Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்களம் எங்கே போகிறது????

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மட்டுறுத்துனர்களே,

நான் இதுவரைக்கும் யாரின் மீதும் புகார் குடுத்ததில்லை அப்படி இதுவரைக்கும் தோன்றியதும் இல்லை..ஆனால் இன்று எழுதவேண்டியுள்ளது.

மாற்றுக்கருத்து என்ற போர்வையில ஒரு சிலரை எதற்காக கீழ்த்தரமான கருத்துக்கள் எழுதுகிறார்கள் என்று தெரிந்தும் அனுமதிக்கிறீர்கள் ஏன் என்று அறியத்தருவீர்களா?? மாற்றுக்கருத்து என்பது அவசியம் தான் அதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் மாற்றுக்கருத்து என்ற பெயரில் கீழ்த்தரமான கருத்துக்களை யாழ்களம் எப்படி அனுமதிக்கிறது.

எமது இனத்தையும். தமிழ் பெண்களையும் இழிவாக எழுதுபவர்களையும் அனுமதிக்கும் அளவுக்கு யாழ்களமும் கீழ்த்தரமாகிவிட்டதா??

இதை கேட்கும் உரிமை இருக்கோ, இல்லையோ தெரியாது ஆனால் யாழின் வாசகனாக எனக்கு கேட்க தோன்றுது.

நன்றி

ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பச்சை போட்டுள்ளேன்

இது முக்கியமாக ஆராயப்படவேண்டிய விடயம் என்பதால்.....

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்களுக்கு எனது பதில் அவர்களை அதாவது வில்லத்தனங்களை நாம்தான் வளர்க்கின்றோம்

நான் அவர்களுக்கு பதில் எழுதுவதில்லை

அதேநேரம் நல்ல கருத்தை அவர்கள் முன் வைக்கும்போது அவற்றை வரவேற்காமல் விட்டதுமில்லை

நானும் கூடத்தான் விசுகு அண்ணா .. ஆனால் இப்படியே தொடர்ந்தால் யாழுக்கு வரவே பிடிக்குதில்லை...

ஆரோக்கியமான மாற்றுக்கருத்து நிச்சயம் வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்

இதில் கருத்து எழதும் அளவுக்கு நான் படிக்கவில்லை.

நன்றி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சிலருடைய எழுத்துக்கள் அவர்களை அடையாளம் காட்டுகின்றது. அவர்களுடைய கருத்துக்கள் வரும் போது தான் அவர்கள் இனம் காட்டப் படுகின்றார்கள்.

எங்களுக்குள் கருத்து வேற்றுமை இருந்தாலும் பொது எதிரியை அடையாளம் காணும் போது நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தேசிய நண்பர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேசியத்தை அழிக்க முனைபவர்களைச் சேர்ந்து நின்று எதிர்க்க வேண்டும்.

வாத்தியார்

.............

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மாற்றுக்கருத்தாளர்கள் என்ற போர்வையில் வலம் வருபவர்கள் ஒரு தரப்பினரை மட்டும் தெரிந்தெடுத்து கீழ்த்தரமாக வசைபாடுவதை மட்டுமே செய்கின்றனரே தவிர.. நியாயமான ஆராய்வுள்ள உருப்படியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

யாழ் களமும் மாற்றுக் கருத்து என்ற பெயரில் சிலரை அண்மை நாட்களாக கருத்திட அனுமதித்திருக்கிறது. அவர்களின் கருத்துக்களில் இருந்து கற்றுக் கொண்டது என்றால் எப்படி ஒருவரை வசைபாடி திரிவது என்பதைத்தான். இதுவா எமக்கு இன்றைய சூழலில் அவசியமான மாற்றுக் கருத்து.

உதாரணத்திற்கு உருத்திரகுமார் அண்ணனின் அண்மையை பேட்டியை பார்த்தீர்களானால்.. அவர் அதில் தெளிவாகச் சொல்கிறார்... ஆம் எமக்கிடையே மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன. அடிப்படை விடயங்களான தாயகம் தேசியம் தமிழீழம் இதில் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் சில இலக்குகளை அடைவதில் கையாளப்படும் தந்திரோபாயம் தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன என்று. அழகாக தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இதுதான் அவசியம். ஒன்றை அடைய இந்த வழி சரியில்லையென்றால்.. அதை அடைய சாத்தியமான பிறவழிகளை சொல்ல வேண்டுமே அன்றி வீழ்ந்தவனை பழித்து எதிரியை நிமிர்த்திக் காட்டுவதல்ல மாற்றுக் கருத்தென்பது.

