Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையத்தில நான் அறிந்தவர்கள்/பழகியவர்கள் பற்றிய சிறுகுறிப்புக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்த்தேன் நன்றாக இருகிறது பழைய நண்பர்களை நினை கூற தக்கதாய் இருந்தது. உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

என்ன சித்தன் ஒரு வருடம் இரண்டு மாதங்களின் பின்பு இப்பதான் பாக்கிறீயளோ?

"ஓ ஓ மை கொர்ட்" :wub::lol:

  • Replies 183
  • Views 29.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நன்றி சித்தன், நீங்களும் வளமுடன் வாழ உளங்கனிந்த வாழ்த்துகள்

+++

புத்தன், வரலாறு என்றால் அப்பிடித்தான். :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சித்தன் ஒரு வருடம் இரண்டு மாதங்களின் பின்பு இப்பதான் பாக்கிறீயளோ?

"ஓ ஓ மை கொர்ட்" :lol::)

உண்மைதான் புத்தன் எனது மன நிலையில் கதைகள் கவிதைகள் படிப்பதில் விருப்பமின்றி இருக்கிறது, இத்தனைக்கும் எழுதுவதை விட படிப்பதில் ஆர்வம் கொண்டவன். இப்போது நான் பெரிதும் விரும்பி பார்பது அரசியல் மட்டுமே, நேற்று ஆதி தனது ஆக்கங்களை தேடிதரும்படி ஒருபதிவு போட்டு இருந்தார், அந்தலிங்கில் எனது பெயரை போட்டு பார்தபோது இது வந்து மாட்டு பட்டது, படிக்க படிக்க ஆர்வமாக இந்தது எமது பழையகூட்டுகள் பற்றி படிக்க ஆர்வம் இராதா? படித்துவிட்டு எப்படி இதை தவறவிட்டேன் எனபார்த்தபோதுதான் கதைகதையாமில் இணைக்கபட்டு இருந்தது, ஆண்டை பார்த்தேன் 2008 என இருந்தது என்னை நினைத்து நானே சிரித்தேன், நல்லாய் இருந்தால் பாரட்ட வேண்டும் அதனால் ஒரு பதிலையும் போட்டு விட்டேன், யாழ் என்பது ஒருகடல் என்பது எவ்வளவு பொருந்துகிறது, யாழே கடல் என்றால் தமிழ் இணையம் சமுத்திரம். நாம் படிக்க வேண்டியது எவ்வளவு இருகிறது, இதனால்தான் சொன்னார்களோ "கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு" என்று. :wub:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியை வாசிக்கின்றபோது ஒரு வரலாற்று ஆவணம் ஒன்றை வாசிக்கிற சுகம் ஏற்படுகின்றது. புதியவர்களுக்கு யாழ் கள பழைய உறவுகளைப் பற்றிய ஒரு சிறந்த அறிமுகத்தை தருகின்றது. இதனை மச்சான் தொகுத்து வழங்கியிருக்கும் முறை அலாதியானது. வாசகருக்கு சலிப்புத்தனம் ஏற்படாத வண்ணம் நகர்த்தியிருக்கிறார்.

இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய கருத்து என்னவென்றால், மச்சான் தனது எண்ணங்களை உள்ளம் திறந்து சொல்லியிருக்கிறார். இதனூடாக அவர் எப்பிடிப்பட்ட இயல்பினர் என்பதை வாசகர் உய்த்தறியக் கூடியதாக இருக்கின்றது. நான் இந்த யாழ் களத்தில் இணைந்து ஒரு குறுகியகாலம்தான் இருக்கும், இக் காலகட்டங்களில் மச்சானின் படைப்புக்கள், கருத்துக்கள், இணைப்புக்கள் என்பனவற்றை பார்த்து அவரின் திறமை குறித்து வியந்து நின்றிருக்கிறேன். மச்சான் தொடர்க உங்கள் பணி, வாழ்க நலமுடன். நன்றி.

அன்புடனும் உண்மையுடனும்

காவாலி

மிகவும் அருமையான தொகுப்பு. முரளிக்கு எனது நன்றிகளும் பாராட்டும் உரித்தாகட்டும்.

