Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ளக்(?)காதல்!

Featured Replies

அவன் அரை மயக்கத்தில் கட்டிலில் கட்டுண்டு கிடந்தான். அவனக்கு முன்னால் அவள் கையில் குழவிக்கல்லோடு நின்றாள்.

...................................

அவளுக்கு காதலிக்கும் உரிமை இல்லை என்று அவர்கள் சொன்னார்கள். அவளுக்கு அவளுடைய கணவனை தேர்ந்தெடுக்கும் பக்குவம் இல்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். அவர்களே அவளுக்கான காளையை தேடினார்கள். கட்டியும் வைத்தார்கள். அவளும் அவனும் முதன் முறையாக எத்தனை மணிக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களே சொன்னார்கள்.

இதுவரை அறிமுகம் இல்லாது அவனுடன் வாழ்ந்து, இதுவரை அறிமுகம் இல்லாத அவனுடைய சொந்தங்களையும் அனுசரித்து, பிள்ளைகள் பெற்று, வரவு செலவுக்குள் வாழ்க்கையை நடத்தி, சண்டை சச்சரவுகளை சமாளித்து, குழந்தைகளை படிக்க வைத்து, வாழ்க்கையில் வரக் கூடிய சோதனைகளை எல்லாம் எதிர்த்து நின்று..... இப்படி எல்லாவற்றிற்குமான பக்குவமும் தகுதியும் அவளுக்கு வந்துவிட்டதாக அவர்கள் கருதினார்கள்.

தன்னுடைய துணையை தேர்ந்தெடுப்பதற்கே தகுதி இல்லாத அவளிற்கு இத்தனைக்குமான தகுதிகள் எப்படி வந்தன என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

இப்பொழுது அவள் குழவிக்கல்லோடு நிற்கிறாள்

...................................

அவளைக் கட்டிக் கொண்ட அவனோ பெரும் கொடுமைக்காரன். சாராயம் அவனை தினமும் குடிக்கும். குடித்துவிட்டு வாந்தியை அவள் மீதுதான் எடுக்கும். குடிக்காத நேரங்களிலாவது அவன் மனிதனாக இருந்தானா என்றால் அதுவும் இல்லை. ஊரில் உள்ள அத்தனை ஆண்களுடனும் அவளை தொடர்புபடுத்தி பேசினான். இது ஒரு உளவியல் பிரச்சனை என்பது அவனுக்கு தெரியவில்லை. அவளுக்கும் தெரியவில்லை. பாவம், இதை தெரிந்து கொள்கின்ற அளவிற்கு படிப்பதற்கு அவளை அவர்கள் அனுமதித்திருக்கவுமில்லை.

அவனைப் பற்றி அவள் அவர்களுடன் பேசினாள். அவர்கள் அனுசரித்துப் போகும்படி சொன்னார்கள். நீதான் அவனை மாற்ற வேண்டும் என்று வேறு சொன்னார்கள். யாரோ ஒரு குடிகாரனை இவர்கள் கட்டி வைப்பார்களாம். அவனை நல்லவனாக்குவதையே இவள் தன்னுடைய வாழ்க்கைக் கடமையாகக் கொள்ள வேண்டுமாம்.

இப்பொழுது அவள் குழவிக்கல்லோடு நிற்கிறாள்

...................................

பக்கத்து வீட்டிற்கு புதிதாகக் குடி வந்தவன் ஒருநாள் அவளைப் பார்த்து கனிவாகப் புன்னகைத்தான். அவள் தன்னை புதிதாக உணர்ந்தாள். புன்னகைத்தவனோடு பேசத் துணிந்தாள். கணவன் தந்த காயங்களுக்கு புன்னகைத்தவன் மருந்து போட்டான். அவள் முதன் முதலாக காதலிக்கத் தொடங்கியிருந்தாள்.

ஒருநாள் காதலோடு உடல்கள் இணைவதே பேரின்பம் என்பதையும் அவள் அறிந்து கொண்டாள். காதலனோடு பின்னிப் பிணைந்து காமத்தை அப்போதைக்கு இறக்கி வைத்து விட்டு வருகின்ற பொழுது, அந்த அனுபவம் தந்த இன்பத்தோடு, அவர்களை வென்றுவிட்ட பெருமிதமும் அவளுக்கு இருந்தது.

