Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க முற்பட்ட சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: பெருமளவிலான படையினர் பலி; 2 டாங்கிகள் அழிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக 58ம் ஆண்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்?

புலிகள் தாக்கினாலோ தாக்காவிட்டாலோ, சிங்களவரின் கீழ்வாழும் தமிழர்கள்மீதான தொடர்ந்துகொண்டேதானிருக்கும

  • Replies 84
  • Views 13.3k
  • Created
  • Last Reply

உது.... தேப்பனூட மல்லுகட்டிவிட்டு, பழிக்கு ஆத்தட பாவாடையை உருவினமாதிரிதானுங்கோ...... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அதிற்சி மருந்துகள் நிறையவே காத்திருக்கின்றன.

நாம் எங்களது கடமைகளை இரட்டிப்பாக்குவோம்.

உலகெங்கும் தமிழர்களின் கைகள் ஒன்று சேர்த்து உருவாகும் ஈழத்தின் பலத்தை நீயும் காட்டு...

இதுதான் தற்போது எம் நெஞ்சிலும் நினைவிலும் இருக்க வேண்டும்.

நல்லா மூசி மூசி எல்லாரும் இப்ப எழுதுவியள், பிறகு நாளைக்கு அல்லது நளை மறுதினம் ஒரு செய்தியும் வராவிட்டால் அனைவரும் சோரந்து போவியள்.

விடுதலை என்பது வெறும் நிலங்களை பிடிப்பதால் மட்டும் வந்து விடப்போவதில்லை.

நாம் அனைவரும் தற்போது பயணிக்கும் பாதை மிகவும் சரியானதே. ஆனால் இராணுவ வெற்றிகளை கண்டதும் கொண்டாடுவதும் பின்னர் பின்னடைவுகள் வரும் போது சோர்ந்து போவதும் நமது விடுதலைப்பயணத்தில் நாம் செலுத்தும் பங்கினை நிச்சயமாக பாதிக்கும். எனவே பெரும் இராணுவ வெற்றிகளை மட்டும் கனவு காணாது இந்த போராட்ட வெற்றி;கான நமது அனைத்து பங்களிப்பையும் மனமுவந்து செய்வோம்.! செய்திகள் வரும் போது அதை செய்திகளாக பார்த்து விட்டு அத்துடன் நின்று விடுவோம். வெறுமனே கற்பனை குதிpரையை தட்டி விட்டு அதன் போக்கில் நம்மை லயிக்க வைத்து விட்டு பின்னர் வரும் ஏமாற்றங்களை தாங்காது மனம் புழுங்குவது உடல் நலத்திற்கும் உகந்தது அல்ல! விடுதலை நிச்சயம் ஆனால் அதன் பாதை மிக மோசமான கரடு முரடானது! பயணிக்க அனைவரும் ஆயத்தமாகுங்கள்!

புனைகதைகளை. புனைகதைகளால்தான் முறியடிக்க முடியும், புரிந்து கொண்டால் சரி.
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதே நடக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான ஒரே தீர்வு புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளிலேயே சிறிய மாதிரித்தமிழீத்தை அமைத்து தங்கள் போராட்டங்களை தங்கள் வீட்டுக் கொல்லை வரை விஸ்தரிப்பதேயாகும்!

நாங்கள் அதை நன்றே செய்து எமது சொந்த சொந்த கொடிகளையும் பறக்கவிட்டு கன காலம். நீங்கள் சிங்க குகைக்குள் உங்களுக்கு ஒரு கொல்லைபகுதியை கேட்டு பாருங்கள். அந்த காலத்தில் தெரியும் இந்த மக்கள் நலன்காப்பு. தாங்கள் பதில் எழுதிய கருத்துக்கான கருத்துக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? 58ம் ஆண்டு புலிகள் ஆமியை அடிக்கவில்லை ஆனாலும் அவர்கள் தமிழரை அடித்தார்கள்???

இதற்காக மக்கள் மீது நடத்தப்படப் போகும் பதிலடித் தாக்குதலை எதிர்கொள்ள முற்பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்!

அந்த தாக்கதலுக்கு முகம் கொடுக்க காத்திருக்கும் மக்கள்தான் அதை நிறைவேற்ற வேண்டும். அதற்கான காலபிள்ளையை தான் இத்தனை வலிகளுடன் ஈழதாய் இப்போது பிரவசித்துகொண்டிருக்கிறாள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா மூசி மூசி எல்லாரும் இப்ப எழுதுவியள், பிறகு நாளைக்கு அல்லது நளை மறுதினம் ஒரு செய்தியும் வராவிட்டால் அனைவரும் சோரந்து போவியள்.

