Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மை முகம் தேவையா?

உண்மை முகம் தேவையா? 47 members have voted

  1. 1. உறுப்பினர்களின் உண்மையான பெயர் அல்லது அடையாளம் தேவையா?

    • ஆம். தேவை!
    • இல்லை. தேவையில்லை!

Please sign in or register to vote in this poll.

Featured Replies

மதிப்புக்குரிய யாழ் கள நிர்வாகி அவர்களுக்கும், மற்றும் மதிப்பக்குரிய உறுப்பினர்களுக்கும்!

யாழ் களத்தில் அண்மைக்காலமாக பல வாதப்பிரதிவாதங்களும், சொற்போர்களும் நடந்துவருகின்றன. இவை எல்லாம் அனாமதேயப் பெயர்களிலேயே நடைபெறுகின்றன. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சொந்தப் பெயர் அல்லது சொந்த அடையாளம் (இயக்கங்களிலிருந்தவர்களுக்கு இயக்கப் பெயர்... எழுத்தாளர்களுக்கு புனைபெயர்...) இருக்கின்றது. இவற்றை விட்டு அனாமதேயப் பெயர்களில் அடிதடிகளில் இறங்குவதும் சவடால் கதைகள் கதைப்பதும் எவ்விதத்திலும் நன்மை பயக்காது என நான் நம்புகின்றேன். எனவே இதனை ஒரு பிரேரணையாக உங்கள் முன் வைக்கின்றேன்.

"சொந்தப் பெயர் அல்லது சொந்த அடையாளம் அதாவது சொந்த முகம் உள்ளவர்ளுக்கு மட்டுமே யாழ் களத்தில் கருத்துப் பதியும் அருகதை உள்ளது" என்பதை மதிப்பிற்குரிய நிர்வாகி அவர்களும் மதிப்பிற்குரிய உறுப்பினர்களும் வலியுறுத்தவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

என்றும் அன்புடன்

இ.பரதன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழில் சொந்த பெயர் அடையாளங்களுடன் எழுதுவதால் ஆம் என்று வாக்கு போட்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் என் சொந்தப்பெயருடன் என் மனதில் பட்டதை அப்படியே இங்கே எழுதுகின்றேன்.

நான் ஆம் என வாக்களித்துளேன்.

புனைபெயர் என்பது தப்பல்ல!

புனைபெயர் வைத்திருப்பவர்களே அடிக்கடி பெயரை தங்கள் புனைபெயரை மாற்றும்போது......

அவர்கள் நிஜவாழ்க்கையில் எப்படியிருப்பார்கள் என்பதை கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்

எனது இந்த கருத்து தவறாயின் இதனை நீக்க மட்டுறுத்தினருக்கு உரிமையுண்டு. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரத் முதலில் தன்னை அடையாளப்படுத்தி கொள்ளுங்கள்.அதற்கு பிறகு மற்றவற்றை பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாழில் சொந்த பெயர் அடையாளங்களுடன் எழுதுவதால் ஆம் என்று வாக்கு போட்டிருக்கிறேன்.

சாத்திரியார்!

இனிவாறவங்கள் சொல்லுவங்கள்.....

உங்கடை படம் கண்ணாடி போட்டிருக்கு...

ஏலுமெண்டால் கண்ணாடி இல்லாமல் படம் போடட்டுமன் பாப்பமெண்டு :(

ஏனெண்டால் அப்புடியான லூசுக்கூட்டம் தான் இப்ப ஊர் உலகத்திலை உலாவுதுகள் :wub:

நல்ல விடயம் தான்...ஆனால் என்னால் அப்படி செய்ய முடியாது. என நெருங்கிய அனைத்து உறவுகளும் இலங்கையில் இருக்கும் போது, தற்போதைய சூழ்நிலையில் என்னால் என் சொந்தப் பெயரில் எழுத முடியாது. கோழைத்தனமான செயல் என்று மற்றவர் கருதினாலும் பரவாயில்லை.

தமிழ் ஊடக சூழல் என்பது எதிரிகளால் மட்டுமன்றி துரோகிகளாலும் சூழப்பட்டது.

நண்பர் பாரத்,

யாழில் அண்மைக்காலமாக அல்ல, நீண்டகாலமாகவே வாதப்பிரதி வாதங்களும், சொற்போர்களும் நடந்து வருகின்றன. இங்கு எழுதுபவர்களும் யார் யார் என்று மற்றைய பெரும்பாலானோருக்கு தெரியாது.

ஆனாலும் கனடாவை பொறுத்தளவில் சுமார் 30 யாழ் கள உறவுகள் ஒருவரை ஒருவர் நேரில் அறிந்து இருக்கின்றார்கள் (கனடாவில் இருந்தே யாழ் களம் அதிகளவில் பார்வையிடப்படுகின்றது). இதேபோல் எம்.எஸ்.என், முகநூல், ஸ்கைப், தொலைபேசி மற்றும் இதர தொடர்பாடல் ஊடகங்கள் மூலம் பல யாழ் கள உறவுகளிற்கு ஒருவரை ஒருவர் நன்கு அறிமுகம் உண்டு.

நீங்கள் கூறுவதுபோல் சொந்தப்பெயரில் எல்லோரும் எழுதுவது என்பது நடைமுறைச் சாத்தியமான விடயம் இல்லை, மற்றும் தேவையும் இல்லை. அடிப்படையில் இது ஓர் கருத்துக்களம், நான்குவிதமான கருத்துக்கள், சண்டை, சச்சரவுகள் வரத்தான் பார்க்கும். இதற்காகவே யாழ் நிருவாகம், மட்டறுத்துனர்கள் இருக்கின்றார்கள் - கருத்துக்களத்தை நெறிப்படுத்துவதற்கு.

