Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

19 FEB, 2025 | 10:36 AM

image

ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைனே காரணம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் யுத்தத்தை ஆரம்பித்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

ரஸ்ய ஜனாதிபதியை தான் சந்திக்ககூடும் என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் மொஸ்கோவின் படையெடுப்பிற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

சவுதிஅரேபியாவில் அமெரிக்க ரஸ்ய அதிகாரிகளின் சந்திப்பு இடம்பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் ரஸ்யாவுடனான யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனிற்கு இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான திறமையும் அதிகாரமும் என்னிடம் இருப்பதாக நான் நினைக்கின்றேன். அது சரியான விதத்தில் இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ள டிரம்ப், எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என தெரிவிக்கின்றார்கள், நீங்கள் மூன்று வருடமாக இருக்கின்றீர்கள், நீங்கள் இதனை முடித்துவைத்திருக்கவேண்டும், என தெரிவித்துள்ளார்.

நீங்கள் ஒருபோதும் இதனை ஆரம்பித்திருக்க கூடாது, நீங்கள் உடன்பாட்டிற்கு வந்திருக்கவேண்டும் உக்ரைனிற்காக நான் உடன்பாட்டிற்கு வந்திருப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு

  • Replies 65
  • Views 3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    ரஸ்ஸியாவின் நிலப்பரப்பை உக்ரேன் ஆக்கிரமித்து வைத்திருப்பது போல டிரம்ப் எனும் கோமாளி கருதுகிறது போலும். ஆக்கிரமிப்பவனை ஆதரித்துக்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவனை போரிற்கான காரணம் என்று அழைப்பதற்கு ஒரு ம

  • கிருபன்
    கிருபன்

    உலகில் பலர் அறம் சார்ந்து இயங்குவதில்லை.. ஆனால் நாம் அறம் எது என்று புரிந்து அதனை விட்டுக்கொடுக்கக்கூடாது. வலியவர்களும் வஞ்சகர்களும் வெல்கின்றார்கள் என்பதற்காக நாம் அறத்தை விட்டுக்கொடுக்கமுடியாது..

  • ரசோதரன்
    ரசோதரன்

    ஆணவம் இல்லாத மனிதர்கள் யார். அதுவே சிலருக்கு அதிகமான உயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மையாக மாறியும் விடுகின்றது. 'என்னுடைய ஒப்பந்தத்தில் நீ கையெழுத்து இடமாட்டாயோ.........' என்பதே இப்படி மாறி நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவும், ஐரோப்பாவும்….. உக்ரைனுக்கு ஆயுதத்தையும், பணத்தையும் கொடுத்து ரஷ்யாவுடன் தொடர்ந்து சண்டை பிடி என்று… கொம்பு சீவி விட்டு விட்டு, இப்ப ஒரேயடியடியாக உக்ரைனை மாட்டி விடுகின்றார்கள்.

சொந்தப் பலத்தை நம்பாமல், மற்றவனின் ஏவல் பேச்சைக் கேட்டு… போரில் குதித்த உக்ரைன் தனது நாட்டை… கற்குவியலாக மாற்றியதும் அல்லாமல், நாட்டின் பெரும் பகுதியை ரஷ்யாவிடம் இழந்து நடுத்தெருவில் நிற்கின்றது.

செலன்ஸ்கியின் கோமாளித்தனத்துக்கு கிடைத்த விலை இதுதான்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைனே காரணம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

வேறு செய்திகளின்படி டொனால்ட் ரம் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த போர் தொடர்வதற்கு காரணம் உக்ரைன் அதிபர் என்று தான் உளறியதாக அறிய முடிகின்றது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த உடனேயே உக்ரைன் சரணடைத்திருக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் 'தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார்" - எனது நாட்டை விற்க முடியாது - உக்ரைன் ஜனாதிபதி

Published By: RAJEEBAN

19 FEB, 2025 | 05:14 PM

image

அமெரிக்க ஜனாதிபதிக்கும் தனக்கும் கருத்துவேறுபாடுகள் உள்ளதை வெளிப்படுத்தும் விதத்தில் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி கருத்து வெளியிட்டுள்ளர்ர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 'தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார்" என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

