Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயக மீள்திம்பலுக்கும் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைக்குமான இடைவெளி என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயக மீள்திம்பலுக்கும் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைக்குமான இடைவெளி என்ன?

எங்களது மண்ணில் பெரும் ஆயுத போர் நடைபெற்று, அதன் தாக்கங்கள், பாதிப்புக்கள் பல இடங்களிலும் தொடர்கிறது. துரதிஸ்டவசமாக எங்களின் போராட்ட காரணங்கள், மூலங்கள் இன்னும் மாறவில்லை. சில இடங்களில் அது மற்ற முடியாத வடுவாகவும் மாறியுள்ளது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவைதான் என்றாலும் அதன் பாதிப்புக்கள், எல்லோரையும் ஒரே அளவில் பாதிக்காதால் இரண்டையும் வேறுபடுத்தி தீர்வுகாண்பது நல்லது என்று கருதுகிறேன். நான் இந்த போரின் பதிப்புகள் வேறுவேறு ஆட்களை வெவ்வேறு விதத்தில் பதித்தது என்று குறிப்பிடுவதின் நோக்கம், போரின் ஊடாக ஒரு சிறிய வட்டத்தில், பரப்பில் இருந்த ஈழத்தமிழர் இன்று உலகம் முழுவதும் பரந்து வெவ்வேறுபட்ட பின்னணிகள் உரிமைகளுடன் வாழ்கிறார்கள், அவ்வாறே இலங்கையிலும் வெவேறு இடங்களில் உள்ள தமிழர் வேறுவேருவிதமான உரிமைகள் (அடக்குமுறைகளுடன்) வாழ்ந்து வருகிறார்கள்.

இன்று போரோய்ந்து, தாயகத்தில் உள்ளமக்கள் போரில் இருந்து விடுபட்டுள்ளர்கள் என்ற செய்தியை ஒவ்வொருவர் எடுக்கும் விதம் மாறுபடுவதன் காரணங்கள் என்ன? ஒருவருக்கு சிறிது நிம்மதியாய் இருக்கும் செய்தி, ஏன் இன்னுமொருவர் அதில் உண்மை ஏதும் இல்லை என்று வாதிடுகிறார்?

இதில் பலவிடயங்கள் அடங்கியுள்ளதால், ஒரு முழுமையான கருத்து பகிர்வு அவசியம், ஒருவர் எல்லா விடயங்களையும் சேர்த்து எழுதுவதும் கடினம், இதில் மற்ரைவர்களும் இணைந்தால் நல்லம்.

உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கு உள்ள பண்புபோல், தக்கன பிழைக்கும் என்ற வாதப்படி, வசதியான பலரும் மிக இலாவகமாக, இலங்கையின் போர்பிரதேசங்களை விட்டு வெளியேறிவிட்டோம் ஆனால் இன்றைய பல பிரச்சனைகளை முகம் கொடுப்பவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களே. நல்ல உதாரணம் கொழும்பில் வாழும் தமிழர்கள் 83 கலவரத்தோடு யாழ் வந்தவர்கள் படிப்படியாக சென்று விட்டார்கள் ஆனால் மலைநாட்டிலிருந்து வன்னி வந்தோர், பலரும் அங்கேயே தங்கிவிட்டார்கள்..கடைசிமட்டும் சிலுவை சுமத்தவர்களில், சுமப்பவர்களில் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இப்பகுதியை நீட்டாமல், இன்னுமொரு உதாரணம் என்னுடைய மனைவியினது குடும்பம், வடமராச்சி ஆபரேஷன் லிபெரதியன் இன் போது கோப்பாயில் இருந்து இந்தியாக்கு விமானத்தில் போனவை, பிறகு திரும்ப விமானத்தில வந்து, free பாஸ் குடுக்க குடும்பத்தோட கொழும்பு வந்து கனடா வந்தவை...(இதையும் விட பலரும் ??சொகுசாக கனடா வந்திருக்கல்லாம்). இந்த நிலையில் கனடாவில் உள்ள எனது மனைவியின் பார்வையில் உள்ள தாயக விடுதலை அல்லது அது தொடர்பான எதிர்பாப்பும் வன்னியில் மல்லாவியில் சுத்திவர ராணுவமயமாக்கப்பட்ட நிலையில் உள்ள ஒருவரின் பார்வையில் முற்றிலுமாக வேறுபட்டிருப்பது ஒரு புதினமான விடயம் அல்ல. இந்த இடைவெளியை எவ்வாறு குறைக்கலாம்????

இப்ப உள்ள பிரச்சனை, இன்னும் எந்தளவு தூரம் தாயகம் இந்த பிரச்சனைகளை தாங்கும் என்பதாகும்...என்னை பொறுத்தவரையில் நாங்கள் மோதியது ஒரு வலிய இனத்துடன் --- அவர்களின் போர்கால நண்பர்களை விட்டாலும் அவர்களும் ஒரு வலிய இனமே. பல சந்தர்பங்களில் நாங்கள் அவர்களிலும் வலியது போல் தோன்றியது அவர்களின் இயலாமைகளை எங்களது வலிமைகளுடன் ஒப்பிட்டதால் ஆகும்...(என்னுடைய அனுமானம்) நான் இதை ஏன் சொல்வந்தது எனில் எங்களின் போர்முறைக்காக நாங்கள் கிட்டத்தட்ட எல்லா வளங்களையும் பாவித்துதான் போராடினோம்.--- சகல பெளதிக வளங்களையும், உயிர் உடைமைகளையும் பணயம் வைத்து போராடினோம். இலங்கை (சிங்கள பகுதிகள் ) தனது இருந்த நிலையில் இருந்து 10 , 15 வருட முன்னேற்றத்தை இழந்தது என்றால், நாங்கள் 30 , 40 வருடம் பின்னோக்கி போயுள்ளோம். எல்லா இடங்களிலும் மக்கள் தொகை கூடிக் கொள்கையில் நாங்கள் எங்கள் நகரங்களிலேயே எங்கள் எண்ணிக்கைகளை இழந்து நிற்கிறோம். யாரும் எங்கள் இடங்களில் வாழ விரும்பவில்லை அல்லது வாழ்வதற்குரிய சூழ்நிலைகள் இருக்கவில்லை. 20 வருடத்துக்கு முன்பு யாழ் மக்கள் தொகை 8 லட்சம் ஆனால் இப்ப 6 .5 லட்சம். கல்வியிலும், வளர்சியிலும் மற்றைய மாவட்டங்களுக்கு முன்னுதாரனமாக இருந்தவர்கள், இன்று 10 ஓடு 11 என்கிற நிலையில் உள்ளோம். எனது ஒப்பிடுகளுக்கு என்னிடம் சரியான ஆதாரங்கள் இல்லாவிடினும் கிட்டத்தட்ட மற்றவர்களும் ஏற்றுக்கொள்வர்கள் என நம்புகிறேன்.இதனால் நான் சொல்லவருவது என்னவெண்டால், சரி நாளைக்கு, பிரபாகரன் தலைமையில் சண்டை பிடிப்பதாக இருந்தாலும் முதலில் தேவை மீள்கட்டுமானம்.எங்களின் மீள் கடுமானம் என்பது ஒரு பலபடி கொண்ட செய்முறை. 5 , 10 , 20 ஒ அதைவிட கூடிய காலம் தேவைப்படும் விடயம். மக்களின் உளவியல் பாதிப்பு மீள சில சந்ததிகள் கூட செல்லாம். இந்த போர் ஓய்ந்த காலத்தை எவ்வாறு பயன்படுத்த போகிறோம்? ஒரு நிரந்தர அரசியல் தீர்வு வரும் மட்டும் காத்திருக்க போகிறோமா அல்லது மக்களின் மீள் வாழ்திரும்பலை முன்னுரிமை கொடுத்து அதற்குரிய திட்டங்களை நடைமுறைபடுத்த போகிறோமா?

மீள் வாழ்த்திரும்பல் என்பது நான் நினைக்கிறேன் அவர்களின் இழப்புகளை மீளக்கொடுத்தலும், மிளக்கொடுக்கமுடியததற்க்கு அவர்களின் இழப்பை ஏற்ருக்கொள்ளுதலும் அதற்குரிய உரிய இழப்பீடுகொடுத்தலும்...............அத்துடன் புதிய வாழ்வு தொடங்குவதர்ற்குரிய சகல வழிவகைகளும் செய்துகொடுத்தலாகும்.

இந்த இடத்தில் எழும் பிரச்சனை, யார் இவற்றை செய்வது ? அப்படி செய்வதால் உரிய பலன் உரியவர்களை சென்றடையுமா? அதை இப்போது செய்வது சரியா? அல்லது ஒரு உறுதியான தீர்வு வரும் மட்டும் காத்திருப்பதா? (((((((((((இதுவரை காலமும் சிவனே என்று இருந்த எனக்கு இப்படி ஒண்டு எழுதபோக இப்பஎன்னுடைய நிலைமை சிவப்பு ஒரு மைனஸ் (-1 ) இதோட அது - 25 ஆக போகுதோ தெரியவில்லை? )))))))))))))))

முன்னரும் நான் சொல்லியபடி இதை எல்லாம் சிங்கள அரசாங்கம் , அவர்களுடைய நிர்வாகம்தான் செய்யவேண்டும் என்று எதிர்பாத்தல், காத்திருந்தால், 10 வருடத்தில் நடக்கவேண்டிய காரியம் 20 வருடமோ அதைவிட கூடுதல்லகவொ செல்லும்.

இந்த நிலையில் புலம் பெயர்ந்தவர்கள் தங்களது அறிவியல் பொருளாதார வளர்ச்சிகளை அங்குள்ளோருடன் பகிர்ந்து பயன்படுத்த வேண்டும். சின்ன சின்னக தன்னும் சிறிய சிறிய தொழிற்சாலைகள், முதலீடுகள் செய்யவேண்டும்..எங்களுடைய milkwhite கனகராசா போல, நீர்வேலி, நாவற்குழி கண்ணாடி பாக்டரி போல, அன்றீஸ் இரால் பாக்டரி போல, நாவற்குழி வாட்டர் பம்ப் பாக்டரி போல ............இதனால் அங்குள்ள மக்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைக்கும்... இன்னுமொன்று புதிய காலேஜ், கம்புஸ் தொடங்குவது....foreign examinations / educations preparations courses ..

இப்படி இப்படி எதாவது ஒருவழியில் அவர்களுக்கும் வாழ சந்தர்பம் அமைத்து கொடுக்க வேண்டும்....

அரசியல் தீர்வுக்கான வேலைகள் அங்குள்ள கலநிவரங்களுடன் இணைந்து இருக்கவேண்டும். வெறுமனே உணர்வுகளின் அடிப்படையில் செயற்படுவது பலன் தரமாட்டாது.

