Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா ஜ. நா தலைமைச் செயலகம் முன்னால் தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்து மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன, மேலதிக விபரங்கள் இன்னமும் கிடைக்கபெறவில்லை

http://www.swissmurasam.net/news/breakingn...2-22-57-14.html

இலங்கை அரசினால் திட்டமிட்டு நடத்தப்படும் தமிழின அழிப்பை அனைத்துலக சமூகம் தடுத்து நிறுத்தக் கோரி சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பணிமனை முன்னால் ஈழத் தமிழர் ஒருவர் இன்று மாலை(12.02.2009) தீக்குளித்துள்ளார்.

தீக்குளித்த தமிழரை சுவிஸ் காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இவர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இது சுவிற்சலாந்து வாழ் தமிழ் மக்களை பெரும் அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக செய்திகள் விரைவில்.....

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப்பாவிகளாஇனியும் ஜ நா கைகட்டிக்கொண்டிருக்கமா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவற்துறையினர் தீக்குளித்த தமிழரை அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்து சென்று மருத்துவ சிகிச்சைசெய்தும் பலநின்றி உயிர்இழந்துள்ளதாக வைத்தியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் இவரைப்பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

http://www.swissmurasam.net/news/breakingn...2-22-57-14.html

  • கருத்துக்கள உறவுகள்

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலின் முன்பாக திடீரென நேற்று வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இளைஞர் தீக்குளித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார் என சுவிசில் இருந்து "புதினம்" செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாஸ் எனவும் இவருக்கு வயது 38 தொடக்கம் 40 வயது இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்இ 4-5 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார் எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முருகதாஸ் தீக்குளித்த இடத்தில் மலர்கள் வைத்து மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நன்றி:- "புதினம்"

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கும் கேட்க்கும் ஓவ்வொரு செய்திகளும் வேதனை ஊட்டுகின்றன :)

  • கருத்துக்கள உறவுகள்

அவ் இளைஞருக்கு கண்ணீர் அஞ்சலிகள். உயிரை ஐ. நாவின் முன் துறந்தும் உலகின் கண் திறக்குமா? இல்லை பத்தோடு பதினொன்றாக போய்விடுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவ் இளைஞருக்கு கண்ணீர் அஞ்சலிகள். உயிரை ஐ. நாவின் முன் துறந்தும் உலகின் கண் திறக்குமா? இல்லை பத்தோடு பதினொன்றாக போய்விடுமா?

<<<<

இதே கவலைதான் நுணா அண்ணா எனக்கும்!!....

உலகே உனக்கு கண் இல்லையா? எங்கள்

தமிழீழ மண் என்ன மண் இல்லையா?

பாங்கிமூன் இலங்கை தொடர்பாக கொடுத்த செய்திதான் நினைவிக்கு வருகிறது... இலங்கை தொடர்பான செய்திகள் மிகக்குறைவாகத்தானாம் வருகிறதாம். இதைவிட கூடுதலாக யாராலையும் வழங்க முடியாது.

உயிர் ஈந்த உறவுக்கு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாங்கிமூன் இலங்கை தொடர்பாக கொடுத்த செய்திதான் நினைவிக்கு வருகிறது... இலங்கை தொடர்பான செய்திகள் மிகக்குறைவாகத்தானாம் வருகிறதாம். இதைவிட கூடுதலாக யாராலையும் வழங்க முடியாது.

உயிர் ஈந்த உறவுக்கு அஞ்சலிகள்.

உண்மைதான்

ஊர்வலம் போகும் அனைவரும் எரிந்தால் .............

கண் திறப்பாரா?

தயாராவே இருக்கின்றோம்

இது ஆரம்பம்தான்...............

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாருக்கு எம் அஞ்சலிகள்!!!

தமிழன் செத்துச்சொன்னால்தான் சிங்களவனன் செயல் உலகமிறியுமா..அல்லது இதுவும் மறக்கடிக்க..மறைக்கக்கப்படுமா

...

முருகதாஸ் அவர்கள் தன்னுயிரை தியாகம் செய்திருக்கிறார் நாங்கள் தீக்குளிக்காவிட்டாலும் முழுமூச்சாய் குரல்குடுப்பது இறுதிக்கட்டதேவையாகிவிட்டது

இப்படி செய்ய வேண்டாம் என்று பலரும் கேட்டுக்கொண்டும் இவ்வாறான தீக்குளிப்புகள் தொடர்வது வேதனையளிக்கிறது.

ஐநாவின் கவனத்தை திருப்ப தன்னையே அழித்துக்கொண்ட முருகதாசன் என்ற இந்த இளைஞனுக்கு ஐநா என்ன பதில் சொல்லப்போகிறது..?

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறவுகள்

முருகதாஸ் அண்ணனுக்கு வீரவணக்கங்கள்..!

இச்செய்தி சுவிஸ் ஊடகங்களிலாவது வந்ததா?? :)

முருகதாசுக்கு கண்ணீர் அஞ்சலி

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலின் முன்பாக திடீரென நேற்று வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இளைஞர் தீக்குளித்துள்ளார்.சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார் .லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாஸ் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இவர், 4-5 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார்.

