Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் நகரம் ஸ்தம்பித்தது ஆர்ப்பாட்ட பேரணி மறியல் போராட்டமாக மாறியது

Featured Replies

பாராளுமன்ற ஆர்ப்பாட்டம் மறியல்போராட்டமாக மாறியது, உடனடி யுத்தநிறுத்தம் கோரிமக்கள் வீதிகளில் அமர்ந்தனர்.

லண்டன் VAUXHALL பாலத்தில் அமர்ந்து தமிழ் மக்கள் இன்னமும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரம் முற்றுமுழுதாக ஸ்தம்பிக்கும் நிலை தொன்றியுள்ளதாக அறியப்படுகிறது

உடனே போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கலந்து கொள்ளாத மக்களை உடனே வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் நீண்டநேரம் நடைபெற உள்ளதால் ,தாமதமாக செல்கிறோம் என்ற உணர்வை விடுத்து பிரித்தானிய வாழ் அனைத்து தமிழர்களையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்

Voice Coverage from London from TamilNational.com

பொறுத்தது போதும் பொங்கவேண்டும்

தெரு தெருவாய் நீ றங்க வேண்டும்

விட்டா தான் மானம் காத்தோடு போகும்

செந்தமிழா செந்தமிழா எங்கள் நிலை பார் பார்....

London_Protest_March_6April_02.JPG

London_Protest_March_6April.JPG

London_Protest_March_6April_03.JPG

London_Protest_March_6April_04.JPG

London_Protest_March_6April_05.JPG

Edited by தேசம்

  • கருத்துக்கள உறவுகள்

தடையுடைக்கத் திரண்டுவிட்ட உறவுகளே சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.

- தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் -

  • கருத்துக்கள உறவுகள்

தாயக உறவுகளுக்காய் தேம்ஸ் நதியில் குதித்து தன்னுயிரை மாய்க்கத்துணிந்த மயூரனின் உணர்விலிருந்து பிரித்தானியாவில் ஏற்பட்டிருக்கும் பெரும் எழுச்சியை உணரக்கூடியதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்காய் குரல் கொடுக்கும் உறவுகளே .........வேகமாய் தீரத்துடன் செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சிறிது நேரம் தலை காட்டி விட்டு வந்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் சிறிது நேரம் தலை காட்டி விட்டு வந்தேன்.

இதென்ன கலியாணமா/சாமத்திய வீடே நடக்குது தலை காட்டிட்டு வாறதுக்கு

திலீபன் சொன்ன புரட்சி இதுவாகத்தான் இருக்கும்

BBC தன் முன் பக்கத்தில் முக்கிய செய்தியாக பிரசுரித்துள்ளது. எனக்கு தெரிந்து இதுதான் முதல் தடவையாக நீண்ட காலத்தின் பின் தமிழ் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை BBC முன் பக்கத்தில் தன் இணையத்தில் போட்டுள்ளது

Lifeboats on standby as Tamils protest in London

Hundreds of Tamil protesters have continued to rally outside the Houses of Parliament overnight demanding the government act to end war in Sri Lanka.

Rescue boats were called out amid fears demonstrators would jump en-masse from Westminster Bridge if they could not speak to Prime Minister Gordon Brown.

Police say 900 people are still at the rally - which peaked at around 3,000 - but no-one has been arrested.

One man is in hospital after jumping into the river and hauled out.

The UN says 150,000 people are trapped in Sri Lanka's northern war zone and Tamils claim human rights abuses.

Sri Lanka's government has rejected calls for a ceasefire with the Tamil Tiger rebel group, which wants independence.

Tamil protesters

The sit-down protest closed Westminster Bridge for several hours

A Metropolitan Police spokeswoman said officers were discussing how to handle the illegal protest, which has been going on outside the Palace of Westminster since 1600 BST on Monday.

Participants failed to give notice of the demonstration and have been waving flags showing the emblem of the Tamil Tigers, which is banned in the UK as a terrorist organisation.

Despite this, the BBC's Andy Moore said early on Tuesday that officers had been were allowing people to join the crowd in the hope they would disperse later.

He added: "They are here for the long term, the protesters say. There are families covered with sheets and blankets and children sleeping, despite the noise."

Four RNLI lifeboats, supported by police and fire launches, remain at the scene after the Tamils threatened to leap into the Thames.