பார்வதி அம்மாள் என்ற நோயாளி கூட இழித்துரைக்கப்படுகிறார். முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் கூட உண்மைக்கு புறம்பாக இட்டுக்கட்டப்படுகின்றன. இப்படி அநாகரியமான மனித நாகரிகத்தால் ஏற்றுக்கொள்ளக் கூட முடியாத கருத்துக்களை சிலர் பகிர்வது கூட யாழில் மாற்றுக் கருத்தென்று அடையாளம் காணப்படுவதுதான் வேதனை அளிக்கிறது.

இதனை சில தடவைகள் சம்பந்தப்பட்ட கருத்துக்களோடு சுட்டிக்காட்டி முறையிட்டிருக்கிறேன். நிழலி போன்ற ஒரு சில மட்டுறுத்தினர்கள் இது குறித்து கருத்தாளர்களை எச்சரித்திருக்கின்றனர். அது வரவேற்கக் கூடியதே. இருந்தாலும் மாற்றுக்கருத்து என்பது என்ன என்பதை தெளிவாக வரையறுத்துக் கொண்டு.. அதற்கு வெளியில் அமையும் வசைகளை இழிச்சொற்களை ஒரு தரப்பை மட்டும் எப்போதும் கடிந்து கொள்வதை..நியாயங்களை உண்மைகளை நிலவரங்களை மறைத்து எதிரியின் செயல்கள் எல்லாம் நியாயமானவை போன்று கருத்துரைப்பதையெல்லாம் மாற்றுக் கருத்தாக காட்டுவதை தவிர்க்க முயல்வது நன்று. ஆரோக்கியமானதாக இருக்கும்.

பல ஆரோக்கியமான மாற்றுக் கருத்துக்கள் இருக்கக் கூடும். அவை கூட புலி வசைபாடலால் வெளிவரும் ஆளுமையை இழந்து நிற்கின்றனவோ என்று எண்ணவே தோன்றுகிறது.

Edited by nedukkalapoovan

நானும் கருத்துக்களத்தில் எழுதுவதை முற்றாக நிறுத்திவிட்டேன் :mellow:

ஆனால் கட்டாயம் யாழ் பார்பேன் :lol:

ஆனால் ஒவ்வொருகருத்துக்களையும் கட்டாயம் வடிகட்டி என் உலகஅறிவுக்கேற்ப குழம்பாமல் குழப்பாமல் பார்துக்கொள்கிறேன் :):huh:

அருமை நெடுக் விசுகு ஜீவா நன்றி :)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களம் எங்கே போகிறது????

மோகன் அண்ணாவும், இளைஞனும் விரும்பிய பாதையில் தான் யாழ் செல்கிறது. மட்டுறுத்தினர்களை குறை சொல்லி என்ன பலன்?

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவும், இளைஞனும் விரும்பிய பாதையில் தான் யாழ் செல்கிறது. ?

அது என்ன பாதை? :mellow::huh:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே செல்லும் இந்தப்பாதை.......

..............யாழ்கள் உறவுகளுக்கு கருத்து எழுதும் உரிமம் இருக்கிறதல்லவா.

அதில் சரி அல்லது தவறு ..அல்லது குதர்க்கம் என வகுத்து ஆய்வது வாசகர் கடமை தானே .?...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணாவும், இளைஞனும் விரும்பிய பாதையில் தான் யாழ் செல்கிறது. மட்டுறுத்தினர்களை குறை சொல்லி என்ன பலன்?

நுணா அண்ணா,

மட்டுறுத்துனர்களை குறைகூறவில்லை யாரையுமே நான் குறைகூறவில்லை ஆனால் எனக்கு தெரிந்து யாழில் பழகிய பலர் சொன்ன விடயம் இப்போது யாழில் எழுதுவதே பிடிக்கவில்லை என்பது தான். பலர் தாமாகவே ஒதுங்கிக் கொள்கிறார்கள். எத்தனை பேர் எழுதிய களத்தில் இன்று ஒரு சிலர் தான் எழுதுகிறார்கள்.

