Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மழைத் துளிகள்...: நிழலி

Featured Replies

இந்த பக்கத்தில் இன்னது என்று இல்லாமல், நாளாந்தம் நடக்கும், மனசுக்குள் எழும், கேட்கும் விடயங்களை எழுதலாம் என்று ஆரம்பிக்கின்றேன். தினசரி குறிப்புகள் போல்.....

வழக்கம் போல இடையில் விட்டு விடுவேனோ என்றும் தெரியாது

***********************

என் மகள் தன் தொட்டிலில் இருந்து (crib) பால் குடிப்பதற்காக தாயிடம் வந்தவள், பாலைக் குடித்த பின் சும்மா இருக்காமல் பக்கத்தில் படுத்து கொண்டு குறட்டை விட்டு இருந்த என் மூக்கின் இரு துவாரங்களிலும் தன் பிஞ்சு விரல்களை நுழைத்த போது வந்த தும்மலில் தான் என் காலை விடிந்தது. மிகவும் வித்தியாசமாக விடிந்த போதே இன்றைய நாள் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அவளை முத்தமிட்ட பின் (வாய் கழுவாமல் தான்) எழும்பி குளித்து TTC bus இல் போய் பின் Subway எனும் பாதாள ரயிலில் ஏறுவதற்காக 2 நிமிடம் காத்திருக்கையில் தான் அந்தப் பெண்மணியை முதலில் கண்டேன்

மேலதிகாரிக்குரிய உடை

தோளில் நவீன பை (Hand bag)

அவசர நடை

தலையில் சின்னதாக ஒரு தொப்பி

கண்களில் தீவிரம்

அந்தப் பெண்மணியைக் கண்டதும் என் கண்கள் அவரை தொடர விரும்பியது..... காரணம்..அவர் கிட்டத்தட்ட 2.5 அடிதான் இருப்பார். மிகவும் குள்ளம்..உலகின் முதல் 10 குள்ளமானவர்களில் அவரும் ஒருவராக இருப்பாரோ தெரியாது. ஆனால், அவரின் வேகமும் வேலைக்கு நேரத்துக்கு போக வேண்டும் என்பதற்கான வேகமும் ஆச்சரியப்படுத்தியது.

அவரைப் பார்த்த நினைவு இன்று முழுதும் இருக்கும் போதுதான் இன்று ரதியால் சமூகச் சாளரத்தில் பெண்களை சமூகம் ஏன் இப்படி செய்யுது என்ற மாதிரியான இந்தத் திரி கண்ணில் பட்டது. உண்மையில் இந்தப் பெண்மணி ரதியின் இந்த திரியைக் கண்டால் எப்படி சிரிப்பார் என்று நினைத்துப் பார்த்தேன்.

சாட்டுச் சொல்வது சாதனையாளர்களின் வழக்கம் அல்ல என்று நினைத்துக் கொண்டேன்

அவரை பார்த்தவுடன் இன்னும் ஒருவரையும் என் மனசு நினைத்துக் கொண்டது. நான் டுபாயில் வேலை செய்யும் போது எம்முடன் வேறு team இல் ஒருவர் இருந்தார். அவர் 3 அடிதான் இருப்பார்... படிகளில் ஏறுவதென்றால் நண்பர்கள் தான் காவ வேண்டும்

அவர், Microsoft இன் MS office 2003 பதிப்பிற்காக அமெரிக்காவில் வேலை பார்த்த சீனியர் என்று அறிந்த போது, நான் இன்னும் பாஸ் பண்ணாத Microsoft exams இனை நினைத்து என்னை நானே கேலி செய்ததும் நினைவில் வந்தது

************

Edited by நிழலி

  • தொடங்கியவர்

மோகன், யாழை நிறுத்தப் போகின்றேன் என்று.... (இந்த வரியை எழுதும் போது மனிசி கத்தரிக்காய் பொரிந்து விட்டதா என்று மின் குக்கரில் பார்க்கச் சொல்றா.. கொஞ்சம் பொறுங்கள் பார்த்துட்டு வந்து சொல்றன்)

சொன்னபின், பல நினைவுகள்..முன்னமும் நான் வேலை செய்த, வியாபார நோக்கற்ற சிறு பத்திரிகை நின்ற பின் (அந்த பத்திரிகையில் தமிழினியும், சோதியா அக்காவும் பெண் போராளிகளும் பாலியல் உணர்வுகளும் என்று வெளிப்படையாக எழுதியதை மறக்க முடியாது; அது ராதிகா குமாரசாமி எனும் போலி உயர் வர்க்க பெண் விடுதலை பிரச்சாருக்கு எழுதிய பதில்) 6 வருடம் எதுவும் எழுதாமல் அடை காத்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு 6 வருடம் நிம்மதி கொடுத்து இருந்தேன். பின் வியாபார நோக்கற்றதாக தமிழ் தேசியத்தினை மட்டும் யாழ் பிரதிபலிக்கின்றது என்று கண்ட பின் யாழில் மீண்டும் எழுத தொடங்கி இருந்தேன். யாழும் நின்றால் எழுத்துக்கே நிரந்தர ஓய்வு கொடுக்க திடமாக முடிவு எடுத்து இருந்தேன்... இதற்கு இன்னொரு காரணம்.. எழுதி ஒன்றையும் எம் தமிழ் சூழலில் செய்ய முடியாது என்று (இதை எழுதும் போது கூட) நினைப்பதால் தான்

