Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன செய்யலாம்...யாராவது ஜடியா தாங்கோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனசே சரியில்லை...பிறந்ததில் இருந்து இன்று வரை ஒன்றுமே சரி வருதில்லை...எடுத்த காரியம் எல்லாம் தடைபட்டு கொண்டு போகுது...என்ன செய்யலாம் என்றே தெரியல்ல...சின்னனில் இருந்து படிப்பு ஒழுங்காய் வரவில்லை...ஒரு மாதிரி தட்டு தடுமாறி வெளிநாடு வந்து தட்டு தடுமாறி வேலை எடுத்தால் அதிலையும் ஒழுங்காய் நிலைக்க முடியல்ல...மாறி,மாறி இரண்டு மூண்டு வேலை செய்து கடைசியில் அந்த வேலையும் போட்டுது...புது வேலையும் எடுக்கெலாமல் இருக்கு...பேசாமல் கல்யாணம் கட்டிட்டு செட்டில் ஆவோம் என பார்த்தால் ஒருதரும் மாப்பிள்ளை தாறங்களில்லை...தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு...சாக வேண்டும் என நினைத்தாலும் தற்கொலை செய்ய பயமாய் இருக்கு...என்ன செய்யலாம் என யாராவது ஒரு ஜடியா தாங்கோ...புண்ணியமாய் போகும். :lol::):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஒரு அருமையான இணைப்பு நன்றிகள் ஆண்டவா :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கல்ல இது தான் உங்கட நிலை என்று. ஏன்னா உங்களுக்கு வெளிநாட்டுக்கு வந்ததே ஒரு வகையில் நீங்கள் எண்ணியதில் அடைந்த வெற்றி தானே. ஏன் அதனை கருத்தில் எடுக்காமல் மறையான விடயங்களை மட்டும் சிந்திக்கிறீங்க..! பிறர் யாரும் தோல்விக்குக் காரணமல்ல. நாங்கள் எடுக்கும் முயற்சியில் உள்ள குறைபாடுகள் தான் தோல்வி ஆகிறது. அதை நிவர்த்திக்க நம்பிக்கையும் விடா முயற்சியும் அவசியம்.

இந்த உலகில் எத்தனையோ பேர் சும்மா மற்றவர்களின் வாழ்க்கையோட விளையாடிக் கொண்டு இருக்காங்க. அப்படி இல்லாமல் நீங்களும் உங்கட பாடுமா இருக்கிறது ஒரு வெற்றிகரமான விடயம் தானே. உங்களில் உள்ள நேர் தன்மையான விடயங்களைக் கொண்டு மறைத் தன்மையாக இந்தச் சமூகம் அடையாளம் காட்டும் அல்லது காட்டச் செய்யும் விடயங்களில் இருந்து தப்பி வந்தீங்கன்னாலே போதும். வாழ்க்கையை வாழலாம்.

அப்படியும் முடியல்லைன்னா நாங்க எல்லாம் இருக்கம். நல்ல தோழியா உங்களை நினைச்சு உதவி செய்வம். ஆகவே சூழலைக் கண்டு அஞ்சாம துணிஞ்சு செயற்படுங்க.

சாவினால் கூட சேதத்துக்கு நன்மை வரனும் என்று சரித்திரம் படைத்த எங்கள் மாவீரர்களின் இலட்சிய உறுதியைப் பாருங்க. உங்களுக்கு சாவை தாண்டி எப்படி சாதாரண இந்த வாழ்க்கையை வெற்றிகரமாக்கலாம் என்ற நம்பிக்கை வரும்.

அதையும் தாண்டி தோள் கொடுக்க நாங்கள் இருக்கிறம் தோழி. உண்மையில் உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கும் என்றால்..! :lol::)

Edited by nedukkalapoovan

இப்படித்தான் என் நிலைமையும் 6 வருசத்துக்கு முன் இருந்திச்சு.. அதை மாற்ற வேறு வழி தெரியாமல் கல்யாணம் கட்டினான்.... இப்ப பார்த்தால், அன்று இருந்தது எவ்வளவோ மேல் போலத் தோன்றுது....