இதைக்கேட்கவேண்டிய காரணம் என்ன என்றால் தாயகத்தை நேசிக்கிற,அதற்காக உழைக்கிற பலர் இந்த யாழ்களத்தில் ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடுபடுகிறார்கள்,ஈடுபட விரும்புகிறார்கள்.

அதே போல என்னை போன்ற வயது குறைந்தவர்களும் யாழில் எமது அறிவை வளர்க்க‌,எழுத்தை பழக உதவியாய் இருக்கும்.

இன்று இலவசமாகவே வலைப்பூக்கள் திறந்து எழுதும் வசதிகள் இருந்தும் கருத்தாடலுக்கு இப்படியான தளங்கள் தான்

உதவி புரிகின்றன. ஆகவே தான் இந்த விடயத்தை கொண்டுவந்தேனே தவிர யாரையும் குறை கூறவுமல்ல அல்லது யாரையாவது கருத்து களத்தில் இருந்து தடை செய்யுங்கோ என்று சொல்லவுமல்ல.

எல்லாருக்கும் தத்தமது கருத்துக்களை சொல்ல உரிமை இருக்கு..ஆனால் அவை எம்மினத்தை கேவலப்படுத்தும்,

வெந்த புண்ணிலை வேல் பாய்ச்சும் வகையில் இருந்தால் மாற்று நடவடிக்கைக்கு யோசிக்கலாம் தானே என்ற ஆதங்கமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு மாற்றுக்கருத்தாளர்கள் என்ற போர்வையில் வலம் வருபவர்கள் ஒரு தரப்பினரை மட்டும் தெரிந்தெடுத்து கீழ்த்தரமாக வசைபாடுவதை மட்டுமே செய்கின்றனரே தவிர.. நியாயமான ஆராய்வுள்ள உருப்படியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

யாழ் களமும் மாற்றுக் கருத்து என்ற பெயரில் சிலரை அண்மை நாட்களாக கருத்திட அனுமதித்திருக்கிறது. அவர்களின் கருத்துக்களில் இருந்து கற்றுக் கொண்டது என்றால் எப்படி ஒருவரை வசைபாடி திரிவது என்பதைத்தான். இதுவா எமக்கு இன்றைய சூழலில் அவசியமான மாற்றுக் கருத்து.

உதாரணத்திற்கு உருத்திரகுமார் அண்ணனின் அண்மையை பேட்டியை பார்த்தீர்களானால்.. அவர் அதில் தெளிவாகச் சொல்கிறார்... ஆம் எமக்கிடையே மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன. அடிப்படை விடயங்களான தாயகம் தேசியம் தமிழீழம் இதில் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் சில இலக்குகளை அடைவதில் கையாளப்படும் தந்திரோபாயம் தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன என்று. அழகாக தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இதுதான் அவசியம். ஒன்றை அடைய இந்த வழி சரியில்லையென்றால்.. அதை அடைய சாத்தியமான பிறவழிகளை சொல்ல வேண்டுமே அன்றி வீழ்ந்தவனை பழித்து எதிரியை நிமிர்த்திக் காட்டுவதல்ல மாற்றுக் கருத்தென்பது.

பார்வதி அம்மாள் என்ற நோயாளி கூட இழித்துரைக்கப்படுகிறார். முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் கூட உண்மைக்கு புறம்பாக இட்டுக்கட்டப்படுகின்றன. இப்படி அநாகரியமான மனித நாகரிகத்தால் ஏற்றுக்கொள்ளக் கூட முடியாத கருத்துக்களை சிலர் பகிர்வது கூட யாழில் மாற்றுக் கருத்தென்று அடையாளம் காணப்படுவதுதான் வேதனை அளிக்கிறது.

