Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலக்கோட்டை அருகே ஒருவர் தற்கொலை;ஈழப்பிரச்சனை முடிவுக்கு வரக்கோரி?

Featured Replies

ஈழப்பிரச்சனை முடிவுக்கு வரக்கோரி நிலக்கோட்டை அருகே ரவி என்பவர் இன்று காலை தீக்குளித்து மரணம் அடைந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு வயது. 40. ஈழப்பிரச்சனை முடிவுக்கு வரக்கோரி ரவி நேற்றிரவு தீக்குளித்தார் என்றும், உயிருக்குப் போராடிய அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தில் அவர், சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி நக்கீரன்

ஐயோ உறவுகளே தமிழ் மக்களின் மரணங்களை தவிர்ப்பதற்கே போராடுகிறோம்...தயவுசெய்து போராடுங்கள் ஆனால் உயிரை மாய்க்காதீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளே, தமிழன் வாழ வேண்டும், அதற்காய் நீங்கள் போராட வேண்டும். ஈழத்தில் வீழும் தலைகளும் தமிழகத்தில் பற்றியெறியும் தமிழீழ உணர்வுமே தமிழீழத்தை கொண்டு வரும் மாறாக ஈழத்திலும் தமிழகத்திலும் தமிழ் செத்துக்கொண்டிருப்பதால் எதுகுமே ஆகப்போவதில்லை.

தயவு கூர்ந்து கவனியுங்கள் நாங்கள் உங்களிடமிருந்து எமக்கான ஆதரவை எதிர்பார்க்கின்றோம் அதற்காய் மரணங்களை அல்ல!

ஈழத்து மக்களின் மரணங்களுக்குள்.ஒரு முத்துகுமரன் இறந்ததற்காய் நாம் அதிகம் வருத்தப்பட்டோம்.

தமிழகத் தலைவர்களே,

நீங்கள் உங்கள் தேசத்து மக்களுக்கு எங்கள் தொப்புள் கொடி உறவுகளை இவ்வாறான ஆபாயகரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வேண்டிக்கொள்ளுங்கள். சாவு எமக்கானதல்ல உறவுகளே சாவை வெல்லவே ஈழத்தமிழினம் இத்தனை தியாகங்களை கொடுத்து இன்னும் உயிர் பலிகளையும் குருதியை இறைக்கின்றோம்.

மரணங்கள் என்பது மறுக்க முடியாத சோகம் அந்த சோகத்தை உங்கள் குடும்பங்களுக்கு, உங்கள் உறவினர்களுக்கு நாம் கொடுக்க விரும்பவில்லை. நாம் தினமும் மரணத்தின் வலியை, அதை வேதனையை அறிபவர்கள் எனவே சிந்தியுங்கள். இவ்வாறான சிந்தனைகளை கைவிடுங்கள்.!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ என்ன கொடுமையப்பா... !

சகோதரர்களே நிறுத்துங்கள் ....உங்கள் உயிர்களுக்காக இரத்தக்கண்ணீர் வடிக்கின்றோம். முத்துக்குமாரனுக்காக இன்னும் அழுது முடியமுதல் நீங்களுமா...! தமிழகத்தலைவர்களே அறைகூவல் விடுங்கள் தற்கொலைகளை நிறுத்தச் சொல்லி... தமிழன் வாழ்வதற்கு நாங்கள் போராட ஏன் உறவுகளே உயிரை மாய்க்கிறீர்கள்.

தயவு செய்து நிறுத்துங்கள் உறவுகளே.....

இளங்கவி

ரவி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

திண்டுக்கல் அருகிலும் ஒருவர் தீக்குளித்து படுகாயம் என்று செய்தியில் சொன்னார்கள்.

அன்பான தமிழக உறவுகளே.. ஈழத்தமிழருக்காக தீக்குளித்தது போதும். தொடர்சியாக சாத்வீக முறையில்.. உயிரை மாய்க்காத வகையில். இந்திய நடுவன் அரசிடம் நீதி கேட்டுப் போராடுகள். அதுவே இன்றைய சூழலில் அவசியம். ஒட்டு மொத்த தமிழகமும்.. கிளர்ந்தெழுது போராடின்.. நிச்சயம்.. மாநில மற்றும் நடுவன் அரசுகள்.. தீர்கமான ஈழத்தமிழருக்கு சாதகமான முடிவுகளை எடுக்க நிர்பந்திக்கப்படும்..!

