Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழக் குடியேற்ற நாடு

Featured Replies

இங்கே எழுதப் போகின்ற விடயம் சிலருக்கு புதியதாக இருக்கலாம். நடைமுறைச் சாத்தியமற்றதாக தோன்றலாம். ஆனால் வெறுமனே நக்கலான பதில்களோடு நிறுத்தி விடாது, இதிலே உள்ள சாதக, பாதகங்களை சொன்னால் மகிழ்ச்சி அடைவேன். நடைமுறைச் சாத்தியம் இல்லையென்றால் அதை காரணங்களோடு விளக்குங்கள்.

குவன்ரனாமோ பற்றி அறிந்திருப்பீர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். அங்கே அமெரிக்கப் படையினரால் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதான குற்றச்சாட்டுகள் நிறைய உண்டு. ஒபாமாவும் தேர்தலின் போது இந்தச் சிறைக் கூடத்தை மூடுவதாக வாக்குறிதி தந்ததாக ஞாபகம்.

அது கிடக்கட்டும். அமெரிக்கப் படையினர் தமது கைதிகளை அடைத்து வைத்திருக்கும் குவன்ரனாமோ அமெரிக்காவிற்கு சொந்தம் இல்லை என்பதுதான் இங்கே உள்ள விடயம். அது கியூபாவிற்கு சொந்தமானது. கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அப் பகுதி அமெரிக்காவால் 1903இல் கியூபாவிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டது. அமெரிக்க மண்ணில் கைதிகளை சித்திரவதை செய்ய முடியாது என்பதால் குவன்ரானாமோவில் அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறது. அப் பகுதியில் அமெரிக்காவின் சட்டமும் செல்லுபடியாகாது. கியூபாவின் சட்டமும் செல்லுபடியாகாது. அமெரிக்கா தான் நினைப்பது அங்கே நடைமுறைப்படுத்துகிறது.

அமெரிக்காவில் அலஸ்கா என்ற மாநிலம் இருக்கின்றது. இது ஆரம்பத்தில் ரஸ்யாவிற்கு சொந்தமாக இருந்தது. 1867இல் 7.2 மில்லியன் டொலர்கள் கொடுத்து இப் பகுதியை அமெரிக்கா வாங்கியது. விலைக்கு வாங்குவதன் ஊடாக அப் பகுதி உடனடியாக அந்த நாட்டிற்கு சொந்தமாகாது. ஒரு நிலத்தை வாங்கியவருக்கு உள்ள உரிமையை ஆரம்பத்தில் இருக்கும். ஆயினும் சில மாதங்கள் கழித்து அலஸ்கா அமெரிக்காவின் ஒரு நிலப் பகுதியாக மாறியது. ரஸ்யக் கொடி இறக்கப்பட்டு, அமெரிக்கக் கொடி பறக்க விடப்பட்டது.

 

அமெரிக்காவில் லுக்கன்பஃ என்ற மிகச் சிறிய நகரம் இருக்கின்றது. இங்கே ஒரு காலத்தில் 500 வரையான மக்கள் வசித்து வந்தார்கள். ஒரு நேரத்தில் அனைவரும் வெளியேறி விட, அப் பகுதியில் மூன்று பேர் மட்டுமே வசித்தார்கள். இதையடுத்து இந்தச் சிறிய நகரம் பத்திரிகை விளம்பபரம் மூலம் விற்கப்பட்டது. 1970இல் ஒருவர் லுக்கன்பஃகை முப்பதினாயிரம் டொலர்கள் கொடுத்து வாங்கினார்.

 

இன்று தென்னமெரிக்க நாடுகளில் வெளிநாட்டை சேர்ந்த கோடீஸ்வர முதலாளிகள் மிகப் பெரிய நிலப்பரப்புகளை வாங்கி வைத்திருக்கின்றார்கள். சில நிலப்பரப்புகள் சுவிஸ் நாட்டை விட பெரியவை. சர்வாதிகாரமும், ஊழலும், ஏழ்மையும் கோலோச்சும் நாடுகளில் மிகப் பெரிய நிலப்பரப்புகளை வாங்குவது கடினமானது அல்ல.