  • கருத்துக்கள உறவுகள்

ரதி ...வீடியோ பார்த்தீங்க தானே . அவரிடம் உள்ள மிகப்பெரிய பலம் தன்னம்பிக்கை . வாழ்க்கையில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள் .வெற்றி பெறலாம். எத்தனயோ பேர் மனதுக்குள் வைத்து குமைவார்கள் துணிந்து எழுதிய உங்கள் துணிச்சலை பாராடுகிறேன். வெற்றிக்கு என் வாழ்த்துக்கள். வாழ்க்கை இன்னும் வாழ இருக்கிறது வாழ்ந்து காட்டுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி முதலில் எழுதியது சிரிக்க...

இனி

தங்கள் சிக்கல் உண்மையெனில்....?

பிறந்தோம், வளர்ந்தோம், கல்யாணம்கட்டிக்கொண்டோம், பிள்ளை பெத்தோம், வயது சென்று கட்டையிலோ போனோம்.................. என்பது மட்டும் வாழ்க்கையாகாது.

எமக்கு கிடைத்த இந்த நேரத்தை எப்படி மற்றவருக்கு பயன் உள்ளதாக மாற்றினோம்

நாம் இறந்த பிறகும் பேசப்பட்டோமா என்பதுதான் எமது வாழ்க்கையின் வெற்றி.

சந்தோசம்

நிம்மதி எல்லாமே..........

பொறுப்புகளை அதிகரியுங்கள்

மற்றவர்களுக்காக வாழ நேரம் ஒதுக்குங்கள்

பிள்ளைகளுடன் அல்லது வயதானவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்

ஏன் நேசக்கரம் போன்ற அமைப்புக்களுக்காக சில மணித்துளிகளை ஒதுக்குங்கள்

பிறந்ததன் பலன் பிரகாசமாய்த்தெரியும்

Edited by விசுகு

மனசே சரியில்லை...பிறந்ததில் இருந்து இன்று வரை ஒன்றுமே சரி வருதில்லை...எடுத்த காரியம் எல்லாம் தடைபட்டு கொண்டு போகுது...என்ன செய்யலாம் என்றே தெரியல்ல...சின்னனில் இருந்து படிப்பு ஒழுங்காய் வரவில்லை...ஒரு மாதிரி தட்டு தடுமாறி வெளிநாடு வந்து தட்டு தடுமாறி வேலை எடுத்தால் அதிலையும் ஒழுங்காய் நிலைக்க முடியல்ல...மாறி,மாறி இரண்டு மூண்டு வேலை செய்து கடைசியில் அந்த வேலையும் போட்டுது...புது வேலையும் எடுக்கெலாமல் இருக்கு...பேசாமல் கல்யாணம் கட்டிட்டு செட்டில் ஆவோம் என பார்த்தால் ஒருதரும் மாப்பிள்ளை தாறங்களில்லை...தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு...சாக வேண்டும் என நினைத்தாலும் தற்கொலை செய்ய பயமாய் இருக்கு...என்ன செய்யலாம் என யாராவது ஒரு ஜடியா தாங்கோ...புண்ணியமாய் போகும். :o<_<:huh:

பொதுவாக மனிதர்கள் எல்லாரும் வாழ்கையில் ஒரு தடவையாவது இப்படியான மனநிலைக்குத் தள்ளப் படுவது ஒன்றும் புதிதான விடையம் இல்லை. சிலருக்கு படிப்பில் மதிப்பெண்கள் குறையும் போதும், வேலைதேடி கிடைக்காமல் போகும் போதும், கிடைதவேலையை தக்கவைத்துள் கொள்ளமுடியாமல் போகும் போதும், காதல் தோல்வி அடையும் போதும், அன்பானவர்கள்/ குடும்பத்தினர் மரணிக்கும் போதும், சிலருக்கு இது எல்லாம் சேர்ந்து வரும். (இங்கு கன பேர் இதை எல்லாம் சந்தித்துத் தான் வந்து இருக்கிறோம், என்னைப் போல...)

