கள் என்று தேடுகின்றேன்.

* பூமி அப்படியே நடுவில் நிற்கின்றது என்று சிறுவயதில் நம்பினேன். பூமி சுற்றுகின்றது, சூரியன் நடுவில் அப்படியே நிற்கின்றது என்று பதின்ம வயதுகளில் சொல்லித் தந்ததை அப்படியே நம்பினேன். எல்லாமும்,  எங்களின் சூரியன் உட்பட, கண் மண் தெரியாத ஒரு வேகத்தில் அண்டவெளியில் இழுபட்டுப் போகின்றன என்று இன்றைய அறிவியல் சொல்வதை இப்பொழுது நம்புகின்றேன்.

* சினிமாக் கதாநாயகர்கள் எல்லோரும் நிஜத்திலும் நாயகர்களே என்று நம்பினேன். எம்ஜிஆர் மனிதர்களில் ஒரு மாணிக்கம் என்று நம்பியிருக்கின்றேன். ஒன்றும் மாணிக்கம் கிடையாது, எல்லாமுமே கரிக்கட்டிகள் தான் என்று இன்று வாழ்க்கை போகின்றது.

* சிங்கள மக்கள் பொல்லாதவர்கள் என்று சிறுவயதில் நம்பியிருக்கின்றேன். சிங்கள மக்கள் மட்டும் அல்ல, இங்கு எல்லா மக்களும் ஒன்றே என்று உலகம் தெரிய தெரியவந்தது.

* அரிசிச் சோற்றில் தான் ஆரோக்கியம் இருக்கின்றது என்று நம்பியிருக்கின்றேன். இன்று அதில் ஆரோக்கியம் இல்லை என்று சொல்லப்பட்டாலும், அதுவே தேவை, போதும் என்று ஆகிவிட்டது.

* எந்தக் கடலையும் நீத்திக் கடக்கலாம் என்று அன்று நம்பியிருக்கின்றேன். என்னை சுருட்டி அடித்த ஒரு அலையின் பின், நான் மட்டும் இல்லை, இங்கு எல்லா மனிதர்களும் இயற்கையின் முன் ஒரு தூசி என்று தெரிந்தது.

* பேய்கள் என்று நம்பிப் பயந்திருக்கின்றேன். இன்று பேய்கள் இல்லை என்று உறுதியாகத் தெரிந்தாலும், அந்தப் பயத்தில் கொஞ்சம் இன்னும் உள்ளே ஒட்டியிருக்கின்றது.

* வயது போனாலும் என்னுடைய வயதான அப்பா, அம்மா, மாமா, மாமி, தாத்தா, பாட்டி போல நான் இருக்கமாட்டேன் என்று நம்பியிருக்கின்றேன். இப்பொழுது கண்ணாடியில் பார்க்கும் போது அவர்களே தெரிகின்றார்கள்.............🤣.     

       

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்காவது போகும்போது பூனை குறுக்கால் போனால் போன காரியம் நடக்காது

 

இடமிருந்து ..வலமாக போனால் அபசகுனம்

 

26 minutes ago, ஈழப்பிரியன் said:

 

சாப்பிடும் போது மயிர் வந்தால் அதை கொட்ட வேண்டும்.

அன்புப் பிணைப்பு கூடுமாமே ..உண்மையா

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

"சிரிப்போம்  சிறப்போம்"  பகுதியில்... கதைக்கிற கதையா இது ?
பைத்தியக்காரருக்கு... ஸ்ரீதரன் வியாதி முத்திப் போச்சு.
எங்கை... என்ன கதைக்கிறது, என்ற விவஸ்தை  இல்லாததுகள். 😡

சிரிப்போம் சிறப்போம் என்று வந்தால் சினக்கிறீங்களே? வாய் விட்டுச் சிரியுங்கள் நோய் விட்டுப் போகும்.

1 hour ago, ரசோதரன் said:

பேய்கள் என்று நம்பிப் பயந்திருக்கின்றேன். இன்று பேய்கள் இல்லை என்று உறுதியாகத் தெரிந்தாலும், அந்தப் பயத்தில் கொஞ்சம் இன்னும் உள்ளே ஒட்டியிருக்கின்றது.

இதில் எனக்குச் சற்றுக் குழப்பமாக இருக்கிறது.

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது என்றுதான் இவ்வளவு காலமும் நம்பி ஆறுதலடைந்திருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kavi arunasalam said:

 

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது என்றுதான் இவ்வளவு காலமும் நம்பி ஆறுதலடைந்திருந்தேன்.