இங்கு சிலர் பிரபாகரனின் ??இறப்பு, LTTE வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள், புதிதாக பணம் திரட்ட வழிபார்ப்பவர்கள் பற்றி கூடுதாலாக பேசுகிறார்கள் / பேசுகிறோம், விவாதிக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில் இப்படியான செயற்பாடுகள் எப்பவும் இருந்து கொண்டே இருக்கும்..பிரபாகரன் தானே வந்து சொல்லும் மட்டும் யாரும் நம்பபோவதில்லை அவர் இருக்கிறார் என்று, அதே நேரத்தில் அவரே வந்து தான் இறந்துபோனேன் என்று சொல்லும் மட்டும் அதையும்நம்ம தயாராக இல்லவர்களும் இருக்கிறார்கள். இந்த விவாதத்தால் யாருக்கும் பயன் உண்டா என்று எனக்கு தெரியவில்லை? என்றபடியால் அதைபற்றி பேசாமல் இருப்பதே நல்லது என்று நான் நினைக்கிறேன். அதே போல வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்து பற்றி யாரும் கவலைப்படத்தேவையில்லை. ஏனெனேளில் யாரும் முன்வந்து நான் இவ்வளவு காசு/ சொத்து வைத்திருக்கிறேன் என்று சொல்லி யாருக்கும் தரப்போவதில்லை. அதேபோல இப்பவும் காசு /பணம் சேர்த்து தங்கட மடியை நிரப்புவர்களை ஒன்றும் செய்ய முடியாது. உலகம் முழுவதும் இப்படியான ஈனப்பிறவிகள் எங்கும் உண்டு.

யாரும் நான் சொல்லுவதில், சொல்லவருவதில் ஏதேனும் உருப்படியான கருத்து இருந்தால் உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்து பற்றி யாரும் கவலைப்படத்தேவையில்லை.

யாரும் கவலைப்படமாட்டார்கள் என்பதால்தான், போராளிகள் அவர்கள் குடும்பங்களைக்கூட (சாதாரண மக்களை விடுங்கள்) கையறுநிலையில் விட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

வொல்கனோ முதலில் கட்டுரைக்கு நன்றி...உங்கள் கட்டுரையில் நீங்கள் சொல்லியிருந்தீர்கள் புலம் பெயர் மக்கள் ஈழத்தில் முதலீடு செய்ய வேண்டும்,தொழிச்சாலைகள் கட்ட வேண்டும் என எனது கேள்வி என்ன என்றால் புலம் பெயர்ந்தவர்கள் ஈழத்தை அபிவிருத்தி செய்ய சிங்கள அரசு விடுமா? அனுமதி கொடுக்குமா? அவர்கள் அனுமதி இல்லாமல் எம்மால் இது சாத்தியம் ஆகுமா? தயவு செய்து பதில் தாருங்கள் இது பற்றி பிறிதொரு பதிவில் சுகனிடம் கேட்டேன் பதில் கூறவில்லை...உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்.

ரதி, உங்கள் கேள்விகளுக்கான பதில்களை வல்கனோவிற்கும், பிரிதொரு சந்தர்ப்பத்தில் நீங்கள் கேள்வி கேட்ட சுகனுக்கும் தெரியும். ஆனால் அப்பதில்களை அவர்களால் தத்தம் பதிவுகளுக்குக் கீழ் எழுத முடியாது காரணம் அவர்களின் பதில்கள் அவர்கள் இணைத்திருக்கும் கட்டுரை வடிவங்களின் கருப் பொருட்களையே காற்றுப்போன டயர்போல் ஆக்கிவிடும். தமிழினத்தின் வாழ்வு என்பது அவர்களின் பாரம்பரிய நிலங்களிலேயே பாதுகாப்பற்றதாகவும் கேள்விக்குரியாகவும் இருக்கும்வேளையில் அவ்விடங்களில் புலம்பெயர் தமிழர்கள் தம் பொருளாதார மூலதனங்களை முடக்குவது அழிக்கப்படும் என்று தெரிந்து கொண்டே அழிவிற்கு தன்னை உட்படுத்தி மென்மேலும் பொருளாதார அகதியாகவும், மீள எழ முடியாத முடக்கபட்ட இனமாகவும் தன்னை ஒப்புக் கொடுக்கும் செயலே. இதுவரை காலமும் சிங்கள அரசும், அதன் ஆட்சியாளர்களும் தமிழ் மக்களுக்கான நன்மையாக எதனைச் செய்துள்ளார்கள்? இனிமேலும் எத்தகைய நன்மைகள் தமிழ் மக்களுக்கு சிங்கள இனவாதப் பெரும்பான்மையினரிடம் இருந்து கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் முதலீடுகளைச் செய்ய முடியும்?

வல்வைச்சகாரா அவர்களின் கூற்று ஏற்புடையதே.

வொல்கனோ முதலில் கட்டுரைக்கு நன்றி.

மிகச் சிக்கலானதொரு விடயத்தை எடுத்தாய்ந்துள்ளமை வரவேற்பிற்குரியதே.

ஆனால், சுனாமிக் கட்டமைப்பிற்கு சிங்கள உயரினவாத அரசானது கொடுத்த அடியொன்றே போதுமானதென நினைக்கிறேன் சிங்களத்தினது சிந்தனையைப் புரிந்து கொள்ள. அதனைவிடப்பல எடுகோள்களும் உள்ளன. "வணங்காமண்" கப்பலில் எடுத்துச் செல்லப்பட்ட உதவிப் பொருட்களைக் கொண்டு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் சேர்த்த விதமும் காலமும் இன்றும் சாட்சியாக நிற்கிறது. இப்படிப்பட்ட அரக்கத் தனம் மிக்க சிங்கள அரசினது ஆளுகைக்குள் தமிழினத்தினது உயிர்வாழ்தலே கேள்விக்குறியாகிச் சிங்களம் தமிழினத்தைக் கேலிப் பொருளாக்கியுள்ள சூழலில் முதலீடுகளும் தமிழின வளர்ச்சியும் சாத்தியமா என்பது சிந்தனைக்குரியது.

தாயகத்திலே முதலீடுகளைச் செய்வதற்குப்பதிலாகத் தமிழினம் ஒன்றைச் செய்ய முன்வருமாயின் எமதினத்துக்கான பலத்தினைக் கூட்ட வழிபிறக்கும். அதாவது உலக அளவிலே தமிழர்கள் வாழும் நாடுகள் தோறும் ஒரு வலையமைப்பை உருவாக்கிப் பதிவு செய்து, தமிழருக்கான அனைத்துலக வைப்பகம் ஒன்றை நிறுவுதல் வேண்டும். அதற்கான தலைமையகத்தை இலண்டனிலோ அல்லது ஏதாவது ஒரு சிறந்த பொருண்மிய வளமுள்ள நாட்டிலோ நிறுவுதல் வேண்டும். அதிலே ஆரம்ப நிலையிலே ஒருவர் 1000யூரோக்கள் வீதம் முதிலீடு செய்யக் கோரலாம். அதற்கான வட்டியை நாம் வழங்கும் விதமாகக் கட்டமைப்பை உருவாக்குதல் வேண்டும். இப்படிச் சேரும் பணத்தை நாம் சர்வதேச பங்குவர்த்தகத் துறைகளில் முதலீடு செய்யலாம். அப்போது எமது நிதியாதாரமே தமிழினத்துக்கு ஒரு அரணாக மாறும்.எங்கிருந்து இவளவு முதலீடு வருகிறது? யாரிவர்கள்? என்ற கவனத்தை எமதினம் பெறும். பொருண்மியத்தில் பலமுடைய குமுகாயமொன்றை உலகு விரைந்து நிராகரிக்கத் துணியாது. இன்று சீனாவைப் பாருங்கள் அவர்களது பணபலமே இன்று உலகினை அதன்பால் நகர வைக்கிறது.எடுத்துக்காட்டுக்காக யேர்மனியில் 25,000 பேரில் 20,000 பேர்களாவது இணைந்தால் எவளவு தொகையை எட்டமுடியும். 20 மில்லியன் என்பது சாதாரண விடயமல்ல. எம்மை உற்று நோக்க வைக்கும் விடயமாக மாறும். உலகம் முழுவதுமெனில் எமதினத்தினது நிலை இன்னும் உயரும்.அதன்பின் நாம் மாதாந்தம் குறைந்த தொகையொன்றை தொடர்ந்து முதலிடுமாறும் கோரலாம்.அதனூடாக நாம் எமதினத்தினை மேம்படுத்த முடியுமேயன்றிச் சிறீலங்காவூடாக எப்போதும் சாத்தியப்படாது என்பதே எனது பார்வையாகும். நாம் பொருண்மிய ரீதியாக வலுப் பெறும் அதேவேளை அரசியல் செயற்பாடுகளை அதற்குரியோர் செய்யும் போது எமது தேசமும் அங்கீகரிக்கப்படும் என்பதே நிதர்சனமானது.

இன்று எமது இளைய தலைமுறையானது பொருண்மியக் கணக்கியற்றுறைகளில் பயின்று பட்டதாரிகளாகவும் ஆலோசகர்களாகவும் உள்ளனர். அதேபோல் சட்டத்துறையிலும் பல நிபுணர்கள் உள்ளனர் எனவே, அவர்களது புலமைசார் அறிவுரைகளையும் திரட்டி நாம் எமக்கான " தமிழர் அனைத்துலக வைப்பகம்" ஒன்றை நிறுவுதல் பயனுடையதாக இருக்கும். இதனூடாக வேண்டுமானால் தாயகத்தில் முதலீடு செய்யலாம். எந்த இடத்திலே நாம் எமது முதலீடுகளைச் செய்யப்போகிறோம் என்றும் கேட்கலாம். அதற்கான அனைத்துலகப் பாதுகாப்பும் இருக்கும். ஏனெனில் இது ஒரு அனைத்துலக அங்கீகாரம் பெற்ற வைப்பகத்தினூடான நடவடிக்கை என்பதால், சிங்களம் முடக்கவோ அல்லது பறிக்கவோ, அழிக்கவோ முடியாதல்லவா? எனவே இது பற்றியும் பேசுவோம்! சிந்திப்போம்! செயற்படுவோம்! சிறப்புறுவோம்!சிறகுவிரிப்போம்!

வள்ளுவனின் மொழிகளில் இருந்து......

பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருள்அல்லது இல்லை பொருள். (751)

இல்லாரை எல்லாம் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு. (752)

பொருளெனும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று. (753)

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூறியது இல். (759)

சரியாகச் சொன்னீர்கள் சகாரா அது அவர்களூக்கு தெரிந்து கொண்டே புலம் பெயர் மக்கள் ஈழத்தில் முதலீடு செய் எனச் சொல்வது சிங்களவனுக்கு கொட்டி கொடுப்பதற்கோ தெரியவில்லை.

நொச்சி உங்களது பதிலும் செயல் திட்டமும்[தமிழர் வைப்புலக திட்டம்] அருமை.அதை செயற்படுத்த முயற்சி எடுங்கள்.

Edited by ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Nochchi I understand your views, but I'll share my views tomorrow. since I have some problems in my PC.

கிருபன் உங்களுடைய கருத்து பகிர்விற்கு நன்றி...

உங்களது கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். நானும் ஓரிடத்தில் வாசித்தேன், 5 பிள்ளைகளை போராளிகளாகவும் மாவிரர்களாகவும் பெற்றெடுத்த பெற்றோர் இன்று யாருமற்ற நிலையில் அனாதைகளாக, எல்லாவிதமான கடின வாழ்வை வாழ்கிறார்கள் என்று. ஆனால் அந்த போராட்டத்தை போராளிகளை, மாவிரர்களை முன்னிறுத்தி பணம் சேகரித்தவர்கள், அந்தப்பணத்தை முதலீடு செய்தவர்கள், நாய்வித்தகாசு குரைக்காது மீன் வித்தகாசு மணக்காது என்பது போல, நீதிக்கும் நியாயத்திற்கும் உரிய பணம்/ சொத்து நீதி நியாயம் போசாது என்பது போல் செயற்படுகிறார்கள். அதி உச்சமாக அந்த பணத்தை எதிரியிடம் கொடுத்து தங்கள் தங்கள் காரியங்களை செய்கிறார்கள். மகிந்த சொல்கிறார் , பிரபாகரனின் பெற்றோரின் பணத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரம் செய்யமாட்டேன் என்று, ஆனால் பிரபாகரனின் பணத்தை பற்றி ஏதும் சொல்லவில்லை, எதிர்கட்சிகள் கேட்டபின்பும் கூட...சரத்பொன்செகவிற்கும் ஏனையோருக்குமான மோதலே இந்த பணம்/சொத்து / தங்கம் பங்கிடுவதில் ஏற்பட்ட பிரச்சனைகளே என்றும் சொல்பவர்கள் உண்டு.

ஆனால் எந்தவகையில் இந்த பணத்தை உரிய வகையில் உரியவர்களுக்கு சேர்க்க முடியும்? உதாரணத்துக்கு A என்பவர் என்னிடம் குறித்த தொகைப்பணம் உண்டு என்று சொன்னால் அவருக்குரிய பிரச்சனைகளை பாருங்கள். ஒன்று அவர் ஏனைய பெரும்பாலானவர்களை போல தனது நலன் கருதி அதை தனது உரிமையாக்குவதில் ஏன் தவறு என்று நினைக்கவேண்டும். இந்த போரினால் பலருடைய வாழ்க்கை பலவாறும் மாறியுள்ளதை அவதானித்தால், அந்த A யும் அதை தன்னுரிமையாக்குவது இயல்பானதே என்றுதான் நான் பார்கிறேன். யாழ்பாணத்தில் ஒரு குக்கிராமந்தில் காலில் சிலிப்பர் கூட இல்லாமல் பனைமரத்துக்கு பின்னால் காலைக்கடன் கழித்த நானும் என்னைபோன்றவர்களும் டொரான்டோ மாநகரில் மில்லியன் டொலர் வீட்டில் வசிக்கல்லாம் என்றால் அது இந்த யுத்தம் தந்த நல்ல பக்கம் என்றுதான் நான் பார்கிறேன். பலரும் இங்கே பலவித போய்சொல்லித்தான், அகதி அந்தஸ்த்து கிடைத்தது மறைக்க்கூடிய உண்மையல்ல. உண்மைஎன்னவேன்றால் யாரோ ஒருவரின் இறப்பில், அழிவில் பலரும் எங்கள் வாழ்வை அமைத்துள்ளோம். அதேபோல அந்த A என்பவரும் ஏனையோரின் பணத்தில் வாழ்வது அவருக்கு சரியாக இருக்கலாம்.

அதன் மற்றைய பக்கம், ஒரு கதைக்கு A தன்னிடம் உள்ள சொத்துக்களை வெளியிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், முதலாவது அவர் அப்படி சொன்னநாளில் இருந்து ஏனைய அவரைப்போன்றவர்களிடம் வரும் சிக்கல்கள், அவர் இருக்கும் நாட்டில் உள்ள சட்ட பிரச்சனைகள், இலங்கை அரசாங்கம் கொடுக்கும் அழுத்தங்கள், அதனால் வரும் கைதுகள் அதனோடு இணைந்த சிக்கல்கள். இன்னுமொன்று யாரும் ஒரு முறைப்படியான வகையில் இப்படி ஒரு செயற்படும் தொடங்காதபடியால் யாரிடம் சொத்துகளை பொறுப்பு கொடுப்பது--( எனக்கு தெரியாது இப்படி ஒரு பிரச்சனை உண்டோ என்று, ஆனால் ஆகக்குறைந்தது, நாடுகளுக்கிடையில் உள்ள முகாமையாளருக்கிடையில் தன்னும் இருக்கலாம்)

உண்மையிலே, A க்கு தான் தன்னிடம் உள்ள சொத்தை உரியவருக்கு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம், விருப்பம் இல்லாவிடின் ஒன்றும் நடக்காது, அதே நேரத்தில் அப்படி விருப்பம் இருந்தாலும் பலவகைப்பட்ட நடைமுறை சில்கல்கள் உண்டு என்பது மறுப்பதற்கு இல்லை. என்னக்கும் விருப்பம் தான் நீங்கள் சொன்னபடி தனிப்பட்ட , அல்லது பிரிந்தது பிரிந்துள்ள குழுக்களிடையே உள்ள எம்மவரின் உழைப்பை அங்குள்ளவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது ஆனால் அது சாத்தியப்படாத போது அதுபற்றிய எதிர்பார்ப்புகளை எதிர்பாக்காமல் இருப்பது எல்லாருக்கும் நல்லது என நான் கருதுகிறேன்.அதற்கு மேல் அவர்களிடம் உள்ள சொத்துக்கள் 25 தொடக்கம் 30 வருடத்தில் சேர்த்துதானே, ஏன் அதை மீண்டும் நாங்கள் சேர்க்க முடியாது?????

ரதி, வல்லை சகாரா ,நொச்சி

உங்களது கருத்துகளுக்கு நன்றிகள்..

ரதி, உங்களுடைய கேள்விக்கு நான் சொல்லும் பதில் ஒரு Hypothetical ஆக தான் இருக்கும், ஏனெனில் நான் நேரடியாக இலங்கை முதலீட்டு சபையிலோ அல்லது வேறு எந்த பொறுப்பு வாய்ந்த நிறுவனத்தினிலோ இல்லாத படியால் அதில் உள்ள நடைமுறை பிரச்சனைகளை சொல்லமுடியாது. ஆனால் கொழும்பில் நாங்கள் முதலீடு செய்யலாம் என்றால் ஏன் யாழ்பாணத்தில் செய்யமுடியாது? கொழும்பில் இப்பவும் தமிழர்கள் பெரியளவில் வர்த்தகத்தில் உள்ளார்கள். ( அவர்களின் எண்ணிக்கை குறைந்தது கொண்டு வருவது உண்மைதான் ஆனாலும் இப்பவும் உள்ளரர்கள்) கொழும்பில் பல பேராதனை தமிழ் பொறியாளர்கள் பல்வேறு வகைகளில் பெரிய பெரிய வீடமைப்பு திட்டங்களில் ஈடுபடுகிறார்கள். இப்பவும் யாழ்ப்பணத்தில், எனக்கு தெரிய, முத்திரை சந்தியில் ஒரு பரஸ்கோ இன்ஜினியரிங் கம்பெனி இருக்கிறது, பலகாலம்..அண்ணா பாக்டரி இருக்கிறது...அவர்களின் அளவு சிறியதாக இருக்கலாம் ஆனால் அவை பலகாலம் அங்கு செயற்படுகின்றன. யாழ்பாணத்தில் கல்வியில் போடப்படும் முதலீடு தோல்வியில் முடியாது. எனக்கு தெரிய அப்பா சொல்லுறவர், 1980 களில் CIMA வகுப்புகள் கொழும்பில் உள்ள விரிவுரையாளர்களால் நடத்தப்பட்டதாக. நான் யாழில் இருந்த காலத்தில், Actionfaim இனால் பழம் பதனிடும் பாக்டரி, வேறு ஒரு NGO அஸ்பெஸ்டாஸ் சீட் தயாரிக்கும் பாக்டரி...இப்படி இப்படி பல செயற்பாடுகள் இடம் பெற்றன. அதை தவிர விவசாயத்தில் முதலிடலாம்....எங்களுக்கு முதல் தேவை அங்குள்ளவர்களுக்கு வாழ்வதற்கு ஒரு தொழில் அமைத்து கொடுப்பதாகும்.

வல்லைசகராவின், நிலம் ,நாடு எங்களுக்கு வராமல் அங்கு போடப்படும் முதலீடுகள் இறுதியில் சிங்களவரையே சேரும் என்பது போன்ற கருத்துக்கள், கேவலமான சொற்றொடர் எனினும் "என்னத்தோடோ கோவித்துக்கொண்டு ஏதோ செய்யாதது போல்" ஆகும் . நாடு, நிலம் என்பதற்க்கான வரையறை அங்கு நாங்கள் வாழும் வாழ்விலே தீர்மானிக்கப்படும். அங்கு சிங்களவரும், ஏனைய நாட்டவரும் முதலிட தொடங்கும் போது, நாங்கள் விலகியிருப்பது , நாங்கள் எங்கள் உரிமைகளை இழப்பதாகவே இறுதியில் வரும். நாங்கள் விலகி இருப்பது எங்களை மேலும் மேலும் அன்னியப்படுத்துமே தவிர வேறு எந்தவகையிலும் உதாவது. காலியில் பக் பண்ணிய நீலக்கால் நண்டு கனடாவிற்கு தேவையிருக்கும் போது அதை ஏன் யாழ்ப்பாணத்தில் செய்யக்கூடாது? நாங்கள் செய்யும் செயற்பாடுகள், முற்று முழுதாக தோல்வியில் முடிவடைந்தாலும், இடைப்பட்ட காலத்தில் தன்னும் ஒரு சில தமிழ் மக்கள் பயன் பெற கூடும்.

