Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிக்கொடி இனியும் தேவைதானா?: தெய்வீகன்

Featured Replies

:D:D :D :D

21ம் நூற்றாண்டின் மிகப்பெரும் காமடி.

ஸீரியசாய் பேசும் போதே இப்புடி காமெடி எடுத்து விடுகிறீங்களே ..... எப்புடி பாஸ் முடியுது? :D

இதுவும் ஒரு சிங்கள தோழர் எழுதியது!

காணாமல்போனோர் தொடர்பாக உரிய பதில் கிடைக்காவிடின் போராட்டம் தொடரும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

and

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்கும் வகையில் இலங்கை அரசு செயற்படக்கூடாது என ஜனநாயக தேசிய கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. இலங்கை அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது வெறுமனே கட்டிடங்களையும், வீதிகளையும் புதுப்பித்து தமிழ் மக்களிடையே மீண்டும் போராடும் குணத்தை தூண்டுவதாகவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அத்துடன் வடக்கு கிழக்கு மக்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் அர்ஜூன ரணதுங்க, மக்களின் மனதை வென்று அவர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத் வேண்டும் எனவும் கூறினார்.

தாம் சிறுவயதில் ஒற்றுமையாக வாழ்ந்தது போன்று ஒற்றுமையாக வாழவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பென சுட்டிக்காட்டும் அவர், இலங்கை அரசோ வடக்கு கிழக்கு மக்களை தெற்கு மக்களிலிருந்து பிரித்து இந்த நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை உருவாக்கும் வகையில் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார்.

ஆகவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் யுத்த வெற்றிகளைக் கொண்டாடுவதைத் தவிர்த்து வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க வலியுறுத்தினார்.

அவர்கள் மாறினாலும் நாங்க மாற மாட்டமே!!!

Edited by Bond007

  • Replies 51
  • Views 5.1k
  • Created
  • Last Reply

... நானும் எனது பிரித்தானிய 20 வருட வாழ்வில், இங்கு நடைபெற்ற ஊர்வலங்கள்(அது ஈழத்தமிழர்களினதோ, அல்லது பலஸ்தீன மக்களுக்காகவோ, தெனாபிரிக்க ..) ஒன்றையும் தப்ப விடுவதில்லை. அவற்றில் விரல்விட்டு எண்ணக்கூடிய வெள்ளை வந்து "சோசலிசமோ? ஏதோ ஒரு" பத்திரிகை விற்பார்கள்! ... நாமும் அதுகளைப் பார்த்து விட்டு பெரும்பான்மையான வெள்ளை இனத்தவர்கள் சோசலிஸ்டுகள் என்பதா???

சிங்களவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் அதுவும் நிகழ்கால சிங்கள அரசினால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு கதைப்பார்கள்/எழுதுவார்கள்!! அவர்களும் தமது நிலை வர காவடி தூக்கி விடுவார்கள்! முன்பொருக்கால் சந்திரிக்கா அம்மையாரும் "நானும் கணவனை இழந்த விதவை" என்றுதான் வந்தவ, .. பின் நடந்தது என்ன????

... ஒருக்கால சிங்கள நாட்டிலிருந்து வரும் பத்திரிகைகளின் செய்திகளின் கீழுள்ள விமர்சன கருத்துகளை போய்ப் பாருங்கள்!! எத்தனை வீதமானவர்கள் எம் வலி புரிந்துள்ளவர்கள் என்பதை உணர்வீர்கள்!!

அமரிக்காவில் கறுப்பர்கள் அமரிக்கர்களாகவே பாராடினார்கள்! தென்ஆபிரிக்காவில் தென ஆபிரிக்கர்களாகவே போராடினார்கள்! நாம் ஆண்ட பரம்பரை தான் ஆனால் சர்வதேச எல்லைகள் பலவும் மாறிய பின்னரும் பிரிந்துபோக அடம்பிடிப்பது நம்மை இன்னமும் அன்னியப்படுத்தும்!

தென் ஆபிரிக்கா போராட்டம், அமெரிக்க போராட்டம் ... முதலில் அறிவது அவசியம்! ... அதனை த்ரிந்திருந்தால், இங்கு உதாரணத்துக்கு எடுபட்டிராது!!!

