Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேசுக்கு இந்திரா காந்தி படை அனுப்பிய தர்மத்தின் அடிப்படையில் இலங்கைக்கு நான் படை அனுப்பி ஈழம் அமைப்பேன்!": மீண்டும் வலியுறுத்துகின்றார் ஜெயலலிதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் சில அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அரசியல் சூதாட்டம் நடத்துகின்றனர். ஆனால், இந்திரா காந்தி எந்த அனைத்துலக சட்டத்தை பின்பற்றி பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே அனைத்துலக சட்டத்தை பின்பற்றி - அதே தர்ம நியாயங்களை பின்பற்றி - நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே 'தனி ஈழம்' அமைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்லில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, உண்ணாவிரத நாடகம் நடத்தி; தான் உண்ணாவிரதம் இருந்ததால், உடனே இலங்கை அரசு, போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டது; எனவே தனது உண்ணாவிரதத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று அறிவித்துவிட்டு, வந்த வேகத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு, வீடு திரும்பிவிட்டார் கருணாநிதி.

ஆனால் உண்மையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதா? அப்படி அறிவிக்கவே இல்லை, என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டுள்ளது. "போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது" என்று கருணாநிதி அறிவித்துவிட்டு, வீடு போய் சேருவதற்குள்ளாகவே, "போர் நிறுத்தம் செய்வதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை" என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டது.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவம் மேற்கொண்டிருக்கும் தாக்குதல் இடைவிடாது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இராணுவத்தின் தொடர் தாக்குதலில் எண்ணற்ற தமிழர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் என்று அங்கிருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன.

முள்ளிவாய்க்கால் என்ற தமிழர் கிராமத்தில், நேற்று மட்டும், இலங்கை விமானப் படை 23 முறை வானத்தில் இருந்து குண்டு வீசியதாக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்காலை சுற்றியுள்ள தமிழர் பகுதிகள் மீது இலங்கை இராணுவத்தின் கடற்படை, பீரங்கிகள் பொருத்தப்பட்ட படகுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறது.

Multi Barrel Rocket Launcher என்ற பல ரொக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசித் தாக்கும் கருவியைக் கொண்டு இராணுவத்தின் தரைப்படை, முள்ளிவாய்க்காலின் வடக்குப் பகுதியில் இருந்து தமிழர்களைத் தாக்கி இருக்கிறது.

இந்தத் தாக்குதல்கள் எல்லாம் எந்த நேரத்தில் நடைபெற்றது தெரியுமா?

தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி மெரினா கடற்கரையில் நேரடி ஒளிபரப்பு வசதியோடு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி முடித்த அந்த நேரத்தில்.

கருணாநிதி காலை உணவை முடித்துவிட்டு, மதிய உணவை உட்கொள்வதற்கு முன்பாக, இடைப்பட்ட மூன்று மணி நேரம், உண்ணாவிரதம் இருந்ததற்காக, கருணாநிதியின் தொண்டர்கள், ஊர் முழுவதும் பேருந்துகளை அடித்து, நொறுக்கி, கடைகளை சூறையாடி, பொதுமக்களை அச்சுறுத்தி, அராஜக ஆட்டம் போட்ட அந்த நேரத்தில் தான், இலங்கையில் தமிழர்கள் இத்தகைய கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

பகடைக் காய்கள்

என்றைக்கு ஓயும் எங்கள் தமிழர் துயரம் என்று நாம் நினைக்காத நாளில்லை. வேண்டாத தெய்வமில்லை. இத்தகைய துயரமான சூழ்நிலையில், இந்தியாவில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் சிலர், தேர்தல் தோல்வி உறுதி என்று ஆகிவிட்ட நிலையில், இலங்கைத் தமிழர்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, அரசியல் சூதாட்டத்தில் காய்கள் நகர்த்துகின்றனர்.

இந்தக் கயமையை நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் கண்டிக்க வேண்டும்.

மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி, நாடாளுமன்றத் தேர்தலில் தனது கூட்டணி பெறப் போகின்ற அவமானகரமான தோல்வியை எண்ணி அஞ்சுகிறார். அதன் எதிரொலி தான் அண்ணா சமாதியில் உண்ணாவிரத நாடகம்.

தனது நாடகம் வெற்றி பெற்றுவிட்டதாக உலகுக்கு அறிவிக்க முயற்சித்து அதில் மீண்டும் தோல்வியுற்றிருக்கிறார் கருணாநிதி. உண்மை தோற்றதில்லை; பொய் ஒருபோதும் வென்றதில்லை என்பதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதும்.

"கெட்டிக்காரனின் பொய்யும், புரட்டும் எட்டு நாளில் தெரிந்துவிடும்" என்பது தமிழ்நாடே அறிந்த பழமொழி.

தன்னை கெட்டிக்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, அரங்கேற்றிய பொய் நாடகம், புரட்டு வசனம் எட்டு மணி நேரம் கூட தாங்கவில்லை. வேடம் கலைந்தது. தமிழர்களின் வேதனை தொடர்கிறது.

தமிழர் போராட்டங்கள்

இலங்கைத் தமிழர்களின் துயரத்தைப் போக்க, சென்னையில் 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்கள் பெண்கள்.

தென் ஆப்பிரிக்காவில், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை வரும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார் ஒரு தமிழர்.

பிரிட்டனில் உண்ணாவிரதம் இருந்தவரின் உயிர் ஊசலாடுகிறது. உலகெங்கும் தமிழர்கள் அறிவிக்கப்படாத உண்ணாவிரதங்களை தங்கள் வீடுகளில் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், உலகத்திலேயே மிகக்குறுகிய நேரம், அதாவது 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த ஒரே நபர் இந்தக் கருணாநிதி தான்.

தேவையான ஊட்டச் சத்துக்களைப் பெற்றுக்கொண்டு, ஊரை ஏமாற்ற உண்ணாவிரதம் உட்கார்ந்தார் கருணாநிதி.

தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு ஆரம்பித்ததும் படுத்துக்கொண்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் எல்லாம், தங்கள் தொழில்களை ஒத்திவைத்தனர்.

முகத்தில் சோகம் வழிய வழிய கருணாநிதியை சுற்றி சுற்றி வந்து நாடகத்தை சுவாரஸ்யமாக்க முயற்சித்தனர்.

ஊட்டச்சத்துக்கான அடுத்தவேளை வந்தவுடன், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் அலுவலகத்தில் இருந்து ஒரு தகவல் வந்ததாக நாடகத்தை அடுத்த காட்சிக்கு நகர்த்தினார்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கருணாநிதி அறிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடகத்தில் தனது கதா பாத்திரத்திற்கு ஒதுக்கப்பட்ட வசனங்களை ஒப்பித்தார்.

