Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒப்பரேஷன் "வணங்கா மண்" பிரித்தானியாவில் இருந்து உணவுக்கப்பல் முல்லைத்தீவை நோக்கி பயணம் !

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3 மாதத்துக்கு முன் காசாவுக்கு பிரான்சில் இருந்த அனுப்பிய கப்பல் நேற்றுத்தான் (10.03.2009) செசன்றடைந்ததாம்.... :rolleyes:

ஈழம் சென்றடைய 3 மாதத்தில் அங்கு எல்லாமே முடிந்து விடும் அய்யா... இருக்கும் சனமும் நோய்வாய் பட்டு அதன்பின் சாப்பாடு மருந்து... போயும் பலநில்லாமல் போகலாம்.... அப்படியே அன்று ஒருநாள் சோமாலிய மக்களை உயிருடன் தாட்ட நாள்தான் நமக்கும் நடக்கபோகுதோ யாம் அறியோம்.. :(:):unsure:

DEEP SEA TRANSIT TIMES TO/ FROM UK (APPROXIMATE AVERAGES)

http://www.orionshipping.co.uk/deepsea.aspx

:lol:

  • Replies 102
  • Views 9.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதன் பலவீனங்களை இங்கு எழுதுங்கள் அறிவுரைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் பகிருங்கள் அல்லாவிட்டால் நாமே எமது தலையில் மண் அள்ளிப்போடுவது போல் ஆகும்

அனுமதி எல்லாம் எடுத்து.. எல்லா விபரங்களும் பெற்றபிறகுதான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்கள்!

புத்திசாலிகள்.. எல்லாம் ஓகே ஆனபிறகு தகவலை தெரிவித்துள்ளார்கள்! :unsure:

ஒருவேளை முன்பே இப்படி கப்பல் ஒன்றில வெளிக்கிடப்போறம் என்று சொல்லியிருந்தால்.. ????

எம்மவர்கள் சிலர் குறை கூறியே திட்டம் வரவிடாமல் செய்திருப்பார்கள்! :rolleyes:

Edited by pepsi

நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு என்றவுடன் நினைவில் வருபவர் கலைஞர் அவர்கள். வெறும் நிவாரணப் பொருள் சேகரிப்புடன் தமிழக எழுச்சியை மழுங்கடிக்க முயன்ற பெரியவர்.

இது ஒரு நல்ல முயற்சி

ஆனால் இதனை வெறுமனே உதவிப் பொருட்கள் கொண்டுசெல்லும் செயலாக அல்லாமல், சர்வதேச நாடுகளையும், சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் இணைத்து, இது புலம் பெயர் தமிழர்களின் உதவிமட்டுமல்லாது உலக மக்களின் நிவாரணப் பொருட்களாக அனுப்ப முயற்சித்தால் பயன் கிடைக்கும்.

அதாவது நிவாரண உதவிகளை அனுப்புவதை அனைத்துலக அரசியலாக்கவேண்டும்.

இதற்கான பதிவுசெய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் தலைமையில் நாம் எல்லோரும் எமது அயலிலுள்ள ஆங்கிலேயர் கறுப்பர் இந்தியர் மற்றும் எல்லோரிடமும் வீடுவீடாக சேகரிக்கவேண்டும். தனியே கந்தையா அண்ணை வீட்டிலையும் சுப்பையா அண்ணை வீட்டிலையும் சேகரித்தால் இந்த விஷயம் சர்வதேச அரசியலாகாது.

நாம் எல்லோரும் நினைத்தால் எமது மக்களின் துயரங்களை உலக அரசியலுக்குள் கொண்டுசெல்லமுடியும்.

முயல்வோம்!

வெல்வோம்!!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சுருக்கமான, தெளிவான விபரங்களுக்கு நன்றி சாத்திரி!

  • கருத்துக்கள உறவுகள்

அனுமதி அனுமதி என்று சொல்லுகிறவர்கள் அது யாரின் அனுமதி எங்கு பெற்ற அனுமதி என்று விபரமாக சொன்னால் இத்திட்டத்தில் மேலும் பலர் இணைந்து கொள்ள வசதியாயிருக்கும்.

வாரி வழங்க வசதியும் விருப்பமும் இருந்தும் பலர் இதுபோன்ற திட்டங்களில் பங்குபற்றாமல் இருப்பதற்கு காரணம் திட்டங்களைத் தீட்டுவோரது இருட்டடிப்பும் இரகசியமும் தான்.