அடுத்தது ... கொசோவா மக்கள் யூகோஸ்லாவியாவிற்குள் நின்றா போராடினார்கள்?? இல்லை கிழக்கு தீமோர் மக்கள் இந்தோனேசியாவிற்குள் நின்றா போராடினார்கள்??? ....... பலஸ்தீனியர்கள் இஸ்ரவேலுக்குள் நின்றோ அல்லது இஸ்ரேலியர்கள் பலஸ்தீனத்துக்குள் நின்றோ போராடினார்கள்??? ... எனக்கு அரசியல் அவ்வளவு தெரியாது! ஆனால் சரித்திரம் தெரியும்!!

சூப்பர், 100% உண்மை, இது பலருக்கு விளங்குது இல்லை !!!!!!!!!!

தென் ஆபிரிக்கா போராட்டம், அமெரிக்க போராட்டம் ... முதலில் அறிவது அவசியம்! ... அதனை த்ரிந்திருந்தால், இங்கு உதாரணத்துக்கு எடுபட்டிராது!!!

அடுத்தது ... கொசோவா மக்கள் யூகோஸ்லாவியாவிற்குள் நின்றா போராடினார்கள்?? இல்லை கிழக்கு தீமோர் மக்கள் இந்தோனேசியாவிற்குள் நின்றா போராடினார்கள்??? ....... பலஸ்தீனியர்கள் இஸ்ரவேலுக்குள் நின்றோ அல்லது இஸ்ரேலியர்கள் பலஸ்தீனத்துக்குள் நின்றோ போராடினார்கள்??? ... எனக்கு அரசியல் அவ்வளவு தெரியாது! ஆனால் சரித்திரம் தெரியும்!!

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை அழகாக தகர்த்துள்ளீர்கள் நெல்லையன். பாராட்டுகள்.

சிலருக்கு சிலதுகள் விளங்காமல் இருப்பதே உத்தமம்.

ஒரு பகுதியினர் புலிக் கொடியில்லாமல் முயற்சிக்கட்டும். இன்னொரு பகுதியினர் புலிக் கொடியுடன் முயற்சிக்கட்டும். இரு பகுதியினரும் பின்னணியில் ஒன்றாக, ஒற்றுமையாக, ஒரே இலக்கை நோக்கி செயற்பட்டால் போதுமானது.

மிக நல்ல கருத்து.

சூழ்நிலைகள், தேவைகளைப் பொறுத்து, அமைப்புக்களைப் பொறுத்து பாவிக்கலாம், பவிக்காமலும் விடலாம்.

ஒரு பகுதியினர் புலிக் கொடியில்லாமல் முயற்சிக்கட்டும். இன்னொரு பகுதியினர் புலிக் கொடியுடன் முயற்சிக்கட்டும். இரு பகுதியினரும் பின்னணியில் ஒன்றாக, ஒற்றுமையாக, ஒரே இலக்கை நோக்கி செயற்பட்டால் போதுமானது.

புலிக்கொடியுடனோ..

யாவரும் கேளீர் அகதிகள் நாமே.. கொடியுடனோ.. :D

கொடியில்லாமலொ..

இலங்கையில், உங்கள் சம உரிமையை ( பேப்பரளவில் கூட!) கேட்டால் நீங்கள் பயங்கரவாதியே.. புடிபட்டால் துலைந்தீங்கள்.

மினிமம், முதுகு முறிய நடுசந்தியில் வைத்து தர்ம அடி கிடைக்கும்.

உணர்வுகள் தமிழருக்கு இயல்பில் குறைவு என்பதால், கொடிகள், கோவணங்கள் தேவையில்லை.

Edited by Panangkai

வலது கையை மடக்கி கட்டி விட்டு, இடது கையை இறுக்கப்புடிச்சுகொன்டு, அரை இஞ்சி எஸ்-லோன் பைப்பால சுளிர்.. சுளிர்.. எண்டு குண்டித்தொலுரித்தால்தான் உங்களுக்கு புத்திவரும்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு பயங்கரவாத பட்டம் சூட்டியவர்கள் எவரும் நல்ல உத்தமர்கள் கிடையாது. எல்லோரும் அரச பயங்கரவாதச் செயல்களை செய்து கொண்டிருப்பவர்களே. அதற்காக அவர்கள் தங்கள் கொடிகளை தாரைவார்த்துவிடவில்லை.

முட்டாள் தமிழர்களே.. தேசியக் கொடியை எவனும் விட்டுக்கொடுக்க முன் வரமாட்டான். அப்படி விட்டுக் கொடுக்க விரும்புறவன்.. தமிழ் தாய்க்கு பிறந்த பிறப்பாக இருக்காது.