மேலும், ஒவ்வொரு உறவுகளும் பயன்படுத்தும் ஐபி முகவரிகளை நிருவாகத்தினரும், மட்டறுத்தினரும் கண்காணிக்க முடியும். விரும்பத்தகாத ஐபி முகவரிகளை தடைசெய்யவும் முடியும்.

தவிர, ஊரில், குப்பத்தில் நடைபெறும் பல்வேறு விடயங்கள், தனிப்பட்டவர்களின் பிரச்சனைகளையெல்லாம் கட்டைப் பஞ்சாயத்து செய்வதற்கு யாழ் நிருவாகத்திற்கு நேரம் இருக்காது என்று நினைக்கின்றேன். எதுவித லாபநோக்கமும் இன்றி சேவை அடிப்படையில் யாழ் இணையம் இயங்குகின்றது. நீங்கள் தவறான கோணத்தில் யாழ் வலைத்தளத்தை கணிப்பீடு செய்துள்ளீர்கள் என்று நினைக்கின்றேன்.

இன்னமும் தெளிவாக கூறுவதானால்.. தூரநோக்குடனும், தெளிவான தூய சிந்தனையுடனும் கருத்துக்கள் பரிமாறப்படுவதற்கு இது ஓர் ஆலயமோ அல்லது நீதிமன்றமோ இல்லை. யாழ் நிருவாகத்தினரும் பூசாரிகளோ, நீதிபதிகளோ அல்லது காவல்துறையினரோ இல்லை. :wub:

இன்று இங்கு பிடுங்குப்படுபவர்கள் நாளை நண்பர்களாகலாம், இன்று நண்பர்களாக இருப்பவர்கள் நாளை இங்கு பிடுங்குப்படலாம். அதிகம் யோசிக்காதீர்கள், டேக் இட் ஈசி :(

Edited by மச்சான்

மதிப்புக்குரிய யாழ் கள நிர்வாகி அவர்களுக்கும், மற்றும் மதிப்பக்குரிய உறுப்பினர்களுக்கும்!

(இயக்கங்களிலிருந்தவர்களுக்கு இயக்கப் பெயர்... எழுத்தாளர்களுக்கு புனைபெயர்...) "சொந்தப் பெயர் அல்லது சொந்த அடையாளம் அதாவது சொந்த முகம் உள்ளவர்ளுக்கு மட்டுமே யாழ் களத்தில் கருத்துப் பதியும் அருகதை உள்ளது" என்றும் அன்புடன்

இ.பரதன்

விபரீதமான ஆலோசனை. நிச்சயம் தனி ஓருவரின் ஆலோசனையாக இருக்காது. ஒவ்வொருவரும் அல்லது ஒரு சிலர் தங்களை அடையாளப்படுத்தும் காலம் இன்னும் வரவில்லை.

சிரித்து சிரித்து வந்தான் சீனா போனா டேய். வந்தமா எழுதினமா என்றில்லாமல் நதிமூலம் ரிசிமூலம் கேட்கின்றீர்களே, முன்னர் பின்னர் ஏதாவது இயக்கத்தில் இருந்தீர்களா? அப்படி ஒன்று இருந்தது, அது என்ன செய்தது என்றாவது தெரியுமா? தம்பி பாரத் பால் வாங்கி வைத்திருக்கின்றேன் குடித்துட்டு கும்மென்று குப்பிற படுக்கின்றீர்களா.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த நாட்டை எதிரியிடம் கையளித்துவிட்டு.. வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்றுவிட்டு எல்லாரும் குசால வந்து சொந்தப் பெயரில் விளம்பரம் தேடலாம். அது பெரிய பிரச்சனையே அல்ல..!

பிரச்சனை என்பது சொந்த அடையாளத்தை யாழில் வெளியிடுவதல்ல. அது யாழ் மூலம் அடையக் கூடிய இடங்கள் என்பது தான்..! இதில் கோழைத்தனம் என்ற ஒன்றில்லை. என்னிடமும் நாலு அணுகுண்டும்.. 15 F16 இனும் 20 ஏவுகணைகளும் இருக்கும் என்றால் நானும் ஒபாமா மாதிரி வந்து போவன்..!

30 வருடங்கள் ரகசியமாக செயற்பட்ட ஒருவர் தன்னை பகிரங்கப்படுத்தி 3 மாதங்களுக்குள் மலேசியாவில் வைத்து பிடித்துச் செல்லப்படும் அளவுக்கு செயற்பாடுகள் எதிரிக்கு உள்ளன.

ரகசியம் காப்பது.. சில இடங்களில் அவசியம். கருத்து ஒன்றை வெளியிட சொந்தப் பெயர் முகவரி தேவையில்லை. சொல்லப்படும் கருத்தின் பரிமானம் தான் முக்கியம்..! :wub:

என் வாக்கு தெளிவாக இல்லை என்பதே..! :(

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு யார்..... எப்ப குழி பறிப்பது என்பதில், தமிழனை மிஞ்ச ஆளில்லை.

இத‌ற்குள் உண்மை முக‌ம் என்ப‌து க‌ருத்துக்க‌ள‌த்திற்கு ஏற்புடைய‌த‌ல்ல‌.

என‌து வாக்கு உண்மை முக‌ம் தேவை இல்லை என்ப‌த‌ற்கே ...

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு யார்..... எப்ப குழி பறிப்பது என்பதில், தமிழனை மிஞ்ச ஆளில்லை.

இத‌ற்குள் உண்மை முக‌ம் என்ப‌து க‌ருத்துக்க‌ள‌த்திற்கு ஏற்புடைய‌த‌ல்ல‌.