 

பசுபிக்கில் நிறையத் தீவுகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. தீடிரென்று புதிய தீவுகள் உருவாகின்றன. யாருக்கும் கட்டுப்படாத வகையில் சர்வதேசக் கடலில் கடல்நகரங்கள் இருக்கின்றன.

சரி, என்னுடைய கேள்விக்கு வருகிறேன்

புலம்பெயர்ந்து வாழும் பொருளாதார பலம் மிக்க ஈழத்தமிழர்களால் ஒரு நிலப் பகுதியை நுறாண்டு ஒப்பந்த அடிப்படையில் பெற்று "தமிழீழக் குடியேற்ற நாடு" ஒன்றை நிறுவ முடியாதா?

Edited by சபேசன்

  • Replies 86
  • Views 9.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதைக் காப்பாற்ற திராணி அற்ற ஒரு சமூகம்..வாங்கி வளப்படுத்தி வாழும் என்று எதிர்பார்க்க முடியாது. எங்கேனும் அசைலம் கொடுக்கிறதென்றால் சொல்லுங்கோ அடிச்சுக்குவோம்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பலமானவர்கள்தான் நிலப்பகுதிகளை/ தீவுகளை வாங்கமுடியும். தமிழர்கள் பணபலம் படைத்தவர்கள் என்றால் பலவிடயங்களைச் செய்திருக்கமுடியும். தமிழர்களிடமும் பணபலமோ, பேரம்பேசும் பலமோ கிடையாது. தமிழர்களால் பாறைத்திட்டோ/ மணல்திட்டோ கூட வாங்கமுடியாது. தமிழருக்கு எவரும் விற்கவும் மாட்டார்கள்.

வாங்கி என்ன செய்யப்போகின்றீர்கள்.அதுகுள்ள இருந்து ஆளுக்கு ஆள் அடிபட வெல்லுபவர் தான் சரியென்று நியாயப் படுத்தி நாலு பக்கத்தில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதவா

புலம்பெயர்ந்து வாழும் பொருளாதார பலம் மிக்க ஈழத்தமிழர்களால் ஒரு நிலப் பகுதியை நுறாண்டு ஒப்பந்த அடிப்படையில் பெற்று "தமிழீழக் குடியேற்ற நாடு" ஒன்றை நிறுவ முடியாதா?

உங்களது சிந்தனை நன்றாகத் தான் இருக்கின்றது ?

ஆனால் நீங்கள் விவாதத்திற்கு விட்ட இடம் தான் அதற்கு லாயகற்றது

இங்கே நக்கல் நையாண்டிக்கும் தான் இடமிருக்கின்றதே தவிர விவாதத்திற்கோ அல்லது கருத்து பகிர்வுக்கோ அல்ல

இது குறித்து ஆராயும் திறனும் இங்கு ஒருவருக்கும் கிடையாது

  • தொடங்கியவர்

புலம் பெயர் தமிழர்களுக்கு அப்படி ஒன்றும் பெரிய நிலப் பரப்பு தேவையில்லை. சிங்கப்பூர், யாழ்குடா அளவிற்கு ஒன்றை வாங்கினாலே போதும். அதில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களில் ஒரு 20 வீதமானவர்கள் குடியேறலாம். அதைத் தளமாகக் கொண்டு தமிழீழம் அமைப்பதற்கான ஆயத்த வேலைகளை செய்யலாம்.

ஏதாவது செய்ய வேண்டும் நண்பர்களே! இப்பொழுது நாம் செய்கின்ற வேலைத்திட்டங்கள் பெரிய பலன்கள் எதையும் தரப் போவது இல்லை. வெளிநாடுகள் எமக்கு தமிழீழம் பெற்றுத் தரப் போவதும் இல்லை. நாம்தான் அதை அமைக்க வேண்டும்.

