Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

A Jaffna Wife's Poem

Featured Replies

jaffnawife.jpg
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா நல்ல கவிதை...கடைசி ஜந்து வரியும் நச்சென்று இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு குறைபட்டுக் கொள்ளும் யாழ்ப்பாண மனைவி மாப்பிளையின்ர அம்மா செய்யாத ஒரு முக்கிய வேலையையும் செய்து குடுத்திருப்பாதானே..! ஏன் அதை முதலில கட் பண்ணத் தெரியேல்ல? :(

  • கருத்துக்கள உறவுகள்

சரியான் அம்மா புராணம் ஆக இருப்பார் போல...........நல்ல கவிதை..

  • கருத்துக்கள உறவுகள்

சரியான அம்மா புராணம் ஆக இருப்பார் போல...........நல்ல கவிதை..

பெண் பிள்ளைகள் தமது தாய் செய்தவற்றை செய்வதில்லையா..??! சொல்வதில்லையா..??! அவர்கள் தமது தாயை போற்றுவதில்லையா..??!

ஒரு ஆணிற்கு அவனின் தாய் அவனுக்குச் செய்தவற்றை நினைவு கூறவுமா உரிமை இல்லை..??!

எல்லா அம்மாமாரும் பிள்ளைகளை அடிப்பதில்லை. இது யாழ்ப்பாணத்தில்.. எந்த பனங்கூடலுக்குள் இருந்து வந்த பெண்..???! :(

ஏனிப்படி சுயநலமே உருவானவர்களாக இருக்கிறார்கள் இந்தப் பெண் பிரசுகள்..??! திருமணம் ஆக முன்னர் இவர்களும் ஒரு தாயின் பிள்ளைகள் தானே..???!

இது தாய் புராணம் அல்ல. தாயை அவன் உதாரணமாக்கிக் காட்டிக் கொள்கிறான். காரணம் அவன் தாயின் அன்பை இவளிடமும் எதிர்பார்ப்பதால் இருக்கும்.

ஆனால் அதையெல்லாம் புரிந்து கொள்ளக் கூடிய மனநிலை இருக்குமா இவர்களிடம்...???!

இந்தக் கவிதையில் யாழ்ப்பாண மனைவியின் கணவன் பற்றிய எண்ணங்களைச் சொன்னவர்கள்..

யாழ்ப்பாணப் பெண்களின் போலி டாம்பீகங்களையும் கணவனிடமான எதிர்பார்ப்புக்களையும் எல்லோ அவிழ்த்துவிட்டிருக்க வேண்டும்..??! :) :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவுக்கு மகனாக் இருந்தவன் ....கணவனாக் மாற கொஞ்சம்காலம் எடுக்கும். அவளும் மகளாக இருந்தவள் ....

அம்மாவாக மாறி வர கொஞ்சம் காலம் எடுக்கும். எல்லாம் காலப்போக்கில் சரி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு குறைபட்டுக் கொள்ளும் யாழ்ப்பாண மனைவி மாப்பிளையின்ர அம்மா செய்யாத ஒரு முக்கிய வேலையையும் செய்து குடுத்திருப்பாதானே..! ஏன் அதை முதலில கட் பண்ணத் தெரியேல்ல? :(

இது கூடத்தெரியாமல் :)

  • கருத்துக்கள உறவுகள்

உது கட்டாயம் யாழ்ப்பாணத்து மனைவியாக இருக்க முடியாது. யாழ்ப்பாணத்து வழமையின்படி கலியாணம் செய்தாப் பிறகு பொம்பிளை வீட்டுக்கு மாப்பிளை வந்து குடித்தனம் பண்ணுறது. அப்பிடி இருக்கும் போது உப்பிடி நடக்க வாய்ப்புகள் வலுகுறைவு. அதுமட்டும் இல்லாம எங்கட யாழ்ப்பாணத்து பொடியளுக்கு இவயளுக்கு உதுகள் எல்லாம் செய்யதெரியாது எண்டு கலியாணம் கட்ட முதல் தெரிஞ்சு இருக்கிறதால கட்டமுதலே தங்களை எல்லாத்துக்கும் ஆயத்தப்படுத்தி கொண்டிருவாங்கள். உந்த விசியங்கள் வேணுமெண்டா யாழ்ப்பாணத்துக்கு வெளி சமுதாய மக்களுக்குள்ள நடக்குதோ தெரியாது. ஆனா யாழ்ப்பாணத்துக்குள்ள இல்லை.