முன்னரே நான் சொன்னபடி எனக்கு அங்குள்ள நடைமுறை பிரச்சனைகள் தெரியாது, ஆனால் முயலாமல் விமர்சிப்பதில் எதுவும் ஆகப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தாயகப் பகுதிகளில் முதலீடு செய்வதைப் பற்றிச் சொல்லுவதற்கு அதனால் ஏற்படும் அரசியல், பொருளாதார தாக்கங்களைப் பற்றிய போதிய அறிவு இல்லை. எனினும் புலம்பெயர்ந்த மக்களின் உதவியுடன் மீண்டும் பொருளாதாரம் சிறுகச் சிறுக கட்டியமைக்கப்படும் என்பது உண்மைதான். இதன் மூலம் இடைத் தரகர்களாக நிற்கும் சிங்களவர்களும் தமிழர்களும் இன்னும் அதிக பணம் சம்பாதிப்பார்கள் என்பதும் நடக்கும்.

அடுத்ததாக போராட்டத்தின் பேரில் சேர்க்கப்பட்ட நிதியை பாதிக்கப்பட்ட மக்களிற்குப் பகிர்ந்தளிப்பதனால் வரும் விளைவுகளைப் பற்றிய விளக்கத்திற்கு நன்றி. தற்போதைய நிலையில் சிங்கள அரசும், மேற்கு நாடுகளும் புலம்பெயர் தமிழரின் நிதிசேர்ப்பு விபரங்களை அவதானித்து வருவதானால், எல்லாம் உறை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்காலத்தில் இவை தமிழரின் கைகளில் வந்து சேராது என்றே தெரிகின்றது. ஆகவே, கஷ்டப்படுவோருக்கு உடனடியாக உதவிசெய்ய சொந்தங்களும், நண்பர்களும், சிறு சிறு குழுக்களும்தான் தற்போது உள்ளனர். ஆனால் இவர்களால் கூட எல்லோருக்கும் உதவிடமுடியாத நிலை உள்ளதால், உதவிகள் கிடைக்காத எதுவுமற்ற மக்களின் துன்பமான செய்திகள் வரத்தான் செய்யும்.

கட்டுரைக்கு நன்றி இன்னுமொருவன்.

இந்த 30 வருட போராட்டம் எம்மவர் மத்தியில் தமிழீழத்தைத் தவிர வேறொரு தீர்வைப்பற்றி சிந்தித்தாலே பிழை என்பொதொரு நிலையை எம்மவர் மத்தியில் வளர்த்துவிட்டது.எமது அரசியல் பிரச்சனைக்கு தீர்வு தமிழீழமாக இருக்கலாம் அதுவரை அங்கு எதுவிதமான பொருளாதார மீள்கட்டுபணிமானத்திற்கோ செல்வதற்கோ கூட முடியாமல் இருந்தது.புலிகளின் கட்டுப்பாடுப்பிரதேசங்களில் அவர்களைதவிர வேறொருவரும் எதுவும் செய்ய முடியாது,சுனாமியின் போது பார்த்திருப்பீர்கள்.அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளில் கூட எதுவும் செய்ய புலம்பெயர்ந்தவர்கள் பெரிதளவில் முன்வரவில்லை காரணம் ஒன்று யுத்தம்,மற்றது துரோகியாவிடுவீர்கள் என்ற்ற பயம்.உள்நாட்டில் இடம் பெயர்ந்த அகதிகளுக்குக்கூட ஒன்றும் செய்ய முடியாத நிலையிதான் புலம்பெயர் தமிழன் இருந்தான்.தெற்கில் நிலமை வேறு, வெளியில் அதிகம் தெரியாமல் கொழும்பில் புலம்பெயர்தமிழர்கள் பல முதலீடுகளை செய்திருந்தார்கள்.லண்டன் தமிழர் பெரும்பாலும் கொழும்பில் ஒரு பிளாட் வைத்திருக்கின்றார்கள்

இன்றோ நிலமை வேறு. யார் என்ன சொன்னாலும் இன்னமும் இரண்டு மூன்று வருடங்களில் புலம் பெயர்தமிழன் வடக்கு கிழக்கில் பெரியதொரு பொருளாதார மாற்ற்த்தை கொண்டுவரத்தான் போகின்றான்,சிங்கள அரசுகளுக்கும் இது தேவைப்படுகின்றது.சிலர் ஏற்கனவே போயும் விட்டார்கள்.

இப்போது இங்குள்ள பிரச்சனையென்னவென்றால், நீங்கள் கட்டுரையில் சொன்னதுபோல் புலிகளின் பணத்தை பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று.ஆனால் அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் பணபலம்,ஊடகபலம் இவையிரண்டும் இருக்கும் வரை தமிழனின் அரசியல் பிரச்சனை தீரும்வரை இலங்கைக்கு திரும்பி அங்கிருக்கும் ஒரு தமிழனுக்கு உதவி செய்தாலே துரோகம் என்று கொண்டுதான் இருப்பார்கள்.தங்கள் கைகளை மீறி எது நடந்தாலும் இவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை,அது தமிழனுக்கு நன்மையாகட்டும்,தீமையாகட்டும்

அரசியல் போராட்டம்,ஆயுதப்போராட்டம் இரண்டிலும் சிங்களவனிடம் தோற்றுவிட்டோம்,இனி பொருளாதர ரீதியில் எம்மை பலப்படுத்தி சிங்களத்தை மன்ரியிடவைப்போம்.உலாரங்கில் இந்தியாவும் சீனாவும் இதைதான் இன்று செய்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரைக்கு நன்றி இன்னுமொருவன்.

இதனை எழுதியது இன்னுமொருவன் அல்ல.... :)

  • கருத்துக்கள உறவுகள்

வல்லைசகராவின், நிலம் ,நாடு எங்களுக்கு வராமல் அங்கு போடப்படும் முதலீடுகள் இறுதியில் சிங்களவரையே சேரும் என்பது போன்ற கருத்துக்கள், கேவலமான சொற்றொடர் எனினும் "என்னத்தோடோ கோவித்துக்கொண்டு ஏதோ செய்யாதது போல்" ஆகும் . நாடு, நிலம் என்பதற்க்கான வரையறை அங்கு நாங்கள் வாழும் வாழ்விலே தீர்மானிக்கப்படும். அங்கு சிங்களவரும், ஏனைய நாட்டவரும் முதலிட தொடங்கும் போது, நாங்கள் விலகியிருப்பது , நாங்கள் எங்கள் உரிமைகளை இழப்பதாகவே இறுதியில் வரும். நாங்கள் விலகி இருப்பது எங்களை மேலும் மேலும் அன்னியப்படுத்துமே தவிர வேறு எந்தவகையிலும் உதாவது. காலியில் பக் பண்ணிய நீலக்கால் நண்டு கனடாவிற்கு தேவையிருக்கும் போது அதை ஏன் யாழ்ப்பாணத்தில் செய்யக்கூடாது? நாங்கள் செய்யும் செயற்பாடுகள், முற்று முழுதாக தோல்வியில் முடிவடைந்தாலும், இடைப்பட்ட காலத்தில் தன்னும் ஒரு சில தமிழ் மக்கள் பயன் பெற கூடும்.

முன்னரே நான் சொன்னபடி எனக்கு அங்குள்ள நடைமுறை பிரச்சனைகள் தெரியாது, ஆனால் முயலாமல் விமர்சிப்பதில் எதுவும் ஆகப்போவதில்லை.

வல்கனோ, அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்நிலை பற்றி உங்களுக்குத் தெரியவில்லை. அந்நிய நாட்டவரின் முதலீடுகளுக்கு இராணுவமும், அரசாங்கமும் பாதுகாப்பு வழங்கும் அதே நேரம் ஈழதமிழரின் முதலீடுகள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தாலும், இராணுவ வன்முறைகளாலும்..... தமிழர் தரப்பில் இருந்து ஆயுதப்போராட்ட வடிவம் இல்லாவிட்டாலும் அதனை இருப்பதுபோன்று சோடித்துத் தமிழரின் பொருளாதார நிலைகளை சிங்களம் எப்படி அழிக்கும் என்ற அடிப்படை அறிவே இல்லாத ஒருவரின் கட்டுரை போன்றே உள்ளது உங்கள் கட்டுரை. அனுபவ ரீதியில் பல முறை முதலீடுகளை இட்டு கைகளைச் சுட்டுக் கொண்டவர்களுக்குப் புரியும். முதலீடுகளை தாயகத்தில் இட்டுவிட்டு இராணுவத்தாலும் , சிங்களத்தோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களாலும் விட்ட முதலீடுகளை மீட்கவும் முடியாமல் கண்ணெதிரே பாதுகாக்கவும் முடியாமல் திணறுபவர்களிடம் கேளுங்கள் சொல்வார்கள். கட்டுரை எழுதிய வல்கெனோவின் சிந்தனை வரவேற்கக் கூடிய விடயமே இருப்பினும் பின்னறையில்(அரிதட்டு) தண்ணீரைப் பத்திரப்படுத்திய கதைதான் எனக்குத் தெரிகிறது.

அத்தோடு, சிங்கள அரசாங்கம் தமிழருக்குப் பிரச்சனைகளே இல்லை என்று சொல்லிக் கொள்வதற்கும் பெரும் வாய்ப்பாக இருக்கும். எனக்குக் கிருபன் சொன்னதில் பெரும் உடன்பாடு இருக்கிறது. இப்போதைக்கு, தமிழ் மக்களுக்கான உதவிகளை உறவினர், நண்பர், ஊரவர் என்ற வகையில் செய்வதே சாலச்சிறந்தது. தமிழர்கள் மீதான இராணுவ அடக்குமுறைகள் களையப்பட்டு, இராணுவ மயப்படுத்தப்பட்ட தமிழரின் நிலங்கள், வாழ்விடங்கள் என்பன மீண்டும் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தமிழர் தத்தம் பகுதிகளில் பயமின்றி எத் தொழிலையும் செய்யக்கூடிய நிலை தோற்றுவிக்கப்பட்டாலே வல்கெனோவின் ஆலோசனை பயனளிக்கும், அல்லாவிடின் வெற்று காகிதங்களை நிரப்பும் சிந்தனைத்துளிகளாகவே இருக்கும்.

நொச்சியின் திட்டம் பற்றியும் அதன் சாத்தியங்கள் குறித்தும் இன்னும் கொஞ்சம் விவாதித்தால் நல்லது என்று நினைக்கின்றேன். அவரின் யோசனை சாத்தியமாக்கவேண்டிய சிறந்த யோசனை...

  • கருத்துக்கள உறவுகள்

வல்வைச்சகாரா அவர்களின் கூற்று ஏற்புடையதே.