நாடு கடந்த அரசின் முக்கிய செயற்திட்டமாக இந்தக் குடியேற்ற நாடு அமைய வேண்டும். தமிழர்களிடம் பொருளாதார வலு இல்லை என்று சொல்ல முடியாது. இருக்கின்றது. ஆனால் சிதறுண்டு கிடக்கிறது. அதை ஒருங்கிணைப்பதுதான் முக்கியமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் இது நல்ல விசயம்

ஆனாலும் யார் அதை ஆளுகிறது என்று சண்டை வருமே

எங்களின் தேசிய தலைவர் வரட்டும் முதலில்

சபேஷ் அண்ணா

அருமையான சிந்தனை

ஆனால் நீங்கள் எழுதிய இடம் தான் தவறானது.

மன பிறழ்வு கொண்ட ஒரு கோமாளி தன்னை அறிஞராக ( அவர் யாரென்பது அவருக்கே தெளிவாக புரியும்) காட்டி கருத்து எழுதும் யாழில் நீங்கள் இதை எழுதியது தான் பொருத்தமற்றது.

உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் எவ்வாறு ஜூதர்கள் தமது தாய் மண்ணை மீட்டார்கள் என்பது பற்றிய வரலாற்றை படித்து பாருங்கள். உங்களுக்கு நிறைய விடயங்கள் புரியும். தற்போது கூட எம்மவர்களில் சில பெரிய புள்ளிகள் சில தீவுகளையும் சில நில பகுதிகளையும் வாங்கி வைத்திருப்பது உங்களுக்கு தெரியாதா?

தமிழர்களில் யாராவது வாங்க முற்பட்டாலும் யாரிடம் வாங்துவது.சிங்களவன் விற்பானா? அதுகும் தமிழனுக்கே? அப்படி விற்றாலும் இந்தியாவே வாங்கி அதை திரும்ப சிறிலங்காவுக்கே பரிசளித்துவிடும் கச்ச தீவைப் போல....

உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் எவ்வாறு ஜூதர்கள் தமது தாய் மண்ணை மீட்டார்கள் என்பது பற்றிய வரலாற்றை படித்து பாருங்கள்.

சபேசன் நீங்கள் குறிப்பிட்ட உதாரணங்களை விட யூதர்களின் இஸ்ரேல் உருவாக்கம் பொருத்தமானதாக இருக்கும்

ஆனால் சில விடயங்கள் உதைக்கின்றது

இப்போது நமக்கு இருப்பதற்கு ஒரு நாடா அல்லது எமது தாய் நாடா என்ற கேள்வி வருமே ?

இங்கே நக்கல் நையாண்டிக்கும் தான் இடமிருக்கின்றதே தவிர விவாதத்திற்கோ அல்லது கருத்து பகிர்வுக்கோ அல்ல

இது குறித்து ஆராயும் திறனும் இங்கு ஒருவருக்கும் கிடையாது

முதலில் இவையனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா என சுயபரிசோதனை செய்தால் நல்லது.....

தமிழனுக்கு என்று ஒரு நாடு இருந்திருந்தால் ஈழத்தமிழர்கள் நிலை இவ்வளவு மோசமாகி இருருக்காதே ....

சபேசன் சொல்வது போல் தமிழர்கள் இணைந்து முயற்சித்தால் என்ன???

