Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்திரைக்கு யாழ் வருவோம், நாங்கள் நலம்

Featured Replies

சித்திரைக்கு யாழ் வருவோம், நாங்கள் நலம்.

இது எனக்கு நேரடியாக கிடைத்த தகவல், இதை உங்கள் விமர்ச்னத்துக்கான தரவில்லை, எனது மன திருப்திக்கு தருகின்றேன்,

எனக்கு தெரிந்த அம்மா ஒருவரின் மகன் 10 ற்கு மேற்பட்ட வருடமாக புலிகள் இயக்கத்தில் இருந்தவர், அவர் இறந்து விட்டார் என

கிரிகைகளும் செய்து முடிந்து விட்டது, ஆனால் அவர் இப்போது தொலைபேசி மூலம் அவரது தாயாருக்கு தொடர்புகொண்டு

"நாங்கள் நலம், சித்திரைக்கு யாழ்ப்பாணம் வருவோம், சிறிது பணம் அனுப்பவும்" என்று கூறி இருக்கின்றார், அவர் இன்னும் இலங்கையில் தான் இருக்கிற்ர்,

இதை கேட்டவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சியில் தான் இதை அடிக்கிறேன்,

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

தங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்

எல்லோரும் வரணும்

இறைவனை வேண்டுகின்றேன்

எமக்காக போராட கூப்பிடவில்லை

தங்கள் உயிர் இருக்கிறது என்பது போதும்

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி மகிழ்வாக் இருக்கிறது............பிரிந்தவர் ..... கூடினால் பேசவும் வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோஷம் கெதில வரனும்..............

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி...

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிந்ததும் சிலரை விடுதலை செய்யக்கூடும். எல்லாம் தேர்தல் முடிவில்தான் தங்கியிருக்கின்றது. பலர் சேமமாக இருக்கின்றார்கள்போலத் தெரிகின்றது. நல்ல செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. எங்கள் காவல் தெய்வங்கள் உயிருடன் இருந்தால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

காவல் தெய்வங்களுக்கு வாழ்த்துக்கள் .....நலமுடன் வருவீர்....தயவு செய்து அவர்கள் வருகையை கொச்சைப்படுத்த வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கும் சொல்லாமல் மக்களுடன் கலந்து இருப்பது தான் சமயோசிதமானது. இல்லையேல் எப்போதும் ஒட்டுகுழுக்களாலும் அரசபடைகளாலும் ஆபத்து இருந்து கொண்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லசெய்தி

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கும் சொல்லாமல் மக்களுடன் கலந்து இருப்பது தான் சமயோசிதமானது. இல்லையேல் எப்போதும் ஒட்டுகுழுக்களாலும் அரசபடைகளாலும் ஆபத்து இருந்து கொண்டே இருக்கும்.

உண்மை தான்...

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் தொடங்கப்படலாம் என்பது ஒரு புறமிருக்க, அதைத் தக்க வைப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நிறையவே கடினமான பணிகள் உண்டு. இவ்வளவு பலத்தோடு இருந்தபோதும் எம்மால் எதிரியின் படுகோரமான மனிதப்படுகொலைகளையும், தடைசெய்யப்பட்ட ஆயுதப் பிரயோகத்தையும் தடுக்க முடியாமல் இருந்தது. மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் என்னும்போது, இதே போன்றதொரு அழிவை அவன் தரமாட்டன் என்பது என்ன நிச்சயம்??

இப்படியான அழிவுகளைத் தடுக்கக் கூடிய வகையில் புலம்பெயர் தமிழர்கள் கொண்டிருக்கின்ற சக்தி ஒரு வேளை உதவக் கூடும். எனி வரும் போராட்டம் ஆயுதம் தூக்கித் தான் நடக்க வேண்டும் என்றில்லை. எம் புலம்பெயர் மக்களின் பலத்தாலும் நிச்சயம் முடியும் என்றே நம்புகின்றேன்.