சர்வதேச மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அல்லலுறும் எம்மின மக்கள் மீது கவனத்தைத் திருப்ப இத்திட்டம் உதவுமென்றால் ஒரு சாதாரண மனிதனும் அதைப் புரிந்து கொண்டு செயற்பட்டால் தான் அது கைகூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் மெய்சிலிக்கின்றது எங்களை காப்பாற்ற புலம்பெயர் தாயக உறவுகளின் அரவணைப்பால் நாங்கள் புத்தெழுச்சி பெறுகின்றோம்......... வெற்றி பெற வாழ்த்துக்கள் கடலில் பாதுகாப்பு தர எம்படையுள்ளது ஏன் பயப்படுவான் இது பற்றி கட்டாயம் தலமையுடன் ஆலோசனை பெற்றுதான் இத்திட்டம் தொடங்கப்பட்டிருக்கும் எதிரிக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்.... கவலையை விடுங்கள் எதிரியின் குதறும் எறிகணைக்குள் இருந்து எம்மை காப்பாற்றுங்கள்......

உலகத் தமிழர்கள் அனைவரும் உங்கள் ஆதரவையும் பொருள் உதவியையும் வழங்குங்கள்.இனி நாங்கள் தான் சர்வதேசம் என்பதை எல்லா நாடுகளுக்கும் விளங்க்கப்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது.இதன் அடிப்படையிலயே இந்த செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.லண்ட

தனி நபர்களும் வன்னி மக்களுக்கு உதவுவத்ற்காக இந்த கப்பலில் போக இடம் உண்டா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். இதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் பெரிய எழுப்புதல் உண்டாவதோடு சர்வதேச நாடுகளின் குருட்டுக் கண்களை திறப்பதற்கு சற்றேனும் பயன்பட வேண்டுமென வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே இந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டால் அதுவே தமிழீழத்திற்கான முதல் அங்கீகாரம்.

எனவே கப்பல் போய்ச் சேர்ந்தாலும் எமக்கு தான் நல்லது.

சேரா விட்டாலும் எமக்குத் தான் நல்லது.

இப்படித்தான்

சர்வதேச அணுசரனையோட எல்லைபோட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டா தமிழீழம் அங்கீகரிப்பட்டிடும் என்றிச்சினம்

5 வருசம் போர் நிறுத்தம் செய்தால் கிடைச்சிடும் என்றிச்சினம்.

பெப்ரவரி 22 கிடைக்கும் என்றிச்சினம்.

மாவீரர் தின உரையோடு கிடைச்சிடும் என்றிச்சினம்

இப்ப வணங்கா மண் போனால் என்ன மூழ்கினால் என்ன கிடைக்கும் என்றினம்.

எப்படி என்றுதான் யாரும் விளக்கமாட்டம் என்றினம்..! அதை விளக்கிச் சொன்னா மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி சொன்னா ஆதரவும் பங்களிப்பும் வான் தொடுமே..! :icon_idea::unsure::lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றல்மிக்க அதாவது சிறப்புத்தேர்ச்சி பெற்ற வைத்தியர்களும் செல்லத்திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி

உண்மையா?

உண்மையில் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்

நீங்கள் அங்கீகரியுங்கள் என்பதன் ஆரம்பமாக இது இருக்கும் என்று நினைக்கின்றேன்

இப்படித்தான்

சர்வதேச அணுசரனையோட எல்லைபோட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டா தமிழீழம் அங்கீகரிப்பட்டிடும் என்றிச்சினம்

5 வருசம் போர் நிறுத்தம் செய்தால் கிடைச்சிடும் என்றிச்சினம்.

பெப்ரவரி 22 கிடைக்கும் என்றிச்சினம்.

மாவீரர் தின உரையோடு கிடைச்சிடும் என்றிச்சினம்

இப்ப வணங்கா மண் போனால் என்ன மூழ்கினால் என்ன கிடைக்கும் என்றினம்.

எப்படி என்றுதான் யாரும் விளக்கமாட்டம் என்றினம்..! அதை விளக்கிச் சொன்னா மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி சொன்னா ஆதரவும் பங்களிப்பும் வான் தொடுமே..! :icon_idea::unsure::lol::)

உங்கள் ஆற்றாமையின் வெளிப்பாடு புரிகிறது

ஆனால் நீங்கள் குறிப்பிடும் அனைத்தும் சேர்ந்ததுதான் .............

எம் இலட்சியப்பயணம்

ஒவ்வொரு படியாக நகர்ந்துதான்

இலட்சியத்தை அடையமுடியும்

  • கருத்துக்கள உறவுகள்

உதவி செய்யும் அனைத்து ஐரோப்பிய வாழ் தமிழர்களுக்கும் நன்றிகள்

கப்பல் நல்ல படியாக சென்றடைய வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றல்மிக்க அதாவது சிறப்புத்தேர்ச்சி பெற்ற வைத்தியர்களும் செல்லத்திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி

உண்மையா?

