Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

July 6, 2025

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா? 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

 முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் மரணமடைந்து கடந்த திங்கட்கிழமையுடன் (ஜூன் 30) சரியாக ஒரு வருடம் கடந்துசென்றது. முதலாவது நினைவு தினத்தில் அவரை இலங்கை தமிழச் சமூகம் நினைவுகூருவதற்கு தவறிவிட்டது. வடக்கு,கிழக்கு  மாகாணங்களில் எந்தவொரு இடத்திலும் நினைவு நிகழ்வு  ஏற்பாடு செய்யப்பட்டதாகவோ அல்லது பத்திரிகைகளிலாவது  நினைவஞ்சலி குறிப்பு ஒன்று  வெளியானதாகவோ நாம் அறியவில்லை.  சம்பந்தன் பல வருடங்களாக தலைமை தாங்கிய இலங்கை தமிழரசு கட்சியும்கூட அவரை நினைவு கூருவது குறித்து சிந்திக்கவில்லை.

சம்பந்தன் மீதான சகல  விமர்சனங்களுக்கும் அப்பால்,  சிங்களத் தலைவர்களினதும் சர்வதேச சமூகத்தினதும் மதிப்புக்குரியவராக விளங்கினார். அவரது  மறைவு தமிழ் அரசியல் சமுதாயத்தில் எளிதில் நிரப்பமுடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது என்பதை அவரது அரசியலை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட மறுக்கமாட்டார்கள். ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான கால அரசியல் வாழ்வைக் கொண்ட அவரை நினைவு கூருவதற்கு தமிழர்கள் தவறியதை தமிழ் அரசியல் சமுதாயத்தைப் பீடித்திருக்கும் ஒரு பிணியின் வெளிப்பாடாகவே நோக்க வேண்டியிருக்கிறது.

சம்பந்தன் பல தசாப்தகால அரசியல் வாழ்வைக் கொண்டிருந்தாலும், உள்நாட்டுப்போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழர் அரசியலை முன்னெடுப்பதற்கு அவர் எவ்வாறு தலைமை தாங்கி வழிநடத்தினார் என்பதே அவரின் அரசியல் மரபாக வரலாற்றில் நினைவு கூரப்படும் என்பதில் சந்தேகமில்லை.  முதலாவது நினைவு தினத்தில் கூட நினைவுகூருவது குறித்து எவரும் அக்கறைப்படவேண்டிய  அவசியமில்லாத அளவுக்கு  அவரது மரபு ஒதுக்கி விடப்படக்கூடியதா? 

போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழர் அரசியலை வழிநடத்துவதில் சம்பந்தன் தலைமையில் பொதுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் குறிப்பாக தமிழரசு கட்சியும் கடைப்பிடித்துவந்த கொள்கைகளுக்கும் அணுகுமுறைக்குமான பொறுப்பை முற்று முழுதாகச் சம்பந்தன் மீது சுமத்திவிட முடியாது. 

விடுதலை புலிகள் இயக்கம் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் அரசியல் சமுதாயம் படுமோசமாக பலவீனப்பட்டிருந்த சூழ்நிலைகளின் கீழ் அதுவும் குறிப்பாக பயங்கரவாதத்தை தோற்கடித்ததாக வெற்றிகொண்டாடிய சிங்கள அரசியல் சமுதாயம்  தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றை காண்பதில் அக்கறையற்ற  மனோபாவத்தைக் கொண்டிருந்த ஒரு சூழ்நிலையிலேயே சம்பந்தன் தமிழர் அரசியலின் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டியிருந்தது

தமிழ் அரசியல் கட்சிகளை ஒற்றுமையாக வைத்திருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை  இலங்கை தமிழர்களின் பலம்பொருந்திய ஒரு ஜனநாயக அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதற்கு  சம்பந்தன் தவறியதனாலேயே இன்று தமிழ் அரசியல் சக்திகள் பல்வேறு கூறுகளாகிக் கிடக்கின்றன  என்பதே அவர் மீதான முக்கியமான குற்றச் சாட்டு. தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை போருக்கு பின்னரான  உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளுக்கு இசைவான முறையில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவேண்டிய வரலாற்றுப் பொறுப்பைக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரின் முன்னாலேயே சீர்குலைந்தது. அவரால் குறைந்தபட்சம் தனது  தமிழரசு கட்சியையேனும் ஐக்கியமான ஒரு அரசியல் இயக்கமாக வைத்திருக்க முடியாமல் போய்விட்டது. 

