Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த நிலைக்கு யார் காரணம்?

Featured Replies

காத்திரமான ஓர் காணொளிப்பதிவு. சகாறா அக்கா, நெடுக்ஸ், கண்மணி அக்கா, ரதி மற்றும் இங்கு கருத்துக்கள் கூறிய அனைவரும் கட்டாயம் இந்த காணொளியை பாருங்கோ. சகாறா அக்காவின் பல கேள்விகளுக்கு இங்கு பதில் காணப்படுகிது.

இணைப்புக்கு நன்றி சுகன்.

  • Replies 55
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வரியில் பதில் சொல்வதானால் இந்த நிலைக்கு காரனம் பெண்கள்தான்

உங்களை இரு வரியில் சொல்ல சொன்னால்.................???????????

இந்த நிலைக்கு ஆண்களும் காரணம் என்று சொல்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சந்திக்கு சந்தி கந்துக்குள் நடந்த சம்பவங்களை மட்டும் அiடிப்படையாக கொண்டு விவாதிக்க கூடிய விடயமல்ல இது.

பக்கசார்பற்ற கருதத்து கணிபப்பின் பின்பு எடுக்கபட வேண்டிய முடிவுகள் இன்னமும் எட்டபடவில்லை.

எத்தனை வீதமான பெண்கள் ஆண்களால் பாதிப்படைகின்றார்கள்?

எத்தனை வீதமான ஆண்கள் பெண்களால் பாதிப்டைகின்றார்கள்?

என்ற வினாக்களுக்கு சராசரியான பதில்களை தேடியே பின்பே எமது கருத்துகளை முன்வைக்க முடியும். அதிகாரத்தில் அமர்ந்த பெண்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்தார்கள் என்று பிறிதொரு தலைப்பில் இளங்கோ எழுதியிருந்தார்......... அதற்கு உதாரணங்களையும் தந்தார். அதுபோல உதாரணங்களோடு கருத்துக்கள் முன்வைக்கபட்டு ஒரு விட்டுகொடுப்புடன் விவாதித்தாலே நாம் ஒரு உண்மையான பக்க சார்பற்ற முடிவை எட்ட முடியும்.

தற்போதைய உலகில் பண ஆதிக்கம் என்பதே தலைவிரித்தாடுகின்றது........... பண ஆதிக்கம் என்பது பல ஆளுமை படைத்த ஆட்சியாளர்களின் வாய்களையே மூடி வைத்துள்ளது. பண ஆதிக்கம் எந்த அளவில் இந்த பாலின ஆக்pரமிப்பில் பங்கு கொள்கின்றத என்பதை யாராவது விடயமறிந்தவர்கள் விபரங்களோடு முன்வைத்தால் அதில் பல உண்மைகள் நாம் நீண்ட விவாதங்களுக்கு நேரம் செலவிடமலேயே விளங்கிகொள்ள இலகுவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

காத்திரமான ஓர் காணொளிப்பதிவு. சகாறா அக்கா, நெடுக்ஸ், கண்மணி அக்கா, ரதி மற்றும் இங்கு கருத்துக்கள் கூறிய அனைவரும் கட்டாயம் இந்த காணொளியை பாருங்கோ. சகாறா அக்காவின் பல கேள்விகளுக்கு இங்கு பதில் காணப்படுகிது.

இணைப்புக்கு நன்றி சுகன்.

இந்தக் காணொளி இந்தியாவை மையமாகக் கொண்டது. இந்திய தேசம் மூடநம்பிக்கைகளால் கண்டுண்டு கிடக்கும் ஒரு தேசம். அறியாமை இன்னும் தலைவிரித்தாடுகிறது. காவல்துறையில் ஊழல் மற்றும் செல்வாக்கு.... சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த நேர்த்தியான நிர்வாக அமைப்பின்மை.. இப்படி பல பிரச்சனைகள் உள்ள நாட்டில் பெண்களுக்கு மட்டுமல்ல பொதுவாகவே மனிதர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை அதிகம்.

ஆனால் மேற்குலக நாடுகளை உற்றுநோக்கினால் அமெரிக்கா பிரிட்டன் போன்ற மேற்கு நாடுகளில் பெண்களுக்கு குழந்தைகளுக்கு அதிக சட்டப்பாதுகாப்புள்ளது. சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தும் திறமை மிகு நிர்வாக அமைப்பு உள்ளது. அதன் கீழ் பெண்கள் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ள அதேவேளை ஆண்கள் மீதான பாதுகாப்பு என்பது குறைவடைந்துள்ளது.

இன்று மேற்குலக ஊடகங்களே ஆதங்கப்படும் விடயமாக விழிப்புணர்வூட்டும் விடயமாக கொண்டு வருவது.. ஆண்கள் மீதான பெண்களின் வன்முறை அதிகரிப்பையே. ஒரு ஆண் ஒரு பெண்ணை ஏதாவது காரணத்திற்காக அடித்துவிட்டால் உடனடியாகவே தன்மீது வன்முறை செய்ததாக பெண் பதிவு செய்து அந்த ஆணுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும். ஆனால் ஒரு பெண்ணால் துன்புறுத்தப்படும் ஆணுக்கு அப்படி ஒரு இலகுவான நிலை இல்லை. அதுமட்டுமன்றி வன்முறைக்கு இலக்காகும் ஆண்களுக்கு பரிகாரம் வழங்க விசேட சட்டங்களும் இல்லை. ஆனால் பெண்களுக்கு குழந்தைகளுக்கு உண்டு.