சபேசன் சொல்வது போன்று தமிழர்கள் அப்படி நிலம் வாங்குவார்களாயினும் அதில் தமிழ் தேசம் உருவாக்குவார்களா என்பது பற்றிய நம்பிக்கை எனக்கில்லை

ஆனால், 4 மாதம் முன் கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் அதிலும் முக்கியமான நயாகரா நீர்வீழ்ச்சிக்கு 10 KM தூர அளவில் ஒரு காடும், அதனுடன் இணைந்த ஒரு சிறு கிராமமும் விலைக்கு வந்தது

அதில் இருந்த தேவாலயங்கள்: 02

வீடுகள்: 49

பாடசாலை: 01 (12 ஆம் வகுப்பு வரை)

சிறிய மருத்துவமனை: 01

மக்கள் 2000

விலை: நம்புங்கள்:...வெறும் இரு மில்லியன் கனடிய டொலர்கள் (இருபது கோடி இலங்கை ருபாக்கள்)

கையில் ஒரு சதம் இல்லாமல், அதனை வாங்க முடியுமா என இரண்டும முழு நாள் நான் எல்லாவித முயற்சிகளையும் எடுத்தேன். கனடிய வங்கிகள் அமெரிக்க வங்கிகளை விட புத்திசாலிகள் என்று பின்னர் தான் தெரிந்தது

தமிழனுக்கென்று ஒரு நாடு வேண்டுமானால் இவ்வாறான வழிகளை பற்றி சிந்திப்பது அவசியமானது. சாதி மத வர்க்க பேதங்களை துறந்தும் அது நீண்டகாலமாக ஏற்படுத்திய மனோவியாதியிலிருந்து மீண்ட ஆரோக்கியமான தமிழர்கள் சிலர் சேர்ந்து ஒரு சிறிய தீவை விலைக்கு வாங்கினால் அது சாதகமான திசையில் செல்லும். எமக்கென்று ஒரு பூர்விக நிலம் இருந்தது. அவைகள் ஈழம் தமிழ்நாடு என்பனவாகும். ஆனால் அதை எம்மால் காப்பாற்ற முடியவில்லை. இந்த நிலைக்கு முதல்க் காரணம் நாங்கள். இரண்டாவதே ஏனையவர்கள். ஒரு தீவை வாங்கி இனத்துக்கான நாடாக மாற்றுவது ஒன்றும் சிரமமான விசயம் இல்லை ஆனால் எமக்கு அதற்கான தகுதி வேணும். கடவுளே எண்டு எங்கட நோய் குணமாகி ஒருவரை ஒருவர் ஏற்று நேசித்து வாழும் நிலைக்கு வந்து விட்டால் இது சாத்தியம்.

கருத்தை எழுதிய நண்பருக்கு தலை வணங்கி வணக்கம் . இது இங்கே எழுதக்கூடிய கருத்து இலலை என்ற நண்பருக்கு கை குவித்து வணக்கம் . இது சாத்தியமில்லை என்பவருக்கு ( அவரும் நண்பர்தான் ) ஏளனம் கொண்ட ஒரு வணக்கம் . தமிழனை பற்றி கொஞ்சம் மட்டமாக விமர்சித்த நண்பருக்கு முறைப்போடு ஒரு வணக்கம் .

எப்படி முடியாது என்கிறீர்கள் ???. மிகச்சிறந்த உருப்படியான யோசனை . ஆனால்

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல புலம் பெயர் மக்களுக்காக என்பதே இடிக்கிறது . மேலும் இந்த விஷயம் எதோ பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது போல ஆகிவிடும் சாத்தியம் அதிகம் உள்ளது. இன்னும் நிறைய எழுதுவேன் . பல நாட்களுக்கு பின் வந்திருக்கிறேன் . துரோகி பட்டம் வாங்க நான் தயார் இல்லை.

சிங்களவனின் கொடுவாள் கத்திக்கு முன்.. எதுவும் சாத்தியமில்லை... காசு கொடுத்து நாடு வாங்குவது என்பது, பொல்லை கொடுத்து அடிவாங்குவதுபோல..

எங்கடயலுக்கு இன்னும் யாரோடு டீல் பன்ணினம் எண்டு தெரியேல்ல.........

உள்ளதைக் காப்பாற்ற திராணி அற்ற ஒரு சமூகம்..வாங்கி வளப்படுத்தி வாழும் என்று எதிர்பார்க்க முடியாது. எங்கேனும் அசைலம் கொடுக்கிறதென்றால் சொல்லுங்கோ அடிச்சுக்குவோம்..! :wub:

ஆனான விடுதலை புலிகளுக்கே முப்பது வருஷம் காப்பாற்ற முடியவில்லை!!!!

