Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திராவிட அரசியலால் தமிழனுக்கு ஒரு பயனுமில்லை சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திராவிட அரசியலால் தமிழனுக்கு ஒரு பயனுமில்லை

குறைந்தஅதி சிறந்த சிறைவாசம், வழக்குகள் என ஆட்சியாளர்களின் அத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி, ஈழத் தமிழர்களின் நலனுக்காக உரக்க குரல் எழுப்புவர்களில் முக்கியமானவர் இயக்குனர் சீமான். மக்களைவைத் தேர்தலின்போது இவர் வெளியே இருந்தால் தங்கள் வெற்றிக்கு ஆபத்து என்று அஞ்சிய ஆளும் வர்க்கம் முடிந்தவரை இவரை உள்ளே வைத்திருக்கப் பார்த்தது. அந்தளவிற்கு பேச்சாற்றலால் தமிழகத்தின் பெரும்பான்மை இளைஞர்களை வசீகரிப்பவர். தற்போது நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கி தமிழ்த் தேசிய சிந்தனைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். அண்மைக்காலமாக அவரைச் சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்தான கேள்விகளோடு கீற்றிற்காக இரண்டாம் முறையாக சீமானைச் சந்த்தித்தோம். பேட்டியிலிருந்து...

தமிழகத்தில் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் ஏற்கனவே இருக்கும்போது, புதிதாக ‘நாம் தமிழர்’ அமைப்பு தொடங்கப்படுவதற்கான காரணம் என்ன?

ஈழ விடுதலை என்பது ஈழத் தமிழர்களுக்கான ஒரு நாட்டை கட்டமைப்பது அல்ல; அது ஒட்டுமொத்த தமிழர்களுக்கான ஓர் அரசை நிறுவுவது. 12 கோடி தமிழர்களுக்குமான ஒரு நாட்டை அமைப்பது. அப்படித்தான் தலைவர் பிரபாகரன் என்னிடம் சொன்னார். அப்படிப்பட்ட ஒரு அரசை நிறுவும் போராட்டத்தை, பெரும்பான்மையான தமிழர்கள் வசிக்கும் தாய்நிலமான தமிழக அரசு அங்கீகரிக்கவில்லையென்றால், அமெரிக்காவும், இங்கிலாந்தும் பிற நாடுகளும் எப்படி அங்கீகரிக்கும்? அவன் கேட்க மாட்டானா – உன் சொந்த சகோதரனே உனக்கான போராட்டத்தை அங்கீகரிக்காதபோது, நாங்கள் எப்படி அங்கீகரிப்பது?

இங்கிருக்கும் தமிழக அரசு ஏன் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக வலுவான குரலை எழுப்ப மறுக்கிறது என்றால், இது தமிழர்களுக்கான அரசு அல்ல. பச்சைத் தமிழரான காமராசர் கூட ஒரு இந்தியராகத்தான் இந்த மண்ணை ஆண்டார். அது இப்போது வரை தொடர்கிறது. தமிழர் என்ற உணர்வோடு இந்த மண்ணை ஆளவில்லை என்றால், அந்த அரசு தமிழுக்கும், தமிழர்களுக்கும் முழுப்பயனைத் தராது; இழந்த உரிமைகளை மீட்கவும் உதவாது. உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு நல்லதோ, கெட்டதோ நடக்க வேண்டும் என்றால், அதைத் தீர்மானிக்கிற சக்தி தமிழக அரசுக்கு இருக்கிறது. ஆனால் இங்கே அப்படி ஒரு நல்ல தலைமையில்லாத வெற்றிடம்தான் இருக்கிறது.

நெடுமாறன் அய்யா, மணியரசன் அய்யா, தியாகு அண்ணன் இவர்கள் எல்லாம் தேர்தல் அரசியலில் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். ‘இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குள் நின்றுகொண்டு நாம் விரும்புகிற தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க முடியாது’ என்ற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்; தேர்தல் அரசியலைப் புறக்கணிக்கிறார்கள். நான் இதில் மாறுபடுகிறேன். தேர்தல் அரசியல் திருடர் பாதை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒருவன் திருடுகிறான் என்றால் அதைப் பாய்ந்து தடுக்க வேண்டும். இல்லையென்றால் திருடன் மென்மேலும் திருடுகிறவனாக மாறுவான். இந்தத் திருடர்கள் எந்த வாக்கு அரசியலை வைத்து நம்மை ஏமாற்றுகிறார்களோ, அதைக் கைப்பற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

நாம் தேர்தல் அரசியலை நம்பாதவர்கள் எனும்போது, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசிடம் போய் நம் உரிமைகளைக் கேட்டு எப்படிப் போராட முடியும்? ‘தமிழக அரசே தலையிட்டு போரை நிறுத்து!’ என்று போராடுவது, கடவுள் நம்பிக்கையற்றவன் கடவுளிடம் முறையிடுவது போல் இல்லையா?

எனக்கும் இங்கிருக்கும் தமிழ்த் தேசியத் தலைவர்களுக்கும் நோக்கத்தில் எந்த வேறுபாடும் இல்லை. நாங்கள் அனைவரும் ‘தமிழர்களின் நலன்’ என்ற திடலில் ஒன்றாக இருக்கிறோம். அவர்கள் நடைப்பயிற்சி செய்கிறார்கள்; நான் ஓட்டப்பயிற்சி செய்கிறேன்.

என்னதான் பெரும்பான்மை இருந்தாலும் அர்ச்சகராகும் உரிமை, இடஒதுக்கீடு என தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறோம். நிலைமை இப்படி இருக்குபோது, இந்திய பார்ப்பனியக் கட்டமைப்புக்குள் ஜெயித்து என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இங்கு அரசை அமைத்து என்ன சாதித்துவிட முடியும் என்று கேட்கிறீர்கள். ஒரு மராட்டியன் சாதிப்பதை, ஒரு மலையாளி சாதிப்பதை, ஒரு கன்னடன் சாதிப்பதை ஒரு தமிழன் சாதிக்க முடியாதா? நாம் உறுதியாக நின்று வலுவான குரலை எழுப்பினோம் என்றால் நமக்கு எதிராக எவனாவது செயல்பட முடியுமா? இந்திய அரசும் தமிழக அரசும் ஒத்துழைத்தாலும் ஒத்துழைக்காவிட்டாலும், முல்லைப் பெரியாறு அணையை உயர்த்துவேன் என்று கேரள அச்சுதானந்தனால் சொல்ல முடிகிறது. அப்படி உயர்த்தினால் தமிழகத்தில் இருந்து ஒரு பொருள் கேரளாவிற்குப் போகாது என்று சொல்ல இங்கு வலுவான தலைமை இல்லையே? காவிரி நீர் வரவில்லையென்றால், தமிழ்நாட்டில் இருந்து மின்சாரம் போகாது என்று அடித்துச் சொல்ல வேண்டாமா? அவனுக்கு அவன் மக்கள், அவன் நாடு முக்கியம் என்றால் எனக்கு என் நாடு, என் மக்கள் முக்கியம் என்று ஏன் சொல்ல முடியவில்லை? இந்த இடத்தில் தமிழன் ஒருவன் தமிழர்களு க்கான அரசை நிறுவினால் இதைச் செய்யமுடியாதா? இந்திய அரசு ஆயுதம் கொடுப்பதை நிறுத்தவில்லை என்றால், நான் என் சகோதரர்களுக்கு ஆயுத ம் கொடுப்பேன் என்று அறிக்கை விடும் தைரியம் தமிழக அரசுக்கு இருந்தால் அவன் ஆயுதம் கொடுப்பானா? பதவிக்காக மத்திய அரசிடம் கூனிக் குறுகிக் கொண்டு இவர்கள் நிற்பதால்தானே அவன் ஏறி மிதித்து போய்க்கொண்டு இருக்கிறான்.

போரை நிறுத்துங்கள் என்று அழுகுரல்தான் எழுகிறதே தவிர, ‘போரை நிறுத்துடா’ என்று சொல்கிற உயரத்தில் தமிழன் இல்லையே! அந்த வெற்றிடத்தை நாம் நிரப்பாததால்தான் இங்கிருக்கிறவன் விஜயகாந்த் பின்னாடியும், ஜெயலலிதான் பின்னாடியும் ஓடுகிறான். என்னிடம் கொள்கை என்ன கோட்பாடு என்று கேட்கிறவர்கள் விஜயகாந்திடம் கேட்டீர்களா, இதற்கு முன் ஆண்டவர்களிடம் கேட்டீர்களா? தமிழ், தமிழன் என்று ஒருவன் போராட வந்தால் லட்சம் கேள்விகள் கேட்கிறீர்கள், குறுக்கே விழுகிறீர்கள், மல்லாக்கப் படுக்கிறீர்கள். ஆனால் எளிதாக மக்களை ஏமாற்றிச் செல்பவனை கண்டுக்காமல் விட்டுவிடுகிறீர்கள்.

நானும் இதைச் செய்யவில்லை என்றால், என்பின்னால் இருக்கிற ஆயிரக்கணக்கான் தம்பிமார்கள் எங்கே போவார்கள்? எங்களை அரசியலுக்குப் போகக்கூடாது என்பவர்கள், இந்த அரசியலைக் கைப்பற்றாமல் வேறு எந்த வழியில் போராடுவது என்பதைச் சொல்லட்டும். சமூகத் தளத்தில் போராடுவதற்குத்தான் சரியான அமைப்பாக பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறதே, எல்லோரும் ஏன் அதே தளத்தில் போய் நிற்கவேண்டும்? நாம் தமிழர் என்று ஒன்றுகூடும்போது, சாதியும் மதமும் மிதிபட்டுச் சாகிறது. இந்த முழக்கத்தோடு அரசியலைக் கைப்பற்றுவோம். நமக்கான அரசை நிறுவுவோம்.

நாம் தமிழர் என்று ஒன்று கூடுவதால் சாதி ஒழியும் என்கிறீர்கள். திமுக கட்சியின் பின்னாலும் இதுமாதிரி உடன்பிறப்புகள் ஒன்றுகூடுகிறார்கள். ஆனால் அவர்கள் மாநாடு முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது சாதிமனிதர்களாகத் தானே திரும்பச் செல்கிறார்கள்?

அவர்கள் சாதியாகத்தான் சமூகத்தைப் பார்க்கிறார்கள். ஒரு தொகுதியில் குறிப்பிட்ட சாதியினர் அதிகமாக இருக்கிறார்கள் என்றால், அதே சாதியைச் சேர்ந்தவர்களைத்தான் வேட்பாளராக நிறுத்துகிறார்கள். மாற்று சாதியினரை திமுகவோ, அதிமுகவோ என்றாவது நிறுத்தியது உண்டா? நாங்கள் ஆதிக்கசாதியினர் அதிகமாக இருக்கும் தொகுதியில் தலித் சகோதரரை நிறுத்தி, நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வோடு செயல்படச் சொல்வோம். அப்படித்தான் இதை ஒழிக்க முடியும்.