இதனை சில தடவைகள் சம்பந்தப்பட்ட கருத்துக்களோடு சுட்டிக்காட்டி முறையிட்டிருக்கிறேன். நிழலி போன்ற ஒரு சில மட்டுறுத்தினர்கள் இது குறித்து கருத்தாளர்களை எச்சரித்திருக்கின்றனர். அது வரவேற்கக் கூடியதே. இருந்தாலும் மாற்றுக்கருத்து என்பது என்ன என்பதை தெளிவாக வரையறுத்துக் கொண்டு.. அதற்கு வெளியில் அமையும் வசைகளை இழிச்சொற்களை ஒரு தரப்பை மட்டும் எப்போதும் கடிந்து கொள்வதை..நியாயங்களை உண்மைகளை நிலவரங்களை மறைத்து எதிரியின் செயல்கள் எல்லாம் நியாயமானவை போன்று கருத்துரைப்பதையெல்லாம் மாற்றுக் கருத்தாக காட்டுவதை தவிர்க்க முயல்வது நன்று. ஆரோக்கியமானதாக இருக்கும்.

பல ஆரோக்கியமான மாற்றுக் கருத்துக்கள் இருக்கக் கூடும். அவை கூட புலி வசைபாடலால் வெளிவரும் ஆளுமையை இழந்து நிற்கின்றனவோ என்று எண்ணவே தோன்றுகிறது.

நன்றி நெடுக்கண்ணா,

இதுவே எனது கருத்தும். அதனால் ஒரு பச்சைப்புள்ளி..

சாப்பிடுகிற சாப்பாட்டை எப்பவும் இனிப்பாகவே சாப்பிட்டு பழகாதேங்கோ...! நாளைக்கு இனிப்பு கிடைக்க இல்லை எண்டால் தற்கொலை செய்ய வேண்டி இருக்கும்...!

நாங்கள் நினைக்கிற மாதிரித்தான் மற்றவர்கள் எல்லாரும் இருக்க வேண்டும் எண்று நினைப்பது சுயநலமானது... எங்களின் தேவைகளை நாங்கள் இலகுவாக அடைந்தாலும் அதன் தார்பரியமும் மதிப்பும் கூட தெரியாது போய்விடும்...

எதிலாவது வெற்றி பெற வேண்டுமானால் இதையும் கடந்துதான் போகவேண்டும்... பச்சாபாதங்களும் சுயபரிதாபங்களும் எதையும் முன்னோக்கி தள்ளாது...

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன பாதை? :rolleyes::rolleyes:

அது தான் எல்லோரின் கருத்தையும் உள் வாங்க வேண்டும் என நிர்வாகம் நினைத்தது. கடைசியில் புலிகளை குறை கூறும் கூட்டம் தான் வசை மொழி பாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பது தான் அந்த புதிய பாதை. :lol::huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது என்ன பாதை? :rolleyes::rolleyes:

உப்புடியே நேரை போய்க்கொண்டிருங்கோ..... போய்க்கொண்டிருக்கேக்கை ஒரு காவோலையாலை வேலியடைச்ச வீடுவரும் சரியோ (அது என்ரை பூங்காவனம் ஆக்கான்ரை வீடு)

வீட்டுக்குப்பக்கத்திலை பாருங்கோ ஒரு குச்சொழுங்கையொண்டு போகும்

அதுக்காலை கொஞ்சத்தூரம் நடந்து போக ஒரு முள்முருக்கை மரம் வரும்

அதிலை நிண்டு பாக்கேக்கை மெயின் றோட்டு நல்லவடிவாய்த்தெரியும்

நீங்கள் அந்த மெயின்றோட்டாலை நடந்து நாலடி எடுத்துவைக்க சிப்பிவைச்ச மதில்வீடுவரும்(இது லண்டனினை இருக்கிற என்ரை ஒண்ட விட்ட பெரியக்கா வீடு)

அதிலையிருந்து கொஞ்சத்தூரம் காத்தோட்டமாய் நடந்து போக கந்தர் மாமான்ரை தேத்தண்ணி கடை வரும்

அங்கை போய் கந்தர் மாமாவாவிட்டை கேளுங்கோ எப்ப தட்டிவான் வருமெண்டு

அவர் சொல்லுற நேரம் பாத்து தட்டிவானிலை ஏறுனியளேண்டால்...

பிறகென்ன... அதுதான் பாதை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

.

ஜீவா,

ஒட்டுக்குழுக்கள் யாழ்களத்துக்கு படை எடுத்து வந்து கருத்து எழுதுவதால் தான்.......

தமிழனின் விடுதலைப் போராட்டத்தை, சில எலும்புத்துண்டுகளுக்காக காட்டிக் கொடுத்து வயிறு வளர்த்ததை அறியக்கூடியதாக உள்ளது.