உக்ரைன் ஜனாதிபதியாக தன்னை யாராவது மாற்றவிரும்பினால் அது நடைபெறாது என  குறிப்பிட்டுள்ள அவர் 58 வீதமான உக்ரைன் மக்கள் தன்மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் குறித்து ரஸ்யா பல பொய்யான தகவல்களை பரப்பிவருவதாக தெரிவித்துள்ள  உக்ரைன் ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மீது சகலமரியாதையையும் வைத்திருக்கும் அதேவேளை அவர் தவறான தகவல் உலகத்தில் வாழ்கி;ன்றார் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதிக்கான மக்கள் ஆதரவு 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே உக்ரைன் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

தனக்கான மக்கள் ஆதரவு குறித்த பொய்யான புள்ளிவிபரத்தை ரஸ்யாவே பரப்பியுள்ளது என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் உள்ள அபூர்வமான கனியவளங்களான லித்தியம் மற்றும் டைட்டானியத்தின் ஒரு பகுதியை அமெரிக்க ஜனாதிபதி கோரியுள்ளரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள  உக்ரைன் ஜனாதிபதி அந்த கனியவளங்களின் 50 வீதத்தின் உரிமையை அமெரிக்கா கோரியதாலும் எந்த பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்காததாலும் தான் அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்ததாக  குறிப்பிட்டுள்ளார்.

நான் உக்ரைனை பாதுகாக்கின்றேன் என்னால் அதனை விற்க முடியாது,எங்கள் நாட்டை என்னால் விற்க முடியாது என வொலொடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த ரஸ்யாவை சவுதி அரேபிய பேச்சுவார்த்தைகள் மூலம் அமெரிக்கா மீண்டும் சர்வதேச அரங்கிற்கு கொண்டுவந்துள்ளது என குற்றம்சாட்டியுள்ள  உக்ரைன் ஜனாதிபதி  அமெரிக்கா உதவியை குறைத்தால் ஐரோப்பா என்ன ஆதரவை வழங்கலாம் என்பது குறித்து கவனம் செலுத்திவருவதாக தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவிற்கு பரந்துபட்ட விட்டுக்கொடுப்புகளை செய்வது  குறித்த யோசனைகளை நிராகரித்துள்ள அவர் இந்த யோசனையை உக்ரைன் மக்கள் நிராகரிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் 'தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார்" - எனது நாட்டை விற்க முடியாது - உக்ரைன் ஜனாதிபதி

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிற்கு ரஷ்யாவிடமிருந்தூ ஏதோ சில பொருட்கள் மிகவும் மலிவு விலையில் அல்லது இலவசமாக கிடைக்கப் போகின்றன.............. ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போகமாட்டார்....

இது எல்லா நாடுகளுக்கும் ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும்.

ஒரு நாடு, ஒரு இனம் அதன் சுயநிர்ணய உரிமையை இழப்பது கொடுமையான, அநியாயமான ஒரு நிகழ்வு. எங்களுக்கு நடந்தது, இன்று உக்ரேனுக்கு நடக்கின்றது, இதே பலசாலிகளால் நாளை இன்னும் பலருக்கும் இதே நிலைமை வரும்................. பாதிக்கப்பட்டவர்களாவது பாதிக்கப்படுகின்றவர்களுக்கு ஒரு ஆதரவுக் குரலையாவது பதிவு செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

அமெரிக்காவிற்கு ரஷ்யாவிடமிருந்தூ ஏதோ சில பொருட்கள் மிகவும் மலிவு விலையில் அல்லது இலவசமாக கிடைக்கப் போகின்றன.............. ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போகமாட்டார்....

டிரம்பும் புட்டினை போல நாடு பிடிக்கும் திட்டத்தில் தான் இருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தில் தனக்கு சர்வதேசத்திடமிருந்து எதிர்ப்பு வரும்போது அதில் இருந்து விடுபட ஐ.நா வில் வீட்டோ உரிமையுள்ள நம்பிக்கைக்குரிய நண்பன் புட்டினை அணைத்து வைப்பது டிரம்பின் திட்டம் போல் தெரிகிறது.