ஆனால் தலித் சகோதரர்கள் பதவிக்கு வந்தால் அவர்களை வெட்டிக் கொல்லும் சாதி வெறிதானே இன்று சமூக நிலைமையாக இருக்கிறது?

அந்த சாதி வெறியை மழுங்கடிக்க வேண்டும். கடவுள் மறுப்பை எப்படி சட்டம்போட்டு நிலைநிறுத்த முடியாது அதுபோலத்தான் இதுவும். ஆனால் பரப்புரையால் சாதிக்க முடியும். எல்லோரையும் சொந்தமாகப் பார்க்கும் மனநிலையை உருவாக்க வேண்டும். அருந்ததியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதைத் தீர்ப்பதற்கான போராட்டத்தில் எல்லோரையும் இழுத்துவிட வேண்டும். அவரவர் பிரச்சினையை அவரவர் பார்த்துக் கொண்டிருந்தால் எல்லா நாட்களிலும் சாதி நீடிக்கத்தான் செய்யும்.

சாதி பற்றி பேசும்போது, வேறொரு விடயத்தையும் இங்கு பேசுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அண்மையில் தேவர் சிலைக்கு நீங்கள் மாலை போட்டதும், அது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘அந்த மக்களுக்காகப் போராடிய முத்துராமலிங்கத்தை ஏன் போராளியாக பார்க்க மறுக்கிறீர்கள்' என்று பதிலளித்ததும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நீங்கள் சொல்கிறபடி முத்துராமலிங்கம் போராளி என்றால், ராஜபட்சேவும் போராளிதானே?

தலைவர் பிரபாகரனும் அதைத்தான் சொன்னார். ராஜபட்சே அவர் இனத்திற்கு உண்மையாக இருக்கிறார் என்றும், நம் இனத்துத் தலைவர்கள் சிலரைக் குறிப்பிட்டு, இவர்களுக்கு ராஜபட்சே எவ்வளவோ பரவாயில்லை என்றும்தான் சொன்னார். அதேநேரத்தில் தன் இனத்திற்காக ஆயிரக்கணக்கான பேரைக் கொன்று குவிப்பவனையும், தன் இனத்தின் அடிமைத்தனம் நீங்குவதற்காக போராடியவரையும் நீங்கள் ஒப்பிடக்கூடாது. குற்றப்பரம்பரைச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை மீட்கப் போராடியவரை போராளி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

ரெட்டைமலை சீனிவாசனும் இமானுவேல் சேகரனும் சமத்துவத்திற்காகப் போராடிய காலகட்டத்தில்தான் முத்துராமலிங்கம் சாதிரீதியிலான சமத்துவமின்மையை முன்னிருத்தினார். உரிமைகளுக்காகப் போராடிய இமானுவேல் சேகரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தலித் சகோதரர்கள் கொல்லப்பட்ட வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். சாதிவெறியை கடைசி வரைக்கும் கைக்கொண்டிருந்த முத்துராமலிங்கத்தை முன்னிருத்தினால் ‘நாம் தமிழர்’ என்று எப்படி ஒன்றிணைய முடியும்?

நாங்கள் முன்னிருத்தவில்லை. தவறான ஒரு கேள்வியை எழுப்புகிறீர்கள். நாங்கள் காமராஜரையும், வ.உ.சி.யையும் எங்கள் முன்னோடிகளாகக் கருதுகிறோம் என்றால், அவர்கள் தமிழ் தேசியவாதிகள் அல்ல. ஆனால் இந்த மண்ணின் விடுதலைக்குப் பாடுபட்டவர்கள். அதுபோலத்தான் முத்துராமலிங்கத் தேவரும். அவர் தமிழ்த் தேசியவாதி இல்லையென்றாலும், இந்நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டவர். பெரும்பான்மை சமூகத்தின் மேன்மைக்கு உழைத்தவர். அந்த சமூகத்தையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதியைக் காரணம் காட்டி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒதுக்கி வைக்கப்போகிறீர்கள்? எத்தனை காலத்திற்குத்தான் இருசமூகத்திற்கும் இடையேயான பகையை நீட்டித்து வளர்க்கப் போகிறீர்கள்? இருவருக்கும் இணக்கம் ஏற்படும் வகையில் இந்த சீமான் முயற்சி செய்தால் என்னை விமர்சனம் செய்கிறீர்கள். இப்போது எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. முற்போக்குவாதிகள் என்று சொல்பவர்கள் காலகாலத்திற்கும் சாதிரீதியிலான பகையை வளர்க்க விரும்பும் பிற்போக்குவாதிகளா?

பெருவாரியான சமூகத்தை காலகாலத்திற்கும் சாதியோடு பிணைத்திருக்கும்படியான பணியைச் செய்தவர் முத்துராமலிங்கம் என்று குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருக்கிறதே?

அதை மாற்றும் வேலையை நான் செய்கிறேன் என்பதை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்? இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு தேவர் சாதி தம்பிகளையும், முத்துராமலிங்கம் சிலை இருக்கும் இடத்திற்கு தாழ்த்தப்பட்ட சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு போவது இருவருக்கும் இடையேயான இணைக்கத்தை ஏற்படுத்த விரும்பும் செயல் அல்லவா? பெரியார் இறந்தபோது பார்வார்ட் பிளாக் தனது கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவில்லை என்று குற்றம் சாட்டுகிற நீங்கள், சாதியொழிப்பு, பெண்ணடிமை, மூடநம்பிக்கை ஒழிப்புக்காக போராடிய பெரியார், குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து என்ன செய்தார் என்று அந்த மக்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?

பெரியார் ஒட்டுமொத்த விடுதலைக்குத்தானே பாடுபட்டார். இந்த சாதிக்கு ஒரு போராட்டம், அந்த சாதிக்கு ஒரு போராட்டம் என்று அவர் நடத்தவில்லையே?

அப்படி இல்லை. இது வெள்ளை ஏகாதிபத்தியத்தால் கொண்டுவரப்பட்ட போராட்டம். அதை எதிர்த்து எங்கள் அய்யா என்ன செய்தார்? எல்லா இடத்திலும் விமர்சனம் இருக்கிறது. பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர் இல்லை என்ற விமர்சனம் இன்றும் இருக்கிறது. இதைக் கேட்கும்போது உங்கள் மனது எப்படி காயப்படுகிறது. அதுமாதிரித்தான் நீங்கள் முத்துராமலிங்கம் மீது வைக்கிற விமர்சனமும் அந்த மக்களுக்கு காயத்தைத் தரும். நான் எல்லோருக்கும் பொதுவான பிள்ளையாக இருக்க விரும்புகிறேன். நீங்கள் ஏன் என்னை குறுகிய வட்டத்தில் அடைக்கிறீர்கள்? நான் செய்வது தவறு என்றால் விலகிச் செல்ல்லாம். நம்பிக்கையிருந்தால் என்கூட வரலாம். அதைவிட்டு விட்டு நான் இங்கு போக வேண்டும், இங்கு போக்க்கூடாது என்று பிறர் சொல் கேட்டு நடப்பதற்கு, நான் என்னுடைய இயக்கியை பிறர் கையில் கொடுத்துவிட்டுச் செல்லும் ரோபோட் அல்ல. நான் சுதந்திரமான மனிதன்; பெரியாரையும், பிரபாகரனையும் நேசித்து, சிந்தித்து வளர்ந்த பிள்ளை. சாதியொழிப்பிற்குத்தான் இதை நான் செய்கிறேன். நீங்கள் சாதியக் கண்ணாடியோடு இதைப் பார்ப்பதால்தான் உங்களுக்கு சாதி தெரிகிறது. இப்படிப் பார்ப்பவர்களைத்தான் சாதிவெறியர்கள் என்று நான் சொல்வேன்.

எம்.பி., எம்.எல்.ஏ. ஆவதற்குத்தான் சீமான் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்று ஜெகத் கஸ்பர் குற்றம் சாட்டியிருக்கிறாரே?

எம்.பி., எம்.எல்.ஏ. ஆவதற்கு கட்சி ஆரம்பிக்க வேண்டியதில்லை! எல்லாக் கட்சியிலேயும் தான் எனக்கு சீட் தர தயாராக இருக்கிறார்களே!! நான் ஒரு இனத்திற்கு நாடு அடையத் துடிக்கிற போராளி. எம்.பி., எம்.எல்.ஏ. ஆக வேண்டுமென்றால் ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டுப் போகலாமே! இவ்வளவு பெரிய பாரத்தைத் தூக்கிச் சுமக்க வேண்டியதே இல்லை. இவ்வளவு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியதில்லையே. பணம், புகழ்தான் முக்கியம் என்றால் அதற்கு நான் இருக்கிற திரைத்துறையே வசதியானது. ஜெகத் கஸ்பார் குறை கூறுவதற்கு வழியே இல்லாமல், இதைக் கூறுகிறார். இதை மக்கள் யாராவது நம்புவார்களா? எம்.பி. ஆக விரும்புகிற எவனாவது தமிழ்த் தேசியம், தன் இனத்திற்கு ஒரு நாடு என்றுபேசி சிக்கலில் சிக்கிக் கொள்ள விரும்புவானா?

தமிழ்த் தேசியம் என்று பேசும்போது மொழிச் சிறுபான்மையினருக்கான இடம் என்ன என்ற கேள்வி பொதுவாக எழுகிறதே?

எல்லாருக்குமான இடம் இங்கே இருக்கிறது. வந்தவரை எல்லாம் வாழ வைப்போம். ஆனால் நாங்கள்தான் ஆள்வோம் என்று சொல்கிறோம். கேரளாவை மலையாளிகள் தவிர வேறுயாரும் ஆளவில்லை; ஆந்திராவை தெலுங்கு பேசுகிறவர்கள் தவிர வேறு யாரும் ஆண்டதில்லை. ஆனால், தமிழ்நாட்டைத் தமிழர்கள் தவிர எல்லோரும் ஆண்டிருக்கிறார்கள். தமிழர்கள் எல்லோரும் தங்கள் வீட்டு மூத்த பிள்ளையாக்க் கருதுகிற பிரபாகரனை குற்றவாளி என்று சொல்லும் தைரியம் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது? அதைத்தான் ஆபத்து என்று நாங்கள் சொல்கிறோம். அந்த ஆபத்து இனியும் தொடரக் கூடாது என்று விரும்புகிறோம்.

திராவிட அரசியலால்தான் கெட்டோம் என்று நீங்கள் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது

திராவிடம் என்ற சொல்லாடலை நாங்கள் எதிர்த்தால், உடனே சீமான் பெரியாரை எதிர்ப்பதாகக் கூறக்கூடாது. நான் தமிழனா, திராவிடனா என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, மும்பையில் பேசியபோது பால் தாக்கரேயை ‘பெருமகன்’ என்று சொல்லிவிட்டேன் என்று குதிக்கிறார்கள். ஈழ விடுதலையை ஆதரிக்கும் பால்தாக்கரே பற்றிப் பேசும்போது, அவன் இவன் என்று பேசச் சொல்கிறீர்களா? இதுவா பெரியார் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த பண்பாடு? சோனியா காந்தியைப் பற்றிப்பேசும்போதுகூட மதிப்பிற்குரிய சோனியா காந்தி என்றுதான் சொல்கிறோம். ஏன், போர்ச்சூழலில்கூட அண்ணன் பிரபாகரன், ராஜபட்சேவைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் என்றுதான் பேசினார். ஓரிடத்தில்கூட ‘அவன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. இதுதான் பெரியார் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது. அரிப்பு இருக்கிறது பேனா இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் குதர்க்கமாக எழுதக்கூடாது.

