Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகத்தார் வீடு

Featured Replies

முகத்தார் அங்கிள் இந்த தொடரும் அருமையாக இருக்கு ...எல்லா பகுதியிலும் நல்ல நகைச்சுவையா எழுதி எல்லாரையும் நல்லா சிரிக்க வைத்தீங்க.. இப்ப நீங்க ஊருக்கு போற எண்டு சொன்னோன்ன ஏதோ மாதிரி இருக்கு... சரி நீங்க ஊருக்கு போய்ற்று அங்க இருந்து யாழ் இணையத்துக்கு வருவீங்க, எங்களுடன் கதைப்பீங்க என்ற நம்பிக்கை இருக்கு.. போய்ற்று வாங்க முகத்தார் அங்கிள்....

  • Replies 428
  • Views 38.4k
  • Created
  • Last Reply

இன்றுதான் நுளைந்தேன் இப்பகுதிக்கு... :lol:

உங்கள் கருத்து (அதாவது வாசிக்கவில்லை....) நான் அறியேன்... எனது கருத்து நீர் அறிகிறாயா.. நண்பனே.. உனது சுமை இறங்கி இருக்கலாம்... இருந்தால்....இப்போ.. சென்றுவா... மீண்டும் நாம் சந்திப்போம்... நான் அறிவேன் நீர் அறியாவிட்டாலும்........ :idea: :|

(உளவு செய்வார்கள் எல்லாரும்... என்னை.. ஆனால் உண்மை விளங்கலாம் இப்போ உணக்கு..... அல்லது.. போக போக...விளங்கும்...) :lol: :idea:

(ஆக்களின்...கருத்துக்கள் தொகையை எண்ணாதே அது அல்ல... கருத்து... யதார்த்தம்........) :) :idea:

முகம் தொடர் நல்லா இருக்கு. சரி ஊருக்கு போட்டும் வருவீங்கள் தானே? சரி மீண்டும் சந்திப்பம்

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

நகைச்சுவையென்றாலும் நசுூக்காக சில சமுதாய தவறுகளைச் சுட்டிக்காட்டும் பாங்கும் எவர் கருத்தென்றாலும் உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை இப்படி எவ்வளவோ உங்களைப் பற்றி சொல்லலாம். அப்படியான நீங்கள் இப்படித் திடீரென்று விடைபெறுவது சங்கடமாகத் தான் உள்ளது. நீங்கள் என்றும் உங்கள் குடும்பத்தாருடன் சந்தோசமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். முடிந்தால் ஊரிலிருந்து எங்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள்.

அங்கிள் உங்கள் இந்த பகுதியை எங்களால் ரசிக்க முடியலை. நீங்கள் ஊருக்கு போனாலும் இதே பாணியில் வந்து எங்களுக்கு நகைச்சுவையுடன் கூடிய நல்ல கருத்துக்களையும் தருவீர்கள் என்று நம்புகின்றோம். :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா அழுகின்றீர்கள். எங்கு போனாலும் முகத்தார் எம்மோடு தானே இருப்பார்!! அவரின் பயணம் நல்ல முறையில் அமைய வாழ்த்துகின்றேன்.

எங்கு சென்றாலும் இனிமையாக களத்தில் வரவேண்டும். அவ்வாறே முகத்தார் நான் நக்காலாக கதைத்தது எதுவும் மனதைப் பாதித்திருந்தால் மன்னத்துக் கொள்ளுங்கள்!!

  • தொடங்கியவர்

இதுவரையும் ஆக்கமும் ஊக்கமும் தந்த உறவுகளுக்கு நன்றிகள்

:cry:  :cry:  :cry:  :cry:  :cry:  :cry:  :cry:  :cry:

சின்னப்பு நீ அழுகிறியோ ஆனந்த கண்ணீர் விடுகிறியோ தெரியவில்லை ........அழுகிறதாகவே எடுத்துக் கொள்ளுறன்

sinnappu wrote:

:lol::lol::lol::lol::(:(:(:(

MUGATHTHAR wrote:

சின்னப்பு நீ அழுகிறியோ ஆனந்த கண்ணீர் விடுகிறியோ தெரியவில்லை ........அழுகிறதாகவே எடுத்துக் கொள்ளுறன்

சின்னப்பு அழுவது சேர்ந்தடிச்சு சியர்ஸ் சொல்ல ஆள் குறையுதெண்டு.

முகத்தார் தாத்தாவின் வீட்டுக்கு வந்தேன். ஆனால் தாத்தா ஊருக்கு போனதாக சொன்னார்கள். :cry: :cry: :cry:

இப்போ தாத்தாவைகண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. தாத்தா நலமா?