சிந்தியுங்கள்.. தலைவர்களே தமிழக மக்களை சரியான பாதையில் வழி நடத்துங்கள்..! :(

ரவி அவர்களுக்கு கண்ணீரஞ்சலிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

இவை அநாவசியமானவை. ஏற்கனவே வீரத்தமிழன் முத்துக்குமாரை இழந்திருக்கிறோம்.இனியும் இழக்க முடியாது. தமிழன் சாவதால் சந்தோசமடையப்போவது இந்திய ஆளும் வர்க்கமும், காங்கிரஸ் எனும் விபச்சாரிகளின் கட்சியும், திமிர்ப் பிடித்த பார்ப்பணர்களும் தான். ஆகவே இந்த இழப்புகள் எமக்கு வேண்டாம். தயவுசெய்து நிறுத்துங்கள்.

அப்படி அந்த உணர்வுகளை கொச்சைப்படுத்தாதீர்கள். உயிரிழப்புகளை எங்களால் தாங்கமுடியாது.வேதனைகளை உள்வாங்கும் பலம் குறைந்துவிட்டது.போராடுவோம் வாழ்வதற்காக விடியலுக்காக.... பாவங்களையும் சாபங்களையும் நாம் சேர்க்கவேண்டாம்

உணர்வுகள் மதிக்கப் படவேண்டியவை. மாற்றுக் கருத்து இல்லை.... இப்படி ஒன்றின் பின் ஒன்றாக தீக்குளி;த்து சாவதில் என்ன பலன்....உயிருக்கு விலை இல்லை. அப்படியான ஓர் உயிரை எம் நாட்டு மக்களுக்காக கொடுத்து போற்றப்பட வேண்டியது...... 2 நாளைக்கு இவரின் செய்தி ஊடகங்களில் வரும். இது தான் யாம் பெற்ற பலன்......சிந்தித்து செயற்ப்பட்டால் பல வழிகள் உண்டு.........

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளாமல் போராடுங்கள் தமிழக உறவுகளே போதும்

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிப்பட்டி ரவிக்கு என் அஞ்சலி ..........மரணம் பிரச்சினைக்கு முடிவல்ல ........உங்களை மதிக்கிறோம் . தொடர்ந்து போராடுங்கள் வேறு வழிகளில் . நன்றி.

தமிழக உறவுகளே !!!!!

உயிர் வாழ்வதற்கே நாம்போராடுகிறோம் சாவதற்கல்ல. உங்கள்போராட்டங்கள் ஈழத்திலிருக்கும் எம் உறவுகளுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. நீங்களும் உங்கள் உயிர்களைத்துறந்துவிட்டால் எமக்காக யார் குரல்கொடுப்பார்??? குருதிதோய்ந்த உடலோடு ஈழத்தில் வாழும் எம்மக்கள் நீங்கள் தீக்குளித்துமாண்ட செய்திகேட்டால் இதயம்வெடித்தல்லோ இறந்துவிடுவர்.

எமக்காக உயிர்தியாகம்செய்த மாவீரன்முத்துக்குமாரையெண்ண

உறவுகளே, தமிழன் வாழ வேண்டும், அதற்காய் நீங்கள் போராட வேண்டும். ஈழத்தில் வீழும் தலைகளும் தமிழகத்தில் பற்றியெறியும் தமிழீழ உணர்வுமே தமிழீழத்தை கொண்டு வரும் மாறாக ஈழத்திலும் தமிழகத்திலும் தமிழ் செத்துக்கொண்டிருப்பதால் எதுகுமே ஆகப்போவதில்லை.

தயவு கூர்ந்து கவனியுங்கள் நாங்கள் உங்களிடமிருந்து எமக்கான ஆதரவை எதிர்பார்க்கின்றோம் அதற்காய் மரணங்களை அல்ல!

ஈழத்து மக்களின் மரணங்களுக்குள்.ஒரு முத்துகுமரன் இறந்ததற்காய் நாம் அதிகம் வருத்தப்பட்டோம்.

தமிழகத் தலைவர்களே,

நீங்கள் உங்கள் தேசத்து மக்களுக்கு எங்கள் தொப்புள் கொடி உறவுகளை இவ்வாறான ஆபாயகரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என வேண்டிக்கொள்ளுங்கள். சாவு எமக்கானதல்ல உறவுகளே சாவை வெல்லவே ஈழத்தமிழினம் இத்தனை தியாகங்களை கொடுத்து இன்னும் உயிர் பலிகளையும் குருதியை இறைக்கின்றோம்.

மரணங்கள் என்பது மறுக்க முடியாத சோகம் அந்த சோகத்தை உங்கள் குடும்பங்களுக்கு, உங்கள் உறவினர்களுக்கு நாம் கொடுக்க விரும்பவில்லை. நாம் தினமும் மரணத்தின் வலியை, அதை வேதனையை அறிபவர்கள் எனவே சிந்தியுங்கள். இவ்வாறான சிந்தனைகளை கைவிடுங்கள்.!