 சம்பந்தன் தனது அரசியல் அனுபவத்தையும்  மூப்பையும் பயன்படுத்தி தமிழ் கட்சிகளை ஒன்றுபடுத்தி வைத்திருந்திருக்க முடியும் என்று பரவலான அபிப்பிராயம் இருந்தது.  ஆனால்,  துரதிர்ஷ்டவசமாக, முன்னைய காலத்தைப் போலன்றி அரசியல் கட்சிகளின் தலைவர்களினால் கட்சி உறுப்பினர்களையும் அவற்றின் கட்டமைப்புக்களையும்  முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாத ஒரு விபரீதமான போக்கு வளரத்தொடங்கிய ஒரு காலப்பகுதியிலேயே  சம்பந்தன் தலைமைத்துவப் பாத்திரத்தை வகிக்க வேண்டியிருந்தது.

இன்று இலங்கையில் எந்தவொரு கட்சியின்  தலைவரும்  தனது கட்சியை முழுமையான  கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்று கூறமுடியாது. அண்மைய தேர்தல்களின் பின்னர் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் கட்சிகள் எதிர்நோக்குகின்ற நெருக்கடி இதை தெளிவாக வெளிக்காட்டுகின்ற பிந்திய உதாரணமாகும். மூன்று வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சிக்கு பிறகு பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்ட  பின்புலத்தில், அவர்கள் மத்தியில் குறிப்பிட்ட ஒரு கட்சிமீதான  விசுவாசம் என்பது பெருமளவுக்கு தளர்ந்து போய்விட்டது. ஒரு கட்சிக்கு நிலையான வாக்குவங்கி ஒன்று  இனிமேலும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாத அளவுக்கு அரசியல் சஞ்சலமானதாகிவிட்டது.

தலைவரை ஏகமனதாக தெரிவுசெய்யும் தமிழரசு கட்சியின் பாரம்பரியமான நடைமுறையை  பேணிக் காக்கக்கூடியதாக தனது கட்சியின் மூத்த உறுப்பினர்களைக் கூட வழிக்குக் கொண்டுவர முடியாத அளவுக்கு  ஒரு  கையறு நிலையிலேயே இறுதிக் காலத்தில் சம்பந்தன் இருந்தார். கடந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற தலைவர் தேர்தலுக்கு பின்னர் தமிழரசு கட்சிக்குள் நிலவும் அருவருக்கத்தக்க  உட்பூசல் தமிழர் அரசியலில் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்துவருகிறது.

ஆனால், போரின் முடிவுக்கு பின்னரான  தமிழ் மக்களின் நிலையை உணர்ந்தவராக சம்பந்தன் வெறுமனே  உணர்ச்சிவசமான சுலோகங்களை உயர்த்திப்பிடித்து மீண்டும் நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் பாதையைக் காட்டுவதற்கு ஒருபோதும் முயற்சித்ததில்லை. தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை பொறுத்தவரை, அடிப்படைக் கோரிக்கைகளில் விட்டுக்  கொடுப்பைச் செய்யாமல் தேசிய இனப்பிரச்சினைக்கு  நிரந்தரமான அரசியல் தீர்வு சமஷ்டி அடிப்படையிலான  ஆட்சி முறையாகவே இருக்க முடியும் என்பதில் அவர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

அதேவேளை, நிரந்தரத்தீர்வை நோக்கிய பயணத்தில் இடைக்கால ஏற்பாடாக அரசியலமைப்புக்கான 

13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்கவைக்க  வேண்டும் என்று அரசாங்கங்களை இடையறாது வலியுறுத்த சம்பந்தன் தவறியதில்லை. சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களிலும்  அந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்த அவர் தவறியதில்லை. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படாவிட்டால், வெளியக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வொன்றைக் கோருவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்பது இறுதிவரையான அவரது நிலைப்பாடாக இருந்தது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணும் விடயத்தில் சம்பந்தன் இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்திருந்தார். இலங்கை அரசாங்கம் மீது சர்வதேச சமூகம் நெருக்குதலை பிரயோகிக்க  வேண்டும் என்பதும் அவரது இடையறாத வலியுறுத்தலாக இருந்து வந்தது. சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் அரசியல் தீர்வை காண்பது சாத்தியமில்லை என்பதும் முஸ்லிம் மக்களின் அரசியல்  அபிலாசைகளுக்கு உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் சம்பந்தனின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது.

அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்ற தலைவர்களுடன் ஒப்பிடும்போது சிங்கள சமூகத்தின் கடுமையான வெறுப்புக்கு உள்ளாகாத ஒரு மிதவாத தமிழ்த் தலைவராக சம்பந்தன் இறுதிவரை விளங்கியதை அவருக்குரிய ஒரு ‘தனித்துவமாக’ கூறலாம்.  ஆனால், தனது தலைமுறையைச் சேர்ந்த தமிழ்த் தலைவர்களைப் போன்றே தமிழ் மக்களுக்கு அமைதியானதும் கௌரவமானதுமான வாழ்வை உறுதி செய்யக்கூடிய அரசியல்  தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்க முடியாதவராகவே சம்பந்தனும் இவ்வுலகில் இருந்து விடைபெற்றார்.

பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகளிலும்  அரசாங்க தலைவர்களுடனும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் மற்றைய எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் செய்யாத வகையில் சம்பந்தன் இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள்  குறித்து வரிசைக் கிரமமாக விளக்கம் அளிப்பது சம்பந்தனின் வழக்கமாக இருந்தது வந்தது.

 ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பதவிக்  காலத்தில் 1991 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியில் இருந்தபோது 2000 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு யோசனைகள், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில்  நியமிக்கப்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவ குழுவின் யோசனைகள், மைத்திரிபால சிறிசேன — ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவுச்செயன்முறை ஆகியவற்றை சம்பந்தன் தவறாது குறிப்பிடுவார்.

சமாதான உடன்படிக்கைக்கையை தொடர்ந்து  மாகாண சபைகள் அமைக்கப்பட்ட பின்னரும் கூட,  அரசியல் தீர்வை நோக்கிய அந்த செயன்முறைகளை முன்னெடுத்ததன் மூலமாக 13 வது திருத்தம் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையமுடியாது  என்பதை அரசாங்கங்களே ஏற்றுக் கொண்டிருந்தன என்பதை நிரூபிப்பதே சம்பந்தனின் நோக்கமாக இருந்தது.

ஜனாதிபதிகளுடனும் சிங்கள அரசியல்வாதிகளுடனும் சுமுகமான உறவை சம்பந்தன் கொண்டிருந்தது குறித்து தீவிர தமிழ்த் தேசியவாத சக்திகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால், அத்தகைய உறவை அவர் கொண்டிருந்தாலும், தமிழர் பிரச்சினையில் சிங்கள தலைவர்களின் தவறுகளை நேரடியாகவே சுட்டிக்காட்டும் துணிச்சல் அவரிடம் இருந்தது.

சம்பந்தன் இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த இரண்டாவது தமிழ் அரசியல் தலைவராவார். முதலில் அமிர்தலிங்கம் 1977 ஜூலை தொடக்கம் 1983 ஜூலை வரையும் பிறகு சம்பந்தன் 2015 டெப்டெம்பர் தொடக்கம் 2019 அக்டோபர் வரையும் அந்த பதவியை வகித்தனர். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த காலப்பகுதிக்கு பிறகு உள்நாட்டுப்போர் மூண்ட அதேவேளை, போர் முடிவுக்கு வந்தததன் பின்னரான காலப்பகுதியில் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு வந்தார். தமிழ் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் வளர்ந்து கொண்டிருந்த நாட்களில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்ததும் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் செயலிழந்த பிறகு அந்த பதவியை சம்பந்தன் வகித்ததும் இருவருக்கும் இடையிலான வேறுபாடாகும்.