ஒவ்வொரு நிமிடத்திற்கும் பெண்களை விட அதிக எண்ணிக்கையான ஆண்கள் வன்முறைக்கு இலக்காகின்றனர் என்ற உண்மையை மேற்குலக ஊடகங்கள் சொல்லியும் கூட அதனை இங்கு எவரும் மேற்கோள் காட்டி ஒரு சிறு கருத்தைக் கூட முன்வைக்க வில்லை. ஆனால் தகுந்த சட்டப் பாதுகாப்பு மூலம் பாதுகாப்பளிக்கப்பட்டுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பூதாகரமாக்கி அது மட்டுமே சமூகத்தில் மிகப் பெரிய கொடுமையாக இருப்பது போல காட்டப்படுவதன் நோக்கம் தான் என்ன..??! பெண்களைப் போலவே ஆண்களும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்க.. பெண்களை பற்றி மட்டுமே இந்த உலகம் பேசிக் கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஆண்கள் பரீட்சையில் சித்தியடையும் வீதம் பல நாடுகளில் வீழ்ச்சி கண்டு வந்துள்ளது. அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் இது பாரிய வீழ்ச்சிப் போக்கை காட்டுகிறது. இதற்கு தீர்வு தேடப்படுவதாக தெரியவில்லை. பெண்களுக்கு இப்படி ஒரு நிலை என்றால்.. இன்னும் பெண்ணை படிக்க விடுகிறார்கள் இல்லை.. பெண்ணை துன்புறுத்துகிறார்கள்.. அவளுக்கு ஆணாதிக்க சமூகத்தில் படிக்க முடியவில்லை.. இப்படி ஆயிரம் சாட்டுக்களை முன்வைத்து விழிப்புணர்வை ஊட்டி இருப்பர். ஆனால் ஆண்களின் இந்த தொடர் வீழ்ச்சி பற்றி வெறும் செய்திகள் எழுதப்படுவதோடு சரி. அந்த வீழ்ச்சிகளை நிவர்த்தித்து ஆண்களின் சதவீதத்தை பெண்களினதிற்கு சமனாக நிறுத்த யாரும் முயற்சிப்பதாக இல்லை. இது எதனைக் காட்டுகிறது. இந்த உலகம் ஆண்களை இரண்டாம் தர நிலையில் வைத்து பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சட்ட முன்னுரிமை அளித்து செயற்படுவதையே காட்டுகிறது. இதுவே ஆண்கள் மீதான பெண்களின் வன்முறைகளும் மறைக்கப்பட வசதியாக அமைந்திருக்கிறது.

இப்படியான ஒரு சமூக அல்லது சட்ட அமைப்பின் கீழ் ஆணாதிக்கத்தை விட பெண்களின் மேலாதிக்கமே பெண்களிற்கு இன்று பிரச்சனைகளின் தோற்றுவாய்களாக எழுந்துள்ளனவே அன்றி.. ஆண்கள் அதில் ஒரு உபகாரணி மட்டுமே.

இந்தக் காணொளியையும் ஒரு தடவை காணுங்கள்... சமூகத்துக்கு காட்டப்பட்டு வந்துள்ள படம் என்ன.. உண்மை நிலை என்ன என்பது பற்றி சொல்கிறார்கள்..!

http://www.youtube.com/watch?v=ZlWQrxVFJ7M

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒரு இளம் குடும்பம்

அவரது தமையனார் தண்ணி போட்டுவிட்டு தொலைபேசி எடுத்தால், மணித்தியாலக்கணக்கில் கதைத்துக்கொண்டே இருப்பார்.

தொலைபேசி அடித்ததும், அவர் இலக்கத்தை பார்த்துவிட்டு, தமையன்தான் என்று தெரிந்ததும், தான் குரல் காட்டினால் தன்னால் விடுபடமுடியாது என்று தெரிந்து, அவர் தொலைபேசியை எடுக்காமல், மனைவியை எடுக்கச்சொல்வார். மனைவி மறுக்கக்கூடாது. மறுத்தால் செத்தார்.

அவராக தொலைபேசியை வைக்கும்வரை இவள் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இரு சிறு பிள்ளைகள் அழுதாலும் நிறுத்தமுடியாது.

ம் ம் ம் போட்டபடி கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். பிள்ளைகளுக்கு சாப்பாடு அல்லது ஏதாவது அவசர தேவைகளுக்காக பேசுவதை நிறுத்திவிட்டால்.....

அன்று நித்தரை கொள்ளமுடியாது.

இதில் என்ன கொடுமையென்றால் அவருடைய தமையனார் குடியின் அகோரத்தால் இறந்துவிட்டார்.

தற்போதும் இரவில் அவள் தொலைபேசியை காதுக்குள் வைத்தபடி.....

ஏனெனில் நீ வடிவாக கதைத்திருந்தால் அவர் இறந்திருக்கமாட்டார். அவர் இறந்தாலும் பரவாயில்லை. அவர் இருந்து உன்னுடன் கதைக்குமாப்போல் கதைத்துக்கொண்டே இரு அவரது ஆத்தமா சாந்தியடையும் என்று.

அவள் இங்கு வைத்தியத்துக்கு படித்தவர்

திருமணம் முடிந்ததும் நிறுத்திவிட்டார் தன்னைவிட படிக்கக்கூடாதாம் அதற்கு இவளும் ஆமாப்போடுகின்றாள் அவர் சொல்வது சரிதானே என்று.

பைத்தியக்காறி மாதிரி பேசுகின்றாய் இடம் கொடுக்கின்றாய் என்றால்

தனது பிள்ளைகளுக்கு அவர் வேண்டுமாம்.