திராணி அற்ற ஒரு சமூகம் ????????? விடுதலை புலிகள்??????????

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் கொடுவாள் கத்திக்கு முன்.. எதுவும் சாத்தியமில்லை... காசு கொடுத்து நாடு வாங்குவது என்பது, பொல்லை கொடுத்து அடிவாங்குவதுபோல..

எங்கடயலுக்கு இன்னும் யாரோடு டீல் பன்ணினம் எண்டு தெரியேல்ல.........

சிங்களவனின் கொடுவாள் கத்திக்கு முன்.. எதுவும் சாத்தியமில்லை... காசு கொடுத்து நாடு வாங்குவது என்பதுஇ பொல்லை கொடுத்து அடிவாங்குவதுபோல..

இதுதான் என் கருத்தும்

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதைக் காப்பாற்ற திராணி அற்ற ஒரு சமூகம்..வாங்கி வளப்படுத்தி வாழும் என்று எதிர்பார்க்க முடியாது. எங்கேனும் அசைலம் கொடுக்கிறதென்றால் சொல்லுங்கோ அடிச்சுக்குவோம்..!

இதுதான் இன்றைய தமிழனின் நிலை

அதேநேரம்

ஒரு நாட்டுக்கான எல்லா உபஅமைப்புக்களையும் கொண்டிருந்ததுடன்

தம்மையே ஒருக்கும் தியாகத்தையும் தம்மிடையே கொண்டிருந்து எம்மை மட்டுமே நம்பிபோராடிய

விடுதலைப்புலிகள் போன்ற ஒரு இயக்கத்தையே எமது பணத்தால் ........அறிவால் ...........????எம்மால் காப்பாற்ற முடியவில்லை

ஆனால் தற்போது அதற்கான விலை கொடுக்கப்பட்டுள்ளது

அதேநேரம் அதனது அருமையும் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதால்........

முயற்சித்துப்பார்த்தல் நன்றேஅதுவும் அதே தாய்மண்ணை.......

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் இங்கு எழுதியது போல பல குடியேற்றங்கள் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சமயம் காரணமாக ஐரோப்பாவில் வாழ முடியாமல் போன பழமைவாத கிறிஸ்தவ சமயங்களை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிலும் கனடாவிலும் தமக்கான குடியேற்றங்களை உருவாக்கி வசதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்கின்றனர். இவ்வாறான ஒரு அமைப்பான ஹற்றரைற்ஸ் என்ற சமயத்தின் குடியேற்றத்துக்கு போய் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. இவர்கள் நகரங்களில் இருந்து விலத்தி போய் தரிசு நிலங்களை அரசாங்கத்திடம் இருந்து அல்லது தனியாரிடம் இருந்து வாங்கி தமது வீடுகளை தாமே கட்டி, விவசாயம் செய்து வாழ்கிறார்கள். இவ்வாறாக ஒதுக்கு புறமாக உள்ள நிலங்கள் மலிவாக அரசாங்கத்திடம் இருந்து வாங்கப்படலாம்.

இந்த ஹற்றரைற்ஸ் ஜேர்மனிய மொழி பேசுகிறார்கள். 18ம் நூற்றாண்டு உடை அணிந்திருக்கிறார்கள். தமது விவசாய விளைபொருட்களை விற்று வசதியாக வாழ்கிறார்கள். மெனனைற்ஸ், ஏமிஷ் போன்ற இதே போன்ற குடியேற்றங்கள் நவீன வாகனங்களை பயன்படுத்தாமல் குதிரை வண்டிகளில் பயணம் செய்கிறார்கள்.