பெண்கள் எல்லோருமே கண்காணிப்பில் இருப்பதால் அவளின் காதல் ஒருநாள் கணவனும் அறியும்படியானது. இதுவரை அவன் செய்த சித்திரவதைகள் அவளுக்கு பழக்கமாகி விட்டிருந்தன. ஆகவே அவள் புதிதாக எந்தத் துன்பத்தையும் அனுபவிக்கும்படி நேரவில்லை. ஆயினும் அவன் சொன்ன ஒரு சொல் அவளை மிகவும் காயப்படுத்தி விட்டது.

இப்பொழுது அவள் குழவிக்கல்லோடு நிற்கின்றாள்

...................................

அவனுக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து, மயங்கியவனைக் கட்டிலில் கிடத்தி, கயிற்றினால் இறுகக் கட்டி விட்டு, கையில் குளவிக்கல்லை வைத்துக் கொண்டு அவன் விழிப்பதற்காக அவள் காத்துக் கொண்டு நின்றாள்.

மெதுவாகக் கண்ணைத் திறந்தவனுக்கு விபரீதத்தை உணர சற்று நேரம் எடுத்தது. அவன் வாயைத் திறப்பதற்கு முன்னமேயே அவள் பேசத் தொடங்கினாள். "நான் என்னவனோடு போகப் போகிறேன்... போவதற்கு முன் உன்னைக் கொல்ல வேண்டும்... உன்னைக் கொல்வதற்கு முன் உன்னோடு சற்றுப் பேச வேண்டும்"

அவளைப் பார்த்து அவன் முதன்முறையாகப் பயந்தான். கண்களில் மரண பயம் தெரிந்தது. "போவது என்றால் போக வேண்டியதுதானே! எதற்காக என்னைக் கொல்ல வேண்டும்?" என்ற கேள்வியும் அந்தக் கண்களுக்குள் தெரிந்தது.

"இரண்டு காரணங்கள் இருக்கின்றன" அவள் அமைதியாக சொன்னாள். "நீ எவ்வளவு கொடியவன் என்பது எனக்குத் தெரியும்.. என்னையும் என் காதலனையும் நீ வாழ விடமாட்டாய்... என்னுடைய உயிரையும் என் காதலனின் உயிரையும் உன்னிடம் இருந்து காப்பதற்காக உன்னைக் கொல்ல வேண்டியிருக்கிறது... இது முதற் காரணம்.. எங்களின் காதலை நீ கள்ளக் காதல் என்று சொல்லி என்னைக் கோபப்படுத்தி விட்டாய்... இது இரண்டாவது காரணம்" அவள் அழுத்தமாகச் சொன்னாள்.

"எனக்கும் உனக்கும் எப்பொழுதாவது காதல் இருந்ததா? இல்லையே! நல்ல காதல் என்கின்ற ஒன்று இருந்தால் அல்லவா கள்ளக் காதல் என்றும் ஒன்று இருக்க முடியும்? என் காதலனைத் தவிர வேறு யாருடனும் எனக்குக் காதல் இல்லாத பொழுது, என்னுடைய காதல் எப்படிக் கள்ளக் காதலாக முடியும்? என்னுடைய நல்ல காதலை நீ கள்ளக் காதல் என்று அவமானப்படுத்தி விட்டாய்! நல்ல காதலைத் தரத் தெரியாத நீ என்னுடைய காதலை அவமானப்படுத்தியதற்காகவாவது சாகத்தான் வேண்டும்!"

சொல்லி விட்டு குழவிக்கல்லை ஓங்கி அவன் தலை மீது போட்டாள்

முற்றும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா சபேசன் எதுக்கு இப்பிடி விபரீத கதையெல்லாம் எழுதி எங்கடை மனசுகளை கெடுக்கிறீங்கள்..ஒரு நாளைக்கு சாத்துவின்ரை தலையிலை கல்லை போடுறதெண்டு நான் திட்டம் போட்டிட்டன்.. :icon_mrgreen::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப 3 மாதம் தான் அண்ணா நாங்கள் ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு. நீங்கள் ஏன் அண்ணா திருப்பி தொடங்க நிற்கிறீங்கள்? :icon_mrgreen:

