Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் திடீர் மரணம்

Featured Replies

சென்னை: பிரபல வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் திடீரென காலமானார். பிரபல இசைக்கலைஞர்சென்னையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். வயலின் இசையில் தனது விரல் லாவகத்தினால் தனக்கென தனி பாணியை உருவாக்கி மக்களை மயக்கியவர். மகுடி எடுத்து ஆடும் ஆடு பாம்பே என்ற பாடலை அனைவரையும் கவர்ந்திழுத்தவர்.

இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். சமீபத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார். வயலின் இசையில் மட்டுமால்லாமல் பல படங்களுக்கு திரை இசை அமைத்துள்ளார். சினிமா மட்டுமல்லாமல் கர்நாடக இசைக்கும் அவர் ஆற்றிய தொண்டு போற்றத்தக்கது. இவர் திரை உலகில் பின்னணி பாடலும் பாடியுள்ளார்.

கொட்டாம்பட்டி ரோட்டிலே குட்டி போற சோக்கிலே என்று இவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது. வயலின் என்றாலே குன்னக்குடி என்ற அளவிற்கு உலகம் முழுவதும் பெரும் புகழை பெற்ற இவரது மறைவு இசை உலகம் மற்றும் திரையுலகத்திற்கு பெரும் இழப்பு.

  • தொடங்கியவர்

இசைக்கருவிகளை இசைப்பவர் தம்முகத்தை இறுக்கமாக வசித்துக் கொள்ள வேண்டியதில்லை என்று நிரூபித்து, ஜனரஞ்சகமான முக சேஷ்டைகள் மூலம் இசைக் கச்சேரிகளை சகஜமாக்கிய புரட்சியாளர், வயலின் மேதை, பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இயற்கை எய்தினார் என்கிற செய்தி மனதை இறுக்கமாக்குகிறது.

நெற்றி நிறைந்த திருநீறு என்ன; இம்மாம் பெரிய குங்குமம் என்ன; முகம் நிறைந்த சிரிப்பு என்ன; ‘பால் கொண்டு வா’ என்று வயலினைப் பேச வைத்த கைத் திறன் என்ன; என்ன; என்ன; என்ன . . .

அவருடைய பல பேட்டிகளை நேரிலும், பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்துள்ளேன். நிறைகுடம்! பேட்டிகளில் வெளிப்பட்ட எளிமையையும் அடக்கத்தையும் ஆழமான விஷயக் கோர்வைகளையும் ரசித்தவர்கள் வாழ்வுகளில் சிறிய மாற்றங்களாவது நிச்சயம் ஏற்பட்டிருக்கும். மீள் ஒளிபரப்புகளாக அவற்றை எந்த தொலைக்காட்சி சேனலாவது ஒளிபரப்ப வேண்டும்.

அவருடைய தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற உயர்வும் அங்கீகாரமும் முழுமையாக அவருக்கு அளிக்கப்படவில்லை என்பது நிஜமான இசை ஆர்வலர்கள் வருந்தும் ஒரு விஷயம்.

அவர் சுவாசத்தை நிறுத்திக் கொண்டால் என்ன; அவருடைய வயலின் இசை, காலம் கடந்தும், காற்று இருக்கும் வரை அதன் காதுகளை அலங்கரித்துக் கொண்டு தானே இருக்கும்?

http://rathnesh.blogspot.com/2008/09/blog-post_1021.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

அவர் சுவாசத்தை நிறுத்திக் கொண்டால் என்ன; அவருடைய வயலின் இசை காலம் கடந்தும் காற்று இருக்கும் வரை அதன் காதுகளை அலங்கரித்துக் கொண்டு தானே இருக்கும்?

எல்லோரும் வயலினை வாசிப்பார்கள். குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் வயலினை பேச வைப்பார். அற்புதமான இவரின் கச்சேரிகளை நேரிலும் கண்டு மெய்மறந்து இரசித்திருக்கின்றேன். ஒரு குட்டி வயலினைக் கூட இவர் வைத்திருக்கின்றார். அதில்க் கூட அழகாக வாசித்தும் காட்டினார். தமிழ் சினிமாவின் முதலாவது சினிமாஸ்கோப் படமான இராஜராஜ சோழன் திரைப்படத்திற்கும் இவர் தான் இசையமைத்திருந்தார். அது போல் தேவரின் தெய்வம் திரைப்படம் என அடுக்கிக் கொண்டே போகலாம். குன்னகுடி வைத்தியநாதன் என்ற பெயரைக் கேட்டவுடன் ஞாபகம் வருவது வயலின் மட்டுமல்ல, அவரது நெற்றி முழுவதுமான திருநீற்றுப் பூச்சும் பெரிய குங்குமப் பொட்டும். இவரின் இழப்பு உண்மையில் எல்லோருக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்புத் தான்.