ஆனால் வழக்கம் போல மோகன் மீண்டும் தொடர்வேன் என்றார். இரவு 3 மணிக்கும் இடையில் வந்து என்ன முடிவு எடுத்திருக்கின்றார் என்று பார்த்து விட்டு படுத்திருந்த படியால் அவரின் முடிவு கொஞ்சம் மகிழ்சியை தந்தது. ஆனால் நம்பிக்கையை தரவில்லை. யாழ் இனிச் சந்திக்க போகும் சில விடயங்களை என்னால் கொஞ்சம் ஊகிக்க முடிகின்றது. சிவர் இல்லாமல் சித்திரம் இல்லை என்பது போல், தமிழ் தேசியமும் அதற்கான தலைமையும் இல்லாமல், அதற்கான சீரிய பாதையின் தெரிவு இல்லாமல் தமிழ் தேசிய ஊடகங்கள் இயங்க முடியாது. இந்த தர்க்கத்தின் வழியே யாழ் சந்திக்க போவது பல சவால்களை என்பது மட்டும் புரிகின்றது. மோகன் தனித்து நின்று இதனை எதிர் கொள்வதை விட, ஒரு கூட்டாக இயங்குவது ஆகக் குறைந்தது அவருக்கான பாதுகாப்பையாவது உறுதி செய்யும் என்பது என் நம்பிக்கை

  • தொடங்கியவர்

இன்று facebook இல் கண்ட; எனக்கு பிடித்த ஒரு ஹைக்கூ

"வண்ணத்துப் பூச்சிகள் விற்பனைக்கு......

அழுகின்றன

பூக்கள்"

ஹைக்கூ என்பதே 2 அல்லது 3 வரியில் பெரும் விடயத்தை சொல்லாமல் சொல்வது. இதில் உலக மயமாதலின் இயற்கையின் அனைத்தும் வெறும் வியாபாரமாகிப் போன துயரமும், தான் வாழ்வதற்காய் இயற்கையை மனிதன் வல்லுறவு கொள்ளும் குணமும் வெளிப்படுகின்றது

நீண்ட நாட்களின் பின் திருப்தி அளித்த ஹைக்கூ இது

Edited by நிழலி

  • தொடங்கியவர்

இது கொஞ்சம் விவகாரமானது

கடந்த கிழமை நடந்ததன் ஒரு சுருக்கம்:

......

வருடம் 1990

இடம்: யாழ்ப்பாணம்

எம் ரீயூசன் வகுப்பில் தான் அவள் படித்தாள்..

என் நண்பன் அவளை மானசீகமாக காதலித்தான்

அவள் அவனை காதலித்தாளா தெரியாது

2010

இடம்: லண்டன்

அவள் அவனை facebook இல் தேடி

அறிந்து கொள்கின்றாள்..

அவனது தொலைபேசி

இலக்கம் அறிந்து அழைக்கின்றா

தான் கலியாணம் கட்டிவிட்டதாகவும்

இரு மகள்கள் இருப்பதாகவும்

சொல்றா...

தானும் அன்று காதலித்தாக சொல்றா

"நீ ஏன் அன்று எனக்கு உன் விருப்பை

சொல்லவில்லை" என்று சண்டை பிடிக்கின்றா..

என்னை வந்து சந்திப்பாயா என்கின்றாள்

அவன் லண்டனில் பெரும் பணக்காரன்

**************

இன்று இருவரும்

எவருக்கும் தெரியாமல்

இருட்டில் பழைய

காதலில் விட்டுப் போன

காமத்தை தேடுகின்றனர்

அவன் வீட்டில்யாழ்ப்பாணத்து

கற்பு fridge இல் கன்னித் திரை

கிழியாது வந்த மனிசி

இரவு நடுச் சாமம் வரைக்கும்

அவனைத் தேடி களைக்கின்றது

லண்டனில் எல்லாக் கூத்தும்

ஆடியபின் கற்புக்கரசியை

தேடியவரிற்கு பிறந்த

அவளின் மகள்கள் இன்னும் நித்திரை

கொள்ளவில்லை (கணவன் 3 ஆவது shift)

*************

இருவரையும் லண்டன் வீதிகளில்

கண்டால்

ஒரே ஒரு சொல் சொல்லுங்கள்

அன்று கோழையாக இருந்து உங்களை கொன்றீர்கள்

இன்று வெற்று வீரம் காட்டி

உங்களை நம்பியவர்களை கொல்கின்றீர்கள்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கிறுக்கலாக இருக்குது ....கிறுக்குங்கோ வாசிக்கிறோம்... :lol: ..

