Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் புதிய அமைச்சரவையில் பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.

https://www.cbc.ca/news/politics/livestory/carney-s-cabinet-swearing-in-underway-featuring-24-new-faces-9.6758258

பொது பாதுகாப்பு அமைச்சர் (Minister of Public Safety) என்பது நாட்டின் மக்கள் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, அவசர நிலை மேலாண்மை, குடியுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை ஏற்கும் பதவியாகும்.RCMP (Royal Canadian Mounted Police), CSIS (Canadian Security Intelligence Service),CBSA (Canada Border Services Agency),Emergency Management )

Edited by zuma
மேலதிக தகவல்

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் இருந்த நீதித்துறையை விடவும் அதிகம் பொறுப்புகளும், பட்ஜெட்டுகளும் கூடிய அமைச்சு.

வாழ்த்துக்கள் ஹரி !!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்துக்கள் கரி.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் பொதுபாதுகாப்பு அமைச்சராக Gary Anandasangaree!

  • கருத்துக்கள உறவுகள்

Red-White-Breaking-News-Instagram-Post-5

கனடாவின் புதிய அமைச்சரவையில் பொது பாதுகாப்பு அமைச்சர்களாக கேரி ஆனந்தசங்கரி மற்றும் அனிதா ஆனந்த் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இருவருக்கும் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.


  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

இலங்கையில் கூட ஒரு தமிழன் இப்படி ஒரு பொறுப்பான. பதவியில் நியமிக்கப்படவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

முன்னர் இருந்த நீதித்துறையை விடவும் அதிகம் பொறுப்புகளும், பட்ஜெட்டுகளும் கூடிய அமைச்சு.

வாழ்த்துக்கள் ஹரி !!

நிதி ஒதுக்கீடு கூடிய பதவி என்றால் மக்களுக்கு நிறைய வசதிகளை செய்து கொடுக்க முடியும்

பொது மக்கள் பாதுகாப்பு என்ற பதவிக்கு இவரை நியமித்தது

இவருக்கு ஒரு சவாலாக இருக்கும் என நினைக்கின்றேன்.

கனடாவில் பொது மக்களின் பாதுகாப்பிற்கான சட்டங்களில் பல ஓட்டைகள் உள்ளன

எல்லாவற்றையும் சரிப்படுத்தி தனது அரசியல் வாழ்க்கையில் இன்னும் பல படிகள் ஏறி சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்🙏

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கேரி ஆனந்தசங்கரி & அனிதா ஆனந்த் ........ ! 👍

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் கேரி ஆனந்தசங்கரி & அனிதா ஆனந்த்!! .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாட்டின் அதி முக்கிய உயர்பதவி. அதுவும் கனடாவில்!!!!!!! உண்மையில் புல்லரிக்கின்றது.

இனி இவரை அடிக்கடி வெளிநாட்டு பயணங்களில் காணலாம். அமைச்சர் ஹரி செல்லுமிடமெல்லாம் இவர் பூர்வீகம் ஆராயப்படும்.

ஏற்கனவே கனடாவில் இன அழிப்பு நினைவுத் தூபியால் கொதி நிலையில் சிங்கள இனவாதிகளுக்கு கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் ஒரு ஈழத்தமிழன் என்பது எரியும் நெருப்பில் எண்ணை வார்த்தது போல் இருக்கும்.

ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்துக்கள்.💐 🍀

இவரும் யாழ்கருத்துக்கள முன்னாள் உறவு என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Anita-Anand-canada_1747195652041_1747195

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் தெரிவு.

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் லிபரல் கட்சியின் தலைவரான மார்க் கார்னி, அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்களை முன்னெடுத்து வருகின்றார்.

அந்தவகையில் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த மெலானி ஜோலிக்கு பதிலாக, அனிதா ஆனந்துக்கு அந்த பதவி கையளிக்கப்பட்டுள்ளது.

அனிதாவின் தாய் பஞ்சாபைச் சேர்ந்தவர் எனவும் தந்தை தமிழகத்தை ச் சேர்ந்தவர் எனவும் அவர்கள் 1960களின் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Athavan News
No image preview

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் தெரிவு

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் லிபரல் க...
15 hours ago, வாத்தியார் said:

நிதி ஒதுக்கீடு கூடிய பதவி என்றால் மக்களுக்கு நிறைய வசதிகளை செய்து கொடுக்க முடியும்

பொது மக்கள் பாதுகாப்பு என்ற பதவிக்கு இவரை நியமித்தது

இவருக்கு ஒரு சவாலாக இருக்கும் என நினைக்கின்றேன்.