போதாக்குறைக்கு தனது truth social தளத்தில் உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்றும் குறிப்பிட்டு அமெரிக்கா வழங்கிய 200 பில்லியன் டாலர்களை ஏப்பம்விட்டு விட்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் யுத்தத்தை ஆரம்பித்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

large.IMG_8137.jpeg.4e1349ffc2062d1250ee

  • கருத்துக்கள உறவுகள்

மான்புமிகு புட்டின் என‌ சில‌ உற‌வுக‌ள் இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் எழுதும் போது ஒருத‌ர் ஓவ‌ரா கோவ‌ப் ப‌ட்டார்

இப்ப‌ ஆளையே காணும்.................உல‌கில் எப்ப‌டி எல்லாம் மாற்ற‌ம் திடிர் திடிர் என‌ ந‌ட‌க்குது

வெற்றி நாய‌க‌ன் புட்டின்

உக்ரைன் ஜனாதிபதி அனாதை போல் நிக்கிறார்.......................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

பாதிக்கப்பட்டவர்களாவது பாதிக்கப்படுகின்றவர்களுக்கு ஒரு ஆதரவுக் குரலையாவது பதிவு செய்யவேண்டும்.

ரசோதரன் அண்ணா சொல்லி 4 மணித்தியாலம் முடியவில்லை பாதிக்கபட்ட ஒரு இனத்தை சேர்ந்தவர் ஒருஆக்கிரமிப்பாளன் சர்வாதிகாரியை எப்படி கொண்டாடுகிறார்

மான்புமிகு புட்டின்

வெற்றி நாய‌க‌ன் புட்டின்

  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் ஒரு சர்வாதிகாரி என்பது ட்ரம்புக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் செலன்ஸ்கியை சர்வாதிகாரி என்று தெரிகின்றது.

யார் சண்டையை தொடக்கியது என்பதை @ரஞ்சித் எழுதிய பதிவுகளை ட்ரம்புக்கு மொழிபெயர்த்துக் கொடுக்கவேண்டும்!

சண்டையில் உக்கிரனை வெல்லமுடியாத ரஷ்யா ட்ரம்ப் மூலம் வெற்றியை இலகுவாக எடுக்கப்பார்க்கின்றது.

எப்படியும் புட்டினும் ட்ரம்ப்பும் உக்கிரேனின் கனிமவளத்தைக் கொள்ளையடித்து முடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vanangaamudi said:

டிரம்பும் புட்டினை போல நாடு பிடிக்கும் திட்டத்தில் தான் இருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தில் தனக்கு சர்வதேசத்திடமிருந்து எதிர்ப்பு வரும்போது அதில் இருந்து விடுபட ஐ.நா வில் வீட்டோ உரிமையுள்ள நம்பிக்கைக்குரிய நண்பன் புட்டினை அணைத்து வைப்பது டிரம்பின் திட்டம் போல் தெரிகிறது.

போதாக்குறைக்கு தனது truth social தளத்தில் உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்றும் குறிப்பிட்டு அமெரிக்கா வழங்கிய 200 பில்லியன் டாலர்களை ஏப்பம்விட்டு விட்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இருவருக்கும் ஏகாதிபத்திய கனவுகள் போல, நீங்கள் சொல்லியிருப்பது போலவே. மேலதிகமாக, அமெரிக்கா எவ் வழிகளில் என்றாலும் செல்வம் சேர்க்கும் ஒரு முயற்சியில் முன்னை விட தீவிரமாக இறங்கியிருக்கின்றது.

ஒரு காலத்தில் இந்தியா இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, எங்களின் மேல் ஒரு தீர்வை திணித்தது. எங்களை, தமிழ் மக்களை, அந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு பக்கமாக ஏற்கவில்லை. மாறாக எங்களை பயமுறுத்தியது. இன்று இந்த அமெரிக்காவும் இதைத் தானே உக்ரேன் மக்களுக்கு செய்கின்றது................. எங்களுக்கு நாடு வேண்டும், சுதந்திரம் வேண்டும், உரிமை வேண்டும் என்று சொல்லும் எங்களால், இதை எப்படி கண்டும் காணாமல் போக முடியும் அல்லது அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஏற்கமுடியும்.................

புடின் தப்பிவிட்டார். அமெரிக்காவும், ரஷ்யாவும் சேர்ந்து ஒரு நாட்டை, ஒரு இனத்தை அடிமைப்படுத்துவதை எப்படி நியாயப்படுத்த முடியும்.............. ஏற்கனவே நியூயோர்க் டைம்ஸில் ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவிற்கு கிடைக்கப் போகும் அனுகூலங்கள் எவை என்று ஒரு கட்டுரை வந்துவிட்டது. அதை நான் இன்னமும் வாசிக்கவில்லை.

