Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி திருமாவளவன் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழர் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்திய மத்திய அரசாங்கம் பேச்சு நடத்தி போர் நிறுத்தம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்று தொடங்கியுள்ளார்.

முன்னதாக சேப்பாக்கம் சென்னை விருந்தினர் மாளிகைக்கு முன்பாக உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறவிருந்தது. அப்பகுதியில் மாலை 5:00 மணிவரையே காவல்துறை அனுமதி வழங்கியது.

இதனையடுத்து சென்னையில் இருந்து 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மறைமலை நகரில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:00 மணிக்கு திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கினார்.

உண்ணாநிலைப் போராட்டத்தினை கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார்.

thiruma_20090115002.jpg

இப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களான மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், திராவிட இயக்க தமிழக பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், நடிகர் மன்சூர் அலிகான், கவிஞர் காசி ஆனந்தன், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்களான திருக்கச்சூர் ஆறுமுகம், மூர்த்தி மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

உண்ணாநிலைப் போராட்டத்தினை வாழ்த்தி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என தொடர்ந்து போராடியும் எந்தவித பயனும் இல்லை. அதற்காக தம்பி திருமாவளவன் இத்தகைய போராட்டத்தை கையில் எடுத்துள்ளார். அவருக்குப் பின்னால் ஆறரைக் கோடி தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்றும் அவருக்குத் துணையாக நாங்களும் நிற்போம் என்றும் வாழ்த்துகிறேன் என்றார் அவர்.

உண்ணாநிலைப் போராட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் திருமாவளவன் பேசியதாவது:

ஈழத்தில் ஐந்து லட்சம் தமிழர்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர். தமிழர்களை சிங்களப் போர்ப் படையினர் கடல் வழியாகவும், தரை வழியாகவும் சுற்றிவளைத்து தாக்கி வருகின்றனர்.

அனைத்துலக நாடுகள் தடை விதித்துள்ள கொத்துக் குண்டுகளை போட்டு இலங்கைத் தமிழர்களை அழித்து வருகின்றனர். பல்வேறு நாடுகளின் துணையுடன் இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது.

ஒரு இனத்தை அழிக்க திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மனிதநேய அடிப்படையில் அதனைத் தடுத்து நிறுத்த இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது. அதனைவிட இந்திய அரசாங்கம் அதனை முன்னின்று நடத்தி வருகிறது என்பது கொடுமையிலும் கொடுமை.

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற தமிழகத்தில் அடுக்கடுக்கான போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் புதுடில்லிக்குச் சென்று இந்தியப் பிரதமரைச் சந்தித்து முறையிட்டோம்.

சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரையில் நீண்ட மிகப்பெரிய மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், தமிழ் அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இவ்வளவையும் தாண்டி சிங்கள ஆட்சியாளர்களுக்கு போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று சொல்லும் மனம் இந்திய அரசுக்கு இல்லையா? இது மிகவும் வேதனை அளிக்கிறது.

thiruma_20090115001.jpg

தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்படுகின்றது.

"இந்திய அரசே இனவெறிப் போரை நிறுத்து"

"அமைதி பேச்சுவார்த்தை நடத்து"

என வலியுறுத்தி ஆறரைக் கோடி தமிழ் மக்களின் சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது. இதையும் பொருட்படுத்தவில்லை என்றால் தமிழக மக்கள் தக்க நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள்.

இந்த ஆறு மாத காலமாக சிங்களப் படையினர் உக்கிரத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஆறு மாதமாக தமிழ் மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழகத்தின் முதல் குடிமகன் என்ற தகுதியுடைய முதல்வர், தனது தள்ளாத 86 வயதிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் புதுடில்லிக்குச் சென்று பிரதமரை வலியுறுத்திய போது, பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பப் போவதாக பிரதமர் உறுதியளித்தார்.

ஒரு மாத காலமாகியும் இதுவரை அவரை அனுப்ப எந்தவித முயற்சியும் செய்யப்படவில்லை. இப்போது மருத்துவர் ஐயா இராமதஸ், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, நானும் சென்று முதலமைச்சரிடம் மனு அளித்தோம்.

அம்மனுவில், இந்திய அரசாங்கம் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதன் படி அமைதி பேச்சு முயற்சியில் ஈடுபட வேண்டும். குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.

முதல்வரும், பிரதமரிடம் வலியுறுத்துவதாக உறுதியளித்தார். ஆனாலும் கூட ஓய்வில்லாமல் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சின்னஞ்சிறு பிள்ளைகளைக் கூட கொத்துக்குண்டுகளை வீசி கொல்கின்றனர்.

