Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின அழிப்பில் அமெரிக்காவின் பங்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

//The government relentlessly accused America as conspiring against Sri Lanka and supporting the LTTE. But, the stark truth was ,it was America’s intelligence unit and the Asia Pacific Command which contributed tremendously to destroy the LTTE . The USA Asia Pacific Command provided the satellite technology to locate the whereabouts of Prabhakaran. In spite of this , the Sri Lankan government continued to demonstrate to the Sri Lankans that USA was its enemy. Moreover , the Sri Lankan government aligning itself with countries like Cuba, Libya, Iran and Venezuela which are enemies of America , and by maintaining relations with them made statements hostile to America and Western countries.//

//It is true that China supplied weapons to the Sri Lankan government to fight the war , but only after collecting payment from Sri Lanka. On the contrary , America did not collect a single cent from Sri Lanka in taking the initiative and blocking the weapons supply to the LTTE . Had America allowed the LTTE to collect weapons as freely as they wanted by allowing the LTTE International network to operate without hindrance, the Sri Lankan government may not have had even a ghost of a chance to meet the weapon might and the war machinery of the LTTE , irrespective of how much money the Government would have expended on arms purchases.//

இது நேற்று (26-05-2010) வெளியான டெய்லிமிரர் பத்திரிகையின் ஆசிரியர் கருத்துக்களதில் இருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பதை காட்டி நிற்கின்றது. நாங்கள் தமிழின அழிப்பில் இன்னும் இந்தியா மட்டுமே எமது முதல் எதிரியாக கருதிவந்திருக்கின்றோம். ஓசைப்படாமல் அமெரிக்கா இந்தியவுக்கு நிகராக இதில் பங்குவகித்து இருக்கின்றது. புலிகளின் ஆயுத கப்பல்கள் குறித்த துல்லியமான தகவல்களை அமெரிக்காவே வழங்கியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல் புலிகளின் ஆயுத கொள்வனவு முகவர்கள் பலரை கைதுசெய்தும் இருந்தது. புலிகள் கொள்வனவு செய்த புதியரக ஆயுதங்கள் வன்னியை அடைந்துவிடக்கூடாது என்பதில் இந்தியாவைவிட அமெரிக்கா உறுதியாக இருந்துள்ளது. மொத்தத்தில் ஈழப்போரில் புலிகளின் கைகள் ஓங்கிவிடக்கூடாது என்பதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடு. தற்போது இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பில் அமெரிக்கா நீலிக்கண்ணீர் வடிக்கின்றது. தற்போதும் அமெரிக்க சார்புநிலை ஒன்றை இலங்கை எடுக்குமாயின் போர்க்குற்றம் மெல்ல மறைக்கப்பட்டுப் போய்விடும்.

கீழே டெய்லிமிரரின் முழுக் கட்டுரை:

Mahinda to use G 15 power to exert pressure on USA

http://news.yahoo.com/s/afp/20100526/wl_sthasia_afp/ussrilankadiplomacy_20100526090241

அமெரிக்காவுக்குத் தேவையானதைக் கொடுத்தால் போர்க்குற்ற விசாரணை மறைந்து போகும்.

அமெரிக்கா-சீனா-இந்தியாவை ஒரே நேரத்தில் சமாளிக்கும் சிங்களவர் கெட்டிக்காரர்தான்.

"நாங்கள் தமிழின அழிப்பில் இன்னும் இந்தியா மட்டுமே எமது முதல் எதிரியாக கருதிவந்திருக்கின்றோம். ஓசைப்படாமல் அமெரிக்கா இந்தியவுக்கு நிகராக இதில் பங்குவகித்து இருக்கின்றது"

நல்லவேளை நாங்கள் என்று எழுதினீர்கள்.

ஒவ்வொரு நாடும் தொடர்ந்து தடை போட்டுக் கொண்டுவந்ததிலிருந்து விளங்காவிட்டால் என்ன செய்வது.நோர்வே நேரடியாகவே சொன்னது இனி ஒரு யுத்தம் வந்தால் நீங்கள் ஒட்டு மொத்தமாக அழிந்து போய்விடுவீர்களென்று.

எல்லாருமாக சேர்ந்து அழிக்கப்போகின்றார்களென்பது பலருக்கு தெரிந்து விட்டிருந்தது.புலிகளுக்கும் ஓரளவு நிலமைகள் தெரிந்திருந்தது ஆனால் இப்படிப் போய்முடியும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.30,40 ஆயிரம் மக்களை கொன்றாலும் பரவாயில்லை புலிகளை முடிக்க வேண்டும் என உலகம் முடிவெடுக்கும் என்று.

இதை பற்றி கருதிலெடுக்காமலும்,அக்கறைப்படாமலும் இருந்தவர்கள் புலம் பெயர் புலிகள் மாத்திரமே.கடைசி நிடம் வரை இந்தா அடியைப் பார் என எத்தனைகதை சொன்னார்கள்.உள்ளுக்க விட்டடிக்கின்றது,ஸ்டாலின் கிறாட்,நட்டு வக்காலி அற்றாக்,வன்னிக் காட்டுக்க மழை பெய்ய புலி அடிக்கவே தேவையில்லை ஆமி புதையுண்டே அழிந்து போகும்.

இவ்வளவு அழிவிற்கு பின்பும் மீதமிருப்பவர்களையும் தங்களின் சுயநலதிற்காக அழிக்க முனைந்திருப்பதுதான் ஏற்க முடியாமல் இருக்கின்றது.

http://news.yahoo.com/s/afp/20100526/wl_sthasia_afp/ussrilankadiplomacy_20100526090241

அமெரிக்காவுக்குத் தேவையானதைக் கொடுத்தால் போர்க்குற்ற விசாரணை மறைந்து போகும்.