திராவிட அரசியலை எதிர்க்கிறேன் என்று சொல்வது திமுகவையும், அதிமுகவையும்தான். திமுக ஆட்சியில் உள்துறைச் செயலாளராக இருக்கும் மாலதி ஒரு பார்ப்பனர். திராவிடக் கட்சியின் தலைவராக அதிமுகவில் இருப்பது ஒரு பார்ப்பனர்தானே! எனவே அரசியல்தளத்தில்தான் திராவிடம் என்ற சொல்லாடலை எதிர்க்கிறோம். சமூகத் தளத்தில் ஆதரிக்கிறோம். சமூகத் தளத்தில் சாதியை ஒழிக்க பெரியார் திராவிடர் கழகம் போராடுகிறது. நாங்களும் அவர்களுக்குத் துணை நிற்கிறோம். ஆனால் அரசியல்தளத்தில் சாதி ரீதியான வேட்பாளர்களை நிறுத்தி திராவிடக் கட்சிகள் சாதியை வளர்க்கின்றன. பெரியாரை முழுமையாக ஏற்றுச் செயல்படும் நாங்கள், இதை எப்படி அனுமதிப்போம்? இவர்களை ஒழிக்காமல் எப்படி தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்பது? திராவிடம் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த இவர்களால் தமிழினத்திற்கு, மொழிக்கு என்ன பயன் வந்தது?

வார்த்தைப் பிரயோகத்தில் அண்மையில் வந்த ஒரு சர்ச்சை, ஈனசாதிப்பயலே என்று நீங்கள் கூறியது?

தாழ்த்தப்பட்டவர்களைக் குறிக்கும் அர்த்தத்தில் அந்த வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. நம்மவர்களைக் கொன்று குவித்த சிங்களவனுடான கிரிக்கெட்டை விரும்பிப் பார்க்கிற இனவுணர்வு அற்றவர்களை, இழிவான மக்கள் என்று குறிப்பதற்குத்தான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். அதை சாதி வன்மத்துடன் பேசியதாகப் பார்க்கக்கூடாது. எனக்கு அத்தகைய எண்ணமும் இல்லை. எந்த நோக்கத்திற்காகப் பேசினேன் என்பதைப் பார்க்காமல், அந்த சொல்லையே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது.

தேவர் சிலைக்கு மாலை போடப்போனபோது, அங்கே ஒரு அப்பத்தா, ‘ஐயா ராசா, உன்னை சினிமாவுலே பார்த்தது’ என்று எனக்கு ஆரத்தி எடுத்து திருநீறு பூசியது. அந்நேரம் அங்கே இருந்த ஊடகங்கள் அதைப் பதிவு பண்ணின. உடனே பெரியார் பேரன் திருநீறு பூசிக் கொண்டார் என்று அலறுகிறார்கள். அவர்கள் அன்போடு பூசும்போது, ‘சீச்சி! என்ன அசிங்கம்’ என்று அதை தட்டிவிடச் சொல்கிறார்களா? இதுவா பெரியார் நமக்கு சொல்லிக் கொடுத்த பண்பாடு? பெரியாரே குன்றக்குடி அடிகளார் திருநீறு பூசியபோது ஏற்றுக்கொண்டாரே! அவருக்கு ஒரு நியாயம், அவர் பேரனுக்கு ஒரு நியாயமா?

அதேபோல சே குவேராவைப் பற்றி சொன்னதும் ஒரு ஆதங்கத்தில்தான். நாம் நேசிக்கும் கியூபா, ஈழத்திற்கு எதிராக கையெழுத்திட்டபோது எழுந்த ஆதங்கத்தில் சொன்னது அது. அதற்காக சே குவேராவைத் தூக்கி எறிந்துவிட்டேனா என்ன! இதோ அலுவலகத்துச் சுவரிலெல்லாம் அவர் படம்தான் இருக்கிறது. விமர்சிக்கிறவர்கள் விமர்சித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு அரிப்பு இருக்கிறது என்பதற்காக என்னை சொரியக்கூடாது.

திமுக, அதிமுக இவற்றிற்கு மாற்றாக நாம் தமிழர் இயக்கம் இருக்குமா அல்லது அவர்களோடு சேர்ந்து நிற்கும் சூழல் வருமா?

எனக்குப் பதவி ஆசை கிடையாது. இருபது வருடங்கள்கூட காத்திருக்கத் தயார். இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இயக்கத்தை மாற்றுவேன். நானே இறந்துவிட்டால்கூட, எனக்கு அடுத்து வரும் தம்பிமார்கள் நான் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில் இந்த இனத்திற்கான, மொழிக்கான ஒரு அரசை அமைப்பார்கள். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

சந்திப்பு: 'கீற்று' நந்தன்

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1503:2009-12-05-16-18-00&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டில் ஊழையிடும் தி மு க , காங்கிரஸ் ஆட்சி இல்லாத நாள்தான் தமிழ் நாட்டின் தமிழனுக்கு விடிவு

  • கருத்துக்கள உறவுகள்

திரு சீமான்அவர்கட்கு எனது வாழ்துக்கள்,

தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள் பொதுமேடைகளிலலோ அன்றேல் பொதுவான அறிக்கைகளிலோ மிகவும் நிதானத்தைக் கடைப்பிடிக்கப் பழகவேண்டும். கனடாவில் நடைபெற்ற சம்பவமே இதற்கு உதாரணம். இது கனடா நாட்டில் நடைபெற்றது என்பதால் உடனடி நடவடிக்கையை எடுத்து அந்த நாட்டு அரசு தங்களை நாடுகடத்தி பிரச்சனையை அத்தோடு முடித்துக்கொண்டது. ஆனால் இந்தியா அப்படியான நாடு இல்லை. தங்கள்மீது சட்டநடவடிக்கை எடுக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் ஏதாவது புகார்செய்யப்பட்டிருக்குமானால்.அதனை உறைநிலையில் வைத்துpருக்கும். அதற்கான காலத்தினை எதிர்பார்த்திருக்கும். அக்காலம் தங்களுக்குச் சார்பானதாகவும் எதிரிகளுக்குச் சார்பற்றதுமாக அமையும் வோளையில் மாற்றங்களை உருவாக்குவதற்காக உங்களுக்கு எதிராக தகுந்த வேளையில் இப்புகார்களைப் பயன்படுத்தும் இதனால் பெறுமதிமிக்கதான காலத்தினை நாம் இழக்கவோண்டியேற்படலாம். "காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்" எனும் போதுள்ள காற்றினை நாம் பயன்படுத்தும் சந்தர்ப்பத்தினை தாங்கள் ஒருபோதும் இழக்காதவண்ணம் பார்த்துக்கொள்ளவும்.

அரசியலுக்கு வந்துவிட்டால் உணர்வோடு இருகவேண்டும்தான்இ ஆனாலும் உணர்ச்சிவசப் படக்கூடாது.

கீற்று : நீங்க சாதியைப் பத்திப் பேசறதால இங்க ஒரு கேள்வி கேட்க விரும்புறோம். முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது.?

சீமான் : கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கைரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்.

http://www.keetru.com/literature/interview/seemaan.php

இது சில காலங்களிற்கு முன்பு சீமான் சொன்னது

என்ன செய்வது? அரசியலுக்குள் வந்தால் இப்படித்தான். சீமான் தேர்தல் அரசியலை தவிர்த்து மக்கள் அரசியலோடு இருப்பது நல்லது. இல்லை என்றால் இப்படி மாறி மாறிப் பேச வேண்டியதுதான்.

சீமான் விரைவில் ஒரு திருமாவளவனாகி பின்பு வைகோவாகி பின்பு ராமதாசாகி அப்படியே கருணாநிதியாக மாறினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

Edited by சபேசன்

தவறான ஒரு கேள்வியை எழுப்புகிறீர்கள். நாங்கள் காமராஜரையும், வ.உ.சி.யையும் எங்கள் முன்னோடிகளாகக் கருதுகிறோம் என்றால், அவர்கள் தமிழ் தேசியவாதிகள் அல்ல. ஆனால் இந்த மண்ணின் விடுதலைக்குப் பாடுபட்டவர்கள். அதுபோலத்தான் முத்துராமலிங்கத் தேவரும். அவர் தமிழ்த் தேசியவாதி இல்லையென்றாலும், இந்நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டவர். பெரும்பான்மை சமூகத்தின் மேன்மைக்கு உழைத்தவர். அந்த சமூகத்தையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சாதியைக் காரணம் காட்டி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒதுக்கி வைக்கப்போகிறீர்கள்? எத்தனை காலத்திற்குத்தான் இருசமூகத்திற்கும் இடையேயான பகையை நீட்டித்து வளர்க்கப் போகிறீர்கள்? இருவருக்கும் இணக்கம் ஏற்படும் வகையில் இந்த சீமான் முயற்சி செய்தால் என்னை விமர்சனம் செய்கிறீர்கள். இப்போது எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. முற்போக்குவாதிகள் என்று சொல்பவர்கள் காலகாலத்திற்கும் சாதிரீதியிலான பகையை வளர்க்க விரும்பும் பிற்போக்குவாதிகளா?

பெருவாரியான சமூகத்தை காலகாலத்திற்கும் சாதியோடு பிணைத்திருக்கும்படியான பணியைச் செய்தவர் முத்துராமலிங்கம் என்று குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருக்கிறதே?

அதை மாற்றும் வேலையை நான் செய்கிறேன் என்பதை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்? இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு தேவர் சாதி தம்பிகளையும், முத்துராமலிங்கம் சிலை இருக்கும் இடத்திற்கு தாழ்த்தப்பட்ட சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு போவது இருவருக்கும் இடையேயான இணைக்கத்தை ஏற்படுத்த விரும்பும் செயல் அல்லவா? பெரியார் இறந்தபோது பார்வார்ட் பிளாக் தனது கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவில்லை என்று குற்றம் சாட்டுகிற நீங்கள், சாதியொழிப்பு, பெண்ணடிமை, மூடநம்பிக்கை ஒழிப்புக்காக போராடிய பெரியார், குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து என்ன செய்தார் என்று அந்த மக்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?

பெரியார் ஒட்டுமொத்த விடுதலைக்குத்தானே பாடுபட்டார். இந்த சாதிக்கு ஒரு போராட்டம், அந்த சாதிக்கு ஒரு போராட்டம் என்று அவர் நடத்தவில்லையே?