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் கஷ்டப் படாமலா வாழ்ந்து முடித்து இருகிறார்கள்? உங்களுக்கு தற்போது உள்ள பிரச்சனைக்கு தீர்வு தேடுகிறீர்களா? அல்லது திருமணம் மூலம் இருக்கிற பிரச்சனையை இன்னும் கூடிக் கொள்ள யோசிக்கிறீர்களா??

இதற்கு முதல் நீங்கள் உங்கள் வாழ்கையில் சில தடங்கல்களை சந்தித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் உங்களால் தடங்கல்களை சந்திக்கும் மனப் பக்குவம் இல்லை என்று நினைப்பது தவறாகும் . முதல் தடங்கலை சந்திக்கும் மனவலிமை இல்லாமல் போய் இருந்தால், வாழ்க்கையில் இவ்வளவு தூரம் வந்திருப்பீர்களா? ஒரு கணம் திரும்பிப் பாருங்கள், முதல் தடங்கலில் ஏற்பட்ட அதே வலியா இப்போதும் உள்ளது? இல்லை தானே... இதுவே ஒரு பெரிய வெற்றி தான். :wub:

உங்களில் உண்மையான அக்கறை/ அன்பு கொண்ட உங்கள் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ மனம் விட்டு கதைத்து அவர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டாலும், உங்கள் வாழ்க்கை சம்பந்தப் படட்ட முடிவுகளை கூடிய வரையில் நீங்களே எடுக்கப் பாருங்கள்.

ஒவ்வொரு படிகளிலும் கால் பதித்து ஏறிப் போவது சுலபமானது இல்லை. தடக்கி விழுந்தால், அதற்குரிய காரணத்தை அறிந்து அடுத்த படியில் அவதானமாக கால் பதித்து ஏறப் பாருங்கள். வெற்றி அடைவீர்கள்!

வெற்றி அடைய வாழ்த்துக்கள் ரதி!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக மனிதர்கள் எல்லாரும் வாழ்கையில் ஒரு தடவையாவது இப்படியான மனநிலைக்குத் தள்ளப் படுவது ஒன்றும் புதிதான விடையம் இல்லை. சிலருக்கு படிப்பில் மதிப்பெண்கள் குறையும் போதும், வேலைதேடி கிடைக்காமல் போகும் போதும், கிடைதவேலையை தக்கவைத்துள் கொள்ளமுடியாமல் போகும் போதும், காதல் தோல்வி அடையும் போதும், அன்பானவர்கள்/ குடும்பத்தினர் மரணிக்கும் போதும், சிலருக்கு இது எல்லாம் சேர்ந்து வரும். (இங்கு கன பேர் இதை எல்லாம் சந்தித்துத் தான் வந்து இருக்கிறோம், என்னைப் போல...)

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் கஷ்டப் படாமலா வாழ்ந்து முடித்து இருகிறார்கள்? உங்களுக்கு தற்போது உள்ள பிரச்சனைக்கு தீர்வு தேடுகிறீர்களா? அல்லது திருமணம் மூலம் இருக்கிற பிரச்சனையை இன்னும் கூடிக் கொள்ள யோசிக்கிறீர்களா??