இந்நிலையில் இந்திய அரசாங்கம் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனனை கொழும்புக்கு அனுப்பப் போவதாக தெரிவித்துள்ளது. அவர்கூட கொழும்புக்குப் போவது ஈழத் தமிழர் சிக்கலுக்காக அல்ல என்றும், வேறு அரசியல் காரணங்களுக்காக செல்வதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிங்கள நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். சிவ்சங்கர் மேனன் வந்தாலும் வந்தாலும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த மாட்டார் என்றும், எங்களின் போர்ப்படைத் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் கொடுக்க முடியாது என்று தெரிகிறது. முதலமைச்சர் அவரின் சக்திக்கு இயன்றதை செய்துவிட்டார். மத்திய அரசாங்கம் அவரையும் அவமதித்து ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் அவமதித்துள்ளது என்ற இறுதிக் கட்டத்தில்தான் இப்போராட்டம் நடத்தப்படுகின்றது என்றார் அவர்.

நன்றி: புதினம்

Edited by மோகன்

  • Replies 56
  • Views 4.7k
  • Created
  • Last Reply

இந்நிலையில் இந்திய அரசாங்கம் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனனை கொழும்புக்கு அனுப்பப் போவதாக தெரிவித்துள்ளது. அவர்கூட கொழும்புக்குப் போவது ஈழத் தமிழர் சிக்கலுக்காக அல்ல என்றும், வேறு அரசியல் காரணங்களுக்காக செல்வதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிங்கள நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். சிவ்சங்கர் மேனன் வந்தாலும் வந்தாலும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த மாட்டார் என்றும், எங்களின் போர்ப்படைத் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

.

தொல்.தி.மா வுக்கு என் ஆண்ம வாழ்த்துக்கள். வெற்றிபெற வாழ்த்துக்குகள்.

அண்ணா உங்களுக்கு எங்கள் உணர்வுபூர்வமான நன்றிகள்...

மத்தியஅரசு தமிழர்விடயத்தில் கல்லாகஇருக்கிறது...அடிக்க அடிக்க அம்மியும்நகரும்என்பார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் போராட்டம் உங்கள் மத்திய ,மாநில அரசுகளை விழிப்படைய செய்ய வாழ்த்துக்கள்.காந்தி தேசம் உங்கள் போராட்டத்தை கண்டுகொள்ளுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் போராட்டம் உங்கள் மத்திய ,மாநில அரசுகளை விழிப்படைய செய்ய வாழ்த்துக்கள்.காந்தி தேசம் உங்கள் போராட்டத்தை கண்டுகொள்ளுமா?

அதற்கு (விழிப்படைய செய்ய ) நாமும் உதவிபுரியவேண்டும்.

அன்று காந்தியின் அகிம்சைப்போர் ஜெயித்தது காரணம் அவர் வெள்ளையனிற்கு எதிராக போராடினார். ஆனால் இன்று அண்ணன் திருமாவளவன் இருப்பது இதயமே இல்லாத மரங்களிற்கு எதிராக . . கேள்விக்குறிதான் ? ஜெயிக்க வேண்டும். . நாமும் துணை இருப்போம் . .

உறங்குபவரை தட்டி எழுப்பலாம். ஆனால் உறங்குவது போல் நடிப்பவரை?? காந்தி தேசம் என்பது இற்றைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆனால் இன்று..! இன்றைய இந்தியாவைப் பார்த்து அஹிம்சையை போதித்த காந்தியும் தன் நாட்டை எண்ணி கண்ணீர் வடிப்பார். தொல். திருமா அவர்களே உங்கள் உயர்ந்த தியாகத்திற்கு ஈழத்தமிழர் தலை தாழ்த்தி நன்றி சொல்கின்றோம். இவைகள் செவிடனின் ஊதிய சங்காய் போகுமோ??? உடலை வருத்தி எமக்காய் நீங்கள் செய்யும் இந்த போராட்டம் என்றம் எம்மனதை விட்டகலாது. நன்றி! நன்றி!! நன்றி!!!

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணே நன்றி நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொல்.திருமாவளவன் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்குகள்

நன்றி தோழரே!

திருமாவளவர் துணிச்சல் கண்டு

ஒரு மா கிழவர் துணிச்சல் கொள்வாரா?

போனால் என்ன இருந்தால் என்ன

போடா தமிழா போடா என்று

இனிமேலும் அவர் தூக்கம் கொள்வாரா?