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் தாத்தாவின் வீட்டுக்கு வந்தேன். ஆனால் தாத்தா ஊருக்கு போனதாக சொன்னார்கள்.  :cry:  :cry:  :cry:  

இப்போ தாத்தாவைகண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. தாத்தா நலமா?

வீட்டிற்கா போனீர்கள்!! அவர் எப்ப தான் வீட்டில் இருந்திருக்கின்றார்!

சரி!

உங்களிடம் தந்த பணத்தை வாங்குவதற்காகத் தான் காத்துக் கொண்டிருகின்றார். விரைவில் கொடுத்து விடுங்களேன்!!

வீட்டிற்கா போனீர்கள்!! அவர் எப்ப தான் வீட்டில் இருந்திருக்கின்றார்!

சரி!

உங்களிடம் தந்த பணத்தை வாங்குவதற்காகத் தான் காத்துக் கொண்டிருகின்றார். விரைவில் கொடுத்து விடுங்களேன்!!

அட பாவி தூயாண்ணா உங்ககிட்ட தானே தந்துவிட்டேன் தாத்தாட்டை கொடுக்க சொல்லி. இன்னுமா கொடுக்கல்லை. :evil: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களிடம் தந்த பணத்தை வாங்குவதற்காகத் தான் காத்துக் கொண்டிருகின்றார். விரைவில் கொடுத்து விடுங்களேன்!!

யாரங்கே.. தூய்ஸ் போற இடம் எல்லாம் பணம் பணம் என்று கதைககிறார்.. பனை மரத்தில் ஆளை கட்டி வையுங்கள். :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

யாரங்கே.. தூய்ஸ் போற இடம் எல்லாம் பணம் பணம் என்று கதைககிறார்.. பனை மரத்தில் ஆளை கட்டி வையுங்கள். :wink: :P

றோயல் பமிலிக்கு எதிராக சதி!!

முதலில் தூயவனை மடக்குவதற்கு திட்டம்!!!

என்று எல்லாம் பரபரப்பு செய்தி போட்டு, மன்னர் குடும்பத்தை ஒரு வழி பண்ணி விடுவேன். ஆமா!!! :evil: :evil:

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் திருகோணமலையில் நடந்த அசம்பாவிதங்களின் பின்னர் திருகோணமலையில் இருக்கும் எங்கள் முகத்தாருடன் யாழ் அரட்டை அறையில் சிறிது நேரம் உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது அப்போ முகத்தார் அங்குள்ள நிலைமைகள் பற்றி சொன்ன தகவல்களை வைத்து எனது கற்பனையை தட்டி விட்டேன்

[size=18]முகத்தார் வீடு 20

திருகாணமாலை பக்கம் பிரச்சனையெண்டு செய்திகளிலை சொல்லுறாங்கள் ஒருக்கா உவன் முகத்தானுக்கு போன் பண்ணி பாப்பம் அவன் அங்கை தானே இருக்கிறான் ஏதாவது பிரச்சனையோ தெரியெல்லை அவனுக்கு என்று நினைத்த படி முகத்தாரின் தொலை பேசி இலக்கத்தை அமத்தினன்

சாத்திரி். டேய் முகத்தான் எப்பிடி இருக்கிறாயடா ஏதோ திருகோணமலை பக்கம் பிரச்சனையெண்டு கேள்விப்பட்டன் உன்ரை பக்கம் எப்பிடியடா பிரச்சனை இல்லையோ

முகத்தான். அட சாத்திரி நான் நல்லா இருக்கிறன் இங்கை கொஞ்சம் குழப்பம்தான் உந்த சிங்களவரக்கு பழையபடி கொளுப்பு வைச்சிட்டுது

சாத்திரி. டேய் சத்தமா கதையடா ஒண்டும் வடிவா விழங்கேல்லை ஏதோ கறார் கறார் எண்டு தேக்கிற சத்தம் கேக்கிது

முகத்தார். ஒ அது என்ரை மனிசி பொன்னம்மா வாள் தீட்டுறாள் அததான் அந்த சத்தம் பொறு நிப்பாட்ட சொல்லுறன்.