'Stop genocide'

At one stage, as many as 3,000 demonstrators had gathered in the shadow of Big Ben, forcing the closures of Westminster Bridge and the Westminster Underground station.

Suren Surendiran, of the British Tamils Forum, said the protest had been led by students, but that people of all ages from across the UK had joined in.

"These are people who have relatives and friends in Sri Lanka; people who have lost brothers and fathers and sisters," he said.

"As British citizens, they want the UK government to act. Rather than just calling for a ceasefire, they should go to the UN security council to demand one."

Many of the protesters are carrying banners with slogans such as "Stop Sri Lanka's Genocide of Tamils", chanting or banging drums.

  • கருத்துக்கள உறவுகள்

- தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் -

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் தமிழர்களுக்கு தலை வணங்கி முக்கியமான சிலவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

1.உலகம் முழுவதும் எதிர்ப்பைக் காட்டுவது நமது நோக்கமாக இருக்க முடியாது. உலகம் முழுவதும் நமக்குச் சார்பாக நாடுகள் செயல்படக்கூடிய சூழலை ஏற்படுத்துவதுதான் நமது நோக்கமாக இருக்க முடியும். இது உலக நாடுகளைச் சேர்ந்த அனுதாபமுள்ள அரசியல் சக்திகள் செயல்பட்யல்படுவதற்க்கான Political space உருவாக்குவதன் மூலம்தான் சாத்தியம். எப்பவும் தடை செய்யமுடியாத பரந்துபட்ட புலம் பெயர் தமிழ் மக்களது அடையாளங்களுடன் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதன் மூலம்தான் நாம் அவசர தேவையான Political Space உருவாக்கிட முடியும். தடை செய்யப் பட்ட துருக்கிய PKK போல கொடிகளையும் பதாகைகளையும் முதன்மைப் படுத்தாமல் மக்களை முதன்மைப் படுத்துவதே வெற்றியின் திறவுகோல் ஆகும். நமது போராட்டங்கள் பரந்துபட்ட வெகுஜன முன்னணிகள் Broad Front போராட்டங்களாக மாறட்டும்.

2. இனியும் தமிழ்நெற் மற்றும் பேச்சாளர்கள் மெள்னமாக இருப்பது போராட்டங்களின் நம்பகத் தன்மைக்கு ஊறு விழைவிக்கும்.

Edited by poet

BBC தன் முன் பக்கத்தில் முக்கிய செய்தியாக பிரசுரித்துள்ளது. எனக்கு தெரிந்து இதுதான் முதல் தடவையாக நீண்ட காலத்தின் பின் தமிழ் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை BBC முன் பக்கத்தில் தன் இணையத்தில் போட்டுள்ளது

இதுவரை நடந்த ஆர்ப்பாட்டங்கள் காவற்துறை அனுமதி பெற்று அவர்கள் அனுமதி வழங்கிய இடங்கள் ஊடாக மக்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெற்றது. எனவே அது பெரிதாக யாரையும் கவர்ந்திருக்காது.

ஆனால் இப்ப நடந்து கொண்டிருக்கும் மறியல் போராட்டங்களில் தன்னெழுச்சியாக மக்கள் குதித்துள்ளனர். போக்குவரத்து வீதிகள் மூடப்பட்டு மக்களின் அன்றாட அலுவல்கள் சற்று பாதிக்கப்பட்ட பொழுது ஊடகங்களுக்கும் இதுபற்றிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

ஆக, அந்த வெள்ளையனும் அமைதியான ஆர்ப்பாட்டத்தை பெரிதுபடுத்துவதில்லை...விரு-ம்-புவதுமில்லை.. <_<

உணர்வுமிக்க இப்போராட்டம் செவிடனாக நடிப்போரை நிச்சயம் விழிக்கவைக்க வேண்டும்.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானிய இராணுவப் பொலிசார் அராஜகம் சிறுவர் குழந்தைகள் தூக்கி எறியப்பட்டனர்

http://www.tamilwin.com/view.php?2adCE999b...G7fcd0ebPh2gsde

பிரித்தானியாவில் இன்று காலை பொலிசார் தமிழ்மக்களின் ஆர்பாட்டத்தை கலைக்க முற்பட்டபோது மக்கள் மறுத்தனர். அப்போது அவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தினர். இதன்போது பெண்கள் குழந்தைகள் உட்பட பல மக்களுக்கு காயம் ஏற்பட்டது. குழந்தைகளை தூக்கி எறிந்ததாகவும் கூறப்படுகிறது. சிலருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மக்களை வீதிகளில் இருந்து தள்ளிக்கொண்டுபோய் வேறு இடத்தில் விட்டுள்ளார்கள்.