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க அலுப்புத்தட்டாமல் இயல்பாய் செல்கிறது.

நன்றாய் குரட்டை வீடுவீர்கள் என்று தெரியுது.

கத்தரிக்காய் பதம்பார்க்கும் அளவிற்று சமையல்கலை வல்லுனர் என்டு தெரியுது.(இது எல்லாம் பொண்ணுங்க செய்யிற வேலை நாம ஏண் தலைபோடனும் எண்டு மனசு நினைக்குது ஆனா இந்த காலத்துல சரிபட்டு வராதே)

வித்தியாசமாய் எதைக்கண்டாலும் யார் என்ன என்று அறிய முற்படுவீர்களா என்ன?

எழுதியதில் பிடித்த வரிகள்

அன்று கோழையாக இருந்து உங்களை கொன்றீர்கள்

இன்று வெற்று வீரம் காட்டி

உங்களை நம்பியவர்களை கொல்கின்றீர்கள்

மீண்டும் என்ன எழுதப்போறீங்கள் என்ற ஆவலுடன் மழைத்துளிகளில் நனைய காத்திருக்கும்..............

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவை என்னை வைத்து ஆரம்பித்ததுக்கு நன்றி நிழலி...நான் சமூகத்தில் கண்டதை,கேட்டதை வைத்து தான் எழுதி இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் கிறுக்கல்கள் சுவைகுன்றாது இருக்கின்றன..! தொடருங்கள் நிழலி..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாழ்த்துக்கள்!! :lol:

சில விடயங்கள் எல்லை தொட்டு போகக் கூடாது.

Edited by arjun

பொழியட்டும் மழை. கிறுக்குங்கோ. நன்றாயுள்ளது.

இந்த பக்கத்தில் இன்னது என்று இல்லாமல், நாளாந்தம் நடக்கும், மனசுக்குள் எழும், கேட்கும் விடயங்களை எழுதலாம் என்று ஆரம்பிக்கின்றேன். தினசரி குறிப்புகள் போல்.....

வழக்கம் போல இடையில் விட்டு விடுவேனோ என்றும் தெரியாது

***********************

என் மகள் தன் தொட்டிலில் இருந்து (crib) பால் குடிப்பதற்காக தாயிடம் வந்தவள், பாலைக் குடித்த பின் சும்மா இருக்காமல் பக்கத்தில் படுத்து கொண்டு குறட்டை விட்டு இருந்த என் மூக்கின் இரு துவாரங்களிலும் தன் பிஞ்சு விரல்களை நுழைத்த போது வந்த தும்மலில் தான் என் காலை விடிந்தது. மிகவும் வித்தியாசமாக விடிந்த போதே இன்றைய நாள் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அவளை முத்தமிட்ட பின் (வாய் கழுவாமல் தான்) ....

************

எழுத்துநடை சாதாரணமாக இருப்பதால் வாசிக்க சிரிப்பும் வருகிறது...

உங்களுக்கு அன்றைய நாள் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தீர்கள் சரி, மகளின் கைகளையாவது கழுவி விட்டீர்களா? பாவம் குழந்தை... :lol:

கடுகு சிறுசென்றாலும் காரம் பெருசு என்று பெரியவர்கள் சொன்னது நியாபகத்துக்கு வருது....

...

அன்று கோழையாக இருந்து உங்களை கொன்றீர்கள்

இன்று வெற்று வீரம் காட்டி

உங்களை நம்பியவர்களை கொல்கின்றீர்கள்

தொடருங்கள்...

Edited by குட்டி

இந்த பக்கத்தில் இன்னது என்று இல்லாமல், நாளாந்தம் நடக்கும், மனசுக்குள் எழும், கேட்கும் விடயங்களை எழுதலாம் என்று ஆரம்பிக்கின்றேன். தினசரி குறிப்புகள் போல்.....