சாத்திரி. எடேய் உன்ரை நிலைமை இவ்வளவு மோசமா போச்சுதா ரெலிபோனை போட்டிட்டு எங்கையாவது ஓடிப்போய் ஒழியடா முதல்லை

முகத்தார். அட விசரா மனிசி வாள் தீட்டுறது என்னை வெட்டிறதுக்கு இல்லையடா உந்த சிங்கள காடையளை வெட்டிறதுக்கு

சாத்திரி.சிங்கள காடையளா ? விழக்கமா சொல்லடா

முகத்தார். ஓமடா உந்த யெ வி பி காரங்களும் கொஞ்ச சிங்கள காடையரும் சேந்து இப்ப கொஞ்ச நாளா தனிய அம்பிடுற தமிழரை வெட்டுறாங்கள் என்ரை வீட்டுக்கு பக்கத்திலை உள்ள ஒரு தமிழ் ஆளையும் வெட்டி போட்டாங்கள். எங்கடை பாதுகாப்பை நாங்களும் தானே பாக்கவேணும்.எங்களை காப்பாத்தவும் எல்லாத்துக்கும் இயக்க பெடியள்தான் வரவேணுமெண்டு எல்லாரும் பாத்து கொண்டு இருக்க ஏலாதுதானே

சாத்திரி. அட நாசமா போக அதுக்கு என்னடா செய்ய போறாய் வயசான காலத்திலை பேசாமல் பிள்ளை குட்டியளோடை வெளி நாட்டுக்கு வந்து இருக்கிறதை விட்டிட்டு

முகத்தார். டேய் டேய் விசரை கிளப்பாதை உப்பிடியெ நாங்கள் ஓடி ஓடித்தான் இண்டைக்கு திரு கோணமலையிலை முக்கால் வாசி சிங்களவன் குடியேறிட்டான்.இனியும் ஒடஏலாது மனிசி சொல்லிட்டுது அப்பா நீங்கள் செத்தாலும் கவலையில்லை இரண்டு சிங்களவனை சீவிபோட்டுதான் சாக வெணுமெண்டு இதக்கு பிறகும் எனக்கு ரோசம் வராட்டி நான் ஆம்பிளை இல்லை

சாத்திரி. எட அதுக்கு மனிசி ஏத்தி விடுதெண்டிட்டு வெட்டு வாங்கி சாக பொறியோ

முகத்தார்.எடேய் என்னை பற்றி உனக்கு வடிவா தெரியாது அந்த காலத்திலை ஒற்றை குளாய் துவக்கோடை வேட்டைக்கு போனன் எண்டால் ஒரு வெடியிலை இரண்டு மான் விழுத்தி தோழிலை போட்டு கொண்டு வாறனான்

சாத்திரி் . கொஞ்சம் பொறு என்னது ஒரு வெடியிலை இரண்டு மானோ எப்பிடி நீ வெடி வைக்கபோறாயெண்டு மான் வந்து வரிசையிலை நிண்டதோ??

முகத்தார் . டேய் பொய்சாத்திரம் சொல்லுற உனக்கு அதுகளை பற்றி தெரியாதடா கதையை விடு

சாத்திரி . ம் நான் பொய் சாத்திரம் தான் சொல்லுறன் அனால் ஒண்டு மட்டும் விழங்கிது அந்த நேரம் நீ மான் வெடிவைசு விழுத்தினியோ இல்லையொ தெரியாது அனால் உன்ரை வெடியிலை பொன்னம்மாக்கா விழுந்திட்டா எண்ணடது மட்டும் தெரியிது சரி எனக்கு வேலை நான் ஆறுதலா உனக்கு போன் அடிக்கிறன் நீ போய் வாளை தீட்டு

நகைச்சுவையாய் சொன்னாலும் ஒவ்வொரு தமிழனுக்கும் உறைக்கிற மாதிரி சொல்லி இருக்கிறீங்கள். வாழ்த்துக்கள். அப்படியே அடுத்த முறை போன் எடுக்கும் போது எத்தனை பேரை முகம் வெட்டினவர் என்று கேட்டு சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

முகம்ஸ் எப்படி உமக்குள்ள இப்படி ஒரு வீரம் பதுங்கிக் கொண்டிருந்தது!! இதை பொன்னமாக்காவிடம் கொஞ்சம் திருப்பி விடலாமே! :wink: 8)

சாத்திரி உங்கள் கற்பனை குதிரை நன்றாக தான் வேலை செய்கின்றது.

பொன்னம்மாக்கா வாள் தீட்டி வைத்திருப்பது நல்லதாக படலை. ஏதுக்கும் அங்கிள் கொஞ்சம் உசராக இருங்கோ....