ஆமாம். ஒரு காலத்தில் யாழ்களத்தில் மிகவும் சூடான விவாதங்கள் அரங்கேறும். பலரும் ஆர்வமுடன் பங்குகொள்வர். அதே உத்வேகத்தை மீண்டும் காண ஆசைப்படுகிறேன். எமது இளம் சமுதாயம் போலி மாயைகளுக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாவதை விடுத்து ஆக்கபூர்வமான கருத்தாடல்களிலும் செயல்முறைகளிலும் தம் நேரத்தை முதலிடுவது சாலச் சிறந்தது.

முரளிஇ உங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமான வாழ்வும் கிடைக்க வாழ்த்துகி.

  • தொடங்கியவர்

மிக்க நன்றி காவாலி, ஈழத்திருமகன். உங்களுக்கும் சகல வளங்களும் பெற்று வாழ உளம் கனிந்த வாழ்த்துகள்!

+++

முன்பு எழுதினதை இப்போது எழுதமுடியாது. இப்போது எழுதுவதை நாளை எழுதமுடியாது. தூயாவும் ஓர் பதிவு போட்டு இருக்கிறா தனக்கு அறிமுகமான யாழ் உறவுகளை பற்றி. எதிர்காலத்தில் வேறு யாராச்சும் எழுதலாம்.

என்னைப்பொறுத்தவரையில.. இது ஒரே ஒரு வாழ்க்கை. நாங்கள் எங்கை இருந்து வந்தம் என்று எங்களுக்கு தெரியாது. எங்கை போகப்போறம் எண்டும் எங்களுக்கு தெரியாது. இடையில யார் யாரையோ எல்லாம் காண்கின்றம். அவர்களில அன்பு வைக்கிறம். கோபம் கொள்ளுறம். சிலரை விரும்புறம். சிலரை வெறுக்கிறம்.

இந்த யாழில கூட எத்தனையோ வகையில சச்சரவுப்படுகிறம், சந்தோசப்படுகிறம்.

வாழ்க்கை இப்பிடித்தான்... அப்படியே அதன் பாட்டில வாழ்ந்துவிட்டு போகவேண்டியதுதான்.

ஆனாலும்... அனுபவங்கள், நினைவுகள் என்பவற்றை அசைபோட்டு பாக்கும்போது அதுவும் ஓர் சுகமான அனுபவமாக இருக்கும்.

நேற்று யாழுக்கு வந்தவர்கள், யாழை பார்த்தவர்கள் பலர் இன்று உயிருடன் இல்லை. அதேபோல இன்று யாழுடன் இணைந்து இருப்பவர்கள், வாசகர்களாக இருப்பவர்கள் நாளை இந்த உலகில் இல்லாமல் போகலாம்.

இந்தவகையில... எங்கள் தனிப்பட்ட கருத்துக்கள், முரண்பாடுகளுக்கு அப்பால... ஓர் உறவுப்பாலமாக யாழும் பின்னிப்பிணைஞ்சு இருந்து இருக்கிது எங்கடை வாழ்க்கையில.

நாளைய மனிதர்கள் தமிழ் வாசிக்கக்கூடிய ஆற்றல்களை கொண்டு இருந்தால்.. நாளைய மனிதர்கள் யாழை பயன்படுத்தக்கூடியதாக இருந்தால்.. இன்றைய மனிதர்களை அறிந்துகொள்ள நாளை அவர்களுக்கு இந்தப்பதிவும் ஓர் சிறு அனுபவமாக இருக்கும் என்று நினைக்கிறன். வணக்கம்.

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் உங்கள் தொலை நோக்கு சிந்தனையும் , தெளிவும் அலசி ஆராய்தலும்,

பாராட்ட ப்பட வேண்டியவையே. மேலும் தொடர்க உங்கள் பணி

மச்சான்! உங்கள் முயற்சி, எண்ணம் என்னை மிகவும் கவர்ந்ததுள்ளது. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

தமிழ் மக்களிடம் ஆவணப்படுத்தும் பழக்கம் வரவேண்டும் என்று ஆசைப்படுபவன். இனியும் தமிழ் மக்கள் தமது வரலாற்றை தொலைக்காமல் பாதுகாக்க வேண்டும் என்றும் ஆசைப்படுபவன். சிலவற்றை செய்தும் வருபவன்.

இந்த பின்னணியிலேயே, உங்கள் முயற்சி, எண்ணம் என்னை மிகவும் கவர்ந்ததுள்ளது.

எம்மவர் பலதை தொலைத்துவிட்டு, இப்போது இணையம் மூலம் தகவல் திரட்ட முயற்சிக்கும் சோகமான செய்திகளை பார்த்திருப்பீர்கள்.