கனடாவில் பொது மக்களின் பாதுகாப்பிற்கான சட்டங்களில் பல ஓட்டைகள் உள்ளன

எல்லாவற்றையும் சரிப்படுத்தி தனது அரசியல் வாழ்க்கையில் இன்னும் பல படிகள் ஏறி சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்🙏

முதலில் வாழ்த்துக்கள் கரி ஆனந்தசங்கரி

கரிக்கு இந்த அமைச்சுப் பதவி குருவி தலையில் பெரிய பனங்காயோ என தோன்றுகின்றது எனக்கு.

இந்த அமைச்சுப் பதவிக்குள் தான் எல்லைப்பாதுகாப்பு விடயமும் வருகின்றது. கனடா மீது வரிகள் விதிப்பதற்கு காரணம் என ரம்பால் குற்றஞ்சாட்டப்படும் எல்லை பாதுகாப்பு பிரச்சினையையும் இவரது அமைச்சு தான் பொறுப்பு.

அத்துடன் கனடிய உளவுத்துறை, மற்றும் மத்திய அரசின் கீழ் வரும் RCMP (Royal Canadian Mounted Police) பொலிஸ் பிரிவும் வருகின்றது. கடுமையாக சீர் திருத்தம் செய்யப்பட வேண்டிய பிரிவுகள் இவை. ருடோவின் லிபரல் அரசின் மெத்தனப்போக்குகளால் மிகவும் பலவீனமடைந்து இருக்கும் துறைகள் இவை.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி 

Published By: PRIYATHARSHAN

13 MAY, 2025 | 10:47 PM

image

கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான தரப்பு வெற்றிபெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கார்னி 28 அமைச்சர்களை அமைச்சரவை பதவிகளுக்கும், மேலும் 10 பேரை வெளியுறவுச் செயலாளர்களாகவும் நியமித்துள்ளார்.

பொதுபாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹரி ஆனந்தசங்கரி முன்னதாக பல அமைச்சரவை அமைச்சுபதவிகளை வகுத்துள்ளார்.

இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி கடந்த 2015 ஒக்டோபர் 19 இல் நடைபெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக பாராளுமன்றம் சென்றார்.

முன்னதாக சுதேச உறவுகளுக்கான அமைச்சராகவும் 2025 மார்ச் 14 முதல் நீதி அமைச்சராகவும், கனடிய சட்டமா அதிபராகவும் பணியாற்றி வருகிறார்.

கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள்சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.

மேலும், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.

Gary-Anandasangaree2.png

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு ஹரி ஆனந்தசங்கரி தெரிவிக்கையில்,

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதை நான் பெருமையுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கின்றேன்.

டேவிட் மப்பின்டியின் சிறந்த பணியை அடித்தளமாகக் கொண்டு மேலும் கட்டியெழுப்ப ஆர்வமாகவுள்ள அதேவேளை, எமது சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், வெறுப்புணர்வுக் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதற்கும், கனேடியர்களை நாளாந்தம் பாதுகாப்பும் முகாமை அமைப்புக்களை பலப்படுத்தவும் நான் உறுதிபூண்டுள்ளேன்.

முடியரசு - பழங்குடிகள் உறவு மற்றும் நீதி அமைச்சுக்களில் ஏற்பட்ட அர்த்தமுள்ள முன்னேற்றம் குறித்து நான் உண்மையான பெருமிதங்கொண்டுள்ளேன்.

பழங்குடிப் பங்காளிகளுடன் இணைந்து செயற்பட்டு, பலமானதும் மதிக்கப்படுவதுமான உறவுகளைக் கட்டியெழுப்பி, மீளிணக்கத்தை முன்னகர்த்தி, மேம்பட்ட எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாம் கட்டியெழுப்பியுள்ளோம்.

இந்தப் புதிய பணியை நான் பொறுப்பேற்கும் இந்த வேளையில், பிரதம மந்திரி மார்க் கார்ணி என்னில் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நான் நன்றியுடையவனாக இருக்கின்றேன்.

