Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதில் யார் கர்ப்பம் தரிப்பவர்..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_48030232_bumps_226think.jpg

பொதுபோக்குவரத்து ஊடகங்களில் பயணம் செய்யும் போது வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் பெண்களில் கர்ப்பம் தரித்தவர்களுக்கு மற்றும் கைக்குழந்தைகளோடு வருபவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை ஆக்கிரமிக்கும் மற்றவர்கள் விட்டுக்கொடுப்பது வழமை. இன்னும் சிலர் மேற்கண்டவர்களுக்கு ஒதுக்கப்படாத இடங்களாக இருந்தாலும் ஒரு நல்லெண்ண அடிப்படையில் தங்கள் இடங்களை விட்டுக் கொடுப்பது வழமை.

வயதானவர்களை, மாற்றுத்திறனாளிகளை மற்றும் குழந்தைகளோடு வருபவர்களை இலகுவாக இனங்கண்டு அவர்களுக்கு உதவ முடிவது போல்... பெண்களில் கர்ப்பம் தரித்தவர்களை அவ்வளவு இலகுவாக இனங்கண்டு அவர்களுக்கு உதவ முடிவதில்லை. இது எமக்கு மட்டுமல்ல.. பலருக்கும் பிரச்சனையாக இருப்பதால் பிபிசி வரை விடயம் வந்துவிட்டது.

குறிப்பாக வயிறு கொழுத்த பெண்களும் தளர்வான மேலாடை அணிந்த பெண்களும்.. கர்ப்பம் தரித்தவர்கள் போல தென்படுவதால் அவர்களும் தவறுதலாக கர்ப்பம் தரித்தவர்களாக இனங்காணப்பட்டு தவறுதலாக நல்லெண்ணம் அளிக்கப்படுகின்றனர். இதே காரணத்தால் உண்மையில் கர்ப்பம் தரித்த பெண்கள் சில சந்தர்ப்பங்களில் நல்லெண்ணத்தை இழந்துவிடுகின்றனர்.

இந்தப் பிரச்சனையை தீர்க்க உள்ள வழிகளில் ஒன்று கர்ப்பம் தரித்த பெண்கள் "குழந்தை உள்ளடக்கம் - Baby on Board" தகவல் குறியீட்டு பட்டையை (badge) அணிந்து வருவது குறித்தும் சிலர் கருத்துக் கூறி இருக்கின்றனர்.

இது தொடர்பாக பிபிசி பிரசுரித்துள்ள செய்தியில் மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் இங்கு கீழே உள்ள இணைப்பில் இருக்கிறது.

http://news.bbc.co.uk/1/hi/magazine/8730106.stm

இது தொடர்பில் உங்கள் அனுபவங்கள் என்ன. அட நானே இருக்க இடமில்லாமல் களைச்சு விழுந்து போறன்.. இதில கர்ப்பமாவது கத்தரிக்காயாவது.. உதையெல்லாம் யார் பார்க்கிறது எங்கின்ற பேர்வழிகள் இருந்தாலும்.. நாங்கள் குறை நினைக்கமாட்டம் பயப்பிடாமல் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Edited by nedukkalapoovan

சன நெரிசல் அதிகமான நேரத்தில் புகையிரதத்தில் பயணிப்பதால், இருப்பதற்கு இடம் கிடைப்பதே அருமை, அப்படி கிடைத்தால் கதவுக்குப் பக்கத்தில் உள்ள ஆசனத்திலையே அமர்வது வழக்கம், காரணம் இலகுவில் இறங்கக் கூடியதாக இருக்கும். அந்த இடம் அவர்களுக்காக ஒதுக்கப் பட்டது என்பதால் மட்டும் இல்லை, வேறு இடத்தில் இருப்பதற்கு இடம் கிடைக்குதோ பெரும்பாலான நேரங்களில் எனது இடத்தை கர்ப்பமாக இருக்கும் தாய்மாருக்கும், குழந்தையுடன் இருக்க இடம் இல்லாமல் நிற்போருக்கும், வயோதிபர்களுக்கும் எனது இடத்தை விட்டுக் கொண்டுத்துள்ளேன். அதே நேரம், அவர்களுக்காக ஒதுக்கப் பட்ட இடத்தில் வேறு (சம்பந்தம் இல்லாத) ஒருவர் அமர்ந்து இருப்பதைப் பார்த்து கடுப்பகியதும் உண்டு, அவர்களை எழுப்பி விட்டதும் உண்டு.