வழக்கம் போல இடையில் விட்டு விடுவேனோ என்றும் தெரியாது

***********************

என் மகள் தன் தொட்டிலில் இருந்து (crib) பால் குடிப்பதற்காக தாயிடம் வந்தவள், பாலைக் குடித்த பின் சும்மா இருக்காமல் பக்கத்தில் படுத்து கொண்டு குறட்டை விட்டு இருந்த என் மூக்கின் இரு துவாரங்களிலும் தன் பிஞ்சு விரல்களை நுழைத்த போது வந்த தும்மலில் தான் என் காலை விடிந்தது. மிகவும் வித்தியாசமாக விடிந்த போதே இன்றைய நாள் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அவளை முத்தமிட்ட பின் (வாய் கழுவாமல் தான்) எழும்பி குளித்து TTC bus இல் போய் பின் Subway எனும் பாதாள ரயிலில் ஏறுவதற்காக 2 நிமிடம் காத்திருக்கையில் தான் அந்தப் பெண்மணியை முதலில் கண்டேன்

மேலதிகாரிக்குரிய உடை

தோளில் நவீன பை (Hand bag)

அவசர நடை

தலையில் சின்னதாக ஒரு தொப்பி

கண்களில் தீவிரம்

அந்தப் பெண்மணியைக் கண்டதும் என் கண்கள் அவரை தொடர விரும்பியது..... காரணம்..அவர் கிட்டத்தட்ட 2.5 அடிதான் இருப்பார். மிகவும் குள்ளம்..உலகின் முதல் 10 குள்ளமானவர்களில் அவரும் ஒருவராக இருப்பாரோ தெரியாது. ஆனால், அவரின் வேகமும் வேலைக்கு நேரத்துக்கு போக வேண்டும் என்பதற்கான வேகமும் ஆச்சரியப்படுத்தியது.

அவரைப் பார்த்த நினைவு இன்று முழுதும் இருக்கும் போதுதான் இன்று ரதியால் சமூகச் சாளரத்தில் பெண்களை சமூகம் ஏன் இப்படி செய்யுது என்ற மாதிரியான இந்தத் திரி கண்ணில் பட்டது. உண்மையில் இந்தப் பெண்மணி ரதியின் இந்த திரியைக் கண்டால் எப்படி சிரிப்பார் என்று நினைத்துப் பார்த்தேன்.

சாட்டுச் சொல்வது சாதனையாளர்களின் வழக்கம் அல்ல என்று நினைத்துக் கொண்டேன்

அவரை பார்த்தவுடன் இன்னும் ஒருவரையும் என் மனசு நினைத்துக் கொண்டது. நான் டுபாயில் வேலை செய்யும் போது எம்முடன் வேறு team இல் ஒருவர் இருந்தார். அவர் 3 அடிதான் இருப்பார்... படிகளில் ஏறுவதென்றால் நண்பர்கள் தான் காவ வேண்டும்

அவர், Microsoft இன் MS office 2003 பதிப்பிற்காக அமெரிக்காவில் வேலை பார்த்த சீனியர் என்று அறிந்த போது, நான் இன்னும் பாஸ் பண்ணாத Microsoft exams இனை நினைத்து என்னை நானே கேலி செய்ததும் நினைவில் வந்தது

************

நிழலி, பஸ், சப்பே போன்றவற்றில் பயணிக்கும்போது சிந்தனைகள் நிறைய வரும். இவைகளில் பயணிக்கும்போது நாம் நிறைய விடயங்களையும் கற்றுக் கொள்கிறோம். எனது வாழ்க்கையை, வாழ்க்கை முறையை மாற்றியமைத்ததில் இவைகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. மீண்டும் அவைகளில் பயணிக்கவேண்டிய தேவை வரவேண்டுமென வேண்டிக் கொண்டிருக்கிறேன். கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்

ஊக்கம் தந்து பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள்

இன்று இரவு "களவாணி" எனும் படம் பார்த்தேன். "அங்காடித் தெரு" பார்த்த பின் தேடிப் பார்த்த படம் இது. மிகவும் மகிழ்ச்சியான ஒரு படம்... வாய் விட்டுச் சிரித்து, மனம் மகிழ்ந்து பார்த்த இன்னொரு படம் இது. அங்காடித் தெரு போன்று கலைப்படத்துக்கான எந்த அம்சமும் இல்லாத ஆனால் யதார்த்த உலகில் நாளாந்தம் காணும் மனிதர்களை மீண்டும் ஒரு சினிமாவில் சந்திக்கவைத்த திரைப்படம். திரைப்படத்தின் கதாநாயகனாக "பசங்க" படத்தில் நடித்த விமலும் ("இங்கிட்டு "இவன்" அங்கிட்டு யாரு") பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போன்ற "ஓவியா" வும் மிக இயல்பாக நடித்திருந்தனர். ஒவ்வொரு காட்சியையிம் மனம் விட்டு ரதித்துக் கொள்ள முடிந்தது. அதுவும் இறுதியில் விமல் தன் மச்சானின் பக்கம் சாய்ந்து கொள்வது, வாய் விட்டு சிரிக்க வைத்த ஒரு இறுதிக் (கிளைமாக்ஸ்) காட்சி