சபேசன்,

இந்தக்கதை நகைச்சுவையாக எனக்குத் தெரியவில்லை. நிகழ்வில் நாளாந்தம் பலர் அல்லல்படுகின்ற விடயங்களை ஆழமாக கதைவடிவில் அலசிப்பார்த்து இருக்கிறீங்கள். கதையில்... சுவாரசியத்திற்காக சிலவிடயங்கள் கூடக்குறைய இருக்கலாம். ஆனால்.. கதைமூலம் சொல்லவந்த செய்தி சிந்தனையைத் தூண்டுவதாய் இருக்கின்றது. பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது கதை இல்லை நிஜம்...தமிழரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தை கதையாக வடித்து உள்ளீர்கள் ஆனால் முடிவு தான் கொஞ்சம் உறுத்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி துனிவான பெண்கள் இருந்தால் எத்தனை குடும்பங்களில் ஒழி வீசும்.

சபேசன் இந்தக் கதை சில வேளைகளில்

அந்தக் காலத்துக்கு அதுவும் நம்ம நாட்டுக்கு

கிராமத்து வாழ்க்கைக்கு சிலவேளை பொருந்தலாம்

நீங்கள் எழுதிய ஒரு சில சம்பவங்கள் தவிர்த்து

இப்பொழுதும் பொருந்துமா?

காலம் எவ்வளவோ மாறிவிட்டது

கிராமத்துப்பெண்களே இப்பொழுது தங்கள்

விருப்பு வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள்

நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்

name='sagevan' date='Aug 23 2009, 09:17 AM' post='536223']

இப்படி துனிவான பெண்கள் இருந்தால் எத்தனை குடும்பங்களில் ஒழி வீசும்

.

சஜீவன் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ

சரியாகத்தான் எழுததியுள்ளீர்கள்

கெண்கள் இப்படி நடந்துகொண்டால்

ஒழிந்துதான் போவார்கள்

சிறையில் கம்பிதான் எண்ணவேண்டும்

ஒளிவீசமுடியாது

Edited by vvsiva

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் பக்கத்துவீட்டுக்காரன் லேசா புண்ணகைச்ச உடன காதல், எதிர்வீட்டுக்காரன் கோயிலில புன்னகைச்சால் புனிதக்காதல், பின் வீட்டுக்காரன் எம்.எஸ்.எனில புன்னகைச்ச்சால் என்ன மயி(ர்)ல் காதலோ??? உங்களுக்கெல்லாம் தலிபான் காரனுகள் தான் சரி.. :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் பக்கத்துவீட்டுக்காரன் லேசா புன்னகைச்ச உடன காதல், எதிர்வீட்டுக்காரன் கோயிலில புன்னகைச்சால் புனிதக்காதல், பின் வீட்டுக்காரன் எம்.எஸ்.எனில புன்னகைச்ச்சால் என்ன மயி(ர்)ல் காதலோ??? உங்களுக்கெல்லாம் தலிபான் காரனுகள் தான் சரி.. :lol::lol:

....................... :lol: :lol: :lol:

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

.

சஜீவன் நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ

சரியாகத்தான் எழுததியுள்ளீர்கள்

கெண்கள் இப்படி நடந்துகொண்டால்

ஒழிந்துதான் போவார்கள்

சிறையில் கம்பிதான் எண்ணவேண்டும்

ஒளிவீசமுடியாது

நான் தெரிந்து தான் எழுதினானான்.இப்படி ஏதாவது செய்தால்தான் மற்ற குடும்பத்தில் உள்ள ஆனுக்கும் விமோசனம் பெண்ணுக்கும் விமோசனம் கிடைக்கும்.அது சரி கொடுமைப்படுத்துவது என்றால் என்ன.குடித்துப்போட்டடோ அல்லது குடிக்காமலோ உடல் ரீதியாக துன்புறுத்துவது மட்டுமா?மற்றவள் செய்வதெல்லாம் தானும் செய்ய வேனும் என்றததற்காக புருசனை சவாரி மாட்டடை துரத்துவது மாதிரி விரட்டுவது சரியா?இன்னும் இப்படி எத்தனையோ.உதெல்லாம் எந்தக்கணக்கிலே சேருதாம். :lol:

  • தொடங்கியவர்

கருத்துகளுக்கு நன்றி

இந்தக் கதை ஒரு கிராமத்துப் பின்னணியில் எழுதப்பட்டிருப்பதை கதையில் குழவிக்கல் வருவதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டு ஊடகங்களில் வாரத்திற்கு ஒரு முறையாவது "கணவன் கொலை - மனைவி கள்ளக் காதலனுடன் ஓட்டம்" என்று செய்தி வராமல் இருக்காது. சில நேரங்களில் ஒரே நாளிலேயே மூன்று நான்கு கொலைகள் பற்றிய செய்திகள் இடம் பெறும்.