62642036ur7.png

அன்னாரின் ஆத்ம சாந்திக்காகவும் அவரது குடும்பத்தினர் மன அமைதி பெறுவதற்காகவும் எல்லா வல்ல எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Edited by Vasampu

மறைந்தார் குன்னக்குடி வைத்தியநாதன்

kunnakkudiqc7.png

பிரபல வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் திங்கட்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73.

கர்நாடக இசையிலும், திரையிசை, மெல்லிசை என பல்துறைகளிலும சிறந்து விளங்கினார்.

வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.

தமிழகத்தின் தென்பகுதியில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்றக்குடி எனும் சிற்றூரில் ராமசாமி சாஸ்திரி மீனாஷி அம்மாள் தம்பதியனருக்கு மகனாக பிறந்தார் வைத்தியநாதன்.

அவரது இசைப் பயணம் குன்றக்குடி ஷண்முகநாதர் ஆலயத்தில் இசைக்கபடும் பக்தி இசையை பயின்று அதை ஆலய அர்ச்சகர்களுடன் இணைந்து பாடுவதிலிருந்து தொடங்கியது.

பின்னர் காரைக்குடியில் ஒரு இசை நிகழ்ச்சியில் மறைந்த இசை மேதை அரியக்குடி இராமானுஜ ஐயங்காருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரது அரங்கேற்றமும் அதுவே.

சிறு வயதிலேயே அந்நாளில் பிரபலமாக இருந்த மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர், சாத்தூர் சுப்பிரமணியம் உட்பட பல பிரபல இசை விற்பன்னர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

கர்நாடக இசையின் பல பரிமாணங்களையும் ஆழ்ந்து உணர்ந்த அவர், மரபு ரீதியாக வயலினுடன் மிருதங்கம் இசைக்கப்பட்டு வந்த நிலையில், தவில் கலைஞர் வலயப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகள் நடத்தி, கர்நாடக இசையினை மக்களிடம் எடுத்துச் சென்றார்.

பின்னாளில் ராக ஆராய்ச்சி மையம் எனும் அமைப்பை நிறுவி சில நோய்களுக்கு இசை மூலம் குணம் காண முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார்.

திரையிசையிலும் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுக்கு ஆர்வம் இருந்தது. தியாகராஜ பாகவதர் அவர்களின் கச்சேரிக்கு வைத்தியநாதன் வயலின் இசைத்திருக்கிறார். தமது 16 ஆவது வயதில் மறைந்த ஜி. இராமநாதனின் திரையிசைக் குழுவில் வயலின் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த அவருக்கு 54 திரைப்படங்களுக்கு இசையமைத்த பெருமையும் உண்டு.

வயலின் மூலம் நுட்பமான சாஸ்திரீய இசையை மட்டுமல்லாமல், மிருகங்கள் மற்றும் பறவைகளின் ஒலிகள், இயற்கை ஓசைகள் போன்ற பல ஒலிகளை வாசித்து மக்களிடம் வரவேற்பை பெற்றவர்.

பிபிசி தமிழோசை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவர்கள் இறந்தாலும் மக்கள் மனதில் உயிரோடு வாழ்பவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவின் வயலின் இசை மெய்மறக்க வைத்துவிடும். ஐயாவின் நிகழ்வுகளை முன்னர் சக்தி ரீவியில் பார்த்திருக்கிறேன். ஐயா எல்லாத் தலைமுறையினரையும் திருப்திப்படுத்தக் கூடிய வகைக்கு வயலினை கையாளக் கூடியவர்.

ஐயாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஐயாவுக்கு எனது கண்ணீரஞ்சலிகள். :D

ஐயாவின் ஆன்ம ஈடேற்றத்துக்காகப் பிரார்த்திப்போமாக.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வயலின் இசையில் முடிசூடாமன்னனாக திகழ்ந்த குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

வயலின் என்றால் குன்னக்குடி எண்ணுமளவுக்கு புகழ் பெற்ற கலைஞரின் மறைவு மிகுந்த கவலை அளிக்கிறது. அன்னாரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

உத்தூளனதாரி குங்குமத்திலகன் குன்னக்குடியின் இழப்பு தமிழருக்கும் கர்நாடக சங்கீத உலகிற்கும் பேரிழப்பாகும்.

அவரது இசையில் மெய்மறந்து தம் கவலைகளையெல்லாம் மறந்தவர்கள் பலகோடி.

மறைந்த மாமேதை மதுரை சோமுவின் மருதமலை மாமணியே முருகையா என்ற பாடலுக்கு அவர் வாசித்த வயலின் இசை காதில் நின்றும் மறையாது ஒலிக்கின்றது.