உது ஒரு ஆங்கில சம்பிரதாயங்களை ஒட்டி வடிக்கப்பட்ட கவிதை. பெரிதாக அலட்டிக் கொள்ள எதுவும் இல்லை. www.funtoosh.com என்ற தளத்தில் நகைச்சுவைகாக Song of a Married Lady என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த கவிதை இது.

ம்ம்... இந்த கவிதைகள் படுத்தும் பாடு.... :)

நெல்லையான் சும்மா ஒரு பகிடிக்கு ஒரு கவிதையை இங்கு இணைத்துவிட, அதை serious'ஆ எடுத்துக்கொண்டு....... (இந்த திரியும் வெகு விரைவில் century போட்டுடும் போலிருக்கே...!) :(

கடவுளே...என்ற மனிசி இந்தக் கவிதையை பார்க்ககூடாது !!

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ!

உதெல்லாம் வாசிக்கிற அளவுக்கு எனக்கு(English) அறிவு கிடையாதுங்கோ!

இருப்பினும் அந்த படத்திலை இருக்கிறவ நல்ல வடிவாக இருக்கிறா.

இணைப்புக்கு நன்றியெங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

ஆராவது உந்தக் கவிதையை தமிழ்ப் படுத்தி எழுதுங்கோ! இல்லை நாங்களும் ஏதாவது கருத்து சொல்லுவம் எண்டுதான் ஏனெண்டால் உந்த ஆங்கிலத்துக்கும் எங்களுக்கும் வெகு தூரம்

Edited by vathavuran

  • கருத்துக்கள உறவுகள்

இது கூடத்தெரியாமல் :)

மற்ற ஆக்களின்ர வாயால கேட்கலாம் எண்டுதான்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்த நேரடி மொழிபெயர்ப்பு...கவிதையின் கவித்துவம் எதிர்பாக்க கூடாது......கோட்டுக்கு அங்காலை இருப்பது என்னுடைய விதி

மனைவியின் கவிதை/ பாட்டு...

அவனுக்கு என்னுடைய கறி பிடிக்கவில்லை........ எல்லா கறியுமல்ல

என்னுடைய கேக்கும் பிடிக்கவில்லை ................கேக் அடிக்க தெரியாது (எங்கட ஊர் கேக்)

என்னுடைய விசுகொத்துக்கள் கடினம் என்றான் ..........செய்யவே தெரியாது

அம்மா செய்வது போல அல்ல என்றான்

கோப்பி சரியாக ஊத்துவதில்லை என்றான் ............நான் தான் பெரும்பாலும் அவவுக்கு வைத்து கொடுப்பது

என்னுடைய கூழ் சரியில்லை என்றான் ........................ Bulk Barn இல் வாங்கின சூப் மிக்ஸ் கிடந்தது அழுகுது

அவனுடைய சொக்ஸ் சோடி சேர்த்துவைக்கவில்லை ...............வந்த புதிலில் எல்லாம் சரியாய் இருந்தது, இப்ப அப்படி இப்படி தான்

அவனுடைய அம்மா செய்தமாதிரி ......................... எனக்கு அம்மா செய்யவில்லை ..நான் அறிந்த காலம் முதல்

நான் அழமாக சிந்தித்தேன் / விடை தேடினேன் ..................எனக்கு தெரிய அப்படி இல்லை :)

ஒரு துப்பு /ஜாடை கிடைக்காத எனப் பார்த்தேன்

எதுவும் இல்லையா நான் செய்வதற்கு

அவனுடைய அம்மாவைப் போல

சிரிப்புடன் வழி/ ஒளி வந்தது

ஒரு விடயம் என்னால் நன்றாக / கட்டாயம் செய்ய முடியும் ...