ஒரு எதிர்க்கட்சி தலைவராக இல்லாமல் சிறிசேன — ரணில் அரசாங்கத்தை ஆதரித்த  ஒருவராகவே சம்பந்தன் நடந்து கொண்டார்  என்ற விமர்சனங்கள் எழுந்தன. அந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை வரையும் செயன்முறையை முன்னெடுத்த காரணத்தால் அதற்கு ஒத்துழைத்து இனப்பிரச்சினைக்கு உருப்படியான அதிகாரப் பரவலாக்கம் மூலமாக அரசியல் தீர்வொன்றை காணும் நம்பிக்கையில் அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடும். ஆனால், அவருக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.  அவரது தலைமைத்துவம் நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு சிங்கள தலைவர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கியது என்று நம்பியவர்கள் பலர். ஆனால், முன்னைய தமிழ் தலைவர்களுக்கு கிடைத்த கவலைக்குரிய  அனுபவமே சம்பந்தனுக்கும்  கிடைத்தது. 

எது எவ்வாறிருந்தாலும், சம்பந்தனின் மறைவு  தமிழர் அரசியலில் ஏற்படுத்திய வெற்றிடம் அண்மைய எதிர்காலத்தில் நிரப்பப்படக்கூடிய வாய்ப்பு தொடர்பில் நம்பிக்கை வைப்பதற்குரிய அரசியல் சூழ்நிலை தமிழர்கள் மத்தியில் இன்று இல்லை. தமிழ் மக்களின் நலன்களில் அன்றி  தங்களது கட்சி அரசியல் நலன்களிலும் ஆளுமைப் போட்டியிலும் அக்கறை காட்டுவதற்கே இன்றைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு நேரம் போதாமல் இருக்கிறது. 

சர்வதேச ரீதியில் மதிக்கப்பட்ட பல தலைவர்களை ஒரு காலத்தில் கொண்டிருந்த இலங்கை தமிழச் சமுதாயம் இன்று உள்நாட்டிலேயே உருப்படியாக மதிக்கப்படக்கூடிய ஒரு அரசியல் தலைவர் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

https://arangamnews.com/?p=12144

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, கிருபன் said:

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

இல்லை. ஒரு விடயத்துக்காக நினைவு வைத்துள்ளோம்.

ஐயாவுக்கு கொடுத்த அந்த கொழும்பு 7 வீட்டை மகள் திருப்பி அரசுக்கு கொடுத்து விட்டாவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தன் மறைவுடன் அவர் வரலாறுகளும் மறைந்து / அழிந்து விட்டது. ( ஏதாவது நல்லது செய்தால் தானே பெயர் நிலைத்து நிற்க)

இது இன்றைய தமிழ் தலைவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.

ஆண்டவரே! சம்பந்தனின் அதிசய கண்டு பிடிப்பான சுமந்திரன் தெளிவு பெற்று உணர்வாராக.....amen.gif

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தம் மக்களுக்கு எல்லாம் செய்தார் . ........... தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் .......... நினைவில் வைத்திருப்பதற்கு .......! 😒

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனை... செத்த பிறகுதான் தமிழ்ச் சமூகம் மறந்தது...

ஆனால், சுமந்திரன், சி.வி.கே. சிவஞானத்தை... உயிரோடு இருக்கும் போதே,

தமிழ்ச் சமூகம் மறந்து விட்டது. animiertes-gefuehl-smilies-bild-0048.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

யார் இவர்?

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2025 at 19:10, கிருபன் said:

— வசம்பநதரை ஒரு நல்ல அரசியல்வாதியாக சிலாகித்து எழுதிய கட்டுரையாளர் கூட ஒரு நினைவு கூட்டத்தை நடத்த முடியாமல் போனது. சம்பந்தர் தமிழ்மக்களுக்கு எதுவும் புடுங்கவில்லை என்பதையே காட்டுகிறது.தமிழ்மக்களால் காறித்துப்பப்பட்ட ஒரு மனிதர்; அவர். அவரது சடலம் யாழ்ப்பாணத்தில் இருந்த பொழுது கட்சிக்காரர்கள் கூட இல்லாது அநாதைப்பிணமாகவே கிடந்தது. துரொகத்தின் பரிசு இதுதான்.ரகத்தி தனபாலசிங்கம் — 

