Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதயன், சுடரொளி பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்பட்டுள்ளார்

Featured Replies

உதயன் சுடரொளி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியரும் பிரபல ஊடகவியலாளருமான வித்தியாதரன், கொழும்பின் புறகர்ப்பகுதியான கல்கிசையில் வைத்து இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார். சற்று முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சிறிலங்கா அரசின் கொலைப் பட்டியலில் இவரின் பெயரும் இருக்கிறது. நினைக்கவே கவலையாக இருக்கிறது.

Sudar Oli Chief Editor abducted

Chief Editor of the Sudar Oli a Tamil daily N. Vidyatharan has been abducted in Mount Lavinia by an armed group a short while ago while attending a function , the police said

- daily mirror.lk

ஐயோ என்று உரக்க கத்த வேண்டும் போல இருக்கு.... வித்தியாதரன் அண்ணா...எந்த சேதமும் இல்லாமல் மீண்டு வரவேண்டும்.... சிங்கள பாசிச இரத்த வெறி நாய்கள் ஒழிய வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

காடைக்கூட்டம் ஒரு தமிழ் மக்களையும் எஞ்சியிருக்க விடாது.

vithy20070623.jpg

உதயன் சுடரொலி பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்பட்டுள்ளார்:

இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் வித்தியாதரன் சற்று முன்னர் ஆயுதமுனையில் கடத்தப்பட்டுள்ளார். இனம் தெரியாத குழவினர் இவரை ஆயத முனையில் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.கல்கிசையில் வைத்து இவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்கிசையில் உள்ள மகிந்த புளோரிஸ் எனப்படும் மரணசாலையில் மரண நிகழ்வில் கலந்து கொண்ட வித்தியாதரன் மலர்ச் சாலையின் முன்றலில் நின்ற போது வெள்ளை வானில் சென்றவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

ஆயத முனையில் கடத்த முற்பட்ட போது அதனை மறுத்த வித்தியாதரன் தாக்கப்பட்டுள்ளார். ஆதேவேளை அங்கு கூடிநின்றவர்களும் தடுக்க முற்பட்ட வேளை அவர்களும் தாக்கப்பட்ட நிலையில் பலவந்தமாக வித்தியாதரன் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

http://globaltamilnews.net/tamil_news.php?nid=6470&cat=1

Edited by nunavilan

வித்தியண்ணா வந்திட வேணும், எம் விடுதலைப்போருக்கு குரல் கொடுத்திட வேணும். செய்தி கேட்டதும் கால்களே நடக்க மறுக்கின்றன. உமதன்பும் நீர் கூறும் அறிவுரையும் எமக்கு தொடர்ந்து கிடைத்திட வேணும்.

வித்தி அண்ணா நீங்கள் அடிக்கடி சொல்வீங்கள் பேனா தூக்கினவனும் ஒரு போராளிதானென்று எப்பொழுதும் துப்பாக்கி முனையினை விட பேனாமுனைக்கு பலம் அதிகம் என்று ஆனால் பேயரசை ஆட்சி செய்யும் இப் பிணந்தின்னிகளிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்.

மீண்டும் உங்களையும்,உங்கள் படைப்புகளையும் உதயன் + சுடரொளி குழுமத்தை தலைமை தாங்குவீர்கள் என்ற அதீத நம்பிக்கையுடன் இறையை வேண்டுகிறோம்.

ஒரு தமிழனும் மூச்சு கூட விடக் கூடாது என்று ஆக்கப் பார்க்கிறது மகிந்த பட்டாளம்.

அண்மையில் கூட பேசும் போது எனக்கு பிரச்சனையில்லை என்றார்.

இப்ப?

தொடர் கதையாகிறதே?

Edited by Thalaivan

இவர் கடத்தப்படவில்லையாம் பொலீசாரால் அழைத்து செல்லப்பட்டிருக்கிறாராம்.

Editor taken in for questioning - Police - daily mirror

Police are now saying that Sudar Oli editor N. Vidyatharan was not abducted by an unknown group but was in fact taken in for questioning by police - Police Spokesman.

இவரை விடுவிக்க கோரி உடன் அனைத்துலக தொடர்பு சாதனங்களுக்கும் மின் அஞ்சல் அனுப்புவோம்.

கடத்தல் கைதாக மாறியது, விமானத்தாக்குதலில் தொடர்பாம்!

கடத்தல் கைதாக மாறியது, விமானத்தாக்குதலில் தொடர்பாம்!

ஒரு பத்திரிகையாளராக கொழும்பில் நடைபெற்ற விமானத்தக்க்குதலின் சேதங்களின் சிலவற்றின் விபரங்களை வித்தி வெளியிட்டார்!! ........... சிங்களத்தின் ஈழத்தமிழின அழிப்பின் முக்கிய நிகழ்வே பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளை இல்லாது ஒழிப்பதுவே!!