இங்கு, தமிழ் கூறும் நல்லுலகில் விமர்சனம் அல்லது ஒரு சிறு குறிப்பேனும் எழுதுவது என்றால் ஒரு மாற்று சினிமாவுக்கு எழுதினால் தான் மதிப்பு. ஒரு மாற்று சினிமாவை , அல்லது கலைப் படத்தை விமர்சித்து "நல்ல படம்" என்று சொல்வதற்கும் ஒரு சாதாரண படம், மனதை கவர்ந்து இருந்தால் நல்ல படம் என்று சொல்வதற்கும் இடையில் பல இடைவெளிகள் இருக்கின்றன. எனக்குத் தெரிந்து பல விமர்சகர்கள் மசாலப் படத்தினை மிக விரும்பு குடும்பத்துடன் பார்த்து விட்டு, விமர்சனம் என்று வரும் போது "இத்தகைய திரைப்படங்கள் தான் எம் வாழ்வை சீர்குலைக்கின்றன" என்று முடித்திருந்ததையும், இவை சினிமாவே அல்ல என்று சொல்லியதையும் (முக்கியமாக எழுத்தாளர் ஜெயமோகன் போன்றோர்) கண்டுள்ளேன்.

உண்மையில் , "அங்காடித் தெரு", "சுப்ரமணியபுரம்" போன்ற படங்களையும் போன்று "களவாணி", "ரேனி குண்டா" போன்றவற்றையும் வெவ்வேறு மனநிலைக்கேற்ப ரசிக்க முடியும் என்றே நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்

கடந்த முறை எழுதியதில் திருமணம் முடித்த பின், ஒரு பெண் / ஆண் தன்னை முன்பு விரும்பிய ஒருவருடன் உடல் ரீதியிலான தொடர்புகளைக் கொண்டிருக்கும் விடயம் சம்பந்தமாக எழுதியது பல கேள்விகளை உருவாக்கி உள்ளது என்று புரிகின்றது. சம்பந்தப் பட்டவர்களின் பெயரோ விபரமோ நான் குறிப்பிடாத போதும் அவர்களை பிடிக்காமையால்தான் எழுதியுள்ளேன் என்று அர்ஜுன் எழுதி இருந்தார். அதிலும் அர்ஜுன் எழுதியதில் நான் பதில் எழுத நினைத்த பகுதியை 10 மணித்தியாலதின் பின் edit செய்து இருந்தமையால் என்னால் இப்போது அதற்கு பதில் எழுத முடியவில்லை. அதில் என் திரிக்கு பாராட்டி இருந்தவர்களை ஒரே நொடியில் மட்டமாக எழுதி இருந்தார்.

இன்னுமொருவன் நான் எழுதியதை வைத்து நிறையப் பேர் எழுத விரும்பாத ஒரு விடயத்தினை பற்றி எழுத இந்தத் திரியில் எழுதி உள்ளதால் அந்த திரியில் பதிலளிக்கவே விரும்புகின்றேன்

  • தொடங்கியவர்

எனக்கு மிகப் பிடித்த ஒரு விடயம் மனிதர்களை அவதானிப்பது. தமிழச்சி ஒரு விடயம் சொல்லி இருந்தார். வேலைக்கு ரயிலில் போகும் போது பலவகையான மனிதர்களை சந்திக்க முடியும் என. அவர் சொன்னது மிகச் சரியானது..... 25 நிமிட ரயில் பயணத்தில், அநேகமாக நான் பயணிக்கும் ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்தபடிதான் பயணிப்பேன். எத்தனை விதமான மனிதர்கள்....இரண்டு கண்கள், இரு துவாரம் கொண்ட ஒரு மூக்கு, வாய், இரு காதுகள், நெற்றி என்று மிகச் சிலவற்றை மட்டுமே கொண்ட முகத்தினை உடைய மனிதரை 600 கோடி எண்ணிக்கையில் ஒவ்வொருவரும் ஒரு Unique creature (தனித்த அடையாளம்) என ஒருவரில் இருந்து இன்னொருவராக வேறுபடுத்திக் காட்டுவது எது?

உணர்வுகள்...உணர்வுகள்... உணர்வுகள்

நான் நினைக்கின்றேன்... உலகம் இன்னும் அரை மணித்தியாலத்தில் முடியப் போகின்றது என ஒரு அறிவித்தல் வந்தால், எல்லாரினது முகமும் ஒரே முகத்தின் சாயலைக் கொண்டு இருக்கும் என்று. அதாவது எல்லாருக்கும் சாவுப் பயமும், இனி வாழ்வு இல்லை எனும் பீதியும் கொண்ட ஒரே உணர்வு வரும் போது, முகத்தின் அனைத்து முகமும் ஒரே மாதிரி இருக்கும் என. உலக ஒற்றுமை என்பது அன்றுதான் நிறைவேறும் என