'.............. என்றால் பேயும் இரங்கும்' என்று பூசி மெழுகித்தான் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் அது தான் இது என்று வெளிப்படையாகச் சொல்ல எல்லோருக்கும் பயம் போல................😜.

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை கனபேருக்கு மூளை மங்கிப்போட்டுது.. சின்ன வயசில நம்பினது என்னவெண்டு கூகிளில தேடிப்பார்த்து அடிக்கிற மாதிரிக் கிடக்கு!

எல்லாரும் சாமியைக் கும்பிட்டதும், பேய் பிசாசுக்கும், முனிக்கும் பயந்ததும் இப்பவும் அதை உண்மைதான் எண்டு நினைக்கிறது ஒண்டும் புதினமில்லை!

எனக்கு அண்ணன் பென்சில் குதிரைப்பீயில செய்யிறது எண்டு சொன்னதை கனகாலம் நம்பி, பென்சிலின் கூரைத் தொடுவதில்லை.  மாறிக்கீறித் தொட்டாலும் கைகழுவவேண்டும் எண்டு அலாதிப்படுவன்!

மற்றும்படி நானும் சின்னவயசில பெட்டையளின் பிரியத்துக்காக🥰 மயில் இறகை பொண்ட்ஸ் பவுடர் போட்டு அப்பியாசக் கொப்பிக்குள் வச்சனான்! குட்டிபோட்டுதா எண்டு நெருங்கிவந்து கேட்டவா இப்ப அவுஸில இருக்கிறா! பொன்வண்டை நெருப்புப்பெட்டிக்குள் வளத்தனான்! அது செத்துப் போச்சு! 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையிலை முந்தியெல்லாம் பெரிய, குட்டிக் குட்டி  தமிழின அழிப்புகள் நடக்கிறது எல்லாரும் அறிஞ்சிருப்பியள் தானே! 
அப்ப நான் சின்னனாய் இருக்கேக்க  ஒரு  இன அழிப்பும் நடந்தது. அந்த நேரம் நாங்கள் பள்ளிக்கூட மைதானத்திலை விளையாடிக்கொண்டிருக்கேக்கை ஆகாயத்திலை ஒரு பிளேன் போய்க்கொண்டிருந்தது.அப்ப கூட நிண்ட ஒருத்தன் கேட்டான் உந்த பிளேன் எங்கையடா போகுது எண்டு.....அதுக்கு இன்னோருத்தன் சொன்னான் அடேய் உதிலை கலைஞர் கருணாநிதி கொழும்புக்கு போறார். அங்கை போய் சிங்களவரை வெருட்டி தமிழர் பிரச்சனையை தீர்ப்பார் எண்டு....

அந்த இரண்டு பேர் கதைச்சதை கேட்டு  உண்மை எண்டு நம்பினவன் தான் இந்த குமாரசாமி😟 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

இலங்கையிலை முந்தியெல்லாம் பெரிய, குட்டிக் குட்டி  தமிழின அழிப்புகள் நடக்கிறது எல்லாரும் அறிஞ்சிருப்பியள் தானே! 
அப்ப நான் சின்னனாய் இருக்கேக்க  ஒரு  இன அழிப்பும் நடந்தது. அந்த நேரம் நாங்கள் பள்ளிக்கூட மைதானத்திலை விளையாடிக்கொண்டிருக்கேக்கை ஆகாயத்திலை ஒரு பிளேன் போய்க்கொண்டிருந்தது.அப்ப கூட நிண்ட ஒருத்தன் கேட்டான் உந்த பிளேன் எங்கையடா போகுது எண்டு.....அதுக்கு இன்னோருத்தன் சொன்னான் அடேய் உதிலை கலைஞர் கருணாநிதி கொழும்புக்கு போறார். அங்கை போய் சிங்களவரை வெருட்டி தமிழர் பிரச்சனையை தீர்ப்பார் எண்டு....

அந்த இரண்டு பேர் கதைச்சதை கேட்டு  உண்மை எண்டு நம்பினவன் தான் இந்த குமாரசாமி😟 

1987 வரை எம் ஜி ஆர் தமிழக முதலமைச்சராக இருந்தவர் அதன் பின்னர் இந்திய இராணுவ பிரச்சினை அதற்கு பின் 1990 நடுப்பகுதியில் மீண்டும் இலஙகை இராணுவத்துடன் பிரச்சினை அந்த கால கட்டத்தில் கருணாநிதியின் ஆட்சி கவிழ்ப்பு பின்னர் ஜெயலலிதாவின் ஆட்சி, 90 களின் பிற்பகுதியில் கருணாநிதியின் ஆட்சி இருந்திருக்கலாம் அப்படி பார்த்தால் நீங்கள் 90 களில் பிறந்த ஒருவராக இருக்கிறீர்கள், நான் உங்களை வயதானவராக பார்த்துள்ளேன்.😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, vasee said:

