Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச் தமிழ் எழித்தாளர் மா நாட்டை புறக்கணிக்க - திரைப்பட இயக்குநர்கள் கோரிக்கை

Featured Replies

கொழும்பில் 2011 ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என, தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சோலை, சுதாங்கன், புகழேந்தி தங்கராஜ், திரைப்பட இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.சி. சக்தி, வெ. சேகர், இலங்கை தமிழ் எழுத்தாளர் எஸ்பொ, கவிஞர் காசி ஆனந்தன், எழுத்தாளர்கள் தாமரை, பா. செயப்பிரகாசம் ஆகியோர் சென்னையில் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கை தலைநகர் கொழும்பில் 2011 ஜனவரி 5, 6, 7, 8 தேதிகளில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்த இருப்பதாக சிவத்தம்பி உள்ளிட்ட சிலர் அறிவித்துள்ளனர். ஈழத் தமிழர்கள் மிகவும் துயரத்தில் இருக்கும் நிலையில் நடைபெறும் இந்த மாநாடு தமிழர்களுக்கு எவ்விதத்திலும் பயனைத் தராது.தமிழகத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளில் ஈழம் பற்றிய செய்தியை வெட்டிய பிறகுதான் இலங்கையில் விற்க முடிகிறது. இதுபோன்ற மோசமான நிலையில் நடைபெறும் மாநாட்டில் ஈழத்தில் நடந்த பேரழிவு குறித்து பேசுவது சாத்தியமல்ல.

தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசு தனது கோர முகத்தை மறைப்பதற்காக, இதுபோன்ற மாநாட்டை தமிழ் எழுத்தாளர்களின் போர்வையில் நடத்த முயற்சிக்கிறது. நாடு, மொழி, இன வரம்பு கடந்து மானுடத்தை நேசிக்கும் படைப்பாளிகள் கொழும்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றனர்.

ஈழத் தமிழர்கள் மிகவும் துயரத்தில் இருக்கும் நிலையில் நடைபெறும் இந்த மாநாடு தமிழர்களுக்கு எவ்விதத்திலும் பயனைத் தராது.

ஈழத்தமிழர்கள் மிகவும் துயரத்தில் இருக்கும் நிலையில், துயரத்தில் இருந்த நிலையில் திரைப்படங்கள் எடுப்பது பற்றியும், எடுத்தது பற்றியும் அவற்றை திரையிடுவது பற்றியும், திரையிட்டது பற்றியும் இவர்கள் என்ன நினைக்கின்றார்கள்..? :lol::unsure::D

எஸ்.பொ மிக நன்றாகவே சாணக்கியமான முறையில் தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளார்... வாழ்த்துகள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

நாவை அடக்கி வாசத்தல் நன்று தோழர் குரும்பு.. தமிழகத்திற்காக உயிர் நீத்த இலங்கையர் எத்தனை பேர்...??? சுனாமி வந்தபோது யார் எவ்வளவு அனுப்பினார்கள் ??? ஒருதாய் வயிற்று பிள்ளைகள் என்றால் சிறிதளவாவது தமிழகம் அனுப்பி இருக்கலாமே?... இன்னும் பல கேள்விகள் உள்ளன... உம்ம சிங்களத்திற்கு விலை போகும் கோட்டனிக்குள் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களை சிலரையும்... தமிழகத்தில் எச்சில் இலை பொறுக்கும் சிலரும் வருவார்களே ஒழிய... உண்மையாக ஒரு தமிழ் தந்தைக்கு பிறந்தவர்கள் ஒருவரும் வரமாட்டார்கள்...

அனைவரும் தெளிவாகவே சொல்லிவிட்டார்கள் கொழும்பை தவிர வேறு எங்காவது இந்த மாநாட்டை வைத்து கொள்ளலாம் என... அதெலென்ன கொழும்பேதான் வேணுமா? வேறு புலம் பெயர்ந்த ஈழத்தோழர்கள் வாழும் நாடு இல்லையா? எஸ்பொ வின் ராஜதந்திரத்தினை சிங்களவரை நோக்கி யே பழக சொல்லும்....காக்க மூக்கா என்று.... ஏனைய தமிழர்களை நோக்கி திருப்பவேண்டாம்

டிஸ்கி : கிளினொச்சி விழும் போது குரும்பு கோஸ்டிகள் சாப்பிடாமல் தான் இருந்தார்களா? அல்லது அன்று இரவு தனது மனைவியை புணராமல் தான் இருந்தார்களா???(( நிச்சயம் கேள்வி கேட்பவர்கள் மேற்கூறிய அனைத்தினையும் செய்துதான் இருப்பார்கள்... ஏனெனில் ஓடுவது கிராஸாகத்தானே இருக்கும்???)

கொழும்பு எழுத்தாளர்கள் மாநாட்டிற்கு தமிழக எழுத்தாளர்கள் எதிர்ப்பு

கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு உலகமெங்கும் ஆதரவு இருப்பதாக அந்த மாநாட்டுக் குழுவினர் தெரிவித்து வரும் வேளையில், மாநாடு குறித்து தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களிடம் தொலைபேசி வாயிலாகக் கருத்து கேட்டோம். அதன் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது.

எழுத்தாளர் மதிவண்ணன் (தலைவர், அருந்ததியர் உள் ஒதுக்கீடுப் போராட்டக் குழு): கடந்த ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில், சர்வதேச சமூகம் எப்படி வெறும் பார்வையாளராக‌ இருந்ததோ அதே போல் தான் தமிழ்நாட்டில் இருந்த தமிழர்களும் குறிப்பிட்ட 5 சதவீத தமிழர்களைத் தவிர மற்றவர்கள் வெறும் பார்வையாளர்களாய்த் தான் இருந்தார்கள். இந்தியா இதில் ஒரு கூட்டாளியாகக் கூட இருந்தது. ஆனால் இந்தியாதான் இலங்கையின் ஒரே கூட்டாளியா என்று கேட்டால் ஒரே கூட்டாளி இல்லை என்பது வேறு விஷ‌யம். போர் முடிந்த பின் சர்வதேச சமூகம் விழித்து எழுந்ததாய் சும்மாவது காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. உயிருக்கு போராடியபோது வராம‌ல் செத்த பின் வந்து விசாரணை செய்கிறேன் என்று சொல்லுவதே மிகத் தாமதம் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் எதுவும் செய்யாததைக் காட்டிலும் கண்காணிப்புக்கு உட்படுத்துவது என்பது ஈழ தமிழருக்கு உதவாவிட்டாலும், உலக மக்களுக்கு இதுபோல் நடவாமல் இருக்க உதுவும். அந்த அளவில் இலங்கை அரசை விசாரணை செய்வது நியாயமானது. அது தொடர்பான நடவடிக்கைகள் தான் இப்போது எடுக்கப்பட்டு வருகின்றன.