************

நான் recession காரணமாக வேலை இழந்து 3 மாசம் இருக்கும் போது, இடையில் பீசாக் கடையில் டெலிவரி ஆளாக வேலை பார்த்து இருந்தேன். வழக்கமான என் தொழில் white color work எனும் வகைக்குள் அடங்கும் மென்பொருள் உற்பத்தி தொடர்பான professional வேலை. ஆனால் டெலிவரி ஆள் என்பது blue color work எனும் வகைக்குள் அடங்கும் மணித்தியாலத்துக்கு பணம் எனும் வேலை. இரண்டும் இரு திசைகள்

ஆனால், அந்த 2 மாச வேலை எனக்கு கற்றுத் தந்தது மிகப் பல....அந்த தொழிலலில் இருக்கும் மிகச் சிறந்த ஒரு விடயமே... வீடு வீடாகப் போய் வாடிக்கையாளர்களைச் சந்திப்பது...அதாவது வேறுபட்ட மனிதர்களைச் சந்திப்பது

கனடா என்பது பல் இன மக்களின் கூட்டுக் கோர்வை...ஒரே வீதியில் உலகின் அனைத்து கண்டத்தின் மக்களும் வசிக்கும் ஒரு நூதன மியூசியம்

ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு மாதிரி

ஒவ்வொரு வீட்டு உறுப்பினர்களின் ஆடையும் வேறு மாதிரி

சில வீட்டில் ஆண்கள் கதவைத் திறப்பார்கள்

சில வீட்டில் பெண்கள்

நான் வேலை செய்தது இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரையான 9 மணி நேர வேலை (அடுத்த நாள் பகலில் என் job field இல் வேலை தேட வேண்டும்)

சில பெண்கள் முழு ஆடையில் வருவார்கள்

சில பெண்கள் வெறும் இரண்டு ஆடையில் வருவார்கள்

இரவு 2 மணியின் பின், வெள்ளி இரவு, சனி இரவுகளில் டெலிவரிக்கு அழைக்கும் அநேகமான பெண்கள் பாலியல் தொழிலாளர்களாகவே இருப்பர். உடலின் மிகக் குறைந்த ஆடையுடன் வரும் அவர்கள் தான் Tips அதிகம் தருவ்ர்

டெலிவரி செய்யும் ஒருவருக்கு Tips தான் வருமானம்

எனவே அப்படித் தரும் அவர்கள் தான் எம் தெய்வங்கள்

நான் டெலிவரி செய்த எத்தனையோ தமிழ் குடும்பங்களிலும் பார்க்க அவர்கள் தான் அதிகம் தந்தனர்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பக்கத்தில் இன்னது என்று இல்லாமல், நாளாந்தம் நடக்கும், மனசுக்குள் எழும், கேட்கும் விடயங்களை எழுதலாம் என்று ஆரம்பிக்கின்றேன். தினசரி குறிப்புகள் போல்.....

வழக்கம் போல இடையில் விட்டு விடுவேனோ என்றும் தெரியாது

***********************

நிழலி, நீங்கள் இந்தப் பக்கத்தில் இன்னது தான் எழுதப் போகின்றேன் என்று வரையறை வைக்காமல்....... :lol:

எழுதப் போவது நன்று. நாளாந்தம் விடயங்களில் எத்தனையோ நல்லது,கெட்டது, மனதை பாதித்த விடயங்கள் நடந்து கொண்டே இருக்கும்.hiker.gif

ஆதலால் இந்த தலைப்பிற்கு கருத்து பஞ்சம் இருக்காது.......297.gif

அதிலும் நீங்கள் எழுதும் இடங்களில், இணைப்பையும் கொடுத்துள்ள நடைமுறை பிடித்துள்ளது.

அதிலும் பிறரின் டயறியை வாசிப்பது சுவராசியம் தானே..... kaffeetrinker_2.gif:lol:

மொத்தத்தில் உங்கள் ஆக்கம் நன்றாக உள்ளது. :lol:

.

சுவாரஸ்சியமாக இருக்கின்றது நிழலி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பீட்சா டெலிவரிக்கு குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் என்று ஒன்று இல்லையா? இது எப்படி சட்டப்படி சரியாகும்? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

உங்கள் கருத்துக்கள் கிறுக்கல்கள் அல்ல.

அத்தனையும் அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.

சில விடயங்களை தொட்டுச் செல்வதுடன் நிறுத்தாமல் இங்கே இட்டுச் செல்வதால் விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவை.