முதலில் உலகத்தை எம் பக்கம் மாற்றுவதற்கு, இளையோர்களாகட்டும், கல்விமான்களாகட்டும், பலம் வாய்ந்த அமைப்புக்களில் வேலை வாய்புத் தேடிச் செல்லுங்கள்.. உங்கள் குழந்தைகளைப் பொறியிலளார் ஆகவும், வைத்தியராகவும் மட்டும் கனவு காணாமல், சட்டத்தினூடும், மனித உரிமைகள் சார்ந்த அமைப்புக்களோடு பணியாற்ற வழி ஏற்படுத்துங்கள். எந்த ஐநாவோ, அல்லது அது சார்ந்த எந்த அமைப்புக்களோ எம் மக்களின் அழிவுக்கு மௌனித்திருந்தனனவோ, அந்த அமைப்புக்களின் செயற்பாட்டில் ஆதிக்கம் செலுத்துவதே பலமாக அமையும்.

இது ஒரு நாள், 2 நாள் செயற்திட்டமல்ல, ஆண்டுகள் பல பிடிக்கலாம். ஆனால் தமிழன் என்பவன் என்றைக்குமே வீழ்ந்து கிடப்பவனல்ல என்பதை யும், அவன் மீண்டும் வளர்ந்து வருவான் என்பதையும் எம்மால் நிச்சயம் நிருபிக்க முடியும்.

முக்கியமான ஊடகத்துறையில் கால்பதிப்பதும் மிக்க முக்கியத்துவமானது. வெறுமனே தமிழ் செய்திகளையே மட்டும் மையமாக நின்று விடாமல் பிறமொழிகளில் கால் பதித்து, அதுக்குள்ளும் ஆதிகக்ம் செலுத்தும் நிலையை அடைய வேண்டும்

நன்றி தூயவன் பலகாலத்துக்குபின் தங்கள் கருத்துக்கு...

தமிழரின் போராட்டம் தொடரும்

வேறு வழி....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.நீண்ட நாட்களின் பின் தூயவன் ஆக்கபூர்வமான கருத்தோடு மீண்டும் வந்ததற்கு நன்றி.

இன்னுமொரு ஆயதப் போராட்டம் தவிர்க்க முடியாததே.நாம் விரும்பியோ விரும்பாமலோ அது நடந்தால்தான் தமிழினம் ஒற்றுமையாக இருக்கும் என்பதை கடந்த சில மாத சம்பவங்களே சாட்சி.எதிரியை எதிர்க்க மட்டுமல்ல தமிழரை ஒற்றுமைப் படுத்தவும் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாக மீண்டும் முன்னெடுக்கப் படலாம்.அரசியல் போராட்டத்தை சர்வதேச அளவில் வலிமையாகச் செய்வோமானால் ஆயதப் போராட்டம் இன்றியே நாம் எமது உரிமைகளைப் பெறலாம்.ஏனெனில் இது வரை நடந்த ஆயுதப்போராட்டமானது தனது உச்சப் பங்களிப்பைச் செய்து விட்டு மௌனித்திருக்கிறது.அதாவது எமது பிரச்சனையைச் சர்வதேச மயப்படுத்தி இருக்கிறது. இதனைத் தொய்ய விடாமல் நாம் அரசியல் போராட்டத்தை சர்வதேச சமுகத்துடன் இணைந்து தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.எல்லாவற்றுக்கும் எமக்குத் தேவை ஒற்றுமை.அது நாடு கடந்த தமிழீழமாய் இருந்தால் என்ன வட்டுக்கோட்டைத் தீர்மானமாக இருந்தால் என்ன.எல்லோரும் ஒன்றுபடுவோம்.அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

ஆயுதப் போராட்டம் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் எதுவுமில்லை. அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியும் தாயக மக்களிடத்திலில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் விளக்கமாக எழுதி வருகின்றவர்களையும்

வரவிடாமல் பண்ணாதீர்கள்!!

வாழ்த்துக்கள்

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டம் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் எதுவுமில்லை. அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியும் தாயக மக்களிடத்திலில்லை.

" நாம் எந்த ஆயுதத்தை கையில் எடுப்பது என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான்"

எந்த ஆயுதம் கொண்டு போராடுவது என்பதை நாம் தேர்வு செய்யலாம். எமது போராட்டபாதை என்பது எந்த கோணத்திலும் இருக்கலாம். அகிம்சையாக இருக்கலாம் அதையும் கொஞ்சம் தாண்டி ஜேசுவின் சிர்த்தாந்தம்பேசி மறு கன்னத்தையும் காட்டலாம். நாம் எமது போராட்டத்தை தொடர்வது ஒன்றே குறியென்றால் அதில் ஒன்றை தேர்வு செய்து போராடலாம் அல்லது அடிமைகளாக எவ்வாறு வாழ்வது என்பதற்கு தினம்தினம் தயார் செய்தலும் ஒரு போராட்டம்தான் அந்த போராட்த்தையும் தொடரலாம்.