அப்படி இல்லை. இது வெள்ளை ஏகாதிபத்தியத்தால் கொண்டுவரப்பட்ட போராட்டம். அதை எதிர்த்து எங்கள் அய்யா என்ன செய்தார்? எல்லா இடத்திலும் விமர்சனம் இருக்கிறது. பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர் இல்லை என்ற விமர்சனம் இன்றும் இருக்கிறது. இதைக் கேட்கும்போது உங்கள் மனது எப்படி காயப்படுகிறது. அதுமாதிரித்தான் நீங்கள் முத்துராமலிங்கம் மீது வைக்கிற விமர்சனமும் அந்த மக்களுக்கு காயத்தைத் தரும். நான் எல்லோருக்கும் பொதுவான பிள்ளையாக இருக்க விரும்புகிறேன். நீங்கள் ஏன் என்னை குறுகிய வட்டத்தில் அடைக்கிறீர்கள்? நான் செய்வது தவறு என்றால் விலகிச் செல்ல்லாம். நம்பிக்கையிருந்தால் என்கூட வரலாம். அதைவிட்டு விட்டு நான் இங்கு போக வேண்டும், இங்கு போக்க்கூடாது என்று பிறர் சொல் கேட்டு நடப்பதற்கு, நான் என்னுடைய இயக்கியை பிறர் கையில் கொடுத்துவிட்டுச் செல்லும் ரோபோட் அல்ல. நான் சுதந்திரமான மனிதன்; பெரியாரையும், பிரபாகரனையும் நேசித்து, சிந்தித்து வளர்ந்த பிள்ளை. சாதியொழிப்பிற்குத்தான் இதை நான் செய்கிறேன். நீங்கள் சாதியக் கண்ணாடியோடு இதைப் பார்ப்பதால்தான் உங்களுக்கு சாதி தெரிகிறது. இப்படிப் பார்ப்பவர்களைத்தான் சாதிவெறியர்கள் என்று நான் சொல்வேன்.

எம்.பி., எம்.எல்.ஏ. ஆவதற்குத்தான் சீமான் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்று ஜெகத் கஸ்பர் குற்றம் சாட்டியிருக்கிறாரே?

எம்.பி., எம்.எல்.ஏ. ஆவதற்கு கட்சி ஆரம்பிக்க வேண்டியதில்லை! எல்லாக் கட்சியிலேயும் தான் எனக்கு சீட் தர தயாராக இருக்கிறார்களே!! நான் ஒரு இனத்திற்கு நாடு அடையத் துடிக்கிற போராளி. எம்.பி., எம்.எல்.ஏ. ஆக வேண்டுமென்றால் ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டுப் போகலாமே! இவ்வளவு பெரிய பாரத்தைத் தூக்கிச் சுமக்க வேண்டியதே இல்லை. இவ்வளவு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியதில்லையே. பணம், புகழ்தான் முக்கியம் என்றால் அதற்கு நான் இருக்கிற திரைத்துறையே வசதியானது. ஜெகத் கஸ்பார் குறை கூறுவதற்கு வழியே இல்லாமல், இதைக் கூறுகிறார். இதை மக்கள் யாராவது நம்புவார்களா? எம்.பி. ஆக விரும்புகிற எவனாவது தமிழ்த் தேசியம், தன் இனத்திற்கு ஒரு நாடு என்றுபேசி சிக்கலில் சிக்கிக் கொள்ள விரும்புவானா?

தமிழ்த் தேசியம் என்று பேசும்போது மொழிச் சிறுபான்மையினருக்கான இடம் என்ன என்ற கேள்வி பொதுவாக எழுகிறதே?

எல்லாருக்குமான இடம் இங்கே இருக்கிறது. வந்தவரை எல்லாம் வாழ வைப்போம். ஆனால் நாங்கள்தான் ஆள்வோம் என்று சொல்கிறோம். கேரளாவை மலையாளிகள் தவிர வேறுயாரும் ஆளவில்லை; ஆந்திராவை தெலுங்கு பேசுகிறவர்கள் தவிர வேறு யாரும் ஆண்டதில்லை. ஆனால், தமிழ்நாட்டைத் தமிழர்கள் தவிர எல்லோரும் ஆண்டிருக்கிறார்கள். தமிழர்கள் எல்லோரும் தங்கள் வீட்டு மூத்த பிள்ளையாக்க் கருதுகிற பிரபாகரனை குற்றவாளி என்று சொல்லும் தைரியம் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது? அதைத்தான் ஆபத்து என்று நாங்கள் சொல்கிறோம். அந்த ஆபத்து இனியும் தொடரக் கூடாது என்று விரும்புகிறோம்.

திராவிட அரசியலால்தான் கெட்டோம் என்று நீங்கள் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது

திராவிடம் என்ற சொல்லாடலை நாங்கள் எதிர்த்தால், உடனே சீமான் பெரியாரை எதிர்ப்பதாகக் கூறக்கூடாது. நான் தமிழனா, திராவிடனா என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, மும்பையில் பேசியபோது பால் தாக்கரேயை ‘பெருமகன்’ என்று சொல்லிவிட்டேன் என்று குதிக்கிறார்கள். ஈழ விடுதலையை ஆதரிக்கும் பால்தாக்கரே பற்றிப் பேசும்போது, அவன் இவன் என்று பேசச் சொல்கிறீர்களா? இதுவா பெரியார் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த பண்பாடு? சோனியா காந்தியைப் பற்றிப்பேசும்போதுகூட மதிப்பிற்குரிய சோனியா காந்தி என்றுதான் சொல்கிறோம். ஏன், போர்ச்சூழலில்கூட அண்ணன் பிரபாகரன், ராஜபட்சேவைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் என்றுதான் பேசினார். ஓரிடத்தில்கூட ‘அவன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. இதுதான் பெரியார் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது. அரிப்பு இருக்கிறது பேனா இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் குதர்க்கமாக எழுதக்கூடாது.

திராவிட அரசியலை எதிர்க்கிறேன் என்று சொல்வது திமுகவையும், அதிமுகவையும்தான். திமுக ஆட்சியில் உள்துறைச் செயலாளராக இருக்கும் மாலதி ஒரு பார்ப்பனர். திராவிடக் கட்சியின் தலைவராக அதிமுகவில் இருப்பது ஒரு பார்ப்பனர்தானே! எனவே அரசியல்தளத்தில்தான் திராவிடம் என்ற சொல்லாடலை எதிர்க்கிறோம். சமூகத் தளத்தில் ஆதரிக்கிறோம். சமூகத் தளத்தில் சாதியை ஒழிக்க பெரியார் திராவிடர் கழகம் போராடுகிறது. நாங்களும் அவர்களுக்குத் துணை நிற்கிறோம். ஆனால் அரசியல்தளத்தில் சாதி ரீதியான வேட்பாளர்களை நிறுத்தி திராவிடக் கட்சிகள் சாதியை வளர்க்கின்றன. பெரியாரை முழுமையாக ஏற்றுச் செயல்படும் நாங்கள், இதை எப்படி அனுமதிப்போம்? இவர்களை ஒழிக்காமல் எப்படி தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்பது? திராவிடம் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த இவர்களால் தமிழினத்திற்கு, மொழிக்கு என்ன பயன் வந்தது?

வார்த்தைப் பிரயோகத்தில் அண்மையில் வந்த ஒரு சர்ச்சை, ஈனசாதிப்பயலே என்று நீங்கள் கூறியது?

தாழ்த்தப்பட்டவர்களைக் குறிக்கும் அர்த்தத்தில் அந்த வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. நம்மவர்களைக் கொன்று குவித்த சிங்களவனுடான கிரிக்கெட்டை விரும்பிப் பார்க்கிற இனவுணர்வு அற்றவர்களை, இழிவான மக்கள் என்று குறிப்பதற்குத்தான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன். அதை சாதி வன்மத்துடன் பேசியதாகப் பார்க்கக்கூடாது. எனக்கு அத்தகைய எண்ணமும் இல்லை. எந்த நோக்கத்திற்காகப் பேசினேன் என்பதைப் பார்க்காமல், அந்த சொல்லையே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது.

தேவர் சிலைக்கு மாலை போடப்போனபோது, அங்கே ஒரு அப்பத்தா, ‘ஐயா ராசா, உன்னை சினிமாவுலே பார்த்தது’ என்று எனக்கு ஆரத்தி எடுத்து திருநீறு பூசியது. அந்நேரம் அங்கே இருந்த ஊடகங்கள் அதைப் பதிவு பண்ணின. உடனே பெரியார் பேரன் திருநீறு பூசிக் கொண்டார் என்று அலறுகிறார்கள். அவர்கள் அன்போடு பூசும்போது, ‘சீச்சி! என்ன அசிங்கம்’ என்று அதை தட்டிவிடச் சொல்கிறார்களா? இதுவா பெரியார் நமக்கு சொல்லிக் கொடுத்த பண்பாடு? பெரியாரே குன்றக்குடி அடிகளார் திருநீறு பூசியபோது ஏற்றுக்கொண்டாரே! அவருக்கு ஒரு நியாயம், அவர் பேரனுக்கு ஒரு நியாயமா?

அதேபோல சே குவேராவைப் பற்றி சொன்னதும் ஒரு ஆதங்கத்தில்தான். நாம் நேசிக்கும் கியூபா, ஈழத்திற்கு எதிராக கையெழுத்திட்டபோது எழுந்த ஆதங்கத்தில் சொன்னது அது. அதற்காக சே குவேராவைத் தூக்கி எறிந்துவிட்டேனா என்ன! இதோ அலுவலகத்துச் சுவரிலெல்லாம் அவர் படம்தான் இருக்கிறது. விமர்சிக்கிறவர்கள் விமர்சித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இவர்களுக்கு அரிப்பு இருக்கிறது என்பதற்காக என்னை சொறியக்கூடாது.

அருமையான பேச்சு... தெளிவான சிந்தனை ...

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட மாயைக்குள் இருந்து தமிழர்களை வெளிக்கொணராமல் தமிழர்களிடம் இனப்பற்றையோ ஒற்றுமையையோ அதன் மூலமான இன விடுதலையையோ எதிர்பார்க்க முடியாது என்பதற்கு சீமானின் இந்தக் கருத்தியல் மாற்றம் நல்லதோர் உதாரணம்.

திராவிட மாயைக்குள் இருந்து தமிழர்கள் தமது தனித்துவத்தோடு வெளிவர வேண்டும் என்ற வாதங்களை யாழ் களத்தில் முன்னெடுத்தவர்கள் என்ற வகையில் சீமானின் இந்தக் கருத்தியல் மாற்றத்தை வரவேற்றுக் கொள்வதோடு.. தாய் தமிழகம்.. திராவிட மாயைக்குள் இருந்து விடுபட்டு தமிழ் தேசிய உணர்வைக் கட்டி எழுப்ப வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருப்பதையே சீமானின் இந்தக் கருத்தியல் மாற்றம் வலியுறுத்துகிறது என்பதையும் சுட்டிக்காட்டுதல் தகும்.