அமெரிக்கா-சீனா-இந்தியாவை ஒரே நேரத்தில் சமாளிக்கும் சிங்களவர் கெட்டிக்காரர்தான்.

தமிழர் இவர்களை சமாளிக்கும் வல்லமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நாங்கள் தமிழின அழிப்பில் இன்னும் இந்தியா மட்டுமே எமது முதல் எதிரியாக கருதிவந்திருக்கின்றோம். ஓசைப்படாமல் அமெரிக்கா இந்தியவுக்கு நிகராக இதில் பங்குவகித்து இருக்கின்றது.

தமிழர் இந்தியாவை உறவினராக நம்பியிருந்தனர். அமெரிக்கா மீது நம்பிக்கை வைக்கவில்லை.

இந்தியா நேரடியாக இனப்படுகொலை செய்தது, அமெரிக்கா அதைச் செய்யவில்லை.

இந்தியா சிங்களவனின் தமிழின அழிப்புக்கு பலவருடங்களாக நேரடியாக துணை போகிறது. அமெரிக்கா அதைச் செய்யவில்லை.

இந்தியா சிங்களவனின் போர்க்குற்றங்களை மறைக்க முழு மூச்சுடன் முயலுகிறது. அமெரிக்கா அதைச் செய்யவில்லை.

தமிழரை அழிப்பதில் அமெரிக்காவின் பங்கு 1 எனின் இந்தியாவின் பங்கு 1,000,000,000,000.

எனவே இரண்டையும் ஒப்பிடுவது துளியும் பொருத்தமல்ல.

அமெரிக்கா கேட்டதை பிரபாகரன் கொடுப்பதற்கு சம்மதித்திருந்தால் இன்று நிலமை வேறு

இந்தியாவிற்கு விசுவாசம் காட்டப்போய் அழிந்ததுதான் மிச்சம்

அமெரிக்கா கேட்டதை பிரபாகரன் கொடுப்பதற்கு சம்மதித்திருந்தால் இன்று நிலமை வேறு

இந்தியாவிற்கு விசுவாசம் காட்டப்போய் அழிந்ததுதான் மிச்சம்

உண்மை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா கேட்டதை பிரபாகரன் கொடுப்பதற்கு சம்மதித்திருந்தால் இன்று நிலமை வேறு

அப்படி என்ன சங்கதியைக் கேட்டார்கள்? ஆனையிறவு கேந்திரப்பகுதியையா அல்லது நந்திக்கடலையா?

அப்படி என்ன சங்கதியைக் கேட்டார்கள்? ஆனையிறவு கேந்திரப்பகுதியையா அல்லது நந்திக்கடலையா?

கிருபனை பிடித்துத் தாருங்கள் என்று கேட்டார்களாம்! :D

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனை பிடித்துத் தாருங்கள் என்று கேட்டார்களாம்! :D

ஹி.ஹி... அமெரிக்காவுக்கு பல தடவை போய் வந்திருந்தும் கோட்டை விட்டுவிட்டார்கள் எப்.பி.ஐ.யும், சி.ஐ.ஏ.யும் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஹி.ஹி... அமெரிக்காவுக்கு பல தடவை போய் வந்திருந்தும் கோட்டை விட்டுவிட்டார்கள் எப்.பி.ஐ.யும், சி.ஐ.ஏ.யும் :D

அவர்களுக்கென்று சில ........ உண்டு

பிரபாகரனின் கையால் வாங்கினால்தான் பெருமையாம்

தற்போதைக்கு உலவலாம் தைரியமாக...

ஆனால்...........???

Edited by விசுகு

ச்மாதான பேச்சுவார்த்தைக் காலாத்தில் நோர்வே,அமெரிக்கா ,இந்தியா இவை எல்லாமுமே ஒரே திட்டத்தின் அடிப்படியிலையே இயங்கின.சிறிலங்காவைக் கொண்டு புலிகளை ஒழிப்பது அதன் பின் சிறிலங்காவை தாம் சொல்பன்வற்ரிற்க்கு ஏற்ப நடக்க வைப்பது.இதில் சிறிலங்கா மிகத் தந்திரமாக சீனா,பாக்கிஸ்த்தான் ரசியா இரான் என எதிர்க் கூட்டணியை அமைதுதுக் கொள்வதன் மூலம், இந்தப் பிடிக்குள் இறுகுவதைத் தவிர்த்துக்கொண்டது.அம்ரிக்காவோ இந்தியாவோ ,சீனவினதும் பாக்கிஸ்தனதும் தலையீட்டை எதிர்பார்க்கவில்லை.அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இதை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.தற்போது சிறிலங்காவை வழிக்குக் கொண்டுவர போர்க்குற்ற விசாரணை என்னும் ஆயுததை எடுத்து உள்ளனர்.

சிறிலங்கா இதற்கெல்லாம் வழைந்து கொடுக்கப் போவதில்லை.புலிகளை அழித்தன் தவறை அமெரிக்க ,இந்தியா நோர்வேக் கூட்டணி இப்போது உணரும் இனியும் உணரும்.

தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்தியா ஆகக் கூடினால் அமெரிக்கா என்னும் எல்லைக்குள் நின்று கொண்டு அரசியல் செய்ததால் அழிந்து போனார்கள்.சீனா, இரான் பாக்கிஸ்த்தான் எனவோ அல்லது இந்தியாவிற்க்குள் இருக்கும் புரட்ச்சிகர சக்திகளுடன் இணைந்து போராடியோ இருந்தால் ,இந்தியா இந்தளவு தூரத்திற்க்கு புலைகளையோ தமிழரின் அரசியலையோ அழிக்க முனனிந்திருக்காது.இன்னும் இந்தியா இந்தியா என்று கூவிக் கொண்டிருப்பதால் தமிழருக்கு ஒன்றும் விழையப் போவதில்லை.சிங்களவரே தொடர்ந்தும் காய்களாஇ இராஜதந்திரமாக நகர்த்திக் கொண்டிருப்பார்கள்.இதில் அவர்கள் பல நூறு ஆண்டுகளாக அனுபவம் பெற்றவர்கள்.தமிழர்கள் நீதியாக நேர்மையாக காலாம் க்லாமாக போராடினாலும் அவர்கள் இந்திய அடிமைகளாகவே போராடிக் கொண்டிருப்பார்கள்.என்று தமிழர்கல் இந்தியாவை எதிர்துப் போராடுகிறார்களோ அன்று தன அவர்களுக்கு விடிவு பிறக்கும்.

... 9/11 ... உலக ஒழுங்கமைப்பையே மாற்றிய நாள்! அதன் பின் ஆயுதம் வைத்திருப்பவன் எல்லாம், அவன் ஒடுக்கப்பட்ட இனத்துக்காக போராடுபவனோ, இல்லை சர்வாதிகாரத்துக்கு எதிராக போராடுபவனோ ... என்னவாக இருப்பினும் அவன் ஒருநாள் தமக்கெதிராக திரும்புவான் என உலகம் நினைக்கத்தொடங்கியது. அதை மறுமரிசீலனை செய்யுமளவிற்கு இன்னுமே உலகம் வரவில்லை! ... அம்மாற்றத்தை ஏற்கவோ அல்லது விளங்கவோ முடியாமல் நாம் எம்மை அழித்துக் கொண்டோம்!

இறுதிக்காலத்தில் யுத்தநிறுத்தம் கையெழுத்தாகியவுடன் பாலா அண்ணா கூறியது ... "ஒரு தேசிய இனமானது தனது உரிமைக்காக ஆயுதம் எடுத்து, ஆயுதப்போராட்டம் அடையக்கூடிய அதியுயர் நிலையை நாம் அடைந்து விட்டோம். இனி எமது போராட்டம் அரசியலாகவே இருக்க வேண்டும், முடிபு வரை! ... இல்லை நாம் ஆயுதத்தை மீண்டும் தூக்குவோமாயின், நாம் எம்மை அழிப்பதற்கு வித்திடுவோம். .." ...

இனியும் நாம் வெட்டுவோம்/கிளிப்போம்/உடைப்போம் என்பதை விடுவோம். நிஜத்தில் எது நடைபெறுமோ அதை சிந்தித்து, உலக ஓட்டத்தினூடே பயணிப்போம்.

இந்த அமெரிக்க செய்தி மிக தெளிவானது. அதனை முதலில் புரிவோம்!

... 20 வருடங்களுக்கு மேலாக இந்திய எதிர்ப்புவாதம் என்னத்தை செய்தது?? எமக்கு நண்பன் அருகே வேண்டுமொழிய, கண்ணெட்டாத தூரத்திலல்ல!

அமெரிக்காவுக்குத் தேவையானதைக் கொடுத்தால் போர்க்குற்ற விசாரணை மறைந்து போகும்.

அமெரிக்கா-சீனா-இந்தியாவை ஒரே நேரத்தில் சமாளிக்கும் சிங்களவர் கெட்டிக்காரர்தான்.

நீங்கள் சொன்ன உண்மையை - தமிழர் சிந்திக்க வேண்டும்.

தமிழர் தமால் இதை செய்யமுடியாது என நினைக்கும் பிற்போக்குத்தனம் தான் பெரும் பிரச்சினை.

(1) எல்லாத்தையும் நான் தான் செய்யோணும், அல்லது நான் நினைப்பது போலவே எல்லாரும் நடக்கவேண்டும் (ஏக பிரதிநிதித்துவ) மனப்பான்மை தமிழரின் பலவீனம்.

உதாரணமாக நேற்று ஊர்புதினத்தில் இணைக்கப்பட்ட "புலிக்கொடி தேவையா இல்லையா" என்ற விவாதத்தைப் போல. குறிக்கோளை மறந்து எது சரி? எது பிழை? என்று விவாதிப்பதில் காலம் போக, பிரிவுகளும் அதிகரிக்கிறது.

சிங்களவன் ஒவ்வொருவரின் தேவையை, பலம், பலவீனத்தை அறிந்து பல புத்திஜீவிகள் பட்டாளத்தை வைத்து திறமையாக சூழ்நிலைகளை சமாளிக்கிறான். தேவையானபோது முன்னணிக் குழு (அரசு) பின் வாங்க, பல்வேறு குழுவினர் அமெரிக்காவை எதிர்ப்பர் அல்லது இந்தியாவை எதிர்ப்பர். இதற்கு எல்லாரும் (அரசும்) முக்கியத்துவம் கொடுத்து அந்த நாட்டை அடக்குவர். முந்தநாள் இந்தியாவுடன் செய்ய வேண்டியுள்ள வார்த்தக ஒப்பந்தத்தை குப்பையில் போட மகிந்த கையாண்ட தந்திரம் இது தான். சுதந்திர கட்சியினரும் நீலக் கொடியை மறந்து, சிவப்புக்கொடி ஏந்தி தமது அரசையே எதிர்த்து இந்தியனை ஏமாற்றியுள்ளனர். அவர்களை இந்தளவுக்கு தயார்படுத்தியதில் சிங்களவனால் படுகொலை செய்யப்பட்ட லக்ஷ்மன் கதிர்காமர் முக்கியமானவர்.

