Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாலிபர் தீக்குளிப்பு அரசியலாக்க வேண்டாம்: கருணாநிதி வேண்டுகோள்

Featured Replies

இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த ஒரு இளைஞரின் தியாகச் செயலை அரசியலாக்கி மலிவான விளம்பரத்துக்கு வழிவகுக்க வேண்டாம் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை போரை நிறுத்த வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு முத்துக்குமார் என்ற இளைஞர் நேற்றுமுன்தினம் தீக்குளித்து இறந்தார். அவரது உடல் கொளத்தூர் வியாபாரிகள் சங்கம் அருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ராமதாஸ், வைகோ, சரத்குமார், திருமாவளவன், தா. பாண்டியன், நல்லகண்ணு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, சுதீஷ், நெடுமாறன், சத்யராஜ், வடிவேலு, வெள்ளையன் உள்பட ஏராளமானவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

அப் பகுதியில் கடைகள் மூடப்பட்டன. ராஜபக்சே, தங்கபாலு உருவபொம்மைகள் மற்றும் காங்கிரஸ் கொடியை சிலர் எரித்தனர். புரசைவாக்கம் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு அஞ்சலி செலுத்த வந்தபோது சிலர் ரகளை செய்தனர். கல்வீச்சும் நடந்தது. முத்துக்குமார் உடல் இன்று மூலகொத்தளம் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி இன்று ஒரு அறிக்கை விடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இலங்கைத் தமிழர் பிரச்னையில் அந்த தீவில் நடைபெறும் தமிழினப் படுகொலையைக் கண்டித்தும் அக்கொடுமை தொடராமல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் முத்துக்குமார் என்பவர் சென்னையில் தீக்குளித்து இறந்துள்ளார். இந் நிகழ்ச்சி மருத்துவமனையில் இருக்கும் என் மனதை எந்த அளவுக்கு பாதித்திருக்கும் என்பதை என்னை உணர்ந்தவர்கள் நன்றாக அறிவார்கள்.

இத்தகைய தற்கொலைச் செய்திகளை ஊக்கப்படுத்தக் கூடாது என்ற திமுகவின் கருத்தை பொதுச் செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி செய்தி வெளியிட்டிருக்கிறார். திமுக பொருளாளரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில் உரையாற்றும்போது தீக்குளித்து மாண்ட அந்த இளைஞரின் பிரிவுக்காக வருந்தி, முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து அவருடைய குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

ஆனால் மறைந்த முத்துக்குமாருடைய குடும்பத்தார் அந்த நிவாரண நிதியை வாங்க மறுத்து விட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. அது மாத்திரமல்லாமல் மறைந்த அந்த இளைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மலர் வளையத்தோடு சென்ற வடசென்னை மாவட்ட திமுக செயலாளரான சட்டமன்ற உறுப்பினர் பாபுவை கற்கள் வீசி தாக்கியுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த ஒரு இளைஞரின் தியாகச் செயலை இவ்வாறு அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டுக்கே விரோதமானது. இலங்கைத் தமிழர்களின் பிரச்னையை இது மிக மலிவான விளம்பரத்துக்கு உள்ளாக்கி விடக்கூடும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

http://dinakaran.com/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் பிரச்னையில் அந்த தீவில் நடைபெறும் தமிழினப் படுகொலையைக் கண்டித்தும் அக்கொடுமை தொடராமல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் முத்துக்குமார் என்பவர் சென்னையில் தீக்குளித்து இறந்துள்ளார். இந் நிகழ்ச்சி மருத்துவமனையில் இருக்கும் என் மனதை எந்த அளவுக்கு பாதித்திருக்கும் என்பதை என்னை உணர்ந்தவர்கள் நன்றாக அறிவார்கள்.

http://dinakaran.com/

நல்லா நடிக்கிறார் கிழவன் :(

  • கருத்துக்கள உறவுகள்

இச்செயலை எப்படி அரசியல் ஆக்கலாம் என கலைஞர் யோசிக்கிறார் போல? . காசால் வாங்கலாம் என நினைத்தார் . அதுவும் பிழைத்து விட்டது.

மக்களின் உணார்ச்சியை சரசியலாக்க முற்பட்டது யார்?

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே நாங்களும் காலம்காலமாய் சொல்லுறம்.எங்கடை பிரச்சனையை அரசியல் ஆக்க வேண்டாம் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதுகு எலும்பு வலிக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவர் மனம் புண்படும்படி பேச வேண்டாம்..! மருத்துவர்களே அவருக்கு சிகிச்சை அளிக்க அவரிடம் இல்லாத ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்..!! :unsure:

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழின தலைவன் அல்ல அவன். தமிழனை வைத்து பிழைக்க தெரிந்தவன். துரோகி.

முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதுகு எலும்பு வலிக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவர் மனம் புண்படும்படி பேச வேண்டாம்..! மருத்துவர்களே அவருக்கு சிகிச்சை அளிக்க அவரிடம் இல்லாத ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்..!! :unsure:

அது அவரின் மனசாட்சியாக இருக்ககூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின தலைவன் அல்ல அவன். தமிழனை வைத்து பிழைக்க தெரிந்தவன். துரோகி.

அது அவரின் மனசாட்சியாக இருக்ககூடும்.

பணம் வேண்டமறுத்ததோடு

கல்லெறியும் அதைத்தான் சொல்கின்றன.

முத்துக்குமாரு மட்டுமல்ல அவரது குடும்பமே எம்மீது காட்டும் அன்புக்கு நாம் என்ன கைமாறுசெய்யப்போகின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தான் அதை அரசியல் ஆக்குகிறீர்கள் கலைஞர் அவர்களே!

  • கருத்துக்கள உறவுகள்

வாலிபர் தீக்குளிப்பு அரசியலாக்க வேண்டாம்: கருணாநிதி வேண்டுகோள்

அடுத்த தீக்குளிப்பை கருணா நிதி . தீக்குளிக்க வைப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த தீக்குளிப்பை கருணா நிதி . தீக்குளிக்க வைப்போம்

அதற்கு அவசியம் இல்லை, மனுசன் கட்டையில போற வயசில தானே இருக்கிது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜோர்ஜ் புஷ் இற்கே ஒருவர் சப்பாத்தால் எறிஞ்சவர். நல்ல காலம் கலைஞர் போய் கட்டிலில் படுத்துக்கொண்டார். நினைச்சுப்பாருங்கோ அவர் போயிருந்தால்....

உங்கள் சாக்கடை அரசியலை இவரது அாப்பணிப்புடன் ஒப்பிட்டு பேசுவதே தவறு, அவரது ஈகத்தை அவமதிக்கிறமாதிரி இருக்கும்.

அதை அரசியலாக்க நினைப்பது உங்களைப்போன்ற அரசியல் என்னும் சாக்கடைக்குள் இருப்பவாகள்தான்.

தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வக்கில்லாத அரசியல்தானே உங்கள் அரசியல்.

தமிழர்களுக்கு ஒரே ஒரு தலைவன்தான், அவாதான் எம் தேசியத்தலைவர், அவருக்கு முன் நீங்களெல்லாம் எந்தமட்டில்...................

  • கருத்துக்கள உறவுகள்

ஜோர்ஜ் புஷ் இற்கே ஒருவர் சப்பாத்தால் எறிஞ்சவர். நல்ல காலம் கலைஞர் போய் கட்டிலில் படுத்துக்கொண்டார். நினைச்சுப்பாருங்கோ அவர் போயிருந்தால்....

ஒருவர்தான் புஷ்க்கு சப்பால் எறிஞ்சார். ஆனால்..........நிச்சயம் ??????????? நிறைய சப்பாத்துகள் வந்து விழும்

கலைஞர் அவர்கள் யாராவது கொட்டாவி விடுட்டாலே அதனையும் அரசியலாக்கிவருபவர். கலைஞர்போன்ற ஈனர்கள் வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் போன்ற தியாகிகளின் பெயரைக்கூட உச்சரிக்கத் தகுதியற்றவர்கள். இவர்களின் முகத்திரை கிழியும் காலம் வெகு தொலைவில் இல்லை! திமுக வடசென்னை செயலருக்கு ஏற்பட்ட கதியே ஆரம்பம்!!

தீக்குளிப்பை அரசியலாக்குவதா?!

கலைஞரே! உங்கள் சாக்கடை அரசியல் தானே

ஒரு தமிழன் தமிழனுக்காக தமிழர் தேசத்திலேயே தீக்குளிக்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது!!

கலைஞரே! நீங்கள் மானமுள்ள தமிழனாக இருந்தால், இதற்கு மேலும் நாற்காலி அரசியல் நடத்துவதை விட,

பிச்சை எடுத்து பிழைப்பது உங்கள் மானத்தை காப்பாற்ற உதவும்!!!

Edited by vettri-vel

தனக்கு சாதகமாக இல்லை எண்டால் கூட பொறுத்து இருந்து இருப்பார்... நிலமை தனக்கு எதிராக இருப்பதால் தான் இந்த முதலைக்கண்ணீர்....

வீரத்தமிழன் முத்துகுமார் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த திமுக காறர் மீது கல்லெறி விழுந்தது ஒரு காரணம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனது வம்சத்தை பல துணைகள் மூலம் ஆலமரம் போல் வளர்ச்சியடையசெய்து அதன் விழுதுகளை ஒவ்வொரு அரசியல் துறைகளுக்கும் பிரித்துக்கொடுத்து அரசியல் சாணக்கியம் செய்பவர்தான் இந்தியாவின் பழம்பெரும் அரசியல்வாதி மு.க.கருணாநிதி.