உண்மையில் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்

நீங்கள் அங்கீகரியுங்கள் என்பதன் ஆரம்பமாக இது இருக்கும் என்று நினைக்கின்றேன்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

தனி நபர்களும் வன்னி மக்களுக்கு உதவுவத்ற்காக இந்த கப்பலில் போக இடம் உண்டா?

போக இடமுண்டு, வழியுண்டு

திரும்பிவரத்தான் வழியில்லை

எதுக்கும் யோசிச்சு சொல்லுங்கோ..

Edited by Sooravali

Press Release 12/03/2009 GMT 6.00

VANANGA MAN

Coordinating Committee for the Mercy Mission to Vanni

Our people in Vanni are facing an ever worsening plight for their very existence. There is an immediate need to raise awareness of this, far and wide, particularly in the absence of any appropriate action by international monitors and organizations. In this context, the British Tamil Diaspora have come together to launch an unprecedented Mercy Mission to Vanni. Various charities have joined together to initiate this Mission, but we are confident that many more charities and organisations will join to support this effort.

‘Vananga-Mann’ Mercy Mission to Vanni has four Objectives:

* Take much needed food, medical aid and other basic necessities, including doctors, to Vanni

* Raise awareness amongst the public and gain their support for the plight of our people

* Encourage well known personalities, humanitarians, politicians and charities to endorse this Mission to gain maximum publicity, including media attention

* Let our people in Vanni know that we are right beside them!

We have approximately two more weeks for the ship to sail and that means we have a huge task ahead of us to:

1. To inform the plight of our people to as many people as possible

2. Collect necessary food supplies & donations from public (a list will be made available soon)

3. Gain the support of charities

4. Mobilize Medical Professionals, MPs, well-known personalities and Media personnel who can make the journey

It is important that each one of us do what we can to make this project a success. Please try your best to donate some TIME!

For further details, please contact:

Tamil House

Unit 1, Broad Lane, London N15 4AG

www.vannimission.org

info@vannimission.org

+44 (0) 20 8808 0674

http://vannimission.org/?page_id=58

கப்பல் நல்ல படியாக சென்றடைய வேண்டும்

வெற்றி நிச்சயம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதே நடக்குமென நினைத்து நல்லதுக்காகவே உழைக்க முன் வந்த உள்ளங்களை வாழ்த்தி வணங்குகிறேன், மக்களுக்காக செல்லும் கப்பலை புலிகளுக்கான ஆயுதக்கப்பலாக சித்தரிக்க காத்திருப்பார்கள் பேரினவாதிகள், அதனை சர்வதேச துணை கொண்டு வென்றெடுக்க வேண்ட்யதும் காலத்தின் கட்டாயமே....

  • கருத்துக்கள உறவுகள்

இதே முயற்சியில் பரந்தளவில் எல்லா நாடுகளிலுமிருந்தும் நாம் ஈடுபடவேண்டும், நாம் எடுக்கும் முயற்சிகளை துரிதப்படுத்தவேண்டும், இது அதாவது இந்த முயற்சி வேற்றுத்தரப்பினருக்கும் ஒரு படிப்பினையாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கட்டும், இந்தச்செயல் வெற்றி பெறாவிட்டாலும் சரித்திரத்தில் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

DEEP SEA TRANSIT TIMES TO/ FROM UK (APPROXIMATE AVERAGES)

http://www.orionshipping.co.uk/deepsea.aspx

:unsure:

நன்றி பெப்சி
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் துணிகரமான முயற்சி....

இந்த முயற்சியில் எங்களுக்கு வெற்றி மட்டுமே உண்டு...! ஆனால் அந்த வெற்றியின் பலன்கள் தான் மாறுபடப்போகிறது.

பலன் 1) அந்தப்பொருட்கள் எங்கள் மக்களை சென்றடைய வேண்டும்- 100% மான புலம்பெயர் தமிழர்களின் பிரார்த்தனையும் அதுதான். அது எங்கள் இரத்தங்களின் எத்தனையோ உயிர்களைக்காப்பாற்றும்.