மாறாக, தமிழர் குழுக்களோ, எதை செய்தாலும் நான் மட்டும் தான் செய்யவேண்டும், மற்றவர் செய்யவே கூடாது. ஒரே குழுவாக மட்டும் இயங்கவேண்டும் என்ற மனப்பான்மை. தப்பித் தவறி யாரும் தமக்கு ராஜதந்திர ரீதியில்கூட எதிர் கருத்து சொல்லவே கூடாது என்ற மனப்பான்மை. இவை பலவீனங்கள்.

(2) வெறும் அறிக்கை விடுவதும் சகல எதிர்ப்புக்கும் ஒரே கொடியை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்வதும், பிறகு நீண்டகாலத்துக்கு வாளாவிருப்பதும் தான் போராட்டம், தமது கடமை என்ற மனோபாவம். தமிழர் பிரதிநிதிகளும் இதே மனநிலையில் இருப்பது மகா கொடுமை.

அண்மையில் கூட்டமைப்பினர் செட்டிக்குள முகாமுக்கு தம்மை அனுமதிக்கவில்லை என, பல நாள் கழித்து தமிழில் மட்டும் விட்ட அரைகுறை கண்டன அறிக்கை இதற்கு நல்ல உதாரணம். ஏனைய பகுதிகளில் மக்களை சந்தித்ததோடு சரி. காணாமல் போனவர் விபரங்களைக் கூட திரட்ட முயலவில்லை. பிறகு "நாங்கள் மக்களை நேரடியாக சந்தித்தம். அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். அவலப்படுகிறார்கள். அவர்களுக்கு வீடு வாசல் இல்லை" என்று வார்த்தைகளில் தாம் சந்திப்பவர்களிடம் கூறுவதால் எதையும் சாதிக்க முடியாது. அந்தக் கணம் அனுதாபம் ஏற்பட்டாலும், உடன் மறந்துவிடுவர். யாரும் எந்த நடவடிக்கைகளும் எடுக்க மாட்டார்கள் - காரணம் ஆதாரம் எதுவுமில்லை. செவிவழிச் செய்தி போதாது.

கதிர்காமர் அரை குறையாக தொகுத்தபின் இறக்க, பல நூறு பக்கங்களை கொண்ட , படுகொலைக் காட்சிகள் அடங்கிய பல நூறு வர்ணப்படங்கள் அடங்கிய, பல்லாயிரம் மிக உயர்தர புத்தகங்களை வெளிவிவகார அமைச்சு அச்சடித்து வெளிநாடுகளுக்கு விநியோகித்தது. இந்த புத்தகத்தில் சிங்கள, இந்திய அரசு செய்த பல கொலைகளையும் புலிகளே செய்ததாக அழகாக சித்தரிக்கப்பட்டு இருப்பது விசேசம். ரோஹித குழு தாம் போகுமிடமெல்லாம் இந்த புத்தக பிரதிகளை கொண்டு சென்று, சந்திப்பவர்களிடமும், நிருபர்களிடமும், அரசியல் ஆய்வாளர்களிடமும் கொடுத்து, புலிகளை பயங்கரவாதிகளாக காட்டுவதில் வெற்றி கண்டனர். புத்தக விளக்கம் அழியாதது, பலரை அடையக் கூடியது. நீண்ட காலம் பாதுகாக்கப்படக் கூடியது.

அலறி மாளிகையில், வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு தேநீர் / உணவு வழங்கும் மண்டபத்தின் நாலு பக்க சுவர்களிலும், கூரைகளிலும் ஆளுயர படுகொலைப் படங்கள் (திகதி, இடம் முதலிய விபரங்களுடன்) காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாம். பார்த்தவர்கள் புலிகள் பயங்கரவாதிகள் தான் என்ற முடிவைத் தவிர வேறு முடிவே எடுக்க முடியாதபடி இந்த காட்சிகள் அமைந்துள்ளனவாம். இதில் அரசு செய்த தமிழினப் படுகொலைகளும் புலிகள் செய்ததாக சித்தரிக்கப் பட்டுள்ளனவாம்.

சிங்களவனின் வெற்றியின் இரகசியங்களில் முக்கியமானது இது.

(3) தமிழில் வெளிவரும் விபரங்கள் - ஆங்கிலத்திலும் வரவேண்டும். பிறநாட்டு பத்திரிகையாளர்களை, அரசியல் ஆய்வாளர்களை எமது பிரச்சினைகள் சென்றடைவதில்லை. இலங்கையில் தமிழரால் நடத்தப்படும் ஆங்கில பத்திரிக்கை இல்லாதது ஒரு குறை.

இலங்கையில் தமிழ் தரப்பு நியாயம் எந்த ஒரு ஆங்கில பத்திரிகையிலும் வருவதில்லை. Daily News, Island, Daily Mirror, Sunday Times, Sunday Leader, Nation போன்ற பல ஆங்கில பத்திரிகைகள் தமிழருக்கு நடக்கும் அநியாயங்களை, சிங்கள ராணுவத்தின் அட்டுழியங்களை, சிங்கள ரவுடிகளின் அட்டகாசங்களை பிரசுரிப்பதில்லை. புலிகள் தினமும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவார். பல சிங்களவர் ஆங்கிலத்தில் தமிழின எதிர்ப்பு கட்டுரைகளை எழுதுவர். இலங்கையிலுள்ள வெளிநாட்டவர், தூதரக அதிகாரிகள் படிப்பது இவற்றையே. அவர்களுடைய தகவல் மையங்கள் சேகரிப்பது இவற்றை மட்டுமே.

சிங்கப்பூரில் இருந்து ரோஹான் குணவர்த்தன செய்வதும் இது தான். Asian Tribune செய்வதும் இது தான்.