ஒரு பெண் கணவனை மீறி இன்னொருவனை காதலிக்கத் துணிந்தது போதாது என்று, கணவனையும் கொலை செய்கின்ற அளவிற்கு போவதற்கு காரணம் என்ன? அவளை அதற்கு தூண்டிய காரணங்கள் பற்றி நாம் ஆராய்வது இல்லை. பெண்களை மட்டுமே குற்றவாளிகள் ஆக்குகின்றோம். கொலை செய்யப்படுவதனால் கணவன் புனிதமானவன் ஆகி விடுகிறான்.

நாம் இதன் மறுபக்கங்களையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

புலம்பெயர் வாழ்வில் கூட எத்தனையோ காதல் இல்லாத திருமணங்கள் நடைபெறுகின்றன. காதல் இல்லாமல் திருமணம் செய்து விட்டு, திருமணத்தின் பின்பு வேறு ஒருவர் மீது காதல் வந்தால் அதைக் "கள்ளக் காதல்" என்று எந்த அடிப்படையில் சொல்வது?

எத்தனையோ பெண்கள் வெளிநாடுகளுக்கு வந்தார்கள். வருகிறார்கள். பெற்றோரால் நிச்சியக்கப்பட்டவனைக் கட்டி வாழ்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்த ஆண்களில் எத்தனையோ வகையானவர்கள் இருக்கின்றார்கள். இந்தக் கதையில் வருபவனைப் போன்றவர்களும் இருக்கின்றார்கள். நான் நிறையப் பேரைக் கண்டிருக்கிறேன்.

மொழிபெயர்ப்பு உதவிக்குப் போன காலங்களில் நிறையக் கதைகளை பார்த்திருக்கின்றேன். இப்பொழுதும் சுற்றாடலில் இவைகள் நிகழ்வதைப் பார்க்கின்றேன். இப்படியான இடத்தில் அந்தப் பெண்ணிற்கு வேறொருவன் மீது காதல் வந்தால் தாராளமாக வரட்டும்.

வெளிநாடுகளில் உள்ள சட்டப் பாதுகாப்பினால் குழவிக்கல்லை தூக்கித் தலையில் போடத் தேவையில்லை. கணவனை தூக்கி எறிந்து விட்டு காதலனுடன் செல்லலாம்.

குறிப்பிட்ட பெண்ணை கலாச்சாரம், மயிர், மண்ணாங்கட்டி என்னும் பெயரில் கொடுமையான பொய்யான வாழ்க்கைக்குள் தள்ளிய சமுதாயம் பெண் மீது பழி போடுவதை விட்டு விட்டு தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்தட்டும்.

Edited by சபேசன்

சபேசன் சரியாக சொல்லி இருக்கிறிர்கள்... இப்ப லண்டனில் நடந்த ஒரு கதையை சொல்லுறன்... 16வயதிலையே நம்மவர் பொண்ணுக்கு ஒரு பெடியனை அவங்க அப்பா அம்மா நிச்சயம் பண்ணி இருக்கிறார்கள்... அவாவுக்கு 18வயது வந்தவுடன் கல்யாணம் பண்ணி தல்லாம் என்று... பெடியனுக்கு 11வயது கூட.. பொண்ணுக்கு 18வயது வந்தவுடன் இந்த பெடியனுக்கு கல்யாணம் பண்ணி குடுத்து இருக்கிறார்கள்... அவன் இங்க கூட்டி வந்து அவளை ஒரு இடமும் அனுப்பவில்லை... மொழி படிக்கவும் அனுப்பவில்லை.... குடித்து விட்டு சித்திரை வதை எல்லாம் பண்ணி இருக்கான்...அந்த பொண்ணு நல்ல கவிதைகள் கதைகள் எழுத கூடிய பெண்... ஏதோ ஒரு வெப்சைட்ல் எழுதி போட்டு இருக்கிறா... ரசிகர்கள் எல்லாம் மெயில் போட்டு இருக்கார்கள்.. அதை எல்லாம் சந்தேக பட்டு அந்த பெண்ணையே எழுத விடாமல் பண்ணி விட்டார் ...அவள் விட்டிலை எதோ ஒரு சிடி இருந்து பார்த்து இருக்கிறா அது கணவன் வேற பெண்களுடன் இருந்த விடியோ...