எந்த இனத்திலும் இப்படிப்பட்ட இழி பிறவிகள் இருக்கப் படாது. ஆனால் தமிழ் இனத்தில் ஒட்டுக்குழுக்கள் அதிகமாகவே இருந்தது வேதனை.

இதுகள் இங்கு கருத்து என்னும் பெயரில் தாங்கள் செய்ததுகளுக்கு நியாயம் என்னும் பெயரில், தங்களை அறியாமலே உளறிக் கொட்டும் போது .....,

எமது விடுதலை போராட்டம் ஏன் பின் தங்கியது என்பதை வடிவாக அறியக் கூடியதாக உள்ளது.

இதுகளின் காட்டிக் கொடுப்புகளால், தமிழனின் பூர்வீக நிலங்கள் பறி போய் கொண்டு இருக்கும் நிலையிலும், இந்த ஒட்டுக்கு குழுக்களுக்கு ரோசம் வரவில்லை என்றால்......, நிச்சயம் இதுகளுக்கு எருமைத் தோலாகத்தான் இருக்க வேண்டும்.

.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்

இதில் கருத்து எழதும் அளவுக்கு நான் படிக்கவில்லை.

நன்றி

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

ஜீவா,

ஒட்டுக்குழுக்கள் யாழ்களத்துக்கு படை எடுத்து வந்து கருத்து எழுதுவதால் தான்.......

தமிழனின் விடுதலைப் போராட்டத்தை, சில எலும்புத்துண்டுகளுக்காக காட்டிக் கொடுத்து வயிறு வளர்த்ததை அறியக்கூடியதாக உள்ளது.

எந்த இனத்திலும் இப்படிப்பட்ட இழி பிறவிகள் இருக்கப் படாது. ஆனால் தமிழ் இனத்தில் ஒட்டுக்குழுக்கள் அதிகமாகவே இருந்தது வேதனை.

இதுகள் இங்கு கருத்து என்னும் பெயரில் தாங்கள் செய்ததுகளுக்கு நியாயம் என்னும் பெயரில், தங்களை அறியாமலே உளறிக் கொட்டும் போது .....,

எமது விடுதலை போராட்டம் ஏன் பின் தங்கியது என்பதை வடிவாக அறியக் கூடியதாக உள்ளது.

இதுகளின் காட்டிக் கொடுப்புகளால், தமிழனின் பூர்வீக நிலங்கள் பறி போய் கொண்டு இருக்கும் நிலையிலும், இந்த ஒட்டுக்கு குழுக்களுக்கு ரோசம் வரவில்லை என்றால்......, நிச்சயம் இதுகளுக்கு எருமைத் தோலாகத்தான் இருக்க வேண்டும்.

.

எல்லாத்துக்கும் காரணம் பணம் பணம் என்னும் பேராசையே, கிடைத்தை வைத்து வாழதெரியாத இனம், உழைத்து வாழ முதுகு வளையாத இனம், ஒருகதைக்கு சொல்கிறேன் காசு ஒருகோடி ரூபா மிச்சம்பிடிக்க உங்களுக்கு எவ்வளவு காலம் பிடிக்கும், மாற்றுகருத்து காரருடன் சேர்ந்தால் ஒரு பிள்ளையை கடத்தினால் போதும் இலகுவாக கிடைத்து விடும். எது ஈசியான வேலை. அப்ப எங்கட சனங்கள் ஈசியான வேலையா பாத்து செய்ய வெளிக்கிட்டு இந்த நிலையில வந்து நிக்குதுகள்.

ஒரு தளபதி குடியிருக்க வீடு போக்கு வரத்துக்கு ஒரு பயுறோ, செலவுக்கு காசு, உணவு பொருட்கள் எல்லாம் தலைவர் கொடுத்தும் காணாது என சிங்கள்வனிட்ட நக்கிற கருணா போன்றவர்கள், நக்க என்னகாரணம், எல்லாம் பணம் பணம் மேலும் பணம். தளபதிகளே இந்த நிலை என்றால். எதுவும் கிடையாத மாற்று இயக்க முன்னாள் காவாலிகள் என்ன செய்வார்கள், அங்க கடத்தினால் காசு, கொலைசெய்தால் காசு, இங்க காட்டி கொடுத்தால் காசு எ்ழுதினால் காசு எழுத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப காசு கொடுக்க படுகிறது.

