Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

539626310_1348314116860386_4894312846625

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 50 இலட்சம் ரூபா பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்

  • Replies 99
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இலங்கையின் வரலாற்றிலேயே... முதன் முதலாக தேசியப்பட்டியல் ஊடாகப் பாராளுமன்ற உறுப்பினராகி, பிரதமராகி, ஜனாதிபதியாகி, பொருளாதார மீட்பராகி, கைதாகி, பிணையாகி.... எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்த எம்பெருமானார்.

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    கைதாவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ராஜபக்கச குடும்பம் தப்ப எதிர்பாராமல் ரணில் கைதாகியுள்ளார். அடுத்த தேர்தலில் வெல்ல இது ஒன்றே போதும்.

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    ஆஹா.... இந்தப் படங்களைப் பார்க்க அளவில்லாத மகிழ்ச்சியாக உள்ளது. 👍 மகிந்த, கோத்தா.... ஆகியோர், "உச்சா" போகும் நிலையில் உள்ளதாக சொல்கிறார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

small.paruththimootta.PNG.da660ba82b9ced

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

பிணையில் விடுதலையானார் ரணில் !

26 Aug, 2025 | 07:26 PM

image

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 22 ஆம் திகதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நோய் நிலைமையை கருத்திலெடுத்த கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கியுள்ளது.

பொது சொத்து சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (26) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திருமதி நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றப் புலனாய்வுத் பிரிவிலிருந்து சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜரானார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டதரணிகளான திலக் மாரப்பன, அனுஜா பிரேமரத்ன, உப்புல் ஜயசூரிய மற்றும் அலி சப்ரி ஆகியோர்  ஆஜராகியிருந்தனர். 

இன்றைய வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஜராகத நிலையில், சூம் காணொளி தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நோய் நிலைமை அதிகரித்துள்ளதால் பாரிய உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்த நிலையில், நீதிமன்றம் ரணில் விக்கிரமசிங்கவின் நோய் நிலைமையை கருத்தில் கொண்டு அவரை பிணையில் விடுதலை செய்துள்ளது.

இந்நிலையில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற பகுதியில் எதிர்க்கட்சியினர், ரணிலின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

7Q8A8004.jpg

7Q8A7383.jpg

7Q8A7362.jpg

7Q8A7519.jpg

7Q8A7343.jpg

7Q8A7679.jpg

7Q8A7886.jpg

7Q8A7988.jpg

( படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார் )

பிணையில் விடுதலையானார் ரணில் ! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

anura-fe.jpg?resize=750%2C375&ssl=1

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை!- ஜனாதிபதி.

எத்தகைய எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எமது கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

அலரி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தேசிய பிக்குகள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது”  அனைவரும் சட்டத்தின் சமமே என்ற கலசாரம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் உருவாக்கப்படும். செல்வம் அதிகாரம் பதவி இவை எதுவும் அதற்கு விதிவிலக்கல்ல.  சட்டத்தின் முன்பு அனைவரும் சமமே.  எமது நாட்டில் என்றோ ஒருநாள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தாலும். ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும் அல்லது பொதுமக்களின் சொத்தினை வீணடித்திருந்தாலும் அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னிறுத்தப்படுவார்கள்.

அதற்கான அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். அதுபழிவாங்கல் அல்ல. தண்டிக்கப்படுவதுமல்ல. நீதித்துறை தொடர்பிலான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இன்று நாட்டில் பொதுவெளியில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை தொடர்பாக நம்பக்கையற்ற நிலை காணப்படுகிறது. அனைவரும் ஒரே சட்டம் என்ற அடிப்படையில் நாம் நடவடிக்கை எடுப்போம். எமது இந்த தீர்மானத்தில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். அரசியல்வாதிகள் தங்களின் அதிகாரபலத்தின் ஊடாக மக்களின் சொத்துக்களை வீணடிப்பதற்கு இடமளிக்க மாட்டோம் என்பதை நாம் நிரூபித்துள்ளோம்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1444736

  • கருத்துக்கள உறவுகள்

539532628_25077563711877806_691786613352

Trump please Help Ranil. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

538382118_4076824462559518_1426574009904

வேலிக்கு ஓணான் சாட்சி...
2016ம் ஆண்டு 4 வருடங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பிரிவின் தலைவராக "எரிக் சொல்ஹம் "நியமிக்கப்பட்ட நிலையில் 2018 அந்த பதவியில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்படுகிறார்...
காரணம் 22 மாதங்களில் 529 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கோண்டு 488,500 டாலர்கள்
செலவு செய்த நிலையில் அதில் 76 நாட்கள் தனிப்பட்ட பயணங்களாக மேற்கொண்டமை கணக்காய்வில் பிடிபட்டது 😄

உண்மை உரைகல்

அரசியல் திருடர்கள் தங்களுள் பங்காளிச் சண்டையில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் இந்த வெள்ளைநரியும் கூட்டென்பது வெட்கத்திற்கரியது. ஆனால் இவர்கள் வெட்கப்படுவார்களா?