அவள் கேட்க அது முதல்ல இருந்தது என்று சொல்லி இருக்கிறார்.. அந்த பொண்ணு அதையும் சகித்து கொண்டு இருந்து இருக்கிறா...ஒரு கட்டத்தில் இவரின் கொடுமைகள் தாங்க மாட்டமால் பிரிந்து போய் வேற இடத்தில் இருந்து இருக்கிறா... பெடியன் போன் பண்ணி அவங்க அப்பா அம்மா கிட்ட உங்க பொண்ணு கூடாது என்று தப்பா சொல்லி இருக்கிறார்... அவங்க அப்பா அம்மா போன் பண்ணி ஊர் சனம் எல்லாம் என்ன சொல்லும் போய் உன் புருசன் கூட இரு என்று சொல்லி இருக்கிறார்கள்... அந்த பொண்ணு தாய் தகப்பனின் சொல்லை கேட்டு திரும்பவும் போய் இருந்தா.. அவன் ஒரு கட்டத்தில் அவளை பைத்தியம் என்று சொல்லி பைத்திய மருத்துவமனைக்கு அனுப்பி விட்டார்... அந்த பொண்ணு இப்ப மருத்துவமனையில் திரும்ப இப்ப வந்து தனியாக வாழுகிறாள்.. அவளுக்கு இப்ப 22வயதுதான் ஆகுது..ஆண்களை தப்பா சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை... இரண்டு பக்கம் உள்ள பிழைகளை பார்க்க வேண்டும்..பெண்களை தப்பு சொல்லுவது சரி இல்லை....

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் உலகத்தில எத்தனையோ நடக்குது அதில ஒண்டை இரண்டை சொல்லி ஆண்கள் கூடாதவர்கள் எண்டு சொல்லவரவில்லை, பெண்கள் நல்லவர்கள் எண்டு சொல்லவரவில்லை எண்டு சொன்னால் எப்படி?

சபேசன் பேசாமல் ஒண்டு செய்யுங்கோ, ஒரு அமைப்பு தொடங்குங்கோ, அதற்கு ''கள்ள காதல்'' அமைப்பு எண்டு பெயரை வைக்காமல் ''கலியாணத்தின் பின்னான புனிதமான காதல் அமைப்பு'' எண்டு வையுங்கோ, புலத்தில பலருக்கு இது தேவைப்படுது, மோட்கேஜுக்கு வீட்டைவாங்கீட்டு மனுசன் இரவு பகலா உழைக்க, சொர்க்கத்தை காணல்லை எண்டுட்டு வீட்டில வாடகைக்கு விட்டவனோட சொர்க்கத்தை கானுற பத்தினிமார் நிறைய பேர் புலத்தில இருக்கினம், அவயளுக்கு நீங்கள் அமைக்கிற அமைப்பால நன்மை கிடைக்கும் அப்படியே உங்களுக்கு புன்னியம் கிடைக்கும்.

கள்ளகாதலுக்கு வரைவிலக்கணம் கொடுத்து சமூக சேவை செய்யிறியள், செய்யுங்கோ செய்யுங்கோ, இதை யாழில மட்டும் போட்டுவிடுங்கோ, பேப்பர் வழிய போட்டுடாதேங்கொ, ஏனெண்டால் புனிதக்காதல் செய்வமோ வேண்டாமோ எண்டு ஏங்கி நிற்கிற பொண்னுங்களுக்கு விடிவு கிடைச்சுடும்... :lol::lol:

பி.கு:எனி கலியாண வீட்டுக்கு போகக்கை பிறசன்ற் கொடுக்கிறதெண்டால் சங்கிலி, பணம் எண்டு கொடுக்காமல் குழவிக்கல்,கிழவன் கல், கிரிக்கட் பட் போன்றவற்றை கொடுங்கோ, அதுவும் மனமகள் கையில கொடுங்கோ. :lol:

Edited by Danklas

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் எழுதத்தெரிந்தவர்களின் தனித்தன்மை?