வொல்கனோ முதலில் கட்டுரைக்கு நன்றி.

மிகச் சிக்கலானதொரு விடயத்தை எடுத்தாய்ந்துள்ளமை வரவேற்பிற்குரியதே.

ஆனால், சுனாமிக் கட்டமைப்பிற்கு சிங்கள உயரினவாத அரசானது கொடுத்த அடியொன்றே போதுமானதென நினைக்கிறேன் சிங்களத்தினது சிந்தனையைப் புரிந்து கொள்ள. அதனைவிடப்பல எடுகோள்களும் உள்ளன. "வணங்காமண்" கப்பலில் எடுத்துச் செல்லப்பட்ட உதவிப் பொருட்களைக் கொண்டு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் சேர்த்த விதமும் காலமும் இன்றும் சாட்சியாக நிற்கிறது. இப்படிப்பட்ட அரக்கத் தனம் மிக்க சிங்கள அரசினது ஆளுகைக்குள் தமிழினத்தினது உயிர்வாழ்தலே கேள்விக்குறியாகிச் சிங்களம் தமிழினத்தைக் கேலிப் பொருளாக்கியுள்ள சூழலில் முதலீடுகளும் தமிழின வளர்ச்சியும் சாத்தியமா என்பது சிந்தனைக்குரியது.

தாயகத்திலே முதலீடுகளைச் செய்வதற்குப்பதிலாகத் தமிழினம் ஒன்றைச் செய்ய முன்வருமாயின் எமதினத்துக்கான பலத்தினைக் கூட்ட வழிபிறக்கும். அதாவது உலக அளவிலே தமிழர்கள் வாழும் நாடுகள் தோறும் ஒரு வலையமைப்பை உருவாக்கிப் பதிவு செய்து, தமிழருக்கான அனைத்துலக வைப்பகம் ஒன்றை நிறுவுதல் வேண்டும். அதற்கான தலைமையகத்தை இலண்டனிலோ அல்லது ஏதாவது ஒரு சிறந்த பொருண்மிய வளமுள்ள நாட்டிலோ நிறுவுதல் வேண்டும். அதிலே ஆரம்ப நிலையிலே ஒருவர் 1000யூரோக்கள் வீதம் முதிலீடு செய்யக் கோரலாம். அதற்கான வட்டியை நாம் வழங்கும் விதமாகக் கட்டமைப்பை உருவாக்குதல் வேண்டும். இப்படிச் சேரும் பணத்தை நாம் சர்வதேச பங்குவர்த்தகத் துறைகளில் முதலீடு செய்யலாம். அப்போது எமது நிதியாதாரமே தமிழினத்துக்கு ஒரு அரணாக மாறும்.எங்கிருந்து இவளவு முதலீடு வருகிறது? யாரிவர்கள்? என்ற கவனத்தை எமதினம் பெறும். பொருண்மியத்தில் பலமுடைய குமுகாயமொன்றை உலகு விரைந்து நிராகரிக்கத் துணியாது. இன்று சீனாவைப் பாருங்கள் அவர்களது பணபலமே இன்று உலகினை அதன்பால் நகர வைக்கிறது.எடுத்துக்காட்டுக்காக யேர்மனியில் 25,000 பேரில் 20,000 பேர்களாவது இணைந்தால் எவளவு தொகையை எட்டமுடியும். 20 மில்லியன் என்பது சாதாரண விடயமல்ல. எம்மை உற்று நோக்க வைக்கும் விடயமாக மாறும். உலகம் முழுவதுமெனில் எமதினத்தினது நிலை இன்னும் உயரும்.அதன்பின் நாம் மாதாந்தம் குறைந்த தொகையொன்றை தொடர்ந்து முதலிடுமாறும் கோரலாம்.அதனூடாக நாம் எமதினத்தினை மேம்படுத்த முடியுமேயன்றிச் சிறீலங்காவூடாக எப்போதும் சாத்தியப்படாது என்பதே எனது பார்வையாகும். நாம் பொருண்மிய ரீதியாக வலுப் பெறும் அதேவேளை அரசியல் செயற்பாடுகளை அதற்குரியோர் செய்யும் போது எமது தேசமும் அங்கீகரிக்கப்படும் என்பதே நிதர்சனமானது.

இன்று எமது இளைய தலைமுறையானது பொருண்மியக் கணக்கியற்றுறைகளில் பயின்று பட்டதாரிகளாகவும் ஆலோசகர்களாகவும் உள்ளனர். அதேபோல் சட்டத்துறையிலும் பல நிபுணர்கள் உள்ளனர் எனவே, அவர்களது புலமைசார் அறிவுரைகளையும் திரட்டி நாம் எமக்கான " தமிழர் அனைத்துலக வைப்பகம்" ஒன்றை நிறுவுதல் பயனுடையதாக இருக்கும். இதனூடாக வேண்டுமானால் தாயகத்தில் முதலீடு செய்யலாம். எந்த இடத்திலே நாம் எமது முதலீடுகளைச் செய்யப்போகிறோம் என்றும் கேட்கலாம். அதற்கான அனைத்துலகப் பாதுகாப்பும் இருக்கும். ஏனெனில் இது ஒரு அனைத்துலக அங்கீகாரம் பெற்ற வைப்பகத்தினூடான நடவடிக்கை என்பதால், சிங்களம் முடக்கவோ அல்லது பறிக்கவோ, அழிக்கவோ முடியாதல்லவா? எனவே இது பற்றியும் பேசுவோம்! சிந்திப்போம்! செயற்படுவோம்! சிறப்புறுவோம்!சிறகுவிரிப்போம்!

வள்ளுவனின் மொழிகளில் இருந்து......

பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருள்அல்லது இல்லை பொருள். (751)

இல்லாரை எல்லாம் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு. (752)

பொருளெனும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று. (753)

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூறியது இல். (759)

தங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.நாடுகடந்த அரசு உருவாக்கம் பெற்றவுடன் தமிழீழ வைப்பகம் உருவாக்கப்பட வேண்டும்.நப்பகத்தன்மை என்பது மிக மிக மேலான நிலையில் இருந்தால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் நடை முறைக் கணக்குகளை சேமிப்புக் கணக்குகளை முழுமையாக பெற்றுக் கொள்வதுடன் மற்றைய இனத்தவரையும் இணைத்தக்கொண்டால் நல்ல பலனைக் கொடுக்கும் என்பது எனது அபிப்பிராயம்.வங்கியில் வேலை செய்வதற்கு எமது இளம் சந்ததியைக் கூடுதலாகப் பயன்படுத்துவதுடன் மற்றைய இனத்தைச் சேரந்தவர்களையும் சிறிய அளவில் சேர்ப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

வொல்கானோ உங்களின் கட்டுரைக்கு நன்றி.

நொச்சியின் கருத்துடன் உடன்படுகிறேன். மேற்கு நாடுகளும் முதலீடுகளை தான் விரும்புகிறார்கள்.இதனூடாக எமது அரசியல் அபிலாசைகளையும் சமாந்தரமாக கொண்டு செல்லலாம். எமது மக்கள் கடுமையான உழைப்பாளிகள்.அவர்கள் பல இடங்களில் முதலீடு செய்கிறார்கள். சில ஆயிரங்களை எமது வங்கியோ அல்லது credi unionல் முதலிடுவது என்பது அவ்வளவு கஸ்டமானதில்லை.இதனை பயங்கரவாதிகளுக்கான நிதி என இலங்கை அரசால் அல்லது அவர்களின் தோழமை நாடுகளால் மேற்கொள்ளும் (நிச்சயமாக செய்வார்கள்) பிரச்சாரங்களை முறியடிக்கவும் நாம் தயாராக வேண்டும்.

மேலும் இலங்கையில் முஸ்லிம்கள் போல் எங்கும் முதலிட கூடிய நிலையில் நாம் இல்லை.சிறிலங்கா அரசு நாம் வன்னியில் எமது மக்களுக்கு அனுப்பும் பணத்தையே ஒட்டுக்குழுவை வைத்து பறிப்பிக்கிறார்கள்.யாழ்பாணத்திலும் இதே நிலை தான். காசை கொடுத்தும் கூட கடத்தியவர்களை விடாத நிலை. இந்த நிலையில் பலகோடிகளை யார் நம்பி முதலிடுவார்கள் என்ற யதார்த்தமான கேள்வி எழுகிறது.ஒரு காலத்தில் எமது மக்களின் கடைகள்,ஆலைகளை கொழும்பில் அடித்து நொருக்கி மக்களையும் கொலை செய்ததையும் எப்படி திருப்பி நடக்காது என்பதற்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள். சிங்கள மக்களும் சிங்கள அரசும் ஓரிரு இரவுகளில் மாறி விட்டார்கள் என்றால் நம்பும் படியாக இல்லை.ஒரு பேச்சுக்கு கொழும்பில் முதலிடுவதால் வன்னியில் செருப்பு இல்லாமல் இருக்கும் எமது சகோதரர்/ சகோதரியின் வாழ்வுக்கு எந்த வகையில் நாம் உதவுவோம்.? மாறாக எமது பொக்கற்றையும் சிங்கள மக்களின் வாழ்வையும் மறைமுகமாக முன்னேற்றுகிறோம். மீண்டும் வொல்கானோவுக்கு நன்றிகள் பல.இப்படியான விவாதங்கள் மேலும் எம்மை செழுமையாக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நொச்சி,

உங்கள் கருத்துக்கு நன்றி..

நீங்கள் சொல்லும் தமிழர் அனைத்துல வைப்பகம், மிகவும் நல்ல திட்டம். யாரும் படிப்படியாகத்தன்னும் தங்கள் தங்கள் நாடுகளில் தொடங்கி விரிவுபடுத்தலாம். கனடாவில் உள்ளவர்கள் தனியாக, UK ,USA மற்ற மற்ற நாடுகளில் உள்ளவர்களும் தனியாக. இதைத்தான் நானும் வேருஒரிடத்தில் சொன்னேன், எங்களுடைய செயற்பாடுகள் நாடுகடந்த அரசாங்கம் போல, வட்டுக்கோட்டை தீர்மான வாக்கெடுப்பு போல பெரியளவில் செய்ய வேண்டும் என்று. அந்த முதலை, அந்தந்த நாடுகளில், அல்லது இலங்கையில் முதலிடுவது மிகவும் ஆரோகியமான செயற்பாடு ஆகும். நான் நினைக்கிறேன் இதுபற்றி உருத்திர குமார் ஓரிடத்தில் சொல்லியிருக்க வேண்டும் என்று, நாங்கள் போதியளவு சொத்து வைத்திருந்தும் அது கிட்டத்தட ஒருவகையான அசைய சொத்து போன்றதே. இங்கே எங்களிடம் e . g 20000 வீடுகள் இருக்கென்று (கனடாவில்) வைத்துக்கொள்வோம், அதில் யாருக்கும் நேரடி பிரயோசனம் இல்லை( வீடுக்கறரை தவிர). ஆனால் ஒரு 50 Timhoton வைத்திருந்தால் கிட்டத்தட்ட 5000 பேர் வேலைசெய்வார்கள், 50000 பேருக்கும் தன்னும் தெரியும் தமிழரின் coffee shop என்று. என்ன Timhotons முதலீடு செய்ய தனியொருவரால் முடியாது, ( நான் அறிந்துள்ளேன் சில தமிழரும் இப்ப வைத்திருப்பதாக) (இப்ப ஒன்டரியோவில் புதிதாய் openings உம் இல்லை). இது ஒரு நல்ல முயற்சி...