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nochchi said:

அரசியல் திருடர்கள் தங்களுள் பங்காளிச் சண்டையில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஏதோ பழி தீர்க்கும் படலமாகவே எனக்கு தெரிகின்றது.

2 hours ago, nochchi said:

இதில் இந்த வெள்ளைநரியும் கூட்டென்பது வெட்கத்திற்கரியது. ஆனால் இவர்கள் வெட்கப்படுவார்களா?

எதற்கு வெட்கப்பட வேண்டும். அவர்களின் தொழிலே அதுதானே. தமிழர் பிரச்சனையை தீர்க்க வந்த வெள்ளைப்புறா 2009ன் பின்னர் ஏன் தமிழர் பிரச்சனையை தீர்க்க முடியாமல் இருக்கின்றது? இப்போது சிங்களவர்களின் பிரச்சனையை தீர்க்கப்போகுகின்றதா?

அது வெள்ளைப்புறா அல்ல வெள்ளை நரி.

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கு இருக்கும் வருத்தங்கள் எவ்வளவு காலமாக இருக்கிறது?பல ஆண்டுகளாக இருக்கிறதா?அல்லது கடந்த வெள்ளிக்கிழமைக்கு பின்னரா? பல ஆண்டுகளுக்கு முன்னர் என்றால் எப்படி ஜனாதிபதியாகப் பதவியில் இருந்தார்?மீண்டும் எப்படி ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்டார்.இந்த வருத்தங்களுடன் ரணிலை நாளை ஜனாதிபதியாக பதவியேற்கச் சொன்னால் ரணில் ஏற்றுக் கொள்வாரா?அல்லதுசகவீனத்தைக் காரணம் காட்டி மறுப்பாரா?மேலும் சிறைச்சாலையில் இருக்கும் மருத்துவ சிகிச்சையெப் பெறுவதற்கு என்ன தயக்கம்?

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

.இந்த வருத்தங்களுடன் ரணிலை நாளை ஜனாதிபதியாக பதவியேற்கச் சொன்னால் ரணில் ஏற்றுக் கொள்வாரா?அல்லதுசகவீனத்தைக் காரணம் காட்டி மறுப்பாரா?மேலும் சிறைச்சாலையில் இருக்கும் மருத்துவ சிகிச்சையெப் பெறுவதற்கு என்ன தயக்கம்?

உடனடியாக வருத்தம் மாறி ..பதவி ஏற்பார்..

  • கருத்துக்கள உறவுகள்

540641221_1195130615985242_8419005601863

520142332_1194857242679246_7649426116069

536283881_1195573935940910_5528588746281

539754209_1195540982610872_1167570603510

514407656_1195541972610773_3660449580413

539260164_1195542669277370_4622285247558

539147513_1195546095943694_2105521965863

  • கருத்துக்கள உறவுகள்

dr-Rukshan-Bellana.jpg?resize=750%2C375&

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தொடர்பாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர்
மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து  பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்  “கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர், மருத்துவர் ருக்ஷான் பெல்லனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

நோயாளிகளின் உடல் நிலைமை மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தகவல்களை பொதுவாக ஊடகங்களுக்கு வழங்குவதில்லை. அவ்வாறு செயற்படுவதில் ஒழுக்கம் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் காணப்படுகின்றது.

இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவத்துடன், நோயாளியின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதனை ஊடகங்கள் அவ்வாறே வெளியிட்டுள்ளன. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது ஆகவே, அது ஒழுக்க விதிமுறைகளை மீறும் செயற்பாடு இந்நிலையில் நாம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளோம். ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

வைத்தியருக்கு அத்தகைய அறிவிப்புகளை வெளியிட உரிமை இல்லை. ரணில் வேறு மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு நோயாளி எங்களிடம் வரும்போது, சுகாதார அமைச்சாக எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்.