கனடாவை ஒன்றுபடுத்துவதற்கும், பாதுகாப்பைக் கட்டுறுதிப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும், கட்டியெழுப்பவும் எனது அமைச்சரவைச் சகாக்களுடனும் அனைத்து மட்ட அரசுகளுடனும் இணைந்து பணியாற்ற நான் தயாராகவிருக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

Gary-Anandasangaree1.png

https://www.virakesari.lk/article/214640

  • கருத்துக்கள உறவுகள்

கனடா வெளியுறவு அமைச்சரான தமிழக பெண்; பகவத் கீதையில் பதவி பிரமாணம்.. யார் இந்த அனிதா ஆனந்த்?

14 MAY, 2025 | 12:43 PM

image

ஒட்டாவா:

கனடா நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. புதிய பிரதமராக மார்க் கார்னி வெற்றி பெற்றார். அவரது அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்று கொண்ட தமிழ் வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் பகவத் கீதையை வைத்து பதவி பிரமாணம் எடுத்து கொண்டார்.

இந்த அனிதா ஆனந்த் யார்? பின்னணி என்ன? . கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருந்தார். அரசியல் நெருக்கடியால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைக்கால பிரதமராக மார்க் கார்னி செயல்பட்டார். அதன்பிறகு அவரே லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த மாதம் இறுதியில் கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் மார்க் கார்னி பிரதமராக பொறுப்பேற்றார். 

இந்நிலையில் தான் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது. மொத்தம் 28 அமைச்சர்கள்இ 10 மத்திய இணை அமைச்சர்கள் என்று மொத்தம் 38 பேர் இடம் பெற்றனர். இதில் 24 பேர் புது முகங்களாகும். இந்த அமைச்சரவையில் தமிழக வம்சாவளியை சேர்ந்த ஆனந்த் இடம்பெற்றுள்ளார். அவருக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அனிதா ஆனந்த் பகவத்கீதையை வைத்து அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

anitha_anand.jpg

பகவத் கீதையை வைத்து அனிதா ஆனந்த் பதவியேற்ற வீடியோவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‛ கனடாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து பெருமிதம் கொள்கிள்றேன். பாதுகாப்பான நியாயமான உலகத்தை கட்டியெழுப்பவும் கனேடிய மக்களிற்கு வழங்கவும் பிரதமர் மார்க் கார்னி மற்றும் எங்கள் குழுவினருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளேன் என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்போது கனடா வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அனிதா ஆனந்த் பெற்றோர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். தந்தை  தமிழகத்தை சேர்ந்தவர் மருத்துவர்.. தாய் பெயர் சரோஜ். இவர் பஞ்சாப்பை சேர்ந்தவர். இவரும் மருத்துவர்.

அனிதா ஆனந்த் கனடாவிலேயே பிறந்து வளர்ந்தவர். இப்போது 58 வயது ஆகிறது. 4 பட்டப்படிப்புகளை முடித்துள்ளார். குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் இளநிலை பிரிவில் Arts in Political Studies என்பதை படித்து முடித்தார். அதில் தங்கப்பதக்கம் வாங்கினார். அதன்பிறகு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளநிலை பிரிவில்Jurisprudenceபடிப்பையும் தல்ஹசி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் டொரண்டோ பல்கலைகழகத்தில் சட்ட மேற்படிப்பையும் முடித்தார்.  

அனிதா ஆனந்த் அடிப்படையில் வழக்கறிஞர் ஆவார் . இவர் கடந்த 2015ம் ஆண்டில் பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார். அவர் ஒன்டாரியோ அரசின் நிபுணர் குழுவில் இடம்பிடித்தார். அதன்பிறகு கடந்த 2019ம் ஆண்டில் ஒக்வில்லி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு கொரோனா பரவல் சமயத்தில் பொதுசேவை மற்றும் கொள்முதல் பிரிவின் அமைச்சராக செயல்பட்டார். அனிதா ஆனந்துக்கு திருமணமாகி விட்டது. கணவர் பெயர் ஜான் நோல்டன். இவரும் கனடாவில் வழக்கறிஞராகவும் வருகிறார்.

https://www.virakesari.lk/article/214682

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

கனடா வெளியுறவு அமைச்சரான தமிழக பெண்; பகவத் கீதையில் பதவி பிரமாணம்.. யார் இந்த அனிதா ஆனந்த்?

கனடாவுக்கும் இந்தியாவுக்குமான முறுகல் நிலையை எப்படி கையாள்வார்?

இந்தியராக இருப்பதால் சுலபமாக இந்தியா பக்கம் சாய்த்து விடுவார்களா?