என‌து வாக்கு உண்மை முக‌ம் தேவை இல்லை என்ப‌த‌ற்கே ...

உண்மை தான்

சொந்த நாட்டை எதிரியிடம் கையளித்துவிட்டு.. வெளிநாடுகளில் பிரஜா உரிமை பெற்றுவிட்டு எல்லாரும் குசால வந்து சொந்தப் பெயரில் விளம்பரம் தேடலாம். அது பெரிய பிரச்சனையே அல்ல..!

பிரச்சனை என்பது சொந்த அடையாளத்தை யாழில் வெளியிடுவதல்ல. அது யாழ் மூலம் அடையக் கூடிய இடங்கள் என்பது தான்..! இதில் கோழைத்தனம் என்ற ஒன்றில்லை. என்னிடமும் நாலு அணுகுண்டும்.. 15 F16 இனும் 20 ஏவுகணைகளும் இருக்கும் என்றால் நானும் ஒபாமா மாதிரி வந்து போவன்..!

30 வருடங்கள் ரகசியமாக செயற்பட்ட ஒருவர் தன்னை பகிரங்கப்படுத்தி 3 மாதங்களுக்குள் மலேசியாவில் வைத்து பிடித்துச் செல்லப்படும் அளவுக்கு செயற்பாடுகள் எதிரிக்கு உள்ளன.

ரகசியம் காப்பது.. சில இடங்களில் அவசியம். கருத்து ஒன்றை வெளியிட சொந்தப் பெயர் முகவரி தேவையில்லை. சொல்லப்படும் கருத்தின் பரிமானம் தான் முக்கியம்..! :wub:

என் வாக்கு தெளிவாக இல்லை என்பதே..! :(

சரியா சொன்னீங்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10 பேர் ஆம்..தேவை என்றும்

13 பேர் இல்லை..தேவையில்லை என்றும் வாக்களித்து உள்ளார்கள்.

எனது கருத்தும் தேவையில்லை என்பதே..நெடுக்கு அண்ணா சொன்னது போல இங்கு பதியப்படும் கருத்துகள்

தான் முக்கியமே தவிர குறித்த நபரல்ல..

தேவாரம் ,திருவாசகம்,பக்தி சம்பந்தபட்ட தளமென்றால் நீங்கள் சொன்ன மாதிரி உண்மையான முகத்தோட வரலாம்.ஆனால் யாழில ஒபாமாவில் இருந்து.....கருனாநிதி....மகிந்தா...பிள்ளையான் ..என்று எல்லொரையும் பற்றி எழுது பொழுது. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய யாழ் கள நிர்வாகி அவர்களுக்கும், மற்றும் மதிப்பக்குரிய உறுப்பினர்களுக்கும்!

யாழ் களத்தில் அண்மைக்காலமாக பல வாதப்பிரதிவாதங்களும், சொற்போர்களும் நடந்துவருகின்றன. இவை எல்லாம் அனாமதேயப் பெயர்களிலேயே நடைபெறுகின்றன. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சொந்தப் பெயர் அல்லது சொந்த அடையாளம் (இயக்கங்களிலிருந்தவர்களுக்கு இயக்கப் பெயர்... எழுத்தாளர்களுக்கு புனைபெயர்...) இருக்கின்றது. இவற்றை விட்டு அனாமதேயப் பெயர்களில் அடிதடிகளில் இறங்குவதும் சவடால் கதைகள் கதைப்பதும் எவ்விதத்திலும் நன்மை பயக்காது என நான் நம்புகின்றேன். எனவே இதனை ஒரு பிரேரணையாக உங்கள் முன் வைக்கின்றேன்.

"சொந்தப் பெயர் அல்லது சொந்த அடையாளம் அதாவது சொந்த முகம் உள்ளவர்ளுக்கு மட்டுமே யாழ் களத்தில் கருத்துப் பதியும் அருகதை உள்ளது" என்பதை மதிப்பிற்குரிய நிர்வாகி அவர்களும் மதிப்பிற்குரிய உறுப்பினர்களும் வலியுறுத்தவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

என்றும் அன்புடன்

இ.பரதன்

ஐயா பாரத் நம்மட ஈழதமிழர்களின் உன்மை முகம் தெரியாமால் பேசி கொண்டிருக்கிறீர்கள் :wub:

ஒரு நாள் வெளியூர் நண்பர்கள் வீட்டுக்கு வந்து போனதால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்கள் [ஈழத்தில்] இப்படி இருக்க எப்படி முகத்தை காட்டுவது?? :(:D

  • கருத்துக்கள உறவுகள்

உறுப்பினர்களின் உண்மையான பெயர் அல்லது அடையாளம் தேவையா?

இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த மட்டில் உண்மையான பெயர்,அடயாளஅட்டை இதெல்லாம் தேவை அற்றவை.இது வரைக்கும் யாழ் நமக்கு அப்படியான உபத்திரவங்களைத் தரவில்லை.இனிமேலும் தராது எண்டு நினைக்கிறன்.நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரத் இது தேவையற்ற விவாதம் எனத் தோன்றுகின்றது

  • தொடங்கியவர்

நண்பர்களின் கருத்துகளுக்கு முதலில் எனது நன்றிகள்.

ஒரு சிறு உதாரணம். இந்த திரி.