நீங்கள் குறிப்பிட்டது போல் "Baby on Board" தகவல் குறியீட்டு பட்டுயை (badge) அணிந்து வரும் தாய்மார்களையும் பார்த்து இருக்கிறேன், அது நல்ல யோசனைதான்.

இருந்தாலும் முயல் பிடிக்கிற நாயை முகத்தைப் பார்த்தால் தெரியும் என்று சொல்ல்வார்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் பஸ்களில் பயணம் செய்த அனுபவம்.

யாரும் வயதானவர்கள் கர்ப்பிணிகள் போன்றோர் வந்தால் சிங்களவர்கள் உடனே இருக்கையினை விட்டுக்கொடுத்துவிடுவார்கள். இஸ்லாமியர்கள் தங்கட இனமெண்டா மட்டும் கொடுப்பான்கள். எங்கட தமிழன்களோ கேவலம். அதுவும் யாழ்ப்பாணத்தில மகா கேவலம். அழுகுற குழந்தையொட நெரிபட்டு தாய்மார் கஸ்டப்பட்டாலும் ஏதும் அறியாத மாதிரி தமிழன்கள் வேறொங்கொ பார்ப்பீனம்.

இந்தப்பழக்கம் இங்கயும் தொடருது. சனம் வரிசையா நிற்கேக்க இவயள் இடம் பிடிக்க முந்தி ஓடுவினம்.

கர்ப்ப காலம் என்பது பெண்களுக்கு இன்னொரு பிறப்பெடுக்கும் காலத்தைப் போன்றது. அவர்கள் படும் அவதியும், அவர்களுக்கு இருக்கும் கஷ்டத்தினையும் அருகிலிருந்து அன்போடு பார்த்தவர்களுக்குத்தான் புரியும். போலிகள் எல்லா இடத்திலும் இருப்பதைப் போன்றது தான் இங்கும். ஆனால் அதற்காக கர்ப்ப வயிறா இல்லையா என்ற ஆராச்சியை விட்டு விட்டு கர்ப்பம் போலத்தோன்றும் அனைவருக்கும் இடம் கொடுப்பதே சரி...

உண்மையாகவே இடம் கொடுப்பவர்கள் இப்படி ஆராச்சியும் செய்து கொண்டு இருக்கப் போவதில்லை.. எப்படியாவது எழும்ப விருப்பம் இல்லாமல் சும்மா சாட்டுத் தேடுபவர்களுக்குத்தான் இந்த ஆராச்சிகள்

  • தொடங்கியவர்

மனிதப் பெண்கள் மட்டும்தானா கர்ப்பம் தரிக்கிறார்கள். இந்தப் பூமியில் பல பெண் உயிரினங்கள் கர்ப்பம் தரிக்கின்றன. அவற்றை வேறு அதே இன பிராணிகள் பெரிதாக சிரத்தை எடுத்து கவனிப்பதாகத் தெரியவில்லை. கர்ப்பம் என்பது உயிரின இயல்பு. அது மறுபிறவி என்பது கொஞ்சம் மிகைப்படுத்தல். எமது சமுதாயம் எப்போதும் பெண்கள் மீது ஒரு அநுதாபத்தை ஏற்படுத்த சில மிகைப்படுத்தல்களைச் செய்து வந்திருக்கிறது. கர்ப்ப காலத்தில் பொதுவான பிரச்சனைகள் பெண் உயிரினங்களுக்கு உண்டு. அவை அவற்றை சமாளிக்கும் இயல்பையும் பெற்றுள்ளன. மனிதப் பெண்கள் நிமிர்ந்த உடற்கோலம் உள்ள விலங்குகளில் அடங்குவதால் கர்ப்பம் மற்றும் பிரசவம் சில சந்தர்ப்பங்களில் சிக்கல்களை நிறைந்ததாக அமைந்துவிடுவது உண்டு. அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கர்ப்பம் தரிப்பதே மறுபிறவி எடுப்பது என்றால் ஏன் கர்ப்பம் தரிக்க இயற்கை நிற்பந்திக்கிறது...??! அதற்கான இசைவாக்கம் இன்றியா பெண்களின் உடல் கூர்ப்படைந்துள்ளது. அப்படி ஏதும் விசேடித்து உயிரின ஆராய்ச்சில் சொல்லப்படவில்லையே..?!