ஆங்கிலத்தில் பிற நாட்டவரிடம் விபரங்களை கொண்டு செல்ல முயன்ற, கட்டுரைகளை எழுதிவந்த குமார் பொன்னம்பலம், சிவராம், பரராஜசிங்கம், நடேசன் போன்றவர்கள் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

TamilNet ஓரளவு தமிழ் தரப்பு செய்திகளை கொண்டு சென்றது. இப்போது "பொய்க்" குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதையும் அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இன்றும் இலங்கையில் தமிழ்நெட் பார்க்க முடியாது. சிங்களவன் மறுதரப்பு செய்தியை அறியக்கூடாது என்பதிலும் அரசு கவனம்.

இதுவும் சிங்களவனின் வெற்றியின் இரகசியங்களில் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்து அமெரிக்கா அதற்கு எதிராகவே இருந்திருக்கிறது. எனவே இது ஒன்றும் ஆச்சரியப்படும் விடயமல்ல.

ஜே ஆர் ஜெயவர்த்தன காலத்தில் முனைப்புப் பெற்ற தமிழீழ விடுதலை போராட்டத்தை அடக்க அமெரிக்கா பல வழிகளிலும் சிங்களப் பேரினவாத அரசிற்கு உதவ ஆரம்பித்து வன்னிக்கட்ட இறுதிப் போரின் போதும் 7 நாட்டு இராணுவத் தலைமைகளோடு அமெரிக்க தலைமையும் வன்னியில் நிலை கொண்டு படைகளை வழி நடத்தியது என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

அமெரிக்கா வேண்டாம் கிளிநொச்சியில் இருந்து ஐநா அகதிகள் அமைப்பை வெளியேற்றாமல் வைத்திருந்திருந்தால் கூட பேரழிவுகளை தவிர்த்திருக்கலாம். எத்தனையோ தடவைகள் சொல்லி மன்றாடியும் கேட்காமல் அழியட்டும் என்று குண்டு கொடுத்து அழித்தவனிடமே இன்று நீதி வேண்டும் என்று நாம் கேட்டு நிற்பதுதான் எம் இயலாமை..! இருந்தாலும் அதை விட மாற்று வழி இல்லை. காரணம் இந்த உலகம் கொடுங்கோலர்களின் ஆதிக்கத்துக்குள் சிக்குண்டு கிடக்கிறது.

பிரச்சினை பாருங்கோ.. இந்தியாவுக்கும் சீனாவுக்கும்தானுங்கோ

அமெரிக்கா யுரோப்பு எல்லாம் இந்தியாவுக்கு ஆதரவுங்கோ.. அவ்வளவுதான்

எம் சிசுவின் குடலை உருவி மாலையாக போட்ட கை மட்டுமல்ல தலையும் இந்தியாவே. இந்தியாவை அழிக்கும் வரை எமக்கு வாழ்வில்லை.

எமது முதல் எதிரி இந்தியாவே.. உதில எந்த மாத்துகருத்தும் இல்லையுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவொ ஐரோப்பாவொ வேறு எந்த நாடாக இருந்தாலும் அவர்கள் எங்கள் எதிரியாக இருக்கட்டும்.

எதிரிகளை எந்த வகையிலும் வெல்வதற்கு முயற்சிக்கலாம்.

ஆனால் இந்தியா ஈழத்தமிழருக்கு இழைத்தது, இழைத்துக் கொண்டிருப்பது பெரும் துரோகம்.

இந்தியாவிற்கு இன்னும் சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கின்றன. மாறினால் சுகமான வாழ்வு உண்டு.

இல்லையேல் சிதைந்து போவார்கள்.

வாத்தியார்

.............

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விசாரணை என்று மேற்குலகில் பேசப்படும் இந்த நேரத்தில், அமெரிக்காவே புலிகளின் அழிவுக்கு (அதன் மூலம் மக்கள் அழிவுக்கும்) காரணமாக இருந்தது என்று சிங்களவன் செய்யும் ஒரு அரசியலின் பாகம்தான் இது.

தனியாக ஒருவன் செய்தால் கொலை. பலபேர் சேர்ந்து கொன்றால் புரட்சி. பலநாடுகளைச் சேர்த்து நமக்கு அடி போட்டிருக்கிறான் சிங்களவன்.

தமிழர் இந்தியாவை உறவினராக நம்பியிருந்தனர். அமெரிக்கா மீது நம்பிக்கை வைக்கவில்லை.

இந்தியா நேரடியாக இனப்படுகொலை செய்தது, அமெரிக்கா அதைச் செய்யவில்லை.

இந்தியா சிங்களவனின் தமிழின அழிப்புக்கு பலவருடங்களாக நேரடியாக துணை போகிறது. அமெரிக்கா அதைச் செய்யவில்லை.

இந்தியா சிங்களவனின் போர்க்குற்றங்களை மறைக்க முழு மூச்சுடன் முயலுகிறது. அமெரிக்கா அதைச் செய்யவில்லை.

தமிழரை அழிப்பதில் அமெரிக்காவின் பங்கு 1 எனின் இந்தியாவின் பங்கு 1,000,000,000,000.

எனவே இரண்டையும் ஒப்பிடுவது துளியும் பொருத்தமல்ல.