ஆனால் தேசிய மருத்துவமனையுடன் சம்பந்தப்பட்ட வைத்தியர் அவருக்கு சம்பந்தம் இல்லாத வேலையைச் செய்துள்ளார். ஒரு நோயாளியின் பதவி எதுவாக இருந்தாலும், ஊடகங்களுக்குத் தகவல் அளிக்க வைத்தியருக்கு எந்த உரிமையும் இல்லை” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1444904

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

ஆனால் தேசிய மருத்துவமனையுடன் சம்பந்தப்பட்ட வைத்தியர் அவருக்கு சம்பந்தம் இல்லாத வேலையைச் செய்துள்ளார். ஒரு நோயாளியின் பதவி எதுவாக இருந்தாலும், ஊடகங்களுக்குத் தகவல் அளிக்க வைத்தியருக்கு எந்த உரிமையும் இல்லை” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முதலில் டாக்ரர் வழங்கிய தகவல்கள் எல்லாமே உண்மையா என்று உறுதிப்படுத்துங்கள்.

மேல்நிலையில் உள்ள அதிகாரிகள் அனைவருமே

இதுவரை ஆண்ட கட்சிகளின் அடிப்படையிலேயே

பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள்.

எனவே அவர்கள் தமது தலைவர்களுக்காகவே செயல்படுவார்கள்.

வைத்தியசாலையில் மட்டுமல்ல பல துறைகளிலும் இந்தப் பிரச்சனையை

என்பிபி அரசு எதிர்கொண்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

முதலில் டாக்ரர் வழங்கிய தகவல்கள் எல்லாமே உண்மையா என்று உறுதிப்படுத்துங்கள்.

மேல்நிலையில் உள்ள அதிகாரிகள் அனைவருமே

இதுவரை ஆண்ட கட்சிகளின் அடிப்படையிலேயே

பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள்.

எனவே அவர்கள் தமது தலைவர்களுக்காகவே செயல்படுவார்கள்.

வைத்தியசாலையில் மட்டுமல்ல பல துறைகளிலும் இந்தப் பிரச்சனையை

என்பிபி அரசு எதிர்கொண்டுள்ளது.

539274885_1196398012525169_3057776157338

  • கருத்துக்கள உறவுகள்

539143198_1196394815858822_1075264684980

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2025 at 22:33, குமாரசாமி said:

ஏதோ பழி தீர்க்கும் படலமாகவே எனக்கு தெரிகின்றது.

On 26/8/2025 at 22:33, குமாரசாமி said:

எதற்கு வெட்கப்பட வேண்டும். அவர்களின் தொழிலே அதுதானே. தமிழர் பிரச்சனையை தீர்க்க வந்த வெள்ளைப்புறா 2009ன் பின்னர் ஏன் தமிழர் பிரச்சனையை தீர்க்க முடியாமல் இருக்கின்றது? இப்போது சிங்களவர்களின் பிரச்சனையை தீர்க்கப்போகுகின்றதா?

அது வெள்ளைப்புறா அல்ல வெள்ளை நரி.

வணக்கம் ஐயா,

இரண்டு விடயங்களும், அதாவது சட்டத்தின் கடமை அல்லது பழிவாங்கல் எதுவாயினும்; தமிழருக்கு இதில் ஒரு நல்விளைவும் கிடையாது. சட்டவாட்சிக்குரிய விட்டுக்கொடுப்பற்ற அரசு தனது அரசென அனுர நிறுவ முயல்கிறார். அவளவுதான். எங்கள் ஊடகங்களும் ஆய்வுகளும் புல்லரிக்கிறது. வெள்ளைநரியள் வெட்கமற்றவைதான். ஆனால், இவர்கள் வெட்கப்பட வாய்பில்லைத்தான். சுரண்டிக்கொழுத்துச் சுகம்கண்டோரல்லவா?

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nochchi said:

தமிழருக்கு இதில் ஒரு நல்விளைவும் கிடையாது. சட்டவாட்சிக்குரிய விட்டுக்கொடுப்பற்ற அரசு தனது அரசென அனுர நிறுவ முயல்கிறார். அவளவுதான். எங்கள் ஊடகங்களும் ஆய்வுகளும் புல்லரிக்கிறது.

உண்மை

அதி உத்தம தலைவன் best and honest அநுரகுமார திசாநாயக்க ஊழல் செய்த தமிழ் அரசியல் தலைவர்களை எல்லாம் தண்டிக்க போகின்றார் யாழ்பாணம் வருகின்றார் வருகின்றார்.செம்மணிக்க சென்று கவுரவபடுத்த போகிறார் என்று தமிழர்களின் பிரசாரங்கள் மோசமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ரணில் விக்ரமசிங்க!

29 Aug, 2025 | 04:17 PM

image

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (29) மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வைத்தியசாலையிலிருந்து வெளியேறினாலும் ரணில் விக்ரமசிங்க வீட்டில் தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.  

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து அவரது குடும்ப வைத்தியர் கண்காணிப்புடன் இருத்தல் வேண்டும் எனவும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.  