விடுதலை என்பது வெறும் நிலங்களை பிடிப்பதால் மட்டும் வந்து விடப்போவதில்லை.

நாம் அனைவரும் தற்போது பயணிக்கும் பாதை மிகவும் சரியானதே. ஆனால் இராணுவ வெற்றிகளை கண்டதும் கொண்டாடுவதும் பின்னர் பின்னடைவுகள் வரும் போது சோர்ந்து போவதும் நமது விடுதலைப்பயணத்தில் நாம் செலுத்தும் பங்கினை நிச்சயமாக பாதிக்கும். எனவே பெரும் இராணுவ வெற்றிகளை மட்டும் கனவு காணாது இந்த போராட்ட வெற்றி;கான நமது அனைத்து பங்களிப்பையும் மனமுவந்து செய்வோம்.! செய்திகள் வரும் போது அதை செய்திகளாக பார்த்து விட்டு அத்துடன் நின்று விடுவோம். வெறுமனே கற்பனை குதிpரையை தட்டி விட்டு அதன் போக்கில் நம்மை லயிக்க வைத்து விட்டு பின்னர் வரும் ஏமாற்றங்களை தாங்காது மனம் புழுங்குவது உடல் நலத்திற்கும் உகந்தது அல்ல! விடுதலை நிச்சயம் ஆனால் அதன் பாதை மிக மோசமான கரடு முரடானது! பயணிக்க அனைவரும் ஆயத்தமாகுங்கள்!

பொன்ட்007 அவர்களின் கூற்று, கூர்ந்து கவனிக்க வேண்டியதாகும். நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒரு தேசியவிடுதலைப் போராட்டமென்பதை நாம் ஏனோ அடிக்கடி மறந்துவிடுகின்றோம். நமது கடமையை, நமது பங்களிப்பை, நமது எழுச்சியை நாம் சரியாகக் காட்டுவோமாயின் நாம் வீதிகளில் இறங்கி வெடிகொழுத்தியே கொண்டாடும் நாளை எம்வீரர்கள் வென்று வருவார்கள். இது நடக்கும். நடக்க வேண்டும். மாவீரன் முத்துக்குமாரன் தன்னை தீயிட்டு தமிழகத்தையே புடமிட முடிந்ததென்றால், தமிழுறவே தீயிட வேண்டாம். தீயாகவே நாம் மாறி எம் தேசவிடுதலைக்காக அனைத்தையும் செய்ய உறுதி கொள்வோமா?

அன்பனின் கருத்தை நான் 100 வீதம் ஆமோதிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு கல்மடு ???

இன்னொரு கல்மடு ???

150 படையினர் பலி 350 பேர் காயம் டாங்கிகள் உட்பட்ட ஊர்திகள் அழிப்புத் தொடர்பான செய்திகளை விடுதலைப் புலிகள் தெரிவித்தாக புதினம் எழுதியிருக்கிறதே!

அது போதாதென்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் அவர்களே நேரடியாக தமிழ்நெட்டிடம் இந்தத் தகவல்களைத் தந்திருக்கிறராரே! இதற்குப் பிறகும் ஏன் சந்தேகம்.

ஆனால் இப்பொழுது நமக்குத் தேவையானது செய்யவேண்டியது மக்களின் அவலங்களை வெளியே கொண்டு செல்ல வேண்டியது மட்டும்தான்.

Edited by மின்னல்

இன்னொரு கல்மடு ???

சிறப்புச் செய்தி

புதுக்குடியிருப்பை வல்வளைப்பு செய்ய தயாராக இருந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் ஊடறுத்து தாக்குதல் - 150 படையினர் பலி - 3 டாங்கிகள் அழிப்பு

புதுக்குடியிருப்பு நகரை வல்வளைப்புச் செய்வதற்கு தயாராக இருந்த படையினர் மீது இன்று காலை முதல் விடுதலைப் புலிகள் மேற்கொண்டுவரும் ஊடறுப்புத் தாக்குதலில் சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

150ற்கும் அதிகமான படையினர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதுடன் 350பேர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் மூன்று முதன்மைப் போர் டாங்கிள் மற்றும் துருப்புக்காவி உட்பட பெருளவு படையினரின் ஊர்திகள் விடுதலைப் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

இந்த ஊடறுப்புத் தாக்குதல் தொடர்பாக விடுதலைப்புலிகளால் ஊடகங்களிற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாரான சூழ்நிலையில் இருந்தனர். இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர்.