  • கருத்துக்கள உறவுகள்

ரவி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். சிந்தித்து செயல் படுங்கள் தமிழ் நாட்டு உறவுகளே. இப்படி உங்கள் உயிரை மாய்ப்பதால் என்ன பலன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிமேலும் உயிர்கள் மாய்க்கப்படக்கூடாது... நமக்கு ஆதரவு தான் தேவை....

தமிழனுக்கு கடும் அரசியல் எல்லைகளும் ஒரு தடையில்லை, அதனால் தமிழன் எங்கிருந்தாலும் இழப்பு ஒன்றுதான். எனவே உறவுகளே போராட்டமே இலக்கை அடையவைக்கும்.

தியாகி ரவிக்கு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றன்பின் ஒன்றாக தமிழின உணர்வாளர்கள் தங்க்ள் உயிர்களை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக உறவுகளே.. சற்று சிந்தியுங்கள். உங்கள் தியாகங்கள் போற்றுதலுக்கு உரியவை. ஆனால் நீங்கள் உங்களையே அழித்துக் கொள்வது விடுதலைத் தீயைத் தூண்டி விடுமாயினும் எமது ஆதரவுக் கரங்கள் தம் கையைத் தாமே அறுத்துக் கொள்ளும் நிலையல்லவா இது?!

சகோதரனே ரவி.. ஐந்து குழந்தைகளின் தகப்பனாகிய நீ, இன்று எல்லோரையும் நட்டாற்றில் விட்டுச் சென்றுவிட்டாயே.. உன் மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த நீ விடுதலைப் பற்று மிக்கவன் என்பதன் சான்று அன்றோ? தமிழகத்தைப் பூரண எழுச்சிக்கு உட்படுத்த இதுவே கடைசி ஆயுதம் என்று நினைத்து விட்டாயா?

போய் வா சகோதரனே..! உலகத்தமிழினம் விடுதலைத் தீயில் கனன்று சிறு குழந்தையாக ஈழத்தில் பிறப்பெடுக்கும்போது உன்னை அங்கு தமிழ்த்தாய் வரவேற்கக் காத்திருப்பாள்..!

கண்ணீர் வணக்கங்கள்..!

Young father immolates himself, Tamil Nadu tense

[TamilNet, Saturday, 31 January 2009, 07:23 GMT]

A 31-year-old father of five children, set himself ablaze in Madurai, Tamil Nadu Friday night, demanding justice and peace for Eezham Tamils. The man, Ravi, has succumbed to his injuries at the hospital Saturday evening, sending shock waves across the state, according to media sources in Madurai.

The young father, from Pa'l'lippaddu (Pallipattu) village near Madurai, was battling for his life for hours till his death at the Madurai Government General Hospital after suffering serious burn injuries.

His wife Chitra, who spoke to media, attributed her husband's self-immolation as a means to draw attention to the genocide of Eazham Tamils. One of their child is named Pirapaharan.

Edited by Danguvaar

உறவுகளே உங்கள் மரணங்கள் எம்மை மேலும் வேதனைப்படுத்துகின்றது. நிறுத்துங்கள். நீங்கள் உயிருடன் இருந்து செய்யக்கூடியதைச் செய்யுங்கள். உங்கள் ஆதரவு எமக்கு ஒரு தார்மீக பலத்தை அளிக்கும். உங்கள் ஆதரவுக் குரல்கள் எம்மை சிலிhக்க வைக்கும். ஆனால் உங்கள் இழப்புக்கள் எம்மை வருத்தவே செய்யும். சகோதரனே உங்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள். உங்களை இழந்துவாடும் உங்கள் குடும்பத்திற்கு எனது அநுதாபங்கள்.

ஜானா

ஈழப்பிரச்சனை முடிவுக்கு வரக்கோரி-ரவி என்பவர் இன்று காலை தீக்குளித்து மரணம்‏

ஈழப்பிரச்சனை முடிவுக்கு வரக்கோரி நிலக்கோட்டை அருகே ரவி என்பவர் இன்று காலை தீக்குளித்து மரணம் அடைந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு வயது. 40. ஈழப்பிரச்சனை முடிவுக்கு வரக்கோரி ரவி நேற்றிரவு தீக்குளித்தார் என்றும், உயிருக்குப் போராடிய அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தில் அவர், சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்ததாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilseythi.com/tamilnaadu/ravi-2009-01-31.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.