1987 வரை எம் ஜி ஆர் தமிழக முதலமைச்சராக இருந்தவர் அதன் பின்னர் இந்திய இராணுவ பிரச்சினை அதற்கு பின் 1990 நடுப்பகுதியில் மீண்டும் இலஙகை இராணுவத்துடன் பிரச்சினை அந்த கால கட்டத்தில் கருணாநிதியின் ஆட்சி கவிழ்ப்பு பின்னர் ஜெயலலிதாவின் ஆட்சி, 90 களின் பிற்பகுதியில் கருணாநிதியின் ஆட்சி இருந்திருக்கலாம் அப்படி பார்த்தால் நீங்கள் 90 களில் பிறந்த ஒருவராக இருக்கிறீர்கள், நான் உங்களை வயதானவராக பார்த்துள்ளேன்.😁

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)[2] இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தமிழ்நாட்டுதோதலில் வெற்றி பெற்று முதலமைச்சராகி இலங்கை அரசை வெருட்டி ஈழதமிழர்களை காத்து வாழ்வழிப்பார் என்று தற்காலத்திலும் அதிலும் மேற்குலகநாடுகளில் வாழ்ந்து கொண்டு நம்புகின்ற ஈழதமிழர்கள் இருக்கின்ற நிலையில்  பழைய காத்தில்  கருணாநிதியை அப்படி நம்பினதும் நடந்திருக்கலாம்.
ஜெயலலிதா கருணாநிதி எல்லாம் இலங்கை ஐனாதிபதிகளை சந்தித்து இருக்கின்றார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவரும் கவனிக்க.

சீமானை குமாரசாமி ஆகிய நான் ஈழம் சம்பந்தமாக ஆதரிக்கவில்லை என பலமுறை இங்கே எழுதி விட்டேன்.எனவே மீண்டும் ஒரு முறை எழுதுகின்றேன் நான் சீமானை ஆதரிப்பது அவரின் சூழல் சுற்றாடல் அரசியல் கொள்கை காரணத்திற்காக மட்டுமே.

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளைக்காரன் ஆசியாவுக்கு வந்ததாலை தான் இந்தியா இலங்கை பாக்கிஸ்தான் பங்களா தேஷ் போன்ற நாடுகள் முன்னேறின எண்டு பாடங்கள் சொல்லிச்சு...

நம்பினம்....

இராவணினின் அருமை பெருமையையும்,தமிழ்நாட்டு கோபுர வரலாறுகளையும் மறந்து......

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)[2] இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.

இதில் 1989 இலிலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்த காலம், இந்த காலத்தில் இலங்கையில் நிலை கொண்டிருந்தத இந்திய அழிவு படை விலகிய காலம், அவர்களை கருநாநிதி வரவேற்க செல்லவில்லை காரணம் இலங்கையில் தமிழ் மக்களை அழித்த படையினரை வரவேற்கமாட்டேன் என.

இரண்டாம் கட்ட போர் காலத்திற்கும் 1991 அவர் ஆட்சி நீக்கப்பட்டதற்குமிடையே சில மாதங்கள் இருந்ததனனால் அக்கால கட்டமாகவும் இருக்க முடியாது  ஆகவே 1996 இற்கு பின்னரான கால கட்டமாக இருக்க வாய்ப்பிருக்கு என கணித்து உங்கள் வயதினை கணித்துள்ளேன், அப்படி பார்த்தால் நான் உங்களை விட வயதானவன்😁.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

ஓம். இதனை எங்கள் பாட்டி சொல்லி பயப்பிடுத்துவார்.
கலியாணம் கட்டுற அன்று மழை பெய்து, எங்களது பட்டு வேட்டி, கூறைச் சீலை   எல்லாம் நனையப் போகுதே என்று... நான், தம்பி, தங்கச்சி எல்லோரும் கவலையில் இருப்போம். 😂

ஹீ.... ஹீ .... அந்த வயதிலும் எத்தனை பெரிய கவலை உங்களுக்கு உருவாக்கி விட்டார் உங்கள் பாட்டி! அது சரி, உங்களுக்கு கலியாணம் நடக்கும்போது, அது நடந்ததா? அதைநினைத்து முன்னாயத்தங்கள் செய்தீர்களா இல்லையா?  குறும்புப்பாட்டி  உயிருடன் இருந்தாவா உங்களுக்கு கலியாணம் நடக்கும்போது?