இதில் 150-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகளால்

டாங்கிகள் - 02

துருப்புக்காவி - 01

இராணுவ ஊர்திகள் (ட்றக்) - 02

இராணுவ பேருந்து - 01

இராணுவ உழுபொறிகள் - 02 ஆகியன இதுவரை விடுதலைப் புலிகளால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

வாகனங்களுக்குள் படையினர் இருந்த போதே விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இருந்த பெருமளவிலான படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் இந்த தொடர் தாக்குதலில் பெருமளவிலான படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வீராவேசமான தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்ட வண்ணம் விடுதலைப் புலிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர் .

http://www.votradio.com/index.php

புதுக்குடியிருப்பை ஆக்கிரமிக்க முயற்சித்த இராணுவத்தினருக்கு எதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஊடறுப்புத் தாக்குதல் தொடர்;வதாகவும், டாங்கிகள், கவச வாகனங்கள் உழவூர்திகள் உட்பட 15 ற்கும் மேலான இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டது எனவும், ஏராளமான இராணுவத்தினர் கொல்லப்பட்டு, ஏராளமான ஆயுதங்களும் இராணுவத் தளவாளங்களும் கைப்பற்றப்பட்டதாகவும், தாக்குதல் தொடர்ந்து நடை பெறுவதாகவும் புலிகளின் குரலில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

இன்னொரு கல்மடுதான். உரிமைகோரப்படும் கல்மடு.

புதுக்குடியிருப்பில் சண்டை தொடர்கிறது. நூற்றுக்கணக்கில் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவு படையப்பொருட்கள் புலிகளால் கைப்பற்றபட்டுள்ளன.

3-02-2009 புலிகளின் குரல் செய்தி

http://www.votradio.com/index.php

புதுக்குடியிருப்பில் சண்டை தொடர்கிறது. நூற்றுக்கணக்கில் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவு படையப்பொருட்கள் புலிகளால் கைப்பற்றபட்டுள்ளன.

3-02-2009 புலிகளின் குரல் செய்தி

http://www.votradio.com/index.php

நானும் கேட்டேன். நாங்கள் எங்கள் பங்களிப்பை தீவிரமாக செய்யவேண்டிய தருணமிது!

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பாபுலவு கரும்புலித்தாக்குதல்....... இன்னும் வெற்றிசெய்திகள் வெளிவரும்......

  • கருத்துக்கள உறவுகள்

கல்மடுக்குளம் அணை தகர்ப்பின்போது புலிக்ள் அதை உரிமை கோரவுமில்லை, மறுக்கவுமில்லை. இதனால் பரப்பப்பட்ட வதந்திகள் எப்படியானவை என்பதும், அவை மக்களை எவ்வளவு தூரத்திற்குக் குழப்பியிருந்தன என்பது நாம் அறியாதது அல்ல. ஆகவேதான் புதுக்குடியிருப்பு முன்னகர்வுக்கெதிராக புலிகள் நடத்தியதாகச் சொல்லப்படும் தாக்குதலும் புலிகளால் உரிமை கோரப்பட்டாலும் பின்னர் அவை பற்றிய மேலதிக தகவல்களோ அல்லது கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்களோ ஆயுதங்களோ இதுவரையிலும் மக்கள் பார்வைக்கு வரவில்லை.

30 பேரை மட்டுமே கொண்ட புலிகளின் அணி ஒன்றினால் ராணுவத்தில் 150 பேரைக் கொல்லவும் 350 பேரைக் காயப்படுத்தவும், 15 வாகனங்களை அழிக்கவும் முடிந்ததென்பது சிந்திக்க வைக்கிறது.ஒருமுறை சொல்லிய பின் புலிகள் விட்டு விட்டார்கள், ஆனால் சில ஊடகங்கள் தான் தொடர்ந்தும் போரை நடத்திக்கொண்டிருப்பதாக எனக்குப் படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப கனபேருக்கு புலிகளைவிட சிறிலங்கா ராணுவத்திலும் ஓட்டுக்குழுக்களிலையும் தான் நம்பிக்கை இருக்கு,என்ன செய்ய :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை, ஏன் கனபேர் எண்டு எல்லாரையும் இழுக்கிறியள்? நேர நான் எண்டு சொல்ல வேண்டியதுதானே? அடுத்தது உந்தத் தாக்குதல் செய்தி தமிழ் ஊடகங்களில மட்டுமே வந்தது, நீங்கள் சொல்லுற மாதிரி ஒட்டுக்குழுவின்ர தளத்திலோ அல்லது ராணுவத் தளத்திலோ வரவில்லை கண்டியளோ?! கல்மடு பற்றி எதுவுமே இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் புதுக்குடியிருப்புத் தாக்குதல் செய்திகள் மட்டுமே வெளி வந்துள்ளன. ஆனாலும் ஒருமுறை வந்த செய்திக்குப் பிறகு வேறு எதுவுமே வரவில்லை. வழக்கமாக செத்த ராணுவத்தின்ர படங்களோ அல்லது போராடிய புலிகளினதோ அல்லது கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் படமோ ரெண்டு நாளைக்குப் பிறகாவது வரும். இப்ப அவையும் இல்லை. அதைத்தான் சொல்ல வந்தேன். நீங்கள் ஒளிந்திருந்து கல்லெறிய வேண்டாம். நேர வெளியில் வந்து எறியுங்கோ !!!!