ஐரோப்பிய யூனியன் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டிய தருணம் இது.

யுத்தமும், அழிவுகளும் நிற்கவேண்டும், அதில் மாற்றில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவனுக்கு ஒரு குரல் கூட இல்லையா............... உக்ரேன் இல்லாமல் ஒரு உக்ரேனின் தீர்விற்கான ஒரு பேச்சுவார்த்தையா.............🫣.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

சமகாலத்து குளிர்காலம் முடிவடை போழ்துகளில்

உக்ரேனியத்து நந்திக்கடல்களில்

அலைகள் மீண்டும் மேலெழும்

துருப்பம்மான் செல்வார் அங்கே

அடையாளம் காண

உடன் போவார் யாராக இருக்கும் ? 😡

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ஸியாவின் நிலப்பரப்பை உக்ரேன் ஆக்கிரமித்து வைத்திருப்பது போல டிரம்ப் எனும் கோமாளி கருதுகிறது போலும். ஆக்கிரமிப்பவனை ஆதரித்துக்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவனை போரிற்கான காரணம் என்று அழைப்பதற்கு ஒரு முட்டாள்த்தனமான கோமாளியைத் தவிர வேறு எவரால் இயலும்?

ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஈழத்தமிழினத்தையோ அதன் உண்மையான பிரதிநிதிகளையோ அழைக்காமல் ஆக்கிரமிப்பாளனுடன் இந்தியா எனும் இன்னொரு ஆக்கிரமிப்பு வல்லரசு 1987 இல் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கும் ஒப்பந்தத்திற்கும் நிகரானது இன்று உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பினை ஏற்றுக்கொண்டு போரினை முடிவிற்குக் கொண்டுவர ஆக்கிரமிப்புச் சர்வாதிகாரியான கொடுங்கோலன் புட்டினுடன் இன்னொரு ஆக்கிரமிப்பாளனான டிரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தை.

வெகுவிரைவில் நேட்டோவிற்கு எதிரான போரில் ரஸ்ஸியாவின் பக்கத்தில் நின்றுகொண்டு டிரம்ப் எனும் கோமாளி சண்டையிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போரிடும் எந்தவொரு இனமும் அமெரிக்காவின் தயவில்ப் போரிடக் கூடாது என்பதற்கு உக்ரேனின் அனுபவமும் ஒரு பாடம்தான். இரண்டாம் உலகப் போரில் பிலிப்பைன்ஸை விட்டு அமெரிக்கா வெளியேறியபோது ஜப்பானியப் படை அங்கு செய்த பழிவாங்கல்ப் படுகொலகைளும், ஐஸிஸிற்கு எதிரான போரில் குர்திஸ் போராளிகளுக்கு ஆதரவளித்த அமெரிக்கா, பின்னர் டிரம்பின் ஆட்சியில் குர்திஸ்களை துருக்கியின் ஆக்கிரமிப்பில் கையளித்துவிட்டு அங்கி வெளியேறிச் சென்றதும் நினைவிற்கு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரெயின் சோவியத் யூனியனின் ஒரு பகுதி. பிரிந்தபின் சிவனே என்று இருந்திருக்க வேண்டும். நாட்டோவை நாடியதால் நட்டாற்றில் நிற்கிறது.

இலங்கையில் தமிழ் சிறார்களை குண்டுபோட்டுக் கொண்ற பழியும் சும்மா விடாது.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-278.jpg?resize=750%2C375&ssl

உக்ரேன் ஜனாதிபதியை, சர்வாதிகாரி என சாடிய ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (19) உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஒரு “சர்வாதிகாரி” என்று கண்டனம் செய்தார்.

மேலும் அவர் அமைதியைப் பாதுகாக்க விரைவாக செயற்பட வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிடின் ஜெலென்ஸ்கி தனது நாட்டை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளக் கூடும் என்றும் எச்சரித்தார்.

ட்ரம்பின் இந்த கருத்தானது இரு தலைவர்களுக்கிடையிலான பகையை ஆழப்படுத்தியதுடன் ஐரோப்பிய அதிகாரிகளையும் எச்சரித்தது.