காலம் காலமாக திராவிட உச்சரிப்பின் கீழ் திராவிட ஆட்சி மூலம் தமிழர்கள் அல்லாதவர்களால் தமிழகம் பிரித்தாளப்பட்டதன் விளைவே தமிழகம் ஈழத் தமிழருக்கு அவர்களின் உச்ச அவலத்தின் போது உதவ மனமிருந்தும் உதவ முடியாத நிலைக்கு காரணமானது.

தமிழகத்தில் தமிழ் தேசியம் ஆட்சி செய்திருந்தால் ஈழத்தமிழன் இன்று இத்தனை துயர்களை சந்தித்திருக்க வேண்டி வந்திராது. தென்னிந்தியாவில் சோழ ஆட்சியில் ஈழத்தில் தமிழன் கொடியும் கோட்டையுமாக வாழ்ந்தான். ஆனால் இன்று.. தமிழனிடம் தமிழ் உணர்வாளன் என்று சொல்லிக் கொண்டு தி்ராவிடம் பேசி தமிழனை ஆண்ட மலையாளிகளும் தெலுங்கர்களும் கன்னடர்களும் தமிழனை பிரித்துப் பலவீனப்படுத்தி தமது அரசியல் சூதாட்டத்தால் தமிழர்களின் ஆட்சி உரிமைகளையும் அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களையும் அபகரித்ததுவே நடந்தேறியுள்ளது.

தெலுக்குப் பின்னணி கொண்ட கருணாநிதியும்.. கன்னடப் பின்னணி கொண்ட ஜெயலலிதாவும் தமிழர்களின் தலைமையானதுதான் தமிழர்களின் உச்ச துயரின் போதும் கூட மனிதாபிமானமற்று தமிழர்களின் குருதியில் குளித்துக் கொண்டு அரசியல் செய்ய முடிந்தது..!

இந்த நிலை ஈழத்தமிழர்களுக்கு மட்டும் அவலத்தைத் தரவில்லை. இது தமிழக தமிழர்களுக்கு ஒரு எச்சரிக்கையையும் பாதுகாப்பற்ற அரசியல் சக்திகளால் தமிழர்கள் ஆளப்படுவதையும் அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறது.

தமிழ் தேசிய உயிர்ப்பூட்டமும்.. தமிழகத்தை தமிழர்கள் ஆளும் நிலையும் உருவானால் மட்டுமே ஈழத்தில் தமிழர்களின் வாழ்வும் வாழிடமும் பாதுகாக்கப்பட முடியும். தமிழகமும் தமிழ்நாடாக வளர்ச்சி காண முடியும்..!

அதற்கு திராவிட மாயை தகர்த்தெறியப்பட வேண்டும். கன்னடனும்..தெலுங்கனும்.. மலையாளியும் தம்மை ஆள தமிழர்களை திராவிடம் பேசிக் கொண்டு கேரளாவுக்கோ.. கர்நாடகத்திற்கோ.. ஆந்திராவுக்கோ வர அனுமதித்ததில்லை. திராவிடம் பேசியதும் இல்லை. திராவிடக் கட்சிகள் வைத்திருந்ததும் இல்லை. ஆனால் தமிழனை மட்டும் இவர்கள் திராவிடம் என்ற மாயைக்குள் அடக்கி வைத்து ஆள்வதுதான் வேடிக்கையான விடயமாகியுள்ளது. இதை உணராது தமிழர்களும் சினிமா அடிமைகளாகி சினிமா அரசியலால் தமிழகத்தை அந்நியருக்கு அடகு வைத்து விட்டுள்ளனர்.

இந்த நிலை மாற வேண்டும். தமிழ் போர்வை போர்த்த வேற்று மொழிக் கூட்டம் தமிழகத்தை ஆளும் நிலை தகர்க்கப்பட வேண்டும். தமிழகம் தமிழரால் ஆளப்படுவதோடு வேற்றுமொழியினரும் அங்கு தமிழரின் ஆட்சியின் கீழ் சம உரிமை பெற்று வாழட்டும். தமிழ் தேசியத்தை மதித்து வாழட்டும். அந்த நிலை தோன்றின் மட்டுமே உலகில் தமிழினத்தை அழிவினனின்றும் பாதுகாக்கவும் முடியும்.

இன்றேல் தமிழினம்.. உலகெங்கும் சிதறி... அதன் அடையாளம் இழந்து அழிவது உறுதி..! !!!

Edited by nedukkalapoovan

சீமான் தனது படங்களில் தொடர்ந்தும் சாதிவெறியரான முத்துராமலிங்கத்தைக் காட்டி வருபவர். தேவர் இனத்தை சேர்ந்த சீமான் பசும்பொன் என்னும் பெயரை வைத்து படம் எடுத்து முத்துராமலிங்கத்தையும் தொடர்ந்து படங்களில் காட்டி வந்தார்.

திடிரென்று தனக்கு உண்மை புரிந்து விட்டது முத்துராமலிங்கத்தின் படத்தைக் காட்டியது தவறு என்றார். இதுதான் அவர் திருந்திய இடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் முத்துராமலிங்கத்திற்கு மாலை போட்டதை சிலர் இங்கே திருந்திய இடமாகக் கொண்டாடுகிறார்கள்.

அவரால் தன்னுடைய சாதியை பகைத்துக் கொண்டு வாக்கு அரசியல் செய்ய முடியவில்லை. சரணடைந்து விட்டார்.

அத்தோடு விட்டாரா? முத்துராமலிங்கத்தை ஆதரிப்பதற்கு அவர் தருகின்ற விளக்கம் இருக்கிறதே அது பெரும் கொடுமை

முத்துராமலிங்கம் நாட்டுக்காகப் போராடினாராம். எந்த நாட்டுக்கு? இந்திய நாட்டுக்காகப் போரடினாராம். அதனால் இவர் ஆதரிக்கிறாராம். தன்னுடைய கணவனையும் மாமியாரையும் பலி கொடுத்த பின்பும் இந்தியத் திருநாட்டிற்காக பாடுபடுகின்ற அன்னை சோனியாவையும் விரைவில் ஆதரிப்பதற்கு வாழ்த்துக்கள்.

சீமானின் வயதில் கலைஞரும் ஒரு போராளியாகத்தான் இருந்தார். கடைசியில் கொள்கைகள் இழந்து தள்ளாடியபடி நிற்கின்றார். ஆயினும் அரசியல் ராஜதந்திரம் தெரிந்ததால் அரசியல் உச்சத்தை தொட்டு விட்டார்.கொள்கைத் தெளிவின்றி வெறும் உணர்ச்சியோடு வாக்கு அரசியலுக்குள் நுழைந்த சீமானின் எதிர்காலம் பரிதாபத்திற்கு உரியதாக மாறக்கூடாது என்று விரும்புகிறேன்

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

சீமானையே அதிகம் பேசியாகிவிட்டது.கொஞ்சம் சீமான்

எதிர்ப்பாளர்களையும் கவனிக்க வேண்டி உள்ளது.

ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவான அரசு சாரா

நிறுவனங்களின் (N.G.O) சித்தாந்தத்தை தமிழகத்தில்

மொத்தக் குத்தகைக்கு எடுத்து விநியோகித்துக்கொண்டு

இருப்பவர் அ.மார்க்ஸ்.அந்த வேலைக்கு காந்தியை

தாராளமாக பயன்படுத்துவார் அதில் நமக்கு

பிரச்சணைகள் இல்லை.பெரியாரையும் அம்பேத்கரையும்

தனது ஏகாதிபத்திய ஆதரவு அரசியலுக்கு ஏற்ப இவர்

பயன்படுத்திக்கொள்வதை இவரது எழுத்துக்களை சரியாக

கவனிப்பவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடியும்.

அதுதான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயம்.

சரி அது ஒரு புறம் இருக்கட்டும்.இவரது ரசிகர் சுகுணா

திவாகர் சீமானுக்கு எதிராக வைத்த விமர்சனங்களில்

இருக்கும் அரசியலையும் நாம் கவனிக்க வேண்டி

இருக்கிறது.

ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டத்தில் தேசிய

அடையாளம் வகிக்கும் முக்கியத்துவத்தை நீர்த்துப்

போகச் செய்வதில் மக வினர் மற்றும் பின்

நவீனத்துவவாதிகள் என்று இரண்டு பிரிவினரே தமிழக

அரசியல் பரப்பில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர்.

தமிழ் தேசியம் என்கிற கருத்தியலை முன்வைக்கும்

பிழைப்புவாதிகள்,சித்தாந்த வழிகாட்டல் அற்றவர்கள்

செய்கிற தவறுகளைப் பொதுமைப்படுத்தி

தமிழ்த்தேசியம் என்கிற கருத்தியலையே சிதைப்பது

என்பதைத்தாண்டி இவர்களுக்கு வேறு நோக்கங்கள்

இருப்பதாக நமக்கு தெரியவில்லை.

என்ன சொல்லியிருந்தார் சுகுணா தனது கட்டுரையில்

திருமாவளவன் தமிழகத்தில் ஒரு மக்கள் பிரதிநிதி

அவர் வேற்றுநாட்டு அதிபரைச் சந்திக்கப் போகும்

போது அரசு ஒழுங்குகளுக்கு உட்பட்ட

வழக்கங்களுடன்தான் நடக்க முடியும்.

ராஜபக்ஷேவின் மூக்கில் குத்து விட்டு பஞ்ச் டயலாக்

பேசுவதோ, அல்லது ராஜபக்ஷேவின் நாற்காலிக்குக்

கீழே டைம்பாம் வைப்பதோ, குண்டூசி செருகுவதோ

ரஜினி படங்களில் மட்டும்தான் சாத்தியம்.சரி இந்தக்

கருத்தை ஒப்புக்கொள்ளலாம்,ஆனால் ஒட்டுமொத்த

இலங்கைத்தீவின் உழைக்கும் மக்களின் சமூக

அரசியல் விடுதலைக்குமான போராட்டத்தை ஈழ

விடுதலைப்போராட்டத்தின் வழியாக நடத்திக்

கொண்டுருந்த பிரபாகரன்,மிக சுலபமாக இந்திய

இராணுவத்தின் முழு ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு

வரப்படக் கூடிய இலங்கையில் இருந்துகொண்டு

தினமும் இந்தியாவை எதிர்த்து பத்து அறிக்கைகளை

விட வேண்டும் இல்லை என்றால் அவர்கள் இந்திய

சார்பாளர்கள்,ஏகாதிபத்திய சார்பாளர்கள்,வலதுசாரிகள்

என்றெல்லாம் முத்திரை குத்த எங்களுக்கு உரிமை

உண்டு என்று எண்ணி செயல்பட்டதை என்னவென்று

சொல்ல ? புலிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக

இந்தியாவை எதிர்த்து களத்தில் சமராடித்தான்

மறைந்தார்கள் என்பது வேறு விடயம்.

தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்து தமிழுணர்வு,

பகுத்தறிவு, இன உணர்வு ஆகிய அரசியல் களங்களில்

குறிப்பிட்ட காலம் வரையிலாவது அர்ப்பணிப்பு

உணர்வோடும் லட்சிய வேட்கையோடும் தீவிரமாகப்

பங்களித்த பெருமை கருணாநிதிக்கு உண்டு என்றும்

எழுதியிருந்தார்,பெரியாருக்கு பிறகான திராவிட அரசியல்

என்பதை எவ்வாறு காண்பது என்பதில் தனது வசதிக்கு

ஏற்ற முறையைகடைபிடிக்கும் சுகுணா திவாகரை நாம்

மறுக்க வேண்டி இருக்கிறது.பகுத்தறிவு,தமிழுணர்வு,இன

உண்ர்வு ஆகியவைகள் மட்டுமே போதுமென்றால்

அண்ணாவும்,கருணாநிதியும் பெரியாரிடமிருந்து பிரிந்து

இருக்க வேண்டிய அவசியமே இல்லை ஐயா. தமிழக

முதலாளிகளுக்கு சேவை செய்வதற்கும் பதவி அதிகாரத்தை

சுவைப்பதற்கும் ஒடி வந்த கூட்டம் அதன் இயல்பாகவே

ஈழ்த்தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கிறது.தந்தைக்கு

துரோகம் செய்தவர்களுக்கு தம்பிக்கு துரோகம் செய்வது

கடினமா என்ன ? தமிழுணர்வு.பகுதறிவு.இன உணர்வு

எல்லாம் இவர்கள் தங்களின் உண்மை முகத்தை

மறைத்து மக்கள் முன் நடிப்பதற்காக உபயோகித்த

விடயங்கள்தான்.

திமுகவை விட குறுகிய காலத்திலேயே தேர்தல்

அரசியலில் நீர்த்துப்போன திருமாவளைவை

தூக்கிப் பிடிக்கலாம் அவரது கடந்த காலத்தைக்

காட்டி,தமிழக ராஜபட்ஸெவான கருணாநிதியை

தூக்கிப் பிடிக்கலாம் அவரது கடந்த காலத்தை

காட்டி என்பவர்கள் சீமான் மீது விமர்சனம்

வைப்பதை என்ன சொல்ல? என்னவாக

இருந்தார்கள் என்பதை வைத்து ? என்னவாக

இருக்கிறார்களோ அதை நியாயப்படுத்த

இயலுமென்றால் சீமானை நியாய

படுத்துவதற்குமான காரணங்களும் உற்பத்தி

செய்யபடுவது இயல்பானதாகி

விடும் இல்லையா?

தேவர் ஜெயந்தி வரலாற்றின் அவமானம் என்கிற

கட்டுரையில் கருணாநிதி தேவர் சிலைக்கு

மாலை அணிவிக்கபோகாததை பெரிய

முற்போக்காக சித்தரிப்பதோடு மட்டுமல்லாமல்,

தன்னுடைய கருத்தியல் அடிப்படைகளை

கொஞ்சம் கொஞ்சமாக நழுவ விடுகிற திமுக

சாதி ஒட்டுக்காக எந்த சமரசத்தையும் செய்து

கொள்ள தயாராகத்தானிருக்கும் என்று

முடிக்கிறார்.இதுவரை சாதி ஒட்டுக்காக திமுக

சமரசம் செய்துகொண்டது இல்லையோ

கேட்கையில் எதைக் கொண்டு சிரிப்பது என்றே

தெரியவில்லை.ஒரு தொகுதியில் எந்த

சாதி பெரும்பான்மையாக இருக்கிறதோ அந்த

சாதி வேட்பாளரையே நிறுத்துவது என்கிற

முறை தமிழக தேர்தல் வரலாற்றில் தோன்றி

பல காலமாகி விட்டதே.அதற்கு சி.பி.ஐ

சி.பி.எம் என்று மார்க்சிய முகமூடி மாட்டிக்

கொண்டவர்களே விதிவிலக்கு இல்லை

என்னும்போது திமுக எந்த மூலைக்கு? அது

சரி சி பி எம் மின் வரதராஜன் தேவர் சிலைக்கு

மாலை போட்டதற்கு பிறகும் கூட காம்ரேட்

என்று அழைக்க தகுதியானவர்தானா?

இன்னொன்றையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக்

தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில்

பத்தாயிரம் கோடிகளுக்கும் மேல் செலவு

செய்யப்படாமல் இருந்த தகவல் வெளியாகி

சர்ச்சை கிளம்பியது. மாநில அளவிலும்

மாவட்டங்கள் தோறும் வன்கொடுமை தடுப்புச்

சட்டங்களின் கீழ் வழக்குகள் முறையாக

பதிவு செய்யப்படுகிறதா என்பதை

கண்காணிக்கவும்.நடவடிக்கை எடுக்கவும் அரசு

சார்பாக குழுவை அமைக்க வேண்டும் என்ற

உச்சநீதிமன்றத்தில் உத்தரவை அமல்படுத்தால்

வைத்திருக்கிறது கருணாநிதி அரசு.ஆதிக்க

சாதியினர் வன்கொடுமைகளுக்கு எதிராக

தீவிரமான நடவடிக்கைகள் எடுத்தால் ஒட்டு

வங்கி பறிபோய் விடும் என்பதற்காக

கண்டுகொள்ளாமல் இருக்கும் கருணாநிதியை

ஆதரிப்பதற்கு காரணம் கண்டுபிடிக்க

முயலுபவர்களுக்கு சீமான் மீது விமர்சனம்

செய்ய தகுதி உள்ளதா என்பதை அவர்களே

கேட்டுக் கொள்ளட்டும்.இன்னும் விரிவாக

எல்லாம் எழுத விருப்பமில்லை.

தங்களின் நொந்த சுயநலம் சார்ந்த வாழ்வியல் நலன்களுக்காக

திருமாவையும்,கருணாநிதியையும் ஆதரிப்பவர்கள்,இந்திய,

தமிழக அரசுகள் என்பது ஆதிக்கசக்திகளுக்கு சேவை

செய்யவே உருவாக்கப்பட்ட கருவிகள் என்பதை மறைத்து

புனிதபடுத்தி,இந்தசுரண்டல் சமூக அமைப்புக்குள்ளேயே

தீர்வுகளைக் கண்டுவிடலாம் என்கிற அரசுசாரா

நிறுவனங்களின் அரசியலை முன்னெடுபவர்கள் சமூகத்துக்கு

உதவிகரமானவர்களாக அமைவது சாத்தியமில்லை

என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

சில நாட்களுக்கு முன்னால் சிரஞ்ஜீவி கட்சி துவங்கி

இருப்பதையும்,விஜயகாந்த் கட்சி துவங்கி

இருப்பதையும் இந்திய ஜனநாயகத்தின்

சாதனையாகக் காட்டி தன் வாசகருக்கு பதில்

அளித்திருந்தார் ஜெயமோகன்.நாம் அதை எவ்வாறு

பார்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க

வேண்டும்.ஒவ்வொரு கட்சியின் பின்னும் அமைப்பின்

பின்னும் திரளும் மக்கள் கூட்டதின் பெரும்பாலானோர்

ரசிக மனபான்மை கொண்டவர்களாகவே தேங்கிப்

போய்விடுவதும்.தலைமையை வழிபட்டுக்

கொண்டிருப்பதும்தான் இயல்பாக நடக்கிறது.

சாதிய அடையாளம்.மத அடையாளங்கள் கீழான

கட்சிகளை தவிர்த்த இதுபோன்ற நடிகர்களின்

கட்சிகளில் சேரும் கூட்டங்களும் வர்க்க

அரசியலிலிருந்து அந்நியபடுத்தபடுவதே நடக்கிறது.

வர்க்க அரசியலை மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவது

என்கிற ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின்

அடிப்படையில்தான் இது போன்ற கட்சிகள் முளைக்க

வைக்கப்படுகின்றன.மத சாதி அடையாள கட்சிகளின்

எல்லை தாண்டி சினிமா நடிகர்களின் பின்னால்

இருப்பவர்களும் நிறுவனபடுத்தப் படுவது அதிகார

வர்க்கத்துக்கு உதவியாகவே அமையும் என்பதை

நாம் கவனத்தில்கொள்ள வேண்டி இருக்கிறது.

தலித்திய அடையாள அரசியலிலும் கூட இன்றைக்கு

கட்சியை மையப்படுத்தி உருவான தலைமை அதன்

கீழ் இரண்டாம் மட்டத்தில் இருப்பவர்கள் தவிர மற்ற

பெரும்பாலான மக்கள் தங்களுக்கும் தலைமைக்குமான

வர்க்க வேறுபாடுகளை அடையாளம் கண்டுகொள்ளும்

நிலையை அடைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

இந்த நிலையில்சீமான் கட்சி ஆரம்பித்தால் இன

அடையாளத்தின் கீழ் ரசிக மன்ற அரசியல்தான்

உருவாகுமே தவிர வேறு உருப்படியான விசயங்களை

எதிர்பார்க்க முடியாது.இறுதியாக ஒரு கேள்வியுடன்

இந்த பதிவை முடித்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் இருக்கும் திமுக,அதிமுக.சிபிஐ.சிபிம்.மதிமுக.

பாமக.விசி,நாம் தமிழர்,சில போலி மார்க்சிய லெனிய

கட்சிகள்,அறிவுஜீவிகள் பின்னாலும் மற்றும் ஏதேனும்

அமைப்புகளிலும் கட்சிகளிலும் இருந்துகொண்டு சுயத்தை

அடகுவைத்துவிட்டு ரசிகனாக மட்டுமே இருக்கும் நாம்

அணைவரும் நாகரிகமான மனிதர்களாக,தமிழர்களாக

இணைவதற்கு இன்னும் எத்தனை முத்துக்குமார்களை

தீக்குளிக்க வைக்கப் போகிறோம்?

ஸ்டாலின்குரு

stalinguru@gmail.com

http://stalinguru.blogspot.com/2009/12/blog-post_08.html#comments

இந்திய அரசும் தமிழக அரசும் ஒத்துழைத்தாலும் ஒத்துழைக்காவிட்டாலும், முல்லைப் பெரியாறு அணையை உயர்த்துவேன் என்று கேரள அச்சுதானந்தனால் சொல்ல முடிகிறது. அப்படி உயர்த்தினால் தமிழகத்தில் இருந்து ஒரு பொருள் கேரளாவிற்குப் போகாது என்று சொல்ல இங்கு வலுவான தலைமை இல்லையே?

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1503:2009-12-05-16-18-00&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

கேரள அரசு அணையை உயர்த்துவேன் என்று சொல்கிறதா? தமிழ்நாடு அரசுதான் அணையை உயர்த்தச் சொல்லிக் கேட்கிறது. அணையை உயர்த்தி அதிக தண்ணீரை தேக்கச் சொல்கிறது. கேரள அரசு அப்படிச் செய்தால் அணை உடைந்து அயலில் உள்ள கிராமங்கள் மூழ்கி விடும் என்று சொல்கிறது. அணையை உயர்த்த மறுக்கிறது.