போதுமான அளவு மக்கள் அந்த இடத்தில் இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. பல மக்கள் காலையிலே புறப்பட்டு சென்றபின் குறைந்த அளவு மக்கள் நின்றபோதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது!

Tamils rally outside Parliament

Police tackle Tamil protesters at Westminster

_45641013_007140984-1.jpg

_45640417_bigben220_getty.jpg

_45640418_chariots220_getty.jpg

_45640434_bridge300_other.jpg

_45640439_sleep466_getty.jpg

_45641012_007140946-1.jpg

_45640992_007140865-1.jpg

http://news.bbc.co.uk/2/hi/uk_news/7986838.stm

பாராளுமன்றம் முன்பாக அமைதியாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் மீது போலீசார் அராஜகம் சிறுவர் குழந்தைகள் அனைவரும் தூக்கி எறியப்பட்டனர்

பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள், உடனே அணிதிரளுங்கள் பாராளுமன்றம் நோக்கி !!! எமது சிறுவர்கள் குழந்தைகள் , முதியோர் என பாராமல், பிரித்தானிய இராணுவ பொலீசார், இன்று காலை எமது தமிழ் உறவுகளை தூக்கி எறிந்து காயப்படுத்தியுள்ளனர்.

அமைதியாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எமது உறவுகளை பலவந்தமாக தூக்கி எறிந்து அப்புறப்படுத்தியுள்ளது பிரித்தானிய பொலீஸ். எமது உறவுகளே உடனே உங்கள் வேலை அனைத்தையும் நிறுத்திவிட்டு பாராளுமன்றம் முன்பாக கூடவும்.

எமது பல உறவுகள் காயமடைந்துள்ள நிலையில் அங்கு தொடர்ந்தும் போராடிவருகின்றனர் அவர்களை நாம் கைவிடக்கூடாது. தோள்கொடுப்போம் , ஆகையால் விரைந்து வாருங்கள் உறவுகளே .

இன்று மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதனால், அதற்கும் ஆயத்தமாக வாருங்கள்,

தொடர்ந்தும் அமைதிவழியில் எமது போராட்டத்தை முன்னெடுப்போம் ! அனைத்து பிரித்தானிய தமிழ் உறவுகளும் வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

www.tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

uk-பொலிசாரால் தாக்கப்பட்டவர்கள் இந்த தொலை பேசி இலக்கத்திற்கு அழுத்தங்கள்.

08453002002 இதற்க அழைத்து மதலாம் நம்பருக்க அழுத்திள் முறையிடுகளை பொலிசாரின் அராஜகத்தை தெரிவியுங்கள்

மனித உரிமை மைய இலக்கம் உங்களை காக்க அவர்கள் உடன் நடவடிக்கை எடுப்பார்கள்........................

நன்றி ..........கலகம்

நன்றி நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒளிப்பதிவு காட்சிகள்

Get Flash to see this player.

http://www.vakthaa.tv/v/3600/london-protest-07.04.2008-2-am

Edited by மோகன்

லண்டன் தமிழர்களுக்கு தலை வணங்கி முக்கியமான சிலவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

1.உலகம் முழுவதும் எதிர்ப்பைக் காட்டுவது நமது நோக்கமாக இருக்க முடியாது. உலகம் முழுவதும் நமக்குச் சார்பாக நாடுகள் செயல்படக்கூடிய சூழலை ஏற்படுத்துவதுதான் நமது நோக்கமாக இருக்க முடியும். இது உலக நாடுகளைச் சேர்ந்த அனுதாபமுள்ள அரசியல் சக்திகள் செயல்பட்யல்படுவதற்க்கான Political space உருவாக்குவதன் மூலம்தான் சாத்தியம். எப்பவும் தடை செய்யமுடியாத பரந்துபட்ட புலம் பெயர் தமிழ் மக்களது அடையாளங்களுடன் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதன் மூலம்தான் நாம் அவசர தேவையான Political Space உருவாக்கிட முடியும். தடை செய்யப் பட்ட துருக்கிய PKK போல கொடிகளையும் பதாகைகளையும் முதன்மைப் படுத்தாமல் மக்களை முதன்மைப் படுத்துவதே வெற்றியின் திறவுகோல் ஆகும். நமது போராட்டங்கள் பரந்துபட்ட வெகுஜன முன்னணிகள் Broad Front போராட்டங்களாக மாறட்டும்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு உங்களின் உளுத்துப் போன பிரச்சாரங்களை செய்யப் போகின்றீர்கள்? புலிகளை இல்லாது ஆக்கி மக்களை இராணுவத்தின் கைகளில் ஒப்படைக்க முயலும் சதிநாச வேலையில் புலம் பெயர் மக்களை ஈடுபடச் சொல்கின்றீர்களா கவிஞரே?