  • 6 years later...
  • கருத்துக்கள உறவுகள்

2005 ஆம் ஆண்டுகளில் முகத்தார் அண்ணாவும் சாத்திரி அண்ணாவும் இணைந்து கலக்கோ கலக்கு என்று கலக்கிய இந்த பகுதியை மீண்டும் வாசிக்க எதோ எமது பாடசாலை பருவம் நினைவில் வந்து போவது போல யாழின் அன்றையை காலங்களும் நெஞ்சோடு வந்து செல்கின்றது.....அதில் எழுதிய பல உறவுகள் இப்பொழுது எழுதுவதில்லை என்றாலும் கூட சிலர் இன்று வரை யாளோடு இணைந்து இருகின்றார்கள் என்பது ஆறுதலை தருகின்றது..... வசம்பு அண்ணா இந்த உலகை விட்டு சென்று விட்டாலும் அவருடைய எழுத்துக்கள் இன்னும் யாழில் அவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது, பழைய நிகழ்வுகளை எல்லாம் தேர்ந்தெடுத்து யாழ் களத்தில் இணைக்கும் நிர்வாகத்திற்கு நன்றிகள்

2005 ல் நான் இந்தக் கதையை யாழ் இணையத்தில் ஒரு வாசகனாக வாசித்தபொழுது ஒரு பல்சுவைக் கதம்பமாகவே எடுத்தேன் . அரசியல் வெடிகளும் சின்னப்பு , முகத்தார் , சாத்திரி கூட்டணி யாழ்இணைய வரலாற்றில் ஒரு மைல்கல் . எனக்கு அன்றே தமிழில் எழுத மென்பொருள் கிடைத்திருந்தால் எவ்வளவு அற்புதமானவர்களுடன் களமாடியிருப்பேன் . அதை நினைத்து இப்பொழுதும் கவலைப்பட்டதுண்டு  . அதை மீண்டும் புதியவர்களுக்கு உலாவவிட்ட நியானிக்கு ஒரு ஓ.................

  • கருத்துக்கள உறவுகள்

அது  ஒரு கனாக்காலம்  எண்டுதான் சொல்லலாம். இப்பவெல்லாம்  இப்படி  பலர் இணைந்து  நகைச்சுவையோடை  ஒரு  சமூக  பிரச்னை கருத்தை எழுத  முடியுமா என்பது சந்தேகம்  அப்படி எழுதினாலும்.அதற்குள் ஒருவர் புகுந்து    அதனை திசை  திருப்பி வெட்டு குத்தாகி  திரியை பூட்டிவிட்ட பிறகு  ஒற்றுமை இல்லை   சிலர்  குழுசேர்கிறார்கள்  என்று பிரித்தவர்களே  ஒற்றுமை பற்றி எழுதிக்கொண்டிருப்பார்கள்.  முகத்தார்  சின்னா  இப்பவும் யாழ் படிக்கிறார்கள்  என்பது தெரியும் ஆனால் எழுதுவது இல்லை.அதே நேரம் நானும்  யாழை விட்டு  அன்னியமாகிக் கொண்டிருக்கிறேன் 

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள முகத்தார் வீடு.. கலகலப்பு..!

 

என்ன அன்றிருந்த ஒற்றுமையும் நட்பும் இன்றில்லை..! ஆட்களும் அவர் குணங்களும்.. மாறிவிட்டன... ஆனால் யாழில் படைத்த படைப்புக்களின் சுவை..  மாறவில்லை..!

 

எங்கிருந்தாலும்.. இப்படி ஒரு சிரஞ்சீவியான நகைச்சுவைப் படைப்பை.. தந்தருளிய உங்களுக்கு... வாழ்த்துக்கள் முகத்தார்..! :)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காலை ஏழு மணிக்கு வாசிக்கத்தொடங்கி, ஒரே மூச்சில் அனைத்தையும் படித்து முடித்துவிட்டுத்தான் மற்ற அலுவலக வேலையை கவனித்தேன். ஈழத்தமிழின் சில சொற்கள் எனக்கு புரியாவிடினும், மிக அருமையாக  ஒவ்வொரு பாகத்திலும், சமூக செய்தியை நகைச்சுவையுடன் குழைத்து, மெருக்கேற்றி கொடுத்துள்ளனர். முகத்தாரின் எழுத்து நடையும், சம்பவங்களின் விபரிப்பும், நான் சில வருடங்களுக்கு முன் வாசித்த ஈழத்து நாவலான "முற்றத்து ஒற்றைப் பனை"யை ஞாபகமூட்டின. முகத்தாரின் பாத்திரம் 'கொக்கர்' மாரி முத்தரையும், பொண்ணம்மா, 'பொன்னு ஆச்சி'யையும் நினைவூட்டினர்.