நேரடி ஒளிபரப்பு முடிவடைந்தது. அடுத்த வேளை உணவுக்கு எல்லோரும் புறப்பட்டுச் சென்றார்கள். இலங்கைத் தமிழர்களின் துயரம் தீர்ந்தது.

இனிமேல் இலங்கை ராணுவம் தமிழர்களை வாழ வைக்கும் பணிகளில் ஈடுபடும் என்று இலங்கை இராணுவத்தின் அறிவிக்கப்படாத செய்தியாளராக மாறினார் கருணாநிதி.

வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், Internet, SMS - இவையெல்லாம் நொடிக்கு நொடி உலகெங்கும் இருந்து செய்திகளை பரப்புகின்ற இந்த 21ஆம் நூற்றாண்டில், ஓடாத ரயில் முன் தலை வைத்துப் படுத்தவரின் அந்தக் கால நாடகம் எடுபடவில்லை.

போர் நிறுத்தம்

போர் நிறுத்தம் இல்லை என்று இலங்கை அரசு திட்டவட்டமாகக் கூறுகிறது. இலங்கை அதிபர் செயலகத்தில் இருந்து போர் நிறுத்தம் என்ற ஒரு அறிவிப்பு வந்ததாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் கூறப்படுவது தவறான செய்தி என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறி இருக்கிறது.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் தாக்குதல் தொடர்கிறது. ப.சிதம்பரம் இயக்கத்தில் கருணாநிதி நடிப்பில் அரங்கேற்றப்பட்ட உண்ணாவிரத நாடகம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே, இலங்கை இராணுவத்தின் முப்படைகளும் தமிழர்கள் மீது தாக்குதலைத் தொடர்ந்தன.

இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில், 272 தமிழ் உயிர்கள் பலியாயின. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமுற்றனர்.

இது எல்லா பத்திரிகைகளிலும் ஏப்ரல் 28 ஆம் நாள் காலையில், முதல் பக்க செய்தியாக வெளிவந்துள்ளது.

உண்மை இப்படி இருக்க, கருணாநிதி, சிதம்பரம் போன்றவர்கள் தங்கள் முயற்சியால் போர் நிறுத்தமே ஏற்பட்டுவிட்டதாக நாடகம் ஆடுகிறார்களே! அதை நாம் நம்ப வேண்டும் என்றும் சொல்லுகிறார்களே! அதற்கு பொய் சாட்சி கூற தில்லியில் இருந்து தொலைபேசியில் செய்தி வந்தது என்று சொல்லுகிறார்களே!

இவர்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? தமிழ்நாடு என்றால் அவ்வளவு இளக்காரமாக நினைத்துவிட்டார்களா?

தமிழக மக்கள் இவர்களுக்கு, அவ்வளவு கேவலமாகப் போய்விட்டார்களா?

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, பொய்யிலும், புரட்டிலும் ஈடுபட்டிருக்கும், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினரின் இத்தகைய மோசடி நடவடிக்கைகள், தேர்தல் களத்தில் அவர்களுக்கு எந்தப் பயனையும் தராது.

ஆனால், இவர்களது இத்தகைய மனிதாபிமானமற்ற, நகைப்புக்குரிய ஏமாற்று வேலைகளால், அண்டை நாடு என்ற பொறுப்பிலும், சொந்த சகோதரர்கள் என்ற கடமையிலும், இலங்கைத் தமிழர்களுக்கு செய்திருக்க வேண்டிய அடிப்படை உதவிகளை இந்தியா செய்யவில்லை.

அதற்குக் காரணம், நாடகம் ஆடுவதிலும், அரசியல் ஆதாயம் தேடுவதிலும் காட்டுகின்ற அக்கறையை, தமிழர்களின் துயரத்தைப் போக்குவதில் காட்டவில்லை என்பது தான்.

திமுக-காங்கிரசின் கவனம் எல்லாம், தங்கள் சுய லாபத்திற்காக, இலங்கைத் தமிழர் பிரச்சினையை பயன்படுத்துவதில் தான் இருக்கிறது.

ஆட்சியில், அதிகாரத்தில், செயல்பட வேண்டிய இடத்தில் இருக்கின்றவர்கள் செய்யக்கூடிய பணிகளை நிறைவேற்றுவதில், அவர்களுக்கு சிறிதளவும் அக்கறை இல்லை.

திமுக-விற்கும், காங்கிரசுக்கும், எல்லாமே அரசியல் தான்.

பதவி, பணம், அந்தஸ்து என்பதை நோக்கித் தான், அவர்களுடைய நாடகங்கள் எல்லாம் என்று, தமிழக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டின் விளைவாக வரப் போவது தான், அவர்களுடைய தேர்தல் தோல்வி; மக்களின் தேர்தல் வெற்றி.

இலங்கைத் தமிழர் மீது உண்மையான அக்கறை கொண்ட புதிய ஆட்சி அடுத்து மலரப் போகிறது. அதற்கான முன் அறிவிப்பு தான் இங்கே அலைகடலெனக் கூடியிருக்கும் மக்கள் கூட்டம்.

ஈழத் தமிழர் நலன் காக்க, மோசடி அரசியல்வாதிகளின் முகத்திரைகளைக் கிழிக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள். எனது கரத்தை வலுப்படுத்துங்கள்.

நாம் அமைக்கப் போகும் புதிய மத்திய அரசு, தமிழர் உரிமைகளை காப்பாற்றும் அரசாக அமைவது உறுதி, உறுதி, உறுதி

சர்வதேச சட்டம்

காங்கிரஸ் தேய்ந்து கொண்டே வருகிறது என்பதற்கு அடையாளமாகத் தான் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் எல்லாம் அமைந்து இருக்கின்றன.

அந்த அளவிற்கு வரலாறு தெரியாதவர்களும், விவரம் புரியாதவர்களும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களாக இருக்கின்றார்கள்.

எங்களுடைய சொல்லைக் கேட்கும் புதிய மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அண்மையில் சொல்லி இருந்தேன்.

இதற்கு ஒரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், "இந்த அம்மாவுக்கு சர்வதேச சட்டம் (International Law) தெரியவில்லை. எப்படி இலங்கையில் தனி ஈழம் அமைக்க முடியும்? இலங்கை என்ன இந்தியாவின் மாவட்டமா? காலனியா?" என்று வினவியிருக்கிறார். இதிலிருந்து இவர் தான், விவரம் புரியாத ஒரு மனிதர் என்பது தெரிகிறது.

இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது, கிழக்கு பாகிஸ்தான் மீது படையெடுத்து பங்களாதேசுக்கு விடுதலை வாங்கித் தரவில்லையா! இந்திரா காந்திக்கு சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்? 1971 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போரை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மறந்துவிட்டார் போலும்! இனவெறியை தடுப்பதற்காகத் தான் இந்தப் போரை இந்திரா காந்தி நடத்தினார் என்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பிறகு, இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தி இந்திய நாட்டின் பிரதமாக இருந்த போது, இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பவில்லையா? அவருக்கும் சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்?