உஷா ஊதுப் போன்ற மேற்கத்தைய பாணிப் பாடகர்களுக்கும் கூட வாத்திய இசை வழங்கிப் பிரமிக்க வைத்தவர் குன்னக்குடி.

அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு அவரின் பிரிவால் வாடும் உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிறப்பான தலை சிறந்த கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் பிரிவால் வாடும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இறைபதமடைந்த வைத்தியநாதனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

ஜனரஞ்சகமான முக சேஷ்டைகள் மூலம் இசைக் கச்சேரிகளை சகஜமாக்கிய புரட்சியாளர், வயலின் மேதை, பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இயற்கை எய்தினார் என்கிற செய்தி மனதை இறுக்கமாக்குகிறது.

நெற்றி நிறைந்த திருநீறு என்ன; இம்மாம் பெரிய குங்குமம் என்ன; முகம் நிறைந்த சிரிப்பு என்ன; ‘பால் கொண்டு வா’ என்று வயலினைப் பேச வைத்த கைத் திறன் என்ன; என்ன; என்ன; என்ன . . .

பேட்டிகளில் வெளிப்பட்ட எளிமையையும் அடக்கத்தையும் ஆழமான விஷயக் கோர்வைகளையும் ரசித்தவர்கள் வாழ்வுகளில் சிறிய மாற்றங்களாவது நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

உண்மை தான்... நிஜமாகவே ஒரு பேரிழப்பு... :icon_mrgreen::unsure:

அவர் ஆன்மா இறைபதமடைய எனது பிரார்த்தனைகள்...

  • தொடங்கியவர்

குன்னக்குடி வைத்தியநாதன் உடல் நாளை தகனம்!

செவ்வாய், 9 செப்டம்பர் 2008( 15:22 IST )

பிரபல வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் உட‌ல் நாளை தகன‌ம் செ‌ய்ய‌ப்படு‌கிறது.

‌மாரடை‌‌ப்பா‌ல் உ‌யி‌ரிழ‌ந்த பிரபல வய‌லி‌ன் ச‌க்ரவ‌ர்‌த்த‌ி குன்னக்குடி வைத்தியநாதன் உடல் செ‌ன்னை மந்தைவெளி கிரீஸ்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு அர‌சிய‌ல் க‌ட்‌சி‌த் ‌தலைவ‌ர்க‌ள், மு‌க்‌கிய ‌பிரமுக‌ர்க‌ள், க‌ர்நாடக இசை ‌பிரமுக‌ர்க‌ள், பாடக‌ர்க‌‌ள், நடிகர், நடிகைகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தின‌ர்.

அவரது உட‌ல் நாளை பெச‌ன்‌ட் நக‌ர் ‌மி‌ன்மயான‌த்த‌ி‌ல் தகன‌ம் செ‌ய்ய‌ப்படு‌கிறது.

வயலின் என்றவுடன் ஞாபகத்துக்கு வருபவர் குன்னக்குடி வைத்தியநாதன். அவரின் பிரிவால் வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இறைபதமடைந்த வைத்தியநாதனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்... ஒரு வயலின் வானுலகை இசையால் சிறப்பிக்க விரைகிறது!

கண்கள் குளமாக கனத்த இதயத்துடன் வழியனுப்புகிறோம்!!

அண்ணாரின் பிரிவைத் தாங்கி நிற்கும் அன்புள்ளங்களுக்கும், அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்!!!

வயலின் உலகிற்கு இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலையின் மைந்தனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜனரஞ்சகமான இசை மேதையை உலகம் இழந்து விட்டது.அன்னாருக்கு அஞ்சலிகள்.

1209ld3.png

பெங்களூரில் ஒரு கச்சேரி... விடியற்காலையே தன் பக்கவாத்திய ஜமாவுடன் போய்விட்டார். `லேட்டஸ்ட் கன்னட ஹிட் பாடல்கள் கேட்கணும். சிடியோ கேஸட்டோ வேண்டும். வாங்கிட்டுவா' என்று முதல் வேலையாக தனது உதவியாளர் பழனியை அனுப்பினார். அடுத்த அரைமணிநேரத்தில் புனித் ராஜ்குமார், உபேந்திரா என்று இன்றைய கன்னட ஸ்டார்கள் நடித்த படப் பாடல்களின் சி.டி.க்கள் வந்தன. உடனே எல்லா சி.டி.க்களையும் ஒருமுறை ஓடவிட்டு கண்களை மூடி கேட்டவர்...

கொஞ்சநேரத்தில் `போதும்' என்று எழுந்துகொண்டார். மதியம் குட்டி தூக்கம் போட்டவர் மாலை கச்சேரிக்கு ரெடியானார்.