வாத்தியார்

*********

  • தொடங்கியவர்

தொடர்ந்து பாராட்டி ஊக்குவிக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள்

பீட்சா டெலிவரிக்கு குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் என்று ஒன்று இல்லையா? இது எப்படி சட்டப்படி சரியாகும்? :lol:

குறைந்த பட்ச சம்பளமாக மணித்தியாலத்துக்கு 7.50 டொலர் கொடுப்பார்கள். இந்த வேலைக்கு போவதில் இருக்கும் ஒரு வசதி, இந்த வருமானத்துக்கு, வருமான வரி கட்டவேண்டிய தேவை இல்ல. அன்று எத்தனை மணி நேரம் வேலை செய்கின்றோமோ அதை கணக்கிட்டு அன்றே பணம் தருவர். Lay off என்பதால் வேலை காப்புறுதித் திட்டத்தின் மூலம் (employment insurance) கிட்டத்தட்ட சம்பளத்தில் 60% மாதம் ஒன்றுக்கு அரசு தந்து கொண்ட்டு இருந்தது. நாம் வேலை செய்யும் போது எம்மிடம் இருந்து Employment insurance இற்காக ஒரு சிறு தொகையை அரசு எடுத்துக் கொள்வதால், வேலை இழந்த பின் 52 வாரத்துக்கு தொடர்ந்து தருவார்கள். மிச்சத்தினை நிரப்ப இந்த வேலைக்கு வருபவர்கள் அதிகம். 10 மணித்தியாலம் வார இறுதி நாட்களில் வேலை செய்தால், நாளொன்றுக்கு 140 டொலராயினும் சம்பாதிக்க முடியும்.

இதுவும் ஒரு வகையில் களவு தான். அரசுக்கு தெரியாமல் உழைக்கும் முறை இது. அரசுக்கு தெரிந்தால் Employment Insurance இனை நிறுத்தி விடுவார்கள். ஆனால், தெரிவதற்கு எந்த வழியும் இல்லை (எழுதப் படாத கணக்குகள்)

பீசா டெலிவரிக்கு போகின்றவர்கள் வெறும் டிரைவர் வேலையும் மட்டும் செய்வதுடன் ஐஸ் அடிக்க முடியாது..... மாவை வெட்டி ஒவ்வொரு அளவிலும் தயார் செய்வது (Large pizza, medium pizza, extra large pizza etc), பீசா பாத்திரங்கள் கழுவுவது, பூட்டும் நேரம் நிலத்தினை சுத்தம் செய்வது என்று பல வேலைகளும் அடங்கும்.

நான் வேலை பார்த்தது Down Town பிரதேசத்தில்.... ஒரு சில வீதிகளில் வசிப்பவர்களுக்கு டெலிவரி செய்வது என்றாலே பயம் பற்றிக் கொள்ளும். அநேகமாக அந்த இடங்களில் Afro-Americans எனும் வகைக்குள் உள்ள கறுப்பர்களே அடங்குவர். நான் வேலை செய்த கடையில் பணி புரிந்த இரண்டு டெலிவரி ஆட்களைக் கூட அடித்து அவ்வளவு நேரமும் அவர்கள் சேகரித்து வைத்திருந்த Tips இனை பறித்து உள்ளார்கள். அத்துடன் விலை 18 டொலர் 12 cents என்றால், 19 டொலர் தந்து மிச்சம் 78 சதத்தினையும் வைத்து விட்டுத் தான் இடத்தினை விட்டு அசைய வேண்டும் என்ரு வெருட்டுவார்கள். இந்த விடயத்தில் வெள்ளையர்கள் மிகத் தாரளமாக நடந்து கொள்வர். 3 டொலரில் இருந்து 10 டொலர் வரை Tips தருவர். தமிழர்கள் என்றால் விலையினை விட சரியாக ஒரு டொலர் தந்து விட்டு, தாம் மிகப் பெரிய விடயம் செய்ததைப் போல பெருமிதத்தில் முகத்தை பார்த்துக் கொண்டு நிற்பர்

பொதுவாகப் பார்க்கும் போது, பெண்கள் மிகக் குறைந்த tips உம் (பாலியல் தொலிளார்கள் தவிர) ஆணகள் தாரளமாகவும் தருவார்கள்

ஒரு முறை டெலிவரிக்காக 3 ஓடர்களை எடுத்து கொண்டு போய், இடையில் காரின் திறப்பு டிக்கி சாவித் துவாரத்துள் மாட்டுப் பட்டு முறிந்து போய், டெலிவர் செய்ய முடியாமல் நடுத்த் தெருவில் சாமம் 2 மணிக்கும் நின்று இருக்கின்றேன்

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது , என் மென்பொருள் உற்பத்தி துறையில் எனக்கு கிடைத்த சுவாரசியாமான அனுபவங்களினை விட 2 மாதம் பீசா டெலிவரி செய்யும் போது கிடைத்த வாழ்வனுபங்கள் சுவாரசியமானவை

  • தொடங்கியவர்

பலருக்கு FB என்றழைக்கப்படும் Face book இனைப் பற்றி பல விதமான அனுபவங்கள். மிகவும் பயனுள்ளது என்பதில் இருந்து "சொந்த செலவில் சூனியம்" வைத்துக் கொள்வதைப் போன்ற செயல் FB என்பதில் இருந்து பலவிதமான விமர்சனங்கள்