எம் இனத்துக்கு பலன், பலம் அளிக்கும் வகையில், நாம் பலர் ஒன்று சேர்ந்து, எமது வரலாறு, எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், அழிவுகள், .... முதலியவற்றை நேர்த்தியாக ஆதரங்களுடன் சேகரித்து, பாதுகாப்பான பல இடங்களில் பேணி வைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய மச்சானுக்கு,

வரலாற்று உணர்வும் பதிவுகளும் என்பதுதான் தமிழனிடம் இல்லாத ஒரு இயல்பு. தங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள், சவால்கள் நிறைந்த தலைபணியாத எனது வாழ்வை அறிந்தவர்களுக்கு யாழில் நான் சந்தித்தது எதுவுமே பிரச்சினையானவை இல்லை என்பது தெரியும்.

சின்ன சின்ன ajestments சுக்கே தயாரில்லாமல் பிடிவாதமாக மறுத்து 16க்கும் அதிகமான கொலை முயற்ச்சிகளளை எதிர் நோக்கித் தப்பி இருக்கிறேன். என்னை கொல்ல திரிந்த எதிரும் புதிருமான பலர் பின்னர் மன்னிப்புக் கேட்டு எனது நண்பர்கள் ஆனது இன்னும் சுவார்சியமான கதை. அவர்களில் சிலருக்கு நிறைய உதவிகளும் செய்திருக்கிறேன்.

’கருணா பிழவுச் செய்தி’ கேட்டதும் நான் ஒரு அறிக்கை வெளியிட்டேன். கொழும்பு சூரியன் FM மில் “பிரபாகரனுக்கு கிழக்கி மாகாண போராளிகளைச் சுடும்படி உத்தரவிட மக்கள் ஆணை இல்லை. கிழக்கு மாகாணப் போராளிகளை வீடுகளுக்கு செல்ல உத்தரவிடுங்கள். கருணாவுக்கு உட்கட்ச்சி பிரச்சினையை வெளியாருக்கு சொல்ல உரிமை இல்லை. முரண்பாடுகளைப் பேசி தீர்க்க வேண்டும். என்ற எனது அறிக்கை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பானது. தொடர்ந்து வீரகேசரியிலும் பிரசுரமானது. உனக்கு கொழும்பிலும் ஆபத்து வன்னியிலும் ஆபத்து நாட்டைவிட்டு வெளியேறு என்று நண்பர்கள் சொன்னார்கள். உடனேயே நான் வன்னிக்கு புறப்பட்டேன். வழியனுப்பியவர்கள் ஒப்பாரி வைக்காததுதான் பாக்கி. இருப்பினும் வன்னி எனது கருத்துக்கள் சிலவற்றை ஒத்துக்கொண்டு செயல்படுத்தியது. கெல்லி தாத்தா பதுமன் போன்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டாம் எனவும் போராடினேன். இதுபற்றி எனது போர்கள அனுபவங்களில் விரிவாக எழுதுவேன்.

மச்சான் எனது ’கள்ளெனக்கொட்டுதடி வள்ளி, கால வெளியினில் போதை நிலா” பாடல் அடங்கிய இசை பேழை பெற உங்கள் மின் அஞ்சல் அல்லது தொலைபேசியை எனக்கு எழுதுங்கள். வாசுகி தொடர்புகொண்டு அவற்றை உங்களுக்கு அனுப்பி வைப்பார். visjayapalan@gmail.com

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

குகதாசன் அண்ணாவுடன் முன்பு ஊர்ப்புதினம் பகுதியில ஏராளம் கருத்தாடல்களில பங்குபற்றி இருக்கிறன். இப்ப மறந்துபோச்சிது. யாழில கொஞ்சம் வித்தியாசமாக வரிகளை குறுக்கி எழுதிற ஆக்கள் நான் அறிஞ்சு ரெண்டு பேர். ஒருவர் அஜீவன் அண்ணா, மற்றவர் குகதாசன் அண்ணா. குகதாசன் அண்ணா கவிதை மாதிரி ஒரு தனி வரியில ஆக இரண்டு மூன்று சொற்களை மாத்திரம் போட்டு எழுதுவார். அவரது கருத்தில நிறைய கேள்விக்குறிகள், வியப்புக்குறிகள் எல்லாம் இருக்கும். குகதாசன் அண்ணாவை எனக்கு தனிப்பட தெரியாது. வாழ்த்துகள்!

