Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

A - 9 கைப்பற்றப்பட்டது ஒப்பற்ற மகிழ்ச்சிட்யைத் தருகிறது - யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏ - 9 கைப்பற்றப்பட்டது ஒப்பற்ற மகிழ்ச்சிட்யைத் தருகிறது - யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம்.

Boost for civilian life:

(By: Ananth PALAKIDNAR)

The Bishop of Jaffna Rt. Rev. Thomas Savuntharanayagam told the Sunday Observer that he was extremely happy about the opening of the A-9 highway and hoped that the route would now pave way for greater cordiality between North and the South.

Rt. Rev. Savuntharanayagam commenting on the importance of the road said that all these days the innocent civilians suffered terribly due to its closure.

"When I hear the news I felt very happy like any other person in the peninsula. The people in Jaffna underwent untold hardship due to its closure. The prices of essential items had sky rocketed on and off due to fuel prices and the distance.

For medication or examinations the Jaffna civilians had to pay heavily, therefore the opening will be a boost to the Jaffna civilians', Jaffna Bishop said.

Former Vanni Parliamentarian and PLOTE leader Dharmalingam Sitharthan told Sunday Observer that the route covered a vast area of his electorate and was happy to know that the Forces have now taken full control of the highway.

"The movements of the civilians in Vanni were restricted to a great extent due to the closure of the A-9 route. The highway which was linking the North and South remained a pathway of deaths and destructions for nearly twenty five years. LTTE extorted money from civilians in a big way when the route was opened for a brief period soon after the Ceasefire Agreement of 2002.

Civilians from Jaffna had to buy tickets at exorbitant rates to travel between Colombo and Jaffna either by sea or by air. They did not have an easy access to matters which had to be done in Colombo. Therefore the opening of the A-9 will go a long way in narrowing the gap between the North and South in the future," Sitharthan said.

Courtesy - Sunday Observer

எல்லோருக்கு யாழ்ப்பாணத்தில் கஸ்ட்டப்படும் மக்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் வன்னியில் நாளாந்தம் நடந்துவரும் இனப்படுகொலை தெரிவதில்லை. அதைக் கண்டிக்கத்தானும் மனம் வருவதில்லை. இந்த எ - 9 பாதையைத் திறக்க எத்தனை வன்னி மக்கள் பலியெடுக்கப்பட்டார்கள் என்பதெல்லாம் இந்த மதத் தலைவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். ஏனென்றால் முன்னொருமுறை இவர்"புலிகளின் பிடியில் அகப்பட்டிருக்கும் வன்னிமக்களை விடுவிக்க இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று வேண்டியதாகவும் செய்தி ஒன்று வந்திருந்தது.

ரகுநாதன் ஆயர் பாதை திறக்கப்படுவதுதான் மகிழ்ச்சி தருவதாகத் தெரிவித்திருக்கிறார். படையினரால் கைப்பற்றப்பட்டமையினால் என்று கூறவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டிற்கும் என்ன வித்தியாசம் மின்னல் ? பாதை ராணுவத்தால் திறக்கப்படாமல், புலிகள் தாமாகத் திறந்துவிட்டார்களா? அல்லது பாதை தானாகத் திறந்து கொண்டதா? பாதை திறப்பு என்பது சிங்களம் தமிழர் மேல் கொண்டுள்ள மேலாதிக்க அடையாளமாகப் பார்க்கப்படும்போது அந்த நிகழ்வை மகிழ்சியுடன் ஏற்றுக் கொள்வது என்பது சரியானதா? அதுமட்டுமல்லாமல் இந்தப் பாதை திறப்பு விவகாரமே வடக்கிலிருக்கும் ராணுவத்துக்கான வழங்கல்ப் பாதையை திறக்கும் விடயமேயன்றி, அங்குள்ள தமிழர்களின் போக்குவரத்துக்கு என்று தொடங்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயம். அப்படியிருக்கும்போது, அவர் திறக்கப்பட்டதைத்தான் மகிழ்ச்சி என்கிறார், ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதை அல்ல என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