இண்டைக்கு வந்துள்ள இங்கிலாந்து பஜெட் படி பார்த்தா... எனி சைல்ட் கிரடிட் எடுத்தும் சீவியம் ஓட்ட முடியாத நிலை வரப்போகுது. இதனால் அன்பார்ந்த தமிழ் புலம்பெயர் குடும்பஸ்தர்கள் பெரும் இன்னல்களுக்கு இலக்காக நேரிடலாம் போலத் தெரியுது. அதோட பொருட்கள் சேவைகளுக்கான வரியும் 2.5% த்தால் உயர இருக்குது. அதுமட்டுமன்றி பல பொது சலுகைகளும் இல்லாமல் செய்யப்பட உள்ள நிலையில்.. தனிக்கட்டையா வாழுறதே பெரிய கஸ்டமான காரியமா இருக்கப் போகுது. இதையெல்லாம் ரதி சரியா அலசி ஆராய்ஞ்சு ஒரு முடிவுக்கு வாங்கோ. அதற்காக உங்களை வாழ வைச்சுப் பார்க்க விரும்பிற ஒருவர் வந்தால் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை.

குட்டி சொன்னது போல.. உங்களை விட மோசமான நிலைகளை வெற்றிகரமாக கடந்து வந்தவர்கள் பலர் இங்கும் இருக்கிறார்கள். அவர்களுள் எங்களைப் போன்றவர்களும் அடக்கம். ஏதோ சமாளிச்சுக்கிட்டு வாழுறம் இல்லையா.

ஒரு நாளும் மற்றவர்களோடு ஒப்பிட்டு உங்களை தாழ்த்திக் கொள்ளாமல்.. உங்களுக்கு நிறைவை தரும் வகைக்கு வாழப் பழகிக் கொண்டீர்கள் என்றால் வாழ்க்கை எப்போதும் இனிக்கும். மற்றவர்களிடம் அதிக எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்ளாதீர்கள். பின்னர் அவர்கள் ஏமாற்றும் போதோ ஆபத்தில் கைவிடும் போதோ அது புதிய ஒரு சூழலுக்குள் சமாளிக்க கஸ்டமான சூழலுக்குள் உங்களை தள்ளிவிடும். எனவே எப்போதும் வாழ்க்கைக்கு அவசியமான அடிப்படைத் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளும் வகைக்கு உங்களை வைத்துக் கொண்டீர்கள் என்றாலே போதும்.. வாழ்க்கையில் பிடிப்பும் அதன் பின் முயற்சியும் வளர்ச்சியும் தானே வரும்.

அதுமட்டுமன்றி.. தோல்விகள் இன்றிய வாழ்க்கை என்பது செய்முறை இன்றிய கல்வி போன்றது. ஆபத்தானது. எனவே தோல்விகளை அனுபவமாக்கி அவை தரும் பாடங்களை கற்று வெற்றியை நோக்கி போவதே சிறப்பாகும். வாழ்கையை உறுதிப்படுத்தி வாழ உதவும். <_<

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது மனம் அமைதியடைய வேண்டும்! இனி வரும் காலங்களில் சீரும் சிறப்புமாய் நீங்கள் வாழ வேண்டும்! வாழ்த்துக்கள்!!! <_<

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அவர்களுக்கு

நீங்கள் எழுதியது உண்மை என்று கருத்தில் கொண்டு தொடர்கின்றேன் <_<

"இன்பமும் துன்பமும் மனம் எனும் தாய்

பெற்றெடுத்த இரட்டைக் குழந்தைகள்"

வாழ்க்கையில் ஆயிரம் வரும் போகும்

ஆனால் நம்பிக்கை என்பது எப்போதும் உங்கள் மனதில் உறுதியாக இருக்க வேண்டும்

"இதுவும் கடந்து போகும்" என்று நினைத்தால் எல்லாம் கடந்து வாழ்க்கையில் முன்னேறலாம்

வாத்தியார்

............................

கஜோலின்ரை படத்தை போட்டிட்டு யார் மாப்பிள்ளை தருவானென்று சொன்னால் எப்படி?

நீங்கள் இப்படி எழுத உண்மையில் யாரும் தூக்கிக் கொண்டு போகப் போகின்றார்கள்.