தனது இனத்தை மட்டந்தட்டி,காடி கொடுத்து காசு வங்கி தன வயிறு நிரப்பும் இனம் எம் இனம். எல்லாம் இந்த பாழாய்போன வயிறுக்காக, மானத்தை விட இவர்கLuக்கு வயிறு பெரிசு இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்ப வெளியில் நிற்பதற்கு ஒட்டுக்குழு காரணம் இல்லை சிறி

நாம் இவற்றை புரிந்து கொள்ளாமல்

எடுத்தவனை எல்லாம் அந்த பட்டியலில் போடும் நிலை இன்னும் மாறவில்லை

நாம் தவறே இழைக்காதவர்போல் வாதாடி மீண்டும் மீண்டும் தவறிழைத்துக்கொண்டிருக்கின்றோம்

அத்துடன் ஒருமித்த பூரண விடுதலை பற்றி இங்கு பாடம் எடுக்கும் எவருக்கும் அதற்கான எந்த தகுதியும் இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.

சாதி, படிப்பு ,பாடசாலை, ஊர், மதம், குழு, ஆண், பெண்..... என்று அத்தனை பாகுபாடுகளும் இங்கு நிரம்பி வழிகின்றன.நான் இங்கு ஒவ்வொருவராக எழுத உள்ளேன்.

விரைவில்.

விசுகு, உங்கள் கருத்துடன் என்னால் உடன்பட முடியவில்லை.

எமது போராட்டம் தோல்வியுற்றதற்க்கு மற்றைய காரணிகளைவிட..... ஒட்டுக்குழுக்களின் பங்களிப்பே முக்கியமானது என்பது தான் முக்கிய காரணம் என்பது எனது அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கும் காரணம் பணம் பணம் என்னும் பேராசையே, கிடைத்தை வைத்து வாழதெரியாத இனம், உழைத்து வாழ முதுகு வளையாத இனம், ஒருகதைக்கு சொல்கிறேன் காசு ஒருகோடி ரூபா மிச்சம்பிடிக்க உங்களுக்கு எவ்வளவு காலம் பிடிக்கும், மாற்றுகருத்து காரருடன் சேர்ந்தால் ஒரு பிள்ளையை கடத்தினால் போதும் இலகுவாக கிடைத்து விடும். எது ஈசியான வேலை. அப்ப எங்கட சனங்கள் ஈசியான வேலையா பாத்து செய்ய வெளிக்கிட்டு இந்த நிலையில வந்து நிக்குதுகள்.

ஒரு தளபதி குடியிருக்க வீடு போக்கு வரத்துக்கு ஒரு பயுறோ, செலவுக்கு காசு, உணவு பொருட்கள் எல்லாம் தலைவர் கொடுத்தும் காணாது என சிங்கள்வனிட்ட நக்கிற கருணா போன்றவர்கள், நக்க என்னகாரணம், எல்லாம் பணம் பணம் மேலும் பணம். தளபதிகளே இந்த நிலை என்றால். எதுவும் கிடையாத மாற்று இயக்க முன்னாள் காவாலிகள் என்ன செய்வார்கள், அங்க கடத்தினால் காசு, கொலைசெய்தால் காசு, இங்க காட்டி கொடுத்தால் காசு எ்ழுதினால் காசு எழுத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப காசு கொடுக்க படுகிறது.

தனது இனத்தை மட்டந்தட்டி,காடி கொடுத்து காசு வங்கி தன வயிறு நிரப்பும் இனம் எம் இனம். எல்லாம் இந்த பாழாய்போன வயிறுக்காக, மானத்தை விட இவர்கLuக்கு வயிறு பெரிசு இல்லையோ?

சித்தன், பணம் தான் பெரிது என்றால்..... இந்த ஒட்டுக் குழுக்கள் பணத்தை களவெடுத்துக் கொண்டு போவது தானே.......

அதுக்காக சாவகச்சேரியில் பாடசாலை மாணவனையும், அளவெட்டியில் 78 வயது மூதாட்டியையும், வவுனியவில் 11 வயது சிறுமியையும் கொலை செய்து தான்..... பணத்தை களவெடுத்து, வயிறு வளர்க்க வேண்டுமா? இதிலும் பார்க்க பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் , பிச்சைக்காரர்கள் எவ்வளவோ மேலானவர்கள். தூ..... மானங்கெட்ட பிறவிகள்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்

இதில் கருத்து எழதும் அளவுக்கு நான் படிக்கவில்லை.