நான் இங்கே ஆயரை நியாப்படுத்திப் பேசவில்லை. ஆனால் அவரின் கருத்து வேண்டுமென்று திரிவு படுத்தப்படுவது சரியல்ல. ஏ-9 சாலை முழுமையாக படையினரால் வல்வளைப்புச் செய்யப்பட்ட பின்னர் சிங்கள ஊடகம் ஒன்று அது தொடர்பில் கருத்துக் கேட்டபோது ஆயரின் கருத்து தனியே பதை திறப்பது தொடர்பில் அமைத்திருக்கிறது. குறித்த செய்தி படித்துப் பாருங்கள். முற்று முழுதாக மக்கள் பிரச்சினைகள் பற்றியே அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

ஆயரின் நிலையிலை ஆயுதங்களுக்கு மத்தியிலை இருந்தால் விடுதலை புலிகளை வீழ்த்தி எண்று எல்லாம் செவ்வி கொடுத்து இருப்பேன்... நல்ல வேளை நான் அங்கை இல்லை...

அங்கை போராடுறது இப்ப முக்கியமாக இல்லை... முதலில் உயிரோடை இருக்க வேண்டும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒப்சேவர் ஆங்கில வாரஏடு இணையத்தினை பார்வைஇட்டேன். இணயைத்தில் வந்த செய்தி ஆயர் ஒப்சேவர் வாரஇதழுக்கு வழங்கிய செய்தி உண்மையாக இருந்தால்...........

ஆயர் சோற்றுக்காக சோரம் போகிறாரோ............................

மத போதகர்கள் மத போதனையிலேயே மட்டும் சேவைசெய்தால், நல்ல ஒழுக்மான சமுதாயத்தினை உருவாக்கலாம். மதம் அரசியல், யுத்தம் போன்ற இன்னோரன்ன வழிகளில் தமது கவனம் செலுத்துவது. அவரவர் மதத்தினை இழிவுபடுத்துவதாக முடிந்துவிடும்.

தெற்கில் ஒருமதம் பாராளுமன்றம் வரை போய்நிற்கிறது. புத்தனும், யேசுவும் போதனைகள்..................

மொழியின் பெயரால் தமிழர் நாம் ஒன்றுபடுவோம்

பஞ்சம் போகுமாம், ஆனால் பஞ்சத்தில் பட்ட வடு போகாதாம்.

தமிழனுக்கு இக்காலகட்டத்தில் தேவையானது தன்மானம்.

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.

என். வை. பென்மன்

  • கருத்துக்கள உறவுகள்

16 ஆயர் மார்கள் சிறி லங்காவில் உண்டு. இவர்களில் 3 பேர் தமிழ்ப் பகுதிகளில் மக்கள் படும் வேதனைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ் ஆயர்கள். யாழ் ஆயர் தோமஸ் பல காலமாகவே செய்யக் கூடிய பல அரிய காரியங்களைச் செய்யாமல் வெறுமனே இருந்த ஒருவர் என்பது என் கருத்து. அரசியல் வேண்டாம் என்று இருந்தார் என நினைத்தேன்..இப்போது இந்தக் கருத்து உண்மையிலேயெ சொல்லப் பட்டிருந்தால் இவர் விலை போன சன்னியாசி தான் என்ற என் சந்தேகம் உறுதியாகிறது. சோற்றுக்காக இருக்காது. பிரச்சினையில்லாமல் தென்பகுதிக்கும் வெளிநாடுகளுக்கும் சென்று வர வேண்டுமென்ற அவா தான் அவரை அடிமையாக்கியிருக்கிறது. ஒரு கத்தோலிக்கனாக இதை வருத்தத்துடன் எழுதுகிறேன். :)

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியின்படி

A - 9 கைப்பற்றப்பட்டது ஒப்பற்ற மகிழ்ச்சிட்யைத் தருகிறது

என்று கூறியிருப்பவர் யாழ் ஆயரல்ல அப்படி சொன்னவர் சித்தார்த்தன்.