ஆனால் நாம் எதிரியை வெல்ல வேண்டும் எமது போராட்டம் வெல்ல வேண்டும் என்றால். எங்களது தீர்மானங்கள் எதிரியை வைத்தே வரையபடவேண்டும். "நாம் எந்த ஆயுதத்தை கையிலெடுப்பது என்பதை அவனே தீர்மானிப்பான்". ஆயுத போராட்டம் அழிவுகளை கொடுக்க கூடியது. ஒரு போரில் அழிவு என்பது இரண்டு பகுதிக்கும் இருக்க கூடியது தமிழுழ விடுதலைபோரில் அது தமிழ்பகுதிக்கே உரித்தானதாகவே இருந்தது. எதிரியின் கொடுமைகளை தர்மத்தின் பெயரால் பொறுத்தருள பட்டிருக்கின்றது. போராட்டம் எமது நிலப்பகுதியிலேயே நடத்தபட்டது போர்களங்கள் எமது தெரிவாக இருக்கவில்லை எதிரியின் தேர்வாகவே இருந்தது. கிட்டதட்ட ஒரு தற்காப்பு போரே இதுவரை நடந்தது எதிரியின் அழிவு போரில் இருந்து மக்களையும் போராளிகளையும் பாதுகாப்பது அதற்காக ஒரு பாரிய நிலபரப்பை கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது போன்ற பாதையிலேயே இருந்தது.

கடந்தகால தவறுகள் திருத்தபட வேண்டுமே தவிர போர் வெல்ல வேண்டும் என்றால் ஓரே வழிதான் உண்டு.

போர் வெல்ல வேண்டுமா வேண்டாமா என்பதுதான் விடைகாணபட வேண்டிய கேள்வியே தவிர. இந்த ஜனநாயகம் தலைவிரித்தாடும் முதலாளித்துவ உலகில் வேறந்த தேர்வும் வழியாகது என்று நான் சொல்லவில்லை................ ஒவ்வொரு நாளும் தொலைகாட்சி செய்திகள் அதைதான் சொல்கின்றன நேரடியாக அல்ல மறைமுகமாக.

ஈழத்தமிழருக்குக் கிடைத்த தலைமைபோன்று, இனிவரும் காலங்களில் ஒரு தலைமை உருவாக்கம் பெறும்வரை, எந்தவழியிலான போராட்டங்களும் சாத்தியமில்லை. எதிர எந்தவகையானவன் என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலையில் போராட்டத்தை எங்கிருந்து நடத்திச் செல்வது.

மக்கள், ஊடகங்கள் ஆகியவற்றின் கருத்துக்களை விடுவோம். நமது சொந்தக் கருத்தில் போராடுவதற்கான சக்தி எமது மக்களிடத்தில் இருக்கின்றதா? இன்னும் ஒரு சகாப்தங்கள் சென்றாலும் இந்தப் போரின் வடுக்களை மறக்கடிப்பதற்கு முடியாது எனத்தான் நினைக்கின்றேன். போரின் பாதிப்புகள் தெரியாத, இழப்புகளின் வலி தெரியாத ஒரு காலத்தில்தான் எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது போர், அதனாலான அழிவுகளை நேரடியாக அனுபவித்த மக்களை மீண்டும் போரில் ஈடுபடுத்த இலகுவில் யாராலும் முடியாது.

எதிரியே போராட்ட வழியைத் தீர்மானித்தாலும் அதன் தேவை வெளிப்படையாகத் தெரிந்தாலும் அதற்கான சாத்தியங்கள் பிராந்திய ரீதியில் இப்போது இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் வந்துசேர ஓட்ட போட்டிகள் முடிவுக்கு வந்திடும்.

வெத்தில சாப்பிட்டு வீட்டோட இருந்து 6 வருசம் இளைப்பாறுங்கோ. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வந்துசேர ஓட்ட போட்டிகள் முடிவுக்கு வந்திடும்.