நன்றி

Edited by விசுகு

"யாழ் களம் என்பது எமது சமூகத்தின் ஓர் விம்பம். அதாவது எமது சமூகம் எப்படிப்பட்டதோ அதன் அம்சங்கள்தான் யாழ் களத்தில் வெளிப்படுத்தப்படுகின்றது" என இவ்வாறு ஏறக்குறைய முன்னர் நண்பர் கிருபன் இப்படியான ஓர் கருத்தாடலில் கூறி இருந்தார். கருத்தாளர்களுக்கு பாடவிதானம் அமைத்து கருத்துக்களத்தில் எவ்வாறு கருத்தாடல் செய்வது என்று போதனை செய்வதை கருத்தாளர்களும் விரும்ப மாட்டார்கள், நிருவாகமும் விரும்பாது. பானையில் உள்ளதுதான் அகப்பையில் வரும்.

பச்சை புள்ளி முடிஞ்சு போச்சு... நாளைக்கு வந்து போடுறன்... :rolleyes:

யாழ் தளத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததே ஒரு பழைய கள நண்பர்.அவர் இப்போது எழுதுவதில்லை.நான் கூட பல காலம் வெறும் வாசகனாகத்தான் இருந்தேன்.அப்போது எழுதவேண்டும் போல கூட எனக்கு இருந்ததில்லை ஏனெனில் (2004/2009) சொல்லிக் கேட்கும் நிலையில் எவரும் இருக்கவில்லை.சிலர் இன்றும் அதே மனப்பாங்கில் இருக்கின்றார்கள்.புலம் பெயர்ந்து ஜனநாயக நாடுகளில் வாழும் எமக்கு அந்தப் பண்புகளை பேணுவதில் அக்கறை இருக்கவில்லை.மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் அரசியல்நாகரீகமே இங்கும் தொடர்ந்தது.பலர் தேசியம் என்ற பெயரில் எதை செய்தாலும் தலையாட்ட வேண்டும் என்று நினைத்தார்கள்.நடைமுறை உண்மையை, யதார்த்தங்களை விளங்கும் நிலைக்கு அவர்களை வரவிடாமல் ஊடகங்களை வைத்திருந்தவர்கள் செவ்வனே தமது பணியை செய்துகொண்டிர்ந்தார்கள்.

இந்த செயற்பாட்டை தாங்கள் தேசியத்திற்கு ஆற்றும் ஒரு பணி என அவர்கள் நம்பினார்கள்.அதைத்தான் யாழும் செய்து வந்தது.ஆனால் உண்மை நிலையை அவர்கள் உணர தவறிவிட்டார்கள்.இதனால் உண்மையை எழுதினவனையும் எதிரியையும் ஒன்றாகப் பார்த்து துரோகி ஆக்கி விட்டிருந்தார்கள்.

மே 18 இற்கு பின் பலருக்கு உண்மை நிலை விளங்கிவிட்டது. அதன் பின்னர் தான் நான் எனது கருத்துக்களை எழுதத்தொடங்கினேன்.இனியாவது எமது மக்களுக்கு உருப்படியாக எதையும் சேர்ந்து செய்வோம் என்று.ஆனால் தோல்வியை, உண்மையை ஏற்றுக் கொள்ளும் பக்குவவமில்லாமல் இனித்தான் உண்மயான போராட்டம் தொடங்கப் போகின்றதென சிலர் உசுப்பேற்ற அதையும் நம்பி சிலர் பழையபடி துரோகி,மாற்றுக் கருத்துள்ளவன் என மற்றவனை வசை பாடுவதிலேயே இன்றும் உள்ளார்கள்.

யாழ் சும்மா குழப்ப எழுதுபவர்களையும் உண்மையை எழுதுபவர்களயும் புரிந்து கொள்ளவேண்டும்.யாழ்கள நேயர்களும் கண்ணை கட்டிய குதிரை மாதிரி ஓடிக் கொண்டிக்காமல் இனியாவது கண்களை கொஞ்சம் திறவுங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.