இவ்வாறாக இலங்கை தமிழர்களும் தமது குடியேற்றங்களை வேறு நாடுகளில் அண்மைகாலங்களில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். பர்மா, லாவோஸ், கம்போடியா போன்ற நாடுகளில் நிலங்கைளையும், தீவுகளையும் நீண்டகால குத்தகைக்கு அல்லது விலைக்கு வாங்கி தமிழர் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. சில குடியேற்றங்கள் அகதிகளாக ஐரோப்பாவுக்கு வருபவர்கள் நின்று வருவதற்காக முகவர்களால் ஏற்படுத்தப்பட்டவை. இந்த குடியேற்றங்கள் முகவர்களின் பெயர்களால் அறியப்பட்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக தமது ஐரோப்பிய பயணத்தை தொடர முடியாதவர்களும் அவர்களை தொடர்ந்து அவர்களின் உறவினர்களும் இந்த குடியேற்றங்களில் வாழ்கிறார்கள். வேறு குடியேற்றங்கள் முன்னாள் போராளிகளால் உருவாக்கப்பட்டவை. போராளிகள் இலங்கையில் வாழமுடியாத தமது உறவினர்களை இங்கு கொண்டுவந்து குடியேற்றி இருந்தார்கள். இந்த வகையான குடியேற்றங்கள் பெரும்பாலும் தீவுகளில் இடம்பெற்றிருந்தன. மக்கள் மீன்பிடித்தல் மூலம் வருமானத்தையும் உணவையும் பெற்றுக்கொண்டார்கள். 2004 சுனாமியின் போது இவ்வாறான சில தீவுகளில் வாழ்ந்த மக்கள் முற்றாக கொல்லப்பட்டு விட்டார்கள்.

இன்றும் மொரிசியஸ், கரிபியன் தீவுகள் போன்றவற்றில் தீவுகளை மிகவும் மலிவாக குத்தகைக்கு அல்லது விலைக்கு வாங்க முடியும். ஆனால் இந்த அரசாங்கங்கள் வாங்குவதன் நோக்கம், குடியேற்ற மக்களின் வாழ்வாதாரத்துக்கான வழிகள், தமது நாட்டுக்கு கிடைக்கும் நன்மை பற்றிய சில விளக்கங்களை எதிர்பார்க்கின்றன. யாழ் நகரத்தில் பிரதான தெருவில் கடை வைத்திருந்த ஒருவர் இவ்வாறான ஒரு கரிபியன் தீவை விலைக்கு வாங்கி வைத்திருக்கிறார்.

இந்த ஆக்கத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கனடாவில் இருந்து வெளிவரும் செய்திதாள்களில் வந்த செய்திகளில் இருந்தும், இவ்வாறான தீவுகளையும் நிலப்பரப்புகளையும் வணிக நோக்கில் பயன்படுத்த விரும்பிய தொழிலதிபர்கள் தனிப்பட்ட முறையில் தந்த தகவல்களில் இருந்தும் பெறப்பட்டவை. செய்திதாள்கள் பற்றிய மேலதிக விபரங்கள் என்னிடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு சொந்தமாக நிலம் இருக்கிறது. பணத்தைக் கொடுத்து நிலம் வாங்கினாலும் அதற்கு நாடு என்ற அங்கீகாரம் கொடுக்கப்படுமா???????????????????அந்தத் தீவை முழு சிங்கள தீவாக்குவதற்கு சிறிலங்கா முயற்சித்து வருகிறது. அதுக்கு வசதியாக நிலம் வாங்கி அங்கே இருக்கிற 20 இலட்சம் மக்களையும் குடியேற்றுவது.சிறிலங்காவிற்கு ரொம்ப வசதியாக இருக்கும்.

நாஙகள் தவழந்த மண்ணை விட்டு மாவீரர்

துயிலும் மண்ணை விட்டு

எம் சொந்தங்கள் வாழும் மண்ணை விட்டு

வேறிடத்தில் மண் வாங்குபவர்களே!!!!!!

நல்ல விலை வந்தால் அதையும்

விற்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?