எனவே இரண்டையும் ஒப்பிடுவது துளியும் பொருத்தமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலக யுத்தத்தில் யப்பான் மீது அணு குண்டு வீசி தனது ஆத்திரத்தை தீர்த்து கொண்டது. இன்று பல ஆண்டுகளுக்கு பின்னர் இரு நாடுகளும் பால்ய நண்பர்கள். எனவே எமக்கு ஏற்ற நண்பர்களை உருவாக்கி காய்களை நகர்த்த வேண்டியது தான் எமக்கு இருக்கும் கடமை.இதனை சிங்களம் செவ்வனே செய்கிறது.இது தான் ராஜதந்திரம் என்று சொல்வார்கள். காலத்துக்கு காலம் அரசியல் சூழ்நிலைகள் மாறும். அதற்கு எற்ப மாற வேண்டியது தவிர்க்க முடியாதது.நீதி , நேர்மை,கடமை , கட்டுப்பாடு என மீண்டும் இருந்தோமேயானால் பல முள்ளிவாய்க்கால்களை காலம் பூராக சந்திக்க வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

:D அமெரிக்காவில் புலிகள் மீதான தடை ஏன் இன்னும் நீடிக்கப்பட்டிருக்கிரதென்று ஏன் யாருமே யோசிக்கவில்லை?? இலங்கை கேட்கமுன்னரே புலிகளைத் தடை செய்தவர்கலல்லவா அவர்கள்?? பயங்கரவாதத்தின் மீதான போர் என்கிற போர்வையில் எமது போராட்டத்தையும் முடக்கியவர்கள் யார்?? சிங்களவனுக்கு ஆயுதமும் பயிற்சியும் குடுத்தவர்கள் யார்?? எப்போது இவர்கள் எம்மைக் காப்பாற்றும் கடவுளாக மாறினார்கள்??

எமக்காக நடந்த ஒரு போராட்டத்தை நம்பாமல் ஆளாளுக்கு காட்டிக் கொடுத்தும், விமர்சிக்கிறோம் பேர்வழிகள் என்று மாற்றுக்கருத்து மழைகளைப் பெய்தும் எதிர்ப்பிரச்சாரம் செய்தவர்களல்லவா நாங்கள்??

அவர்களையே நம்பவில்லையாம், இதற்குள் அமெரிக்கா, இந்தியா, ஆப்பிரிக்கா....இன்னும் எத்தினை ...இக்கா??

  • கருத்துக்கள உறவுகள்

.

உலகத்தை புரிந்து கொள்வதற்கு ஈழத்தமிழன் கொடுத்த விலை மிக,மிக அதிகம்.

ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது....... கியூபா கூட சிங்களவனுக்கு ஆதரவாக இருந்தது.

காரணம் தமிழர் பிரச்சினை பற்றி கியூபாவுக்கு தெளிவாக விளக்கமளிக்கப் படவில்லை.

இனியாவது நாடு கடந்த அரசு போன்றவை இதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

.

//20 வருடங்களுக்கு மேலாக இந்திய எதிர்ப்புவாதம் என்னத்தை செய்தது?? எமக்கு நண்பன் அருகே வேண்டுமொழிய, கண்ணெட்டாத தூரத்திலல்ல!//

ஈழப் போராட்டத்தின் ஆரம்பம் முதல் இன்று வரை இந்திய ஆதரவு நிலையெடுத்து நீங்கள் கண்ட பலன் என்ன?புலிகள் அழிந்த பின்னும் ஏன் இந்தியா சிறிலங்கா அரசை சர்வதேச ரீதியாகப் பாதுகாக்கிறது.இன்று தெளிவான இந்திய ஆதரவு நிலை எடுதிருக்கும் கூட்ட்மைப்பால் என்ன செய்ய முடிந்து உள்ளது.?

இந்திய இராணுவதிற்க்கு எதிரான புலிகளின் போர் இந்தியாவால் புலிகளின் மேல் திணிக்கப்பட்ட போர்.அதுவரையும் அதன் பின்னரும் புலிகள் இயக்கம் இந்தியா எங்கள் நண்பன் என்று தான் சொல்லிக் கொண்டு இருந்தது.இருந்தும் இந்தியா என்ன செய்தது?

நேபாளத்தில்,காஸ்மீரில்,மிசோராமில், நாக்லாந்தில் மணிப்பூரில் இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது?

//20 வருடங்களுக்கு மேலாக இந்திய எதிர்ப்புவாதம் என்னத்தை செய்தது?? எமக்கு நண்பன் அருகே வேண்டுமொழிய, கண்ணெட்டாத தூரத்திலல்ல!//

ஈழப் போராட்டத்தின் ஆரம்பம் முதல் இன்று வரை இந்திய ஆதரவு நிலையெடுத்து நீங்கள் கண்ட பலன் என்ன?புலிகள் அழிந்த பின்னும் ஏன் இந்தியா சிறிலங்கா அரசை சர்வதேச ரீதியாகப் பாதுகாக்கிறது.இன்று தெளிவான இந்திய ஆதரவு நிலை எடுதிருக்கும் கூட்ட்மைப்பால் என்ன செய்ய முடிந்து உள்ளது.?

இந்திய இராணுவதிற்க்கு எதிரான புலிகளின் போர் இந்தியாவால் புலிகளின் மேல் திணிக்கப்பட்ட போர்.அதுவரையும் அதன் பின்னரும் புலிகள் இயக்கம் இந்தியா எங்கள் நண்பன் என்று தான் சொல்லிக் கொண்டு இருந்தது.இருந்தும் இந்தியா என்ன செய்தது?

நேபாளத்தில்,காஸ்மீரில்,மிசோராமில், நாக்லாந்தில் மணிப்பூரில் இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது?

வணக்கம் நாராயணா! .. நாம் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தனாங்களா???? ஓரிரு குழுக்கள் எடுத்திருந்தாலும் ... பெரும்பான்மையின் நிலைமை இந்திய எதிர்ப்பு நிலையே!

அது கிடக்க ..