இவ்வளவு காலமும் என்கிருந்தீர்கள்? நீங்கள் சொன்ன விதத்தில் முன்னின்று போராட்டம் நடாத்தி political space இனை உருவாக்கியிருக்கலாம் தானே? நீங்கள் சொல்வது சரியாக இருந்தால், நிச்சயம் மக்களும் இன்று போராட்டங்களை முன்னெடுக்கும் இளைய சமுதாயமும் செவிசாய்த்து இருக்கும். ஆனால் உங்களால் வெறும் பிரச்சாரம் மட்டும்தான் செய்யமுடியும். இன்று இளைய சமுதாயம் மக்கள் போராட்டத்தினை கையில் எடுத்த பின் இனியும் உங்களுக்கான இடம் கிடைக்கவே கிடைக்க போவதில்லை என்றறிந்து விட்டு உளராதிர்கள்.

புலியழிப்பு எனும் பெயரில், எதிரியானவன் கருகிய உடலங்களாய் மக்களை கொன்று குவிக்கும் இந்த நேரத்திலும் பிரச்சாரம் செய்து தம்மை முன்னிலைப் படுத்த நினைக்கும் அறிவு ஜீவிகளை என்னவென்று சொல்வது?

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்... புலிகள் மீது விமர்சனங்கள் இருக்கலாம். அவர்கள் சில தவறுகளை தெரிந்தே விட்டிருக்கலாம். ஆனால் புலிகள் இல்லாமல் ஈழத் தமிழ் மக்கள் இல்லை. புலிகள் தான் மக்கள்...மக்கள் தான் புலிகள். தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வு என்பது புலிகளின் இருப்பில் மாத்திரமே சாத்தியம்.

தமிழனின் சாபக்கேடு சிங்களவனை போன்ற குரூரமானவனை தன் எதிரியாக கொண்டு பிறந்ததல்ல, இத்தகைய மனிதர்களையும் தன் சமூகத்தில் கொண்டிருப்பதுதான்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன் தமிழர்களுக்கு தலை வணங்கி முக்கியமான சிலவற்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

1.உலகம் முழுவதும் எதிர்ப்பைக் காட்டுவது நமது நோக்கமாக இருக்க முடியாது. உலகம் முழுவதும் நமக்குச் சார்பாக நாடுகள் செயல்படக்கூடிய சூழலை ஏற்படுத்துவதுதான் நமது நோக்கமாக இருக்க முடியும். இது உலக நாடுகளைச் சேர்ந்த அனுதாபமுள்ள அரசியல் சக்திகள் செயல்பட்யல்படுவதற்க்கான Political space உருவாக்குவதன் மூலம்தான் சாத்தியம். எப்பவும் தடை செய்யமுடியாத பரந்துபட்ட புலம் பெயர் தமிழ் மக்களது அடையாளங்களுடன் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதன் மூலம்தான் நாம் அவசர தேவையான Political Space உருவாக்கிட முடியும். தடை செய்யப் பட்ட துருக்கிய PKK போல கொடிகளையும் பதாகைகளையும் முதன்மைப் படுத்தாமல் மக்களை முதன்மைப் படுத்துவதே வெற்றியின் திறவுகோல் ஆகும். நமது போராட்டங்கள் பரந்துபட்ட வெகுஜன முன்னணிகள் Broad Front போராட்டங்களாக மாறட்டும்.

2. இனியும் தமிழ்நெற் மற்றும் பேச்சாளர்கள் மெள்னமாக இருப்பது போராட்டங்களின் நம்பகத் தன்மைக்கு ஊறு விழைவிக்கும்.

"புலி" தான் ஈழத்தமிழன்ர "குறியீடு" எண்டேக்க.......................

"புலிக்கொடி" தான் மக்களின்ர அடையாளம்..............