இப்போது இந்தச் சூழலில் இலங்கை அரசாங்கம் தன்னை நியாயவான் என்பது போலவும், போருக்குப் பின் இலங்கை அமைதியாக இருக்கிறது என்று காட்டிக் கொள்ளும் வகையிலும் நடந்து கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில் அங்கு நடந்த சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பெரும்பாலான திரைத்துறை நடிகர்கள் கூட விரும்பியோ, விரும்பாமலோ அங்கு போகாமல் தவிர்த்து விட்டார்கள். இதில் அவர்கள் போகவில்லை என்பதே முக்கியமான விசயம். இப்படி திரைத்துறை நடிகர்களிடம் இருந்த தன்மையும், ஈடுபாடு உணர்வும் நம் எழுத்தாளர்களிடம் இல்லை என்றால் அது மிகவும் வருத்தப்படக்கூடிய விஷ‌யம். எழுத்தாளர் மாநாடு நடத்த வேண்டுமென்றால் இலங்கையை விடவும் தமிழ்நாடு மிக வசதியான இடமாக இருக்கக்கூடும். ஏன் மலேசியாவில் கூட நடத்தலாம். அதில் ஒரு பிரச்சனையும் கிடையாது. இலங்கையை போர்க் குற்றத்திற்கு உட்படுத்துதல், தண்டனை பெற்றுத் தருதல் போன்றவைகள் குறித்து இந்த எழுத்தாளர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்று தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும். அப்போது அவர்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்று நாம் ஆராய்வதற்கோ, ஏற்றுக் கொள்வதற்கோ வசதியாக இருக்கும்.

எழுத்தாளர் அழகிய பெரியவன்: கொழும்புவில் நடக்கப் போவதாக அறிவித்து இருக்கிற தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு, மிக பகிரங்கமாக அப்பட்டமான மனித உரிமை மீறலை நடத்திய ராஜபக்சே அரசுக்குத் துணை போகும் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. எங்கெல்லாம் அடக்குமுறைகள் இருக்கிறதோ, மனித உரிமைகள் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் அதை எதிர்க்க வேண்டிய கடமை கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இருக்கிறது. உலக அளவில் மனித உரிமை மீறல்களை எதிர்க்கிற விஷ‌யத்தில் எழுத்தாளர்கள் முன் வரிசையில் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்தது தான். அந்த அடிப்படையில் இந்த மாநாட்டை தமிழ் எழுத்தாளர்கள் புறக்கணிப்பது சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஈழத்தில் எந்த மனித உரிமை மீறலும் நடபெறவில்லை என்று சொன்னால் ஏன் ஐ.நா அமைத்த தூதர் குழுவையும், சர்வதேசிய பத்திரிக்கையாளர்களையும் ராஜபக்சே அரசு அனுமதிக்க மறுக்கிறது? முகாம்களைப் பார்வையிடுவதற்கு ஏன் அனுமதிக்க மறுக்கப்படுகிறது? தமிழில் ஒரு சொல்வடை உண்டு "மடியில் கணம் இல்லாதவன் பயப்படத்தேவையில்லை" ஆனால் இங்கு அவர்கள் மடியில் கணம் இருக்கிறது. அந்த அளவுக்கு அவர்கள் அப்பட்டமான மனித உரிமை மீறலை செய்ததாக தணிக்கை, தடையை மீறிய செய்திகள் உணர்த்துகின்றன. இப்படியாக ஒரு இன ஒடுக்குமுறைக்கு, இன அழிப்பிற்கு துணை போகக்கூடிய அந்த அரசின் தலைமையகத்தில் நடைபெற இருக்கிற மாநாட்டில் தமிழ் எழுத்தாளர்கள் பங்குபெறுவது என்பது ஒரு வகையில் இதையெல்லாம் அங்கீகரிக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

இந்த இடத்தில் நான் இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன். போராட்டக் குழுக்களை, புலிகளை ஒழித்துவிட்டதாக சொல்லுகிற ராஜபக்சே அரசு அதைக் கொண்டாடுகிற வகையில் கிளிநொச்சி வவுனியா போன்ற இடங்களில் வந்து தங்கள் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இது போல் தமிழ் மக்கள் வாழும் அனைத்து இடங்களிலும் கூட்டங்கள் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ் பகுதிகளில் இருக்கும் தமிழ் அடையாளங்கள் சிதைக்கப்படுகிறது என்றெல்லாம் நமக்கு செய்திகள் வருகின்றன. இதை எல்லாம் கேட்காமல் நியாயமாக அங்கு என்ன நடந்தது என்று வலியுறுத்தாமல் அவர்களுடைய குரலுக்கு ஒத்துப் போவது என்பது, அவர்களுடைய செயல்களை அங்கீகரிப்பதாகத்தான் இருக்கும். இலங்கை அரசு மீது வெளிப்படையான ஒரு விசாரணை நடந்து, அதன் போர்க்குற்றங்களுக்கு தண்டனை விதிக்கப்பட்ட பின்பு, இது மாதிரியான கூட்டங்கள் நடத்தும்போது பங்குபெறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் அதை விடுத்து எதையும் நிறைவேற்றாமல் நடத்தப்படும் இந்தக் கூட்டம் ஒரு கண்துடைப்பாகத்தான் அமையக் கூடும் என நான் நினைக்கிறேன். ஆகையால் ஒரு தமிழ் எழுத்தாளனாய் இதைப் புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகொள் விடுக்கிறேன்.

பேரா. ஹாஜா கனி, (பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்): எழுத்து என்பது ஆக்க சக்தி. அதனால்தான் அதை creativity என்றும், எழுத்தாளர்களை creative people என்றும் அழைக்கிறார்கள். அத்தகைய ஆக்க சக்திகளாக உலகில் புதியன படைக்க விரும்பும் எழுத்தாளர்கள் ஒருநாளும் அழிவு சக்திக்கு துணை போக முடியாது. இலங்கைப் பேரினவாத அரசு என்பது மிகப்பெரும் அழிவு சக்தி. அந்த அழிவு சக்தியின் நிழலில் ஒரு எழுத்தாளர் மாநாடு நடத்துவது என்பதே அதற்குத் துணைபோவது போலத்தான். எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு, சொந்த சகோதரர்களுக்கு எதிராக செயல்பட்ட விபீடணனை இப்போது இலக்கிய உலகிலும் பார்க்க முடிகிறது. இவர்கள் இலக்கிய ‘கருணா’க்கள். வாளின் முனையைவிட பேனாவின் முனை வலியது என்பது நாம் பள்ளியில் படித்தது. ஆனால் இலங்கை அரசு தன் மீது படிந்துவிட்ட இரத்தக் கறையை பேனாவின் மைக்கறையால் மறைத்துவிடலாம் என்று இலங்கை அரசு எதிர்பார்க்கிறது. அதனுடைய எதிர்பார்ப்பும் இழிவானது; அதற்கு இசைந்து போவது அதைவிடவும் இழிவானது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்: உலகம் முழுவதும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் ஒரு இடத்தில் சந்திப்பது என்பது நல்ல செய்திதான். ஆனால் அந்த சந்திப்பு என்பது ஏன் கொழும்பில் நடைபெற வேண்டும்? அங்கு நடத்தப்படுவதன் நோக்கமென்ன? அங்கு என்ன பேசப் போகிறார்கள்? இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு குறித்தோ, போர்க்குற்றங்கள் குறித்தோ பேச முடியுமா? அங்கு தடை செய்யப்பட்ட பத்திரிக்கைகள், கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்கள் குறித்து ஒரு வார்த்தையேனும் பேச முடியுமா? உலகமெங்கும் உள்ள எழுத்தாளர்கள் அதிக அக்கறை கொள்ளும் மனித உரிமைகள் பற்றி இலங்கையில் பேச முடியுமா? ஈழத்து இலக்கியத்தின் பெரும்பகுதி என்பது போர் குறித்தும், அதனால் ஏற்பட்ட துயரம் தோய்ந்த அகதி வாழ்க்கை குறித்தும் எழுதப்பட்டதுதானே! அந்த ஈழத்துப் போர் இலக்கியம் பற்றி நேர்மையாகப் பேச முடிகிற சூழல் அங்கு நிலவுகிறதா? மாநாட்டில் கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள் தாங்கள் விரும்புகிற இடங்களுக்குச் சுதந்திரமாக செல்லும் உரிமை அங்கு இருக்கிறதா? இதற்கெல்லாம் இல்லை என்பதுதான் பதில் என்றால், அந்த மாநாடு ஏன் இலங்கையில் நடத்தப்பட வேண்டும்? நிச்சயமாக என்னால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது.