அவுஸ்த்திரேலியாவிற்குப் படகுகளில் வந்தவர்களுள் புலிகளும் நிச்சயம் இருக்கிறார்கள் - விக்டர் ராஜகுலேந்திரன்

அவுஸ்த்திரேலியாவிலிருக்கும் தமிழ் அமைப்புக்களில் ஒன்றான AFTA எனும் அவுஸ்த்திரேலிய தமிழ் அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் என்று கூறப்படும் கலாநிதி விக்டர் ராஜகுலேந்திரன் என்பவர் அவுஸ்த்திரேலியன் எனப்படும் நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றில், படகுகளில் வந்துள்ள தமிழர்களில் பல முன்னாள்ப் போராளிகளும் நிச்சயமாக இருப்பதாக அடித்துக்க் கூறியுள்ளார்.அப்பேட்டியின் இரு இடங்களில் தனது கூற்றை ஆணித்தரமாக சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாலையில் வெளிவந்த இப்பத்திரிக்கைச் செவ்வியைத் தொடர்ந்து அவுஸ்த்திரேலியாவிலியங்கும் பிரபல தொலைக்காட்சிகளான சனல் 7 , ஏ.பீ.சீ, எஸ்.பீ.எஸ் மற்றும் வனொலிகளான 2 ஜீ.பீ போன்றவை இவரை அடுத்தடுத்துப் பேட்டிகண்டுள்ளன.

இந்த எல்லா ஊடகங்களிலும் தான் முன்னர் சொல்லிய அதே கருத்தான "படகுகளில் புலிகளும் உள்ளார்கள்" என்பதை திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கும் இவர், பேட்டியாளர் புலிப்பயங்கரவாதிகள் எமது நாட்டுக்குள் வந்திருக்கிறார்களா என்று கேட்ட போது ஆம் என்று பதிலளித்தார். தீவிர தமிழின விரோதியான ஒரு வானொலி நடத்துனர் இவரிடம், " நீங்கள் சொல்லும் போராளிகளும் தமிழ்ப் பயங்கரவாதிகளும் ஒரே ஆட்கள் தானே " என்று கேட்டதற்கு "சிலர் அவர்களை அப்படியும் அழைக்கிறார்கள்" என்று கூறினார். " மனித தற்கொலைத்தாக்குதலின் மூலம் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள 100 பொதுமக்களையும் கொல்லும் பயங்கரவாதிகள் எமது நாட்டுக்குள் வந்திருக்கிறதாகச் சொல்லுகிறீர்கள்" என்ற இன்னொரு கேள்விற்கு " அவுஸ்த்திரேலியாவில் அவர்கள் தாக்குதல் நடத்துமளவிற்கு போர் நடக்கவில்லையே" என்று அப்பாவித்தனமாகப் பதிலளித்தார்.

இவ்வளவு காலமும் தமிழர் மீது நடந்த இனக்கொலையைப் பற்றி வாயே திறக்காத இந்தப் பிரபல ஊடகங்கள் இவரது செவ்விகளை தமது முன்பக்கச் செய்தியாகவோ அல்லது தலைப்புச் செய்தியாகவோ போட்டுத் தள்ளியுள்ளன." படுகளிலிருக்கும் அகதிகளின் பேச்சாளர் ஒருவர் தாங்கள் கொழும்புப் பகுதியிலிருந்துதான் வந்தோம், எம்மில் எவரும் வடக்கிலிருந்து வரவில்லை என்று சொல்லியிருக்கிறாரே ?" என்று பேட்டியாளர் கேட்ட போதும், " அதில் புலிகளும் இருக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்" என்று மீண்டும் கூறினார்.

இவரது செவ்விகளை அறிந்து கொதிப்படைந்த தமிழர்கல் பலர் இவரைத் தொடர்பு கொண்ட போது, "எனக்கு நேரமில்லை, பல செய்தி ஊடகங்களிற்கு செவ்விகள் வழங்குவதால் இப்போதைக்கு நேரமில்லை " என்றும் பதிலளித்துள்ளார்.

இவரது பேட்டியின் மூலம் இவர் செய்ததெல்லாம், படகுகளில் வந்திறங்கும் அப்பாவிகளைத் திருப்பியனுப்புவதுதான்.அண்மைக்காலமாக அவுஸ்த்திரேலிய மக்களின் தமிழர் மீதான பாரவை எமக்குச் சார்பாகத் திரும்பிவரும் நிலையில் இவரது பேட்டி எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கியுள்ளது.

சிங்களத் தூதுவன் வலகம்பாய அண்மையில் அவுஸ்த்திரேலிய ஊடகங்களுக்கு வழங்கிய " பயங்கரவாதிகளும் படகுகளில் இருக்கிறார்கள்" என்ற செய்திக்கு " அப்படி எவரும் படகுகளில் இல்லை" என்று அவுஸ்த்திரேலியப் பிரதமர் கெவின் ரட் உறுதிப்படுத்தியிருக்கும் தறுவாயில் இவரது இந்த செவ்வி எதிர்க்கட்ட்சி தலைவர்களுக்கும், தமிழர் விரோத ஊடகங்களுக்கும் துரும்புச் சீட்டாக மாறியுள்ளது.படகு மக்கள் மீதான அரசின் கரிசணை மீது தமது தீவிரத் தாக்குதலை இவ் எதிர்க்கட்ட்சி உறுப்பினர்கள் இவரது செவ்வியைத் தொடர்ந்து தீவிரமாக்கியுள்ளன."அவுஸ்த்திரேலியத் தமிழர்களின் தலைவர்" என்று எல்லா ஊடகங்களிலும் மேற்கோள் காட்டப்பட்ட இவர் கூறியுள்ள கூற்றுக்கள் அவுஸ்த்திரேலியாவில் இதுவரை காலமும் தமிழர் சிறுகச் சிறுக சேமித்துவந்த தமிழர் மீதான பரிவுப் போக்கை ஒரே நாளில் அடித்து நொறுக்கியுள்ளது.