எனது நல்ல நண்பன் இங்கிருக்கிறான். அவன் திருமலை தம்பலகாமத்தை சேர்ந்தவன். அவனது அண்ணர் புலிகளின் முக்கிய உறுப்பினர், இன்று தப்பியும் விட்டார். இன்னொரு சுகவீனமுற்ற அண்ணரை ஈ.என்.டி.எல்.எப் அவர்களது பெற்றோர் முன்னிலையில் வெட்டிக்கொன்றது. இன்று அவர்கள் தம்பலகாம அகதிகள். அவன் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்தில் இந்த ஈ.பி.ஆர்.எல்.எப்/ஈ.என்.டி.எல்.எப் செய்த அட்டகாசங்களையும் சொல்லி, அக்காலத்தில் இந்திய இராணுவ துணையுடன் திருமலையில் இருந்து துரத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் பற்றியும் சொன்னான். சிங்கள குடியேற்றங்களை அகற்ற இந்திய இராணுவம் எடுத்த முயற்சிகளை குறிப்பிட்டு, அது பின் புலிகள்/இந்திய இராணுவ மோதலில் இல்லாமல் போனதையும் சொன்னான்.

ஜே.ஆர்/ராஜீவ் ஒப்பந்தம் கைச்சாத்தாகியவுடன் புலிகள் அதனை தற்காலிகமாவது ஏற்றிருக்கலாம். அதனை ஏற்று இந்தியனுடன் நின்று பலவற்றை சாதித்திருக்கலாம். ... ஒருவேளை தமிழீழமும் மலர்திருக்கும்!!!! .

... அன்றே எமக்கு ஆயுதப்போராட்டத்தில் இந்தியா ஆதரவு தருகிறதென்பது, அவர்களிடைய நலன்களுக்காக என்பது தெரியும் . அதனை "வங்கம் தந்த பாடங்கள்" கூட மிக தெளிவாக சொன்னன.

ஆனால் நாம் இந்தியாவை பகைத்து செல்ல மிகச்சிறிய இனம்! அதனை நாம் புரிந்து கொள்ள தவறி விட்டோம்!

யுத்தநிறுத்தம் கைச்சாத்தாகி பிரபாகரனின் இந்திய டெல்கி நாடகம் எல்லாம் முடிந்து, அவர் யாழ் வந்த பின் பல தடவை இலங்கைக்காகான இந்திய தூதுவராக இருந்த டிக்ஷிற், சந்தித்து இந்திய நிலைப்பாடு தொடர்பாக தெளிவாக விளங்கப்படுத்தினாராம். இந்தியா ஒருபோதும் இலங்கையில் ஒரு தனிநாட்டு பிரிவினைக்கு இடமளிக்காது என்றும் ஆனால் தமிழர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரும் என்றும் குறிப்பிட்டாராம்.

... நாம் கேட்கலாம் வங்கதேச விடுதலையைப் பற்றி ... அது பாகிஸ்தானும்/வங்கமும் சேர்ந்த இந்த நாடு இந்தியாவுக்குக்கு பெரும் சவால்! தனது நலனுக்காக அதனை உடைத்தது!! இன்றைய இந்தியாவின் நிலைமை வேறு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு போராட்டம், மிசோரம். நாகலாந்தில் சீன ஆதரவு ஆயுதப்போராட்டாம் என முளைத்த பின் அது தனது மாகாணக்கள் பிரிந்து போகாத தன்மையை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. அதன் பிரகாரம் அது தனது வெளிவிவகார கொள்கைகளையும் மாற்றியது! ....

அந்நேரம் இந்தியாவுடன் இணைவான அரசியலை நடத்த நாம் தயாரக இருக்கவில்லை. ( இது 2001 யுத்த நிறுத்தம் கைச்சாத்தாகி பேச்சுவார்த்தை நடத்தும் போது நாம் இறுதியுத்தம் என புலம்பெயர் தேசங்களில் நிதி வேட்டையிலும், அதற்கான தயாரிப்பிலும் ஈடுபட்டதை நினைவு படுத்துகிறது. இத்தயாரிப்புகளை மேற்கத்தேய புலனாய்வுகள் துறையினர் சும்மாவா இருந்திருப்பார்கள்?). அக்காலத்தில் நாம் இந்தியா சமாதான எதிர்பு நடவடிக்கைகளை பகிரங்கமாக நடத்தினோம். எமது ஆயுதக் கையளிப்பும் அப்படித்தான்.

இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் பாலா அண்ணா உட்பட பல தளபதிகள் இந்தியாவுடன் மோதலை விரும்பவில்லை. ஆனால் தலைவரின் இறுதி தீர்மானத்தை எல்லோரும் என்ன பலர் கேட்டார்கள்/ஒத்துளைத்தார்கள்.

இந்திய/புலிகளின் யுத்தம் தொடங்கி எல்லாம் நாசமாக தொடங்கி விட்டது. நாமும் இந்தியனை வெளிய்யேற்ற எம் எதிரியுடன் இணைந்தோம்.

புலிகளிடம் நேர்மை இருந்தது, இலட்சிய பற்று இருந்தது, போராடும் குணம் இருந்தது, அதனை வழி நடத்தும் தலைமை இருந்தது ... ஆனால் நெழிவு சுழிவுகளினூடு செல்லும் அரசியல் இருக்கவில்லை!!!!! இலங்கை/இந்திய ஒப்பந்தத்தை எந்த ஒரு சிங்களவனும் ஏற்கவில்லை. இதன் வெளிப்பாடுகளில் ஒன்றே ராஜீவ் காந்தி சிங்கள இராணுவத்தால் தாக்க்கப்பட்டது. நாம் அதனை பயன்படுத்த தவறி விட்டோம். அவர்களுக்குள் முரண்பாடுகளை நாம் ஏற்படுத்தி இருக்க முடியும்., தவறி விட்டோம்!!!