இங்கே நான் ஆதிக்கப்போட்டி வைப்பவர்களைக்கேட்பது......

இதற்கு காரணம் யார்

அடிக்கும் அவனா....?

தலைகுனிந்து நிற்கும் இவளா...?

நான் சொன்னேன்

முதலாவது அடியை பொறுத்துக்கொள்

இரண்டாவது அடிக்கு ஏன் என்று கேள்வி கேள்.

மூன்றாவது அடியை நிற்பாட்டு.

போதும் நிறுத்து என்று சொல்.

இதை நீ சொல்லும்வரை எவரும் வரமாட்டார் உன்னைக்காப்பாத்த என்று...

பெண்கள் இப்படி இருந்துகொண்டு ஆண்களை வசைபாடுவதை நிறுத்துங்கள்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் நாட்டை எடுத்துக் கொண்டால் ஒரு ஆண் ஊருக்கு போய் ஒர் பெண்ணை மணக்கும் போது அல்லது இங்கு திருமணம் செய்யும் போதோ தனது உண்மை நிலைமையை சொல்வதுல்லை அதனால் தான் பிரச்சனை ஆரம்பமாகிறது என நினைக்கிறேன்...புலம் பெயர் நாட்டில் உள்ள ஆண்கள் தங்களுக்கு திருமணம் பேசும் போது தங்களது வருமானம் என்ன? வீடு இருக்கா அல்லது இல்லையா? அவர்களுக்கு எவ்வளவு கடன் இருக்கு போன்ற விபரங்களை சொல்லாமல் மறைத்து விடுகின்றனர்...அநேகர் பொய்யும் சொல்கிறார்கள்[உ+ம்]தனக்கு பெரிய வீடு இருக்கு,கார் இருக்கு போன்றன மாதிரி...அதனால் அநேக எதிர்பார்ப்போடு வரும் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள்...அதனால் பிரச்சனைகள் குடும்பத்தில் உருவாகின்றன...எல்லா விபரங்களையும் சொன்ன பிறகும் ஒரு பெண் அளவுக்கு மீறி ஆசைப்பட்டால் அது அவளது பிழையாகும்..[அதனால் ஆண்களுக்கு கடுமையாக உழைக்க வேண்டிய தேவை உள்ளது]...அடுத்த காரணம் ஆண்களுக்கிடையேயான போட்டி இரு நண்பர்கள் தங்களுக்கிடையே உள்ள போட்டி காரணமாக தங்களது மனைவியை வசதியாக வைத்திருக்க வேண்டிய தேவை கருதி கடுமையாக உழைக்க வேண்டி வரும்...

யாழில் எத்தனையோ ஆண்கள் உள்ளனர் அநேகர் திருமணம் முடித்து விட்டனர் சிலர் முடிக்கவில்லை...முடித்தவர்களோ அல்லது முடிக்கப் போகிறவர்களோ உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் எத்தனை பேர் எந்த வித நிர்ப்பந்தம் இல்லாமல்,முக அழகை பார்க்காமல்,பணத்திற்கு மயங்காமல்,அவளது சொத்துக்கு ஆசைப்படாமல் அவளது மனதைப் பார்த்து திருமணம் முடித்தீர்கள்? அல்லது முடிப்பீர்கள்?

என்ன ரதி

எங்கேயோ அடிபட்ட அனுபவம்போல் இருக்கிறது...........

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை விசுகு அண்ணா அப்படி இருந்திருந்தால் பயப்படாமல் எழுதுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருக்கின்றேன் சகோதரி

எனது மனைவி ஏதாவது நகை நட்டு கொண்டு வந்தாவா..

சத்தியமாக இதுவரை நான் அதைப்பற்றி கதைத்ததில்லை

எனது மனைவி இங்கு வருவதற்கு 15 தடவைகளுக்கு மேல் முயற்சி செய்தார்

3 தடவையுடன் அவளது குடும்பம் கைவிட்டுவிட்டது

அதில் ஞாயமும் இருந்தது

அவர்களுக்கு இன்னும் 2 பெண் பிள்ளைகள் இருந்தார்கள்

மிகுதி நானே பொறுப்பெடுத்துக்கொண்டேன்

என் காதலி என்னிடம் வந்து மனைவியாகும்போது எனக்கு கடன் 5 லட்சம் பிராங்குகள்.

இருவரும் உழைத்து அதை தாண்டினோம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னவனுக்கு நான் கொடுத்த சீர் தனம் எனது உள்ளம் தான்......

.......பெருமைக்குரிய ஆண்மகன். அன்றும் இன்றும்

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் எத்தனையோ ஆண்கள் உள்ளனர் அநேகர் திருமணம் முடித்து விட்டனர் சிலர் முடிக்கவில்லை...முடித்தவர்களோ அல்லது முடிக்கப் போகிறவர்களோ உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் எத்தனை பேர் எந்த வித நிர்ப்பந்தம் இல்லாமல்,முக அழகை பார்க்காமல்,பணத்திற்கு மயங்காமல்,அவளது சொத்துக்கு ஆசைப்படாமல் அவளது மனதைப் பார்த்து திருமணம் முடித்தீர்கள்? அல்லது முடிப்பீர்கள்?