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஓமோன் சமநிலை குழப்பங்கள் மற்றும் உடல்மாற்றங்கள் ஏற்படுத்தும் மனநிலை மாற்றங்களின் போது மற்றவர்களின் அன்பும் அரவணைப்பும் பெண்களுக்கு நல்ல மன உறுதியை அளிக்கும் என்பது உண்மை. அதற்காக கர்ப்பமே மறுபிறவி என்பது கொஞ்சம் ஓவராகவே தெரிகிறது. :unsure:

சரி.. விடயத்துக்கு வருவோம். கர்ப்பம் தரித்தது போல் நடிக்கும் பெண்களும் இருக்கின்றனர். பிபிசி மக்கள் கருத்துப் பகிர்வை பார்த்தீர்கள் என்றால் அவர்களில் ஒருவர் ஒரு பெண் தனது பெருத்த தொந்தியைக் காட்டி கர்ப்பம் தரித்தவர் என்று ஒருவரை ஏமாற்றி இடம் பிடித்ததாக தனது அனுபவ பகிர்வில் சொல்கிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில்.. ஒரு ஆண் தன்னிடத்தை கர்ப்பம் தரித்த பெண் ஒருவருக்கு கொடுக்க அந்த இடத்தை கர்ப்பம் தரிக்காத இன்னொரு பெண் போட்டிப்போட்டு பிடித்துள்ளார். இப்படியான செயல்களை செய்யும் மனிதர்கள் உள்ள போது ஆராய்ச்சிகள் அல்ல அவதானிப்புக்கள் அவசியமாகின்றன தானே. ஏன் வீணே ஏமாற வேண்டும்.. உண்மையான பயனாளிகள் பயன்பெறாமல் ஏமாற்றுபவர்கள் பயன்பெறுவது நல்லதா..??! இந்த வகையிலும் சிந்திக்கலாம் இல்லையா..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

stomack.jpg

பெண்களின் மகப்பேறு காலத்தில் மிகுந்த கவனம், சிரத்தையாக கைளாப்படவேண்டியது ஒத்துக்கொள்ள வேண்டிய விடயம்தான். ஆனால் எங்களையும் கொஞ்சம் கவனியுங்கோப்பா...தள்ளாத வயதில் தள்ளும் இந்த தொப்பைக்கு வழி என்ன?

எஙகளுக்கு இருக்கை பிடிப்பதில்/கொடுப்பதில் முன்னுரிமையுண்டா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக கர்ப்ப வயிறா இல்லையா என்ற ஆராச்சியை விட்டு விட்டு கர்ப்பம் போலத்தோன்றும் அனைவருக்கும் இடம் கொடுப்பதே சரி... உண்மையாகவே இடம் கொடுப்பவர்கள் இப்படி ஆராச்சியும் செய்து கொண்டு இருக்கப் போவதில்லை.. எப்படியாவது எழும்ப விருப்பம் இல்லாமல் சும்மா சாட்டுத் தேடுபவர்களுக்குத்தான் இந்த ஆராச்சிகள்

நிழலி

தமிழர்களுக்கென்று சில குணமுண்டு

இப்படி கேள்விகேட்டேதான் தமிழீழக்குழந்தையை நடுவில் இழந்தோம்.......................