உண்மையில் என்னைப் பொறுத்தவரைக்கும் FB மிகவும் பயனுள்ள ஒரு சமூக தொடர்பாடல் தளம் (Social networking site).. படிப்பதற்கு மிகவும் பயனுள்ள விடயங்களில் இருந்து எம் தொடர்புகளைத் இந்த வேக உலகில் ஓரள்விற்கேனும் தக்க வைக்க உதவும் ஒரு தளம். WPF, WCF, National Geography போன்ற விடயங்ளின் மிக புதிய விடயங்களை அறிய முடிவதில் இருந்து, பொன்னம்மாவின் பேத்தி ஆரோட ஓடிப் போனா என்பது வரைக்கும் அதன் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது

ஆனால் அதில் சிலருக்கு எந்தப் படங்களை இணைப்பதும் விடுவது என்பதில் சரியான விளக்கம் இல்லை. சிலர் தம் 10 வயது மகளினை நீச்சல் உடையில் போட்டு இருப்பார்கள்... சிலர் தம் பிறந்த திகதியில் இருந்து வீட்டு விலாசம் வரைக்கும் முழு விபராமாக தந்து identity theft எனும் அந்தரங்க அடையாள திருட்டிற்கு வழி கோலுவர். FB இன் Privacy settings இல் சில மணித்தியாலம் செலவிட்டால் இத்தகைய தவறுகளை விட மாட்டார்கள்.

  • தொடங்கியவர்

இன்று என் மனைவி ஒரு செத்த வீட்டுக்கு போயிட்டு வந்தா

செத்தவா ஒரு வயோதிப பெண்... 80 வயது

அவவின் கணவன் இந்திய ஏவல் பிசாசுகள் அமைதி காக்கும் கொடூர படைகளாக எம் மண்ணில் இறங்கி அட்டாகாசம் புரிந்த 87 அக்டோபரில், என் மனைவியையும் அவவின் சகோதரியையும் பாதுகாப்பாக சாவகச் சேரி வரைக்கும் கொண்டு சென்று விட்டவர்.

மிகவும் ஊர்ப் பாசமும், மண் பற்றும் நிரம்பிய ஒருவராக இருந்தாராம்

அதனால் தான், இந்திய ஏவல் பிசாசுகள் ஊர் பிடிக்க பலாலி வீதி வழியாக உரும்பிராய் பக்கம் வரும் போது, மற்றவர்கள் எல்லாரையும் பாதுகாப்பாக ஒவ்வொரு இடத்திலும் விட்டு விட்டு தன் வீட்டிலேயே தங்கி இருந்தார்

இந்திய ஏவல் பிசாசுகள் அவரின் வீட்டை உள் நுழைகின்றன

அவரை காணுகின்றன

வெட்டி கண்ட துண்ட மாக்கின்றன

மேசையின் கீழ் பரப்பி வைத்து விட்டு போகின்றன

இந்த அம்மா, கணவனை இழந்து 23 வருடங்களின் பின் நேற்று இறந்து விட்டார்

அவரின் செத்த வீட்டிலும், அவரைப் பற்றிய கதைகளே நிறைந்திருந்தனவாம்...

மனிசி பெரு மூச்சுடன் சொல்லி முடிக்கின்றார்..

அதனை கேட்டவாறே இணையத் தளங்களில் செய்திகளை மேய்கின்றேன்,,,,,

அவற்றின் செய்திகளில் தமிழ் தேசிய கூத்தமைப்பு இந்தியா சென்று இலங்கை அரசுடன் சேர்ந்து போர்க் குற்றம் புரிந்த ஒரு கொலையாளியுடன் கைகுழுக்கியதாம் என்று வந்திருக்கின்றது...

நானும் இப்ப பெருமூச்சு விடுகின்றேன்...

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி நிழலி

முன்பு இப்படியான வயதானவர்களின் செத்தவீடுகளுக்கு போகும்போது ....

அவர்கள் ஒப்பாரி வைத்தோ சத்தமாகவோ அழும்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும்

அதாவது வயதானவர்தானே

ஏன் இப்படி அழுகின்றார்கள் என்று.

அதைவிட இறந்தவரை வடிவாக கவனித்திராதவர்களும் அழும்போது சங்கடமாக இருக்கும்

ஆனால் எனது தகப்பனார் 84 வயதில் இறந்தபோது...

நாங்கள்அவரை எந்த குறையில்லாது கவனித்திருந்தும் நான் அழுதேன்

காரணம் ஒன்றுதான் இனி அவரை நாம் காணமுடியாது.

தற்போது எந்த செத்தவீட்டுக்கு போனாலும்அவர்களுடன் சேர்ந்து என் கண்களும் பனிக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.