இங்கு சித்தார்த்தனை யாரோ வேண்டுமென்றே ஆயராக்கிவிட்டார்கள்.

செய்தியின் தலைப்பே பிழையானதாக இருக்கும்போது செய்தியின் உண்மைத்தன்மையிலும்

நாம் சிறிது ஐயம்கொள்ள வேண்டியுமிருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில வாரங்களுக்கு முன்னர் " வன்னியில் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் மக்களை விடுவிக்க இந்தியா புலிகள் மேல் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று யாழ் ஆயர் கேட்டுக்கொண்டதாக ஒரு மின்னஞ்சல் இங்கு அவுஸ்திரேலியாவில் பரவியிருந்தது. அதன் உண்மைத்தன்மை அப்போது தெரியவில்லை. இப்போது எல்லாம் புரிகிறது.

1998 இல் மடுத்தேவாலயத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த அப்பாவிகள் மீது சந்திரிக்காவின் சிங்களப் பேய்கள் தாங்கித் தாக்குதல் நடத்தி கைக்குழந்தைகள் உற்பட 40 பேரைக் கொன்ற போது கூட அப்போதிருந்த மன்னார் ஆயர் " தாக்குதல் நடத்தியது யார் என்று எங்களுக்குத் தெரியாது, ரெண்டு தரப்பினரும் அப்பகுதியில் இருந்துள்ளனர்" என்று மழுப்பலான அறிக்கை ஒன்றை விட்டவர். ஆனால் மடுப் பங்குத் தந்தையோ, "தாக்குதல் நடத்தியவர்கள் ராணுவத்தினர்தான், அவர்கள் இருந்த திசையிலிருந்து தான் எறிகணைகள் வந்து வீழ்ந்தன" என்று உண்மையைக் கூறியிருந்தார்.

இப்போதுள்ள யாழ் ஆயர்தான் அப்போது மன்னாருக்கு ஆயராக இருந்தாரோ தெரியாது.

எத்தனையொ கத்தோலிக்கக் குருமார்கள் இனத்துக்காகவும், மக்களுக்காகவும் உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால் இப்படியும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

The Bishop of Jaffna Rt. Rev. Thomas Savuntharanayagam told the Sunday Observer that he was extremely happy about the opening of the A-9 highway and hoped that the route would now pave way for greater cordiality between North and the South.

இதை மொழிபெயர்த்தால் ஆயர் சொன்னதகத்தான் வருகிறது. யாரும் சித்தார்த்தனை ஆயராக்க முனையவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதை திறப்பது நமக்கு கௌரவப்பிரச்சனை. அது வேறு...

ஆனால் மதத்தலைவர்கள் எதையும் சார்ந்தவர்கள் அல்ல. கொழும்பு ஊடகம் கேட்ட கேள்விக்கு அவர் நடுநிலையாகவே பதிலளித்திருக்கிறார். யாழ்மக்களின் நன்மையை கருத்தில்கொண்டே அவர் அவ்வாறு கூறியுள்ளார்கள். அதை திரிவு படுத்தி சொல்வது சரியல்ல.

கவலை என்று கூறவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

extremely happy

இதன் அர்த்தம் என்ன??

இரகுநாதன் நீங்கள் என்ன கூறவருகிறீர்கள் என்று விளங்கவில்லை ஆனால் சிங்கள ஊடகங்களின் செய்திகளை வைத்து மக்களுக்காக பொதுப்பணியிலிருக்கும் மதத்தலைவர்களை குற்றம் சொல்வது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் சமீபத்தில் கொழும்பு மாவட்ட பேராயர் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியினையே திரித்து வெளியிட்டார்கள் அதன் பின்னர் அதனை அறிந்த கொழும்பு ஆயர் இல்லம் அதனை மறுத்து செய்தி வெளியிட்டதும் அனைவரும் அறிந்ததே.....