இந்திரா காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி, பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, ராஜீவ் காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பினாரோ; அதே சர்வதேச சட்டத்தை பின்பற்றித் தான், அதே தர்ம நியாயங்களை பின்பற்றித் தான், நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி அங்கே தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொல்கிறேன்.

தேசத் துரோகம்

இலங்கையில் தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது தேசத் துரோகச் செயல் என்று மற்றொரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்தியாவை துண்டாட நினைப்பது தான் தேசத் துரோகச் செயலே தவிர, இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று சொல்வது தேசத் துரோகச் செயல் அல்ல என்று நான் தெளிவுபடுத்தினேன்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை முற்றிலுமாக புறக்கணித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் மதிக்காமல், இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை தாரை வார்த்தது தான் தேசத் துரோகச் செயல்! இதைச் செய்தது காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான். இதிலிருந்து யார் தேசத் துரோகி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கபடச் சதி

இப்போது ஒரு முக்கியமான விடயத்தை சொல்லப் போகிறேன். கவனமாக கேளுங்கள். கருணாநிதி - ராஜபக்சவின் சதித் திட்டத்தைப் பற்றி கிடைத்த தகவலை, நான் உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதி ராஜபக்சவுடன் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து எனக்கு தகவல்கள் வந்துள்ளன.

அதாவது கருணாநிதி ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். "இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. தனி ஈழம் அமைப்பேன் என்று அவர் தெரிவித்து விட்டதால், ஜெயலலிதாவுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. நாளைக்கு அவர் சொல்கிறபடி கேட்கும் மத்திய அரசு அமைந்து விட்டால், இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவார் ஜெயலலிதா.

ஜெயலலிதா சொன்னால் செய்து விடுவார். அவர் உறுதியான முடிவை எடுக்கக் கூடியவர். பிறகு உங்களுக்குத் தான் பிரச்சினை. எனவே அப்படி நடக்காமல் இருக்க நான் சொல்வதை கேளுங்கள். தேர்தல் நடக்கும் நாளான மே மாதம் 13 ஆம் நாள் வரை உண்மையாகவே போர் நிறுத்தம் செய்யுங்கள். அப்பொழுது தான் நான் வெற்றி பெற முடியும். நான் வெற்றி பெற்று என்னுடைய தயவில் மீண்டும் மத்திய அரசு அமைந்தால், நீங்கள் இலங்கைத் தமிழர்களை உங்கள் விருப்பம் போல் எளிதாக ஒழித்துக் கட்டிவிடலாம். நீங்கள் எனக்கு உதவினால், நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

"எனவே, உங்களுக்குப் பிரச்சினை வராமல் தடுக்க, மே மாதம் 13 ஆம் நாள் வரை, போர் நடத்தாமல் பொறுத்து இருங்கள். இங்கே தேர்தல் முடிந்த உடன், உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்று கருணாநிதி ராஜபக்சவிடம் பேசி இருப்பதாக நம்பகமான தகவல்கள் வந்துள்ளன.

தன் பதவி பறிபோகிறது என்றால் எதையும் துணிவுடன் செய்வார் கருணாநிதி. கருணாநிதியின் தன்னலம் குறித்து நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

எனவே, வருகின்ற தேர்தலில் தமிழினத் துரோகி கருணாநிதிக்கு மீண்டும் எழுந்திருக்க முடியாதபடி மறுபடியும் தலைதூக்க முடியாதபடி நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் இரு கரம் கூப்பி, வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

செய்வீர்களா?... நீங்கள் செய்வீர்களா?... என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.puthinam.com/full.php?2b1VoUe0d...d434OO2a030Mt3e

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

யோசிப்பதற்கு இது நேரமில்லை, எதிரியை மன்னிக்கலாம், தூரோகியை மன்னிக்ககூடாது, பழைய சம்பவங்களை மனதில் வைத்து கருணாநிதி எண்ட கறுப்பு கண்ணாடி, மனிதர்கள் உயிரின் மேல் விளையாடுகிறது, உயிர்களின் பெறுமதி பற்றி தெரியாத ஹிட்லருக்கு ஆதரவு குடுத்த முசேலினி பிறந்த நாட்டிலிருந்து வந்த சோனியாவுக்கு தமிழ் உயிர் மேல் மட்டும் என்ன இரக்கமா இருக்கபோகின்றது?

தமிழர்களுக்கு பாரிய தவறை தற்போதையை இந்திய அரசாங்கம் செய்துகொண்டு இருக்கின்றது என்று தமிழீழ விடுதலை புலிகளின் அரசியற் துறை பொறுப்பாளரே வெளிப்படையாக தெரிவித்துவிட்டார்,

எம் அன்பான தமிழக உறவுகளே இந் நேரத்தில் வெள்ளை தோல் போர்த்திய கறுப்புக்கண்ணாடிக்கு வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டவேண்டும். கிளர்ந்தெழுங்கள், தயவு செய்து.

மக்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப் படாத, நாம் இராணுவ ரீதியில் வெற்றி பெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்தில் எம்மை ஆதரிப்பதாய் நடித்து, பின் எம் மக்கள் பெருமளவில் கொல்லப் பட்டு இராணூவ ரீதியில் பெரும் பின்னடைவுகளை சந்தித்து கொண்டிருக்கும் போது எம்மை கை கழுவி அழிவிற்கு மேலும் வளம் சேர்த்த கருணாநிதியை விட, எல்லாராலும் கைவிடப் பட்ட நிலையிலாயினும் எமக்காய் இன்று குரல் தரும் ஜெயா அம்மையார் இன்றைய காலகட்டத்தில் சிறந்த ஒருவராகவே தெரிகின்றார்

தமிழக் அரசியல் வாதிகள் எம்மை எப்படி பயன்படுத்தி கொள்கின்றனரோ அதே போல் நாமும் அவர்களை பயன்படுத்தி எம் இலக்கினை அடைய வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனது நாடகம் வெற்றி பெற்றுவிட்டதாக உலகுக்கு அறிவிக்க முயற்சித்து அதில் மீண்டும் தோல்வியுற்றிருக்கிறார் கருணாநிதி. உண்மை தோற்றதில்லை; பொய் ஒருபோதும் வென்றதில்லை என்பதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதும்.

.

http://www.puthinam.com/full.php?2b1VoUe0d...d434OO2a030Mt3e

அம்மா சரியா சொன்னா :unsure:

:unsure: அடேங்கப்பா....விட்டா ஜெயா தலமையில் தமிழ்நாட்டு படையணி ஒன்று வன்னியில் தரையிறங்கும் போல இருக்குதே
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:unsure: அடேங்கப்பா....விட்டா ஜெயா தலமையில் தமிழ்நாட்டு படையணி ஒன்று வன்னியில் தரையிறங்கும் போல இருக்குதே

நெப்போலியன் பொறுத்து இருந்து பாப்போம்..