இன்றுதான் இதைப்பார்த்தேன்

நன்றி என்னையும் 2008 இலேயே கணக்கு வைத்தமைக்கு...

எனக்கும் இப்படி எழுதவேண்டும்என்ற எண்ணம் இருந்தது

அது தங்களால் முற்றுப்பெறுகிறது

தமிழரின் வாழ்க்கையே கேள்விக்குறிகளும் வியப்புக்குறிகளும் நிறைந்தவை தானே...

சின்ன சின்ன ajestments சுக்கே தயாரில்லாமல் பிடிவாதமாக மறுத்து 16க்கும் அதிகமான கொலை முயற்ச்சிகளளை எதிர் நோக்கித் தப்பி இருக்கிறேன்.

ஐயா பொயட்! "வரலாறும்", ஆதாரங்கள் எதுவுமில்லாமல் புலம்பும் "சுயபுராணமும்" ஒன்றோ? கொஞ்சம் விளக்குவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா பொயட்! "வரலாறும்", ஆதாரங்கள் எதுவுமில்லாமல் புலம்பும் "சுயபுராணமும்" ஒன்றோ? கொஞ்சம் விளக்குவீர்களா?

கேள்வியின் நியாயத்தன்மையும் கேட்கவேண்டியதன் தருணத்தையும் மதிக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

திரு போலுக்கும் திரு விசுக்குவுக்கும். உங்கள் கேழ்விகளுக்கான பதிலை எனது போர்க்கள அனுபவங்கள் என்ற புத்தகத்தில் விரிவாக எழுதுவேன். என்னுடைய வாழ்வுக்கும் தாழ்வுக்கும் உலம் முழுவதும் சாட்ச்சிகள் உள்ளனர். எனது பதில் மச்சானின் பதிவுகள் பற்றிய இந்த விவாதத்தை திசை திருப்பிவிடும் என்பதால் பதிலை மீழப் பெற்றுள்ளேன். Edited By Poet

Edited by poet

  • தொடங்கியவர்

மிக்க நன்றிகள் நிலாமதி அக்கா, ஆசான், கவிஞர் அண்ணா, போல், விசுகு அண்ணா. கவிஞர் அண்ணா நான் விரைவில தொடர்புகொள்ளிறன் அந்த பாடல் குறுந்தட்டை பெறுவதற்கு.

உங்கள் அனுபவங்களை எழுதுங்கோ கவிஞர் அண்ணா. நாங்கள் எழுதுறதுகள் எல்லாத்தையும் எல்லாரும் நம்பவேணும், அந்த கருத்தோட எல்லாரும் உடன்படவேணும் என்று இல்லைத்தானே. மகாத்மா காந்தியே சூடு வாங்கித்தானே செத்தார். நாங்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் எல்லாரையும் திருப்திப்படுத்தும் வகையில் எழுத முடியாது.

நான் எனது அனுபவங்களை நூலாக உருவாக்கிக்கொண்டு இருக்கிறன் [ நண்பர் போலின் பாசையில் சுயபுராணம் ] . எங்கள் அறிவு,அனுவபங்கள் Knowledge, experience, expertise ஐ மற்ற ஆக்களுக்கு pass பண்ண அவை நிச்சயம் உதவும். ஒரு கருங்கல்லை ஒருத்தன் தனக்கு தேவையில்லை என்று தூக்கி எறியலாம். அதே கருங்கல்லை ஓர் கலைஞன் புதையல் போல தேடி எடுத்து அழகிய சிற்பத்தை உருவாக்கலாம். நாங்கள் எழுதுற விசயங்கள் 1000 பேரில 990 பேருக்கு பயன்படாமல் wasteஆக போனாலும் விசயம் தெரிஞ்ச, விசயத்தை அறிய ஆர்வம் இருக்கிற 10பேருக்கு, எங்கட அறிவு, அனுபவம் தேவைப்படுகிற அது சம்மந்தமாக ஆராய்ச்சி செய்கிற 10பேருக்கு அவை மிகவும் பயன் உள்ளதாய், ஓர் பொக்கிசமாக இருக்கக்கூடும். என்றபடியால நக்கல், நையாண்டிக்காக நாங்கள் எங்களை சிறுமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை.