இதனை அப்படியே மாற்றி பெண்களிடமும் கேட்டுப் பாருங்கள்.. எத்தனை பெண்கள்.. பணம்.. அழகு.. விசா.. வீடு.. கார்.. கிரடிட் ஸ்கோர்.. வேலை.. நகை.. உடை.. என்று பார்க்காமல்.. மனதை பார்த்து ஆண்களை திருமணம் செய்யத் தயாராக இருக்கின்றனர் என்று...??! இந்த உலகில் பைத்தியம் பிடிச்சவள் கூட அப்படிக் கட்டமாட்டாள். ஆனால் நான் அறிந்திருக்கிறேன்... தனது காதலி கஸ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று தெரிந்து மணந்து கொண்ட பணக்கார வாலிபர்களைக் கண்டு இருக்கிறேன். மணந்த பின்னர் அந்த ஏழைப் பெண்கள் குறித்த ஆண்களை மதிக்காமல் மிதித்ததையும் கண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட நன்றி கெட்ட பெண் ஜென்மங்களும் இருக்கு ரதி..! அதையும் சொல்லனும் நீங்க..! ஆண்களை மட்டும் குற்றம் சுமத்தக் கூடாது. நல்ல ஆண்களும் எத்தனையோ பேர் இருக்காங்க. :(

Edited by nedukkalapoovan

'இந்த நிலைக்கு யார் காரணம்?' என்ற சகாரா அக்காவின் தலைப்புக்குப் பதில் சொல்லவேண்டுமாயின் இந்த நிலைக்கு இருபாலருமே தான் காரணம்.

எல்லாப் பெண்களும்/ ஆண்களும் ஒரே மாதிரி தான் என்ற சிந்தனையில் இருந்து வெளி வரவேண்டும். ஒரு பத்துப் பேர் கொண்ட (பெண்களையோ/ ஆண்களையோ) குழுவை எடுத்துக் கொண்டால், அந்தப் பத்து பேரும் உருவ தோற்றத்திலோ அல்லது மன ரீதியிலோ ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்... அதே போல தான் ஒரு சமுதாயம் என்று எடுத்துக் கொண்டால், அதில் பலவிதப் பட்ட பெண்கள்/ஆண்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான குணாதிசியங்கள் அற்றவர்கள் என்று ஏற்றுக் கொள்கிறீர்களா?

பெண்களுக்குப் பெண்கள் தான் எதிரி என்று சொல்வார்கள்... அது மாமியார் மருமகளைப் பொறுத்தவரையில் சரியாக இருக்கலாம். ஆனால் இரு பெண்கள் எதிரியாகும் நிலையை நோக்கி ஏன் போகிறார்கள் என்று பார்த்தல் அதன் மையப் புள்ளி பொதுவாக ஒரு ஆணாகவே இருக்கும் என்று நினைக்கிறன். ஒரு மகனுக்கு அவனது தாய் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் அவனை நம்பி வந்த மனைவிக்குக் கொண்டுக்க

வேண்டியது அவனின் கடமை. இதை தான் பலர் புரிந்து நடப்பதில்லை, புரிந்து நடந்தாலே குடும்பத்தில் பாதிப் பிரச்னை தீர்ந்து விடுகிறதே.

(ஒரு சிலருக்கு விதி விலக்கு)

தாரமிழந்த ஒரு இளம் தந்தை தனது மகனுடன் புலம் பெயர் நாடு ஒன்றில் வாழ்ந்து வந்தார் அவரின் பெற்றோர் உறவினர் என்று யாரும் இங்கே இருந்ததில்லை. ஒரு சில நல்ல நண்பர்கள் தான் இருந்தார்கள். அவர்களின் அறிவுரைப் படி அவர் இரண்டாம் தாரம் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டு, ஊரில் போய் ஒரு அடக்கமான ஏழைப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்போதே அவர் அந்தப் பெண்ணிடம், தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்றும், அவன் எப்பவும் தனோடு தான் இருப்பான் என்றும், வெளிப்படையாகச் சொல்லி தான் திருமணம் நடந்தது. அந்தப் பெண்ணும் முழுமனதுடன் சம்மதிக்கவே திருமணம் நடந்து புலத்தில் இருவரும் குடும்ப வாழ்க்கைய ஆரம்பித்தார்கள்...

சில வருடங்கள் கழித்து அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. (மகனுக்கோ தந்தை மேல் அளவுகடந்த அன்பு) அதன் பிறகு அவர்களுக்குள் அவரின் மகனை வைத்து பிரச்சனைகள்... காரணம் அந்த ஏழு வயதுச் சிறுவனை சிறுவர் காப்பகத்துக்கு அனுப்பச் சொல்லி... பாடசாலை முடியும் நேரங்களில் அந்தப் பெண், குழந்தையுடன் கடைகளுக்கு போய்விடுவார். பலமுறைகள் சிறுவன் பாடசாலை முடிந்து வீடு வாசல் படியில் தகப்பனுக்காக காத்திருப்பான். ஒரு தாயாக ஆனா பின்பு ஆவது ஒரு தாய்க்குரிய/ மனிதத் தன்மையை அந்த பெண் அந்த சிறுவனுக்குக் கொடுக்கவில்லை. நன்மை செய்த கணவனுக்கும் நன்றியாக இல்லை. சில நேரங்களில் இவர்கள் எல்லாரும் மனுசரா என்று யோசிக்கத் தோணுகிறது. இப்படிப் பட்டவ ஜென்மங்களும் பெண்களுக்குள் ஒழிந்தது வாழ்கிறார்கள்...