அத்துடன் மடுச்சம்பவம் நிகழ்ந்தபோது அங்கே பங்குத்தந்தையாக இருந்தவர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் ஆனால் அவருக்குப் பொறுப்பாக மன்னார் ஆயராக இருந்தவர் ஜோசப் ஆண்டகை அவர்கள்.எக்குருமாராயிருந்தா

Edited by thamizhanpan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவையில்லாமல் மதத்தலைவர்களை விமர்சிப்பது வருத்தத்கதுக்குரியது அவர்களுடைய இடத்தில இருந்துபார்த்தாத்தான் தெரியும் சும்மா வாயில வந்ததுகளை கதைக்ககூடாது தேவையில்லாமல் நாமே சிங்களவனுக்கு அடிபனியிறமாதிரி போகக்கூடாது அப்படி நாமே சன்டைபோடக்கூடாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ன்பன், நான் கத்தோலிக்க ஆயர்களையோ குருமார்களையோ அல்லது கன்னியாஸ்த்திரிகளையோ குற்றம் சாட்டவில்லை. செய்தியில் வந்தத்தைத்தான் இணைத்திருந்தேன். உண்மையில் இது சிங்கள இணையத்தளமான பாதுகாப்பு அமைச்சின் செய்திப்பிரிவில் கிடந்தது. நீங்கள் சொல்லுவதுபோல ஆயரின் கருத்துக்கூட அரச பிரச்சாரத்துக்கக திரிபு படுத்தப்பட்டிருக்கலாம் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். இங்கு எனது கருத்து ஆயரை குற்றம் சாட்டுவதாக அமைந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

எ - 9 பாதை திறப்பு என்பதை சிங்களம் தமிழர் மீதான ஒடுக்குமுறையின் சின்னமாகவும், தமிழ்த் தேசியத்தின் மீதான வெற்றியாகவும் காட்ட முற்படும்போது அந்நிகழ்விற்குச் சார்பான கருத்தொன்றை தமிழர் ஒருவர் முன்வைக்கும் போது சற்று வருத்தமாக இருந்தது. அதனால்த்தான் இச்செய்தியை இங்கு இணைத்தேன். ஆனால் இது கூட திரிபு படுத்தப்பட்டிருக்கலாம் என்பதை நான் அப்போது நினைக்கவில்லை.

மற்றையது மடுத் தேவாலயத்தின் மீது நடந்த ராணுவத் தாக்குதலின் பின்னர் தமிழோசையில் அங்கிருந்த ஆலயப் பங்குத் தந்தையையும் மன்னார் ஆயரையும் பேட்டி கண்டார்கள். முதலில் கருத்துத் தெரிவித்த மடுப் பங்குத் தந்தை அத்தாக்குதல் ராணுவத்தால் தான் நடத்தப்பட்டது என்று கூறினார். ஆனால் அதன் பின்னர் பேட்டியளித்த மன்னார் ஆயர், யார் நடத்தினார்கள் என்று தெரியாது, ஆனால் ரெண்டு தரப்பும் அப்பகுதியில் நிலை கொண்டிருந்தனர் என்று தெரிவித்தார். உண்மையை மறைத்து, சரியாக நடந்ததை அறிந்திருந்தும் நடுநிலமை என்கிற பெயரில் பட்டும் படாமலு பதிலளித்தது உண்மையாகவே எனக்கு ஆத்திரத்தை தோற்றுவித்திருந்தது.

தமிழன்பன், நடுநிலமை என்றால் என்ன? யாருக்கும் நோகாமல் கருத்துத் தெரிவிப்பதா அல்லது உன்மையைச் சொல்வதா? தமிழ் ஆயர் ஒருவர் தமிழருக்குச் சார்பாக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது ? இல்லாவிட்டால் ஆயரையும் கொன்றுவிடுவார்களா, என்ன? அப்படிக் கொலைப் பயம் தான் ஆயரை அப்படி பேசவைத்தது என்றால் அதையும் என்னால் விளங்கிக்கொள்ள முடியும்.