அம்மா ரொம்ப துனிஞ்சவா போல இருக்கு..எல்லாம் நல்ல மாரி நடந்தா சரி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைபுலிகள்தான் ஈழதமிழர்களின் பாதுகாவலர் என்று இந்தீய நாட்டுக்கு உரத்து சொல்லி தடையை நீக்குங்கோ :unsure:

அம்மா என்றால் சும்மா இல்லேடா அவ இல்லைனா யாரும் இல்லைடா..........................

  • கருத்துக்கள உறவுகள்

இதே களத்தில் ஜெயலலிதாவை திட்டாதிட்டில்லை. இப்போ அம்மா ஐயா என்றாங்கப்பா.

எம்மைப் பொறுத்தவரை செயலின்றிய சொற்களுக்கு மயங்கும் நிலை இருக்கின்ற படியால் தான் எல்லாரும் ஏமாற்றிறாங்க. சொல் ஒன்று செயல் இன்னொன்றாக அமைவதே தமிழர்களின் அரசியலாகிப் போச்சுது..!

பொறுத்திருந்து பார்ப்போம்.. அம்மாவா.. ஐயாவா என்று.

எமக்கு எல்லோரும் அவசியம். ஒருவரை உயர்த்தி மற்றவரை தாழ்த்துவது எமக்குத்தான் ஆபத்தானது..! தமிழக அரசியல் கட்சிகள் எமது விடயத்தில் ஒன்றிணைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. அம்மா தனிய ஐயா தனியச் செய்ய வேண்டாம்.. சொல்ல வேண்டாம். ஒருங்கிணைந்த பலத்தைக் காட்டுங்கள். நிச்சயம் எதிரி அஞ்சுவான். :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன் சொல் கேட்கும் மத்திய அரசு அமைந்தால்" ......அப்படியொரு கொக்கியோடுதான் தன் கருத்தை வலியுறுத்தி இருக்கின்றார் ஜெயா அம்மா.

இந்திய அரசியல்வாதிகள் ஈழத்தமிழர் வாழ்க்கையில் மிக அதிகமாக விளையாடி பல்லாயிரம் உயிர்களை காவுகொண்டிருக்கின்றார்கள். அந்தப்பாவத்தின் சம்பளம்....? !!...பார்க்கலாம் சொல்வதை துணிந்து செய்வீர்களாயிருந்தால்.....மீண்

டும் சொல்கின்றேன் புரட்சித்தலைவரின் ஆத்மா உங்களை வாழ்த்தும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னவோ எதுவுமே நம்பஏலாமல்கிடக்கப்பா நாளைக்கு எதுவும் நடக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெப்போலியன் பொறுத்து இருந்து பாப்போம்..

அம்மா ரொம்ப துனிஞ்சவா போல இருக்கு..எல்லாம் நல்ல மாரி நடந்தா சரி

குட்டிப் பையா... எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுதலே தமிழனின் பலவீனம்.... விட்டால் அம்மா பேரவையை ஆரம்பித்து விடுவீர்கள் போல இருக்கிறதே... அம்மா எப்படி எல்லாம் அந்தர் பல்டி.. ஆகாய பல்டி அடிப்பார் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.... தமிழக கருணாவுக்கு செக் வைக்கவே ... ஈழப் பிரச்சினையைக் கையிலெடுத்து உள்ளார்... போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொல்லியவர் தான் நீங்கள் புகழ் பாடும் இந்த ஜெ.... அப்படிச் சொன்னவர், இன்று ஈழ உறவுகளின் துயர் கண்டு சொல்லொனாத் துயரம் அடைந்தவர் போல பேசிக் கொண்டிருக்கிறார்.. பார்க்கலாம் எவ்வளவு காலம் என்று...

தமிழகத்து உறவுகளாகிய நாங்களே .. அம்மாவையும் நம்பாமல்... ஐய்யாவையும் நம்பாமல்,,,, தலைவரை நம்பிக் கொண்டிருக்கிறோம்... தலைவன் வழி நடப்போம்... ஈழம் காண்போம்

Edited by புலேந்திரன்

கொஞ்சம் யோசியுங்கள் . இந்த அம்மாவைப்பற்றி . அப்படி மக்களை ஏமாற்ற நினைத்திருந்தால் எப்போதே தனி ஈழம் ஆதரவு கானம் பாடி இருப்பார் . நல்லவரோ கேட்டவரோ விட்டுத்தள்ளுங்கள் . ஆனால் பிடிவாதக்காரி , அகங்காரம் பிடித்தவர், பெருங்கோபம் கொண்டவர், தலைக்கனம் அதிகம் என்று எதிரிகள் / பத்திரிக்கை காரர்கள் எள்ளி நகையாடும் அம்மையார் இவர் . இரு பெரும் இந்திய கட்சிகளே இவரை கண்டு நடுங்குகிறது . தனது சொல் கேட்கவில்லைஎன இந்திய அரசையே கவிழ்த்தவர் . ஒட்டு மொத்த தமிழினமும் எதிர்த்தபோது கூட நட்பை (சசிகலா ) விடாதவர் . பிற்படுத்தப்பட்ட சமூக ஓட்டுகள் கிடைக்காது என தெரிந்தும் பலிதடை சட்டம் போட்டவர் . மிகப்பெரிய ஒட்டு வங்கியான அரசு பணியாளர்கள் போராட்டத்தையே அடக்கி ஒடுக்கியவர் ( இருமுறை ) .இப்படிப்பட்டவர் முடிவு எடுத்தால் மாற மாட்டார்கள் ஒரு முறை பிடித்தால் உடும்பு போல விடாதவர் . துரோகி ஆக மாட்டார் . ஆனால் கவனம் இன்றும் அவர் புலிகளை ஆதரிக்க வில்லை . தப்பான அர்த்தம் எடுத்துக்கொண்டு பின்னாளில் இவருக்கும் துரோகி பட்டம் கட்ட வேண்டாம். யாராவது அண்டிப்பிழைக்கும் நாய்கள் இவரை மாற்ற கூடிய அபாயம் உள்ளது .