உங்களுடைய, சுனாமி ptoms , வணங்காமுடி உதாரணங்கள் சரியானவை என்று நான் கருதவில்லை. இரண்டுமே அதற்குரிய சில பிரச்சனைகளை கொண்டுள்ளது. PTOMS செயற்பட முடியாததற்கு ஒரு காரணம் அப்போது இருந்த அரசியல் நிலைமைகள், அதற்கு மேல் அத்குரிய தடை நீதிமன்றத்தால் வந்தது. நாங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும், எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ எல்லாவற்றிக்கும் புலிகளையும் சேர்ந்தது அவர்களுக்கு நடந்ததுதான் எங்களுக்கும் நடக்கும் என்பதற்கும் , அதேபோல் சிங்களவருக்கு அதே உரிமை இருக்கிறது எதுசரி, புலியினது பெயருடன் வருவதை, பிரிவினை பயங்கவாதம் என்று சொல்லி எதிர்பதற்கு. இதுபற்றி நான் நீண்ட விவாதத்திற்கு இப்போது வரவில்லை..அதேபோல் , வணங்காமுடி, அதற்குரிய தனிப்பட்ட பிரச்சனைகள் கொண்டது. அவர்கள் செய்தது சரிபிழை என்பதற்கு மேல் எங்களின் எதிர்ப்பப்புகளும் சரியா என பார்க்க வேண்டும்?

இந்த இடத்தில் நான் சொல்லுவேன், நான் சொல்லுவருவது அர்ஜுன் சொல்லுவதே, ஒரு திருத்தம், நாங்கள் "அவர்களை மண்டியிட"--இந்த நேரத்தில் செய்யவில்லை. எங்களுக்கு உண்மையான தேவையிருக்கு, அதைசெய்வோம், அதன் பிறகு யார் யாருக்கு மண்டியிடுகிறார்கள் என்று பார்ப்போம். நீங்கள் சொன்னது உண்மை, எங்களது நண்பர்கள் கொழும்பில் வீடுவைத்திருக்கிறது யாருக்கும் தெரியாது. எதோ ஒருவித தயக்கம், நாங்கள் போறாமைபட்டுவிவோம் என்றோ அல்லது துரோகி பட்டம் கிடைத்து விடுமோ என்றோ தெரியாது...யாரும் யாருடனும் வெளிப்படையாக சொல்லவதில்லை...இப்ப இப்ப மெல்ல மெல்ல வெளிவருகிறது, வீடு இருக்கு ஆருக்கும் வாடகைக்கு தேவையோ என...

கிருபன்...

உங்களுடையது, இப்போதுள்ள ஒரு பொருத்தமான வழி என்றே நானும் பார்க்கிறேன். என்னுடைய டியூஷன் sir சொன்னமாதிரி "அன்ன நடை நடக்க போய் தன்ர நடையும் கெடுத்த மாதிரி போகாமல்" , தனிப்பட்ட ரீதியில், அல்லது சிறு குழுவாக தொடங்கலாம். எங்கடை பேரே வேண்டாம்..புலம் பெயர்ந்த தமிழர் என்ற கதை.. அங்குள்ள எங்களுக்கு நம்பிக்கையான ஒருவரின் ஊடாக செய்யலாம். இப்ப ஒரு உழவு இயந்திரத்தை வாங்கிக்கொடுத்தால், ஒரு சின்ன ஊருக்கே காணும். நான் எனது இளமை பருவத்தை களித்த ஊரில் (100 --150 குடி இருக்குமென நினைக்கிறேன்) பலகாலமாய் 1 ரக்ரர் தான்...ஒரு ரைவர்...அவருக்காண்டி எல்லாரும் காத்திருக்க வேண்டும்..ரக்ரர் பிழைபாட்டால் எல்லாரும் அதே கதிதான்....அப்படியான இடங்களுக்கு நாங்கள், ஆகக்குறைந்தது அந்தந்த இடத்தில் இருந்து வந்தவர்கள் உதவ வேண்டும்...

வல்வைசகரா...

நீங்கள் கிருபன் சொன்னமாதிரி செய்ய விரும்புவதே நான் நினைக்கிறேன் இப்போதைக்கு போதும்மென... நாட்கள் செல்ல நாங்கள் அந்த இடத்திலிருந்து முன்னுக்கோ, பின்னுக்கு செல்லாம்.

நான் ஏற்றுக்கொள்கிறேன், சிங்களவர் எங்களது முதலீடுகளுக்கு போதிய உத்தரவாதம் தரமாட்டார்கள் என, ஆனால் எங்களது உறவுகள் அதே உத்தரவாதத்தில் தானே அங்கு வாழ்கிறார்கள். மல்லாவியில் வாழுகிற உறவுகளுக்கு யார் உத்தரவாதம் கொடுப்பது? என்ன தான் நாங்கள் சிங்களவருடன் சண்டைபிடித்தாலும் எங்களுக்கு அவர்களில் தங்கிவாழ பலதேவைகள் இருக்கிறது, அதை நாங்கள் மறப்பது பேசுவது ஏட்டுசுரக்காய் கறிக்குதவாது என்பது போல் ஆகும்...அங்குள்ளவர்களின் வாழ்நிலை எனக்கு தெரியாது என்பதன் ஊடக எதை சொல்லவருகிறீர்கள்? நான் வேறு ஒருவருக்கு சொன்னபடி யாரும் யாருக்கும் சொல்லாம் , கிணத்துக்கால வாங்கோ, குளத்துக்கால வாங்கோ என்று ஆனால் அதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்..நான் நினைக்கிறேன் யாழில் 40000 குடும்பங்கள் குடும்ப தலைவரை இழந்து உள்ளார்கள்..அந்த பெண்களும் வாழ வழி சொன்னால் எனக்கு ஏதும் தெரியாது என்று சொல்லுகிறீர்கள். எனக்கும் தெரியும் சிறிதர், வெலிங்டன் theatre ஞானம், அசோகா hotels மற்ற மற்ற முதலீடுகள்...உயர் பாதுகாப்பு வலையங்கள், uncleared areas .......

ஆனால் இதற்குள் தான் எங்கட உறவுகள் இன்னமும் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு உதவுவதில் உள்ள வழிகளை பார்ப்பதில் என்ன தயக்கம்...

மற்றது எல்லாருக்கும் என்னுடைய எழுத்து பிழைகளையும், கோவையற்ற தன்மையையும் பொறுத்து கொள்ளுமாறு வேண்டிகொள்ளுகிறேன்.

பிழம்பு நன்றி :)

இனி பதில் திங்கட்கிழமைதான்...நன்றி புதுவருட வாழ்த்துக்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே வொல்கனோ அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொண்டு, எனது கருத்தோடு இணைந்து ஆரோக்கியமான ஒரு விவாதத்தை முன்னெடுத்த யாழ்க்கள உறவுகளான ரதி, வொல்கனோ, நிழலி, புலவர், நுணாவிலான் ஆகியோருக்கு எனது நன்றிகள்.

உங்களுடையது, இப்போதுள்ள ஒரு பொருத்தமான வழி என்றே நானும் பார்க்கிறேன். என்னுடைய டியூஷன் sir சொன்னமாதிரி "அன்ன நடை நடக்க போய் தன்ர நடையும் கெடுத்த மாதிரி போகாமல்" , தனிப்பட்ட ரீதியில், அல்லது சிறு குழுவாக தொடங்கலாம். எங்கடை பேரே வேண்டாம்..புலம் பெயர்ந்த தமிழர் என்ற கதை.. அங்குள்ள எங்களுக்கு நம்பிக்கையான ஒருவரின் ஊடாக செய்யலாம். இப்ப ஒரு உழவு இயந்திரத்தை வாங்கிக்கொடுத்தால், ஒரு சின்ன ஊருக்கே காணும்.; இது போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவதோடு, எம்மையும் பலப்படுத்தும் வேலைகளையும் முன்னெடுக்க வேண்டும். கிராமத்துக்கு மூவராக இணைந்து இங்குள்ள தொண்டு நிறுவனங்கள் ஊடாகவேனும் இவற்றை நகர்த்தலாம்.