ஏற்கனவே விடுதலையை விற்றவர்கள்தானே நாம்.

பணம் இருந்தால் அதை வைத்து எம்

சொந்த நிலத்தை மீட்க முயற்சிப்பதே நல்லது.

ஆனானப்பட்ட தலைவனால் ஒற்றுமையாக்க

முடியாத இனத்தை வைத்துக் கொண்டு

ஆசைப்பட்டால் அது எப்படி??????????????????????????????????

தியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அப்படி ஒரு காணியை வாங்கி .....

ஒட்டுக்குழு ,

காட்டிக் கொடுப்போர் ,

சிங்களவனை இன்னும் நல்லவன் என்று நம்பும் அரை வேக்காட்டு தமிழர்,

வெள்ளை வான் கோஷ்டி ,

எலும்புத்துண்டுக்கு வாலை ஆட்டிக் கொண்டிருக்கும் பிற‌விக‌ள்.....

போன்றதுகளை குடியேற்றினால் தமிழர் பிரதேசத்தில் பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.

அது சரி ...... அங்கு போய் குடியேற இதுகள் தயாரக இருக்குதுகளா ......

  • தொடங்கியவர்

சில நண்பர்கள் நான் எழுதியதை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

எமது தாயகம் தமிழீழம்தான். அதில் ஒரு மாற்றமும் இல்லை. அந்த நாட்டை மீட்பதற்கு ஒரு வலுவான பின்தளம் அவசியம். அதற்காகவே தமிழீழக் குடியேற்ற நாடு பற்றிக் கேட்கிறேன்.

சர்வாதிகாரம், ஊழல், ஏழ்மை நிறைந்த ஏதோ ஒரு நாட்டில் யாழ்குடா அளவிற்கு ஒரு நிலப் பரப்பு. (உதாரணம்: தென்னமெரிக்கா, ஆபிரிக்கா)

அதில் சில தொழிற்சாலைகள். அதில் தொழிலாளர்கள் குடியேற்றம்.

பின் தொழிலாளர்களின் குடும்பங்கள் குடியேற்றம்

இப்படி சில காலத்திற்குள் தமிழர்களை மட்டும் கொண்ட ஒரு நிலப் பரப்பு.

(நிலப் பரப்பை தந்த நாட்டிற்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும் தமிழர்கள் நிலப் பரப்பை வாங்கியதானது வருவாயை கொடுக்க வேண்டும் )

நிலப் பரப்பில் தொழிற்சாலைகள் மற்றும் உடமைகளை பாதுகாப்பதற்கு என்று தனியார் பாதுகாப்புப் படை

தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு சமாதான மன்றங்கள்

இதுதான் வெளியில் தெரிகின்ற தமிழர்களின் குடியேற்ற நிலம். ஆனால் இந்த நிலத்தைக் கொண்டு தமிழீழத்தை மீட்கின்ற மற்றைய வேலைகளை நாம் செய்ய வேண்டும்.

தமிழீழத்தை வெறும் ராஜதந்திரப் போர் புரிந்து மட்டும் மீட்க முடியாது. படைபலமும் வேண்டும்.

சர்வாதிகாரம், ஊழல், ஏழ்மை நிறைந்த ஏதோ ஒரு நாட்டில் யாழ்குடா அளவிற்கு ஒரு நிலப் பரப்பு.

இந்தியாவில் எங்கேயாவது பினாமி பெயரில் ட்ரை பன்னிணா என்ன? :wub:

ஏனன்டா... உலகில், யாராவது தமிழர்கள் தமிழுக்காக எதாவது செய்கிறார்களெண்டா.. உடனே நுனியை நுள்ளிவிடுறவை அவைதான்.

நாங்கள் பிணாமி பெயரில் அவையின்ட மடியில கையை வச்சா கவனிக்கமாட்டினம்.

கவனிக்கும் மட்டும் நாங்கள் சிற்றின்பம் காணாலாம். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.