இந்திய ஆளும் வர்க்கத்திற்கு நேர்வழி தெரியாதே?

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

கனடாவுக்கும் இந்தியாவுக்குமான முறுகல் நிலையை எப்படி கையாள்வார்?

இந்தியராக இருப்பதால் சுலபமாக இந்தியா பக்கம் சாய்த்து விடுவார்களா?

இந்திய ஆளும் வர்க்கத்திற்கு நேர்வழி தெரியாதே?

இவர் வெளியுறவுத்துறை அமைச்சரானது இன்னும் இந்திய ஊடகங்களுக்கு தெரியாதா?

தெரிந்திருந்தால்…. அலுப்பு அடிக்கும் மட்டும் அவவின் பூர்வீகத்தை நோண்டி எடுத்திருப்பார்களே.

இல்லாவிடில்…. போருக்கு பாகிஸ்தான் போன நிருபர்கள், இன்னும் திரும்பி வரவில்லையா. 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்

.கரியின் பொறுப்புக்கள் என்ன?

முக்கிய பொறுப்புகள்:

  • குற்றம் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு:

    • கனடாவின் குற்ற விகிதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்.

    • போலீஸ் துறை, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளுடன் ஒருங்கிணைப்பு.

  • எல்லைப் பாதுகாப்பு:

    • கனடா-அமெரிக்கா எல்லை பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்.

  • தீவிரவாதம் மற்றும் உளவு நடவடிக்கைகள்:

    • தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களைக் கண்காணித்தல்.

  • தொழிலாளர் சட்டங்கள்:

    • பணியிட பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகள் பற்றிய கொள்கைகள்.


2. சிறப்பு திட்டங்கள்:

  • குடியுரிமை மற்றும் குடிவரவு:

    • புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிவரவு சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துதல்.

  • பழிவாங்கும் குற்றங்கள் (Hate Crimes):

    • இன, மத, பாலியல் அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்து நடவடிக்கை.

  • போதைப்பொருள் கட்டுப்பாடு:

    • போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள்.



  • கருத்துக்கள உறவுகள்

ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்து தெரிவித்து சிறீதரன் எம்.பி கடிதம்

Published By: Vishnu

15 May, 2025 | 06:23 PM

image

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் நேற்றையதினம் அமைச்சுப் பொறுப்பேற்ற ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அண்மையில் நடைபெற்று முடிந்த கனேடிய பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று, கனேடிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவியேற்றிருக்கும் தங்களுக்கு, ஈழத்தமிழர்கள் சார்பில் எனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் நிறைவடைகிறேன்.

அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகளால் வலிந்து ஒடுக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் நேரடிப் பிரதிநிதியான தாங்கள், உங்களின் தனிமனித வாழ்வில் எதிர்கொண்ட ஏராளமான தடைகளையும், சவால்களையும் உந்திக்கடந்ததன் பயன்விளைவாய், ஈழத்தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த ஒருவராக, சமூகநேயம் மிக்க மக்கள் தொண்டராக இருந்து பின் அரசியல் பணியில் அடியெடுத்துவைத்து, இன்று கனேடிய பாராளுமன்ற உறுப்பினராகவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் பெருமிதத்தோடு பதவியேற்றுள்ளமை காலத்தின் பதிவே ஆகும்.

சவால்களின் எல்லைகளைக் கடந்து நிமிர்ந்தெழுந்து நிற்கும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியான தங்களை, எமது உணர்வுகளோடு நெருக்கமான, எங்களில் ஒருவராகவே எம்மால் பார்க்கமுடிகிறது. அத்தகு மனநிறைவோடு, மக்கள் பணி என்ற மகத்தான கொள்கையோடும், இலட்சியத்தோடும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதியாக பொறுப்பேற்றிருக்கும் தாங்கள், ஈழத்தமிழர் நலன்சார் விடயங்களிலும், அரசியல் விவகாரங்களிலும் தங்கள் இயலுமைக்கு உட்பட்ட பணிகளில் இதயசுத்தியோடு இணைந்து செயற்படுவீர்கள் என்ற பெருநம்பிக்கையோடு, உங்களின் வெற்றிக்கான வாழ்த்துகளைக் கூறும் அதேவேளை தங்கள் பணி சிறக்க இறை ஆசிகளையும் வேண்டி நிற்கிறேன். – என்றுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.