ஆண்களுக்கும் இதே போன்று தான், எல்லோரும் ஆண் ஆதிக்கத்தைப் பெண்களில் திணிப்பவர்கள் இல்லை. பெண்ணை மதித்து, சம உரிமையை கையாளும் மனப் பக்குவம் அடைந்த்தவர்களுக்கு மத்தியில் மதுவுக்கு அடிமையாகி, அதனால் வீட்டில் பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் மனைவியை அடித்துத் துன்புறுத்தும் ஆண்கள் பலர்... வெளி ஆட்கள் இருக்கிறார்களே, அல்லது பொது இடமாச்சே என்று கூட சிலர் பார்க்க மாட்டார்கள், தங்கள் மனைவியை தரக்குறைவான சொற்களால் பேசுவார்ககள், ஆனால் அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு அந்த வீட்டில் உள்ள பெண் வேலைக்கும் போய், வீட்டிற்கு வந்து பிள்ளைகளையும் பார்த்து, கணவர் தனது குடிகார நண்பர்கள் வட்டத்துடன் வரும் போது வாய்க்கு ருசியாக சமைத்தும் பரிமாற்ற வேணும் (இல்லை என்றால் அவ்வளவு தான்... ) என்று எதிர் பார்த்து வாழும் பலர் ஆண்கள் என்ற போர்வையில் ஒழிந்து வாழ்கிறார்கள்...

நான் ஏன் இங்கு இவற்றை எழுதினேன் என்றால், இப்படி இரு பாலரிலும் பிழைகள் இருக்கிறது... ஆளை ஆள் குற்றம் சொல்லி தங்களில் உள்ள தவறுகளை மறைப்பதோ, அல்லது மழுப்புவதோ சரி இல்லை. . நிலைமைக்குத் தீர்வு காணுமா என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கும்.

பிழைகள் விடுவது மனுசத் தன்மை தான், ஆனால் அவற்றை கண்டறிந்து திருத்தி/ திருந்தி வாழ்வதால் இந்த உலகில் ஒரு முறை வாழும் வாழ்க்கை கூட ஓரளவு சந்தோசமாக இருக்கும் என்பது எனது கருத்து. தவறுகள் இருப்பின் தன்மையாக தனிமையில் இருக்கும் போது சுட்டிக் காட்டவேணும். ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்தது கொள்ள முயற்சியாவது செய்யவேணும். அப்போதாவது ஏதும் மாற்றம் வருமா என்று பார்க்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

குட்டியின் கருத்துடன் நான் ஒத்துப் போகின்றேன்! :lol:

இந்த விடயத்தை விவாதித்துக்கொண்டே போகலாம். ஆனால் எனது அனுபவத்தில் எவ்வளவு ஆணாதிக்கமோ அதேயளவு பெண்ணாதிக்கமும் உள்ளது. குடும்பங்களில் பிரச்சனைகள் வருவது தவிர்க்க முடியாதது. அந்த பிரச்சனைக்குரிய காரணிகளை நீக்கி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்ந்தால்தான் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும். வாழ்வதோ சில காலம். அக்குறுகிய காலத்தில் நாயும் பூனையுமாக சண்டைபிடித்துக்கொண்டிருந்தால் வாழ்க்கை நரகமாகிவிடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழவில்லையானால், மற்றைய பிரச்சைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் எல்லாம் கிளிஞ்சிபோயிரும்.

  • கருத்துக்கள உறவுகள்

குட்டியின் கருத்துவரவேற்க தக்கது. நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைக்கு யார் காரணம்?

ஆண்களின் இன்றைய நிலைக்கு ஆண்களே காரணம்..! அதுமாதிரி பெண்களின் நிலைக்கும் பெண்களே காரணம்..! இதென்ன பிரமாதம்? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தனப் புகையிடயே சிந்தனை செய்து மனம் வெந்து தினம் நொந்து களம் வந்து திரி தந்த என் அன்புத் தோழி சகாராவுக்கு

இன்று இப்படியோர் திரியை தூண்டி விட்டிருக்கிறீர்களென்றால் இதற்கு ஆணாதிக்கமோ பெண்ணாதிக்கமோ காரணமாக இருக்கமுடியாதென்ற எண்ணம் என் இதயத்தில் எழுகிறது.

காரணம்

பூப்போல பெண்கள் இன்று புயலாக மாறி அகிலத்தையே அசர வைத்த அதிசயங்கiளாய் மாறிய பின்பும் இன்றும் பெண்களை ஆண்கள் அடிமைப் படுத்துகிறார்கள் அடக்கி ஆளுகிறார்கள்

என்று சொல்வது முழுவதுமாக ஏற்றுக்கொள்ளத் கூடியதாக இல்லை. விதி விலக்குகள் எதிலும் உண்டு. என்னைச் சுற்றிப் பார்க்கும் பொழுது இப் புலம் பெயர் நாட்டில் பெண்கள் எல்லா விதத்திலும் முன்னேறி தன்னாதிக்கமுள்ள சுயமுயற்சியுள்ள கல்வித்தகமையுள்ள திறமையுள்ள புதுமைப் பெண்களாகவே வாழ்வதாக உணருகின்றேன். இன்னும் பெண்கள் அடிமைகளாக இருக்கிறார்களென்றால்

அது அவர்களது கையாலாகாத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.ஆண்கள் தடைக்கற்கள் என்றசாட்டுப்போக்கை முற்று முழுதாக ஏற்றக்கொள்ள முடியாது. அது தவிர பெண்களுக்கு பெண்களே எதிரிகளாக இருப்பதையும் மறுக்க முடியாது.

இது தவிர எம் தாயகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே அரசியல் கைதிகளாக்கப்பட்டு பெண்கள் ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி சொல்லொணாத் துன்பற்களைச் சந்திக்கும் நிலையையும் கொஞ்சம் சிந்திக்கத்தான் வேண்டும். பெண்களை இப்படியாக துன்புறுத்தும் ஆயுதங்களாக ஆண்களே பாவிக்கப் படுகிறார்கள்.அங்கு துன்புறும் ஒவ்வொரு சகோதரியையும் நினைக்கும் போது ஆண்களை அடக்குமுறையாளர் என்ற வார்த்தையைப் பிரயோகிப்பது தவிர்க்கமுடியாததாய் உள்ளது.