உங்களின் சிந்தனைக்கு: தென்னாபிரிக்க சுதந்திர போராட்டத்தில் ஒரு ஆயரும் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். நெல்சன் மண்டேலாவுடன் தோளுக்கு தோள் நின்று போரிட்டு சுதந்திரமும் வாங்கிகொடுத்தார். அவரின் பெயர் ஆயர் டெஸ்மன் டூட்டு.கறுப்பினத்தவரான அந்த ஆயர், வெள்ளைக்காரர் தன்னைக் கொன்று விடுவார்கள் என்று அஞ்சி, நடுநிலமை வகித்து தன்னைக் காப்பற்றிக் கொள்ளவில்லை. மாறாக ஒடுக்கப்பட்ட தனது மக்களுக்காக ஓயாது சர்வதேசமெங்கும் குரல் எழுப்பி சுதந்திரத்துக்காகப் போராடினார். அவர் எங்கே....நாம் எங்கே?

உண்மையின் முன்னால், நடுநிலமை என்று ஒன்றில்லை !

  • கருத்துக்கள உறவுகள்

இது அவருடைய தனிப்பட்ட கருத்து.

இதையெல்லாம் தூக்கி பிடிக்கிறது விடுத்து களநிலைமையை பார்த்தக் கொள்வோம்.

கருத்து எதுவும் தெரிவிக்காமலேயே இருந்து இருக்கலாம்...

மடுமாதாவும் வன்னிவந்து நேயாளர்காவு வண்டியில் புலிகளுக்கு தெரியாமல் ஒளித்து கொண்டு சென்றுள்ளார் ஒரு சாமி.. இப்படியான செயல்களினால் போரட்டங்களுக்கு மக்களுக்கு உதவி செய்யும் சாமிகளுக்கு கெட்ட பெயர்களை உண்டாக்காமல் எதிர்காலத்தில் கவனமாக கையாள வேண்டும்...

சிங்கள அரசு தந்திரமாக தனது பிரச்சாரத்திற்கு இவரைப் பயன்படுத்துகின்றது.

20081231_JfnExhi6.jpg

ஆயர் தோமஸ் மாளிகையில் அவர் மடியில் கன்றினை போல் மாய மகிந்தன் தூங்குகின்றான் தாலேலோ!!!

இதை இனியாவது ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கவனத்தில் கொண்டு தனது எதிர்கால அறிக்கைகளை தயாரிக்க வேண்டும் என்று

ஈழத்தமிழர்கள் மிகவும் பணிவுடன் எதிர்பார்க்கிறார்கள்.

தனது அறிக்கையின் ஒவ்வொரு வார்த்தைகளையும் சிங்கள அரசு அதன் பிரச்சாரத்துக்கும் இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கும் எப்படி பயன்படுத்தும் என்பதை மதிப்பிற்குறிய ஆயர் அறியாததல்ல. ஆகவே எதிர்காலத்தில் சிங்களத்தின் இன ஒழிப்பு நடவடிக்கைகளூக்கான பிரச்சாரத்திற்கு துணை போகாத சொற்பிரயோகங்களுடன் ஆயரின் இதுபோன்ற அறிக்கைகளை தயாரித்திட வேண்டும் என இத்தால் பணிவுடன் வேண்டுகிறேன்!!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ் குடா இருந்த போது ஒரு கதை. இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் யாழ் குடா உள்ள போது இன்னொரு கதை. இவர்கள் எல்லாம் இறை பணியாளர்கள்..! ம்ம்ம்...??!