மீண்டும் இதுபோன்ற ஆரோக்கியமான கருத்துக்களோடு ஒன்றினைவோம். யாழ்கள உறவுகள் அனைவருக்கும் ஆங்கிலப் புதுவருட வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வல்கெனோ நீங்கள் பதில் வரைந்த விதம், என்னை மீண்டும் உங்கள் கட்டுரையை மீள்வாசிப்புக்கு உட்படுத்தியிருக்கிறது. இன்னொன்றையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதாவது அந்நிய முதலீடுகள் எங்களின் பிரதேசங்களின் வளங்களைச் சுரண்டுவதோடு மட்டுமல்லாமல் மக்களின் விடுதலை உணர்வையும் மழுங்கடிக்கும் ஒரு செயற்பாடாக மாறப் போகிறது. அதே நேரம் எதிர்காலத்தில் தமிழர் போராட்டம் இன்றையைப் போலல்லாது வேறு வடிவம் எடுக்குமானால் அக்குழப்பங்களைக் காரணம் காட்டி வளங்களைச் சுரண்டிய கையோடு அந்நிய முதலீடுகள் டாடா காட்டிவிட்டு பறந்துவிடும். அந்த அந்நிய சக்திகளின் முதலீடுகளுக்குள் தொழில் வாய்ப்புப் பெற்றவர்கள் அம்போ என்று விடப்படுவார்கள். இப்போதுள்ள நிலையில் வாழ்வளிக்கும் ஆதாரங்கள் போல் எம் மக்களுக்கு அந்நிய முதலீடுகள் மாயைகளை உருவாக்கத்தான் போகின்றன. தொடர்ந்து தாயகம் தொடர்பான மக்களின் எண்ணப்பாங்குகளை உடைத்தெறியும் நடவடிக்கைகளில் இவை பெரும்பங்கு வகிக்கப் போவதை யாராலும் தடுக்க முடியாது. அந்த வகையில் பார்க்கும் போது மிகுந்த சிக்கல்களையும், பாரிய பொருளாதார இழப்புகளையும் நாம் தொடர்நதும் சந்தித்தே ஆக வேண்டியவர்களாக உள்ளோம். ஒரு பக்கம் இராணுவ அடக்கமுறை காரணமாக வல்கெனோவின் சிந்தனையை எதிர்த்தாலும் இன்னொரு பக்கம் ஒரு நீண்ட கால நோக்கை கணக்கெடுக்க வேண்டிய தேவை உள்ளது. கட்டாயமாக அங்குள்ள மக்களுக்கான வாழ்வாதாரங்களை தோற்றுவிக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழருக்கும் இருக்கிறது. அதே நேரம் நொச்சியின் யோசனை என்பது மிகவும் ஆணித்தரமான பொருளாதார பலத்தைக் கொண்டதாக எம்மினத்தை உருவாக்க வழி வகுக்கும். வல்கெனோ குறிப்பிட்டது போன்று அங்குள்ள மக்களுக்கான தேவையையும், நொச்சி குறிப்பிட்டது போன்று தமிழினத்திற்கான பொருளாதாரப் பின்பலத்தையும் நிரவவேண்டிய தேவை இருக்கிறது. நொச்சியின் ஆலோசனைக்கு செயல்வடிவம் கொடுப்பது அநேகமாக வெற்றியைத் தரும். வல்கெனோவின் ஆலோசனை பொருட்சிதைவுகளையும் உயிராபத்துகளையும் கொண்டதான இன்னல் நிறைந்தாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

டில்கோ ஜஃப்னா சிட்டி ஹோட்டல்’

80 மில்லியன் ரூபா செலவில் யாழ். நகரில் சுற்றுலா ஹோட்டல்

(கே. அசோக்குமார்)

வடக்கில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் திட்டத்திற்கமைய யாழ். நகரில் 33 அறைகளைக் கொண்ட ‘டில்கோ ஜஃப்னா சிட்டி ஹொட்டேல்’ என்ற சுற்றுலா ஹோட்டல் 2010 ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ளதாக முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

சுமார் 80 மில்லியன் ரூபா முதலீட்டு டன் கட்டப்பட்டு வரும் இந்த ஹோட்டல் 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் திறக்கப்படவுள்ளதாக டில்கோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தவராஜா திலகராஜா தெரிவித்துள்ளதாகவும் தம்மிக்க பெரேரா தினகரனுக்குத் தெரி வித்தார்.

கடற்கரையையும், கடலேரி யையும் அண்டியுள்ள பகுதியில் சுமார் 340 பேர்ச்சஸ் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் டில்கோ ஜப்னா சிட்டி ஹோடேல் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர், வர்த்தக சமூகத்தினர் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் சகல வசதிகளையும் கொண்டதாக அமையவிருப்பதாகவும் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

இலங்கை முதலீட்டு சபையில் இதற்கான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்தானது. முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேராவும், டில்கோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தவராஜா திலகராஜாவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

வீரசிங்கம் மண்டபத்தை அண்மித்ததாக கட்டப்பட்டு வரும் ‘டில்கோ ஜப்னா சிட்டி ஹோட்டேல்’ திறக்கப்பட்டதும் மேலும் உல்லாசப் பயணத்துறை சார்ந்த ஹோட்டல்களுக்கான முதலீடுகள் செய்யப்படவுள்ளன என்றும் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்

http://www.thinakaran.lk/2009/12/31/_art.asp?fn=n0912315

  • கருத்துக்கள உறவுகள்

வல்கெனோ நீங்கள் பதில் வரைந்த விதம், என்னை மீண்டும் உங்கள் கட்டுரையை மீள்வாசிப்புக்கு உட்படுத்தியிருக்கிறது. இன்னொன்றையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதாவது அந்நிய முதலீடுகள் எங்களின் பிரதேசங்களின் வளங்களைச் சுரண்டுவதோடு மட்டுமல்லாமல் மக்களின் விடுதலை உணர்வையும் மழுங்கடிக்கும் ஒரு செயற்பாடாக மாறப் போகிறது. அதே நேரம் எதிர்காலத்தில் தமிழர் போராட்டம் இன்றையைப் போலல்லாது வேறு வடிவம் எடுக்குமானால் அக்குழப்பங்களைக் காரணம் காட்டி வளங்களைச் சுரண்டிய கையோடு அந்நிய முதலீடுகள் டாடா காட்டிவிட்டு பறந்துவிடும். அந்த அந்நிய சக்திகளின் முதலீடுகளுக்குள் தொழில் வாய்ப்புப் பெற்றவர்கள் அம்போ என்று விடப்படுவார்கள். இப்போதுள்ள நிலையில் வாழ்வளிக்கும் ஆதாரங்கள் போல் எம் மக்களுக்கு அந்நிய முதலீடுகள் மாயைகளை உருவாக்கத்தான் போகின்றன. தொடர்ந்து தாயகம் தொடர்பான மக்களின் எண்ணப்பாங்குகளை உடைத்தெறியும் நடவடிக்கைகளில் இவை பெரும்பங்கு வகிக்கப் போவதை யாராலும் தடுக்க முடியாது. அந்த வகையில் பார்க்கும் போது மிகுந்த சிக்கல்களையும், பாரிய பொருளாதார இழப்புகளையும் நாம் தொடர்நதும் சந்தித்தே ஆக வேண்டியவர்களாக உள்ளோம். ஒரு பக்கம் இராணுவ அடக்கமுறை காரணமாக வல்கெனோவின் சிந்தனையை எதிர்த்தாலும் இன்னொரு பக்கம் ஒரு நீண்ட கால நோக்கை கணக்கெடுக்க வேண்டிய தேவை உள்ளது. கட்டாயமாக அங்குள்ள மக்களுக்கான வாழ்வாதாரங்களை தோற்றுவிக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழருக்கும் இருக்கிறது. அதே நேரம் நொச்சியின் யோசனை என்பது மிகவும் ஆணித்தரமான பொருளாதார பலத்தைக் கொண்டதாக எம்மினத்தை உருவாக்க வழி வகுக்கும். வல்கெனோ குறிப்பிட்டது போன்று அங்குள்ள மக்களுக்கான தேவையையும், நொச்சி குறிப்பிட்டது போன்று தமிழினத்திற்கான பொருளாதாரப் பின்பலத்தையும் நிரவவேண்டிய தேவை இருக்கிறது. நொச்சியின் ஆலோசனைக்கு செயல்வடிவம் கொடுப்பது அநேகமாக வெற்றியைத் தரும். வல்கெனோவின் ஆலோசனை பொருட்சிதைவுகளையும் உயிராபத்துகளையும் கொண்டதான இன்னல் நிறைந்தாக இருக்கும்.

வல்வைசகாரா அவர்களது கருத்துக்கு நன்றி. உண்மையிலேயே இது தமிழினம் முன்னெடுக்க வேண்டியதொரு விடயமாகும்.

வைப்பகம் தொடர்பான மேலதிக கருத்தாடல்கள் தேவையென்ற உறவுகளோடு இணைந்து. தொடர்ந்து விவாதிக்கப்பட்டு, நாம் எமது இலக்கு நகர வேண்டியது அவசியமாகும். இதற்காகத் தனியாக ஒரு கட்டுரையை பதிவதூடாக மேலும் ஆரோக்கியமான கருத்தாடலை செய்வதும் செயலுருவாக்குவதும் காலத்தின் தேவையாகும்

யூதர்கள் போல தமிழர்கள் இல்லை என்பதையும் புரிந்து செயற்படவேண்டும்.

முதலில் யூதர்களை ஒருங்கிணைக்கவேண்டும். மிகப்பிரமாண்டமான வலையமைப்பு ஒன்றை அமைக்கவேண்டும், உலகில் யூதர்கள் எந்த மூலையில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரினதும் எண்ணங்கள் ஒரே புள்ளியை நோக்கித்தான் குவியவேண்டும். அந்தப்புள்ளிதான் யூதர்களின் பூமியாகிய பாலஸ்தீன். அதனை அடைய எத்தனை காலம்வேண்டுமானாலும், எத்தனை இழப்புக்களை சந்திக்கவேண்டுமானாலும் யூதர்கள் தயாராக இருக்கவேண்டும். சுருக்காகச்சொல்வதென்றால் ஜியோனிஸத்தின் அர்த்தம் கொள்கை நோக்கம் எல்லாம் இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்கள் போல தமிழர்கள் இல்லை என்பதையும் புரிந்து செயற்படவேண்டும்.

கிருபனவர்களே தங்களது கருத்து ஏற்புடையதே.

எல்லா முயற்சிகளும் எமது இருப்புக்கு அவசியமானது. எம்மை நாம் சுயவிமர்சனம் செய்வதும். எம்மிடையே ஒன்றிணைவை உருவாக்குவதும் எமது கடமையாகட்டும். நாம் ஏன் ஒன்றிணைவில் யூதராக முடியாதா?

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஏன் ஒன்றிணைவில் யூதராக முடியாதா?

யூதர்களை ஒன்றிணைத்தது மதம். யூத மதம்தான் அவர்களை ஒருங்கிணைத்த புள்ளி. தமிழர்களுக்கு ஒருங்கிணைக்க புதிதாக ஒன்றைத்தான் கண்டுபிடிக்கவேண்டும். ஏனெனில் தமிழர்கள் ஊர், சாதி, பிரதேசம், மதம் எனப் பலவாக பிரிந்து செயற்படுபவர்கள். பத்து தமிழர்களிடம் பதினைந்து வித்தியாசமான கருத்துக்கள் இருக்கும். தாம் எப்போதுமே சரி என்ற தன்னியல்புவாதத்துக்கள் அமிழ்ந்துள்ளவர்கள். இப்படியான சிக்கல்கள் உள்ள மக்களை தலைவர் பிரபாகரன் போன்ற ஒருவரால்தான் பல வருடங்களுக்கேனும் ஒன்றிணைத்து செயற்படவைக்க முடிந்தது. இனி நடக்குமா தெரியாது!