இவரோ அல்லது இவர் சேர்ந்துள்ள அமைப்போ இவரது செய்கை பற்றி எந்தக் கவலையும் அல்லது நடவடிக்கையோ இதுவரை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"அவுஸ்த்திரேலியாவுக்குச் சட்ட விரோதமாகப் போகும் அனைவரும் புலிப்பயங்கரவாதிகள்தான்" எனும் சிங்கள வெளிவிவகார அமைச்சனின் கூற்றை உறுதிப்படுத்தியிருக்கும் இவரின் செவ்விகள் தமிழர்க்குச் செய்யவிருக்கும் ஆபத்தின் அளவு இன்னும் உணரப்படவில்லை.அதேவேளை தமிழர்க்குச் சார்பாக இவ்வளவு நாளும் பேசியும் எழுதியும் வந்த அவுஸ்த்திரேலிய நண்பர்களின் முகத்திலும் இவர் கரி பூசியுள்ளார்.

இவரது செவ்விகளுக்குப் பின்னரான மக்களின் அபிப்பிராயங்கள் இன்பத் தமிழ் வானொலியில் நேற்றிரவு ஒளிபரப்பபட்டன. அதில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான மக்களின் ஆதங்கங்கள் இவரின் செயலின் ஆழத்தை எடுத்தியம்பின. ஆங்கில செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளிக்க ஆர்வப்பட்ட இவர் இதுவரை எந்தத் தமிழ் ஊடகத்திலும் தனது செயலை நியாயப்படுத்தியோ அல்லது மனிப்புக் கேட்டோ பேசவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கான பதில்கள் அல்லது கருத்துக்களிலிருந்து...

1.

எனது கேள்வி புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் என்பவர்கள் அகதி அந்தஸ்து கோரப்படுவதற்கு அருகதை அற்றவர்களா? ரகுநாதனின் முறைப்பாடுகளை வாசிக்க இவ்வாறுதான் தோன்றுகின்றது.

2.

மச்சான்,

உங்கள் அறிவாற்றல் மெய் சிலிர்க்க வைக்கிறது. இப்போது புலிகள் வரக்கூடாது என்று யார் சொன்னார்? புலிகளும் வரட்டும், ஆனால் அதை நாம் சொல்லிக்காட்ட வேண்டாம். இவரிடம் யாராவது கேட்டார்களா புலிகளும் வருகிறார்களா என்று? பிறகு எதற்கு சும்மா இருந்த சங்கை ஊதுவான்?

வருவது மக்களாயிருந்தாலென்ன, புலிகளாயிருந்தாலென்ன, எல்லாம் தமிழர்கள்தான்.

புலிகள் வருகிறார்கள் என்று சொல்லியதன் மூலம் எவருமே வருவதை கடிணமாக்கியிருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை.

புலிகள் வந்தால்க்கூட நாம் அப்படியில்லை , அவர்கள் புலிகளில்லை என்று சொல்வதுதான் நாம் செய்ய வேன்டியது. அதை விட்டுட்டு, அதிமேதாவித்தனமாக , புலிகள் நிச்சயமாக இருக்கிறார்கள் என்றால் இது எல்லாரையுமே சிக்கலில் மாட்டிவிடும் வேலையல்லவா?

எனது கருத்தில் பிழை காண வருமுன்னர் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

3.

ரகுநாதன்.. உங்கள் கருதுக்கு குற்றம் கண்டு பிடித்தவர்கள்.கண்டிப்பாக..வெளிநாட்டில்...சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள்தான்..அவர்கள் தப்பினால் மட்டும் போதும்...மற்றவர்கள் எப்ப்டி போனாலும்........பரவாயில்லை..

இல்லை என்றால்..புலிகள் ஏன் நாட்டை விட்டு வருகிறார்கள்... திரும்பவும்..அங்க இருந்து சண்டை பிடிகணும் எண்டு நினைக்கிறார்கள் போல...

அழுதுடுவேன் சொல்லிட்டன்...

4.

2 லச்சம் வவுனியா முகாமில, அதில 1 லச்சம் மீள குடியேறுதாம் மிச்சம் 1 லச்சத்துக்கும் ஏற்பாடு செய்யுங்கோ!

வாறது நல்லது அதுசரி நீங்கள் வைகோ ராமதாஸ் சீமானுக்கு இதுபற்றி தெரிவிச்சுபோட்டீங்களே? அவையள் விட்ட அறிக்கையள படியுங்கோ!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=65431

http://www.yarl.com/forum3/index.php?showtopic=65433

http://www.yarl.com/forum3/index.php?showtopic=65445

5.

இப்ப என்ன சொல்ல வாறியள்.. ? சிங்களவன் நல்லவனா.............???? கெட்டவனா....????

6.

எல்லாம் தெரிஞ்ச நீங்களே இடக்குமுடக்கான கேள்வியள் கேட்டு சங்கடத்தில மாட்டுறியள். பாதிப்பேருக்கு அகதி அந்தஸ்து வாங்கி குடுத்திருக்கிறார்கள், மீதிக்கும் ஒரு வழி பன்னுறார்கள். எங்களின்ட போராட்ட குறிக்கோளே அதுதானே நிறைவேற்றுறார்கள் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். :wub:

7.

1970 களில் புத்தளத்திலை 90% தமிழர்கள்தான் இருந்தவை... ஆனால் இண்டைக்கு அங்கை 10 வீதமானோர் கூட தமிழை முழுமையாக அங்கே பேசுவதில்லை... இது மாதிரித்தான் மட்டக்களப்பின், திருமலையின் வவுனியாவின் முழுமையான கரையோர தமிழ் கிராமங்களிலையும் நடந்து இருக்கிறது...