சீமானுக்கு அண்மைக் காலமாக ஏதோ நடந்து விட்டது.

எமது தமிழருக்கு ஏதோ நடந்து விட்டது.எல்லோரும் ஏதோ மனநோயாளிகள் போல் நடந்து கொள்கின்றோம்.எனக்கு உண்மையில் தமிழனின் எதிர் காலத்தை யோசிக்க பயமாக கிடக்கு.

வானொலியை கேட்க,பத்திரிகையை படிக்க,இணையங்களை திறக்க,டீ வீ யை போட பயமாக கிடக்கு. எனக்குக்குத்தான் எதுவும் நடந்து விட்டதோ அல்லது முக்கால்வாசி தமிழனுக்கும் ஏதோ நடந்து விட்டதோ தெரியவில்லை, கொஞ்ச நாட்களில் ஆளை ஆள் உண்மையில் பிடித்து தின்றாலும் ஆச்சரியப்படுவதற்கல்ல.

குறிப்பு- 'பசும்பொன்" பாரதிராஜாவின் படம் சீமானின் அல்ல.

உங்களுக்கு அரிப்பு எடுக்கிறது என்பதற்காக என்னால் சொறிய முடியாது. எப்போ ஒரு மனிதன் தவறை உணர்ந்து மக்கள் முன் சொல்கிறானோ அவன் மனிதனாகிறான் என்று எங்கோ கேட்ட நினைவு. தமிழ் நாட்டுக்கு இவர் போல ஒருவர் வர வேண்டும் என நீண்ட காலம் எதிர்பார்த்தவன்.உங்களை போல உடனடியாக நெகற்றிவாக(negative) யோசிக்க முடியவில்லை. தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் மேல் உள்ள வெறுப்பாக கூட இருக்கலாம். எனக்கு மட்டுமா இல்லை? நம்பிக்கை வைத்தவர்களில் எவ்வளவு பேர் காலை வாரி விட்டார்கள்? பார்ப்போம் சீமானால் எவ்வளவு தூரம் போக முடியும் என.

எமது இனத்தில் பிறந்து சிங்கள பேரினவாத அரசுக்கு மிண்டு கொடுக்கும் எட்டப்பர்களை பார்த்து ஒரு வார்த்தை சொல்ல வக்கில்லை? அதற்குள் சீமான் ஒரு கருணாநிதியானாலும் ஆச்சரிய பட தேவையில்லை என்பது உங்களின் வக்கிர புத்தியை தான் காட்டுகிறது.

உங்கள் ஆராய்வுகளை கேட்க நாலைந்து மாடுகளை கட்டி மேயுங்கள். :wub:

உண்மைதான்........

சீமான் தனது படங்களில் தொடர்ந்தும் சாதிவெறியரான முத்துராமலிங்கத்தைக் காட்டி வருபவர். தேவர் இனத்தை சேர்ந்த சீமான் பசும்பொன் என்னும் பெயரை வைத்து படம் எடுத்து முத்துராமலிங்கத்தையும் தொடர்ந்து படங்களில் காட்டி வந்தார்.

திடிரென்று தனக்கு உண்மை புரிந்து விட்டது முத்துராமலிங்கத்தின் படத்தைக் காட்டியது தவறு என்றார். இதுதான் அவர் திருந்திய இடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் முத்துராமலிங்கத்திற்கு மாலை போட்டதை சிலர் இங்கே திருந்திய இடமாகக் கொண்டாடுகிறார்கள்.

அவரால் தன்னுடைய சாதியை பகைத்துக் கொண்டு வாக்கு அரசியல் செய்ய முடியவில்லை. சரணடைந்து விட்டார்.

அத்தோடு விட்டாரா? முத்துராமலிங்கத்தை ஆதரிப்பதற்கு அவர் தருகின்ற விளக்கம் இருக்கிறதே அது பெரும் கொடுமை

முத்துராமலிங்கம் நாட்டுக்காகப் போராடினாராம். எந்த நாட்டுக்கு? இந்திய நாட்டுக்காகப் போரடினாராம். அதனால் இவர் ஆதரிக்கிறாராம். தன்னுடைய கணவனையும் மாமியாரையும் பலி கொடுத்த பின்பும் இந்தியத் திருநாட்டிற்காக பாடுபடுகின்ற அன்னை சோனியாவையும் விரைவில் ஆதரிப்பதற்கு வாழ்த்துக்கள்.

சீமானின் வயதில் கலைஞரும் ஒரு போராளியாகத்தான் இருந்தார். கடைசியில் கொள்கைகள் இழந்து தள்ளாடியபடி நிற்கின்றார். ஆயினும் அரசியல் ராஜதந்திரம் தெரிந்ததால் அரசியல் உச்சத்தை தொட்டு விட்டார்.கொள்கைத் தெளிவின்றி வெறும் உணர்ச்சியோடு வாக்கு அரசியலுக்குள் நுழைந்த சீமானின் எதிர்காலம் பரிதாபத்திற்கு உரியதாக மாறக்கூடாது என்று விரும்புகிறேன்

சீமான் மீது இவ்வளவு காண்டா? ஒரு செடி முளையிட்டுள்ளது அதுவும் காலத்தின் தேவைகூட...இதை ஏன் உணராது வெறுக்கின்றீர்?

உங்களுக்கு பிடிக்கலையா கருத்தை தெளிவா சொல்லுங்க அறிவுப்பூர்வமாக இருக்கவேண்டும்...

இதற்காக சீமானோட விசிறியல்ல நான்...

எனக்கும் கருத்து வேறுபாடு உள்ளது...அவர்கிட்டயே சொல்லும் தைரியம் எனக்குள்ளது...

ஏன் சந்தர்ப்பம் கிட்டும் போது சொல்லக்கூடாது?

தமிழர்களை சாதி வெறியிலிருந்தும் மத வெறியிலிருந்தும் விலக்கி ஒன்றுபடவைக்க நீங்கள் என்ன திட்டம் வைத்துள்ளீர் அது உங்களால் செயல் படுத்த முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தனது படங்களில் தொடர்ந்தும் சாதிவெறியரான முத்துராமலிங்கத்தைக் காட்டி வருபவர். தேவர் இனத்தை சேர்ந்த சீமான் பசும்பொன் என்னும் பெயரை வைத்து படம் எடுத்து முத்துராமலிங்கத்தையும் தொடர்ந்து படங்களில் காட்டி வந்தார்.

'பசும்பொன்' படத்தை பாராதிராஜா இயக்கினார். 'பசும்பொன்' திரைப்படத்திற்குக் கதை - உரையாடல் எழுதியவர் தான் சீமான்.

இப்படத்தில் ''தென்பாண்டிச் சிங்கமே தேவர் அய்யா எங்கள் தேவர் குலத் தங்கமே தேவர் அய்யா'' என்ற பாடல் வருகிறது. இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து . (சீமான் அல்ல)

சீமான் 'பாஞ்சாலங்குறிச்சி', 'வீர நடை' , 'இனியவளே' ,'தம்பி' , 'வாழ்த்துகள்' போன்ற படங்களைத் தான் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய எந்தப்படத்தில் முத்துராமலிங்க தேவரைக் காட்டியுள்ளார்?.

Edited by கந்தப்பு

இவர் இயக்கிய எந்தப்படத்தில் முத்துராமலிங்க தேவரைக் காட்டியுள்ளார்?.

'தம்பி' யில்.....

சீமான் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன்...அவரின் கனடா உரை (2009) கேட்கும் வரைக்கும்... வெறும் உணர்ச்சி வசப்படல் என்பது கோழைகளின் ஆயுதம்....

எத்தனை அறிவு கொண்ட ஈழத் தமிழினம் இன்று நாலாம் தர சினிமா ரசிகர் போல விசிலடிச்சான் குஞ்சுகளாகி விட்டன என்பதை உணரும் போது

"நம்புங்கள் தமீழீழம் நாளையும் இல்லை"

என்று சொல்லத்தான் தோன்றுகின்றது

சீமான்=10 +1=11

நம்பி கெட்டவன் ஈழத் தமிழன் என்பதை எத்தனை முறைதான் நிரூபிப்பது கந்தப்பு?

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் உணர்வு மிகுந்த ஒரு தமிழர். அவர் மீது சேறு அள்ளி பூசும்போது கவனமாக இருங்கள். அவருக்கு வருவது உண்மையான கோபம். கோபமும் உணர்ச்சியும் ஒருவனுக்கு வரவில்லையென்றால் அவன் மனிதனாக இருக்க முடியாது.

பாதிக்கப்பட்டிருக்கிறோம். நாம் உணர்ச்சிவசப்படுவதிலும் ஆத்திரப்படுவதிலும் எந்தத் தவறுமில்லை.

சீமானை விட்டு விடுங்கள். அவராவது பேசட்டும்.

இன்றேல் தமிழினம்.. உலகெங்கும் சிதறி... அதன் அடையாளம் இழந்து அழிவது உறுதி..! !!!

தமிழனிற்கு என்று இருக்கின்ற தனித்துவ அடையாளம் என்ன நெடுக்ஸ்...? விளக்குவீர்கள் என நம்புகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனைத் தமிழன் ஆளும் நிலை தமிழனுக்கு வராவிட்டால் தமிழினம் அழிந்து போவது உறுதி;.அதற்கு ஈழமோ தமிழகமோ விதிவிலக்கல்ல.

பசும்பொன் பற்றி சுட்டிக் காட்டியதற்கு நன்றி

சீமான் எனக்கு எந்தக் காண்டும் இல்லை. ஆனால் அவர் அண்மைக் காலமாக பல விடயங்களில் குழப்பமாகவும் முன்னுக்குப் பின் முரணாகவும் பேசுவது கவலை அளிக்கின்றது.

மக்களை எமக்கு வழி காட்ட அனுமதிக்கக் கூடாது, நாம்தான் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும் என்பதில் தந்தை பெரியார் கவனமாக இருந்தார். ஒரு சீர்திருத்தவாதிக்கு இந்தப் பண்பு இருக்க வேண்டும். சீமான் வாக்கு அரசியலில் இறங்கி பல சமரசங்களை செய்ய ஆரம்பிக்கின்றார்.

தேசியத் தலைவர் வீரச் சாவடைந்ததை மனதளவில் ஏற்றுக் கொண்டு சேகுவேராவின் படத்திற்குப் பதில் தேசியத் தலைவரின் படத்தை சட்டையில் இடம்பெறச் செய்த சீமான் ஒரு நேரத்தில் "தேசியத் தலைவர் இருக்கின்ற இடத்தைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்" என்று கைதட்டலுக்காக பேசத் தொடங்கிய போதே எனக்கு உறுத்தியது.

உறுதியான தமிழ் தேசியத்திற்கு அடிப்படையாக விளங்கக்கூடிய திராவிட சித்தாந்தை தவறாகப் புரிந்து கொண்டு பேட்டிகள் கொடுக்கத் தொடங்கிய போது அவருடைய புரிதல்கள் பற்றிய சந்தேகம் எனக்குள் எழுந்தது.