  • கருத்துக்கள உறவுகள்

முன்பிருந்த நிலை இன்றில்லை அங்கு

எனவே முன்புபோல் செய்திகளை அடிக்கடி அனுப்பமுடியாது போகலாம்

முன்பிருந்த நிலை இன்றில்லை அங்கு

இப்ப நிலம் சுருங்கிட்டுது... களம் விரிந்துட்டுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை, ஏன் கனபேர் எண்டு எல்லாரையும் இழுக்கிறியள்? நேர நான் எண்டு சொல்ல வேண்டியதுதானே? அடுத்தது உந்தத் தாக்குதல் செய்தி தமிழ் ஊடகங்களில மட்டுமே வந்தது, நீங்கள் சொல்லுற மாதிரி ஒட்டுக்குழுவின்ர தளத்திலோ அல்லது ராணுவத் தளத்திலோ வரவில்லை கண்டியளோ?! கல்மடு பற்றி எதுவுமே இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் புதுக்குடியிருப்புத் தாக்குதல் செய்திகள் மட்டுமே வெளி வந்துள்ளன. ஆனாலும் ஒருமுறை வந்த செய்திக்குப் பிறகு வேறு எதுவுமே வரவில்லை. வழக்கமாக செத்த ராணுவத்தின்ர படங்களோ அல்லது போராடிய புலிகளினதோ அல்லது கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் படமோ ரெண்டு நாளைக்குப் பிறகாவது வரும். இப்ப அவையும் இல்லை. அதைத்தான் சொல்ல வந்தேன். நீங்கள் ஒளிந்திருந்து கல்லெறிய வேண்டாம். நேர வெளியில் வந்து எறியுங்கோ !!!!

ரகு உங்களுக்கு கல்லெறியிறதோ ....... நான் கல்லும் எறியல புல்லும் எறியல.

நீங்கள் எல்லாரும் ஒன்றை புரிந்துகொள்ளுங்கோ விடுதலை புலிகள் தங்கள் செய்தவற்றையும் செய்யப்போவதையும் எப்பவும் உங்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தால் அங்கு ரகசியம், யுக்தி, ராஜதந்திரம் எதுவுமே இருக்காது. சில நேரங்களில் சிலவற்றை மறைத்து சிலவற்றை பெரிதாக காட்டவேண்டும் அனால் அதற்காக அவை உண்மை அல்லது பொய் என்று ஆகிவிடாது. புலிகள் செய்வதை எல்லாம் படம் போட்டு காட்டுவதற்கு அல்லது செய்யப்போவதற்கு முன் சொல்லுவதற்கு தெருசண்டை செய்யவில்லை (சிலவற்றை சொல்லியிருக்கலாம் ஆனால் அதன் நோக்கம் வேறாக இருக்கல்லாம்) . நீங்கள் சொல்வதில் இருந்து நீங்கள் ராணுவ தளங்களையும் மற்றைய ஊடகங்களையும் மட்டுமே நம்புகிறீர்கள் என்று தெரிகிறது,, எப்பொழுதாவது ராணுவ தளங்களோ அல்லது மற்றைய ஊடகங்களோ ராணுவத்துக்கு ஏற்படும் இழப்புக்களை கூறுவதில்லை (ஒருவேளை அப்படியான சம்பவங்கள் மக்கள் செறிந்து வாழும் இடங்களில் நடைபெற்றிருந்தால் கூறவேண்டிய கட்டாயம் உள்ளது ஆனால் இதுவோ மக்கள் அற்ற களமுனையில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது ஆகவே சொல்லவேண்டிய கட்டாயம் ராணுவத்துக்கு இல்லை ) .தற்போது வன்னி இருக்கும் நிலையில் அவர்கள் வெற்றிபெற்றால் கூட வெளியில் சோ;;சொல்லமுடியாத நிலையிலே உள்ளார்கள் ராணுவ வெற்றிகளை நாம் தூக்கிபிடித்தால் மக்கள்படும் பாடு நீங்கள் கொண்டுள்ள எழுச்சி தமிழகத்தின் எழுச்சி, உலக நாடுகள் எம்மை நோக்கும் பார்வை என்பன வித்தியாசமாக இருக்கும்.நடப்பவை நன்றாக நடக்கும் ஒருநாள் அவை நிச்சயமாக வெளிச்சத்துக்கு வரும் அப்பொழுது உங்கள் கேள்விகளுக்கு விடை நிச்சயமாக இருக்கும் தயவுசெய்து அதுவரை புலிகளோடு அங்குள்ள எம் மக்களோடு அனைவரும் உங்கள் கரங்களை இணைத்திருங்கள்.