பாப்பரசர் அவர்களோ.. உடனே யுத்தத்தை நிறுத்தச் சொல்லுறார். இவையோ.. மக்களின் இரத்தந்தால் குளித்த ஏ 9 னில் பயணிக்கும் களிப்பில் இருக்கிறார்கள். நீங்கள் எப்படி ஜேசுவின் பணியாளர் ஆனீர்கள்..???! :unsure::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கே ஆயரை நியாப்படுத்திப் பேசவில்லை. ஆனால் அவரின் கருத்து வேண்டுமென்று திரிவு படுத்தப்படுவது சரியல்ல. ஏ-9 சாலை முழுமையாக படையினரால் வல்வளைப்புச் செய்யப்பட்ட பின்னர் சிங்கள ஊடகம் ஒன்று அது தொடர்பில் கருத்துக் கேட்டபோது ஆயரின் கருத்து தனியே பதை திறப்பது தொடர்பில் அமைத்திருக்கிறது. குறித்த செய்தி படித்துப் பாருங்கள். முற்று முழுதாக மக்கள் பிரச்சினைகள் பற்றியே அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாதை சும்மா திறபடேல்ல. பெருந்தொகையான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும்.. இடம்பெயர்ச் செய்யப்பட்டும்.. வன்வளைப்புச் செய்யப்பட்டும் தான் பாதை திறக்கப்பட்டுள்ளது. தெற்குக்கும் வடக்குக்கும் பாலம் போட.. இனப்பிரச்சனை ஒன்றும்.. ஏ9 பாதை சார்ந்த பிரச்சனையல்ல. எமது பிரச்சனைகளின் ஆழத்தைப் புரிந்தவர்கள்... இவ்வாறும் பட்டும்படாமலும்.. அரசின் பயங்கரவாதச் செயல்களை இன சுத்திகரிப்புச் செயல்களை அங்கீகரிப்பது.. ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே , ஆயரின் கூற்றினை விமர்சிப்பது நன்று அல்ல. ஒரு வேளை , பெரு விரலும் சுட்டு விரலும் இணைந்த வற்றுக்கு (விளங்கும் தானே )முன்னால் இருந்து இதை சொல்லி இருக்கலாம் . அவர்கள் நிலையில் இருந்து நோக்குவது தான் சிறந்தது .என்பது என் பணிவான கருத்து .

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தானாக சொல்லாமல் சொல்ல வைக்கப்பட்டிருக்கலாம். அரசுக்கு இப்படியான பிரச்சாரங்கள் தம்து நடவடிக்கைகளை உலக அரங்கில் நியாயப்படுத்த நிச்சயமாக உதவி செய்யும். ஒரு அனுமானம் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டிற்கும் என்ன வித்தியாசம் மின்னல் ? பாதை ராணுவத்தால் திறக்கப்படாமல், புலிகள் தாமாகத் திறந்துவிட்டார்களா? அல்லது பாதை தானாகத் திறந்து கொண்டதா? பாதை திறப்பு என்பது சிங்களம் தமிழர் மேல் கொண்டுள்ள மேலாதிக்க அடையாளமாகப் பார்க்கப்படும்போது அந்த நிகழ்வை மகிழ்சியுடன் ஏற்றுக் கொள்வது என்பது சரியானதா? அதுமட்டுமல்லாமல் இந்தப் பாதை திறப்பு விவகாரமே வடக்கிலிருக்கும் ராணுவத்துக்கான வழங்கல்ப் பாதையை திறக்கும் விடயமேயன்றி, அங்குள்ள தமிழர்களின் போக்குவரத்துக்கு என்று தொடங்கப்பட்ட நடவடிக்கை அல்ல என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயம். அப்படியிருக்கும்போது, அவர் திறக்கப்பட்டதைத்தான் மகிழ்ச்சி என்கிறார், ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதை அல்ல என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