ரஷ்யாவின் 2022 படையெடுப்பிற்கு உக்ரேன் தான் காரணம் என்று ட்ரம்ப் கூறிய ஒரு நாளுக்குப் பின்னர் – ரஷ்யா-உக்ரேன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் அணுகுமுறை மொஸ்கோவிற்கு பயனளிக்கும் என்று ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளிடையே கவலைகளை அதிகரித்தது.

அவர் ஜனாதிபதியாக ஒரு மாதத்திற்குள், போரில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் பிரச்சாரத்தை புட்டினுடனான தொலைபேசி அழைப்பு, சவுதி அரேபியாவில் உக்ரேனை ஓரங்கட்டிய மூத்த அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுக்கள் மூலம் முடிவுக்கு கொண்டுவந்தார்.

இந்த நிலையில், புதன்கிழமை சமூக ஊடகங்களில் பதிவிட்ட ட்ரம்ப் ஜெலென்ஸ்கியை தேர்தல்கள் இல்லாத ஒரு சர்வாதிகாரி என்றும் சாடினார்.

இதற்குப் பதிலளித்த உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha, தனது நாட்டை விட்டுக்கொடுக்க யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்றார்.

ஜெலென்ஸ்கியின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2024 இல் முடிவடைய வேண்டும், ஆனால் ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் உக்ரேன் 2022 பெப்ரவரியில் விதித்த இராணுவச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது.

சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்க-ரஷ்யா பேச்சுவார்த்தையில் கெய்வ் விலக்கப்பட்டதற்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி செவ்வாயன்று, அமெரிக்க ஜனாதிபதி மொஸ்கோவால் நிர்வகிக்கப்படுவதாக சாடிப் பேசினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாகவே ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

இதனிடையே, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் புதன்கிழமை ட்ரம்பை தாக்குவதற்கு எதிராக ஜெலென்ஸ்கிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற ட்ரம்ப், உக்ரேன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதாக பலமுறை சபதம் செய்தார்.

அவர் புட்ன் மற்றும் ஜெலென்ஸ்கிக்கு புதன்கிழமை தனித்தனியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு உரையாடினார்.

இதனிடையே தற்சமயம் ரஷ்யா உக்ரேனின் ஐந்தில் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் பல மாதங்களாக கிழக்கில் மெதுவாக முன்னேறி வருகிறது.

அதே நேரத்தில் உக்ரேனின் சிறிய இராணுவம் மனிதவள பற்றாக்குறையுடன் போராடுகிறது, மேலும் மேற்கு ரஷ்யாவில் ஒரு பகுதியை வைத்திருக்க முயற்சிக்கிறது.

இந்த நிலையில், எந்தவொரு சமாதான ஒப்பந்தத்தின் கீழும் உக்ரேனின் பிரதேசத்தை விட்டுக்கொடுக்கவும் நிரந்தரமாக நடுநிலை வகிக்கவும் ரஷ்யா கோரியுள்ளது.

கைப்பற்றப்பட்ட நிலத்தில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என்று உக்ரேன் கோருகிறது, மேலும் மாஸ்கோவின் தாக்குதலைத் தடுக்க நேட்டோ உறுப்பினர் அல்லது அதற்கு சமமான பாதுகாப்பு உத்தரவாதத்தை விரும்புகிறது.

போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவும் ஐரோப்பாவும் உக்ரேனுக்கு பல பில்லியன் டொலர்களை இராணுவ உதவியாக வழங்கியுள்ளன.

https://athavannews.com/2025/1422168

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

உக்ரேன் ஜனாதிபதியை, சர்வாதிகாரி என சாடிய ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (19) உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஒரு “சர்வாதிகாரி” என்று கண்டனம் செய்தார்.

உலகம் முழுவதும் விடுதலை வீரனாக சித்திரிக்கப்பட்ட ஒருவர் இன்று சர்வாதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.அதுவும் அமெரிக்கா சார்பாக.....

இதுதான் உலகம்.

எனக்கு என்னமோ எப்பிடி இருந்த நான் இப்புடி ஆயிட்டன் பீலிங். 🤣

  • இணையவன் changed the title to 'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

உலகம் முழுவதும் விடுதலை வீரனாக சித்திரிக்கப்பட்ட ஒருவர் இன்று சர்வாதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.அதுவும் அமெரிக்கா சார்பாக.....

இதுதான் உலகம்.