இது GTV செய்தியில் உறுதி செய்யப்பட்டது

நன்றி www.tamiloosai.com

Source Link: http://tamiloosai.com/index.php?option=com...8&Itemid=68

  • கருத்துக்கள உறவுகள்

முருகதாசன் அவர்களின் மரணசாசனம்....

http://puthinam.com/full.php?2b1VoKe0dUcYe...d424OO3a030Mt3e

Edited by nunavilan

தற்சமயம் ஜெனிவாவில் மாபெரும் எழுச்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நேற்றையதினம் முருகதாசன் தீக்குளித்த இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளதாக அறியக் கிடைக்கிறது. மேலதிக விபரம் அறிந்தவர்கள் அங்குள்ள நிலமையை எடுத்துவாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமானால் அவரின் எண்ணங்கள் நிறைவேற வேண்டும்.அதுக்கு நாம் எல்லோரும் தொடர்நது உளைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளார்

காவற்துறையினர் தீக்குளித்த தமிழரை அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்து சென்று மருத்துவ சிகிச்சைசெய்தும் பலநின்றி உயிர்இழந்துள்ளதாக வைத்தியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாசன் எனவும் இவருக்கு 27 வயது இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர், 7 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார்.முருகதாச

  • கருத்துக்கள உறவுகள்
swiss20090213001gm1.jpg

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான்

ஊர்வலம் போகும் அனைவரும் எரிந்தால் .............

கண் திறப்பாரா?

தயாராவே இருக்கின்றோம்

இது ஆரம்பம்தான்...............

இப்பிடி ஊர்வலம் போய் எரிய தயாராய் இருக்கிறவர்கள் தயவு செய்து தாயகத்தில போய் போராடி உயிரை விடுங்க அதை விட்டிட்டு தீக்குளிச்சு ஒன்றும் ஆகப் போறதில்லை.

தீக்குளித்த அந்த இளைஞனின் தியாகத்தை கொச்சைப்படுத்தவில்லை. ஆனால் இப்பிடியே வன்னியிலும் செத்து வெளியிலையும் தமிழன் செத்துக்கொண்டிருக்க உலகம் கண்ணை கட்டி வேடிக்கை பார்க்கும்.

தமிழன் செத்துக்கொண்டிருப்பான் ஒரு கட்டத்தில தமிழன் இல்லை என்ற நிலை வந்த பின்னர் தான் இந்த உலகம் கண்ணை மூடிட்டு இப்பிடியும் ஓர் இனம் இருந்தது என்று வரலாறு எழுதும்.

Edited by Paravaikal

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் எங்களின்ர ஆயுத போருக்கு கொடுக்கிற ஆதரவும், அதன் வெற்றியும் மட்டுமே இந்த நிலையை மாற்றும். அமைதி வழியில் என்ன செய்தாலும் இந்த உலகம் கண்டு கொள்ள போவதில்லை. நாம் நடாத்தும் அமைதி வழிப்போராட்டங்களால் என்ன நடந்தது?

கொஞ்சம் சிந்திப்போம்...! நாங்கள் வன்முறையாளர்களாகவே இருந்து விட்டு போவம், பயங்கர வாதிகளாகவே இருப்பம், ஆனால் போரில தமிழீழ விடுதலை புலிகளில் இந்த உலகத்துக்கு தங்களின் உண்மையான பலத்தை காட்டும் வரையில் எங்கள் இனம் அழியும் அழிந்த படி தான் இருக்கும்,

எங்கட வீடுகளில் அழுகுரல்கள் கேட்டுக்கொண்டு தான் இருக்கும், அந்த அழுகைகளுக்கு மத்தியில் இந்தியாவும், ஏனைய உலக நாடுகளும் கோலிக்கை களியாட்டம் ஆடும்.

தயவு செய்து....

தயவு செய்து தீக்குளிக்கும் இவ்வாறான முடிவை தமிழர்களே கை விடுங்கள்! மன அழுத்தத்தை குறையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தச் சொல்ல? அங்க தான் கொத்துக் கொத்தாச் சாகுதுகள் எண்டா இங்கயும் அதே கதை, வாழுறதுக்காகத் தானே இந்தப் போராட்டமெல்லாம், இப்படி எதிரிக்கு மகிழ்ச்சி கொடுத்துச் சாக ஏன் தான் அங்க புலிகள் உயிரப் பணயம் வைச்சுப் போராட வேணும்?. ஐ.நா. முன்னாலயே நடந்திருக்குது, ஆனா பி.பி.சியிலயோ அல்லது எந்த ஊடகத்திலயோ வரவில்ல இன்னும். ஐ.நா கூட ஒரு அறிக்கை, வருத்தம் விடவில்ல. இது தான் தியாகிகள் தீக்குளிச்சு உலகத்திற்ற நியாயம் கேட்ட முதல் தடவையா? இல்ல, பர்மா புத்த துறவியள் சம்மணம் போட்டு அமர்ந்து, குளறாமல் எரிந்து நியாயம் கேட்டும் அந்த நாட்டில் எதுவும் மாறவில்லை. இதையெல்லாம் விட்டு விட்டு, புலிகளுக்கு அதிக பட்ச, பிரசார, பொருளாதார உதவியள் செய்ய வேணும்.சமாதானம் நீதி கேட்டு ஒரு நாளும் யாரும் திரும்பிப் பார்த்ததாக எனக்குத் தெரியேல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.