புலிக்கொடி சோழர் காலத்தில் இருந்து பறக்கும் தமிழர்களின் தேசியக் கொடி. அதற்காக உயிரும் தியாகம் செய்தோர் ஆயிரக் கணக்கானோர். அவர்களின் ஆன்ம படைப்பே புலிகொடி. ஒரு இனத்தின் தேசியக் கொடியை எந்த நாடும் பயங்கரவாதம் என்று சொன்னதில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடி வேறு தமிழீழ தேசிய புலிக்கொடி வேறு.

கட்டுரை எழுத முதல் இனப்பற்று.. இனம் என்பதைப் புரிஞ்சு கொள்ளுறது மட்டுமன்றி வரலாற்றை படியுங்கள். தமிழீழ தேசியக் கொடியாக என்றும் எப்போதும் புலிக்கொடி இருக்கும் விளங்கும். தேசியக் கொடியை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்க முதலில்.

அதனை விட்டுக்கொடு என்பதிலும் தமிழன் என்ற அடையாளத்தை தொலைத்துவிட்டு நாடோடி அகதி பேடிகளாக வாழ்வது நன்று. போய் அதைச் செய்யுங்கள். அதுதான் தமிழர்களுக்கு சரியானதாக இருக்கும்..! :D :D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி தமிழ்த்தேசியத்தின் உயிர்க்கொடி

அது ஈழத்தமிழரின் தேசியக்கொடி

இதை உணர்பவன் தமிழ் மணிக்கொடி

இல்லையேல் ஈழத்தமிழன் வாழ்வது தெருக் கோடி

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள விவாதம். தயா சொல்லுவதுபோல மக்கள் விருப்பம் மட்டுமே இறுதியானது. களத்தில் வாழும் மக்களின் கருத்துக்களை திரட்டியே அடிப்படையான விடயங்களில் முடிவு எடுக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

:D நெல்லைய்யன், கலக்குகிறீர்கள்.

புலிக்கொடி....அது தமிழனின் அடையாளம் அல்லவா?? அதைப் பிரபாகரன் பாவித்ததால் அது அவர்களுடையது ஆகிவிடுமா?? வேண்டுமானால் அதிலுள்ள துப்பாக்கிகள், ரவைகளை எடுத்துவிட்டு வேறு வடிவில் அமைக்கலாமே?? எதற்கு முற்றாகத் தூக்க வேண்டும்.

தாயகத்திலுள்ள மக்களின் முடிவுதான் அங்கே தமிழ் அரசியலை தீர்மானிக்கிறதென்பதை மறுக்க முடியாது.ஆனால் அந்த அரசியலின் மூலம் நாம் அடைவது என்னவென்பது வேறுகதை.அதற்காகப் புலத்தில் நாம் அரசியல் மலடர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை. எம்மாலானதை நாம் செய்துகொண்டுதானிருக்க வேண்டும். ஏனென்றால் நாம் பிறந்ததும் அதே மண்ணில்த்தான்.

போராட்டம் பற்றிய வரலாறுகளை படிக்க முன் விட்டுக்கொடுப்புகள் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனி நாடு கேட்டு போராடி இளப்புகளை சந்தித்ததே ஒளிய உலகின் எந்த மூலையிலும் எமக்கு குறைந்ந பட்ச அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. போராட்டமும் இன்று தோல்வியில் முடிவடைந்துள்ளது. அப்ப பிரச்சனை என்ன> ஏன் பிழைத்தது என்று ஆராய்வதை விடுத்து உணர்ச்சிவசப்பட்டு தொண்டை கிழிய கத்துவதால் பிரியோசனம் கிடையாது. நாம் குறைந்த பட்ச விட்டுக்கொடுப்பை கூட செய்யத்த யாராக இல்லை . விட்டுக்கொப்பதால் நன்மை வரும் என்றால் விட்டுக்கொடுப்பதே நல்லது.

முன்னொரு காலத்தில் தளத்தில் நின்று போராடிய இன்னுமொருவரின் கருத்து ஒரு வாசிப்புக்கு!

நடந்துகொண்டிருப்பது ஊடும் பாவுமாக ஆயிரம் பிரச்சினைப்பாடுகளைக்கொண்ட இனமுரண் அரசியல். பிரச்சினையில் உலகின் அத்தனை வல்லாதிக்க சக்திகளும் ஏதோவொருவிதத்தில் தலையைப் போட்டுள்ளன. அந்நிய மூலதனமும் பன்னாட்டு நிறுவனங்களும் இலங்கை அரசின் இயங்குதிசையை தீர்மானிப்பதில் தீர்மானகரமான பாத்திரங்களை வகிக்கின்றன.

புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் சமூகம் தனது கால்களைப் புகலிடத்தில் ஆழ ஊன்றிவிட்டது. சரிபாதித் தொகையினர் புலம் பெயர்ந்த நாடுகளில் குடியுரிமை பெற்றிருக்க மறுபாதித் தொகையினர் குடியுரிமை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு ஈழத்து அரசியல்மீது இணையத்தில் செய்திகளைப் படிப்பது என்பதைத் தாண்டி வேறெந்த ஈடுபாடும் கிடையாது. அரசியல் ஈடுபாடுள்ளவர்களில் மிகப் பெரும்பகுதியினர் தமிழ்த் தேசிய உணர்வால் உந்தப்பட்டிருப்பவர்களே தவிர இவர்கள் அரசியல்மயப்படுத்தப்பட்ட அணிகள் கிடையாது. இவர்கள் நெஞ்சார மனமுருகி வடிக்கும் கண்ணீருக்கு தார்மீகப் பெறுமதி மட்டுமேயுள்ளது. அரசியல்ரீதியாக இவர்கள் திறனற்றவர்கள். இவர்கள் தமது குற்ற உணர்ச்சியைத் தணிக்க எடுக்கும் முட்டாள்தனமான செயற்பாடுகள் ஈழத்தில் பாரம் சுமக்கும் மக்களை மேலும் அழுந்தவே வழிவகுப்பவை.

“புலிகளுக்கு எதிரான முதற்கட்டப் போர் முள்ளிவாய்க்காலில் முடிந்துவிட்டாலும் அடுத்தகட்டப் போரை புலம் பெயர்ந்த நாடுகளில் ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது” என்கிறார் கோத்தபய ராஜபக்ச. இங்கே வெறும் விளையாட்டுக்கு நடத்தப்படும் நாடு கடந்த அரசு நாடகத்தை ஒரு காரணமாக வைத்து மேலும் ஈழத்தில் அடக்குமுறைச் சட்டங்களை வலுப்படுத்தத் திட்டமிடுகிறது இலங்கை அரசு. வெளிநாட்டிலுள்ள கொஞ்சப் பேரின் கௌரவ திக்காக சிறைகளிலே அடைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான போராளிகள் காலம் முழுதும் சிறையிலேயே கிடக்க வேண்டியிருக்கும்.

போராட்டங்களை நடத்தினால் அரசு அடக்குமுறையை அதிகரிப்பது இயல்புதானே, அதற்காக போராட்டத்தை விட்டுவிட முடியுமா என ஒருவர் கேட்கலாம். இல்லை விட்டுவிட முடியாது. கண்டிப்பாக போராட வேண்டும். அதற்கான விளைவைப் போராடுபவர்கள் எதிர்கொண்டேயாக வேண்டும். ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்க நாடகம் ஒரு போராட்டம் கிடையாது. இது வெறும் ஏமாற்று வித்தை. இதன் விளைவுகள் இந்த நாடு கடந்த அரசுக்காரர்களை நேரடியாகப் பாதிக்கப் போவதுமில்லை. விளைவுகளை ஈழத்தில் வாழும் மக்களே சுமக்க நேரிடும்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஒன்றைச் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களின் நோகாத விருப்புகளை ஈழத்திலே மக்கள் செத்துச் சுமக்க முடியாது. உங்களின் அரசியல் விருப்புகளிற்கு ஈழத்து மக்களை நீங்கள் பலிகொடுக்க முடியாது. எதிர்காலத்து ஈழத் தமிழர்களின் அரசியல் விருப்பும் இயங்குதிசையும் அவர்களால் மட்டுமே தீர்மானிக்கப்படும். அவர்களுக்கு உறுதுணை செய்வது மட்டுமே உங்களது வேலை. நீங்கள் உறுதுணை நிற்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களிற்கு உபத்திரமாய் இராதீர்கள். உங்களுக்கு போராட்டம் என்பது இடது கையில் கொக்கோ கோலாவுடனும் வலதுகையில் சாண்ட்விச்சுடனுமான ஒரு மாலை நேர ஒன்றுகூடல்.

நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வின் சிறப்புப் பிரதிநிதி அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்ஸி க்ளார்க் என்பதிலிருந்தே நாடுகடந்த தமிழீழ அரசின் அரசியல் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளலாம். புலிகளின் அத்தனை பாஸிசச் செயற்பாடுகளையும் மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்திவந்த பீற்றர் சால்க்கும் கரண் பார்க்கரும் நாடு கடந்த அரசுக்கான மதியுரைஞர்கள். கடந்த முப்பது வருட அழிவுகளிலிருந்து நமது நாடு கடந்த அரசுக்காரர்கள் எதையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. பிறகும், பிறகும் அவர்கள் வல்லாதிக்க நாடுகளின் தொங்குசதைகளாகவே கிடக்க விரும்புகிறார்கள். ஆனால் இந்த அழிவுகளிலிருந்து நமது மக்கள் பாடங்களைக் கற்றுக்கொண்டேயாக வேண்டும்.

பெயருக்காவது ஒரு அரசு, ஒரு மாநிலம், ஒரு முனிஸபலிட்டி எங்கேயாவது இதுவரை நாடு கடந்த அரசுக்கு நல்லெண்ண சமிக்ஞை காட்டியுள்ளதா? நாடு கடந்த அரசாங்கம் அங்கீகாரத்தைப் பெறும் என்று எந்த நம்பிக்கையில் மக்களின் பணத்தில் இந்தக் கூத்துகள் அரங்கேறுகின்றன? ‘எங்களுக்காகத் தலைவர் சிந்திக்கிறார்’ என்று மூட நம்பிக்கையில் அழுந்திய காலங்கள் போய் எங்களுக்காக உருத்திரகுமாரன் அண்ணா சிந்திக்கிறார் என்ற முட்டாள்தனமான நம்பிக்கையுடன் கேட்டுக் கேள்வியில்லாமல் அடங்குவதாக இனிக் காலம் அமையக் கூடாது

.

நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வின் சிறப்புப் பிரதிநிதி அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்ஸி க்ளார்க் என்பதிலிருந்தே நாடுகடந்த தமிழீழ அரசின் அரசியல் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளலாம். புலிகளின் அத்தனை பாஸிசச் செயற்பாடுகளையும் மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்திவந்த பீற்றர் சால்க்கும் கரண் பார்க்கரும் நாடு கடந்த அரசுக்கான மதியுரைஞர்கள். கடந்த முப்பது வருட அழிவுகளிலிருந்து நமது நாடு கடந்த அரசுக்காரர்கள் எதையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. பிறகும், பிறகும் அவர்கள் வல்லாதிக்க நாடுகளின் தொங்குசதைகளாகவே கிடக்க விரும்புகிறார்கள். ஆனால் இந்த அழிவுகளிலிருந்து நமது மக்கள் பாடங்களைக் கற்றுக்கொண்டேயாக வேண்டும்.

அப்ப நீங்களாவது நாடுகடக்காத அரசை உருவாக்கி சோசலிச சிந்தனையுடன் ,சோசலிசநாடுகளுடன் சேர்ந்து அந்த மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கலாம் அல்லோ ,புலி பாசிசவாதிகளைத்தானே இப்ப காந்தியவாதிகள் ,ஜனநாயகவாதிகள் ,மவோயிஸ்ட்கள் எல்லோரும் சேர்ந்து அழிச்சுப்போட்டினம்....இனி என்கன்ட காட்டில மழைதானே

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாப்போல பின்னுறீயள்...??

எங்களுக்கும் அரசியல் தெரியுமில்லே.............

அப்ப நீங்களாவது நாடுகடக்காத அரசை உருவாக்கி சோசலிச சிந்தனையுடன் ,சோசலிசநாடுகளுடன் சேர்ந்து அந்த மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கலாம் அல்லோ ,புலி பாசிசவாதிகளைத்தானே இப்ப காந்தியவாதிகள் ,ஜனநாயகவாதிகள் ,மவோயிஸ்ட்கள் எல்லோரும் சேர்ந்து அழிச்சுப்போட்டினம்....இனி என்கன்ட காட்டில மழைதானே

நாடு கடந்த அரசால் தமிழ் மக்களுக்கு எதுவும் விடியப்போவதில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது. எதையாவது செய்ய வேண்டுமென்ற ஆவலாதியில் மிகச் சிறுபகுதி மக்கள் நாடு கடந்த அரசுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் நாடு கடந்த அரசு என்ற நாடகத்தை அரங்கேற்றுபவர்களுக்குத் திட்டவட்டமான நலன்களுள்ளன. அவை பொருளியல் மற்றும் சமூக மதிப்பு சார்ந்த நலன்கள். இவற்றால் விளையும் துன்பங்களை அனுபவிக்கப்போகிறவர்கள் ஈழத்திலுள்ள தமிழ் மக்கள் மட்டுமே.