மொத்தத்தில் புலம் பெயர் நாடுகளில் ஆண்கள் பாவம். தாயகத்தில் தாயின் இடையில் சுமக்கப்பட்ட பிள்ளைச்சுமை இப்போ தந்தையின் கைகளில் கார் இருக்கையுடன் ?

நொந்து நூலாகிப்போன ஆண்களை பெண்களே இன்னும் வார்த்தையால் வாங்காதீர்கள்.

நன்றி தோழி கருத்துப்பதிவிற்கு.

இந்தப் பெண்களின் கையாலகாத்தனம் எங்கிருந்து உருவாகிறது தோழி? என்னுடைய தேடல் ஆண்சமூகத்திற்கு எதிரானது அல்ல உண்மையிலேயே சமூகத்தின் மீதாத கோபம் அப்படிப் பார்க்கும் போது அந்த சமூகத்தின் நிகழ்ச்சி நிரல் என்பது ஆண்களுக்குச் சாதகமாகவே அமைக்கப்பட்டிருக்கிறது அதை உங்களால் மறுத்துரைக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இதனை அப்படியே மாற்றி பெண்களிடமும் கேட்டுப் பாருங்கள்.. எத்தனை பெண்கள்.. பணம்.. அழகு.. விசா.. வீடு.. கார்.. கிரடிட் ஸ்கோர்.. வேலை.. நகை.. உடை.. என்று பார்க்காமல்.. மனதை பார்த்து ஆண்களை திருமணம் செய்யத் தயாராக இருக்கின்றனர் என்று...??! இந்த உலகில் பைத்தியம் பிடிச்சவள் கூட அப்படிக் கட்டமாட்டாள். ஆனால் நான் அறிந்திருக்கிறேன்... தனது காதலி கஸ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று தெரிந்து மணந்து கொண்ட பணக்கார வாலிபர்களைக் கண்டு இருக்கிறேன். மணந்த பின்னர் அந்த ஏழைப் பெண்கள் குறித்த ஆண்களை மதிக்காமல் மிதித்ததையும் கண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட நன்றி கெட்ட பெண் ஜென்மங்களும் இருக்கு ரதி..! அதையும் சொல்லனும் நீங்க..! ஆண்களை மட்டும் குற்றம் சுமத்தக் கூடாது. நல்ல ஆண்களும் எத்தனையோ பேர் இருக்காங்க. :lol:

பெண்களீலும் அப்படியானவர்கள் இருக்கிறார்கள் நான் இல்லை என சொல்லவில்லையே ஆனால் எனக்கு தெரிந்து அதிகமாக ஏமாற்வது ஆண்கள் தான் என்பது என் கருத்து.... நான் கேட்ட கேள்விக்கு விசுகு அண்ணாவைத் தவிர‌ ஒருதரும் பதில் கூறவில்லை :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆடவனை புணர்ச்சிக்குத் தூண்டி அதற்கு அழைக்கும் பெண்களையும் நீங்கள் ஆதிக்க வடிவமாகக் காணத் தயாராக இருக்கிறீர்களா..???! அப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் தானே.

அதுமட்டுமன்றி இன்று அமெரிக்காவில் இருந்து வளர்ந்த நாடுகள் எங்கனும் ஆண்கள் மீது பெண்கள் வன்முறைகளைக் கைட்டவிழ்த்துவிட்டுள்ளனர். ஆண்கள் பெண்கள் மீது செய்யும் வன்முறைகளை இனங்காட்டி ஆணாதிக்கம் என்று வரையறுக்கும் உங்கள் போன்றவர்கள்.. பெண்கள் ஆண்கள் மீது செய்யும் இந்த வன்முறைகள் தொடர்பில் மூச்சுக் கூட விட மறுப்பதேன். அது பெண்ணாதிக்கத்தை நிறுவிவிடும் என்ற பயத்திலா..???!

இன்று உலகம் விழிப்படைந்து விட்டது. பெண்கள் இவ்வளவு காலமும் செய்து வந்த ஆண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்தும் ஆண்கள் குரல்கொடுக்கவும் பாதுகாப்புத் தேடவும் தொடங்கி விட்டனர். ஆண்கள் மீது வன்முறைக் கட்டுப்பாடுகளைப் போடும் உலகம் பெண்களை நலிந்தோர்.. மெல்லியோர் என்று கற்பனை செய்து கொண்டிந்த நிலை போய் இன்று கணவனை துன்புறுத்திய குற்றத்துக்காக பெண்களையும் 18 - 20 வருடங்கள் என்று சிறைக்குள் தூக்கிப் போடுகின்றனர்.