வெத்தில சாப்பிட்டு வீட்டோட இருந்து 6 வருசம் இளைப்பாறுங்கோ. :lol:

ஏன் தாடிக்காரன் வேட்டியை தூக்கி பிடித்து கொண்டு போராட்டத்தை நடாத்த மாட்டாரோ? :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய துயவனுக்கு 11 பச்சைபுள்ளி

நல்ல கருத்து என்று சொன்ன விசுகண்ணைக்கு சிவப்பு புள்ளி

யார் எழுதுகிறார்கள் என்பது முக்கியமாகி போய்விட்டது............. என்ன எழுதுகிறார்கள் என்பதெல்லாம் யார் பார்த்தார்?

ஈழத்தமிழருக்குக் கிடைத்த தலைமைபோன்று, இனிவரும் காலங்களில் ஒரு தலைமை உருவாக்கம் பெறும்வரை, எந்தவழியிலான போராட்டங்களும் சாத்தியமில்லை. எதிர எந்தவகையானவன் என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலையில் போராட்டத்தை எங்கிருந்து நடத்திச் செல்வது.

மக்கள், ஊடகங்கள் ஆகியவற்றின் கருத்துக்களை விடுவோம். நமது சொந்தக் கருத்தில் போராடுவதற்கான சக்தி எமது மக்களிடத்தில் இருக்கின்றதா? இன்னும் ஒரு சகாப்தங்கள் சென்றாலும் இந்தப் போரின் வடுக்களை மறக்கடிப்பதற்கு முடியாது எனத்தான் நினைக்கின்றேன். போரின் பாதிப்புகள் தெரியாத, இழப்புகளின் வலி தெரியாத ஒரு காலத்தில்தான் எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது போர், அதனாலான அழிவுகளை நேரடியாக அனுபவித்த மக்களை மீண்டும் போரில் ஈடுபடுத்த இலகுவில் யாராலும் முடியாது.

எதிரியே போராட்ட வழியைத் தீர்மானித்தாலும் அதன் தேவை வெளிப்படையாகத் தெரிந்தாலும் அதற்கான சாத்தியங்கள் பிராந்திய ரீதியில் இப்போது இல்லை.

சாத்தியம் இல்லை என்றால்?

1972ல் தான் அதற்கான சாத்தியங்கள் இல்லாமலே இருந்தது என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் தாடிக்காரன் வேட்டியை தூக்கி பிடித்து கொண்டு போராட்டத்தை நடாத்த மாட்டாரோ? :rolleyes::lol:

அண்ணை போராடாமல் நிண்டுபிடிச்சிருக்கேலாது...85 எண்டு பாத்தாலும் 25 வருசம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை போராடாமல் நிண்டுபிடிச்சிருக்கேலாது...85 எண்டு பாத்தாலும் 25 வருசம். :lol:

ஓமண்னை மகிந்தவின்ரை வேட்டிக்குள்ளே இருந்த படியால் (இப்பவும் தான்) தப்பி பிழைச்சு இருக்கிறார். சா என்ன கேவலம் கெட்ட வாழ்க்கை இந்தாள் வாழுது. :rolleyes::lol:

இப்ப என்றாலும் வெளியில் வரலாம் தானே. சனத்துக்கு பயமாக்கும். கல்லால் எறிந்து கொல்லி போடும் என்று. :lol:

கண்ணாடி வீட்டுக்க இருந்து கல்லெறியாதையண்ணை தலைவற்ற சிலமன கானேல்ல....அது பிரச்சனையா வந்திச்சு பிரச்சாரமே பம்மாத்தெண்டு புறூவாகிடும் எல்லாருக்கும் ஆபத்து. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாடி வீட்டுக்க இருந்து கல்லெறியாதையண்ணை தலைவற்ற சிலமன கானேல்ல....அது பிரச்சனையா வந்திச்சு பிரச்சாரமே பம்மாத்தெண்டு புறூவாகிடும் எல்லாருக்கும் ஆபத்து. :rolleyes::lol:

தாடிக்கு பக்கத்தில் வாற கூலிப்படை கீழே கண்ணி வெடி இருக்கோ என்று இப்போதும் தேடுவது ஆச்சரியாமக இல்லை ??? :lol: ஏதோ ஒரு செய்தி சொல்கிரமாதிரி இருக்கல்லோ அண்ணை. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.