மனிதரில் அன்றாடம் நடைபெறும் வாழ்க்கைச்சம்பவங்களை காலத்திற்கேற்ற மாதிரி எழுதுவதற்கும் தனித்திறமை வேண்டும்.

இதில் சபேசனும் விதிவிலக்கல்ல!

எமது நாட்டில் அன்றைய காலங்களில் எம்மக்களிடையே நடக்காத திருக்கூத்துக்களா இன்று நடக்கின்றது?

அன்றைய காலங்களில் நடந்த காதல்களியாட்டங்களும் கள்ளக்காதல் தொடர்புகளும்..............

தனது பிள்ளையின் தகப்பன் பெயருக்கு உரியவனிடம் கெஞ்சிய தாய்மர்களும்?????????????

பல மரியாதைக்குரிய குடும்பத்தவர்களே தங்கள் தரத்தை மறந்து சிற்றின்பத்திற்காக நயவஞ்சக காதல் புரிந்ததும்??????????????????

இதையே இன்று நவநாகரீக முறையில் அல்லது வேறு கோணத்தில் பின்பற்றுகின்றார்கள்.

இதற்கு புலம்பெயர் மக்கள் விதிவிலக்கா என்ன?

அண்ட மகா முனிவரும் அடங்கினாராம் அரை இஞ்சி - - - - - - - - :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் ஐயா,

கல்லைத் தலையில் தூக்கிப்போட்டுக் கொல்ல வேண்டிய அளவுக்கு துணிச்சல் கொஞ்சம் அதிகம் தான்.

அது மட்டுமே உறுத்தலா இருக்கு ஆனால் இது உலகத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் உலகத்தில எத்தனையோ நடக்குது அதில ஒண்டை இரண்டை சொல்லி ஆண்கள் கூடாதவர்கள் எண்டு சொல்லவரவில்லை, பெண்கள் நல்லவர்கள் எண்டு சொல்லவரவில்லை எண்டு சொன்னால் எப்படி?

சபேசன் பேசாமல் ஒண்டு செய்யுங்கோ, ஒரு அமைப்பு தொடங்குங்கோ, அதற்கு ''கள்ள காதல்'' அமைப்பு எண்டு பெயரை வைக்காமல் ''கலியாணத்தின் பின்னான புனிதமான காதல் அமைப்பு'' எண்டு வையுங்கோ, புலத்தில பலருக்கு இது தேவைப்படுது, மோட்கேஜுக்கு வீட்டைவாங்கீட்டு மனுசன் இரவு பகலா உழைக்க, சொர்க்கத்தை காணல்லை எண்டுட்டு வீட்டில வாடகைக்கு விட்டவனோட சொர்க்கத்தை கானுற பத்தினிமார் நிறைய பேர் புலத்தில இருக்கினம், அவயளுக்கு நீங்கள் அமைக்கிற அமைப்பால நன்மை கிடைக்கும் அப்படியே உங்களுக்கு புன்னியம் கிடைக்கும்.

கள்ளகாதலுக்கு வரைவிலக்கணம் கொடுத்து சமூக சேவை செய்யிறியள், செய்யுங்கோ செய்யுங்கோ, இதை யாழில மட்டும் போட்டுவிடுங்கோ, பேப்பர் வழிய போட்டுடாதேங்கொ, ஏனெண்டால் புனிதக்காதல் செய்வமோ வேண்டாமோ எண்டு ஏங்கி நிற்கிற பொண்னுங்களுக்கு விடிவு கிடைச்சுடும்... :D:D

பி.கு:எனி கலியாண வீட்டுக்கு போகக்கை பிறசன்ற் கொடுக்கிறதெண்டால் சங்கிலி, பணம் எண்டு கொடுக்காமல் குழவிக்கல்,கிழவன் கல், கிரிக்கட் பட் போன்றவற்றை கொடுங்கோ, அதுவும் மனமகள் கையில கொடுங்கோ. :D