இனி சீரியஸாக ஒருவனுக்கு பிரச்சனை வரும் போது மற்றவர்கள் எவ்வளவும் ஆறுதல் சொல்லலாம்,அட்வைசும் பண்ணலாம் அவனவனுக்கு தான் தெரியும் தன் பிரச்சனையின் அளவும் பரிமாணமும். என்ரை பங்கிற்கு யோசிக்காதையுங்கோ எல்லாம் நல்லா நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மனசே சரியில்லை...பிறந்ததில் இருந்து இன்று வரை ஒன்றுமே சரி வருதில்லை...எடுத்த காரியம் எல்லாம் தடைபட்டு கொண்டு போகுது...என்ன செய்யலாம் என்றே தெரியல்ல...சின்னனில் இருந்து படிப்பு ஒழுங்காய் வரவில்லை...ஒரு மாதிரி தட்டு தடுமாறி வெளிநாடு வந்து தட்டு தடுமாறி வேலை எடுத்தால் அதிலையும் ஒழுங்காய் நிலைக்க முடியல்ல...மாறி,மாறி இரண்டு மூண்டு வேலை செய்து கடைசியில் அந்த வேலையும் போட்டுது...புது வேலையும் எடுக்கெலாமல் இருக்கு...பேசாமல் கல்யாணம் கட்டிட்டு செட்டில் ஆவோம் என பார்த்தால் ஒருதரும் மாப்பிள்ளை தாறங்களில்லை...தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு...சாக வேண்டும் என நினைத்தாலும் தற்கொலை செய்ய பயமாய் இருக்கு...என்ன செய்யலாம் என யாராவது ஒரு ஜடியா தாங்கோ...புண்ணியமாய் போகும். :lol:<_<:huh:

பொதுவாக மனிதர்கள் எல்லாரும் வாழ்கையில் ஒரு தடவையாவது இப்படியான மனநிலைக்குத் தள்ளப் படுவது ஒன்றும் புதிதான விடையம் இல்லை.

---------

ரதி, இப்போது நீங்கள் இரண்டு பிரச்சினைகளை ஒரு நேரத்தில் நினைத்து மன விரக்தியில் இருப்பதாக நினைக்கின்றேன்.

ஒன்று வேலை, மற்றது திருமணம். முதலில் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்க்க முயலுங்கள்.

இரண்டையும் ஒரு நேரத்தில் கையாள நினைத்தால் குழப்பமே மிஞ்சும்.

முதலில் நீங்கள் வேலை தேடுவதற்குரிய ஆயத்தங்களில் முழு மூச்சாக இறங்குங்கள்.

எனக்கும் சில வருடங்களுக்கு முன், நான் பலவருடங்களாக செய்த வேலை இல்லாமல் போனபோது மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.

எழுபது விண்ணப்பங்கள் அனுப்பியே அடுத்த வேலை எடுத்தேன். ஒவ்வொரு விண்ணப்பமும் அனுப்ப ஐந்து ஐரோ செலவானது.

அனுப்பிய வேகத்தில் பல விண்ணப்பங்கள் திரும்பி வரும். மனது தளர்ந்தாலும் முயற்சியை கைவிடவில்லை.

நூலகத்தில் உள்ளூர் பத்திரிகைகளில் வரும் விளம்பரங்கள், தெரிந்தவர்கள், அயலவர்கள், நண்பர்கள் என்று எல்லோரிடமும் வேலைக்கு விண்ணப்பித்தேன்.

அந்தக்காலகட்டத்தில் தான் யாழ் களமும் அறிமுகமாகியது. எனது கவலையையும், தனிமையையும் மறக்க யாழ் களம் பெரிதும் உதவியது.

அப்படி ஒரு நாள் யாழ் களத்தில் இருந்த போது....... மதியம் 12 மணி போல் தொலை பேசி அழைப்பு ஒன்று, 2 மணிக்கு நேர்முகத் தேர்வுக்கு வரும் படி அழைத்தார்கள். நான் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதாக சொல்லி விட்டு நேர்முகத் தேர்விற்கு போக ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்த போது...... மனைவி தபால் பெட்டியில் இருந்து ஒரு கடிதத்தை கொண்டு வந்தா. அதனை உடைத்துப் பார்த்தால்..... அதில் வேறு ஒரு இடத்திலிருந்து அடுத்த கிழமை நேர்முகத்தேர்விற்கு வரும்படி கூறியிருந்தார்கள். (எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை)

நான் இரண்டு மணி நேர்முகத்தேர்வுக்குப் போய் அதில் தெரிவு செய்யப்பட்டேன்.