நல்லதே நினைப்போம் . நல்லதே நடக்கும் ( என நினைக்கிறேன் )

Edited by tamil paithiyam

இப்போதைய இப்படிப்பட்ட இன அழிப்பை இதாலிய காங்கிரஸ் ஊக்குவிக்க காரணம் திமுக அதன் முந்தானையில் . அதிமுக எப்போதும் அந்த அளவாக ஈழ விஷயத்தில் அலட்டிக்காது என்ற அலட்சிய எண்ணமே . ஆனால் இப்போது அம்மா வைத்தார் ஆப்பு . இதுதான் உண்மையான ஆப்பு . லேட்டா வந்தாலும் லெத்தெஸ்தா வந்துவிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் "எங்களுக்கு என்ன கிடைக்கும்?" எண்டு பாக்கேக்க மரணமே வாழ்வாகிப் போன நாங்களும் "எங்களுக்கு யார் விடுதலை பெற உதவுவார்?" எண்டு யோசிக்கிறதில ஒரு பிழையும் இல்ல. ஜெயா அம்மையாரையும் யாழ் களத்தில திட்டித் தீர்த்திருந்தாலும் கருநாயத் திட்டின மாதிரி யாரும் ஜெயாவைத் திட்டினதா எனக்கு நினைவில்லை. எனக்கு இப்பிடித் தான் யோசிக்க வருகுது, தவறெண்டா மன்னியுங்கோ:

1. மேல தமிழ் பைத்தியம் சொன்ன மாதிரி கருநாய் துரோகி, ஒரு சாக்கடை அரசியல் பிராணி. ஆனால் ஜெயா பிடிவாதக் காரி. அவவுக்கு வாரிசுகள் எண்டு பெரிசா இல்லாததாலயோ என்னமோ கருநாய் மாதிரி மாற மாட்டா என நம்பலாம்.

2. இப்ப ஜெயா செய்யுற பெரிய வேலையே காங்கிரஸ் காலை நக்கிற தி.மு.க வை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது தான். இந்த உதறலிலயே தி.மு.க வுக்கு ஒரு உத்வேகம் (தேர்தலில வெல்லத் தான், வேற எதுக்கு?) வந்து காங்கிரஸ் சேவகத்தில இருந்து விலகினால் அந்தப் புண்ணியமும் ஜெயாவுக்கே. அல்லது காங்கிரஸ் காலிலயே விழுந்து கிடந்து அதால தமிழகத்தில மண் கவ்வினா அந்தப் புண்ணியமும் ஜெயாவுக்கே. அதால ஜெயா இப்ப எங்கள் பக்கம் தான்.

3. மற்றது, கருநாய் இருந்து மக்கள் போராட்டத்துக்கு மட்டும் அனுமதி தந்து, சில சமயம் சிலர சிறையில போட்டு, பல சமயம் தன்ர "நாடகங்களால" உண்மையான போராட்டத்தை திசை திருப்புது. ஜெயா வந்து மக்கள் போராட்டத்த இரும்புக் கரம் கொண்டு அடக்க வெளிக்கிட்டால் சில சமயம் மக்கள் போரட்டம் வலுக்கக் கூடும். ஆட்சி ஆளுனரிடம் போய் விடும் எண்ட பயத்தில ஜெயா அப்படி ஏதும் செய்யாமலிருக்கவும் கூடும். மொத்தத்தில பார்த்தால், மக்கள் போராட்டத்துக்கு ஜெயா கருநாய விட நல்லது செய்யக் கூடிய வாய்ப்பிருக்குது.

4. இதெல்லாத்தையும் விட முக்கியமான ஆக்கள் தமிழக மக்கள். இப்ப ஈழ மக்களுடைய உயிர் அவர்களுக்குப் பெரிசாத் தெரியுது. அவர்கள் தங்களுக்கு என்ன கிடைக்கும் எண்டும் யோசிப்பினம் (அவையள் தானே முதல்வருக்கு சம்பளம் கொடுக்கினம்?). எனவே, நாங்கள் யாரை ஆதரிச்சாலும் அதை மரியாதையோட தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேணும். அவர்கள் எங்கள் உயிர், தங்களுக்குக் கிடைக்கக் கூடிய வாழ்க்கைச் சௌகரியம் இவை இரண்டையும் சீர் தூக்கிப் பாத்து முடிவெடுக்க வேணுமெண்டு அன்போட நாங்கள் கேட்டுக் கொள்ள வேணும்.

(இதை விட எனக்கு ஒரு தனிப்பட்ட ஆசை: ஜெயா வந்தால் கருநாய முந்திச் செய்த மாதிரி கதறக் கதற நேரடி ஒளி பரப்போட உள்ள தூக்கிப் போட வேணும். உள்ள உண்ணா விரதம் இருந்தாலும் பேசாமல் விட்டிட வேணும்!. இது தனிப்பட்ட ஆசை மட்டுமே, பிரச்சாரம் அல்ல!)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(இதை விட எனக்கு ஒரு தனிப்பட்ட ஆசை: ஜெயா வந்தால் கருநாய முந்திச் செய்த மாதிரி கதறக் கதற நேரடி ஒளி பரப்போட உள்ள தூக்கிப் போட வேணும். உள்ள உண்ணா விரதம் இருந்தாலும் பேசாமல் விட்டிட வேணும்!. இது தனிப்பட்ட ஆசை மட்டுமே, பிரச்சாரம் அல்ல!)

எனக்கும் அதே ஆசை தான்

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஜ ஒ ஓ ஔ ஃ

நான் படிச்ச அ ஆ மேல சத்தியமா சொல்லுறேன் . இந்த அம்மா சொல்ல மாட்டா சொன்னா செய்து காட்டுவா..இது உறுதி

மற்றது இவா கபட நாடகம் ஆடுற கருணாநிதி மாரி இல்லை சுத்து மாத்து பண்ன..சொன்னா அதை செய்து காட்டுவா..

இப்ப சின்ன பிள்ளைகளிள இருந்து முதியோர் வரைக்கும் கருணாநிதின்ட பெயர கேட்டாலே சொல்லுவினம்.. அவனை மாரி ஒரு கேவளம் கெட்டவனை பாத்தது இல்லை என்று...

அம்மா வாழ்க்க

Edited by kuddipuli

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் யோசியுங்கள் . இந்த அம்மாவைப்பற்றி . அப்படி மக்களை ஏமாற்ற நினைத்திருந்தால் எப்போதே தனி ஈழம் ஆதரவு கானம் பாடி இருப்பார் . நல்லவரோ கேட்டவரோ விட்டுத்தள்ளுங்கள் . ஆனால் பிடிவாதக்காரி , அகங்காரம் பிடித்தவர், பெருங்கோபம் கொண்டவர், தலைக்கனம் அதிகம் என்று எதிரிகள் / பத்திரிக்கை காரர்கள் எள்ளி நகையாடும் அம்மையார் இவர் . இரு பெரும் இந்திய கட்சிகளே இவரை கண்டு நடுங்குகிறது . தனது சொல் கேட்கவில்லைஎன இந்திய அரசையே கவிழ்த்தவர் . ஒட்டு மொத்த தமிழினமும் எதிர்த்தபோது கூட நட்பை (சசிகலா ) விடாதவர் . பிற்படுத்தப்பட்ட சமூக ஓட்டுகள் கிடைக்காது என தெரிந்தும் பலிதடை சட்டம் போட்டவர் . மிகப்பெரிய ஒட்டு வங்கியான அரசு பணியாளர்கள் போராட்டத்தையே அடக்கி ஒடுக்கியவர் ( இருமுறை ) .இப்படிப்பட்டவர் முடிவு எடுத்தால் மாற மாட்டார்கள் ஒரு முறை பிடித்தால் உடும்பு போல விடாதவர் . துரோகி ஆக மாட்டார் . ஆனால் கவனம் இன்றும் அவர் புலிகளை ஆதரிக்க வில்லை . தப்பான அர்த்தம் எடுத்துக்கொண்டு பின்னாளில் இவருக்கும் துரோகி பட்டம் கட்ட வேண்டாம். யாராவது அண்டிப்பிழைக்கும் நாய்கள் இவரை மாற்ற கூடிய அபாயம் உள்ளது .