எழுத்தாளர் மாலதி மைத்ரி (ஆசிரியர், அணங்கு இதழ்): எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலேயும் சிலர் ஆதாயம் தேட முயற்சிப்பார்கள். எடுத்துக்காட்டாக பிரஞ்சுப் போராட்டத்தில், போராட்டத்திற்குப் பின் போராட்டத்தை ஆதரித்தவர்கள் எதிர்த்தவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஒரு அச்சு தொழிற்சாலை நிறுவனர் பிரஞ்சு போராட்டத்திற்கும் உதவி செய்திருக்கிறார்; ஜெர்மனிக்கும் உதவி செய்திருக்கிறார். ஜெர்மனி பிரஞ்சு மண்ணில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட பின் அந்த அச்சுத் தொழிற்சாலை நிறுவனரின் மகனுக்கு தன் தந்தை செய்த இந்த இழிசெயல் தெரிய வருகிறது. இதனால் அவன் அடையும் குற்றவுணர்ச்சியைத்தான் ஒரு திரைப்படமாக்கியிருந்தார்கள். திரைப்படத்தில் ஒவ்வொரு முறையும் சமூகம் அந்தப் பையனை 'நீ ஜெர்மனி படைகளுக்கு உதவிச் செய்தவனின் பிள்ளை' என்று சுட்டிக்காட்டும்போதெல்லாம் அவன் குற்றவுணர்ச்சி அடைவான். ஆனால் இத்தகைய குற்றவுணர்ச்சி நம் தமிழ் சமூகத்திற்கு இல்லாமல் போய்விட்டது.

இதேபோல் "My Father" என்ற ஒரு ஆஸ்திரேலியப் படம். அதில் நாசிப் படையில் உயர் அதிகாரியாய் இருந்த ஒருத்தர் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி வருவார். அந்த உயர் அதிகாரி தன் உண்மை முகத்தை மறைத்து வாழ்ந்து கொண்டு இருக்கும்போது, அவரது உண்மை முகம் அறிந்த மகள் அவரை வெறுக்க ஆரம்பிப்பாள். இப்படி இரண்டாம் தலைமுறையிடம் இருக்கவேண்டிய Ethics, தன் மொழிக்கோ தன் இனத்திற்கோ தன் நாட்டிற்கோ எதிராக நிற்பவர்கள் இரத்த உறவுகள் என்றால் அதற்காக அவமானப்படுகிற ஒரு மனோநிலை ஐரோப்பிய சமூகத்திடம் இருக்கிறது. ஆனால் நம் தமிழ் சமூகத்துக்கு எப்போதுமே அரசு சார்பான மனோநிலைதான் இருக்கிறது.

விடுதலைக்காக எதையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் இங்கு அறிவாளிகளும் சரி, படைப்பாளிகளும் சரி, சாமானியர்களும் சரி எதையும் இழக்கத் தயாராக இல்லை. ஒரு படைப்பாளி என்பவன் எப்போதும் ஒரு தார்மீகப் பொறுப்போடும், அறத்தோடும் எந்த ஒரு மனித உரிமை மீறலுக்கு எதிராகவும் அவனுடைய குரலைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற வழக்கு ஒளிந்துபோய் தன்னுடைய சார்பு என்பது அரசு சார்ந்தாக மாறின மனோநிலை இன்றைக்கு தமிழர்களிடம் இருக்கிறது. இந்த மனோநிலை அடிமைத்தனத்தை விரும்புகிறதாக இருக்கிறது. எதையும் எதிர்க்கத் தேவைப்படும் வீரம் நம்மிடம் இல்லை என்று நினைக்கிறேன்.

தமிழ் எழுத்தாளர்கள் தங்களுடைய வசதி வாய்ப்புகள் எதையும் இழக்கத் தயாராகயில்லை. ஏனென்றால் நம்முடைய சமுகம் என்பது அறிவாளிகளையோ, படைப்பாளிகளையோ கலைஞர்களையோ மதிக்கக்கூடிய ஒரு சமுகம் கிடையாது. அரசு எதை நமக்குத் தருகிறதோ அதை அங்கீகாரமாக நாம் ஏற்றுக்கொள்கிறோம், கொண்டாடுகிறோம். ஒன்றும் இல்லாமல் இந்த சமுகத்தில் இருப்பதைக் காட்டிலும் அங்கீகாரத்துடன் அரசோடு போய் ஒட்டிக் கொள்ளலாம் என்பது பெரும்பாலான எழுத்தாளர்களிடம் இருக்கிறது. அந்த மனோநிலைதான் எவ்வளவு பெரிய மனித உரிமை மீறலோ, ஒடுக்குமுறையோ இனப்படுகொலையோ நடந்தாலும் அறிவுஜீவிகள் தங்களை அரசு சார்பாக வைத்துக் கொள்வதற்குக் காரணமாகும். அதுனுடைய தொடர்ச்சியாகத்தான் நான் இந்த சர்வதேச எழுத்தாளர்கள் மாநாட்டைப் பார்க்கின்றேன்.

சி.மகேந்திரன் (ஆசிரியர், தாமரை இதழ்): முருக‌பூப‌தி முன்பு ஒரு முறை இதுகுறித்து என்னிட‌ம் பேசியிருந்தார். அப்போது அதில் எனக்குப் பெரிய மாறுபாடு ஏதுமில்லை. ஆனால் இல‌ங்கையில் இப்போது மிகப்பெரிய ஒரு இனவழிப்பு நடந்துள்ள நிலையில் அங்கு நடைபெறும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள விருப்பமில்லை. நிச்சயமாக இந்த மாநாட்டில் நான் கலந்துகொள்ள மாட்டேன்.