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த சம்பந்தன்?கிமு 3 ஆம் நூற்றாண்டில்வாழ்ந்த திருஞானசம்பந்தன் தமிழுக்கு ஆற்றியதொண்டுக்காக அந்த சம்பந்தரை யாரும் மறக்கவில்லை.ஆனால் இவரைக்கட்சிக்கார்களே மறந்து விட்டார்கள். இதுதான் துரோகத்தின் பரிசு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

யார் இந்த சம்பந்தன்?கிமு 3 ஆம் நூற்றாண்டில்வாழ்ந்த திருஞானசம்பந்தன் தமிழுக்கு ஆற்றியதொண்டுக்காக அந்த சம்பந்தரை யாரும் மறக்கவில்லை.ஆனால் இவரைக்கட்சிக்கார்களே மறந்து விட்டார்கள். இதுதான் துரோகத்தின் பரிசு

திருஞானசம்பந்தர் கி பி 6ம் நூற்றாண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் அவர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகிய தமிழரசுக் கட்சியின் மிக முக்கிய தலைவர்களின் காலத்திலேயே அவர்களுடன் சேர்ந்து பயணித்தவர். இந்தியாவுடனான அக்கட்சியின் செல்வாக்கிற்கு ஒருகாலத்தில் தாமும் காரணமாக இருந்தவர். திருகோணமலையில் இடம்பெற்ற தமிழினச் சுத்திகரிப்பின்போது மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்.

ஆனால், அவரது வீரியமும், தமிழர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஓர்மமும் 2009 இற்குப் பின்னர் இல்லாது போயிற்று. வெற்று வாக்குறுதிகள், பசப்பலான நம்பிக்கைகள் என்பவற்றை அவ்வப்போது மக்களுக்குக் கொடுப்பது, தென்னிலங்கைக் கட்சிகளுடன் சமரசமான போக்கு, தென்னிலங்கைக் கட்சிகளுக்கான விட்டுக் கொடுப்புக்கள், போர்க்குற்றவாளிக்கான ஆதரவு, தமிழ் மக்களை முன்னிறுத்தி அரசியல் செய்யாது இந்திய இலங்கை அரசுகளிடம் இரைஞ்சியபடி அரசியல் செய்தமை என்று அவர் தனது இறுதிக் காலங்களில் செய்தவை அவரைத் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி விட்டது.

எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை. அதற்காக அவர் தமிழினத்திற்குத் துரோகம் இழைத்தவர் என்றும் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் இன விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி, சம்பந்தனின் இறுதிக்காலத்தில் தேர்தலுக்கான கட்சியாகச் சுருங்கிவிட்டது வேதனை. தற்போது எவருடன் சேர்ந்தாவது ஆட்சியமைத்தால் சரியென்கிற நிலைக்கு இக்கட்சியினர் இறங்கியிருப்பது சம்பந்தரின் காலத்தின்பின்னர் இக்கட்சி மேலும் மேலும் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகிறது என்பதையே காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தலைவர்களை அறிந்துள்ளேன். சிலரை நேரிலும் கண்டுள்ளேன், தலைவனையும் நேரில் கண்களால் காணும் பாக்கியத்தையும் பெற்றுள்ளேன்.

சம்பந்தரை ஊடகங்களில்தான் அறிந்தேன், அந்த அறிவு பச்சைப் பூச்சி மூக்கில்பட்டுத் தெறித்துபோன்ற உணர்வை ஏற்படுத்தியது, அதன் தாக்கம் குறைந்து மறந்துவரும் நேரத்தில் மீண்டும் இந்தப்பதிவு 👇

On 7/7/2025 at 20:10, கிருபன் said:

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

பூச்சியை மூக்கின் உள்ளேயே நுளைத்துவிட்டது.😩

  • கருத்துக்கள உறவுகள்
On 8/7/2025 at 03:03, goshan_che said:

இல்லை. ஒரு விடயத்துக்காக நினைவு வைத்துள்ளோம்.

நானும் தான்

மேசையில் குத்தியே ராஜதந்திரிகளை கிலிகொள்ள வைக்குமளவுக்கு இன்னொமொரு தமிழ் அரசியல்வாதி பிறக்கவில்லை என்பதால்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

திருஞானசம்பந்தர் கி பி 6ம் நூற்றாண்டு.

தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி எங்கோ வாசித்த ஞாபகத்தில் அதனைச்சரிபார்க்காது எழுதிவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்தது தனக்குப்பின் கட்சியை கொண்டுசெல்ல ஒருவரை தயார் படுத்தாமல் யமனோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு கடைசிவரை தலைவர் பதவியில் குந்திக்கொண்டிருந்தவர். கட்சியின் கொள்கை ஒழுக்கத்தை கைவிட்டவர். இப்போ; பதவிக்காக அடிபாடு நடக்கிறது. இதில சம்பந்தரை யார்? ஏன் நினைவு கூரவேண்டும் ?சுமந்திரன் எனும் கொள்ளிக்காம்பை செருகியவரே இந்த ராஜ தந்திரிதான் கட்சியை சிதிலமாக்க.

  • கருத்துக்கள உறவுகள்

அமரர் சம்பந்தரை தமிழ் சமூகம் மறக்கவில்லை. அப்படி மறப்பதற்கு தீவிர தேசியர்கள்/வாய் வீச்சாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள்! ஏனெனில், சம்பந்தரையும், உயிரோடிருக்கும் சாணக்கியன், சுமந்திரன் ஆகியோரையும் boogeyman ஆகக் காட்டிக் கவனத்தைக் கலைக்கா விட்டால், இந்த தீவிர தேசிய வாய்வீச்சு பா.உ க்கள் என்ன செய்கிறார்கள் என்று மக்கள் கவனிக்க ஆரம்பித்து விடுவர்😂. எனவே, இந்த சம்பந்தன், சுமந்திரன், சாணக்கியன் எதிர்ப்பு தகரடப்பா சத்தங்கள் தொடரும்.

போன வாரம் நடந்த அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FETNA) ஒரு கூட்டத்தில் இதைக் காணக் கிடைத்து. ஈழத்தமிழர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் "சம்பந்தர் இறந்தது எவ்வளவு நல்லது" என்று ஒரு தீவிர தேசிய ஆர்வலர் அரை மணித்தியாலங்கள் பேசியிருக்கிறார். பேசியவர், தான் 150 ஆண்டுகள் வாழ்வார் என்று நம்பினாரா அல்லது சம்பந்தரை விட அதிகமாக தான் இந்த இளம் வயதிலேயே நிறைய சாதித்து விட்டதாக நம்பினாரா தெரியவில்லை😎!

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றின் குப்பைத் தொட்டியில் சம்பந்தர்.

சம்பந்தனை மறந்து விட்டார்கள் என்று பதிவுகள் வந்த பின்னர் தான் ஏற்பாடு தீவிரம்.

நான்கு நாட்களுக்கு முதல் சம்பந்தரின் நினைவு நாள் என்பதே இப்போதுதான் எதேச்சையாக ஒரு செய்தியைத் தேடிய போது தெரிய வந்தது. இறந்து ஒரு வருடத்திலேயே இந்த நிலை என்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். யாராவது நினைவு கூர்ந்திருக்கிறார்களா? என்று பூதக் கண்ணாடி வைத்துத் தேடியும் ஒன்றும் சிக்கவில்லை.

வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டார் சம்பந்தர். இது நடக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக - அதுவும் இந்த சமூக வலைத் தள யுகத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பது நமக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

ஆனால் ஜோசெப் பரராஜசிங்கம் தொடக்கம் சிவனேசன், ரவிராஜ் உட்பட எண்ணற்ற அரசியல்வாதிகளின் நினைவுதினங்களையும், தமக்காய் ஈகையாகிய மறவர்கள் தினங்களையும் மக்கள் இன்னும் நினைவு கூர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த உளவியல்தான் என்ன?

'சம்பந்தர்'களை இந்த இனம் அவர்களைப் புதைத்த ஈரம் காயும் முன்னம் மறந்து விடுகிறது என்பதன் பின்னால் இருப்பது இந்தத் தேசத்தின் இறைமை. அதை அடகு வைத்தவர்களை மக்களும் மன்னிப்பதில்லை - வரலாறும் மன்னிப்பதில்லை.