நல்லதே நினைப்போம் . நல்லதே நடக்கும் ( என நினைக்கிறேன் )

ஆனால் கவனம் இன்றும் அவர் புலிகளை ஆதரிக்க வில்லை . தப்பான அர்த்தம் எடுத்துக்கொண்டு பின்னாளில் இவருக்கும் துரோகி பட்டம் கட்ட வேண்டாம். யாராவது அண்டிப்பிழைக்கும் நாய்கள் இவரை மாற்ற கூடிய அபாயம் உள்ளது .

உண்மைதான்

மிகவும் ஆழமாக சிந்திக்கவேண்டிய விடயம் இது.

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் தேர்தல் முடியும் வரை பொறுத்திருப்போம்.ஆனால் ஒன்று இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமீழத்திற்கு ஆதரவா இல்லையா என்று தீர்ப்பளிக்கப் போகிறார்கள்.யார் வெல்ல வேண்டும் என்பதை விட யார் வெல்லக்கூடாது என்பது முக்கியம். இதே ஜெயலலிதா காங்கிரசை கூட்டணிக்கு நேரடடியாகவே அழைத்தவர்தான். ஆகவே அவர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருந்தால் கலைஞர் தமிழீழமே ஒரே தீர்வு அது இது என்று முழங்கியிருப்பார்.ஆனால் ஒன்று மக்களை யாரும் தொடர்ந்த ஏமாற்ற முடியாது.அடுத்து சட்டசபைத் தேர்தல் வரும். ஆகவே தொடர்ந்து முழங்க வேண்டி வரும். என்னவோ எங்கட விடிவு எங்கட கையிலதான் இருக்கு தலைவர்தான் எங்கட நம்பிக்கை.ஆதரவு தரும்போது ஆதரிப்போம்.!!!!

எம்மை கை கழுவி அழிவிற்கு மேலும் வளம் சேர்த்த கருணாநிதியை விட, எல்லாராலும் கைவிடப் பட்ட நிலையிலாயினும் எமக்காய் இன்று குரல் தரும் ஜெயா அம்மையார் இன்றைய காலகட்டத்தில் சிறந்த ஒருவராகவே தெரிகின்றார்

உண்மை

தமிழக அரசியல் விழையாட்டில் எமது பிரச்சனை எப்போதும் பகடைக்காயாக இருந்து வருகின்றது. இது குறித்த விமர்சித்து எந்த பலனும் இல்லை. எம்மால் பகிரங்கப்படுத்தக் கூடியது ஒன்றுதான் இப்போது பிரச்சனை என்ற இடத்தில் எமது மக்களின் பிணங்கள் இருக்கின்றது. எமது பிணங்களை வைத்து மேலும் மேலும் அரசியல் செய்ய முடியாது.

காங்கிரஸ் சார்பானவர்கள் புலிகளின் அழிவோடு இலங்கையின் இனப்பிரச்னையின் திசை மாறும் என்று நம்புகின்றனர். அதாவது எஞ்சியுள்ள சொற்ப இடத்தையும் பிடித்து புலிகளின் தலைமையையும் பிடித்து இலங்கையில் இனப்பிரச்சனையே இல்லை என ஒரு தீர்வுக்கு வருவதற்கு எத்தனிக்கின்றர். இதனால் அவர்கள் தேர்தல் நெருங்குவதை கூட கருத்தில் கொள்ளவில்லை. வாக்குகள் இழப்பை கூட கருத்தில் கொள்ளவில்லை. இந்த அதீத நம்பிக்கைதான் கலைஞர் இந்தப்பிரச்சனை தேர்தலில் எதிரொலிக்காது என்கின்றார். இராணுவத்தின் இறுதி வெற்றி தேர்தலின் போக்கை மாற்றும் என்று நம்புகின்றனர்.

இதே நம்பிக்கை ஜெ வுக்கும் இருக்கலாம். இராணுவம் வெற்றிபெற்றால் ஈழம் என்ற ஒன்றும் அதை உருவாக்கும் முயற்சியும் அடியோடு இல்லாமல் போகும் போது ஜெவின் வாக்குறுதிகள் ஏமாற்றமாக அமையாது. நிலமை ஜெ வின் வாக்குறுதிகளுக்கு அப்பால் சென்றிருக்கும். ஈழத்தமிழ் மக்கள் அனைவரும் இராணுவத்தின் பிடிக்குள் வந்தபின்னர் அவர்களே இலங்கை பிரிந்து போவதற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்துவார்கள். இராணுவம் அதை செய்விக்கும். இதைப்போல் பலதும் நடக்கும்.

இன்றய உலகம் தமிழர்களுக்காக குரல் கொடுக்காமல் இவ்வளவு கொடும் செயலையும் அனுசரித்துப்போவதற்கு காரணம் இனிமேல் புலிகள் தலைதூக்கப்போவதில்லை என்று உலகம் நம்புகின்றது. அரசின் பிரச்சராமும் இராணுவ வெற்றிகளும் இவற்றை நம்பவைக்கின்றது. தமிழர்களுக்கான ஒரே எக பிரதிநிதி புலிகள் தான். அவர்களின் கதையே இன்றோ நாளையோ முடிக்கப்படும் என்று உலகம் நம்பும் போது இலங்கை அரசை பகைக்க யாரும் விரும்பவில்லை. அதனால் அவர்களுக்கு ஒரு லாபமும் இல்லை. இது வெளிப்படையாக உணரப்படுகின்றது.

விடுதலைப்போராட்டம் பயங்கரவாதம் என முத்திரை குத்தப்பட்டுவிட்டது. இது உலகின் தற்போதைய நடைமுறை. இதிலிருந்து விடுபட அரசின் செயற்பாடு மிகப்பெரும் பயங்கரவாதம் என்று நிறுவியாகவேண்டும். அதுதவிர அரசுக்கெதிரான தற்காலிக யுத்தத்தல் எதுவித பிரயோசனமும் இல்லை. இந்த நிறுவலுக்காக வன்னிமக்கள் பிணங்களாகின்றார்கள். ஈழப்போராட்டம் இப்போது உயிர்களை உலகின் முன்வைக்கின்றது. பிணங்களை வைக்கின்றது. இது புதிய உலக நமைமுறையின் நிர்ப்பந்தம். இந்த பிண அரசியலின் வெற்றி தோல்வியே ஈழம் என்ற இலக்கை தீர்மானிக்க வல்ல சக்திகள். இந்த பிண அரசியல் போராட்டம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் கைகளில் விடப்பட்டுள்ளது. இதன் வெற்றி தோல்வி ஒட்டுமொத்த தமிழினத்தின் கைகளில் தங்கியுள்ளது.