இதை உலகம் கண்ணை மூடிப் பார்த்துக் கொண்டிருக்கிறது!!!

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணைக்கு எனில் வெளிளை வானில் கடத்தியது ஏன்.போட்டுத் தள்ளத்தான் கடத்தினார்கள் பல சாட்சிகள் பார்த்து விட்டதாலும் அரசுக்கு வெளியில் இருக்கும் நெருக்கடி காரணமாகவும். கைது என்று காரணம் சொல்கிறார்கள்.அவர் நலத்துடன் திரும்ப வேண்டும்.

வித்தியாதரன்

காலை 10.00 - (கடத்தல்)

மதியம் 12.15 - வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தல் - பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர

மதியம் 12.22 - விசாரணைக்காக கைது செய்யப்பட்டார் - தேசிய பாதுகாப்பிற்கான மத்திய நிலையம்

மதியம் ??-?? - தெமட்டகொடையில் கண்டுபிடிக்கப்பட்டார் - பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர

சாதாரணநபர்

காலை - (கடத்தல்)

மாலை - வெள்ளை வானில் வந்த இனந்தெரியதவர்களால் ஒருவர் கடத்தப்பட்டார் - செய்தி

மறுநாள்காலை - நேற்று கடத்தப்பட்வர் சடலமாக மீட்கப்பட்டார் - செய்தி

பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு முண்டு கொடுப்பவர்களுக்கு இது சமர்ப்பணம்.

வித்தியாதரன்

காலை 10.00 - (கடத்தல்)

மதியம் 12.15 - வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தல் - பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர

மதியம் 12.22 - விசாரணைக்காக கைது செய்யப்பட்டார் - தேசிய பாதுகாப்பிற்கான மத்திய நிலையம்

மதியம் ??-?? - தெமட்டகொடையில் கண்டுபிடிக்கப்பட்டார் - பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர

சாதாரணநபர்

காலை - (கடத்தல்)

மாலை - வெள்ளை வானில் வந்த இனந்தெரியதவர்களால் ஒருவர் கடத்தப்பட்டார் - செய்தி

மறுநாள்காலை - நேற்று கடத்தப்பட்வர் சடலமாக மீட்கப்பட்டார் - செய்தி

பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு முண்டு கொடுப்பவர்களுக்கு இது சமர்ப்பணம்.

பயங்கரவாதிகளால் அவர் கொல்லப்பட இருந்தார்... அவரை பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுக்காக்கவே கடத்த பட்டார் எண்று செய்தி வராததில் எனக்கும் உங்களை போல கவலைதான் அண்ணா.... :o

கொலைவெறி நாட்டில் கடைசியாக இருந்த ஒரு உண்மையின் குரலும் அடக்கப்பட்டுவிட்டதா?

கைது செய்ய வெண்டும் எனில் அதை இவர் வீட்டிலோ அல்லது காரியாலயத்திலோ செய்திருக்கலாம். ஆனால் மரணச்சடங்கில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்தவரை பலாத்காரமாக கடத்த முயன்றிருக்கின்றார்கள். பட்டப்பகலிலே பலர் காண நடைபெற்ற இந்த நிகழ்ச்சி உண்மையில் கைதாக இருக்க முடியாது. இது கடத்தலே. கொலைவெறி அரசிற்கு ஏற்பட்டுள்ள உலக அழுத்தங்களினால் வித்தியாதரன் கடத்தல் செய்தி கைது செய்தியாக வெளிவந்துவிட்டது. அவரது உயிருக்கு ஓரளவவேனும் உத்தரவாதம் கிடைத்துள்ளது.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகம் ஒரு இனத்தின் , உயிர் நாடி .....இதில் , இந்த துறையில் பலர் கொல்ல பட்டு இருக்கிறார்கள். அந்த வழியில் திரு வித்தியாதரன் அவர்கள் கடத்தபட்டு , பின்பு கைது செய்ய பட்டு .தற்போது வைத்தியசாலையில் இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. இதை கண்டித்து ,வெளி உலகுக்கு ,தெரியப்படுத்தவேண்டும் . மிகவும் இக்காடான நிலையில் வெளி உலகுக்கு சேதி சொல்லும , அவரது பத்திரிகை தொடரவும், பாதுகாப்பாக வீடுசேரவும் ஆவன செய்யவேண்டுமென்பது என் பணிவான் கருத்து .

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தப்பட்டவர் விபரம் உடனே ஊடகங்கள் வாயிலாக வெளிவந்ததால் தான் அவரைக் கைது என்று மாற்றிவிட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வித்தியாதரன் போன்ற ஊடக உறவுகள் கொண்டிருக்கின்ற அதீன துணிவுகள் ஆபத்தைத் தான் தரும். ஏற்கனவே நடேசன், சிவராம் போன்ற ஊடகவியளார்களை இழந்ததும், அவர்களின் அதீன துணிவாகும்.

மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத தேசத்தில் அதீனதுணிவோடு நடமாடுவதே தவறு. இப்போது வித்தியாதரனுக்கு ஓரளவு பாதுகாப்பு உணரப்பட்டாலும், உணர்ந்து செயற்படுவதே நன்று

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாதரன்

காலை 10.00 - (கடத்தல்)

மதியம் 12.15 - வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தல் - பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர

மதியம் 12.22 - விசாரணைக்காக கைது செய்யப்பட்டார் - தேசிய பாதுகாப்பிற்கான மத்திய நிலையம்

மதியம் ??-?? - தெமட்டகொடையில் கண்டுபிடிக்கப்பட்டார் - பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர

சாதாரணநபர்

காலை - (கடத்தல்)

மாலை - வெள்ளை வானில் வந்த இனந்தெரியதவர்களால் ஒருவர் கடத்தப்பட்டார் - செய்தி

மறுநாள்காலை - நேற்று கடத்தப்பட்வர் சடலமாக மீட்கப்பட்டார் - செய்தி

பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு முண்டு கொடுப்பவர்களுக்கு இது சமர்ப்பணம்.

சிறீலங்கா அரசின் பயங்கரவாதப்பிடியுனுள் உண்மை !

முடிவின்றித் தொடரும் இன அழிப்புப் போரினது முதல் இலக்காக இருப்பது, உண்மையைக் கூறும் ஊடகங்களே. இந்தியப்படையின் காலத்திலாகட்டும், யே.ஆரின், காலம் முதல் மகிந்தவின் இன்றை காலம்வரை, இது ஒரு சாபக் கேடாகவே தொடர்கிறது. அதிலும் மகிந்த கொம்பனிதான் அதியுச்சமான படுகொலைகளை அரங்கேற்றி வருகிறது. இந்த இடத்திலே தமிழர் தலைமைக்குச் சனநாயகப் பாடமெடுக்கும் உலகிடம் ஒரு கேள்வி, சிங்கள ஆட்சியரின் சனநாயகம் இதுதானா? முதலில் இவர்களைத் திருத்துங்கள். ஊடகவியலாளரான திரு வித்தியாதரன் அவர்களை விடுவியுங்கள். நிமலராஜன் முதல் லசந்த வரையானதோடு நிற்பாட்டச் சொல்லுங்கள். நீங்கள் கொடுக்கின்ற ஆதரவே சிங்கள அரசினது ஆட்டத்திற்குக் காரணமாகும். சிறீலங்கா இன்னுமொரு, சூடானாக, மியான்மாராகவே உள்ளது. கொழும்பில் இருக்கின்ற மேற்குலகின் சனநாயகத்(?) தூதுவர்களே பயங்கரவாதமென்பது எது, என்பதைக் கூறமுடியுமா? நீங்களும் ஒரு வகையில் சிறீலங்காவின் அரச பயங்கரவாத்தை ஆதரிக்கிறீர்களோ என்ற ஐயம் உலகத் தமிழரிடம் எற்படத் தொடங்கியள்ளது. தமிழினப் படுகொலையை, படைத்துறை உண்மைகளைச் சுட்டும் ஊடகங்கள் இலங்கைத் தீவிலிருந்து படிப்படியாக அகற்றப்பட்டாயிற்று. இறுதியாக இருந்தவர் மீதும் கொலைக்கரங்கள் பதிந்துள்ளது. மீண்டுவர வேண்டுமென்பதே உலகத் தமிழர்களின் வேண்டுதலாகும்.

உண்மைகளை வெளியிடும் ஊடகர்களை விடுதலைப் புலிகளின் முகவர்களாகக் காட்டுவதற்காக முயற்சி எடுத்துள்ளார்கள். இந்த அராஜகங்களை இன்னமும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இப்பத்தான் இந்தச்செய்தியை தமிழ்நெட்டில பார்த்தன். தலையங்கத்தை பார்த்த உடனயே வயித்தக்கலக்கிச்சிது. ஆட்டைக் கடிச்சு மாட்டைக்கடிச்சு கடைசியில வித்தியாதரனையும் உள்ளுக்க போட்டாச்சு. ஏற்கனவே மாமனிதர் சிவராம் அவர்களின்ட இழப்பு நொந்துபோயிலுள்ள தமிழினத்துக்கு பேரிழப்பாக போக... அடுத்தபடியாக வித்தியாதரனையும் கடத்தியாச்சிது.. சிறீ லங்கா பேரினவத தீவிரவாதிகள் நாசமாப்போக!

அப்ப இனி சுடரொளியுக்கும், உதயனுக்கும் காவலன் எங்கட மானங்கெட்டசங்கரியோ இல்லாட்டிக்கு டக்கிலஸ் தேவாங்கோ? நாசமாய்ப்போக!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.