சிறு வயதில், எங்களுக்கு எங்கள் மூதாதையரால் சொல்லப்பட்ட கதைகளில் சில அறிவு சார்ந்த விஞ்ஞான, அர்த்தமான கருத்துக்களும் உண்டு. அவற்றை விளக்கி சொல்ல அவர்களுக்கு தெரியவில்லை, எங்களால் கேள்வி கேட்கவும் முடியவில்லை. சில, எங்களின் குறும்புத்தனத்தை மட்டுப்படுத்த சொல்லப்பட்ட பொய்கள். அவை நமது தன்னம்பிக்கையை பாதித்திருக்கின்றன என்பதை இன்று நான் உணர்கிறேன். ஆனால் இன்றைய சிறுவர்களை நாம் அப்படி முடக்கிவிட முடியாது. ஒன்று; கேள்வி கேட்கிறார்கள், தாங்களாகவே உண்மைத்தன்மையை ஆராய்கிறார்கள். மற்றையது; நமது அனுபவம் நம் பிள்ளைகளை  ஏமாற்ற இடமளிப்பதில்லை. அவற்றை நினைத்து இப்போ நாம் சிரிக்கிறோம், அவர்கள் எங்களை முட்டாள்களாக நினைப்பார்கள்.            

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

1. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்🤣

2. கருணாநிதி தமிழ் உணர்வாளர்

3. இந்திரா காந்தி எமக்கு “அன்னை”

4. மேற்கு நாடுகள் ஜனநாகத்தை மதிக்கும்

5. கம்யூனிச நாடுகள் பொதுவுடமை கொள்கையை மதிக்கும்

6. பாலா அண்ணை யதார்தத்தை எடுத்து சொன்னால் தலைவர் கேட்ப்பார்

7. ஓரளவுக்கு மேல் தமிழ் மக்களை இலங்கை அழிக்க உலகநாடுகள் விடாது

8. தலைவர் இல்லாமல் போனாலும் அவர் வழிநின்ற புலம்பெயர் செயல்பாட்டாளர் வழி தவற மாட்டார்கள்

9. சம், சும், விக்கி இதயசுத்த்தியோடு இன நலனுக்கு பாடுபடுவர்

நீங்கள் கூறிய ஒன்பதாவது கருத்தில்….
மற்ற இருவரையும் விட…. விக்னேஸ்வரனில் அதிக நம்பிக்கை வைத்து
மலைபோல் நம்பி இருந்தனான். 😂
கடைசியில் முன்னாள் நீதியரசரும் கவுட்டு விட்டார். 🤣

மற்ற இருவரும்…. பக்கா (Fraud) பிராட்டுக்கள் என்று முகத்திலேயே எழுதி ஒட்டி இருந்தது. 😂
விக்கியர் திருநீறு பூசி இருந்ததால்… எனக்கு கண்டுபிடிக்க கஸ்ரமாய் போச்சுது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

இரண்டாம் கட்ட போர் காலத்திற்கும் 1991 அவர் ஆட்சி நீக்கப்பட்டதற்குமிடையே சில மாதங்கள் இருந்ததனனால் அக்கால கட்டமாகவும் இருக்க முடியாது

சிந்திக்க வைத்திருக்கின்றீர்கள் 👍
துப்பாக்கி சத்தம் கேட்டதும் தலை தெறிக்க வெளிநாடு ஓடி தப்பியவர்கள் இவர்கள்.
கருணாநிதி இலங்கை அரசை வெருட்ட கொழும்புக்கு விமானத்தில் சென்ற காலம் 🤔
கொழும்பு றேயல் கல்லுரி விளையாட்டு மைதானத்திலை விளையாடிக்கொண்டிருந்த கால கட்டமாக இருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரசோதரன் said:

* சினிமாக் கதாநாயகர்கள் எல்லோரும் நிஜத்திலும் நாயகர்களே என்று நம்பினேன். எம்ஜிஆர் மனிதர்களில் ஒரு மாணிக்கம் என்று நம்பியிருக்கின்றேன். ஒன்றும் மாணிக்கம் கிடையாது, எல்லாமுமே கரிக்கட்டிகள் தான் என்று இன்று வாழ்க்கை போகின்றது.     