இந்த நிலையில் இன்னும் 50 ஆண்டுகளாலத்துக்கு முன்னான ஆணாதிக்கப் பல்லவி பாடித் திரிவதில் பயனில்லை சகாரா அக்கா...! :lol:

மனதளவில் அடிமையாக வாழும் ஆண்மகனுக்கு எந்தப் பெண்ணிடம் அடிமையாக அல்லது உதாசீனப்படுத்தப்பட்டு வாழ்வதாக நினைக்கிறானோ அப்பெண்ணிடம் ஒரு காலமும் புணர்ச்சியின் தூண்டுதலுக்கு இரையாக வாய்ப்பில்லை

இதே அமெரிக்காவிலேயே கணவனின் பாலியல் தொந்தரவுகள் தாங்க முடியாமல் அவனது ஆணுறுப்பை அறுத்த வழக்கு பெண்ணுக்குச் சாதகமாக நியாயத்தை வழங்கியதை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. இதற்கு உடனடியாக என்னிடம் ஆதாரம் கொண்டு வா என்று கேட்க வேண்டாம் என்னால் அவற்றைச் சேகரிக்க முடியாது யாராவது உறுப்பினர்கள் அவற்றை அறிந்திருந்தால் இணைத்துவிடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களின் இந்த நிலைக்கு ஆண்கள் கோழைகளாக இருப்பது தான் காரணம்...ஆண்களுக்கு தைரியமாய் தனித்து முடிவெடிக்கத் தெரியாதது தான் காரணம்...ஒரு சில ஆண்களைத் தவிர மற்ற அனைத்து ஆண்களும் யாருக்காவது அடங்கியே வாழ்கிறார்கள்...வாலிப பருவத்தில் யாரையாவது காதலித்து இருப்பார்கள் ஆனால் பெற்றோருக்குப் பயந்து அந்தப் பெண்ணை விட்டு விடுவார்கள்...பிறகு கல்யாணம் பேசும் போது[வியாபாரம் செய்யும் போது]தனது மகன் இவ்வளவு படித்திருக்கிறான் எனச் சொல்லி அவரது பெற்றோர் சீதனம் கேட்பார்கள் அந்த ஆணுக்கு அப் பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் இருந்தாலும் பெற்றோருக்காய் அடங்கிப் போய் விடுவான்...பிறகு கல்யாணம் முடித்தாலும் மாமியார் மருமகளை அடக்கி ஆண்டால் அதையும் கண்டும் காணத மாதிரி இருந்து விடுவார்கள்...புலம் பெயர் நாட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளோடு இல்லா விட்டாலும் அநேகர் வீட்டில் மாமியார் தான் ஆட்சி செய்கிறார்...இது எல்லாவற்றிக்கும் பெண் பின்னால் நிண்டாலும் ஆண்கள் கோழையாய் இருப்பதே முக்கிய காரணம் என்பது என் கருத்து.

எல்லாம் பாவம் புண்ணியம் பாக்க வெளிக்கிட்டு வந்ததாலை வந்தவினை :lol:

இப்ப ஆண்கள் கோழைகள் :lol:

பாவம் பாத்தவன் பாவியாய் போவான் எண்டது உண்மைதான் :)

  • கருத்துக்கள உறவுகள்

அவளது மனதைப் பார்த்து திருமணம் முடித்தீர்கள்? அல்லது முடிப்பீர்கள்?

ரதி அக்கா, மனதை எப்பிடி பக்கிறதெண்டு சொன்னால், நான் கட்டுற காலத்தில உதவியா இருக்கும். :lol:

சஹாரா அக்கா... இந்த நிலைக்கு காரணம், எனது அறிவு/அனுபவத்துக்கு எட்டிய வரை, பெண்கள் தான், பெண்கள் தான், பெண்கள் தான், காரணம். :lol:

நாம் இன்னாரின் வரிசு என்று நம்புவதும் எனது வாரிசு இவன் அல்லது இவள் என்று ஆண் நம்புவதும் பெண்ணை அடிப்படையாக வைத்துதான். ஒரு பெண்ணின் ஐந்து நிமிடத் தடுமாற்றம் இந்த நம்பிக்கையை தகர்த்துவிடும். யாரு ஒருவனின் வாரிசை யாரோ ஒருவன் உழைத்து வளர்க்க நேரிடும். யாரோ ஒருவனை தந்தையாக ஏற்று வாழ நேரிடும். இவற்றை ஏன் எழுதுகின்றேன் என்றால் பெண்கள் மீதான அழுத்தம் கட்டுப்பாட்டின் அடிப்படை இவற்றுடன் சம்மந்தப்பட்டுள்ளது. அத்தோடு குறிப்பாக எமது சமூதாயத்தில் சாதிகள் கலந்துவிடக் கூடாது என்பதற்காக பெண்கள் மிகக் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர். கற்பு எமக்கு ஒரு பெரும் குறியீடு. உடன்கட்டை ஏறிய வரலாறும் எமது சமுதாயத்துக்கு உண்டு. ஆணின் ஆதிக்க நிலை என்பது சாதியம் சம்மந்ததப்பட்டதாக நாகரீக வளர்ச்சியில் நம்பிக்கை சம்மந்தப்பட்டதாக சமய மத நெறிகள் சம்மந்ததப்பட்டதாக இருக்கின்றது.

இந்தியாவில் பாலியல் வல்லுறவுகள் அதிகம் நடக்கின்றது. அந்தக் காலம் தொடக்கம் புராணங்கள் வயிலாகவும் சிற்பங்கள் வாயிலாகவும் நாட்டியங்கள் போன்றவற்றாலும் பாலியல் உணர்வை தூண்டிக்கொண்டே இருப்பார்கள் அதே நேரம் கற்பு கண்ணகி என்று கட்டுப்பாடுகளை இறுக்கிக் கொண்டே இருப்பார்கள். இன்றைக்கு சினிமா இதே பாணியில் தான் செல்கின்றது. தூண்டுதலும் அதே நேரம் ஒழுக்கத்தை வலியுறுத்துதலும் என்று அர்த்தமற்றது. வெள்ளை நிறம் வெள்ளைத்தேல்தான் அழகு என்பது திட்டமிட்டுத் திணிக்கப்படுகின்றது. இதுதான் அழகு என்று ஊடகங்கள் விளம்பரங்கள் பெரும் நிறுவனங்கள் வர்த்தகங்கள் திணிக்கின்றது. இந்த முரண்பாட்டில் பாலியல் வல்லுறவுகள் நடக்கவே செய்யும். முறைகேடுகள் நடக்கவே செய்யும். இயற்கை இங்கே நிராகரிக்கப்படுகின்றது. இயற்கையான ஒழுங்கு இங்கே நிராகரிக்கப்படுகின்றது. இது பெண்ணியம் ஆணியம் கடந்த ஆதிக்கசக்திகளின் நலன்சார்ந்த சிக்கல்.