சமூகவியல் ஆய்வாளர் தொ.பரமசிவன்: ஈழத்தமிழர்கள் உலகத்தில் உள்ள எல்லோராலும் கைவிடப்பட்ட மக்கள் திரளாக இருக்கிறார்கள். இப்போது அந்த ஊர் எழுத்தாளர்களும் கைவிடுகிறார்கள் என்பது மிகவும் கேவலமான ஒரு நிலை. அதற்கு நல்ல உதாரணம் சிவத்தம்பி ஐயா. பா.செயப்பிரகாசம் எழுதினாரே சிவதம்பி சின்னதம்பி ஆகிவிட்டார் என்று; அது இப்போது பலருக்கும் பொருந்துகிறது. சிவத்தம்பியின் வாரிசுகளாக சிலர் கிளம்பியிருக்கிறார்கள். கொழும்பு எழுத்தாளர்கள் மாநாட்டில் ஆதவன் தீட்சண்யா, அ.மார்க்ஸ் போன்றவர்கள் கலந்து கொண்டாலும் கலந்து கொள்வார்கள். பாரதி, பாரதிதாசன் பெயரை உச்சரிக்கக்கூட தகுதியில்லாதவர்கள் இவர்கள். ஈழத் தமிழ் எழுத்தாளர்களே இப்படியான ஒரு நிகழ்வை முன்னெடுக்கிறார்கள் என்பது இன்னும் வேதனையான விஷயம். இவர்கள் எல்லாம் இலக்கிய உருவம் கொண்ட கருணாக்கள்; டக்ளஸ் தேவானாந்தாக்கள். இந்த மாநாட்டை நடத்துபவர்களையும், அதில் கலந்து கொள்பவர்களையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. இவர்களை சமுக விலக்கும் இலக்கிய விலக்கும் செய்வது தான் சரி. இவர்களது புத்தகங்களை வாங்கக் கூடாது.

எழுத்தாளர் கோவை ஞானி: கொழும்பில் மாநாடு நடத்துவது என்றால் அரசு நிபந்தனை உண்டு என்று கேள்விப்பட்டேன். அதாவது ராஜபக்சேவை விமர்சனம் பண்ணக்கூடாது, முள்ளி வாய்க்கால் போன்ற பிரச்சனைகளை பேசக்கூடாது. அப்படியென்றால் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த உணர்வே இருக்கக் கூடாது. இலங்கை சிங்கள அரசு தமிழர்களுக்கு மிகப் பெரிய அழிவையை உண்டாக்கி இருக்கிற‌து என்று மனதில் எண்ணம் இருந்தாலும் கூட பேசக்கூடாது அல்லது பேச வேண்டுமானால் அரசுக்கு அனுசரணையான செய்திகளை மட்டும் பேச வேண்டும். அந்த மாதிரி பேசக்கூடியவர்களும் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராக, ஈழ மக்கள் விடுதலைக்கு எதிராக பேசக்கூடிய மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக இந்த மாநாட்டில் பங்கு கொள்வார்கள்.

அந்த மாநாட்டில் எதை முதன்மையாக எடுத்துக் கொண்டு பேசப்போகிறார்கள்? பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு, நிலம் முதலியவற்றை கொடுக்க வேண்டும், வாழ்வுரிமையைத் தர வேண்டும், மரியாதையைக் கொடுக்க வேண்டும். இன்னும் சிறையில் இருக்கிற மக்களை விடுதலை செய்ய வேண்டும். முடியுமானால் அவர்கள் மேல் இருக்கிற அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்துவிட்டு மானமுள்ள இனமாக அவர்களை வாழ விட வேண்டும். அவர்களுக்கு பூர்வீகம் என்பது வடக்கு கிழக்கு தான் அதனால் அங்கு ராணுவ முகாம்கள் அமைப்பதோ, சிங்கள குடியேற்றம் செய்வதோ அவர்களை மீண்டும் ஒடுக்கவதற்கோ அழிப்பதற்கோ எடுக்கப்படும் ஒரு முயற்சி தான். இதைப் பற்றி உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசக்கூடாது என்றால் அவர்கள் எந்த நோக்கத்தில் மாநாடு நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இது மறைமுகமாக ராஜபக்சேக்கு அனுசரணையான ஒரு மாநாடு தான். இது நடந்தால், 'தமிழ் எழுத்தாளர்களை ஒன்று திரட்டி நாங்கள் மாநாடு நடத்தியதாகவும், சிங்கள மொழி போல் தமிழ் மொழிக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம்' என்று ராஜபக்சே செய்தி பரப்ப வாய்ப்பு இருக்கிறது.

எழுத்தாளர் பொன்னீலன் (கலை இலக்கியப் பெருமன்றம்): ஈழத்தமிழர்கள் கடுமையாக நசுக்கப்பட்டு இருக்கிறார்கள். இறந்தவர்களைவிட‌ எஞ்சி இருக்கக்கூடியவர்களுடைய வாழ்க்கை இன்னும் பரிதாபமாக இருக்கிறது. இப்படியான ஒரு சூழலில் எந்த உரிமைகளும் இல்லாத இடத்தில் எப்படி ஒரு மாநாடு நடத்த முடியும்? தமிழ்நாட்டில் ஒரு மாநாடு நடந்தபோதே வருத்தப்பட்டோம். அப்படியிருக்க இலங்கையில் மாநாட்டை நடத்துவது என்பது கேலிக்கூத்து மாதிரி தெரிகிறது. இந்த மாநாடு ஈழப் பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டுவருமா? என்னால் இந்த மாநாட்டில் கண்டிப்பாக கலந்து கொள்ள முடியாது. என்னுடைய சகோதரர்கள் பாதிக்கபட்டு இருக்கிறார்கள். அவர்களின் விடுதலைக்கோ, வாழ்வுக்கோ எதுவும் செய்யாமல் மாநாட்டிற்கோ, கூத்தாட்டதிற்கோ, கொண்டாட்டத்திற்கோ ஏற்பாடு செய்வது அவர்களை அவமானப்படுத்துவது மட்டுமல்ல என்னையும் அவமானப்படுத்துவதாகவே நான் நினைக்கிறேன்

எழுத்தாளர் ஓவியா: ராஜபக்சே இந்த நூற்றாண்டிலே ஒரு மிகக் கொடூரமான‌ காரியத்தை செய்து முடித்துவிட்டார். தமிழின அழிப்பு என்பதில் இன்றைய காலக் கட்டத்தில் வெற்றி என்று கருதக்கூடிய நிலையை அடைந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் இழந்திருப்பது என்ன என்றால் சர்வதேச அளவில் அவர்களின் நன்மதிப்பு. அந்த நன்மதிப்பை செயற்கையாகவாது உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கூலிக்கு தமிழர்களைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் கலந்து கொள்கின்ற யாராக இருந்தாலும் அவர்கள் இதற்கு விலை போகிறவர்கள் தான். அப்படி விலை போகிறவர்கள் மட்டும்தான் இப்படி ஈரமும் இரத்தமும் இன்னும் காயாத அந்த பூமியில் கால்மிதிக்க முடியும். இலங்கை அரசின் அழைப்பின் பெயரிலே அங்கே கால் மிதிக்கிற யாரும் இந்த சூழ்ச்சிக்கு விலை போனவர்கள் அல்லது பலியானவர்கள். பலியானவர்கள் என்று கூட சொல்ல முடியாது காரணம் சின்ன குழந்தைக்குக் கூட அங்கு நடந்த கொடூரங்கள் தெரியும். அப்படி இருக்கும்போது இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் மரியாதை தேடித் தருகிற வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்று சொன்னால் அந்த கொடூரத்தின் பங்காளிகளாக இவர்கள் போகிறார்கள், கலந்து கொள்கிறார்கள் என்பதே என் கருத்து.