எம்.ஜி.ஆர்.சமாதிக்குள்ளிருந்து  “டிக்.. டிக்..டிக்” என்று வாட்ச் சத்தம்  கேட்கிறாதா என காது கொடுத்து கேட்கும் மக்கள்

 

நான் பார்த்த சென்னை (காட்சி 3) | பிரபுவின்

எம்.ஜி.ஆரின்  சமாதிக்குள் இருந்து, மணிக்கூடு  "டிக்டிக்" என்று ஓடும் சத்தம் கேட்பதாக...   
இன்றும்  ஒரு நம்பிக்கை உள்ளது ரசோதரன். 
😂

#######    ###########   #####

எம்.ஜி.ஆர். இறந்து 31 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போதும் எம்.ஜி.ஆரின் கை கடிகாரம் ஓடுகிறது என்கிற நம்பிக்கை மாறாமலேயே உள்ளது. 

மெரினாவில் அடக்கம் செய்யப்பட்ட போது எம்.ஜி.ஆர். கையில் கட்டி இருந்த Rado கை கடிகாரத்தை அகற்றவில்லை. அந்த கடிகாரத்துடனேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதன் பின்னர் எம்.ஜி. ஆரின் கடிகாரம் ஓடிக் கொண்டே இருப்பதாக அவரது ரசிகர்களும், அ.தி. மு.க.வினர் நம்பினர். சமாதி யில் காதை வைத்து கேட்டால் டிக் டிக் என கடிகாரம் ஓடும் சத்தம் கேட்பதாகவும் கூறப்பட்டது. அந்த செய்தியை எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பால் மக்கள் நம்பினார்கள். 

எம்.ஜி.ஆர்.சமாதிக்குள்ளிருந்து “டிக்.. டிக்..டிக்” என்று வாட்ச் சத்தம் கேட்கிறாதா என காது கொடுத்து கேட்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள்.

https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-high-court-orders-tn-government-to-pay-25-lakhs-to-the-victim-of-anna-university-student-assault-case-1136951

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சின்னவயசுல நாம இருந்தபோது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி ஓய்ஞ்சுபோன அந்தகால பெரிசுங்க நமக்கு அந்த ராணுவ ரகசியம் தெரியாம இருக்கணும்கிறதுக்காக  குழந்தைகள் பிறப்பது சாமி கும்பிட்டுத்தான் என்று சொல்லி வைத்தார்கள்.

நாமும் ஆறாம் வகுப்புவரை அப்படித்தான் எல்லோரும் சாமிகும்பிட்டு கும்பிட்டுத்தான் இறக்குமதியானாங்க எண்டு நம்பிக்கொண்டிருந்த காலகட்டத்தில்,

பருவ வயதின் எல்லைக்குள் நுழைந்தபோது நம் சொல்வழி கேக்காத மழலை ஒன்று காலம் காத்தாலயே அமெரிக்க ஏவுகணை வானத்தை பார்த்தமாதிரி அதுபாட்டுக்கு தனது கடமையை கவனித்தபோதுதான் , என்னாச்சு இது ஏதோ ஒரு மாற்றம் என்று பள்ளி தோழர்களுடன் விவாதித்தபோது, 

அனைவரும் படிப்படியாக சிக்கிகொண்ட அந்த அணிவகுப்பு உணர்வுபற்றி, அனைவருடனும் சகஜமா பேசும் சுகாதார ஆசிரியரிடம் பயமறியா ஒரு மாணவன் துணிவா கேட்க மனித உடல்களின் சேர்க்கைதான் இன்னொரு மனிதன், கடவுள் நம்பிக்கை என்பது மனிதர்கள் சேர்ந்தும் குழந்தைகள் கிடைக்காவிட்டால் இந்த சமுதாயத்தின் அசிங்கப்படுத்தலிலிருந்து தப்புவதற்கான வேண்டுதல் என்று விளங்கப்படுத்தியபோது,

முதலில் அதிர்ச்சியாக இருந்தது, பின்பு நம்ம மம்மி டாடி நீங்களுமா என்ற கேள்வியும் எழுந்தது, பின்னாளில் பாலியல் கல்விமுறையை  முறையை ஏதோ பாவம்போல் மறைத்து வைத்து தெரியாமல் பொத்தி வைப்பது எவ்வளவு பெரிய விழிப்புணர்வற்ற தன்மை என்றும் தோன்றியது.

முடிவாக 7ம் வகுப்புவரை  இச்சு இச்சு இச்சு கொடு என்று இரண்டுபேர் வாழ்ந்தால்தான் குழந்தை பிறக்கும் என்பதை அறியாமல்  சாமி கும்பிட்டால் மட்டும்தான் அது எல்லாம் நடக்குமென்று  உண்மையென்று நம்பியதை  இப்போ நினைச்சாலும் ஒரே அசிங்கமா போச்சு குமாரு நிலமைதான். 

 

Screenshot-1.png

Edited by valavan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.