தென்னமரவாடி, பதவியாறு , மணலாறு கொக்கிளாய், முந்திரிக்குழம் மண்கிண்டி, மணலாறு போண்ற முழுமையான பிரதேசங்களிலையும் 100% சிங்களம் தான் பேசப்படுகிறது... இது நட்ந்ததுக்கு போர் காரணம் இல்லை...

போர் எண்ற ஒண்று வராவிட்டு இருந்தால் பெரிய விகிதத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இருக்கும்... நீர் சாகாமல் இருந்தால் இன்னும் 10 வருடத்துக்கு அதை தாராளமாக காணலாம்...

ஏன் தெரியுமே...?? உங்களை மாதிரி மர மண்டைக்கு புரியும் எண்ட நம்பிக்கையும் எனக்கு இல்லை...

மற்றவனை குழப்ப நிக்க்கிறதை விட்டு உமது அறிவை வளர்க்க முயலும்... இல்லை காசு தாறவனுக்கு வாலை தான் ஆட்டுவன் எண்றால் வாலை நறுக்க தான் வேண்டும்..

இப்படியே.......

ரகுநாதன்,

நீங்கள் தான் மேலே தமிழர் ஒருத்தர் பேட்டி ஒன்று கொடுத்தார் இதனால் தமிழருக்கு அகதிநிலை அங்கீகாரம் கிடைப்பது அவுஸ்திரேலியாவில் பாதிக்கப்படப்போகின்றது என்று சொல்லி இருக்கிறீங்கள்.

பிறகு நீங்கள்தான் வெளிநாட்டு அரசாங்கங்களின் கொள்கையில் எங்கள் தனிமனித கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தமுடியாது என்றும் சொல்லி இருக்கிறீங்கள். அப்படியானால் மேற்குறிப்பிட்ட தமிழரை நீங்கள் தூற்றுவான் ஏன்?

அவர் என்ன சொன்னாலும்.. பத்தோடு பதினொன்றாக அவரது கருத்து இருக்கப்போகின்றதேயொழிய அவுஸ்திரேலிய புலனாய்வுப்படை அவருக்கு முகமூடி அணிவித்து ஆட்களை அடையாளம் காட்டுவதற்கு தலையாட்டியாக அவரை கிறிஸ்துமஸ் தீவில் பாவிக்கப்போகின்றதா?

நான் இன்று 76தமிழர்களின் நிலைபற்றி ஓர் செய்தியை ஆங்கில ஊடகமொன்றில் பார்த்து இருந்தேன். அதில் குடிவரவு அதிகாரிகளின் விசாரணைக்காக மேற்குறிப்பிட்ட தமிழர்கள் அழைத்துவரப்பட்டபோது அவர்களது கால்களிற்கும், கைகளிற்கும் விலங்குகள் இடப்பட்டு பாரிய குற்றச்செயல்கள் புரிந்தவர்கள்போல் அழைத்துவரப்பட்டார்கள் என்று இருந்தது.

மனிதாபிமானம் என்கின்ற ரீதியில் ஒன்றும் புடுங்கமுடியாது. ஆனால் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற மனிதாபிமான சட்டங்கள் மூலம் ஏதாவது செய்யமுடியுமா என்று சட்டம் தெரிந்தவர்கள் முயற்சித்து பார்க்கலாம்.

சாதாரண பொதுமக்களை விடுங்கள், அகதி அந்தஸ்து அவர்களிற்கு கிடைப்பது அல்லது கிடைக்காதது ஒருபக்கம் இருக்க.. முன்னாள் புலி உறுப்பினர்கள் என்று இனம்காணப்பட்டவர்களின் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களின் கதி என்ன?

இது நீங்களும் நானும் விதண்டாவதாம் செய்து பயன்கிடைக்காமல் போகின்ற விடயம் என்று இல்லை. எதிர்காலத்தில் இவ்விடயங்கள் சம்மந்தப்பட்டவர்கள், உறவுகள் வேறு வழிவகைகள் பற்றி சிந்தித்து பார்க்கலாம்.

கனடாவிற்கு வந்தவர்களின் நிலை என்று பார்த்தால் வயதில் குறைந்தவர் எனும் காரணத்துக்காக ஒருவரை விடுவித்து இருக்கின்றார்கள். இங்கு பிரச்சனை என்னவென்றால் வந்தவர்கள் எல்லோரும் ஆண்கள். தவிர குழந்தைகளும் இல்லை.

எத்தனையோ பல விடயங்கள் சம்மந்தப்பட்ட சிக்கலான ஓர் விடயத்தில் ஒருவரை மட்டுமே ஏதோ சொல்லிவிட்டார் என்று நீங்கள் குற்றம் சாட்டுவது சரியாகப்படவில்லை. அவர் ஒன்றும் சொல்லாமல் வாயை மூடி இருந்தால் எல்லாரும் வாங்கோ என்று அவுஸ்திரேலிய அரசு நேசக்கரம் நீட்டி இருக்கும் என்று சொல்லுவீங்களோ?

இந்தத் திரியில் ரகுநாதன் தன் கேள்வியுற்ற ஒரு விடயத்தை மற்றவர்களுடன் பகிர விரும்புகின்றார். ஆனால் மற்றும் பலர் அதற்கு பலவித வியாக்கியானங்களையும் பொழிப்புரைகளையும் கொடுத்து திரியில் சொல்லவந்த விடயம் திசைமாறிப் போகின்றது.

நல்லது!