வேலை இல்லை என்று கவலையாக ஆறுமாதம் இருந்த போது கிடைக்காத வேலை...... ஒரு நாளில் இரண்டு வேலை கிடைத்ததை என்னவென்று சொல்வது.

சிலருக்கு கிரக நிலை சரியில்லாததால் வேலை போய், மீண்டும் வரும்.

அது போலத்தான் கலியாணமும். நாள் கோள் சரிவர உங்களது ராஜகுமாரன் குதிரையில் வருவான் கவலைப்படாதீர்கள்.

முயற்சியை மட்டும் கைவிவிட்டு விடாதீர்கள் ரதி. :wub:

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் எல்லோரும், அந்த வெற்றியை போராடித்தான் பெற்றார்கள்.

.

ரதி,

தன்னம்பிக்கையுடன் செயற்படுங்கள். வெற்றி கிட்டும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். இன்று நடக்கும் கெட்டவைகள் எல்லாம் நாளைய நன்மைக்கே என்பதை அனுபவத்தினூடாக கண்டிருக்கிறேன்.

சிலருக்கு கிரக நிலை சரியில்லாததால் வேலை போய், மீண்டும் வரும்.

அது போலத்தான் கலியாணமும். நாள் கோள் சரிவர உங்களது ராஜகுமாரன் குதிரையில் வருவான் கவலைப்படாதீர்கள்.முயற்சியை மட்டும் கைவிவிட்டு விடாதீர்கள் ரதி. <_<

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் எல்லோரும், அந்த வெற்றியை போராடித்தான் பெற்றார்கள்.

.

யாழ் களத்தில் ஒருவர் குதிரையில் ஓடுப்பட்டு திரிகிறார். அவரா? :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை உங்கள் சகோதரியாய்,தோழியாய் நினைத்து கருத்துகள் பகிர்ந்த அனைவருக்கும் அத்தோடு அறிவுரை கூறிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி...நான் தற்போது சும்மா வீட்டில் இருக்க கூடாது என்பதற்காக முழு நேரமாக படிக்க செல்கிறேன்...திருமணம் என்பது இரு மணம் இணைவதாகும் ஒருவரைப் பாவம் எனப் பார்த்து திருமணம் முடிப்பது சரியில்லை என்பது எனது கருத்தாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை உங்கள் சகோதரியாய்,தோழியாய் நினைத்து கருத்துகள் பகிர்ந்த அனைவருக்கும் அத்தோடு அறிவுரை கூறிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி...நான் தற்போது சும்மா வீட்டில் இருக்க கூடாது என்பதற்காக முழு நேரமாக படிக்க செல்கிறேன்...திருமணம் என்பது இரு மணம் இணைவதாகும் ஒருவரைப் பாவம் எனப் பார்த்து திருமணம் முடிப்பது சரியில்லை என்பது எனது கருத்தாகும்.

தங்கச்சி!!!!

எந்தப்பிரச்சனையையும் முத்தவிடக்கூடாது??

முத்தினாப்பிறகு மாப்பிளை எடுக்குறது கஸ்டம்.