திரும்பி கொடுத்தேன் ஒரு அடி நன்றாக

அவனது அம்மாவைப் போல் .............இன்னும் இல்லை ...:lol:

ஆராவது உந்தக் கவிதையை தமிழ்ப் படுத்தி எழுதுங்கோ! இல்லை நாங்களும் ஏதாவது கருத்து சொல்லுவம் எண்டுதான் ஏனெண்டால் உந்த ஆங்கிலத்துக்கும் எங்களுக்கும் வெகு தூரம்

லண்டனில் இருந்துகொண்டு ஆங்கிலம் தெரியாது என்று வேடம் போடுவது ஏன் - வாதவுரரே?

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இருந்துகொண்டு ஆங்கிலம் தெரியாது என்று வேடம் போடுவது ஏன் - வாதவுரரே?

வேடம் இல்லை உண்மையாக சில வரிகள் பூரண விளக்கம் இல்லை அதுதான்.நன்றி வோல்கனோ.எனக்கு தெரிஞ்சு இந்தக்கவிதையிலை வாறமாதிரி அம்மா அப்பிடி அடிக்கவெல்லாம் மாட்டா

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா பையன் அடி வாங்கியது சரியெ....என்றாலும் படிக்க ஒரு மாதிரித்தான் இருக்கு..ஏனென்றால் நாங்க ஆண் இனமுங்கோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்ட மனுசிய நான் சமைக்க விடுறதில்ல. எதவாது மருந்தை கிருந்த கலந்துபோடுவாள் எண்டு பயம். :D

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இருந்துகொண்டு ஆங்கிலம் தெரியாது என்று வேடம் போடுவது ஏன் - வாதவுரரே?

லண்டனிலை இருந்தால் ஆங்கிலம்(English)அறிந்திருக்கவேண்டும் என்ற கட்டாயம் இருக்கலாம் ஆனால் அறிந்திருப்போம் என்று இல்லைத்தானே???

வேடம் இல்லை உண்மையாக சில வரிகள் பூரண விளக்கம் இல்லை அதுதான்.

மன்னிக்கவும் வாதவூரன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆசான் மன்னிப்பெல்லாம் எதுக்கு.நீங்கள் உங்களுக்கு தோன்றியதை சொல்லியிருக்கிறீர்கள் அவளவும் தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா இல்லாத சாப்பாட்டையும் கோப்பியையும் எத்தனை நாளைக்குதான் நல்லா இருக்கு என்று சொல்லி சாபிடுறது குடிகிறது. வந்த புதிசில் மனம் கோணகூடாது என்று சொல்லி சொன்னால் வாழ்நாள் முழுதும் இப்படித்தான் இருப்பேன் என்றால் என்ன நியாயம், ஒரு முன்னேற்றம் வேண்டாமா? ஒரு திருத்தம் வேண்டாமா? அதிகம் எழுத விரும்ப இல்லை, கிடைக்கிறதுக்கு வேட்டு வைக்க நான் தயார் இல்லை :wub::lol::)

கடவுளே...என்ற மனிசி இந்தக் கவிதையை பார்க்ககூடாது !!

என்ட மனிசி சொன்னால் அவள் கவிதை எழுதிறாள் ஆனால் நான் செயல் வீராங்கனை என்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாதவுரனுக்கும் ஏனையோருக்கும் வணக்கம்...