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்போராட்டத்தைக்கூட சில இந்தியத்தமிழர்கள் கேலிக்கு உள்ளாக்குகின்றார்கள். என்ன சொல்வது. செய்யிறவங்களின் உணர்வுகளை மொழியால் ஒன்று பட்டவனாலேயே புரிந்து கொள்ள முடியவில்லையே என்கின்ற வலியும்வேதனையும் மிஞ்சுகின்றது.

திருமா அண்ணா,

தங்கள் தியாகப்பணிக்கு நாங்கள் தலைவணங்குகின்றோம்.

Edited by Thamilthangai

இந்தப்போராட்டத்தைக்கூட சில இந்தியத்தமிழர்கள் கேலிக்கு உள்ளாக்குகின்றார்கள். என்ன சொல்வது. செய்யிறவங்களின் உணர்வுகளை மொழியால் ஒன்று பட்டவனாலேயே புரிந்து கொள்ள முடியவில்லையே என்கின்ற வலியும்வேதனையும் மிஞ்சுகின்றது.

திருமா அண்ணா,

தங்கள் தியாகப்பணிக்கு நாங்கள் தலைவணங்குகின்றோம்.

இந்திய இணையதளங்களில் காணப்படும் தமிழர் விரோத கருத்துக்களில் பெரும்பாலானவை றோவின் திருவிளையாடல்கள் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓரிரு.. விதிவிலக்குகள் உலகெங்கும் உள்ளனதாம். அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு.. திருமா அண்ணனின் உண்ணாவிரத அறநிலைப் போராட்டத்துக்கு எமது ஆதரவை எல்லா வழிகளிலும் காட்டி நாம் அனைவரும் தமிழர்களாக அண்ணன் பின் அணிவகுத்து நிற்பதே.. விதிவிலக்குகளின் வாய்களையும் அடைத்து நிற்கும். உலகின் பார்வையையும் எம் மக்கள் மீது திருப்பி நிற்கும்..! :rolleyes:

உங்கள் போராட்டம் மூலமாவது மத்திய அரசின் மனம் கசிந்தால் பல லட்சம் மக்கள் நிம்மதி அடைவாாகள்.

உங்களுக்கும் உங்கள் தோழர்களுக்கும் எமது நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி நடக்கப்போவது:

ஏதாவது ஒரு முக்கிய அரசியல் வாதி வருவார். தாங்கள் சமாதானத்தை வலியுறுதி எமது பிரதிநிதிகளை அனுப்வோம் என உறுதிமொழி அழிப்பார். உண்ணாவிரதம் கைவிடப்பட்டே ஆக வேண்டும்.

பேசாமல் மத்திய அரசை வலியுறுத்துவதை விட்டு உலக நாடுகளை வலிறுத்தினால் பலன்கள் சிறிதளவேனிலும் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழ மக்களுக்காக .தொல் திருமா அவர்கள் ,தொடங்கியிருக்கும் இந்த பட்டினிப்போராட்டம் ,அகிம்சா வழிப்போராட்டம் உலகுக்கு, ஒரு சேதியை சொல்ல வேண்டும் ,வெற்றி பெற வேண்டும் , போர் வெறி பிடித்த வர்களை ,சிந்திக்க வைக்கவேண்டும் அவரோடு நாமும் ,எமது ஆதரவைதெரிவித்து ...ஆவன செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் போராட்டம் வெற்றி பெறும். மத்திய அரசுக்கு ஒரு நெருக்கடியை கொடுக்கும். அதே நேரம் ஆட்சியில் இருக்கும் (தமிழ் நாட்டில்) தலைவர்களையும் செயலாற்ற வைக்கும். தலைவணங்குகிறேன் திருமா அண்ணா உங்கள் உணர்வுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வரும், பிரதமரிடம் வலியுறுத்துவதாக உறுதியளித்தார். ஆனாலும் கூட ஓய்வில்லாமல் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சின்னஞ்சிறு பிள்ளைகளைக் கூட கொத்துக்குண்டுகளை வீசி கொல்கின்றனர்.

இந்நிலையில் இந்திய அரசாங்கம் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனனை கொழும்புக்கு அனுப்பப் போவதாக தெரிவித்துள்ளது. அவர்கூட கொழும்புக்குப் போவது ஈழத் தமிழர் சிக்கலுக்காக அல்ல என்றும், வேறு அரசியல் காரணங்களுக்காக செல்வதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிங்கள நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். சிவ்சங்கர் மேனன் வந்தாலும் வந்தாலும் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த மாட்டார் என்றும், எங்களின் போர்ப்படைத் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் கொடுக்க முடியாது என்று தெரிகிறது. முதலமைச்சர் அவரின் சக்திக்கு இயன்றதை செய்துவிட்டார். மத்திய அரசாங்கம் அவரையும் அவமதித்து ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் அவமதித்துள்ளது என்ற இறுதிக் கட்டத்தில்தான் இப்போராட்டம் நடத்தப்படுகின்றது என்றார் அவர்.