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

கர்ப்ப காலம் என்பது பெண்களுக்கு இன்னொரு பிறப்பெடுக்கும் காலத்தைப் போன்றது. அவர்கள் படும் அவதியும், அவர்களுக்கு இருக்கும் கஷ்டத்தினையும் அருகிலிருந்து அன்போடு பார்த்தவர்களுக்குத்தான் புரியும். போலிகள் எல்லா இடத்திலும் இருப்பதைப் போன்றது தான் இங்கும். ஆனால் அதற்காக கர்ப்ப வயிறா இல்லையா என்ற ஆராச்சியை விட்டு விட்டு கர்ப்பம் போலத்தோன்றும் அனைவருக்கும் இடம் கொடுப்பதே சரி...

உண்மையாகவே இடம் கொடுப்பவர்கள் இப்படி ஆராச்சியும் செய்து கொண்டு இருக்கப் போவதில்லை.. எப்படியாவது எழும்ப விருப்பம் இல்லாமல் சும்மா சாட்டுத் தேடுபவர்களுக்குத்தான் இந்த ஆராச்சிகள்

இந்த அணுகுமுறையிலும் ஒரு சங்கடம் உண்டு..!

என்னுடன் சிங்கப்பூரில் வேலை பார்த்த ஒரு சீனர் கூறியது. பேருந்தில் செல்லும்போது கர்ப்பவதி என்று தோன்றிய ஒரு பெண்ணுக்கு எழுந்து இடம் கொடுத்தாராம். அதற்கு அந்தப் பெண் தாறுமாறாக திட்டினாராம். :D

காரணம் அவர் கர்ப்பவதியில்லையாம். அவரின் தொப்பையை கேலி செய்வது போல இவர் நடந்துகொண்டார் என்பதுதான் பிரச்சினையாம்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுவரை பொதுவாக ஆணோ,பெண்ணோ, வலது குறைந்தவர்களோ வந்தால் இடம் விடுவது வழக்கம்! இப்பதான் இப்படியும் ஒரு விஷயம் இருக்கெண்டு தெரியுது!இனிமேல் கர்ப்பிணிகள் விசயத்தில் எச்சரிக்கையாய் இருக்க வேணும்!

இப்படிச் செய்தால் என்ன? மெதுவாக இது எத்தனையாவது... என்று கேட்பது!

எட்டு என்றால் ஒரிஜினல் கர்ப்பம்,

திட்டு அல்லது தட்டு விழுந்தால் கண்டிப்பா போலிக் கர்ப்பம்! :):D

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நானும்தான்

இப்படி பெண்களைக்கண்டால் இடம் கொடுக்கிறனான்

ஆனால் இதே பெண்களுக்கு அங்கு இருக்கும் பெண்கள் இடம்கொடுத்து நான் கண்டதில்லை

அவையை கண்டால் தானாக எழும்பி நிற்கிறம்

ஏதேனும்ஓமோன் பிரச்சினையோ இது.....???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மனிதப் பெண்கள் மட்டும்தானா கர்ப்பம் தரிக்கிறார்கள். இந்தப் பூமியில் பல பெண் உயிரினங்கள் கர்ப்பம் தரிக்கின்றன. அவற்றை வேறு அதே இன பிராணிகள் பெரிதாக சிரத்தை எடுத்து கவனிப்பதாகத் தெரியவில்லை. கர்ப்பம் என்பது உயிரின இயல்பு. அது மறுபிறவி என்பது கொஞ்சம் மிகைப்படுத்தல். எமது சமுதாயம் எப்போதும் பெண்கள் மீது ஒரு அநுதாபத்தை ஏற்படுத்த சில மிகைப்படுத்தல்களைச் செய்து வந்திருக்கிறது. கர்ப்ப காலத்தில் பொதுவான பிரச்சனைகள் பெண் உயிரினங்களுக்கு உண்டு. அவை அவற்றை சமாளிக்கும் இயல்பையும் பெற்றுள்ளன. மனிதப் பெண்கள் நிமிர்ந்த உடற்கோலம் உள்ள விலங்குகளில் அடங்குவதால் கர்ப்பம் மற்றும் பிரசவம் சில சந்தர்ப்பங்களில் சிக்கல்களை நிறைந்ததாக அமைந்துவிடுவது உண்டு. அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கர்ப்பம் தரிப்பதே மறுபிறவி எடுப்பது என்றால் ஏன் கர்ப்பம் தரிக்க இயற்கை நிற்பந்திக்கிறது...??! அதற்கான இசைவாக்கம் இன்றியா பெண்களின் உடல் கூர்ப்படைந்துள்ளது. அப்படி ஏதும் விசேடித்து உயிரின ஆராய்ச்சில் சொல்லப்படவில்லையே..?!