வாதவுரன் நீங்கள் சொன்ன மாதிரி எனக்கும் சில கருத்துக்களில் மயக்கம் இருந்தது எதோ ஒரு துணிவில மொழிபெயர்ப்பு அதும் நேரடி மொழிபெயர்ப்பு என்று போட்டுவிட்டேன்...அதை தூக்க விருப்பம் தான் ...பிறகு விட்டிட்டன்

எனது ஆங்கில புலமை :wub: மாத்திரம் அல்ல அதனுடைய உண்மையான கருத்தும் கடினமாக இருந்தது, உதாரணமாக stew என்றால் என்ன என்று எனது மனைவிடம்- கனடாவில் high school படித்தவ - கேட்டபோது .."வெள்ளைகள் செய்கிறது எல்லாம் போட்டு அவிக்கிறது என்றா " இப்ப google இல பார்க்கையில் http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=stew&table=fabricius ஒருவகை பிரட்டல் / சுண்டல் என்று வருகிறது...

மற்றது இங்கே ஒருகருத்து ஆசானால் வைக்கப்படிருந்தது UK இருப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரியாத என்று...பின்னர் அவரே (அதில் உள்ள தவறை) உணர்ந்தது வரவேக்க தக்கது...UK மாத்திரமல்ல USA , கனடா மற்றமற்ற நாடுகளில் மொழி படிப்பது ஊரில் தமிழ் படிப்பது போல்தான்...நான் நினைக்கவில்லை இது கனபேருக்கு தெரியாமல் இருக்குமென, ஆனால் பலர் விடுகிற தவறு, அனுமானம் நாங்கள் நல்ல மொழியியலாலர்களாய் இருப்போம் என. இது ஊரில் தமிழ் படித்த எல்லாரும் C or D எடுக்காத மாதிரி. நான் இங்கே பிறந்து/ மிக சிறிய வயதில் வந்த பலரை கண்டுள்ளேன் என்னைவிட English spelling மோசமாக எழுதுபவர்கள்...

அதைவிட நான் பிரதானமாக இங்கு சொல்லவந்தது Accent / உச்சரிப்பு பற்றி ...இது சிலருக்கு பயன்தரலாம்...

நான் இங்கு வந்தபோது எனக்கு தெரிந்த பலரின் பேச்சு "இஸ் புஸ்" இங்கிலீஷ் தான்...எனக்கு ஆங்கிலம் கதைக்கவே பயம்...யாழ்பாணத்தில் இருந்து கொண்டுவந்தது ...கதைச்ச சரியாய் கதைக்கவேணும் இல்லாடி வாயை பொத்திக்கொண்டு இருக்கவேண்டும்..பல நாட்கள் சென்றது அவர்கள் கதைப்பதை ஓரளவுதன்னும் விளங்கிக்கொள்ள...மெல்லமெல்ல தடக்கி தடக்கி இப்ப ஓகே எண்டு நினைக்கிறேன்...என்ன விளங்காட்டி பயப்பிடாமல் pardon சொல்ல பழகிவிட்டேன்...பிறகு எதோ ஒருவிடயமாக இம்மிக்ரான்ட் ஆபீசெக்கு போகேக்கை ஒரு புத்தகம் படித்தேன் accent பற்றி ...சாராம்சம் இதுதான் "இதுதான் சரியான accent என்று எதுவும் இல்லை" நாங்கள் பேசுவது அடுத்தவருக்கு விளங்கினால் சரி...இப்ப எங்கட இந்தியா அண்ணமார் கதைக்கிறமாதிரி. இதில ஒரு பகிடி சொல்லவேண்டும்.நான் வந்து டொரோண்டோ ஏர்போர்ட் வந்திறந்கேக்க .முட்டை மாவோ, பயந்தம்மாவோ கொண்டுவந்தனான்..என்னவெண்டு கேட்டார்கள் ..."விட் ப்ளோர் " இல் செய்தது என்றேன் எங்கட ஊரில மாதிரி...10 தரம் சொல்லியிருப்பேன், விளங்கவில்லை...பிறகு ஒருமாதிரி சுத்திவந்து பாண், கேக் உதாரணம் எல்லாம் சொல்லி ஓகே .அப்ப சொன்னான் "விட் ப்ளோர்ர் " அப்பத்தான் விளங்கிச்சு இங்கே கதைக்கிற இங்கிலீஷ் எங்களுக்கும் (யாழ்பாணத்திற்கும்) - இந்தியாவிற்கும் இடையில நிற்குது என்று. அதில இன்னுமொரு பகிடி என்னுடைய யமேக்க ( UK accent ) நண்பன் சொல்லுவது நான் இந்தியாகாரன் மாதிரி கதைக்கிரனாம்...அதுக்கு மேல என்னுடைய தம்பி 2 வருடம் முந்தி UK போனவன் சொல்லுகிறான் நான் இந்தியாக்காரன் மாதிரி pasta சொல்லுகிரனாம்... எல்லாம் கலி காலம்...