இரத்தத்தால் கோப்பையைக் கழுவி விட்டு தேநீர் கொடுத்தால் நாம் குடிப்போமா? அதை குடிப்பதற்கு மனம் வருமா? இலங்கையில் எழுத்தாளர் மாநாடு நடத்துவதற்கும் நான் சொன்ன உதாரணத்திற்கும் என்ன வித்தியாசம்? நான் இனம், மொழி இந்த விடயங்கள் இல்லாத ஒரு உதாரணத்தை சொல்லிக் கேட்கிறேன். நம் கண் முன்னாடி கொலையைச் செய்துவிட்டு இரத்தத்தை கழுவிவிட்டு தேநீர் சாப்பிடலாம் என்று கூப்பிட்டால் நம்மால் போக முடியமா? அப்படிப் போனால் நம் பெயர் மனிதர்களா? இது தான் இங்கு எழுப்பப்பட வேண்டிய கேள்வி.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10836:2010-09-02-02-22-24&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

ஆக எவன் செத்தால் நமக்கென்ன நம்ம வேலை ஆனால் போதும்....இந்த கேள்வி தமிழகம் நோக்கி வந்ததால் கேள்வி கேட்க நேரிட்டது மற்றபடி சூடு சொரணை உள்ளவர்கள் பங்கேற்க்கலாம்...கும்மியடி... பெண்ணே கும்மியடி ..... :lol:

damote37.gif

spit.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

தோழர் வரட்சி, கையுக்கு வந்தகணக்கு எதையும் எழுதிவிட்டு செல்வது இலகு. ஒருபக்கம் சார்ந்து கருத்து எழுதுவது அல்ல எனது நோக்கம். குறிப்பிட்ட மகாநாட்டின் அமைப்பாளர் என்ன கூறுகின்றார் என்பதையும் சற்று காதுகொடுத்து கேளுங்கள் தோழர்.

நான் நினைக்கின்றேன் இங்கு.. "சர்வதேச" எனும் பதம் பயன்படுத்தப்பட்டதே பலருக்கு வயிற்றினுள் புளியைக் கரைத்து ஊற்றுவதுபோல் உள்ளது என்று.

தமிழ்த் தேசியத்தின் பெயரால், தமிழ்த்தேசியத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட ஒரு சிலரினால் செய்யப்படும் அடாவடித்தனங்களில் - Bullying ஒன்றாகவே இந்தப் புறக்கணிப்புக்களை நான் பார்க்கின்றேன்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

முருகபூபதி (அமைப்பாளர், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு)

இலங்கையில் அடுத்த ஆண்டு (2011) நாம் நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக ஏற்கனவே பல இதழ்களிலும் (அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில்) இணையத் தளங்களிலும் மலர்களிலும் எழுதியிருப்பதுடன் தமிழ்நாடு Zee Tamil தொலைக்காட்சியிலும் தொலைபேசி ஊடாக விரிவாக பேசியிருக்கின்றேன். தமிழக ஜூனியர் விகடனும் எனது கருத்தை கேட்டு பதிவுசெய்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து வந்த காலம் முதல் மூலையிலே சோம்பிக்கிடக்காமல் தொடர்ந்தும் கலை, இலக்கியப்பணிகளிலும் இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கும் அகதிகளுக்கும் உதவும் மனிதாபிமானப்பணிகளிலும் அயராமல் ஈடுபட்டு வருகின்றேன்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையாக நான் வாழ்ந்தவன் இல்லை. 1972 ஆம் ஆண்டு முதலே கலை, இலக்கிய, ஊடகத் துறையில் எனது பணிதொடர்கிறது. உலகின் எந்தப் பகுதிக்குச்சென்றாலும் எனது பணிதொடரும்.

போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக உதவும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் (Ceylon Students Educational Fund-Inc) பணிகளில் அர்பணிப்போடு இயங்கி அதனை இன்றளவும் காப்பாற்றிவருகின்றேன்.

இலங்கை மாணவர் கல்வி நிதியம் தொடர்ச்சியாக கடந்த 22 வருடகாலமாக இயங்கிக்கொணடிருப்பதுடன், கடந்த ஆண்டு மே மாதம் வன்னியில் முள்ளிவாய்காலில் முற்றுப்பெற்ற ஈழ யுத்தத்தின்போது சரணடைந்த முன்னாள் போராளிச்சிறார்கள் (ஆண்கள்- பெண்கள்) இந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதரப்பரீட்சைக்குத்தோற்றுவதற்கு ஆசைப்பட்டபோது அவர்களது கல்வி சார்ந்த நலன்களை கவனிக்க மாணவர் கல்வி நிதியம் ஊடாக பணியாற்றினேன்.

இத்தனை வேலைப்பளுவுக்கும் மத்தியில்தான் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் எழுத்தாளர் விழா என்ற இலக்கிய இயக்கத்தையும் தோற்றுவித்து தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் விழாவை முன்னெடுத்தேன்.

இதற்கும் அரசியல் சாயம் பூசி பகிஷ்கரித்தவர்களின் போலி முகங்களையும் அப்போது என்னால் பார்க்கமுடிந்தது. 2001 ஆம் ஆண்டுமுதல் அவுஸ்திரேலியாவில் மெல்பன், கன்பரா, சிட்னி ஆகிய மாநிலங்களில் கடந்த பத்து ஆண்டுகாலமாக தொடர்ச்சியாக வருடம்தோறும் தமிழ் எழுத்தாளர் விழாக்களை ஒழுங்காகவும் கனதியாகவும் தரமாகவும் நடத்துவதற்கு நான் கடுமையாக உழைத்திருக்கின்றேன்.