ஏனெண்டால்

இப்பவும் இஞ்சை சீதனம் கேக்கிறாங்கள் :o

காலம்போனாப்பிறகு சீதனம் குடுக்கக்கட்டாது :(

ஆனபடியாலை

கூனோ குருடோ :lol:

கறுப்போ வெள்ளையோ :lol:

எதையெண்டாலும்

உடனை அலுவலை முடிக்கப்பாருங்கோ :D

இன்னும் இழுத்தடிச்சியளெண்டால் :lol:

என்னைப்போலை இருக்கிற வயோதிப சீமான்கள்தான் பட்டுவேட்டியோடை வந்து நிப்பினம் :D

என்னை உங்கள் சகோதரியாய் நினைத்து கருத்துகள் பகிர்ந்த அனைவருக்கும்

:D:o

:D:(
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விசயத்தில விடல்ஸ், நெடுக்ஸ், கறுப்ஸ் எல்லாரும் சாதகமாய் பதில் குடுத்து இருக்கயினம். அத்திவாரம் போடப்பட்டு இருக்கிது. இனி வீடு கட்டி குடியேறிக்கொள்ளுறது ரதியின்ர திறமை. :lol:

அடப் பாவிகளா.. யாழில் பழகின தோழி என்ற வகையில் ரதிக்கு கஸ்டம் என்றால் உதவலாம் என்று ஒரு மனிதாபிமான அடிப்படையில் சொன்னேனே தவிர.. விடல்ஸ் கறுப்ஸ் ஓட போட்டி போடுற அளவுக்கு எனக்கு தகுதியும் இல்லை.. எண்ணமும் இல்லை..!

பொதுவாவே யாரும் துன்பப்படுவதை நேரில் கண்டால் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வது எனது குணம். அந்த வகையில் தான் சொல்லி இருக்கிறேன். :lol:

ஒரு மனிதனின் கஸ்டத்தை மையமாக வைத்து அவனை (அது ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும்) தங்களின் தேவைகளுக்காக பயன்படுத்துவதை நான் வெறுக்கிறேன். அதிலும் அவர்களை அவர்களின் துன்பத்தில் இருந்து மீள வழிகாட்டிவிட்டு அவர்கள் அதில் இருந்து மீண்டதும்... அவர்கள் வழியில் அவர்களைச் செல்ல விடுவதுதான் உதவி ஆகும். அடுத்தவரின் கஸ்டத்தில் அவர்களுக்கு மாலை சூடுவது அல்ல உதவி. இதைத்தான் ஊரில் தவிச்ச முயல் அடிப்பது என்பார்கள். அதற்கெல்லாம் நாங்கள் ஏற்ற ஆக்களில்லை. :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்னை உங்கள் சகோதரியாய்,தோழியாய் நினைத்து கருத்துகள் பகிர்ந்த அனைவருக்கும் அத்தோடு அறிவுரை கூறிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி...நான் தற்போது சும்மா வீட்டில் இருக்க கூடாது என்பதற்காக முழு நேரமாக படிக்க செல்கிறேன்...திருமணம் என்பது இரு மணம் இணைவதாகும் ஒருவரைப் பாவம் எனப் பார்த்து திருமணம் முடிப்பது சரியில்லை என்பது எனது கருத்தாகும்.

நல்ல முடிவு தோழி. பெற்ற கல்வி எப்போதும் உங்களோடு கூட இருந்து உங்களுக்கு உதவி நிற்கும்...! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரதி கலியானம் கட்டினால் செட்டில் ஆகலாம் என்பது 100 வீதம் சரி வராது.சில வேளை அதற்க்கு பின் பிரச்சனை இதை விட கூட வரலாம்.அல்லது தென்றல் வீசலாம்.கலியானம் என்பது கிணத்துக்கை குதிப்பது மாதிரி.சிலர் கிணறு இருக்கு என்று தெரியாமல் போய் விழுவினம்.சிலர் தெரிஞ்சு கொன்டு போய் விழுவினம்.இன்னும் சிலர் கிணத்துக்கட்டில் நின்று யோசிந்நுக்கொண்டு நிக்கேக்க யாராவது தள்ளி விட்டுவிடுவினம்.எப்டியோ நீந்த தெரிந்தால் ஜாலி.இல்லாவிட்டால் உயிரோட சங்கு தான். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரதி கலியானம் கட்டினால் செட்டில் ஆகலாம் என்பது 100 வீதம் சரி வராது.சில வேளை அதற்க்கு பின் பிரச்சனை இதை விட கூட வரலாம்.