வரதட்சணை ஆண் மட்டும் காரணமில்லை. இது ஒரு சுரண்டல் முறை. இதை நியாயப்படுத்த சமயம் கலாச்சராம் போன்றவை உதவுகின்றது. ஆண் எவ்வளவு செலவுசெய்து படிக்கின்றானோ அவ்வளவு தொகை வரப்போகும் மனைவியிடம் அறவிடப்படுவதை காண்கின்றோம். அவ்வாறு வரும் மனைவிக்கு மகன் பிறந்து அவளுக்கு வரும் மருமகளிடம் இரண்டுமடங்காக அறவிடுவதற்கு ஒற்றைக்காலில் நிற்பதை பார்க்கின்றோம். இந்தக் கன்றாவிகளால் பெண்சிசுக்கொலை பெண்பிள்ளைகளை குப்பைத்தொட்டியில் போடுதல் கள்ளிப்பால்கொடுத்துக் கொல்லுதல் என எல்லைகடந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இந்த சுரண்டல் ஆண் பெண் இருவரும் சம்மந்தப்பட்டது.

மனிதன் அடிப்படையில் ஒரு விலங்கு. என்னதான் நாகரீகத்தை வளர்த்துக்கொண்டாலும் இருவர் சேர்ந்து ஒரு காரியத்தை செய்யும்போது பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றது. கல்வியறிவு. பொது அறிவு. சுய சம்பாத்தியம். கேடுகெட்ட சாதிமத கலாச்சாரங்களில் இருந்து வெளியேறுவது. எல்லாவற்றுக்கும் மேலாக மனிதநேய உணர்வை வளர்த்துக்கொள்வது போன்றவற்றால் இந்த நிலையை ஓரளவு மாற்றலாம். மற்றபடி பெண் ஆணைத் திட்டியும் ஆண் பெண்ணைத் திட்டியும் ஒன்றும் நடக்காது.

மனிதன் அடிப்படையில் ஒரு விலங்கு. என்னதான் நாகரீகத்தை வளர்த்துக்கொண்டாலும் இருவர் சேர்ந்து ஒரு காரியத்தை செய்யும்போது பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றது. கல்வியறிவு. பொது அறிவு. சுய சம்பாத்தியம். கேடுகெட்ட சாதிமத கலாச்சாரங்களில் இருந்து வெளியேறுவது. எல்லாவற்றுக்கும் மேலாக மனிதநேய உணர்வை வளர்த்துக்கொள்வது போன்றவற்றால் இந்த நிலையை ஓரளவு மாற்றலாம். மற்றபடி பெண் ஆணைத் திட்டியும் ஆண் பெண்ணைத் திட்டியும் ஒன்றும் நடக்காது.

புதிய மதக்கலாச்சாரங்களை நாங்கள் சுயமாக கிரகித்துக்கொள்கிறோம்,அதிலிருந்து நாம் எப்ப விடுதலை பெறுவது நடக்கக்கூடிய காரியமா?

  • கருத்துக்கள உறவுகள்

தற்காலத்தில் பெண்கள் ஆண்களால் பாதிக்கப்படும் விடயங்களை பட்டியலிட்டு கூறுங்கள்.

சகலதுக்கும் தகுந்த பதிலளிக்கப்படும்.

அண்ணா கேள்வி கேட்டு விட்டோம் என்னும் பதிலைக் காணவில்லை :lol:

இதே அமெரிக்காவிலேயே கணவனின் பாலியல் தொந்தரவுகள் தாங்க முடியாமல் அவனது ஆணுறுப்பை அறுத்த வழக்கு பெண்ணுக்குச் சாதகமாக நியாயத்தை வழங்கியதை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. இதற்கு உடனடியாக என்னிடம் ஆதாரம் கொண்டு வா என்று கேட்க வேண்டாம் என்னால் அவற்றைச் சேகரிக்க முடியாது யாராவது உறுப்பினர்கள் அவற்றை அறிந்திருந்தால் இணைத்துவிடுங்கள்.

சஹாரா,

நீங்கள் ஆவலுடன் கேட்ட அமெரிக்கர் ஜோன் போபிர்ட் ஐ பற்றிய தகவல் இதோ. :lol:

http://en.wikipedia.org/wiki/John_and_Lorena_Bobbitt

  • கருத்துக்கள உறவுகள்

சஹாரா,

நீங்கள் ஆவலுடன் கேட்ட அமெரிக்கர் ஜோன் போபிர்ட் ஐ பற்றிய தகவல் இதோ. :D

http://en.wikipedia.org/wiki/John_and_Lorena_Bobbitt

ஜோன் போபிட்டை ஜேன் போபிட் ஆக்கிட்டாங்களா? அட அநியாயமே..! :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா கேள்வி கேட்டு விட்டோம் என்னும் பதிலைக் காணவில்லை :lol:

கேள்வியை இன்னுமொருக்கால் நல்லவடிவாய் நாலுபேருக்கு விளங்கிறமாதிரிக்கேளுங்கோ :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.