சரி, நாடு கடந்த தமிழீழ அரசின் வேலைத் திட்டம் என்ன என்றால் எவரிடமும் திட்டவட்டமான பதிலில்லை. உருத்திரகுமாரனோ இராசதந்திரரீதியில் செயற்படுவது என்கிறார். அதுவென்ன இராசதந்திரம் எனக் கேட்டால் அதற்குப் பதில் கிடையாது. இவர்களின் இராசதந்திரம் முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்த பேரழிவின் இரத்த வெடில் மறையும் முன்பே மறுபடியும் வெட்கமில்லாமல் இராசதந்திரம் என்று பிதற்றத்தொடங்கியிருக்கிறார்கள் இந்த அயோக்கியர்கள்.

புலிகள் அறிவித்த அதே தமிழீழப் பிரதேசம்தானா இவர்கள் இப்போது முன் வைக்கும் தமிழீழம்? அதை அடைவதற்கான உங்களது வேலைத்திட்டம் என்ன? அப்படியானால் அந்தப் பிரதேசத்தில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களின் நிலையென்ன? உங்கள் அரசின் அரசியல் பண்பென்ன? திறந்த பொருளாதாரக் கொள்கை குறித்த உங்கள் நிலைப்பாடென்ன? தமிழ் சமூகத்தின் முதன்மை முரண்பாடான சாதியம் குறித்த உங்கள் நிலைப்பாடென்ன? என்று ஆயிரம் கேள்விகளுள்ளன. இவை குறித்தெல்லாம் நாடு கடந்த அரசாங்கத்தினர் பேசுவதில்லை. சன்னி பிடித்தவர்கள் மாதிரி இராசதந்திர நகர்வு என்று ஆள்மாறி ஆள்மாறிப் பிதற்றிக்கொண்டுள்ளார்கள்.

நடந்துகொண்டிருப்பது ஊடும் பாவுமாக ஆயிரம் பிரச்சினைப்பாடுகளைக்கொண்ட இனமுரண் அரசியல். பிரச்சினையில் உலகின் அத்தனை வல்லாதிக்க சக்திகளும் ஏதோவொருவிதத்தில் தலையைப் போட்டுள்ளன. அந்நிய மூலதனமும் பன்னாட்டு நிறுவனங்களும் இலங்கை அரசின் இயங்குதிசையை தீர்மானிப்பதில் தீர்மானகரமான பாத்திரங்களை வகிக்கின்றன. சர்வதேச அரசுகளிடம் பெருமளவு ஆதரவைப் பெற்ற சனாதிபதியாக மகிந்த ராஜபக்ச மிருக பலத்துடன் இருக்கிறார். இதற்குள் உருத்திரகுமாரனும் ஈழநாடு பாலச்சந்திரனும் என்ன இராசதந்திரத்தை நிகழ்த்தப் போகிறார்கள்? ராஜபக்சவை சவால் செய்ய இவர்களிடம் என்ன அரசியல் வேலைத்திட்டம் உள்ளது? அமெரிக்கா அதிபருக்கும் பிரான்ஸ் அதிபருக்கும் ‘பெட்டிசம்’ அனுப்புவதெல்லாம் ஒரு இராசதந்திரமா என்ன? இவர்களின் தந்திரத்தைப் பரிசோதிப்பதற்கு இது சீட்டு விளையாட்டல்ல. இது ஒரு இனத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை.

:D

Bond007, on 28 May 2010 - 07:50 PM, said:.

நாடுகடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வின் சிறப்புப் பிரதிநிதி அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்ஸி க்ளார்க் என்பதிலிருந்தே நாடுகடந்த தமிழீழ அரசின் அரசியல் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளலாம். புலிகளின் அத்தனை பாஸிசச் செயற்பாடுகளையும் மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்திவந்த பீற்றர் சால்க்கும் கரண் பார்க்கரும் நாடு கடந்த அரசுக்கான மதியுரைஞர்கள். கடந்த முப்பது வருட அழிவுகளிலிருந்து நமது நாடு கடந்த அரசுக்காரர்கள் எதையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. பிறகும், பிறகும் அவர்கள் வல்லாதிக்க நாடுகளின் தொங்குசதைகளாகவே கிடக்க விரும்புகிறார்கள். ஆனால் இந்த அழிவுகளிலிருந்து நமது மக்கள் பாடங்களைக் கற்றுக்கொண்டேயாக வேண்டும்.