எனக்கு என்னமோ எப்பிடி இருந்த நான் இப்புடி ஆயிட்டன் பீலிங். 🤣

செலென்ஸ்கி... இனியும் விசர் சேட்டை விட்டார் என்றால்,

அமெரிக்காவே.... ஆளை முடித்து விட்டு,

"அந்திரட்டியும்" செய்து விட்டு போய் விடுவார்கள். 😂

பிறகு... புட்டின், குண்டு போட்டு, கொன்று போட்டார் என்று,

மூக்காலை அழுது கொண்டு நிற்கப் படாது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2025 at 07:52, தமிழ் சிறி said:

அமெரிக்காவும், ஐரோப்பாவும்….. உக்ரைனுக்கு ஆயுதத்தையும், பணத்தையும் கொடுத்து ரஷ்யாவுடன் தொடர்ந்து சண்டை பிடி என்று… கொம்பு சீவி விட்டு விட்டு, இப்ப ஒரேயடியடியாக உக்ரைனை மாட்டி விடுகின்றார்கள்.

சொந்தப் பலத்தை நம்பாமல், மற்றவனின் ஏவல் பேச்சைக் கேட்டு… போரில் குதித்த உக்ரைன் தனது நாட்டை… கற்குவியலாக மாற்றியதும் அல்லாமல், நாட்டின் பெரும் பகுதியை ரஷ்யாவிடம் இழந்து நடுத்தெருவில் நிற்கின்றது.

செலன்ஸ்கியின் கோமாளித்தனத்துக்கு கிடைத்த விலை இதுதான்.

இதில் ஒரு முக்கிய விஷயம் உண்டு” உக்ரேனிடமுள்ள. கனிம. வளத்தில். 50% த்தை இந்த ட்ரம்ப். கேட்டவர் அதற்கு கோமாளி மறுத்து விட்டது அதன் பிறகு தான் இந்த உரையாடல்கள் ட்ரம்ப. எப்போதும் பணம் வியாபாரம் பாலியல் இவை தான் முக்கியம் மற்ற மனிதர்கள் பற்றி எந்த கவலையும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் பலர் அறம் சார்ந்து இயங்குவதில்லை.. ஆனால் நாம் அறம் எது என்று புரிந்து அதனை விட்டுக்கொடுக்கக்கூடாது. வலியவர்களும் வஞ்சகர்களும் வெல்கின்றார்கள் என்பதற்காக நாம் அறத்தை விட்டுக்கொடுக்கமுடியாது..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இதில் ஒரு முக்கிய விஷயம் உண்டு” உக்ரேனிடமுள்ள. கனிம. வளத்தில். 50% த்தை இந்த ட்ரம்ப். கேட்டவர் அதற்கு கோமாளி மறுத்து விட்டது அதன் பிறகு தான் இந்த உரையாடல்கள் ட்ரம்ப. எப்போதும் பணம் வியாபாரம் பாலியல் இவை தான் முக்கியம் மற்ற மனிதர்கள் பற்றி எந்த கவலையும் இல்லை

அமெரிக்கன் கேட்கிறதை... மரியாதையாக கொடுத்து விடுவது தான் நல்லது.

இல்லாட்டி... அடாத்தாக, அடித்து பறித்து விடுவார்கள்.

பிறகு... சதாம் ஹுசைன், கடாபிக்கு நடந்ததுதான், செலென்ஸ்கிக்கும் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு ஜனநாயகவாதிகள் ஜனநாயகத்திற்க்கா புடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று இங்கு யாழ்களத்தில் புளங்காகிதம் அடைத்துக்கொண்டு இருந்த அரசியல் விற்பன்னர்கள் ...... இப்போ தடுமாறி நிற்கிறார்கள் ......... இங்கிருக்கும் கருத்துக்களை வாசிக்க எனக்கு ஒரே சிரிப்பாக இருக்கிறது. உண்மையில் விழுந்து விழுந்து சிரிக்கிறேன்