நாங்கள் எல்லோரும் எங்கள் எங்கடை ஊரிலை இருந்துதான் இங்கே வந்திருக்கின்றோம். எங்கடை ஊரிலை மதவடியிலையோ அல்லது கோயிலடியிலையோ அல்லது வாசிகசாலையிலையோ நடக்கிற விவாதங்களிலை அல்லது வாதங்களிலை நாங்கள் இப்பிடி கதைச்சிருப்பமோ? என்ரை மச்சான் அல்லது ஒண்டுவிட்ட அண்ணன் அல்லது அயலவன் என்னதான் எனது கருத்துக்கு எதிராகச் சொன்னாலும்..... இவ்வளவு காட்டமாய் நாங்கள் கதைக்கமாட்டோம்......

ஏன்?

முகம்!

எனக்கு ஒரு முகம் இருக்கு அவனுக்கு ஒரு முகம் இருக்கு.

முகம் இருந்ததால்தான் நாங்கள் மனிதர்களாக இருந்தோம்.

எமக்கு முகம் வேண்டாம் என்றால்.... நாங்கள் அனாமதேயங்களாகவே இருப்போமென்றால்.....

நாங்கள் மனிதர்களாக இருக்கமுடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது பரா.

முகம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமானது. இந்தக் கருத்துக்களத்தைப் பொறுத்தவரை இங்கு முகத்தைக்காட்ட இங்குள்ளவர்களால் முடியாது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அநேகமாக ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களில் உறுப்பினர்களாக இருப்பது, வார்த்தைப் பிரயோகங்களை அநாகரீகமாக்கி கருத்தாடுவது, முகமறியாத வரைக்கும் எப்படியும் எந்தக் கோணத்திலும் பண்பின்றி எதிர்க்கருத்தாளரைத் தாக்குவது, இவை மாத்திரம் அல்ல அரசியல் சார்ந்த விடயத்தில் ஏடாகூடமாக பலரை ஏளனப்படுத்துவது, ஒரு விடயத்தில் தெளிவான நிலையின்றி கருத்தாடுவது இப்படியான போக்கிலுள்ள ஒரு கருத்துக்களத்தில் எப்படி தத்தம் முகத்தை உறுப்பினர்கள் வெளிப்படுத்துவார்கள்? முகத்தை வெளிப்படுத்தினால் கட்டாயம் கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டிவரும்.

படைப்பாளிகளைப் பொறுத்தவரை அவர்களின் முகம் அவர்களுக்கு முக்கியமானது. அந்த வகையில் படைப்பாளிகள் கருத்தாளர்களைக்காட்டிலும் தமது முகத்தை பாதுகாக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் படைப்பாளிகள் தங்கள் பதிவுகள் சார்ந்த விடயங்களில் தங்கள் முகத்தைப் பதிவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். ஏனென்றால் தற்போதைய கணனி யுகத்தில் ஒருவருடைய படைப்பை இலகுவாக மற்றவர்கள் திருடி தங்களின் படைப்புப் போன்று பதிவு செய்துவருவது கண்கூடு. உரிய படைப்பாளி தனது ஆக்கத்தை நூல் வடிவில் கொண்டுவராத நிலையில் தரமான படைப்பாளியும் இனங்காணப்படாமல் விடப்பட்டுப் போகலாம். அதனைத் தவிர்க்க வேண்டுமாயின் அவர்கள் தங்கள் அடையாளத்தையும் சேர்த்து தமது ஆக்கத்தை வெளிப்படுத்துவது நன்று என்று நினைக்கிறேன்.

நண்பர் பாரத்,

உமக்கு நாங்கள் எழுதுவது விதண்டாவதம் போல இருந்தால் அதற்கு நாம் ஒன்றும் செய்யமுடியாது. அதேசமயம் இங்கு நீர் எழுதியுள்ள கருத்துக்கள் எமக்கு விதண்டாவாதமாக தெரிகின்றது.

முகம் காட்டித்தான் கருத்துக்களை கூறுவேன் என்று நீர் ஆசைப்பட்டால் – அடம்பிடித்தால் தாராளமாக உமது படத்தை பெயரை, முகவரியை, மற்றும் வேண்டுமானால் கடவுச்சீட்டு இலக்கம், சிறீ லங்கா தேசிய அடையாள அட்டை இலக்கம் இவைகளையெல்லாம் போடலாம்.

புதினம், தமிழ்நாதம், பதிவு, சங்கதி, நிதர்சனம், தமிழ்நெட் இப்படி பலநூறு தமிழ் வலைத்தளங்கள், வலைப்பூக்கள் இருக்கின்றன இங்கு எல்லாம் முகவரி, ஆள், அங்க அடையாளத்தை வெளிப்படுத்தியா கருத்துக்கள் கூறுகின்றார்கள்?

முகம் இருந்தால் மனிதர்களாக இருப்போம், நல்லது. ஆனால்.. முகங்களை அறிந்து வீட்டுக்கு வீடு கொலைகள் விழத்தொடங்கிய பின்னர்தானே முகமூடிகளின் பின்னால் தமிழர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள். வீடுவீடாக தமிழர் வரலாற்றில் கொலைகள் விழுந்ததையெல்லாம் மறந்துபோனீர்களா?

உங்கள் வியாக்கியானமும், பொழிப்புரையும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது. விருப்பமானால் நீங்கள் ஆட்களின் அங்க அடையாளங்களை உறுதிப்படுத்தியபின் நீங்களே ஓர் கருத்துக்களத்தை ஆரம்பியுங்கள். எத்தனைபேர் அங்கு கருத்துக்கள் எழுதுகின்றார்கள், என்னத்தை எழுதுகின்றார்கள் என்று பார்ப்போம்.