நாளை 'சுத்துமாத்து' களுக்கும் இதே தீர்ப்புத்தான். ஏனென்றால் வரலாறு ஈவிரக்கமில்லாதது அது யாரையும் மன்னிப்பதில்லை.

யாழ்ப்பாண புலனாய்வு 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தமிழ் சிறி said:

வரலாற்றின் குப்பைத் தொட்டியில் சம்பந்தர்.

சம்பந்தனை மறந்து விட்டார்கள் என்று பதிவுகள் வந்த பின்னர் தான் ஏற்பாடு தீவிரம்.

நான்கு நாட்களுக்கு முதல் சம்பந்தரின் நினைவு நாள் என்பதே இப்போதுதான் எதேச்சையாக ஒரு செய்தியைத் தேடிய போது தெரிய வந்தது. இறந்து ஒரு வருடத்திலேயே இந்த நிலை என்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். யாராவது நினைவு கூர்ந்திருக்கிறார்களா? என்று பூதக் கண்ணாடி வைத்துத் தேடியும் ஒன்றும் சிக்கவில்லை.

வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டார் சம்பந்தர். இது நடக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக - அதுவும் இந்த சமூக வலைத் தள யுகத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பது நமக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

ஆனால் ஜோசெப் பரராஜசிங்கம் தொடக்கம் சிவனேசன், ரவிராஜ் உட்பட எண்ணற்ற அரசியல்வாதிகளின் நினைவுதினங்களையும், தமக்காய் ஈகையாகிய மறவர்கள் தினங்களையும் மக்கள் இன்னும் நினைவு கூர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த உளவியல்தான் என்ன?

'சம்பந்தர்'களை இந்த இனம் அவர்களைப் புதைத்த ஈரம் காயும் முன்னம் மறந்து விடுகிறது என்பதன் பின்னால் இருப்பது இந்தத் தேசத்தின் இறைமை. அதை அடகு வைத்தவர்களை மக்களும் மன்னிப்பதில்லை - வரலாறும் மன்னிப்பதில்லை.

நாளை 'சுத்துமாத்து' களுக்கும் இதே தீர்ப்புத்தான். ஏனென்றால் வரலாறு ஈவிரக்கமில்லாதது அது யாரையும் மன்னிப்பதில்லை.

யாழ்ப்பாண புலனாய்வு 

சுத்து மாத்துக்கு மட்டும் அல்ல

பார் சிறிக்கும்….

ஒத்த கதிரை கஜனுக்கும்…

இதே நிலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வரலாற்றின் குப்பைத் தொட்டியில் சம்பந்தர்.

சம்பந்தனை மறந்து விட்டார்கள் என்று பதிவுகள் வந்த பின்னர் தான் ஏற்பாடு தீவிரம்.

நான்கு நாட்களுக்கு முதல் சம்பந்தரின் நினைவு நாள் என்பதே இப்போதுதான் எதேச்சையாக ஒரு செய்தியைத் தேடிய போது தெரிய வந்தது. இறந்து ஒரு வருடத்திலேயே இந்த நிலை என்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். யாராவது நினைவு கூர்ந்திருக்கிறார்களா? என்று பூதக் கண்ணாடி வைத்துத் தேடியும் ஒன்றும் சிக்கவில்லை.

வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டார் சம்பந்தர். இது நடக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக - அதுவும் இந்த சமூக வலைத் தள யுகத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பது நமக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

ஆனால் ஜோசெப் பரராஜசிங்கம் தொடக்கம் சிவனேசன், ரவிராஜ் உட்பட எண்ணற்ற அரசியல்வாதிகளின் நினைவுதினங்களையும், தமக்காய் ஈகையாகிய மறவர்கள் தினங்களையும் மக்கள் இன்னும் நினைவு கூர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த உளவியல்தான் என்ன?

'சம்பந்தர்'களை இந்த இனம் அவர்களைப் புதைத்த ஈரம் காயும் முன்னம் மறந்து விடுகிறது என்பதன் பின்னால் இருப்பது இந்தத் தேசத்தின் இறைமை. அதை அடகு வைத்தவர்களை மக்களும் மன்னிப்பதில்லை - வரலாறும் மன்னிப்பதில்லை.