ஆயர் தெளிவாக பாதை திறக்கப்பட்டதால் மக்கள் இந்தப்பாதையால் பயணம் செய்ய கூடியதாக இருப்பது பற்றிய தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். நீங்கள் உள்நோக்கத்துடன் இதை திரிபுபடுத்தி பாதை கைப்பற்றப்பட்டதால் ஆயர் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். ஆயர், இராணுவம் பாதையால் பயணம் செய்யக்கூடியதாயிருப்பது காரணமாக தான் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கவில்லை. உங்களது தெளிவான வெளிப்படையான திரிவுபடுத்தல், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூட செய்யத்துணியாத திரிவுபடுத்தல் ஆகும். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, ஆயர் பாதை திறக்கப்பட்டது பற்றி மகிழ்ச்சி அடைந்திருப்பதாக கூறியிருப்பதாக வெளியிட்டிருக்கிறதே அன்றி, பாதை கைப்பற்றப்பட்டப்பட்டதால் ஆயர் மகிழ்சிசி அடைந்திருப்பதாக திரிபுபடுத்தவில்லை. உங்கள் எழுத்தில் ஈழத்தமிழ் மக்களை மதரீதியாகவும் பிளவுபடுத்தி அழிக்க நினைக்கும் இந்திய வல்லாதிக்கத்தின் செயற்பாடு தெரிகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூட்,

எனது கருத்தில் எப்பகுதியில் இந்திய வல்லாதிக்கச் சதி தெரிகிறது என்று கூற முடியுமா? தலை கீழாக நின்று பார்த்தேன், எதுவுமே தெரியவில்லை.

மதரீதியாக தமிழர்களை பிளவு படுத்துகிறேனா?? எப்படி சொல்கிறீர்கள்? மறைந்த கருணாரட்ணம் அடிகள், மறைந்த சிங்கராயர் அடிகள், தோலகட்டி மவுனசபையில் கொலை செய்யப்பட்ட பாதிரியார், வங்காலையில் கொல்லப்பட்ட செபச்டியன், மண்டைதீவில் தமிழர்க்காக குரல் கொடுத்து உயிர்த்தியாக செய்த ஜிம்பிறவுன், இன்றும் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளரீதியான சிகிச்சை அளித்துவரும் அருட்சகோதரி......இப்படி நீண்டு செல்லும் கத்தோலிக்கக் குருமார் மற்றும் கன்னியாஸ்த்திரிகள் என்ற பட்டியல் பற்றித் தெரியுமா உங்களுக்கு? அவர்கள் தமது உயிரையும் பணயம் வைத்துத்தான் தமிழர்க்கு சேவை செய்தார்கள். சிலர் தமதுயிரையும் நீத்தார்கள்.இவர்கள் செய்த, செய்துவருகிற தியாகங்கள் அளப்பரியவை. உள்நாட்டிலும், புலத்திலும் வாழும் கத்தோலிக்கக் குருமார்களின் தமிழர் சார்ந்த செயற்பாடுகளை தமிழினம் என்றுமே நன்றியுணர்வுடந்தான் நோக்குகிறது.

நான் இந்திய வல்லாதிக்க(?) சக்தியுமில்லை, தமிழரை மதரீதியாக பிளவுபடுத்தும் ஆசாமியுமில்லை.ஆயரின் கருத்துத் திரிபு படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். இதை அரசு தனது பிரச்சாரத்துக்குப் பாவிக்கப்போகிறது என்பதுதான் எனது வாதம். அப்படி அரசு பாவிக்கவில்லை என்றால் இத்துடன் விட்டு விடுங்கள்.

ஏ - 9 கைப்பற்றப்பட்டது ஒப்பற்ற மகிழ்ச்சிட்யைத் தருகிறது - யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம்.

எந்த ஊடகமும் இப்படி கருத்துப்பட மொழிபெயர்த்து செய்தி விடவில்லை..

தயவுசெய்து தலைப்பை மாற்றி சரியான கூற்றை போடவும்...

செய்தியை செய்தியாய் போட்டபின் உங்களின் கருத்துக்களை அதன்கீழ் எழுதுதலாம்

சண்டே ஒவ்சேவர் போட்ட தலைப்பு "A-9 opening pleases Jaffna Bishop " ( http://www.sundayobserver.lk/2009/01/11/new03.asp )

திறக்கப்பட்டது என்பதற்கும் கைப்பற்றப்பட்டது என்பதற்கும் உங்களுக்கு வித்தியாசம் நன்கு தெரிந்தும் இப்படி எழுதுவதும் பின்னர் அதனை நியாயப்படுத்துவதும் நல்லதல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.