பி/கு: ரகுநாதன் ஆரம்பித்த திரி பற்றி: அவர் கேள்வியுற்ற ஓர் செய்தியை பகிர்ந்துகொள்கின்றார். நாங்களும் கேள்வியுற்ற செய்தியை இங்கு எம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை பகிர்ந்துகொள்கின்றோம். ரகுநாதன் எழுதியது உமக்கு ஆக்கபூர்வமான கருத்தாகவும், நாங்கள் எழுதுவது வியாக்கியானமாகவும் இருந்தால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

போட்டுக் கொடுப்பதே தொழிலாகப் பலர் செய்கின்றனர். இதற்கு சொந்த முகத்தை காட்டி அவர்கள் வேலையை இலகுவாக்கக் கூடாது.

சொந்தப் பெயராகினும், புனைபெயராகினும் ஒருவருக்கு ஒரு அவதாரம் என்ற நிலையைக் கொண்டுவந்தால் நல்லது. பல பெயர்களில் பல்வேறு விதமான கருத்துக்களை எழுதி குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கும் சிலரது நடவடிக்கையால் தொந்தரவுகள் உள்ளன.

  • தொடங்கியவர்

மச்சான் கூல் கூல்...

பி/கு: ரகுநாதன் ஆரம்பித்த திரி பற்றி: அவர் கேள்வியுற்ற ஓர் செய்தியை பகிர்ந்துகொள்கின்றார். நாங்களும் கேள்வியுற்ற செய்தியை இங்கு எம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை பகிர்ந்துகொள்கின்றோம். ரகுநாதன் எழுதியது உமக்கு ஆக்கபூர்வமான கருத்தாகவும், நாங்கள் எழுதுவது வியாக்கியானமாகவும் இருந்தால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது.

நான் அப்படிச் சொல்லவில்லையே!

நண்பர்களின் கருத்துகளுக்கு முதலில் எனது நன்றிகள்.

ஒரு சிறு உதாரணம். இந்த திரி.

இதற்கான பதில்கள் அல்லது கருத்துக்களிலிருந்து...

1.

2.

3.

4.

5.

6.

7.

இப்படியே.......

இந்தத் திரியில் ரகுநாதன் தன் கேள்வியுற்ற ஒரு விடயத்தை மற்றவர்களுடன் பகிர விரும்புகின்றார். ஆனால் மற்றும் பலர் அதற்கு பலவித வியாக்கியானங்களையும் பொழிப்புரைகளையும் கொடுத்து திரியில் சொல்லவந்த விடயம் திசைமாறிப் போகின்றது.

நல்லது!

நாங்கள் எல்லோரும் எங்கள் எங்கடை ஊரிலை இருந்துதான் இங்கே வந்திருக்கின்றோம். எங்கடை ஊரிலை மதவடியிலையோ அல்லது கோயிலடியிலையோ அல்லது வாசிகசாலையிலையோ நடக்கிற விவாதங்களிலை அல்லது வாதங்களிலை நாங்கள் இப்பிடி கதைச்சிருப்பமோ? என்ரை மச்சான் அல்லது ஒண்டுவிட்ட அண்ணன் அல்லது அயலவன் என்னதான் எனது கருத்துக்கு எதிராகச் சொன்னாலும்..... இவ்வளவு காட்டமாய் நாங்கள் கதைக்கமாட்டோம்......

ஏன்?

முகம்!

எனக்கு ஒரு முகம் இருக்கு அவனுக்கு ஒரு முகம் இருக்கு.

முகம் இருந்ததால்தான் நாங்கள் மனிதர்களாக இருந்தோம்.

எமக்கு முகம் வேண்டாம் என்றால்.... நாங்கள் அனாமதேயங்களாகவே இருப்போமென்றால்.....

நாங்கள் மனிதர்களாக இருக்கமுடியாது!

அதுக்கு நீங்கள் ஒண்றை செய்ய முடியும்... உங்களது சுய விபரக்கோவையில் Manage your ignored users எனும் பகுதியை திறந்து.. இங்கு தேவை அற்ற விவாதங்கள் செய்பவர்கள் உங்களுக்கு பிடிக்காதவர்கள் எல்லாரையும் சேர்த்து விட்டீர்களானால் அவர்கள் எழுதும் எந்தவிடயமும் உங்களை துன்புறுத்தாது..

தேவை இல்லாது இரத்த அழுத்தத்தை கூட்டி வைத்திய செலவை அதிகரிக்க தேவையும் இல்லை...

இங்கே உங்களுக்கு கருத்து எழுத எவ்வளவு கருத்துரிமை இருக்கிறதோ அவ்வளவுக்கு மற்றவர்களுக்கும் இருக்கிறது... எனக்கு விருப்பமான முறையில் மற்றவர்கள் இருப்பதை சுதந்திரம் எண்று யாரும் சொல்வதில்லை...

யாழ் ஒரு சுதந்திரமான தளம்... எல்லைகள் மீறும் போது வெட்டுவதுக்கு மட்டுறுத்தினர்கள் நியமிக்க பட்டு இருக்கிறார்கள்...

நான் சொல்வதுக்கு எதிர்ப்பே இல்லாது எல்லாரும் ஆமா போடுவார்களாக இருந்தால் அது கருத்துகளம் இல்லை... வெறும் செய்திச்சேவையாக மட்டுமே இருக்கும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை என்பது எனது கருத்து. கருத்து எழுதுபவர்களை வைத்தே யார் என்பதை ஓரளவுக்கு கண்டு பிடிக்க முடியும். பிறகு படங்களையும் போட்டு ஆட்களை காட்டி கொடுக்க விரும்பவில்லை.காலம் வரும் போது படங்கள் என்ன நேரடியாகவே சந்திக்கலாம். முகம் தெரியாத போது உண்மையான கருத்துக்கள் வருகின்றன. முகம் தெரியும் போது ஆம் அல்லது இல்லை என்ற பதில்கள் தான் அதிகமாக கிடைக்கும். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.