நாளை 'சுத்துமாத்து' களுக்கும் இதே தீர்ப்புத்தான். ஏனென்றால் வரலாறு ஈவிரக்கமில்லாதது அது யாரையும் மன்னிப்பதில்லை.

யாழ்ப்பாண புலனாய்வு 

எங்கட ஆட்களில் ஒரு பகுதியினருக்கு இன்னும் உலக வாழ்க்கையில் எது முக்கியமென்பது பற்றிய அறிவு கிடையாது என்பதைக் காட்டும் பதிவு.

பிறக்கிறோம், இறக்கிறோம். இடையில் ஏனையோரை தட்டிச் சுத்தாமல், பிராண்டி வாழாமல், கொல்லாமல் வாழ முடிந்தால் அதுவே போதும். இதை விட்டு விட்டு , செத்த பின்னர் என்னைக் கொண்டாட வேண்டும், நினைவுகூர வேணும், புகழ ஒரு கூட்டம் வேணுமென்பதெல்லாம் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாத பினாத்தல் ரீமின் ஐடியாக்கள்.

இந்தப் பதிவைக் கூட சொந்தப் பெயரில் எழுத இயலாத இந்த முகநூல் பதிவர், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன் வாழ்க்கையில் சம்பந்தர் செய்ததை விட எதுவும் செய்து விடாமையால் தான் ஒளிந்து நின்று எழுதுகிறார் போல இருக்கு என ஊகிக்கிறேன்😎!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் போராட்டத்தில் முக்கிய காலகட்டத்தில் அவர்களுக்கு தலைமை தாங்கினார் என்பதால் நிச்சயம் வரலாற்றில் அவர் பெயர் பதியப்பட்டிருக்கும்???

  • கருத்துக்கள உறவுகள்

மத வெறியர்கள் குண்டு வைத்து தாங்கள் இறந்த பின்பு சொர்க்கத்திற்கு செல்ல ஆசைபடுவது போன்று ஈழ தமிழர்களில் ஒரு பகுதியினர் இறந்த பின்பு தாங்கள் இறப்பு நிகழ்ச்சிக்கு கூட்டம் அலை மோத வேண்டும் , எல்லோரும் தங்களை புகழந்து ஒரு மேடை பேச்சு கொடுக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இறப்பு நிகழ்ச்சிகளில் இறந்தவர் ஒரு இந்திரன் சந்திரன் கமலகாசன் ரஜனி காந்து என்று புகழ்ந்து தள்ளுவதை காணலாம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஈழ தமிழர்களில் ஒரு பகுதியினர் இறந்த பின்பு தாங்கள் இறப்பு நிகழ்ச்சிக்கு கூட்டம் அலை மோத வேண்டும் , எல்லோரும் தங்களை புகழந்து ஒரு மேடை பேச்சு கொடுக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

நீங்கள் மாவீரர்களைக் குறிப்பிடவில்லை என்று எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால், அரசியலைத் தொழிலாகச் செய்து வயது முதிர்மையினால் மரணிப்பவர்களுக்கும், தமது இளம் வயதில், தமது வாழ்க்கையினை, தனது மக்களின் விடிவிற்காக அர்ப்பணித்துச் சென்றவர்களுக்கும் இடையில் பாரிய‌ வேறுபாடு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கேள்வி கேட்கலாமா?

அமிர்தலிங்கத்தை இன்றுவரை நினைவுகூர்கிறார்கள்.

நீலனையும்.

அப்போ அவர்கள் மாறா மக்கள் அபிமானம் வென்ற தலைவர்கள்?

ஆகவே அவர்களை அவர்கள் பாணியில் அரசியல் செய்யவிடாமல் போட்டு தள்ளியது தவறு?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் மாவீரர்களைக் குறிப்பிடவில்லை என்று எடுத்துக்கொள்கிறேன்.

ஓம் அண்ணா நான் சொன்னது இப்போது இங்கே நடைபெறுகின்ற நிகழ்வுகள் பற்றியது

  • கருத்துக்கள உறவுகள்

முன்னவர் கால்தடங்களை பின்பற்றுகின்றனர் கதிரையாசை, பதவியாசை பிடித்தவர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.