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஓமோன் சமநிலை குழப்பங்கள் மற்றும் உடல்மாற்றங்கள் ஏற்படுத்தும் மனநிலை மாற்றங்களின் போது மற்றவர்களின் அன்பும் அரவணைப்பும் பெண்களுக்கு நல்ல மன உறுதியை அளிக்கும் என்பது உண்மை. அதற்காக கர்ப்பமே மறுபிறவி என்பது கொஞ்சம் ஓவராகவே தெரிகிறது. :)

சரி.. விடயத்துக்கு வருவோம். கர்ப்பம் தரித்தது போல் நடிக்கும் பெண்களும் இருக்கின்றனர். பிபிசி மக்கள் கருத்துப் பகிர்வை பார்த்தீர்கள் என்றால் அவர்களில் ஒருவர் ஒரு பெண் தனது பெருத்த தொந்தியைக் காட்டி கர்ப்பம் தரித்தவர் என்று ஒருவரை ஏமாற்றி இடம் பிடித்ததாக தனது அனுபவ பகிர்வில் சொல்கிறார். இன்னொரு சந்தர்ப்பத்தில்.. ஒரு ஆண் தன்னிடத்தை கர்ப்பம் தரித்த பெண் ஒருவருக்கு கொடுக்க அந்த இடத்தை கர்ப்பம் தரிக்காத இன்னொரு பெண் போட்டிப்போட்டு பிடித்துள்ளார். இப்படியான செயல்களை செய்யும் மனிதர்கள் உள்ள போது ஆராய்ச்சிகள் அல்ல அவதானிப்புக்கள் அவசியமாகின்றன தானே. ஏன் வீணே ஏமாற வேண்டும்.. உண்மையான பயனாளிகள் பயன்பெறாமல் ஏமாற்றுபவர்கள் பயன்பெறுவது நல்லதா..??! இந்த வகையிலும் சிந்திக்கலாம் இல்லையா..??!

இப்படி ஒரு பிறவியையும் ஒரு தாய் பெற்றெடுத்துள்ளாரே...

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு பிறவியையும் ஒரு தாய் பெற்றெடுத்துள்ளாரே...

ஒரு தாய்க்கும் பிள்ளைக்குமான விரிசல்

பார்க்கலாம் குட்டி என்ன சொல்கிறது என்று....?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு பிறவியையும் ஒரு தாய் பெற்றெடுத்துள்ளாரே...

தலைப்புக்குச் சம்பந்தமில்லா விட்டாலும் இந்த அக்காவின் கோவத்திற்கு இதனை பதிலாக்குகிறேன்..!

அப்போ சொல்லுங்கோ.. பூனை குட்டி போடுது அதுவும் கர்ப்ப கால கவனிப்பை பூனை பூனையா கூப்பிட்டு வைச்சு கேட்டுக்கொண்டா திரியுது.. நாய் குட்டி போடுது அதுவும் கர்ப்பக கால கவனிப்பை தாங்கோ என்று கேட்டுக்கொண்டா திரியுது.. குரங்கு குட்டி போடுது.. பசு கன்றீனுது.. இப்படி எத்தனையோ. அதுகள் தானே தாங்கள் தாங்களா அதைச் சமாளிக்குதுகள். அதுகளுக்கெல்லாம் இல்லாத பிரச்சனை மனிசப் பெண்களுக்கு மட்டும் எப்படி புதிசா வருகுதா...???!