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான்  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், ரணில் விக்ரமசிங்க உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆகஸ்ட்  26 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223710

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, nochchi said:

வணக்கம் ஐயா,

இரண்டு விடயங்களும், அதாவது சட்டத்தின் கடமை அல்லது பழிவாங்கல் எதுவாயினும்; தமிழருக்கு இதில் ஒரு நல்விளைவும் கிடையாது. சட்டவாட்சிக்குரிய விட்டுக்கொடுப்பற்ற அரசு தனது அரசென அனுர நிறுவ முயல்கிறார். அவளவுதான். எங்கள் ஊடகங்களும் ஆய்வுகளும் புல்லரிக்கிறது. வெள்ளைநரியள் வெட்கமற்றவைதான். ஆனால், இவர்கள் வெட்கப்பட வாய்பில்லைத்தான். சுரண்டிக்கொழுத்துச் சுகம்கண்டோரல்லவா?

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

அவர்கள் முதலில் தங்களுக்குள் பலி/பழி தீர்த்துக்கொள்ளட்டும்.அதன் பின் என்ன நடக்கின்றது என பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அவர்கள் முதலில் தங்களுக்குள் பலி/பழி தீர்த்துக்கொள்ளட்டும்.அதன் பின் என்ன நடக்கின்றது என பார்க்கலாம்.

உண்மை, ஆனால் எங்கள் அரசியல்வியாதிகள் சிலருக்குப் புரியவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

ICUவில் உயிருக்கு போராடிய ரணில்! 2 நாளில் எழுந்து வீடு சென்ற அதிசயம்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரண்டு நாட்களில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியமை தற்போது பேசுபொருளாகியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, கடந்த 22 ஆம் திகதி இரவு, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து 23ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில், இவ்வாறு பல நோய் நிலமைக்கு உள்ளான முன்னாள் ஜனாதிபதி எவ்வாறு விரைவில் வீடு சென்றார்.

அது மட்டுமன்றி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள எவ்வாறு திட்டமிட்டு இருந்தார் என்கின்ற பல கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tamilwin

Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Late...

Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Busines
  • கருத்துக்கள உறவுகள்

539610946_1197277069103930_6202052182337

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பெருமாள் said:

ICUவில் உயிருக்கு போராடிய ரணில்! 2 நாளில் எழுந்து வீடு சென்ற அதிசயம்.

540242220-3892985087512623-1151916905050

எல்லாம் கையில வைச்சிருக்கிற புத்தகம் செய்யிற வேலை.😎

அந்த புத்தகத்தின் மூலம் ஒரு செய்தியை சொல்லுறார் கண்டியளோ😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த 26 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட வைத்திய அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

அதே நாளில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்,

மறுநாள், வைத்திய பரிந்துரைகளின் பேரில் முன்னாள் ஜனாதிபதியை கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (29) வைத்தியசாலையில் இருந்து வௌியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmey4f80t003zqplpqomqc6j3

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (29) வைத்தியசாலையில் இருந்து வௌியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 hour ago, ஏராளன் said:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

தீவிர சிகிச்சையில் இருந்து வீட்டுக்கு சென்றவுடன் சஜித்துக்கு தொலைபேசி அழைப்பும் எடுத்துள்ளார்.

எதிர்கட்சிகளெல்லாம் ரணிலுக்காகவா அழுதனர்? தமக்கு நிகழ இருக்கும் சம்பவத்தை நினைத்தே அழுதிருப்பர். ரணில் தனது ஆட்சிக்காலத்தில் நீதியாக நடக்கவில்லை, நீதியை நிலைநாட்டவுமில்லை. மாறாக ஊழல்வாதிகளின் பாதுகாவலராகவே செயற்பட்டார். அதே போன்றே ரணிலுக்காக அழுவோரும், இன்று நீதிமன்றத்தை விமர்ச்சிப்பவர்கள் அன்று நீதிபதிகளையும் அவர்களது தீர்ப்புகளையும் மாற்றியமைத்தவர்களே. சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதும் ரணில் அவரை சந்திக்க தூதனுப்பியதும் துடித்ததும் ஏன்? அப்போ, ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலில் இவருக்கும் தொடர்புண்டா? இப்போ, ஒவ்வொரு அரசியல்வாதிகளும் மற்றவரை போட்டுக்கொடுத்து தாம் தப்ப தூதனுப்பப்போகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

விஜித ஹேரத் ஜெனீவாவிற்குப் பயணமாக இருக்கின்றார்

அனுரா அரசாங்கம் அங்கே பல சலுகைகளையும் விட்டுக் கொடுப்புக்களையும் எதிர்பார்க்கின்றார்கள்.

இப்போதும் ரணில் ஒரு ஹீரோ தான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.