நாங்கள் சொல்வதை எல்லாரும் நம்பவேணும் என்று இல்லைத்தானே கவிஞர் அண்ணா. குறிப்பிட்ட சில விசயங்களை, அந்தரங்கங்களை அனுபவப்பட்டவர்கள், குறிப்பான சில சூழ்நிலைகளுக்கை வாழ்ந்தவர்களுக்கு மட்டும்தான் குறிப்பிட்ட அந்த விசயங்களை, அனுபவங்களை கிரகிக்கக்கூடியதாக இருக்கும்.

என்னை யாழில சைக்கோ என்று சொன்ன ஆக்களும் பலர் இருக்கிறீனம். அவையள் சைக்கோ என்று என்னை சொல்கிறபடியால நான் எழுதிறதை நிப்பாட்டவோ எனது சிந்தனைகளை தூக்கி எறியவோ முடியாது. அத்தோட அவையளின் என்னை பற்றிய பார்வையை நான் மாற்றவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. சைக்கோ என்று நினைக்கிற ஆக்கள் அப்படியே நினைக்கட்டும். நல்லதொரு கலைஞன் / கிறுக்கன் / அறிவாளி / முட்டாள் என்று நினைக்கிற ஆக்களும் அப்படியே நினைக்கட்டும். வாழ்க்கை என்றால் இப்பிடித்தான் இருக்கும். :)

Edited by மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

நான் மச்சானின் இவ் ஆக்கத்தை புறக்கணிக்கிறேன்...என்னைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை :rolleyes:

  • தொடங்கியவர்

யூகே வாழ்

பைங்கிளி..

அவள்

பொங்கினால் பால்

பூரித்தால் தோசை

புன்னகை செய்தால் இட்டலி

நேற்று..

தலையை குனிந்து நடந்தவள்

இன்று..

வலையில் வேட்டு வைக்கின்றாள்

நாளை?

பிரித்தானிய மகாராணி!

ஓ...

இவள்தான் எங்கள்

யாழ் இணையத்து

நங்கை ரதி! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை எல்லாத்தையும் விட கவிதைதான் சூப்பரா இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவங்களை எழுதுங்கோ கவிஞர் அண்ணா. நாங்கள் எழுதுறதுகள் எல்லாத்தையும் எல்லாரும் நம்பவேணும், அந்த கருத்தோட எல்லாரும் உடன்படவேணும் என்று இல்லைத்தானே. மகாத்மா காந்தியே சூடு வாங்கித்தானே செத்தார். நாங்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் எல்லாரையும் திருப்திப்படுத்தும் வகையில் எழுத முடியாது.

நான் எனது அனுபவங்களை நூலாக உருவாக்கிக்கொண்டு இருக்கிறன் [ நண்பர் போலின் பாசையில் சுயபுராணம் ] . எங்கள் அறிவு,அனுவபங்கள் Knowledge, experience, expertise ஐ மற்ற ஆக்களுக்கு pass பண்ண அவை நிச்சயம் உதவும். ஒரு கருங்கல்லை ஒருத்தன் தனக்கு தேவையில்லை என்று தூக்கி எறியலாம். அதே கருங்கல்லை ஓர் கலைஞன் புதையல் போல தேடி எடுத்து அழகிய சிற்பத்தை உருவாக்கலாம். நாங்கள் எழுதுற விசயங்கள் 1000 பேரில 990 பேருக்கு பயன்படாமல் wasteஆக போனாலும் விசயம் தெரிஞ்ச, விசயத்தை அறிய ஆர்வம் இருக்கிற 10பேருக்கு, எங்கட அறிவு, அனுபவம் தேவைப்படுகிற அது சம்மந்தமாக ஆராய்ச்சி செய்கிற 10பேருக்கு அவை மிகவும் பயன் உள்ளதாய், ஓர் பொக்கிசமாக இருக்கக்கூடும். என்றபடியால நக்கல், நையாண்டிக்காக நாங்கள் எங்களை சிறுமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை.

நாங்கள் சொல்வதை எல்லாரும் நம்பவேணும் என்று இல்லைத்தானே கவிஞர் அண்ணா. குறிப்பிட்ட சில விசயங்களை, அந்தரங்கங்களை அனுபவப்பட்டவர்கள், குறிப்பான சில சூழ்நிலைகளுக்கை வாழ்ந்தவர்களுக்கு மட்டும்தான் குறிப்பிட்ட அந்த விசயங்களை, அனுபவங்களை கிரகிக்கக்கூடியதாக இருக்கும்.

. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இங்குதான் நாம் முரண்படுகின்றோம்

நீங்கள் சொல்லும் கல்லைத்தூக்கி போடும் உதாரணத்தையே நானும் உதாரணமாக்கினால்

கல்லைத்தூக்கி என் தாய்மீது போடும்போது தான் நான் கேள்விகேட்க விழைகின்றேன்

தங்களுக்கு இது புரியும் என்று நினைக்கின்றேன்

எனக்கும் கவிஞருக்கும் எந்த பிடுங்கலும் இல்லை

ஆனால் எனக்கு நான் மதிக்கும் ஒரு பொருள்மீது அவர் காறித்துப்பும்போதும் நான் கேள்வி கேட்கக்கூடாது என்று தாங்கள் சொன்னால்

மன்னிக்கவும் நான் தங்களின் பின்னால் வரமுடியாது.

ஆனால் தங்களது வாதத்தை மதிக்கின்றேன்

அது என்னை அல்லது நான் மதிப்பவற்றை காயப்படுத்தும்போது நான் வருவேன் வரணும் வந்தே ஆகணும்.

இதற்கு தாங்கள் பதில் தரணும் தந்தே ஆகணும் ஏனெனில் இது என்னைக்காயப்படுத்தியுள்ளது.

காயப்படுத்தமுன் தாங்கள் ஒன்று 100 தடவை யோசிக்கணும்

நடுநிலை என்கின்ற ரீதியில் எழுதுவதானால் எம்மை இந்தநிலைக்கு ஆளாக்கியவன்தான் தங்களது முதல் தாக்குதலாளி.

நாங்களல்ல.

எய்தவனை விட்டுவிட்டு அம்பை நோகும் தங்களது போக்கு தங்களது இயலாமையை காட்டுகிறதே தவிர...

எமது வழிகள் பிழை என்பதை அல்ல....

இந்த திரியில்கூட எம்மை தாக்கும் வழிகளைத்தேடுவதை வைத்தே நீங்கள் பலவற்றை புரிந்து கொள்ளமுடியும் என்று நான் நினைக்கின்றேன்

எனது பதில் மச்சானின் பதிவுகள் பற்றிய இந்த விவாதத்தை திசை திருப்பிவிடும் என்பதால் பதிலை மீழப் பெற்றுள்ளேன்??????. Edited By Poet

அதை தாங்கள் செய்யவில்லை இன்றுவரை.................???

  • கருத்துக்கள உறவுகள்

யூகே வாழ்

பைங்கிளி..

அவள்

பொங்கினால் பால்

பூரித்தால் தோசை

புன்னகை செய்தால் இட்டலி

http://www.youtube.com/watch?v=tDGChD31Ajg

கம்பன், வள்ளுவன், இளங்கோ, பாரதி என்ற வரிசையில் எங்கட மச்சானுமா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.youtube.com/watch?v=tDGChD31Ajg

கம்பன், வள்ளுவன், இளங்கோ, பாரதி என்ற வரிசையில் எங்கட மச்சானுமா? :lol:

மச்சானும் கவிதை எழுதுவார் என்று இபோதுதான் நான் அறிந்து கொண்டேன், பல தி்றமைகளை ஒளிச்சு வச்சு இருக்கிறார் :D:lol::lol:

  • தொடங்கியவர்

நன்றி வாதவூரான், காவாலி, சித்தன்.

+++

விசுகு அண்ணா, உங்கள் சந்தேகங்களுக்கு கவிஞர் விரைவில் தனது நூல் மூலம் பதில் தருவார் என்று எதிர்பார்ப்போம்.

+++

நகைச்சுவையாய் இட்லி, வடை என்று எழுதியது, ரதி அடிக்கவரக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

யூகே வாழ்

பைங்கிளி..

அவள்

பொங்கினால் பால்

பூரித்தால் தோசை

புன்னகை செய்தால் இட்டலி

கோவப்பட்டால் சம்பல். மொத்தத்தில் ஒரு சைவ சாப்பாட்டுக்கடை.ரதி விலாஸ் :D:lol:

  • தொடங்கியவர்

ஹாஹா. ரதி ஒரு விலாஸை யூகேயில திறந்திடவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

முரளி ரதிக்கு எழுதின கவிதை நல்ல நகைச்சுவையாக இருக்கிறது. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.