ஐயோஓஓஓஓஒ......... சிரிப்பு வருது! சிரிப்பு அவ்ருது!! சிரிக்கச்சிரிக்க சிரிப்பு வருது!!! தலையை கொண்டு போய் முட்ட இடமில்லாமல் கிடக்கு? :D

அப்ப நீங்களாவது நாடுகடக்காத அரசை உருவாக்கி சோசலிச சிந்தனையுடன் ,சோசலிசநாடுகளுடன் சேர்ந்து அந்த மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கலாம் அல்லோ ,புலி பாசிசவாதிகளைத்தானே இப்ப காந்தியவாதிகள் ,ஜனநாயகவாதிகள் ,மவோயிஸ்ட்கள் எல்லோரும் சேர்ந்து அழிச்சுப்போட்டினம்....இனி என்கன்ட காட்டில மழைதானே

சில்,சில் கொஞ்சம் இதை கேளுங்கோவன்!! ... உங்கை புலத்தில் கொஞ்சப்பேர் முன்பு புனாவின் அந்தத்துறை இந்தத்துறை என்று விளாசி அடித்து திரிந்து விட்டு இன்று பூனா பாஸிஸ்டுகளாம்!!!! ... அதுக்கு மேலை மே18 இற்குப்பின்னம் கே.பி எண்டு ஓடாத ஓட்டமென்ன ,,,,,,, ஓஓஓஓஓஒ!!! பின்பு நாடு கடந்த அரசாங்கம் எண்டு ... உங்கை பெயர் வருமெண்டால் உரிந்து விட்டுட்டு வீதிகளில் ஓடக்கூடிய பசில்/மகிந்த சிந்தனையாளர்களான தேசம்/லிட்டிலெய்ட் கும்பலுடனும் சேர்ந்து நாடு கடந்த அரசுக்கு பப்ளிக் கூட்டமும் போட்டவையளாம்!!!!!!!!!! ஏதோ சேர்ந்து கே.பியை உள்ளுக்குள் வழியனுப்பி விட்டுட்டு இன்று வந்து நாடு கடந்த அரசாங்கம் ... என்னா .... இப்ப சோசலிஸமாம்!!!!!! ... ஐயகோ, பாரதி இல்லாமல் போய் விட்டான் இந்த மனிதத்தை தொலைத்தவர்களை வினைந்து நாலு வரி எழுதித் தள்ள!!!!!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நுணாவிலான்.

பார்த்துணர்வார்களா?

புலிக்கொடியோடு வெள்ளையர். அதனை வேண்டாமென்று நிற்குமெம்மவர்.

சில்,சில் கொஞ்சம் இதை கேளுங்கோவன்!! ... உங்கை புலத்தில் கொஞ்சப்பேர் முன்பு புனாவின் அந்தத்துறை இந்தத்துறை என்று விளாசி அடித்து திரிந்து விட்டு இன்று பூனா பாஸிஸ்டுகளாம்!!!! ... அதுக்கு மேலை மே18 இற்குப்பின்னம் கே.பி எண்டு ஓடாத ஓட்டமென்ன ,,,,,,, ஓஓஓஓஓஒ!!! பின்பு நாடு கடந்த அரசாங்கம் எண்டு ... உங்கை பெயர் வருமெண்டால் உரிந்து விட்டுட்டு வீதிகளில் ஓடக்கூடிய பசில்/மகிந்த சிந்தனையாளர்களான தேசம்/லிட்டிலெய்ட் கும்பலுடனும் சேர்ந்து நாடு கடந்த அரசுக்கு பப்ளிக் கூட்டமும் போட்டவையளாம்!!!!!!!!!! ஏதோ சேர்ந்து கே.பியை உள்ளுக்குள் வழியனுப்பி விட்டுட்டு இன்று வந்து நாடு கடந்த அரசாங்கம் ... என்னா .... இப்ப சோசலிஸமாம்!!!!!! ... ஐயகோ, பாரதி இல்லாமல் போய் விட்டான் இந்த மனிதத்தை தொலைத்தவர்களை வினைந்து நாலு வரி எழுதித் தள்ள!!!!!!!!!