நீதியையும் அநீதியையும் தராசில் போட்டு நிறுவியே. நீதியின் எடையை காணமுடியும். அநீதி என்ற ஒன்று இல்லையேல் நீதி என்ற ஒன்றும் இருக்க முடியாது. எப்படி ஒழி இருப்பதால் இருள் இருக்கின்றதோ... வெப்பம் இருப்பதால் குளிர் இருக்கின்றதோ அது போன்றது. ஆகவே நீங்கள் சொல்லவரும் சம்பவங்கள் பொய்கள் இல்லை.......... சபேசனின் கதையில் வந்த பெண்ணின் கதைகளும் நிஜமாக இங்கே நடக்கின்றன. ஆகவே ஒன்றை சாடி ஒன்றை வாழ வைக்க முயற்சிப்பது என்பது கேவலம். இரண்டிலும் உள்ள அநீதியை நீதியை கொண்டு எடைபோட்டு நீக்குவதே உத்தமம். பெண்களை ஒரு சுமையாக எண்ணி பெற்றோர்கள் யாரிடமாவது அவளை கழட்டிவிட வேண்டும் என்று எண்ணுவதிலும் விட கலியாணம் இல்லாமலே அவள் வாழலாம் என்று நினைப்பது கொஞ்சம் சாரியானதாக இருக்கலாம். அந்த கலியாண வாழ்க்கையால் பல பெண்கள் சுமக்கும் சுமைகளின் எடையை யாராலும் வார்த்தைகளால் கேட்டு உணர்ந்துகொள்ள முடியாது. அந்த எடைகளை சுமந்தாலே அதன் வலிகள் புரியும். கஸ்டங்களுக்கு பின்புதான் சுகங்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றாலும் எந்த கஸ்டங்களை கடந்து எந்த சுகங்களை காண்பது என்பதில் தீவிர விளக்கம் கஸ்டங்களை காண்பதற்கு முன்பே தேவையானது.

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது.

பேசாப்பொருளைப் பேசத் துணிந்த சபேசனுக்கு

பாராட்டுகள்

ரமணிச் சந்திரனின் கதைக்கு சுஜாதாவின் கதையின் முடிவு

இப்பவெல்லாம் ரமணிச் சந்திரனதும் சுஜாதாவினதும் கதைகளை நிறைய படிக்கின்றீர்கள் போல இருக்கு சபேசன்.

ம்ம்ம்ம்ம்ம்ம்.... எப்படி இருந்த சபேசன் இப்படியாயிற்றார் :D

Edited by நிழலி

  • தொடங்கியவர்

நிழலி,

நான் ரமணிச்சந்திரனின் கதைகள் அதிகம் படித்தது இல்லை. சுஜாதாவின் கதைகள் படித்தும் நீண்ட நாட்கள் ஆகின்றன. இணையத் தளத்திற்குள் வந்ததன் பின்பு புத்தகங்கள் படிப்பது குறைந்து போய்விட்டது. புத்தகங்கள் என்றால் வரலாறு, அரசியல், மதம் என்பதோடு நிற்கின்றது. மற்றவைகள் அனைத்தும் இணையத்தில்தான்.

அதிலும் இரண்டு பக்கங்களுக்கு மேல் உள்ள கதைகளை தற்பொழுது படிப்பதே இல்லை.

ஆகவே உங்களுடைய ஒப்பீட்டை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எப்படி இருந்த சபேசன் இப்படி ஆயிற்றார் என்று ஏன் சொல்கிறீர்கள் என்றும் புரியவில்லை. இப்பொழுது உள்ள நிலைமையில் கதை, கவிதை, சினிமா என்று போவது நல்லது போல் படுகிறது. "துரோகி" என்னும் உயர்விருதைப் பெறுவதை அது சில வேளைகளில் தள்ளிப் போடக் கூடும்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ மகள் கரை சேர்ந்தால் சரி என்று தீர விசாரிக்காமல் நடக்கும் திருமணங்களின் முடிவில் இப்படியான காதல்கள் ஏற்படுகின்றன.

எப்படியோ மகள் கரை சேர்ந்தால் சரி என்று தீர விசாரிக்காமல் நடக்கும் திருமணங்களின் முடிவில் இப்படியான காதல்கள் ஏற்படுகின்றன.

தீர விசாரிச்ச மகள்,மகன் மாரின் வாழ்க்கையிலும் காதல் வருதுங்கோ எல்லாம் ஒரு சுதி செய்யிர சதியுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.