அதே நேரம் இறுதி இலக்கான ஈழம் என்பதும் சுதந்திரம் என்பதும் அந்த உணர்வை அனுபவிக்கும் மனநிலையையும் வன்னிமக்கள் இழந்து போகின்றாராகள். அவர்கள் தமது சுதந்திரத்துக்கான அளவுகோலை இனி அவர்களே தீர்மானிப்பார்கள். அது அரசுடன் இணைந்து அனுசரித்து வாழ்வதாக கூட இருக்கலாம். மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகள் போதும் என்ற அளவில் இருக்கலாம். அவலத்துக்கு உட்பட்ட மக்கள் இவ்வாறான சுதந்திரம் பெறவேண்டும் என்பதை வெளியில் இருப்பவர்கள் தீர்மானிக்க முடியாது. அவர்கள் உணர்ந்த அனுபவித்த அவலத்தின் ஊடாக அவர்கள் அதை தீர்மானிப்பார்கள். அவர்களின் அனுபவித்த எல்லைதாண்டிய அவலம் சிங்கள இனம் குறித்த புரிதல் மட்டுமின்றி எமது இனம் குறித்த புதிய புரிதல்களையும் ஏற்படுத்தியிருக்கும். வன்னிமக்களின் அவலத்துக்கு சிங்கள பேரினவாதமும் அதன் உறவுநாடுகளும் புதிய உலக நடைமுறையும் கூடவே தமிழர்களின் கேடுகெட்ட குணங்களும் துராநோக்கற்ற குறுகிய செயற்பாடுகளும் வழிநடத்தல்களும் காரணமாகின்றது.

சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் அவசியமாகின்றது ஏனெனில் உலகம் தமிழரின் இராணுவபலம் அழிந்து விட்டதாக நம்புவதால் அரசை பகைக்க முன்வரவில்லை. சிங்கள அரசபயங்கரவாதத்துக்கான யுத்தத்திற்கு இது காலமல்ல காரணம் தற்காலிக யுத்தங்கள் நிலத் தக்கவைப்புகள் நிரந்தரமாவதற்கு உரிய அங்கீகாரத்தை எந்த நாடும் தரத் தயாராக இல்லை. இந்த இரண்டும் கெட்டான நிலையில் இருந்து முதல் விடுபட போராடுவதே அடுத்த கட்ட போராட்டத்துக்கான வளிகளை திறக்கும். இருந்தும் அடுத்த கட்டத்துக்கு மக்கள் தேவை. அவர்கள் நலன்கள் தேவை. என்ற அடிப்படையை தொலைத்துக்கொண்டிருப்பதில் கவனமெடுக்கவேண்டும். இல்லையேல் தோல்வி நிரந்தரம்.

சுகன்

நீங்கள் சொல்வதைத்தான் புலிகளும் செய்ய நினைப்பது....

புலத்தில் போராட்டம் நிறுத்தப்படக்கூடாது.

தருணம் பார்த்து புலிகள் காய் நகர்த்துவார்களெ என்றே நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பங்களாதேசுக்கு இந்திரா காந்தி படை அனுப்பிய தர்மத்தின் அடிப்படையில் இலங்கைக்கு நான் படை அனுப்பி ஈழம் அமைப்பேன்!

பங்களாதேசில் இந்தியராணுவத்தின் அட்டூழிய சூடு இன்னும் ஆறவில்லை.

தகப்பன் பெயர் தெரியாமல் வாழும் பங்களாதேஷ் பிரசைகள் கணக்கு எண்ணிலடங்கமாட்டாது.

இதைவிட இன்னும் பல வைரஸ் போன்றபிரச்சனைகளை அமைதியாக அந்த நாட்டில் புதைத்துவிட்டு குளிர்காய்கிறது இந்தியா.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு கொடுப்பதற்கு முன்னர் எம்மை நாமே கேட்கவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன,

இதுவரை காலமும் ஈழக்கோரிக்கையை நிராகரித்து(வெகு அண்மைக்காலம் வரையிலும், "ஈழத்தமிழர் என்று அழைக்க முடியாது, ஏனென்றால் ஈழம் என்ற நாடு இல்லையென்று ஆகிவிட்டதே"? என்று ஏகத்தாளத்துடன் கேட்டவர்) வந்தது ஏன்?

ஈழத்தில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுவது கடந்த இரு வாரங்களாகத்தான் நடைபெறுகிறதா? ரவிஷங்கர் அவவுக்கு ஈழம் பற்றி இரு வாரங்களுக்கு முன் சொல்லிய பின்புதான் அப்படி ஒரு பிரச்சனை இருப்பதே தெரியவந்ததா? அதற்கு முன்னர் நடந்தது எல்லாம் என்ன? போர் நடக்கும் இடங்களில் மக்கள் இறப்பது சகஜம்தான் என்று கடந்த மாதம் கூடச் சொன்னாரே?

இருக்குமட்டும் இருந்துவிட்டு தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென ஈழத் தமிழர் மேல் பாசம் வழிந்தோடுவதற்குக் காரணம் என்ன?

ஒரு மாநில முதலமைச்சரால் மத்திய அரசிட கேட்கக் கூடிய கோரிக்கையின் அளவு என்ன? இவரால் இந்தியப்படையை ஈழத்திற்கு அனுப்ப முடியுமென்றால், ஏன் எம்.ஜி.அர் இனால் அப்படியொன்றைச் செய்து ஈழம் எடுத்துத் தர முடியவில்லை?

"நான் சொற்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், ஈழத்துக்கு இந்தியப்படை அனுப்புவேன்" என்கிறாரே, அப்படி அமையும் அரசு முடியாது என்றால் என்ன செய்வார்? ஈழத்தில் இதுவரையிலும் தமிழரைக் கொல்வதற்கே பழக்கப்பட்ட இந்தியப்படை, திடீரென்று, ஒரு மாத காலத்துக்குள் எப்படி தமிழீழம் அமைக்கப் போராடப் போகிறது?

சரி, இது எல்லாவற்றையும் விடுங்கள், இவர் இன்று சொல்வதையே தேர்தல் முடிந்தபின்னரும் செய்வார் என்பது என்ன நிச்சயம்? அப்படி செய்யாதவிடத்து இவரை அப்படிச் செய்யுமாறு பணியவைக்க எம்மிடமுள்ள பிடியென்ன? அல்லது இவரும் கருணாநிதி போலவே, மத்திய அரசு ஈழத் தமிழர் மேல் அக்கறை கொண்டுள்ளது, இலங்கையுடன் அவர்களின் நலன் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கிறோம், அது அவர்களின் இறையாண்மையை மீறும் செயல், போர் நிறுத்தம் வரப்போகிறது...என்று கதை விட்டால் மீண்டும் கருணாநிதியிடம் போகப் போகிறோமா?