மன்னிக்கவும்! விசில் அடிச்சான் குஞ்சகள் எப்பவுமே விசிலடிப்பவர்கள் - களத்தில் போராடியவர்கள் ஏதாவது செய்ய துடிப்பவர்கள்! ஆனால் போகிற பாதை பிழையெனப்பட்டால் விமர்சிக்கவும் தயங்காதவர்கள்! விசிலடிசசான் குஞ்சுகள் எப்பவுமே விசிலடிப்பதை தவிர வேறு என்ன செய்வார்கள். பாவம்! போராட்டம் மக்களிற்காக! இந்த போராட்ட ஆரம்ப காலங்களில் சோசலிச தமிழீழம் காண எமது உயிர் உடல் அனைத்தையும் அர்ப்பணித்து எங்கள் இயக்கத்தின் தலைவர் திரு பிரபாகரனிற்கு விசுவாசமாய் இருப்போம் என சத்திய பிரமாணமும் செய்தவர்கள்! போராடி வருகையில் இடையில் சோசலிசத்தை விட்டது போல பிழை என்றால் மக்கள் நலனிற்காக இயக்கத்தையும் கைவிடுவது தவறில்ரல. குறிப்பாக இறுதி யுத்த நிகழ்வுகளும் அதன் பின்னான நிலைமைகளும்! இது புரியது விசிலடிப்பவர்கள் அடித்துக்கொண்டே இருப்பார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி....அது தமிழனின் அடையாளம் அல்லவா?? அதைப் பிரபாகரன் பாவித்ததால் அது அவர்களுடையது ஆகிவிடுமா?? வேண்டுமானால் அதிலுள்ள துப்பாக்கிகள், ரவைகளை எடுத்துவிட்டு வேறு வடிவில் அமைக்கலாமே?? எதற்கு முற்றாகத் தூக்க வேண்டும்.

ரஸ்சியக் கொடியில் அரிவாள் இருக்கு.சிங்களத்தின் கொடியில் வாள் இருக்கு.இன்னும் பல நாடுகளின் கொடியில் பற்பல ஆயுதங்கள் இருக்கின்றன.நமது தேசியக் கொடியான புலிக்கொடியில் அது கடந்துவந்த போராட்ட பாதையின் தடயங்கள் இருப்பதில் என்ன தவறு?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடிஇல்லாமல் போராட்டத்துக்கு போனால் பக்கிளோ என்று இருக்கு கொடியுடன் போனால் போராட்ட உணர்வு நிரம்பித்தழும்புது, உடலில் ஒரு முறுக்கு ஏறுகிறது, மூச்சில் ஒரு சக்தி பிறக்கிறது, இது உணர்வு சம்பந்தப்பட்டது. கொடியில்லா போராட்டத்துக்கு நான் ஒரு போதும் வரமாட்டேன்.

மன்னிக்கவும்! விசில் அடிச்சான் குஞ்சகள் எப்பவுமே விசிலடிப்பவர்கள் - களத்தில் போராடியவர்கள் ஏதாவது செய்ய துடிப்பவர்கள்! ஆனால் போகிற பாதை பிழையெனப்பட்டால் விமர்சிக்கவும் தயங்காதவர்கள்! விசிலடிசசான் குஞ்சுகள் எப்பவுமே விசிலடிப்பதை தவிர வேறு என்ன செய்வார்கள். பாவம்! போராட்டம் மக்களிற்காக! இந்த போராட்ட ஆரம்ப காலங்களில் சோசலிச தமிழீழம் காண எமது உயிர் உடல் அனைத்தையும் அர்ப்பணித்து எங்கள் இயக்கத்தின் தலைவர் திரு பிரபாகரனிற்கு விசுவாசமாய் இருப்போம் என சத்திய பிரமாணமும் செய்தவர்கள்! போராடி வருகையில் இடையில் சோசலிசத்தை விட்டது போல பிழை என்றால் மக்கள் நலனிற்காக இயக்கத்தையும் கைவிடுவது தவறில்ரல. குறிப்பாக இறுதி யுத்த நிகழ்வுகளும் அதன் பின்னான நிலைமைகளும்! இது புரியது விசிலடிப்பவர்கள் அடித்துக்கொண்டே இருப்பார்கள்!

... கக்கக்க போ ...

... முந்தநால் கே.பிக்கும், நாடுகடந்த அரசுக்கு என்ன ராமுக்கு பின்னுக்கு அணி வகுக்கேக்க, உந்த சோஸலிஸம் தெரியாமல் போயிட்டுதோ???? ...... யாருக்கு உந்த புடா??????

..... உண்மைதான் விசிலடித்தானுகளை ஏமாற்றுவது இலகுதான்!!!!!

... விட்டால் ... சோஸலிஸம், பன்முகத்தன்மை, ..... உள்ள எல்லா வார்த்தைகளையும் போட்டு .... ஏறியிருந்து மொட்டை அடித்து சந்தனம் தடவிப் போடுவீங்கள்! :lol:

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.