"பிரபாகரன்" தான் மக்களின்ர அடையாளம்.................

சும்மா ஆங்கில வார்த்தையளை அங்கங்க தூவி.............. அறிவுசீவித்தனங்கள காட்டுறதே எங்கட சில "மே" தாவியளின்ர வேலை..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது மக்களுக்கு போராட்ட வலுவையும், துணிச்சலையும் கொடுத்தவர்கள் யாரென மக்களும் அறிவார்கள் சர்வதேசமும் அறியும். அதனை மறைத்துவிட்டு நடியுங்கள் என திpரு. பொயட் சொல்கிறார். ஒரு பணிவான வேண்டுகோள் பொயட் அவர்களே நீங்கள், உங்கள் கவித்திறனையும், மற்றும் உங்களிடமுள்ள இன்னோரன்ன திறமைகளையும் பாவித்து ஒரு மக்கள் எழுச்சிப் போராட்டத்தை, உங்கள் விருப்பப்படி நடாத்துங்கள். அது எந்த இடத்தில் நடந்தாலும் நானும் வந்து கலந்து கொள்கிறேன்.

Edited by MI7

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வு என்பது புலிகளின் இருப்பில் மாத்திரமே சாத்தியம்

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் உங்களால் என்ன செய்யமுடியுமோ அதை மட்டும் செய்யுங்கள் ..மற்றையவர்கள் என்ன செய்யமுடியுமோ அதை அவர்கள் செய்யட்டும்.இது தன்னிச்சையான கட்டுப்பாடுகளற்ற மக்களின் எழச்சி.இதில் ஆலோசனைகளை யாரும் கேட்கவில்லை.. கேட்கவும் போவதில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எத்தனை நாட்களுக்கு உங்களின் உளுத்துப் போன பிரச்சாரங்களை செய்யப் போகின்றீர்கள்? புலிகளை இல்லாது ஆக்கி மக்களை இராணுவத்தின் கைகளில் ஒப்படைக்க முயலும் சதிநாச வேலையில் புலம் பெயர் மக்களை ஈடுபடச் சொல்கின்றீர்களா கவிஞரே?

இவ்வளவு காலமும் என்கிருந்தீர்கள்? நீங்கள் சொன்ன விதத்தில் முன்னின்று போராட்டம் நடாத்தி political space இனை உருவாக்கியிருக்கலாம் தானே? நீங்கள் சொல்வது சரியாக இருந்தால், நிச்சயம் மக்களும் இன்று போராட்டங்களை முன்னெடுக்கும் இளைய சமுதாயமும் செவிசாய்த்து இருக்கும். ஆனால் உங்களால் வெறும் பிரச்சாரம் மட்டும்தான் செய்யமுடியும். இன்று இளைய சமுதாயம் மக்கள் போராட்டத்தினை கையில் எடுத்த பின் இனியும் உங்களுக்கான இடம் கிடைக்கவே கிடைக்க போவதில்லை என்றறிந்து விட்டு உளராதிர்கள்.

புலியழிப்பு எனும் பெயரில், எதிரியானவன் கருகிய உடலங்களாய் மக்களை கொன்று குவிக்கும் இந்த நேரத்திலும் பிரச்சாரம் செய்து தம்மை முன்னிலைப் படுத்த நினைக்கும் அறிவு ஜீவிகளை என்னவென்று சொல்வது?

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்... புலிகள் மீது விமர்சனங்கள் இருக்கலாம். அவர்கள் சில தவறுகளை தெரிந்தே விட்டிருக்கலாம். ஆனால் புலிகள் இல்லாமல் ஈழத் தமிழ் மக்கள் இல்லை. புலிகள் தான் மக்கள்...மக்கள் தான் புலிகள். தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வு என்பது புலிகளின் இருப்பில் மாத்திரமே சாத்தியம்.

தமிழனின் சாபக்கேடு சிங்களவனை போன்ற குரூரமானவனை தன் எதிரியாக கொண்டு பிறந்ததல்ல, இத்தகைய மனிதர்களையும் தன் சமூகத்தில் கொண்டிருப்பதுதான்

சத்தியமான உண்மை சரியாய் சொன்னீங்கள் நிழலி இவர்கள் வன்னியில் இவ்வளவு மக்கள் அழிந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் புலியை குற்றம் சொல்வதிலேயே தங்கள் காலத்தை கழிப்பவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.