மூத்த படைப்பாளிகளான எஸ்.பொன்னுத்துரை, காவலூர் ராஜதுரை, கவிஞர் அம்பி, ஓவியர் ஞானசேகரம், நாட்டுக்கூத்துக்கலைஞர் அண்ணாவியார் இளையபத்மநாதன், கலைவளன் சிசு.நகேந்திரன், பேராசிரியர் பொன்.பூலோகசிங்கம், கட்டிடக்கலைஞரும் குத்துவிளக்கு திரைப்பட தயாரிப்பாளருமான வி.எஸ.துரைராஜா, தையற்கலை நிபுணர் திருமதி ஞானசக்தி நவரட்ணம், இலங்கையின் மூத்த மலையக படைப்பாளி தெளிவத்தை ஜோசப் ஆகியோரை இந்த எழுத்தாளர் விழாக்களில் பாராட்டி கௌரவித்து விருதுகளும் வழங்கியிருக்கின்றேன். இந்தப்பணிகளை முன்னெடுப்பதற்காக எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் (Australian Tamil Literary & Arts Society Inc- ATLAS) உறுப்பினர்கள் எனக்கு பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்திருக்கிறார்கள். இந்த அமைப்பு அவுஸ்திரேலியா அரசில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த அனுபவங்களின் தொடரச்சிதான் நான் முன்னெடுத்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு.

இப்பொழுது நான் இலங்கையில் ஒழுங்குசெய்துள்ள எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டுக்கும் அரசியல் சாயம் பூசுவதற்கு ஒருகூட்டம் முற்பட்டிருக்கிறது.

இலங்கையில் சர்வதேச எழுத்தாளர் மகாநாட்டை நடத்துவதற்கு நாம் தீர்மானித்ததற்கு பல காரணங்கள் இருந்தன.

உலகம் பூராவும் சிதறுண்டு வாழும் ஈழ எழுத்தாளர்கள் தமது இலக்கிய உறவுகளை மீண்டும் காலம் கடந்துவந்து சந்திப்பதற்கும் குறிப்பிட்ட சந்திப்பானது கூடிக்களைந்து உண்டுகளித்துவிடும் ஒன்றுகூடலாக அமையாமல் பல ஆக்கபூர்வமான கலை, இலக்கியம், மற்றும் கல்வி சார்ந்த பணிகளை முன்னெடுப்பதற் காகவுமே திட்டமிடப்பட்டது.

அனுபவம் இல்லாத கல்வியை விட கல்வி இல்லாத அனுபவம் மேலானது என்பார்கள். அதுபோன்று அவுஸ்திரேலியாவில் பத்து ஆண்டுகளாக தங்கு தடையின்றி தொடர்ச்சியாக தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் போரினால் பாதிப்புற்ற ஏழைத்தமிழ் மாணவர்களுக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து தங்கு தடையின்றி இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை நடத்திவரும் அனுபவங்களிலிருந்தும் கற்றுக்கொண்ட பாடங்களினாலும் இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைக் கூட்டுவதற்கு பலரதும் ஆலோசனைகளையும் ஆதரவையும் பெற்றேன்.

சுமார் ஐந்துவருடங்களுக்கு முன்பே இந்த யோசனை இலங்கையில் நடந்த மல்லிகைப்பந்தல் இலக்கியச்சந்திப்பில் இலங்கை படைப்பாளிகளினால் முன்வைக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவிலிருந்துகொண்டு இலங்கை, தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட சில ஐரோப்பிய நாடுகளில் வதியும்; நூற்றுக்கணக்கான கலைஞர்கள், படைப்பாளிகளுடன் தொடர்ச்சியான உறவும் தொடர்பும் கொண்டிருப்பவன் என்ற முறையில் இந்த மகாநாட்டுப்பணிகளை ஒருங்கிணைக்க மிகவும் பொறுத்தமானவன் முருகபூபதிதான் என்ற கருத்து குறிப்பிட்ட கொழும்பு சந்திப்பில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம்பெற்றதுடன், என்னிடம் சில பணிகளும் ஒப்படைக்கப்பட்டன.

2009 ஜனவரியில் வெளியான மல்லிகை 44 ஆவது ஆண்டு மலரில் ‘தொலைபேசி மான்மியம்’ என்ற கட்டுரையின் இறுதிப்பகுதியில் குறிப்பிட்ட சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு பற்றி பதிவுசெய்திருக்கின்றேன். அதனைப்படித்த மேலும் பல படைப்பாளிகள் என்னுடன் தொடர்புகொண்டு இந்த யோசனைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர் .

தமிழகத்திலும் அவுஸ்திரேலியாவிலும் அகலக்கால் பதித்துள்ள எமது மூத்த படைப்பாளியான எஸ்.பொ. அவர்களுக்கு, எனக்கிருக்கும் சர்வதேச இலக்கிய தொடர்புகள் தெரிந்தமையால்தான் பல வருடங்களுக்கு முன்னர் அவரால் வெளியிடப்பட்ட ‘பனியும் பனையும்’ என்ற புலம்பெயரந்த படைப்பாளிகளின் கதைத்தொகுப்புக்காக எனது ஆதரவை நாடியிருந்தார். நானும் என்னால் முடிந்த அளவு கதைகளை அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சேகரித்துக்கொடுத்தேன்.

குறிப்பிட்ட ‘பனியும் பனையும்’ வெளியானது. ஆனால் தொகுப்பாசிரியர்கள் என்ற பெயரில் இந்தப்பணியில் சிறுதுரும்பும் எடுத்துப்போடாத எனது இனிய தமிழக நண்பர் இந்திரா பார்த்தசாரதியின் பெயரை எஸ்.பொ. அவர்கள் சேர்த்துக்கொண்டார். எனது பெயர் இருட்டடிப்புச்செய்யப்பட்டது.

ஏன் இப்படிச்செய்தீர்கள்? - என்று அவருக்கு மிகநெருக்கமாக இருந்தவர்கள் கேட்டபோது அவரிடமிருந்து ஆழ்ந்த மௌனம்தான் வெளிப்பட்டது.

தாம் இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் இழந்துபோன இலக்கிய அந்தஸ்தை தமிழகத்தில் தக்கவைத்துக்கொள்வதற்காக அவர் மேற்கொண்ட முதல் முயற்சிதான் குறிப்பிட்ட நூலின் தொகுப்பில் அதற்குச்சம்பந்த மில்லாதவரின் பெயரைச் சேர்த்துக்கொண்டது.

இதற்கெல்லாம் முன்னோடியாக இலங்கையில் ஏற்கனவே வெளியான தமது நூல்களை தமிழகத்தில் மீள்பிரசுரம் செய்யும்போது தமிழக நூலக அபிவிருத்திச்சபையின் அங்கீகாரத்தைப்பெற்று விற்பனை செய்துகொள்வதற்காக குறிப்பிட்ட ஏற்கனவே வெளியான தமது நூல்களை (தீ, சடங்கு உட்பட பல நூல்கள்) தமிழகத்தில் இரண்டாம் பதிப்பு எனச்சுட்டிக்காட்டாமல் புத்தம்புதிய முதல் பதிப்பு என்று காண்பித்துக்கொண்டதுடன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், ராமனுஜம்,சாலை. இளந்திரையன் போன்ற நன்கு தமிழகத்தில் அறியப்பட்டவர்களின் அணிந்துரைகளுடன் தமிழக அங்கீகாரத்துக்கு அவாப்பட்டுக்கொண்டார்.