 

வாழ்க்கையே இணையத்திலும், கைத்தொலைபேசியிலும் கழியும் இக்காலத்தில், ஏழு வருடங்களுக்கு முன் பதிந்த இத்திரி, வாசிப்போரை வசீகரித்து ஒருநிலை நிறுத்தி, முழுவதும் கட்டிப்போடுவதென்பதின் வெற்றி, முகத்தாரின் 'எழுத்தாற்றல் ஆளுமை'யைச் சாரும்.  சாத்திரியின் பங்கும், கலகலப்பை இன்னும் மெருகூட்டின.

மிக்க நன்றியும், பாராட்டுக்களும் முகத்தார் & சாத்திரி.

மிக சுவாரசியமான பழைய திரியை, மறுபடியும் உயிர்ப்பித்து, பார்வையாளர்களின் கவனத்திற்கு கொணர்ந்தவர்களுக்கும் நன்றி.

 

.

Edited by ராஜவன்னியன்

அது  ஒரு கனாக்காலம்  எண்டுதான் சொல்லலாம். இப்பவெல்லாம்  இப்படி  பலர் இணைந்து  நகைச்சுவையோடை  ஒரு  சமூக  பிரச்னை கருத்தை எழுத  முடியுமா என்பது சந்தேகம்  அப்படி எழுதினாலும்.அதற்குள் ஒருவர் புகுந்து    அதனை திசை  திருப்பி வெட்டு குத்தாகி  திரியை பூட்டிவிட்ட பிறகு  ஒற்றுமை இல்லை   சிலர்  குழுசேர்கிறார்கள்  என்று பிரித்தவர்களே  ஒற்றுமை பற்றி எழுதிக்கொண்டிருப்பார்கள். 

  

உங்கள் ஆதங்கம் நியாயமானது.

 

 

நல்லதொரு திரி ஆறுதலாக பார்க்கனும்

  • கருத்துக்கள உறவுகள்

முழுவதும் படித்துமுடித்து முடித்தேன்...முகவும் கலகலப்பாகவும் இனிமையாகவும் இருந்தது..இப்படியான கலகலப்பான ஆக்கம்கள் மட்டும்தான் இப்பொழுதெல்லாம் யாழில் எழுதவிருப்பம்...

 

 

 முகத்தார்  சின்னா  இப்பவும் யாழ் படிக்கிறார்கள்  என்பது தெரியும் ஆனால் எழுதுவது இல்லை.அதே நேரம் நானும்  யாழை விட்டு  அன்னியமாகிக் கொண்டிருக்கிறேன் 

 

 

உங்களைப்போலவே எனது மன நிலையும் இருக்கிறது...ஏன் எப்படி என்று தெரியவில்லை..ஆனால் மெதுமெதுவாக யாழில் கிடைத்த அனுபவங்கள் இருந்துதான் இப்படி மனநிலை மெதுமெதுவாக மாறி இருக்கலாம்...இப்பொழுதெல்லாம் வேலையால் வந்த களைப்பில் கலகலஎன்று உறவுகளுடன் உரையாடினோமாம்..எல்லோருடனும் சிரித்துபேசி சில திரிகளில் கலகலப்பாக ஏதாவது எழுதிவிட்டு போவதுதான் நிறைவாக இருக்கிறது..சீரியசாக ஆக்கம்கள் எழுதி யாழில் இணைக்கும் மனநிலை எல்லாம் போய்விட்டது...கருத்துக்கள் என்றபேரில் யாருடனும் முரண்படவோ யாரையும் புண்படுத்தவோ விருப்பம் இல்லை...முகப்புத்தகம் போலவே இங்கும் வந்து உறவுகளுடன் வேலைக்களைப்பையும் இந்த வெளிநாட்டு வாழ்வின் தனிமையையும் போக்க சந்தோசமாக உரையாடிவிட்டு போவது நிறைவாக இருக்கிறது...காலப்போக்கில் இதுகூட இல்லாமல் போகலாம்...தூரவிலகல் என்பது மெதுமெதுவாக நிகழ்கிறது..எம்மையே அறியாமல் இங்கு கிடைக்கும் ஒவ்வொரு அனுபவங்களும் எட்டக்கொண்டுபோகிறது..இப்படித்தான் பல உறவுகளும் மெதுமெதுவாக விலகி இருக்கலாம் எண்டு நினைக்கிறேன்..இருக்கலாம்...இல்லாமலும் விடலாம்...
 
(பி:கு இது எனது மனநிலை மட்டும்தான்...யாழில் நாமெல்லாம் ஒரு சின்ன புள்ளிதான்..பல உறவுகள் வருவார்கள் போவார்கள்..இப்பொழுதெல்லாம் அற்புதமாக எழுதும் உறவுகள் பலர் யாழில் இணைந்திருக்கிறார்கள் ..பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது..)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.