பலன் 2) இந்தக்கப்பல் இலங்கையில் வைத்து மூழ்கடிக்கப்படுமிடத்து ( இந்தியா இதை மூழ்கடிக்காது காரணம் சர்வதேச ரீதியில் அவப்பெயரை தேடவும் தனது தமிழருக்கெதிரான நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு அப்பட்டமாகவும் தோலுரித்துக்காட்டவும் விரும்பாது - அப்படி செய்தாலும் அதுவும் நல்லதே....? ). ஆனால் மோட்டுச் சிங்களவன் என்ற கணக்கின் படி அவன் நிச்சயம் ஏதாலும் செய்வான் அப்படிச் செய்தாலும் உலக நாடுகளின் கவனத்தை எங்கள் போராட்டத்துக்கு பலமாக ஈர்க்க முடியும். திட்டமிட்ட இனப்படுகொலையை நிரூபிக்க இது ஓர் காரணியாக அமையும்.

ஆனால் பலன் - 2 இல் அவரவர் தங்களின் வசதிக்கேற்ப கொடுத்தவைகளைத்தான்... அதுவும் எங்கள் விடுதலைக்காக இழந்ததாகவே நினைத்துக்கொள்வோமே...!. அங்கே நம் உறவுகள் அடம்மன் கொடியைத்தின்று உயிர்விட்ட பரிதாபத்தை விட இதுவா பெரிது... நாங்கள் கொடுக்கப்போவதெல்லாம் எங்கள் தலையிலிருந்து விழும் மயிருக்கு சரி.... அவர்களின் உயிரைவிட எங்கள் மியிரா பெரிது....

இந்தக்கப்பல் எங்களின் துரும்புச் சீட்டு.... காசைக்கட்டுங்கள்...! வெற்றி நிச்சயம்...! !... இது சிங்கள வெற்றி நிச்சயமில்லையப்பா....... !!! ( ஐயசிக்குரு..இல்லையப்பா...) ..... :unsure: இது தமிழில் வெற்றி நிச்சயம்....! :icon_idea:

இளங்கவி

Edited by ilankavi

ஒப்பரேஷன் "வணங்கா மண்" பற்றி புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய ஆக்கம்

தாயகம் நோக்கிய பயணம்

நன்றி

புலிகளின் குரல்

http://www.pulikalinkural.com/

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகச் சரியான திட்டமிடலுடன் பல கோணங்களை கொண்டு செயற்படுத்தப்பட போகின்றது. எல்லோரும் என்ன எப்படி என்டு விடுப்பு புடுங்காமால் விருப்பம் என்றால் செய்யுங்கோ. விளக்கம் தந்தால் தான் செய்வம் என்று நினைப்பவர்கள் தாராளமாக தள்ளி நில்லுங்கோ.( நீங்கள் உண்மையில உதவத்தான் கேக்கிறியளோ அல்லது உபத்திரம் தரத்தான் கேக்கிறியளோ எல்லாம் அவர்களுக்குத்தான் வெளிச்சம்)

உங்களுக்கு விளக்கம் தந்து எங்கட மக்களின்ட தலையில மண்ணை அள்ளி போட தாயாராய் இல்லை.

இது மிகச் சரியான திட்டமிடலுடன் பல கோணங்களை கொண்டு செயற்படுத்தப்பட போகின்றது. எல்லோரும் என்ன எப்படி என்டு விடுப்பு புடுங்காமால் விருப்பம் என்றால் செய்யுங்கோ. விளக்கம் தந்தால் தான் செய்வம் என்று நினைப்பவர்கள் தாராளமாக தள்ளி நில்லுங்கோ.( நீங்கள் உண்மையில உதவத்தான் கேக்கிறியளோ அல்லது உபத்திரம் தரத்தான் கேக்கிறியளோ எல்லாம் அவர்களுக்குத்தான் வெளிச்சம்)

உங்களுக்கு விளக்கம் தந்து எங்கட மக்களின்ட தலையில மண்ணை அள்ளி போட தாயாராய் இல்லை.

பொருட்களாக மட்டும்தான் வாங்குவார்களா...?? இல்லை பணமாகவும் கொடுக்க முடியுமா...??? பொருட்கள் வழங்கும் நிலையங்கள் விரைவில் திறக்க படும் எனும் செய்தி புலிகளின் குரல் செய்திகளில் சொல்ல பட்டது எங்கு எல்லாம் நிலையங்கள் அமைக்க படுகின்றன... இரண்டு கிழமைகளுக்குள் பொருட்களை தந்து உதவுமாறு GTV யில் கேட்டு கொண்டார்கள்... அதன் விபரங்களை எல்லாம் தெளிவு படுத்த முடியுமா..??

சிறுவர்களுக்கான புதிய உடைகளை மட்டும் வழங்குமாறு கேட்டு கொண்டார்கள்... பழையன வேண்டாம் எண்று கோரி உள்ளார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.