மீசையில் மண் ஓட்ட போகிறது என்றதும் ....... இப்போ ட்ரம்பை சர்வாதிகாரி ஆக்கிவிடால் மண் ஒட்டிடாது என்று கிளம்பி இருகிறார்கள் என்று எண்ணுகிறேன். சூப்பர் ! பாலஸ்தீனத்தில் ௪௦ஆயிரம் அப்பாவிகளை கொன்று குவித்த நிதன்யாகுவிற்கு யாழ்களத்தில் சிலை வைக்காத குறையாக விக்கிக்கொண்டு இருந்தார்கள் ......... கொக்குவில் தவடியில் சாதியை ஒழிக்க சித்தார்த்தன் என்று ஒரு கோமாளி பெரியாருக்கு சிலை வைக்க போகிறதாம். அது சீமானுக்கு எதிரான செயலக இருக்கும்போது ஏன் அந்த அரிய சந்தர்ப்பத்தை நீங்கள் நழுவ விட வேண்டும்? அவருடன் கூடி நித்தன் யாகுவிற்கும் சேர்த்து சிலை வையுங்கள் புட்டினையும் பழிவாங்கியதாகவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்திய புகழும் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆணவம் இல்லாத மனிதர்கள் யார். அதுவே சிலருக்கு அதிகமான உயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மையாக மாறியும் விடுகின்றது. 'என்னுடைய ஒப்பந்தத்தில் நீ கையெழுத்து இடமாட்டாயோ.........' என்பதே இப்படி மாறி நிற்கின்றது. உக்ரேனை முழுதாகவே கொள்ளை அடிப்பதற்கு ஒரு ஒப்பந்தம் எழுதும் அமெரிக்கா, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் உக்ரேன் என்றொரு நாடே இருக்காது என்ற எச்சரிக்கை.

கனடாவிற்கு எச்சரிக்கை, பனாமாவிற்கு எச்சரிக்கை, மெக்சிகோவிற்கு எச்சரிக்கை....... முழு ஐரோப்பாவிற்கும் எச்சரிக்கை. உள்நாட்டு கணக்கு வழக்கை சரிசெய்ய, முழு உலகையுமே அடித்துப் பறிக்க வேண்டுமா...... இது தான் எல்லோரும் எதிர்க்க வேண்டிய ஏகாதிபத்தியம்.

இன்றும் கூட இலங்கைக்கு எதிராக ஐநாவில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தால், அந்த தீர்மானத்திற்கு எதிராக அதாவது இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஒரு நாடு ரஷ்யா, வாக்களிப்பில் இருந்து விலகி இருக்கும் அல்லது தீர்மானத்திகு ஆதரவாக வாக்களிக்கும் நாடு உக்ரேன். இலங்கைக்கு அதிக ஆயுதங்களை விற்பனை செய்த நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இதில் உக்ரேன் தான் எங்களுக்கு அழிவு செய்தது, ரஷ்யா எங்களைக் காப்பற்றியது என்ற ஈழத்தமிழர்களின் நிலைப்பாடும், அதனால் உக்ரேன் அழிந்து போகட்டும் என்றும் நினைப்பது எங்களை கண்களை எங்கள் விரல்களாலேயே நாங்கள் குத்துவது போல.

ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளில் 2/3 பங்கு ஐரோப்பா வங்கிகளின் பொறுப்பிலேயே இருக்கின்றது. மிகுதி தான் அமெரிக்காவின் வசம் இருக்கின்றது. ரஷ்யாவின் மிகப் பெரிய வியாபார பங்குதாரர் ஐரோப்பாவே, அமெரிக்கா அல்ல. இன்று பலவீனப்பட்டிருக்கும் ரஷ்யாவால் ஐரோப்பாவிற்கு எதிராக இன்னொரு யுத்தத்தை நடத்தவே முடியாது. ஆகவே, முழு ஐரோப்பாவும் ஒன்றிணைந்து, அமெரிக்காவைத் தவிர்த்து விட்டு, உக்ரேனிய மக்களுக்காக ஓரணியில் நிற்கவேண்டும்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ரஞ்சித் said:

ரஸ்ஸியாவின் நிலப்பரப்பை உக்ரேன் ஆக்கிரமித்து வைத்திருப்பது போல டிரம்ப் எனும் கோமாளி கருதுகிறது போலும். ஆக்கிரமிப்பவனை ஆதரித்துக்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவனை போரிற்கான காரணம் என்று அழைப்பதற்கு ஒரு முட்டாள்த்தனமான கோமாளியைத் தவிர வேறு எவரால் இயலும்?

ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஈழத்தமிழினத்தையோ அதன் உண்மையான பிரதிநிதிகளையோ அழைக்காமல் ஆக்கிரமிப்பாளனுடன் இந்தியா எனும் இன்னொரு ஆக்கிரமிப்பு வல்லரசு 1987 இல் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கும் ஒப்பந்தத்திற்கும் நிகரானது இன்று உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பினை ஏற்றுக்கொண்டு போரினை முடிவிற்குக் கொண்டுவர ஆக்கிரமிப்புச் சர்வாதிகாரியான கொடுங்கோலன் புட்டினுடன் இன்னொரு ஆக்கிரமிப்பாளனான டிரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தை.

வெகுவிரைவில் நேட்டோவிற்கு எதிரான போரில் ரஸ்ஸியாவின் பக்கத்தில் நின்றுகொண்டு டிரம்ப் எனும் கோமாளி சண்டையிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போரிடும் எந்தவொரு இனமும் அமெரிக்காவின் தயவில்ப் போரிடக் கூடாது என்பதற்கு உக்ரேனின் அனுபவமும் ஒரு பாடம்தான். இரண்டாம் உலகப் போரில் பிலிப்பைன்ஸை விட்டு அமெரிக்கா வெளியேறியபோது ஜப்பானியப் படை அங்கு செய்த பழிவாங்கல்ப் படுகொலகைளும், ஐஸிஸிற்கு எதிரான போரில் குர்திஸ் போராளிகளுக்கு ஆதரவளித்த அமெரிக்கா, பின்னர் டிரம்பின் ஆட்சியில் குர்திஸ்களை துருக்கியின் ஆக்கிரமிப்பில் கையளித்துவிட்டு அங்கி வெளியேறிச் சென்றதும் நினைவிற்கு வருகிறது.

வணக்கம் ரஞ்சித்!

நீங்கள் சொல்வதும் சரி.உங்கள் ஆதங்கமும் சரியானதே.ஆனால் அன்றைய காலங்களிலும் சரி இன்றைய காலங்களிலும் சரி பிராந்திய அரசியலும் அதிகார அரசியலும் தான் முக்கியத்துவமாக இருக்கின்றது. ஒட்டுமொத்த உலகையும் அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கின்றது(வைத்திருக்கின்றது). அதே வழியில் சிற்றரசர்களாக பிராந்திய நாடுகளில் வல்லமை உள்ள அரசுகள் தங்கள் அண்டை நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன.

அண்மையில் மோடி - ரம்ப் சந்திப்பின் போது பங்களாதேஷ் பற்றி ஒரு நிருபர் கேள்வி கேட்டபோது...... நண்பர் மோடி அதை பார்த்துக்கொள்வார் என வெளிப்படையாகவே பதிலளித்தார்.இதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.

அதாவது இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுக்கு இந்தியா பதில் சொல்லும். சீனா பார்வையாளராக இருக்க வேண்டும் என்பது போல் உள்ளது.👈

அடுத்தது அமெரிக்கா இன்று வரைக்கும் நீதி நியாய பக்கம் நின்றது போலவும் கோமாளி டொனால்ட் ரம்ப் வந்த பின்னர்தான் எல்லாம் தலை கீழாக மாறியது போலவும் எழுதியிருக்கின்றீர்கள். அமெரிக்கா என்றும் தன் சுய நல அரசியலை கைவிட்டதுமில்லை. இனியும் கை விடப்போவதுமில்லை.

இலங்கைக்கு இந்தியா அரசன்🤣

ஐரோப்பாவிற்கு அமெரிக்கா அரசன்😂

மத்திய கிழக்கிற்கு இஸ்ரேல் அரசன்😃

ஆபிரிக்காவிற்கு மும்முனை போட்டி நடக்கின்றது😎

அனைத்தும் எனது சுய கருத்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

உலகம் முழுவதும் விடுதலை வீரனாக சித்திரிக்கப்பட்ட ஒருவர் இன்று சர்வாதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.அதுவும் அமெரிக்கா சார்பாக.....

இதுதான் உலகம்.

எனக்கு என்னமோ எப்பிடி இருந்த நான் இப்புடி ஆயிட்டன் பீலிங். 🤣

நீங்கள் வரலாற்று புத்தகங்கள் வாசிக்கவில்லை, வரலாற்று புஸ்தகங்கள் வாசித்தது போதாது என அங்கீகாரம் பெற்ற வித்துவான்கள் கூறப்போகின்றார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.