அழகிரி

முரசொலி

கனிமொழி

மாறன்குடும்ப தொடர்கள்

இவர்கள் ஒவ்வொருவரும் என்னனென்ன கருத்துக்களை அவ்வப்போது வெளியிடுகிறார்கள் என்பதை கவனித்தால் உங்களுக்கு சகலதும் சுலபமாக விளங்கிக்கொள்ளமுடியும்.

தனது வம்சத்தை பல துணைகள் மூலம் ஆலமரம் போல் வளர்ச்சியடையசெய்து அதன் விழுதுகளை ஒவ்வொரு அரசியல் துறைகளுக்கும் பிரித்துக்கொடுத்து அரசியல் சாணக்கியம் செய்பவர்தான் இந்தியாவின் பழம்பெரும் அரசியல்வாதி மு.க.கருணாநிதி.

அழகிரி

முரசொலி

கனிமொழி

மாறன்குடும்ப தொடர்கள்

அவரது கூட்டணி கூட நேரு குடும்ப சொத்துதானே....!!

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது எப்படி முடியும் ,தமிழ் ஈனத் தலைவா

உங்களுக்கு தானே அது கை வந்த கலை.

ஒரு கவிதை எழுதவாவது முடியாமற் போயிற்றா

முத்துகுமாரன் ; மகன் தந்தைக்காற்றும்...........எனும் குறள் பொருள் பட மரணித்தான் ஆனால்

முத்துவேலர் மகனோ குறளோவியம் எழுதியதோடு சரி

ஐயா கிழவரே,

தமிழர் வரலாற்றில் நீரும் உமது சந்ததியும் கரும்புள்ளியாக இடம்பெற‌ப் போகின்றீர்.

நல்ல முடிவெடும்.

இன்னும் காலம் கடக்கவில்லை.

அட முதுகெலுமபில்லாதவருக்கும் முதுகுவலி வருமா? ஐயா பெரியவரே! இத்தனை காலம் எமது கண்ணீரை துன்பங்களை அரசியலாக்கியது யார்? கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என நினைக்கிறேன். வரும் காலம் தமிழ் வரலாறு சொல்லும் ஒரு ஓநாயின் கதையை. இனியும் உலகத் தமிழா தலைவன் நான் தான் என்ற எண்ணமிருந்தால் வைத்தியசாலை கட்டிலிலேயே விட்டு விட்டு வாருங்கள்.

ஜானா

Edited by vettri-vel

ம்ம்...இது இந்த கரு நாய் நரி க்கெதிரான தீ ஆதலால் இந்த நாய் குரைத்துத்தானாகனும்

இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த இளைஞரின் தியாகச் செயலை அரசியலாக்குவது பண்பாட்டுக்கு விரோதமானது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை தமிழர் பிரச்னையில் அந்த தீவில் நடைபெறும் தமிழினப் படுகொலையைக் கண்டித்தும் அக்கொடுமை தொடராமல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், சென்னையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் முத்துக்குமார் என்பவர் தீக்குளித்த மாண்ட நிகழ்ச்சி, மருத்துவமனையில் இருக்கும் என் மனதை எந்த அளவுக்கு பாதித்திருக்கும் என்பதை என்னை உணர்ந்தவர்கள் நன்றாக அறிவார்கள்.

நமது திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், இத்தகைய தற்கொலை செய்திகளை ஊக்கப்படுத்தக் கூடாது என்று திமுகவின் கருத்தை வலியுறுத்தி செய்தி வெளியிட்டிருக்கிறார். திமுக பொருளாளரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலின் சட்டப் பேரவையில் உரையாற்றும்போது தீக்குளித்து மாண்ட அந்த இளைஞரின் பிரிவுக்காக வருந்தி, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து அவருடைய குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

ஆனால், இன்று (நேற்று) வந்துள்ள செய்திகளைப் பற்றி சிந்திக்கும்போது மறைந்த முத்துக்குமாருடைய குடும்பத்தார் அந்த நிவாரண நிதியை வாங்க மறுத்து விட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. அது மாத்திரமல்லாமல் மறைந்த அந்த இளைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மலர் வளையத்தோடு அந்த இடத்திற்குச் சென்ற வடசென்னை மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான வி.எஸ்.பாபு மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்டிருக்கிறார்.

இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த ஒரு இளைஞரின் தியாகச் செயலை இவ்வாறு அரசியலாக்குவது காலம்காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது என்பதையும் இலங்கைத் தமிழர்களின் பிரச்னையை மிக மலிவான விளம்பரத்திற்கு உள்ளாக்கி விடக்கூடும் என்பதையும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

http://www.tamilseythi.com/tamilnaadu/karu...2009-02-01.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.