இலங்கையில் சாதி எதிர்ப்புப்போராட்டத்தில் டானியல், ஜீவா, ரகுநாதன், சுபத்திரன் போன்ற இடதுசாரி படைப்பாளிகளுடன் இணைந்து இயங்காமல் ஆலயப்பிரவேசம் மற்றும் தேநீர்க்கடை பிரவேசம் முதலான போராட்டங்களில் சேர்ந்துகொள்ளாமல் தாம் தோற்றுவித்த நற்போக்கு இலக்கிய முகாமை செலுமையுடன் வளர்த்துக் கொள்ளத்தெரியாமல் தனக்குத்தானே பகைவனாகிக்கொண்ட எஸ். பொ. அவர்கள் ஒரு சந்தரப்பத்தில் தமிழ் நாட்டில் மேலே குறிப்பிட்ட படைப்பாளிகளுடன் தம்மை தக்கவைத்து தமது நூல்களை தமிழகத்தில் மறுபிரசுரம் செய்துவிட்டு, இப்போது தம்மை ஒரு தலித் இலக்கியப்போராளி என்று காண்பிப்பதற்காக மற்றுமொரு வேடம் புனைவதற்காக முயன்றுள்ளார்.

இலங்கைக்குச்சென்று தமது முன்னாள் நண்பர்களை சந்திப்பதற்காகவும் இழந்துபோன மரியாதையை மீட்டுக்கொள்வதற்காகவும் முருகபூபதியின் தயவை இவர் எப்படி நாடியிருந்தார் என்பதை எனது ராஜஸ்ரீகாந்தன் நினைவுகள் நூலில் இடம்பெற்றுள்ள ராஜஸ்ரீகாந்தனின் கடிதங்கள் விளக்கும்.

அவுஸ்திரேலியாவில் சிட்னியில் இலக்கியப்பவர் என்ற அமைப்பின் தோற்றத்துக்கு காரணமாக இருந்து, பின்னர் அதனால் புறக்கணிக்கப்பட்டு, அவுஸ்திரேலியாவில் இழந்துபோன செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டிக்கொள்ள இவர் முயன்றபோது, எவருமே மித்ரா பதிப்பகத்தின் வெளியீட்டுவிழாவுக்கு இவருக்காக தலைமைதாங்க முன்வராதபோது மெல்பனிலிருந்து முருகபூபதியை வரைவழைத்து (முருகபூபதி தமது சொந்தச்செலவில்தான் விமானம் ஏறினார்) குறிப்பிட்ட விழாவை நடத்தினார்.

இச்சம்பவங்கள் எழுத்தில் அழுத்தமாக பல பத்திகளில் பதிவாகியிருக்கின்றன.

2009 இலே சர்வதேச மகாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் யோசனைகள் தொடர்பாக தொலைபேசி வாயிலாக பலதடவை எஸ்.பொ. அவர்களை நான் தொடர்புகொள்ள முனைந்தும் முடியாமல்போனது.

பின்னர் யுகமாயினி ஆசிரியர் சித்தன் அவர்கள் மூலம் தகவல் அனுப்பினேன். தகவல் கிடைத்ததும் எஸ்.பொ. சொன்ன வார்த்தைகள் “I am always with Murugapoopathy. He is doing a Good Job. I am Going to support”

‘பனியும் பனையும்’ தொகுதியை மீள் பிரசுரம் செய்வதற்காக மீண்டும் எனது தயவை அவர் நாடினார். அவரது இயல்புகளை நன்கு தெரிந்திருந்தமையால்; நான் அதற்கு மறுத்துவிட்டேன்.

அவுஸ்திரேலியாவிலிருக்கும் அவரது நண்பர்கள் மூலமாகவும் என்னை இந்த தொகுப்பு வேலைக்கு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளப்பார்த்தார். எதையெதை யாரால் செய்துமுடிக்க முடியும் என்பது அவருக்கு நன்கு தெரியும். நான் இதுவிடயத்தில் மீண்டும் ஏமாறத்தயாரில்லை என்று அவருக்கே தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கின்றேன். அந்த இரண்டாவது பதிப்பு முயற்சி பல மாதங்களாகியும் இன்றுவரையில் எனது தயவும் உதவியும் இல்லாமல் கிடப்பிலிருக்கிறது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் நடந்த சர்வதேச மகாநாட்டுக்கான முதலாவது விரிவான ஆலோசனைக்கூட்டம் தொடர்பான செய்தியும் படங்களும் தமிழ்நாடு யுகமாயினி 2009 மார்ச் இதழில் பிரசுரமாகியிருக்கிறது.

ஆசிரியர் சித்தன் இம்மாகாநாட்டுக்கான தமிழக பிரதிநிதியாக இயங்குவார் என்ற தகவலும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சித்தனும் தமது ஆசிரியத்தலையங்கத்தில் மகாநாட்டை வரவேற்று தமது கருத்தை பதிவு செய்திருந்தார்.

மற்றுமொரு இலக்கிய சிற்றிதழான இனிய நந்தவனம் ஏப்ரல் இதழிலும் மகாநாடு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

எமது மகாநாட்டின் நிகழ்ச்சிகளின் இணைப்பாளர்களில் ஒருவரான நண்பர் அந்தனிஜீவா தமிழகம் சென்று பாண்டிச்சேரி வரையில் பயணித்து இம்மகாநாடு குறித்த எமது 12 அம்ச யோசனைகளை பிரதியெடுத்த விநியோகித்துள்ளார்.

அதனைப்பார்த்த பா.செயப்பிரகாசம் மற்றும் பல தமிழக எழுத்தாளர்கள் என்னுடன் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் தொடர்புகொண்டனர். தாமரை இதழ் ஆசிரியரும் தமிழ் மாநில கம்யூனிஸ்ட் கட்சி துணைச்செயலாளருமான மகேந்திரன் எனது குடும்ப நண்பர். அவரும் இந்த மகாநாடு தொடர்பாக தமது ஆதரவை நண்பர் அந்தனிஜீவாவிடம் தெரிவித்திருக்கிறார்.

இப்படியெல்லாம் பல முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருக்க... திடீரென்று அந்தர் பல்டி அடிப்பது போல எனக்கும் எனது இலக்கிய நேர்மைக்கும் என்னுடன் இணைந்து மகாநாட்டு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் எதிராக அவதூறும் அபாண்டமும் பழிச்சொற்களையும் பரப்புவதற்கு எஸ்.பொ. வரிந்துகட்டி எழுந்திருப்பதன் மர்மம் என்ன?

2009 டிசம்பர் முதல் 2010 ஜூன் வரையில் எதுவுமே பேசாமல் ஆழ்ந்த மௌனம் காத்துவிட்டு இப்போது வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பதற்கு அவர் புறப்பட்டுள்ளதற்கான ரிஷி மூலம் - நதி மூலம் என்ன?