கல்மடுக்குளம் அணை தகர்ப்பின்போது புலிக்ள் அதை உரிமை கோரவுமில்லை, மறுக்கவுமில்லை. இதனால் பரப்பப்பட்ட வதந்திகள் எப்படியானவை என்பதும், அவை மக்களை எவ்வளவு தூரத்திற்குக் குழப்பியிருந்தன என்பது நாம் அறியாதது அல்ல. ஆகவேதான் புதுக்குடியிருப்பு முன்னகர்வுக்கெதிராக புலிகள் நடத்தியதாகச் சொல்லப்படும் தாக்குதலும் புலிகளால் உரிமை கோரப்பட்டாலும் பின்னர் அவை பற்றிய மேலதிக தகவல்களோ அல்லது கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்களோ ஆயுதங்களோ இதுவரையிலும் மக்கள் பார்வைக்கு வரவில்லை.

30 பேரை மட்டுமே கொண்ட புலிகளின் அணி ஒன்றினால் ராணுவத்தில் 150 பேரைக் கொல்லவும் 350 பேரைக் காயப்படுத்தவும், 15 வாகனங்களை அழிக்கவும் முடிந்ததென்பது சிந்திக்க வைக்கிறது.ஒருமுறை சொல்லிய பின் புலிகள் விட்டு விட்டார்கள், ஆனால் சில ஊடகங்கள் தான் தொடர்ந்தும் போரை நடத்திக்கொண்டிருப்பதாக எனக்குப் படுகிறது.

வன்னியில் கேப்பாபுலவு என்ற இடத்தில் சிறிலங்கா படையினரின் முன்னரங்க நிலைகள் மீது வெடிமருந்து நிரப்பிய ஊர்தியுடன் இரண்டு கரும்புலிகள் மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

கேப்பாபுலவு என்பது புதுக்குடியிருப்பில் இருந்து 8 மைல் தூரத்தில் முள்ளியவளையில் இருப்பது.... அதாவது இராணுவம் கைப்பற்றிய பிரதேசத்தினுள்...

நீங்கள் நினைக்கிறமாதிரி உங்களுக்கு வெற்றி செய்திகளை தந்தால் நாங்கள்( நான் உட்பட) அடிச்சிட்டம் புடுங்கீட்டம் எண்டு கொண்டாடிறீங்களே தவிர அவலப்படும் மக்களை வைத்து உங்களால் உலக நாடுகளிடம் நீதி கேட்க்க முடியவில்லை, சிங்களவனோடு சேர்ந்து வாழ முடிய இல்லை சொல்கிறீர்கள் இல்லை எண்டு புலிகள் நினைத்துதான் செய்திகளை வெளியிட இல்லை... அப்படி செய்ய இல்லை எண்டால் பெறும் வெற்றிக்கு எந்த பிரியோசனமும் இல்லை....

கரும்புலித்தாக்குதல் கூட ஈகம் செய்த வீரர்களுக்கான மரியாதைக்காக தான் வெளியிட்டு இருக்கிறார்கள்... அதனால்தான் தற்போதையை தாக்குதல் நிகழ்ந்த இடமும் குறிப்பிட பட்டு உள்ளது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளவளை முழுப்பிரதேசத்தையும் இராணுவம் ஆக்கிரமித்துள்ளதா?? வித்தியானந்தக்கல்லூரி, மாவீரர் துpலுமில்லாம் பற்றி எவ்விதஎவ்வித தகவலும் வரவில்லை அது தான் கேட்டேன். நான் நினைக்கின்றேன் தண்ணீரூற்றுப் பக்கத்தில் தான் அவன் நிற்கக் கூடும் என.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.