பிரச்சனை இதைவிடக் கூட வரும்போது இப்ப இருக்கும் பிரச்சினை ரொம்ப சின்னதாயிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா சொல்கிற மாதிரி கால காலத்திற்கு கள்யாணம் செய்ய வேண்டும்...கடைசி காலத்தில் எல்லாரும் குடும்பம் குட்டி என இருக்கும் போது நாங்கள் தனிய இருந்து கொண்டு அவதிப்பட வேண்டும்.கல்யாணம் கட்டினவர்கள் எல்லோரும் ச்ந்தோசமாய் இருக்கிறார்கள் என நான் சொல்ல வரவில்லை...ஆனால் கல்யணம் கட்டினால் கணவன் சரியில்லா விட்டாலும் பிள்ளைகளாவது இருக்கிறார்கள் என சந்தோசப்படலாம்.[கொள்ளி வைக்கவாவது ஒரு பிள்ளை வேண்டும் அல்லவா]

த‌யா அண்ணா உண்மையை சொல்லுங்கள் நெடுக்ஸ்சுக்கு கல்யாணம் கட்டுற வயது வந்திட்டோ அல்லது அவர் கல்யாணம் கட்டி பிள்ளைகள் இருக்கிறார்களோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் பல உறுப்பிர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவ்வகையில் ரதி அவர்களும் ஒரு உறுப்பினரே மற்றும்படி அவரது பெயர் ரதி எனவிருப்பதால் உறுப்பினர் பெண்ணாக இருக்கவேண்டுமென்பதில்லை சிலவேளை அவரது பெயர் ரதிவர்மனாகவமிருக்கலாம். இதுவொன்றும் பெரியவிடையமில்லை. மற்றும்படி இவ்விடுகையை நான் கவனித்தே வருகிறேன் பலகருத்துக்களையும் ஆலோசனையையும் உள்ளடிக்கியதாகும். இவ்விடுகைக்கு அதாவது ரதி அவர்களது வோண்டுகோளுக்கு ஆலோசனை செய்ய நான் விரும்பவில்லை காரணம் அதற்கான தகுதி எனக்கில்லை. ஒரு தனிமனிதனது அனைத்துச் செயற்பாட்டினிற்கும் பாலுணர்வே முதற்காரணம் எனும் சிக்மன் பிரைன் அவர்களது எடுகோளை இங்க முன்வைக்கிறேன் சிக்மன் பிரைன் அவர்கள் தனது கருத்துக்குத் தந்த உதாரணங்கள் நாகரீகம் மற்றும் புனிதத் தன்மை போன்றவற்றில்கொஞ்சமேனும் இப்போதும் நம்பிக்கையுள்ளதால் அவரது அனைத்து எடுகோள்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இதுவரை என்னிடம் இல்லை. மாறாக நான் ஒன்றும் சுத்தமானவனில்லை ரதியின் கேள்விகட்க ஆலோசனை சொல்வதற்கு அதற்காக ஏனையோர் ஆலோசனை சொல்வதற்கு யோக்கியதையில்லாதவர்கள் என நான் சொல்ல மாட்டேன் இங்கு இவ்விடையத்தில் நான்மட்டுமே சுத்தமில்லை காரணம் ரதி அவர்கள் தன்னை பெண்ணாகவே யாழில் அறிமுகப்படுத்தியுள்ளார்.. ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம் ரதி அவாகள் திருமண வயதுவரை வளர்ந்துவிட்டார் ஆக கிட்டத்தட்ட இருபத்திஐந்தோ அன்றேல் அதற்கு அண்மித்ததாகவோ தனது வயதினை நிறைவுசெய்துள்ளார் அவர் தனது கடந்தகால அனுபவங்கள்மூலம் தானே தனக்கான ஒரு நல்ல பாதையைத்தேடிக்கொள்வார் எனும் நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.