ஏன் இவ்வளவு நீட்டு கதையெல்லாம் எழுதினான் என்றால் ...யாரும் உங்களுடைய accent க்காக குறைபட தேவையில்லை...இன்னுமொரு குட்டிக்கதை நீட்டாமல்...என்னுடைய மனைவி university 2 அல்லது 3 வருடத்தில accent மாத்திறதுக்கு கிளாஸ்க்கு போனாவ முதல் நாளே திருப்பி விடப்பட்டா ஒரு அறிவுரையோட.." நீர் உம்மடை accent குறித்து பெருமைப்பட வேண்டும்..என்னெலில் அது எனக்கு ஒரு செய்தி சொல்லுது உமக்கு இன்னுமொரு மொழி தெரியுமென" முக்கியமாக உங்களுக்கு ஊரில் உள்ளவர்களுக்கு சொல்லுங்கள் அச்சென்ட் க்காக கதைக்காமல் விட வேண்டாம் என்று...யாழ்ப்பாணத்தில சிலபேர் குண்டுசட்டிக்கை குதிரை விடுகிறமாதிரி இதுதான் சரியென்றும் ...கொஞ்சம் மாறி கதைகிறவை நக்கல் அடிக்கிற தன்மையும் பல இடங்களிலும் உண்டு...எல்லாருக்கும் சொல்லுங்கோ எல்லாம் சரி ..மற்றவர்கள் அவர்கள் சொல்லுவதை விளங்கிக்கொள்ளும் மட்டும் ...

முடிவாக சிங்கள நண்பர்களுடன் ஒருக்கா கதைக்கும் பொது எங்களிடம் ஒரு "க " தங்களிடம் ka ha ga இருக்கென்று கதை அளந்த்துகொண்டு இருந்தார்கள் அப்ப அவர்கிடம் சொன்னது நீங்கள் அப்ப காகத்திலிருந்த்தான் வந்திருக்க வேண்டும் ..சிங்கத்தில் இருந்தல்ல என :lol: ...உண்மையில் அந்த வேறுபாடு அவர்களின் மொழி பயன்பாட்டில் இருந்துதான் வருகிறது..நாங்கள் மலை , மழை, புகழ் பாடுவது போல்...நான் நினைக்கிறேன் ஆசியர்களில் ஜப்பானியர்களும் இங்கிலீஷ் கதைக்க கஸ்ரப்படுவதாக ...அவர்களிடமும் ஆங்கிலத்தில் உள்ள சில உச்சரிப்புகள் பயன்பாட்டில் இல்லை என வாசித்த நினைவு...( என்வென்று எங்க சப்பட்டைகள் ( சீனா காரர்கள்) விடுபட்டார்கள் என்று தெரியவில்லை ...( அல்லது எனது தரவு பிழையோ தெரியவில்லை )

எனவே வெவ்வேறு மொழிகள் பேசுபவர்கள் வேறுபட்ட ஒலிகளை பயன்படுத்துவதால் அவர்கள் வேறு மொழிகள் படிக்கும் பல சிரமங்கள் ..எதிர்கொள்கிறார்கள் அத்துடன் தங்களுக்கேற்றமாதிரி பயன்படுத்துகிறார்கள்..இதில் ஒரு குறையும் இல்லை ...மொழியியல் ஆய்வாளர் வல்னகோ --கனடா :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விளக்கம் வல்கானோ.. :wub: .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.