நெஞ்சு கனக்கிறது. 22 ஆண்டின் முன் தியாக தீபம் திலீபண்ணா ! 21 ஆண்டின் முன் அன்னை பூபதியம்மா ! இந்தியப் படைகள் இருந்த காலம். இந்திய அரசிடம் நீதி கேட்டு உண்ணா நோன்பிருந்து தங்களை ஈகம் செய்தார்கள். அகிம்சையை தந்த காந்தி தேசத்தால், அதே அகிம்சை அவமானப்படுத்தப்பட்டு, அசிங்கப்படுத்தப்பட்டது தமிழர் தாயகத்திலே.

14 ஆண்டுகளின் முன் யாழ்க் குடாநாடு இடம்பெயர்ந்தபோது தன்மானமுள்ள, தமிழினத்தின் வேதனையைப் பொறுக்க முடியாது தன்னை தீயிட்டு உருகிப்போனானே அப்துல் ரகூப் !

இன்று நீங்கள் தமிழ்மானத்தைத் தன்மானமாக வரித்தவாறு, இந்திய அரசின் பாராமுகப் போக்கையும், இன அழிப்பிற்கு துணைபோவதையும் தாங்க முடியாது, உயிரைத் துறந்து உண்மையை வெளிக்கொணரவும், அமைதியாக அசைபோடும் உலகை அசைக்கவும், தங்களையே அர்ப்பணிக்கத் துணிந்துவிட்ட விடுதலைச் சிறுத்தையே ! தொல் திருமாவளவனே ! தங்களின் எழுச்சியால் தமிழகம் எழுந்து நிற்கும் பகை சாய்த்து நிமிர்ந்தோம் நாமென்று எமது வராலாற்றில் பதியும் வகையினிலே வாகை சூடிவர வாழ்த்துகிறோம் ! வாழ்த்துகிறோம் !

- எதிரியை எமக்குச் சாதகமான நேரம் வரும்வரை வேண்டுமாணால் தோளில் தூக்குவதில் கூடத் தவறில்லை -

- நொச்சியான் -

அண்ணா உங்களுக்கு எங்கள் உணர்வுபூர்வமான நன்றிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார் திருமாவளவன்

சென்னை ஜன, 17: இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், அங்கு போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னையில் இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

இலங்கையில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரிவரும் திருமாவளவன், இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், அங்கு போரை நிறுத்தக் கோரியும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவிருப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை -& தாம்பரம் அடுத்துள்ள மறைமலைநகரில் இன்று காலை அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

இந்த உண்ணாவிரதப் போராட்ட துவக்க நிகழ்ச்சியில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன், ரவிகுமார் எம்.எல்.ஏ., ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டிருந்தனர்.

உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ள திருமாவளவனை, அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சந்தித்தவண்ணம் உள்ளனர்.

இப்போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறுகையில், ‘‘அண்மையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இலங்கைப் போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தமிழக முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.

ஆனால், அப்போது பிரதமர் அளித்த வாக்குறுதியின் படி, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை மத்திய அரசு இன்னமும் இலங்கைக்கு அனுப்பவில்லை.

அதனால் தான், இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு தலையிடக் கோரியும், அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளேன்.

தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி தமிழர்களும் இந்த கோரிக்கைக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகவே இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறேன்.

இனியும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பாராமுமாக இருக்கக் கூடாது. இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,’‘ என்றார் திருமாவளவன்.

விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

சிரம் தாழ்த்தி வணங்குறோம்.

அண்ணா உங்களுக்கு எங்கள் நன்றிகள். உங்கள் உயிரும் எங்களுக்கு முக்கியம்.

இத்துடன் நின்றுவிடக்கூடாது புலம்பெயர் தேசங்களிலும் இத்தகைய போராட்டம் முன்னெடுக்கப்படவேண்டும். அதுதான் திருமாவளவனின் போராட்டத்திற்கான வலிமையையும் அர்த்தத்தையும் கூட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

திருமா அண்ணா , நீங்கள் ஈழத்தமிழர் மேல் காட்டும் அன்பும் , அக்கறையும் அளப்பரியது .

உங்கள் உண்ணாவிரதப் போராட்டம் விரைவில் வெற்றி பெறவேண்டும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.