இவை எவற்றுக்குமே எம்மிடம் பதிலில்லை. ஆனால் ஜெயாவை நம்பவேண்டும், அப்படித்தானே? குறைந்தபட்சம் விடுதலைப் புலிகள் மேலுள்ள தடையையாவது நீக்கச் சொல்கிறாரா? அப்போதாவது நம்பலாம். இன்னும், இலங்கைத்தமிழர், இலங்கைத் தமிழர் என்றுதானே விழிக்கிறார்?

கருணாநிதி பதவியிலிருந்து தூக்கியெறியப்பட வேண்டும் என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் அவரின் இடத்தை நிரப்புவது ஜெயாதான் என்று எம்மில் சிலர் விரும்புவது உண்மையிலேயே எமக்கு நண்மைதருமா என்று சிந்தித்துப் பார்க்காமல்தான் என்று நினைக்கிறேன்.

கொலைகாரக் காங்கிரஸுடன் சேர்ந்து இனக்கொலையில் பங்குபற்றியதால் கருணாநிதியின் செல்வாக்கு வெகுவாகச் சரிந்து கொண்டிருப்பது ரகசியமல்ல. தமிழக மக்களின் உணர்ச்சிக் கொப்பளிப்புகளுக்கு முன்னால் அவரின் கோட்டை நொருங்கிக்கொண்டிருக்கிறது. ஜெயா இப்போது செய்வதெல்லாம், காங்கிரஸ் - தி.மு.க சவப்பெட்டியின் இறுதி ஆணியை அடிப்பதுதான். ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இவர்களது தோல்வியை படுதோல்வியாக்கப் பார்க்கிறார். அவ்வளவுதான். இதற்கு அவர் கைய்யிலெடுத்த ஆயுதம், ஈழத்தமிழர் துயரம், ஏனென்றால் அதுதான் இன்று தமிழகத்தில் உணர்ச்சியான கருப்பொருளாக இருக்கிறது.

வேண்டுமென்றால். இந்த கொலைகார காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப ஜெயா எடுக்கும் முயற்சிக்கு வரவேற்ப்பளிப்போம். ஆனால் அவரே ஈழம் எடுத்துத் தருவார் என்று நினைப்பதெல்லாம், இலவு காத்த கிளிபோல் நாமும் இருக்க வேண்டும் என்று சொல்வதுபோல எனக்குப் படுகிறது.

தமிழ்மீது சத்தியம்;ஈழத்து திலீபன் கல்லறைக்குப்பக்கத்தில் இருந்திருப்பேன்.------:கலைஞர்

இலங்கை பிரச்சனை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து முதலவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து முதல்வர் கருணாநிதி கடிதம் வடிவிலான அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,

’’எல்லோரும் ஒன்றாய்க் கூடி இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு தரும் கூட்டு முயற்சிக்கு இங்கே வேட்டு வைத்தது யார் என்று; திருச்சி கூட்டத்தில் தம்பி திருமாவளவன் அடுக்கடுக்கான ஆதாரங்களை வரிசைப்படுத்தினாரே

1.அனைத்துக் கட்சிகளின் கூட்டத்திற்கு வர மறுத்தவர் யார்?. 2.மனிதச் சங்கிலிக்கு வர மறுத்தவர் யார்?. 3.டெல்லியில் பிரதமரைச் சந்திக்க வர மறுத்தவர்கள் யார்?.

4. உண்ணாவிரதங்களை கபட நாடகம் என்றுரைத்தவர் யார்?. 5.ஈழ விடுதலைக்காக அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்திய தலைவர் கருணாநிதி அல்லவா? இப்போது நீலிக் கண்ணீர் வடிப்போர் இது வரை ஈழத் தமிழ் சொந்தங்களுக்காக கண்ணீர் வடித்ததுண்டா?

6.இப்போது ஈழம் வாங்கித் தருகிறேன் என்பவர் தேர்தலுக்குப் பிறகு அதைப் பற்றிப் பேசுவாரா?. 7. ஒரு சில இடங்களுக்காகத்தான் அந்த அணியோடு கூட்டணி சேர்ந்தார்களே தவிர, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார் என்று நினைத்தா தோழமை கொண்டார்கள்? என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகளைத் தொடுத்தார் திருமாவளவன்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கியவுடன்; இலங்கையில் படையெடுத்து ஈழத்தை அமைப்போம் என்று இன்றைக்கு எக்காளமிடுகிறாரே; இவருடைய கூட்டணிக் கட்சியாம் கம்யூனிஸ்ட் சீனா கை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்குமா?

இத்தகையோர் கோமாளி நடவடிக்கைகளுக்கிடையே அங்கே இலங்கையில் போரில் சிக்கி அவதிப்படும் தமிழர்களைக் காத்திட நமது ஒரு உயிர் பயன்பட்டால் என்ன என்று எடுத்த முடிவுதான்- யாருக்கும் தெரிவிக்காமல் நான் மேற்கொண்ட உண்ணா நோன்பு.

வீட்டில் உள்ளவர்களும்-நாட்டில் உள்ள உடன்பிறப்புகளும்-உங்களிடம் அறிவிக்காமல் மேற்கொண்ட இந்த அறப் போருக்காக என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒன்று; அன்று வெற்றி பெற்றதால் இன்று உம்மோடு இருக்கிறேன்.

இல்லையேல் விருதுநகர் சங்கரலிங்க நாடார் கல்லறையின் அருகில் -ஈழத்து திலீபன் கல்லறைக்குப் பக்கத்தில் தான் இருந்திருப்பேன்- இது என்தமிழ் மீது சத்தியம்- அண்ணா, அய்யா மீது ஆணை என்பதை மட்டும் அறிந்திடுக! எல்லாம் ஓரளவு நன்மையாக முடிந்த வரையில் சரி;

அடுத்த கட்ட தொடர் பணி- நாடாளுமன்றத் தேர்தல் தொடர் பணி இருக்கிறதே-திருச்சியில் உன் திருமுகம் கண்டேன். அடுத்து, மதுரையிலும்- கோவையிலும்- மேட்டுப்பாளையத்திலும் என்னுயிரே உன்னைச் சந்திக்கிறேன்.

களைப்பைப் பொருட்படுத்தாமல் காரியமாற்றுக! என் கண்ணல்ல, மணியல்ல; களத்திலேயே இரு-இது ஜனநாயக வெற்றிக்கான களம் என்பதை மறவாதே!’’என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.nakkheeran.in/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.