இப்படிப் பேசினால் பார்ப்பனப் பத்திரிகைகள் தனக்கு ஆதரவு கொடுக்கும் என்று நினைக்கிறாரோ தெரியவில்லை.

எது எப்படியோ ஒவ்வொரு வாரமும் திருந்துகின்ற சீமான் அடுத்த வாரமும் திருந்துவார் என்று நம்புவோம்.

ஒரு காலத்தின் தேவையாக திராவிட அரசியல் உருவானது. அந்தத் தேவை நிவர்த்தியாகவில்லை இனியும் நிவர்த்தியாகாது. ஆனால் பெருமளவு நன்மை முன்னேற்றம் ஏற்பட்டது. இதே திராவிட அரசியல் தற்போது எதிர்மறையான திசையில் செல்லத்தொடங்கி விட்டது. திராவிடக் கட்சிகள் பெரும் முதலாளிகளாக மக்களை சுரண்டும் கூட்டமாக மாறிவிட்டார்கள். பார்ப்பன ஊடகங்களுக்கும் திராவிடக் கட்சிகளின் ஊடகங்களுக்கும் இடையில் என்ன வித்தியாசம் தமிழ்த்தேசியம் தொடர்பில் இருக்கின்றது? தற்போதைய காலம் மொழி அடிப்படையிலான எழுச்சியாகவே அமைகின்றது.

இந்திய தேசியம் என்பது பார்ப்பன அதிகாரவர்க்க அரசியல். இதே அரசயலுக்கும் திராவிடக் கட்சிகளின் அரசியலுக்கும் இடையில் என்ன வித்தியாசம் தற்போது இருக்கின்றது? பெரியார் வழி சுயமரியாதைக் கொள்கைகள் வேறு திரவிடக் கட்சிகளின் அரசியல் வேறாகவே உள்ளது. இன்றய மொழி அடிப்படையிலான எழுச்சி என்பது சுயமரியாதை சார்ந்தே ஏற்படுகின்றது. பொதுமைப்பட்ட திராவிட இனம் ஆரிய இனம் என்பவைகள் இந்திய தேசியத்துள் ஒன்றாகிநிற்கின்றது. இந்த நிலையில் பொதுமைகளை விலத்தி மொழிவாரியான எழுச்சியே காலத்தின் தேவையாக இருக்கின்றது.

மொழிவாரி அடிப்படையில் தமிழ்த்தேசிய எழுச்சி ஈழத்தில் தோற்கடிக்கப்பட்ட ஒன்று. அதே தான் தமிழகத்தில் தற்போது துளிர்விடுகின்றது. இந்த எழுச்சி நிலைபெறுவதற்கான எந்த அடிப்படையும் இல்லை. அதற்காக முயற்ச்சியற்று இருக்க முடியாது. இந்த முயற்ச்சியின் வளர்ச்சிப்போக்கில் ஏனைய இனங்களின் அரசியல் பொருளாதார மாற்றங்கள் இந்த எழுச்சிக்கு சாதகமாக அமையலாம்.

சாதி மத வர்க்க நோய் பீடிக்காத தமிழன் என்று ஒருவன் இல்லை. குறைபாடுள்ள ஒரு இனத்தில் நிறைவான ஒருவனை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். குறைகளை வளர்ச்சிப்போக்கில் களைந்து நகரவேண்டியது தான். விமர்சனங்களும் குறைகளை சுட்டிக்காட்டுதலும் சீமான்போன்றவர்களை செம்மைப்படுத்தும் என நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார் என்று இந்த இடத்தில் எழுதவேண்டிய தேவை என்ன சபேசன்?அதற்கான நம்பத் தகுந்த சரியான ஆதாரம் தங்களிடம் இருக்கிறதா?அல்லது சிறிலங்கா கொடுத்த ஆதாரங்களைத் தான் நீங்களும் தருவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

seeman451.jpg

எல்லோரையும் வெறுத்து கடைசியில் ஒரு நண்பர் கூட இல்லாமல் அநாதையாக பல ஆயிரம் மக்கள், போராளிகள் இறந்தார்கள்.முள்ளிவாய்காலில் உள்ள அகதிகளை கப்பல் கொண்டு ஏற்றுவதாக பாசாங்கு செய்தவர்களையும் பார்த்திருக்கிறோம். நாம் எப்படியான உலகில் வாழ்கிறோம் என்பதும் அதற்கேற்ப நாமும் இயங்க வேண்டிய நியதியும் உள்ளது.

சீமான் ஒரு உணர்வு மிக்க தமிழர் இற்றை வரை.யாரையும் பற்றி யாரும் எப்படி மாறுவார் என்று சொல்ல முடியாது. ஆனால் தனக்கு பணம் வேண்டும் என்றால் சினிமா தனக்கு தரும் என்று சொல்கிறார். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியோ அல்லது அமைச்சர் பதவியோ தேவையெனில் ஏதாவது ஒரு கட்சியில் சேரும் போது கிடைத்து விட்டு போகிறது என்று சொல்கிறார். இப்படியான ஒருவர் அதுவும் தமிழ் நாட்டில் பிறந்த ஒருவர் குரல் கொடுக்கிறார் என்றால் நாம் தான் அவரை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.ஒரு சாதியை குறைதோ கூட்டியோ சொல்லி எந்த அரசியல் லாபமும் என்னை பொறுத்தவரையில் கிடைக்க போவதில்லை.சிலர் ஊதி பெருப்பிக்க என்றே கிளம்பியுள்ளார்கள் போல உள்ளது.

சிலர் உணர்ச்சி வசமாக பேசுகிறார் என்று சொல்கிறார்கள்.என்றாலும் நிறையவே உண்மைகளையும் தான் அவர் சொல்கிறார். இதுவே கருணாநிதி போன்ற அரசியல் வாதிகள் எனில் நாலு கவிதையை எடுத்து விட்டால் நாம் ஆகா ஓகோ எ(ன்)கிறோம்.எப்படி நடிப்பவர் ஒருவர் ரொரண்டோ பொலிசாரால் நாடு கடத்தப்படுவார். தான் மரியாதை கெட்டாலும் பரவாயில்லை உண்மையை உரக்க சொல்லவில்லையா? யாரையும் சந்தேகத்தோடு பார்த்தும், பட்டங்கள் கொடுத்தும் குட்டி சுவராக்கி விட்டது தான் மிச்சம்.பாருங்கள் எமது மக்களால் தெரியப்பட்ட தமிழர் கூட்டணி யாருக்கு பயந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தாமல் நளுவுவது மட்டுமில்லாமல் வேறு நாடுகளில் கூட்டம் என்று ஆலாய் பறக்கிறார்கள்? ஒப்பிடுங்கள் இவர்களோடு சீமானை.இவருக்கு என்ன அவசரம் ஈழதமிழர்களை காப்பற்ற வேண்டும் என. ஒரு பத்து படத்தை எடுத்து நாலு குலுக்கல் ஆட்டத்தையும் , மாடல்களை போட்டு எடுத்து இலகுவாக பணத்தை சம்பாரித்து விட முடியும்.

ஒரு வேளை இவர் தவறு விட்டால் கூட விமர்சனத்தின் ஊடாக அவர் தன்னை மேலும் செழுமை படுத்தலாம் சுகன் கூறுவது போல.

நண்பன் வசம்பு கூறியது போல் இருக்கும் நண்பர்களையாவது ஒழுங்காக பேண முற்படுவோம்.பல நாடுகளின் போராட்டங்களில் வெற்றியின் பின்னணியில் நண்பர்கள் இருந்துள்ளார்கள்.

முடிவாக தமிழ் நாட்டு மக்களுக்கு சீமான் அப்படி ஒரு பிழையை மனதறிந்து விட்டிருந்தால் அவர் அதனை அறுவடை செய்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

seeman451.jpg

சரியாய் சொன்னீங்கள் சீமான்.

பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட திராவிடம் பற்றி ..... இப்போ இருந்து கதைப்பதற்கு எந்த நாய்க்கும்...... லாயக்கு இல்லை.

தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார் என்று இந்த இடத்தில் எழுதவேண்டிய தேவை என்ன சபேசன்?அதற்கான நம்பத் தகுந்த சரியான ஆதாரம் தங்களிடம் இருக்கிறதா?அல்லது சிறிலங்கா கொடுத்த ஆதாரங்களைத் தான் நீங்களும் தருவீர்களா?

பாராட்டுகள் சபேசன்... உண்மையை உறுதியாய் சொல்லி வருவதற்கு...

கனவில் இருந்து ஈழத்தமிழன் எதிரியால் தட்டி எழுப்பப்படுகையில், அவனின் குஞ்சாமணியும் அறுத்தெடுக்கப்பட்டு அம்மணமாய் நிற்கக் கூட அருகதை அற்று இருப்பான் என்பது திண்ணம்

'தம்பி' யில்.....

சீமான் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன்...அவரின் கனடா உரை (2009) கேட்கும் வரைக்கும்... வெறும் உணர்ச்சி வசப்படல் என்பது கோழைகளின் ஆயுதம்....

எத்தனை அறிவு கொண்ட ஈழத் தமிழினம் இன்று நாலாம் தர சினிமா ரசிகர் போல விசிலடிச்சான் குஞ்சுகளாகி விட்டன என்பதை உணரும் போது

"நம்புங்கள் தமீழீழம் நாளையும் இல்லை"

நம்பி கெட்டவன் ஈழத் தமிழன் என்பதை எத்தனை முறைதான் நிரூபிப்பது கந்தப்பு?

இதே விசிலடிச்சான் குஞ்சுகள் தெருக்களில் இறங்கி போராட வராதபோதே எங்களுக்குத் தெரியும் இவர்களிடம் பற்றும் இல்லை அறிவும் இல்லை என்று - வெகு தாமதமாக உணர்ந்துள்ளீர்.

சீமான் கனடால உரை நிகழ்த்திய பிறகுதான் அவரைப் பற்றி அறிந்ததும் தாமதம்தான்...அவரின் உரை எனக்கும் பிடிக்கவில்லை ஆனால், தமிழன் ஒன்றுபட அப்படிப்பட்ட ஒருவர் சிந்தனையொடு செயல் படவேண்டும்...

சீமான் கோழையல்ல...மனம் துவழாமல் இந்திய அரசின் சீக்கிய அலுவலருக்கு மறுமொழி சாட்டையாக கொடுத்துள்ளார்...உண்மையில் கோழைகள் அவரை இங்கு அழைத்து வந்தவர்கள்தான்...மாவீரர்நாள் சுவரொட்டியையே தன்னை காக்க அவர்களின் வியாபார நிலையத்திலிருந்து கிழித்து எடுத்து கோழையானார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

.....

எது எப்படியோ ஒவ்வொரு வாரமும் திருந்துகின்ற சீமான் அடுத்த வாரமும் திருந்துவார் என்று நம்புவோம்.

ஆனா ...... நீங்க மட்டும் திருந்தமாட்டீங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.