எத்தனையோ ஏழைப் பெண்கள் எந்தக் கவனிப்பும் இல்லாமல் வீதிகளில் குழந்தைகளைப் பெற்று வீதியிலேயே வளர்க்கிறார்கள்.. எத்தனையோ தமிழ் தாய்மார் அகதிமுகாம்களில் இடையில் கணவனை இழந்து எந்தக் கவனிப்பாரும் அற்று குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்கள். எத்தனையோ தாய்மார் அகதிகளாக நடந்து போகும் போது.. இராணுவ வாகனங்களில் கூட குழந்தைகளை பெற்றுள்ளனர்...! இப்படியாக இருக்கும் போது.. எல்லா வசதியோடும் வாழும் பெண்களுக்கு மட்டும் தானா விசேட கவனிப்பு தேவைப்படுகிறது..??!

நான் கண்டிருக்கிறேன்.. ஒரு ஆடு குட்டி போடும் போது அங்கு அந்த தாய் ஆடும் குட்டியும் தான் பிரசன்னம். வேறு எவருமல்ல. அது சொல்லுதா இது எனக்கு மறுபிறவின்னு...???! அப்படியானா ஏன் அந்தப் பிறவியை எடுக்க முனையுறீங்க. அதிலும் குழந்தை பெறாமலே இருக்கலாமே...!

இயற்கையாக எந்த தயவும் அற்று குழந்தை பெறும் தகுதி மனிதப் பெண்களுக்கும் உண்டு. ஆனாலும் மனிதன் பகுத்தறிவுள்ளவனாக இருப்பதால் அவன் தனது துணையின் மீது கர்ப்ப காலத்தில் இயல்பாக கவனம் செலுத்த தூண்டப்படுகிறான். அதையே பெண்கள் தங்களுக்கான ஒரு அநுதாபம் நோக்கி பாவிக்கினம்..! கவனிக்கினமோ இல்லையோ எந்தப் பெண்ணும் தனது சுயதகவோடு குழந்தை பெறும் நிலையை இயற்கை அளித்தே உள்ளது. துணையின் சுற்றத்தின் கவனிப்பென்பது அவர்களுக்கு விசேடமாக கிடைக்கும் ஒரு ஆறுதல் பரிசு. அதைப் பெறத்தான்.. அடுத்த பிறவி.. அதுஇதென்ற பாட்டுக்கள். :):D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

(கி)குறுக்ஸ்

தங்கள் கருத்து மிகவும் வெறுக்கத்தக்கது

பகிடி விடுவதற்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?

உண்மையில் மகப்பேறு என்பது இன்னொரு பிறப்புத்தான்.

இதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

(கி)நெறுக்ஸ்

தங்கள் கருத்து மிகவும் வெறுக்கத்தக்கது

பகிடி விடுவதற்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?

உண்மையில் மகப்பேறு என்பது இன்னொரு பிறப்புத்தான்.

இதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்

எத்தனை தாய்மார் இந்த காலப்பகுதியில் உயிர் இழந்திருக்கின்றார்கள் என்ற தரவுகளை அறியுங்கள் தயவுசெய்து....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கால போவானது கருத்துடன், நான் முழுமையாகவில்லாது விடினும் ஓரளவு உடன்படுகிறேன். ஆனால் தங்களது கருத்துக்கள் எந்தவிதமான மனிதவினத்துப ;பெண்களுக்குப் பொருந்துமெனில், நாகரிகம் முற்றாகவும் வளர்ந்துவிடாத தனது ஒவ்வொருவேளை உணவையும் யாருடைய உதவியுமல்லாது தானே தேடி உண்ணும் பழக்கத்திலிருந்த ஆதிகால மனித இனத்துப்பெண்களாலேயே முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான இருக்கையைக் கொடுக்க வேண்டிய பிரச்சினை எனக்கு வருவதில்லை. ஏனெனில் நான் நின்றபடியே (இருக்கைகள் காலியாக இருந்தாலும்) பயணிகளை நோட்டம் விட்டுக்கொண்டு பயணம் செய்வது வழமை.