  • கருத்துக்கள உறவுகள்

Volcano,உங்கள் கருத்துக்கள் நம்மை நாம் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

எந்த மக்களின் விடுதலையும் நிம்மதியும் வேண்டுமென்று போர்க்கொடி தூக்குகிறோமோ தூக்கினோமோ அந்த மக்களும் மண்ணும் இன்று அன்னியனின் எல்லா இழுவைக்கும் ஒத்துப்போகும் மனநிலையில் நிற்கிறார்கள். யதார்த்தங்கள் பேசப்படுவது தேசவிடுதலையை மறுக்கும் செயல் என்பது போன்ற சிந்தனைச் சண்டியர்கள் யாரும் அந்த மண்ணில் வாழவும் போகார் அவர்களுக்காக சாகவும் போகார். வாயால் விடுதலையின் பொருளும் வீரமும் பேசிக்கொல்லவே இப்போதும் தயாராயுள்ளார்கள்.

அடிப்படைத் தேவைகள் அந்த மக்களுக்கு இப்போதைய அவசிய தேவைகள். போரின் வடுவை எழுத்தால் செய்தியாய் பார்த்தலுக்கும் அதையே அனுபவித்தவருக்கும் நிறைய வேறுபாடு உண்டு. போரின் வடுவும் அந்த வாழ்வும் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர யாராலும் உணர்ந்து கொள்ள முடியாதவை.

நொச்சியின் சிந்தனை கட்டாயம் நம் எல்லாராலும் சிந்திக்க வேண்டியவை. எங்களுக்கான ஒரு பொருளாதாரக்கட்டமைப்புக்கான வழியைச் சொல்லும் நொச்சியின் சிந்தனையை செயற்படுத்த முன்வருதல் கூட எங்கள் அடுத்தபடிக்கு முதல் அடியாகும்.

யாரும் கவலைப்படமாட்டார்கள் என்பதால்தான், போராளிகள் அவர்கள் குடும்பங்களைக்கூட (சாதாரண மக்களை விடுங்கள்) கையறுநிலையில் விட்டுள்ளனர்.

சாபம்பெற்றவர்களாக அவர்கள் வாழட்டும் அல்லது மானத்துடன் சாவென்று புலத்துப்புண்ணியங்கள் எழுதிய விதியை அவர்கள் அனுபவிக்கத்தானே வேண்டும்.

ரதிஇ உங்கள் கேள்விகளுக்கான பதில்களை வல்கனோவிற்கும்இ பிரிதொரு சந்தர்ப்பத்தில் நீங்கள் கேள்வி கேட்ட சுகனுக்கும் தெரியும். ஆனால் அப்பதில்களை அவர்களால் தத்தம் பதிவுகளுக்குக் கீழ் எழுத முடியாது காரணம் அவர்களின் பதில்கள் அவர்கள் இணைத்திருக்கும் கட்டுரை வடிவங்களின் கருப் பொருட்களையே காற்றுப்போன டயர்போல் ஆக்கிவிடும். தமிழினத்தின் வாழ்வு என்பது அவர்களின் பாரம்பரிய நிலங்களிலேயே பாதுகாப்பற்றதாகவும் கேள்விக்குரியாகவும் இருக்கும்வேளையில் அவ்விடங்களில் புலம்பெயர் தமிழர்கள் தம் பொருளாதார மூலதனங்களை முடக்குவது அழிக்கப்படும் என்று தெரிந்து கொண்டே அழிவிற்கு தன்னை உட்படுத்தி மென்மேலும் பொருளாதார அகதியாகவும்இ மீள எழ முடியாத முடக்கபட்ட இனமாகவும் தன்னை ஒப்புக் கொடுக்கும் செயலே. இதுவரை காலமும் சிங்கள அரசும்இ அதன் ஆட்சியாளர்களும் தமிழ் மக்களுக்கான நன்மையாக எதனைச் செய்துள்ளார்கள்? இனிமேலும் எத்தகைய நன்மைகள் தமிழ் மக்களுக்கு சிங்கள இனவாதப் பெரும்பான்மையினரிடம் இருந்து கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் முதலீடுகளைச் செய்ய முடியும்?

சரியாகச் சொன்னீர்கள் சகாரா அது அவர்களூக்கு தெரிந்து கொண்டே புலம் பெயர் மக்கள் ஈழத்தில் முதலீடு செய் எனச் சொல்வது சிங்களவனுக்கு கொட்டி கொடுப்பதற்கோ தெரியவில்லை.

நொச்சி உங்களது பதிலும் செயல் திட்டமும்ஜதமிழர் வைப்புலக திட்டம்ஸ அருமை.அதை செயற்படுத்த முயற்சி எடுங்கள்.

புலம்பெயர் சமூகத்திற்கும் அவர்களது தாயகத்துக்குமான தொடர்பு வலுப்பெற வேண்டிய ஒரு கோணத்திலே தான் தாயகத்தில் முதலீடு குறித்த கருத்துக்கள் அமைகின்றது. நாம் சிங்களவர்களுக்குக் கொட்டிக்கொடுப்பதற்கு பின்னடிப்பதால் சிங்களவர்களுக்கான எந்தக் கதவும் முடப்படுவதில்லை மாறகா எமக்கும் தாயகத்துக்குமான கதவுகள் தான் மூடப்படுகின்றன. இந்தியர்களும் சீனர்களும் எதிர்பார்ப்புகளுக்கு அதிகமாக போட்டி போட்டு முதலீடுகளை செய்துகொண்டிருக்கின்றனர். எமது தாயகத்தில் தென்னிலங்கை வர்த்தகர்களும் முதலீடுகளை செய்து கொண்டிருக்கின்றனர். எஞ்சிய எமது மக்கள் நுகர்வோர்களாக மட்டும் மாறிக்கொண்டிருக்கின்றனர். எமது முதலீடுகள் என்பது எஞ்சிய எமது மக்களை வலுவுள்ளவர்களா தக்கவைப்பதாகும். எமக்கும் தாயகத்துக்கும் தாயக மக்களிற்குமான இணைப்பை வலுவாக ஏற்படுத்துவதாகும்.

நாம் புலிகள் காலத்து சிந்தனைக்குள்ளாகவும் அதே பணியிலான தேசியவாதத்துக்குள்ளாகவும் இருக்கின்றோம். அந்தக்காலம் அழிந்தபின்னும் அதிலிருந்து வெளிவரவோ மாற்று அணுகுமுறைகளை கையாளவோ முயலவில்லை. இப்போதும் புறக்கணிப்பு என்ற பலவீனமான சிந்தனைக்குள் முடங்கிக் கிடக்கின்றோம். இந்த நிலை புலம்பெயர் மக்களுக்கும் தாயகத்துக்குமான இடைவெளியை பன்மடங்கு அதிகரிக்கின்றது. ஒரு எல்லையை தாண்டி இது செல்லுமாக இருந்தால் புலம்பெயர் சமூகத்தால் தாயகத்துக்காக ஒரு துரும்பைக் கூட செய்யமுடியாத நிலை ஏற்படும்.

தாயகம் மீதான ஆசையை மட்டும் வைத்து எதையும் சாதிக்க முடியாது. தாயகம் எமது தேவைகளுடன் சம்மந்தப்பட வேண்டும். பெரும்பான்மையான புலப்பெயர்வு என்பது பொருளாதார தேவைகள் சார்ந்தே அமைந்தது. பொருளாதரம் என்ற தேவை சார்ந்து தாயத்தை துறந்தவர்கள். மீள அதன் மீதான பற்று என்பது ஆசை சார்ந்தது. தாயகத்தில் வாழும் மக்களுக்கு தாயகம் தேவைசார்ந்தது. அவர்களைப் பலப்படுத்தி அவர்கள் ஆதராங்களை ஸ்திரப்படுத்தி எமக்கும் அவர்களுக்குமான உறவை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதன் ஊடகவே எமது தாயகத்துடன் நாம் தொடர்பில் இருப்போம். தற்போது முனைக்கப்படும் புலம்பெயர் தேசியவாத முயற்சிகளான வாக்கெடுப்புகள் அரசு அமைத்தல் வங்கி அமைத்தல் என்பன தாயக மக்களின் விருப்பு வெறுப்புடன் சம்மந்தப்படாத புலம்பெயர் சமூகத்தின் முனைவு. இது எம்மை நாமே ஏமாற்றுவது

தாயகத்தில் புலிகள் பலமாக இருந்த போது அவர்களுக்கு தோழ்கொடுத்தது ஒரு காலம். இப்போது தாயக மக்களுக்கு தோழ்கொடுக்க வேண்டும் தாயக மக்கள் தற்போது விருப்புவெறுப்புக்கு அப்பாற்பட்டு சிங்களவர்களுடன் இணைந்து வாழும் சூழலில் உள்ளனர் இதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு தோழ்கொடுக்க வேண்டும். அது தான் நேர்மையான வழி. புலம்பெயர் தேசியம் இவ்வாறான சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு தான்தோன்றித் தனமாக நகரத்தொடங்கிவிட்டது.பிரச்சனை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமானதாக மாறுகின்றது. இது அனைத்து இனம்களும் சேர்நத இலங்கையர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குமான பிரச்சனையாக இறுதியில் முடியும்.

முடிந்தால் இங்கு எழுதும் சிலர் ஈ.பீ.டி.பி இணையபக்கத்திற்கு போய் காரைநகர் சிவன் கோவில்திருவிழாவில் எடுத்த சில படங்களை பார்க்கவும்.எங்களுக்கு பிடிக்காத சைட் ஆனாலும்(மாற்றான் தோட்டத்து மல்லிகை) அந்த படங்களில் இருக்கும் மக்களின் முகமலர்சி கண்டு பெரிதும் சந்தோசமாக இருந்தது.அங்கிருப்பவர்களுக்கு இப்போதைய தேவை மூச்சுவிட கொஞ்சக் காற்று மட்டுமே. (சுதந்திரக்காற்று அதி வெளிநாட்டில் வீசட்டும்).

83 கலவரத்துடன் இந்தியா வந்த அகதிகள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.எனக்கு அவர்களில் பெருங்கோபம் இயக்கங்களில் சேர்ந்து நாட்டுக்காக போராடாமல் இந்த குத்தியன்களெல்லாம் அகதிக்காம்புகளுக்க வந்து படுத்துக்கிடக்கின்றாங்களே என்று.அப்போது அவர்களுக்கு பிரச்சனை ஒழுங்கான இடம் இருக்க இல்லையென்று.பின்னர் தான் யோசித்தேன் உயிரை கையைப் பிடித்துக்கொண்டு இருந்த உடைமைகளையெல்லாம் விட்டு இந்த கடலைக் கடந்து பெரும் அழிவுடன் வந்தவர்கள் முதலில் நிம்மதியாக படுப்பதற்கொரு இடம் தான் தேடினார்கள். சென்னையில் இருந்து கொண்டு அவர்களை போய் "போராடாமல் ஏன் இங்கு அகதிகளாய் வந்தீர்கள்" என்று கேட்க நாம் யாரென்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.