இந்திய இராணுவ நடவடிக்கையின் முடிபில் நாம் தமிழ்நாட்டில் ஓர் வரலாற்றுத் தவறையும் இழைத்து விட்டோம். அன்றுவரை இந்திய இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பாக இருந்த தமிழகம் மாற்றம் அடைய நாமே வழி கோலினோம். இன்று வரை அக்கொலை யாரின் ஏவலில் நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு விடை தேடிய படி இந்தி அரசிருக்கிறது!!!

ஒரு வல்லரசு, ஓர் சிறிய குழுவால் காயப்படுத்தப்பட்டிருக்கிறது. அது விடுமா??????????

இனி வேண்டாம்! அங்கு எம்மக்களின் வாழ்வு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிங்களம் ஒருபோதும் எம்மை வாழவிடாது!! அங்கு சர்வதேசமும் இந்தியாவை மீறி ஒன்றும் செய்யவும் முடியாது!

எம்மக்கள் வாழ வேண்டும்! எம் மக்கள் உயிருடன் வாழ வேண்டும்!!

நாம் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்ற கருத்து நீக்க செயற்பட வேண்டும். இந்தியாவுடனான நல்லுறவை விருத்தி செய்ய வேண்டும். அதுவே எம்மக்களை உயிரோடு வாழ வழி வகுக்கும்!!

அது நாடு கடந்த அரசாலென்ன, உலக தமிழர் மன்றம் என்றால் என்ன, ... இந்திய உறவை எம்மக்களுக்காக கட்டி எழுப்ப பாடுபட வேண்டும்/முயற்சிக்க வேண்டும்.

Edited by Nellaiyan

//அக்காலத்தில் நாம் இந்தியா சமாதான எதிர்பு நடவடிக்கைகளை பகிரங்கமாக நடத்தினோம்//

நெல்லையன் வரலாற்றைமாற்றி எழுதாதீர்கள்.அக் காலத்தில் என்ன இந்திய சமாதான எதிர்ப்பு நடவடிக்கைகள் பகிரங்கமாக நாடாத்தப்பட்டன என்று சொல்வீர்களா?

நிற்க புலிகள் இடைக்கால நிர்வாகத்தில் நியமிக்கப்பட்டவர்கள் தொடர்பாகவே முரண்பாடு ஏற்பட்டது.அதேனேரம் புலிகளுடம் ஆயுதங்களைக் களைந்த படி இந்திய ரோ தனது கட்டுப்பாட்டில் இருந்த இயகங்களை ஆயுத பாணிகள் ஆக்கியது.அன்றும் இன்றும் இந்தியா இலங்கையை ஒரு காலனியாகவே பாவிததௌ.தனது பொருளாதாரா கேந்திர நலங்களுக்காக.ஒவ்வொரு நாட்டு மக்களும் ஏன்காலனி ஆதிக்கத்தை வெறுகிறார்கள்? நாமும் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்திருக்ககாலாம்.அல்லது இந்தியா கூட பிரிடிஸ் ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்திருக்கலாம்.ஏன் தேசிய விடுதலை என்பது காலனி ஆதிக்கதுக்கு எதிர்கா இருக்கிறது.இன்று தமிழ்ரையும் சிங்களவரையும் துரத்தி விட்டு இந்தியா சாம்பூரில் முள் வேலி இட்டு இருக்கிறாது.இவ்வாறே தமிழீழத்தின் சொதுக்கள் இந்தியாவால் சுரண்ட்டப்படும்.எமது மக்கள் தொடர்ந்தும் எதிலிகளாக வாழ வேண்டும்.தேசிய விடுதலை என்பது மக்களுக்கான விடுதலை.அதனாலையே புலிகள் அதில் உறுதியாக நின்றனர்.இந்தியா என்னும் பிராந்திய ஏகாதிபத்தியம் அதனுள் இருக்கும் பல்வேறு தேசிய இனக்களை அடக்கி அவற்றைச் சுரண்டிக் கொண்டிருக்கிறது.இதற்க்கு எதிராக அவர்கள் போராடுகிறார்கள்.அந்தப் போராட்டங்களுக்கு ஒரு வலுவான நம்பிக்கையை தமீழப் போராட்டம் வழங்கியது.அதில் உறுதியாக நின்ற புலிகளை இந்தியா அழித்து ஒழிதது.புலிகளாகவோ ஈழத் தமிழரோ இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை என்றும் எடுததில்லை.இந்தியாவே தேசிய சுயனிர்ணயம் என்னும் அரசியற் கோரிக்ககிக்கு எதிராக அன்றில் இருந்து இன்று வரை செயற்பட்டு வந்திருக்கிறது. நீங்கள் இதற்க்கு அமைவாகாச் செயற்பட வேண்டும் என்றால்,இந்திய பிராந்திய மேலாதிக்கததை ஏற்றுக் கொண்டு தமீழத்தைன் வளங்களை அவர்கள் கொள்ளை அடிப்பதை ஏற்றுக்கொண்டு தமீழ மக்கள் தொடர்ந்தும் எதிலிகளாக வாழ்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.இவை எல்லவற்றோஒடும் இன்று இந்தியா சிங்களப் பேரின்வாத்தௌடன் மிக நெருக்கமாக கைகோர்த்துக் கொண்டுள்ளது.ஏன்னில் இன்று இந்திய மேலாதிக்கமும் சிஙளப் பேரின்வாதமும் மிக வலுவான ஒரு நிலையில் இருக்கிறது.இதனை அவர்கள் என்றுமே மாற்றப்போவதில்லை.இதனை மாற்றுவதாயின் தமிழர்கள் எவ்வாறு போராட வேண்டும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.