கர்ப்பவதி என்றாலும், தொந்தியுள்ளவர் என்றாலும் நின்றபடி பயணிப்பது சிரமம் என்பதால் இருக்கைகளை விட்டுக்கொடுப்பதுதான் மனிதப் பண்பு. இதற்காக பூனைக்குட்டி இடம் கொடுக்குமா என்று ஆராய்ச்சி செய்யக்கூடாது. அப்படி ஆராய வெளிக்கிடுபவர்கள், கற்கால மனிதர்களை பூனையுடனும் ஆடுகளுடனும் ஒப்பிட்டால் நல்லது.. :)

டெல்கியில் தாஜ்கொரமண்டேல் கோட்டேலில் ஸிம்பாவே தூதுவரை(அவர்கள் தூதகரகம் அங்குதான் இருந்தது)சந்தித்துவிட்டு வெளியில் வருகின்றேன்.மதியம் பகல் 3 மணியிருக்கும்.கொழுத்தும் வெயில் நடு ரோட்டில் வயித்தை பிடித்தபடி ஒரு கர்பிணிப்பெண் கிந்தியில் ஏதோ கத்துகின்றா.அருகில் ஒரு 6,7 வயது மதிக்கக் கூடிய பெண்குழந்தை வேறு.என்னிடம் இருந்த 100 ரூபாவை கொடுத்து விட்டு பஸ்ஸில் போகலாம் என்று பஸ் நிலையத்தை நோக்கி நடக்கின்றேன்.கொஞ்ச தூரம் சென்று திருப்பி பார்த்தால் அந்தப் பெண் சாவசமாக நடந்து போய்க்கொண்டிருக்கின்றா.

போற போக்கில் நாய்,பூனை,ஆடு,மாடு ஒன்றும் கொஸ்பிடல் போறதில்லை நீங்களேன் போகவேணும் என்றும் கேட்பார்கள் போலிருக்கு.

பொதுபோக்குவரத்து வண்டிகளில பயணிக்கும்போது.. விமானம் தவிர.. :wub: மிச்சம் எல்லாத்துக்கும் யாராச்சும் ஆக்கள் மோசமான நிலமையில... அதாவது உடனடியாக இருக்கை தேவைப்படும் நிலமையில இருந்தால்.. அப்போது நான் இருக்கையில இருந்தால்.. எழுந்து அவர்களுக்கு இடம்விட்டுக்கொடுக்கிறது வழமை. இப்பிடி செய்கிறதில எனக்கு ஓர் ஆத்மதிருப்தி. நன்றி என்கின்ற வார்த்தையை எதிர்பார்க்கிறதும் கிடையாது. தானம் செய்த மாட்டிண்ட பல்லை பிடிச்சு பார்க்கக்கூடாது என்று சொல்லுவீனம். இதுபோலவே ஒரு ஆளுக்கு என்ர இடம்விட்டு குடுத்துப்போட்டு அந்த இடத்தில என்னால நிக்க முடியாது. சற்று விலகிப்போய்விடுவன். ஆக்கள் கைகளில சாமான்களோட நின்றால் இல்லாட்டிக்கு நல்லாய் களைச்சுப்போய் இருந்தாலும்... வயது, பால் பார்க்காமல் எழுந்து இடம் குடுக்கிறது. ஆக்களிண்ட வயிற்றை பார்த்து இடம்விட்டுக்குடுத்து எனக்கு நினைவு இல்லை.