ஏழு மணிக்கே வழக்கம்போல் எக்கச்சக்க கூட்டம். முதல் இரண்டு மணிநேரம் சம்பிரதாயமாக அவருக்கு பிடித்தமான

சண்முகப்ரியாவையும், ஆபேரியையும் வாசித்து தனி ஆவர்த்தனம் விட்டபோது கடும் பனியில் கூட்டம் லேசாக கலைய... வாத்தியகாரர்கள் வாசித்து முடித்த கையோடு, காலையில் கேட்ட கன்னட திரைப்பட பாடல்களை அதன் பி.ஜி.எம். கூட மாறாமல் அட்சர சுத்தமாக வாசிக்க... கலைந்த கூட்டம் திபு திபுவென்று ஓடி வர... அங்கே ஆனந்த களேபரம். நள்ளிரவை நெருங்கியபோதும் அரங்கம் திமிலோகப்பட்டது.

அதுதான் குன்னக்குடி. தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திராவிலும் மிகப் பெரிய கூட்டத்தை தனது இசையால் கட்டிப்போட்ட மகாவித்வான். காலையில் கேட்ட பாட்டை எப்படி அப்படியே வாசிக்க முடிந்தது? அசுர உழைப்பும், அபார ஞானமும் குன்னக்குடியின் சொத்து! இல்லாவிட்டால் பதினோரு வயதில் அரியக்குடி என்கிற சங்கீத சிங்கத்திற்கு பக்கவாத்யம் வாசித்திருக்க முடியுமா?

``நான் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர். உங்களுக்கு என்ன வேணும்? கேளுங்கள். மத்யமாவதி வேணுமா வாங்கிக்கோ.

`மதுரைக்கு போகாதடி' வேணுமா... தர்றேன். உங்களை திருப்திப்படுத்தாமல் வயலினை கீழே வைக்க மாட்டேன்'' என்று கச்சேரிகளில் அவர் முழங்கும்போது கைதட்டல் ஓய வெகுநேரம் ஆகும். அவர் வயலின் பாடும், பேசும், சண்டை போடும், கொக்கரிக்கும், சிரிக்கும், அழும்... அதெல்லாம் அவரால் மட்டுமே சாத்தியம்!``என் கச்சேரிகளைப் பிடித்தால் பாஸிடிவாக எழுதுங்கள்.

பிடிக்காவிட்டால் கிழியுங்கள். கவலையில்லை. ஆனால் எழுதாமல் புறக்கணிக்காதீர்கள். அதுதான் என்னை காயப்படுத்தும்'' என்று விமர்சகர்களிடம் வெளிப்படையாகப் பேசுவார். தன்னைப் பற்றி ஒரு வரி வந்தால்கூட சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு ஞாபகமாக போன் செய்து நன்றி சொல்வார். இந்த சினேக மனப்பான்மையே அவருக்கு சங்கீதத்திலும், வெளியிலும் மிகப் பெரிய நண்பர்கள் வட்டாரத்தை ஏற்படுத்தித் தந்தது!

``எழுபது வயசுக்கு மேல் ஆகிவிட்டது. ஆந்திரா, கேரளா, துபாய் என்று இப்படி பிளேனில் பறப்பது உடம்பிற்கு ஆகுமா? என்றபோது..

``என் பக்க வாத்தியகாரர்கள், உதவியாளர்கள், வீட்டு பணியாளர்கள் என்று என்னைச்சுற்றி இருபது குடும்பங்கள் இருக்குப்பா.

அவர்கள் என்னை நம்பியே இருப்பவர்கள். அவர்கள் ஜீவனத்திற்காவது நான் வாசிக்க வேண்டாமா?'' என்றார் அமைதியாக. சிறந்த மனிதாபிமானி.

``என் அப்பா ராமசுவாமி சாஸ்த்ரிகள் ஒருமுறை நோய்வாய்ப்பட்டு சீரியஸாக இருந்தபோது டாக்டர்கள் கைவிட்டுவிட்டார்கள்.

என்னமோ எனக்குள் ஒரு வெறி. நேரா போய் வயலினை எடுத்து வந்து அப்பாவின் தலைமாட்டில் உட்கார்ந்து அவருக்குப் பிடித்தமான பைரவியை இரண்டு மணிநேரம் விடாமல் வாசித்தேன். அப்பா நினைவு மீண்டார். அப்புறம் ஆறு வருடங்கள் வாழ்ந்தார்'' என்று தன் டீன் ஏஜில் நடந்த ஒரு நெகிழ்வான சம்பவத்தை அடிக்கடி சொல்லியிருக்கிறார் குன்னக்குடி. இம்முறை அவரது தலைமாட்டில் யாராவது அந்த பைரவியை வாசித்திருக்கக் கூடாதா?.

- வி.சந்திரசேகரன்

படம் : சித்ரம் மத்தியாஸ்

குமுதம் வார இதழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.