Edited by மச்சான்

எங்கட தமிழன்களோ கேவலம். அதுவும் யாழ்ப்பாணத்தில மகா கேவலம். அழுகுற குழந்தையொட நெரிபட்டு தாய்மார்

விடலையை யாழ்ப்பாணத்தான் ரொம்பத்தான் துன்புறுத்தி போட்டான் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுவரை பொதுவாக ஆணோ,பெண்ணோ, வலது குறைந்தவர்களோ வந்தால் இடம் விடுவது வழக்கம்! இப்பதான் இப்படியும் ஒரு விஷயம் இருக்கெண்டு தெரியுது!இனிமேல் கர்ப்பிணிகள் விசயத்தில் எச்சரிக்கையாய் இருக்க வேணும்!

இப்படிச் செய்தால் என்ன? மெதுவாக இது எத்தனையாவது... என்று கேட்பது!

எட்டு என்றால் ஒரிஜினல் கர்ப்பம்,

திட்டு அல்லது தட்டு விழுந்தால் கண்டிப்பா போலிக் கர்ப்பம்! :lol::lol:

இது எத்தனையாவது? என்றால்.....

எத்தனையாவது பிள்ளை என்றோ, எத்தனையாவது மாதம் என்றோ விளங்கிக் கொண்டு அந்த கர்ப்பிணிப் பெண் பதில் சொன்னால் என்ன செய்வது? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் தனது குடும்ப வாழ்க்கையில் கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது தான் அவள் பெண் என்ற நிலையின் பூரணத்தை அடைகின்றாள்.

அதற்காகத் தனது உயிரையே தியாகம் செய்யத் தயாராகின்றாள்.

அப்படிப்பட்ட பெண்களைப் பார்த்து மனம் இரங்காதவன் உலகிலே யாரும் இருக்க மாட்டான். (இருப்பது போல் நடிப்பது வேறு)

பொதுவாக நான் பேரூந்தில் செல்லும் போது பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சில மரியாதைக்குரியவர்களுக்கும் எனது இருப்பிடத்தை விட்டுக் கொடுப்பது வழக்கம்

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்

இது எத்தனையாவது? என்றால்.....

எத்தனையாவது பிள்ளை என்றோ, எத்தனையாவது மாதம் என்றோ விளங்கிக் கொண்டு அந்த கர்ப்பிணிப் பெண் பதில் சொன்னால் என்ன செய்வது?

எஸ்! கொஞ்சம் யோசிக்கவேண்டிய விடயம் தமிழ்!

பொதுவாக ஒரு பஸ்ஸில் குறைத்து 40 இருக்கைகலாவது இருக்கும். அது நிறைந்திருந்து அதன்பின் வரும் முதியவருக்கோ, கர்ப்பிணிகளுக் குத்தான் இடப் பிரச்சினை! திருவாளர் பொதுஜனம் 40 ல் பெருபாலும் 35 க்கு மேல் மற்றவர்களின் சிரமங்களுக்கு உதவுகிறவர்கலாகத்தான் இருக்கிறார்கள் . யாரோ இரண்டொரு அலட்சியப் பேர்வழிகள் இருப்பார்கள்தான், அவர்களைப்பற்றி அவர்களும் அக்கரைப் படுவதில்லை, நாங்களும் யோசிக்கத் தேவையில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

நிறை மாத கர்ப்பம் என்றால் இந்த ஆராச்சி எல்லாம் தேவைப்படாது.பேசாமல் இடம் கொடுக்கலாம்.இன்னுமொரு வெறுப்பை ஏற்படுத்தும் விடையம் சில வயோதிப பெண்கள் கூரிய குதி உயர்ந்த காலனிகளை போட்டுக்கொண்டு பேருந்தில் தளடளாடுவதைப் பாத்தால் எழும்பி இடம் கொடுக்க மனம் வருமோ :D

இல்லவே இல்லை, அப்படி அவர்களுக்கு இடம் கொடுப்பவர்களை அந்த கூரிய குதி உயர்ந்த காலனிகளால்

அடிக்கத் தான் மனம் வரும் :):D:huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.