போர் நடந்த காலப்பகுதியின் பின்னர் 2009 டிசம்பர் ஞானம் இதழ் (115 ஆவது இதழ்) எஸ்.பொ.வுக்காக இலங்கையில்; பவளவிழா சிறப்பு மலர் வெளியிட்டபோது அதனை மானசீகமாக ஆதரித்து ஏற்றுக்கொண்டவருக்கு, அந்த மலர் வெளியான மண்ணில் போர்க்குற்றம் நடந்தது தெரியாமலா இருந்தது. “இத்தருணம் எனக்கென்ன பவளவிழா மலர்” என்று கேட்காமலிருந்துவிட்டு இப்போது குறிப்பிட்ட ஞானம் இதழ் ஆசிரியரும் இணைந்துள்ள மகாநாட்டுப்பணிகளை கொச்சைப்படுத்த முனைந்துள்ள மர்மம் என்ன?

இலங்கையில் போர் முடிந்தபின்னர் நான் அங்கே சென்று சுமார் ஒருமாத காலம் தங்கியிருந்து கொழும்பு மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களுக்கும் சென்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் மாணவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் வன்னி அகதி முகாமிலிருந்து ஊக்கமுடன் கல்வி கற்று வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற பல ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் பெற்றுக்கொடுத்ததுடன் அவர்களையும் எமது புலமைப்பரிசில் திட்டத்தில் இணைத்துக் கொண்டேன். இதற்கெல்லாம் அவுஸ்திரேலியாவிலிருக்கும் இரக்கமுள்ள தமிழ் அன்பர்கள் உறுதுணையாக விளங்குகிறார்கள்.

இந்தப்பணிகள் பற்றி ஏற்கனவே பல உண்மையான அறிக்கைகள் எமது இணையத்தளத்திலும் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கின்றன.

இலங்கைப்பயணத்தின்போது போர் நடந்த இடத்தில் பாதிப்புற்ற எழுத்தாளர்களையும் சந்தித்து அவர்களுக்கும் அத்துடன் மனநலம் குன்றிய படைப்பாளி ஒருவருக்கும் உதவி வழங்கியதுடன் திருகோணமலையில் தற்போது தங்கியிருக்கும் கவிஞர் புதுவை ரத்தினதுரை அவர்களின் மனைவி, பிள்ளைகளையும் அவர்களின் உறவினர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் என்னால் இயன்ற உதவிகளும் செய்தேன்.

வலதுகை கொடுப்பது இடதுகைக்குத்தெரியக்கூடாது.

எனது இந்தப்பயணம் குறித்தும் புதுவை ரத்தினதுரையும் மற்றும் சில போராளிகளும் சரணடைந்தது தொடர்பான பல தகவல்களையும் நான் விரிவாக எழுதவேண்டும் என்று ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா வாழ் தமிழ்ப்படைப்பாளிகள் என்னிடம் கேட்டுக்கொண்டபோதும் அப்படி எழுதி எனக்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்ள நான் விரும்பவில்லை. பல இடங்களுக்கும் சென்று கெமராவில் படங்களை எடுத்த நானும் எனது இலக்கிய நண்பர்களும் புதுவை ரத்தினதுரையின் குடும்பத்தை சந்திக்கச்சென்றபோது கெமராவை எடுத்துச்செல்ல விரும்பவில்லை.

நாம் அவர்களை எமக்கு விளம்பரம் தேடிக்கொள்வதற்காக சந்திக்கச்செல்லவில்லை என்பது மாத்திரமே உண்மை. அவரும் மற்றும் சிலரும் எங்கோ உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் திருமதி ரஞ்சி ரத்தினதுரையும் மற்றும் பிள்ளைகள் உறவினர்களைப்போலவே நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.

எமக்கு ஆக்கபூர்வமான பணிகளும் கடமைகளும்தான் முக்கியமே தவிர மலினமான பரபரப்போ, மலினமான நேர்காணல்களோ சுயதம்பட்டம் அடிக்கும் அறிக்கைகளோ அல்ல.

இலங்கையில் போர் நடந்தது. போர்க்குற்றங்கள் இரண்டு தரப்பினாலும் நடந்துள்ளன. இதனை யாராலும் மறைக்கமுடியாது. இது தொடர்பான நடவடிக்கையில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ஈடுபடும்.

அதற்காக இலங்கை மக்களின் அன்றாட வாழ்வு தொடராமலா இருக்கிறது?

யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவம் நடக்காமலா இருக்கிறது?

கொழும்பில் பிரபலமான ஆடிவேல் விழா நடக்காமல் இருக்கிறதா?

இதற்கு தமிழகத்திலிருந்து நாதஸ்வர, தவில் கலைஞர்கள் வருகை தராமலா இருக்கிறார்கள்?

கம்பன் கழகத்தின் கம்பன் விழாவும் இசைவேள்வியும் நடக்காமலா இருக்கிறது?

மாத்தளை என்ற மலையக ஊரில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயிலின் வருடாந்த உற்சவமும் ஐந்துரத பவனியும் பல்லாயிரக் கணக்கான தமிழ் பக்தர்கள் மத்தியில் நடக்காமலா இருக்கிறது.?

கொழும்பு புறக்கோட்டையில் தமிழ்ப் பெண்கள் பாற்குடம் சுமந்து திருவிழா நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளவத்தையில் ஆண்கள் வேல்குத்தி பறவைக்காவடி எடுக்கிறார்கள்.

இலங்கையின் தமிழ்ப்பிரதேசங்களில் உலகநாயகன், சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, மெகா ஸ்டார், புரட்சிக்கலைஞர் ஆகியோரின் மசாலாப்படங்கள் காண்பிக்கப்படாமலா இருக்கிறது?

இலங்கை தமிழ்ப்பிரதேசங்களுக்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தாம் சிரமப்பட்டு சேகரித்த மருந்து மற்றும் உணவுப்பொருட்களை கப்பலில் அனுப்பமுடியாமல் போனபோது ஐக்கியநாடுகள் சபைக்கும் செஞ்சிலுவைச்சங்கத்திற்கும் இந்திய மத்திய அரசுக்கும் உருக்கமான வேண்டுகோள் விடுத்து சாகும்வரையில் பழ.நெடுமாறன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதியில் சூப்பர் ஸ்டாரின் படங்கள் இலங்கையிலும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஒரேநேரத்தில் வெளியாகி அவருக்கும் அதனைத்தயாரித்த நிறுவனத்திற்கும் கோடி கோடியாக எமது தமிழ் மக்கள் கொடுத்தார்களே? அப்போது எங்கே போனது தமிழ் இன மான உணர்வு?

சுனாமியினால் கடற்கோள் வந்து எஸ்.பொ. பெண்ணெடுத்த கிழக்கு மாகாணம் பாதிப்புற்றபோதும் தாம் பிறந்து தவழ்ந்து விளையாடிய யாழ்ப்பாண மண்ணில் அகதிகளின் எண்ணிக்கை பெருகியபோதும் அந்தப்பக்கமே எட்டியும் பார்க்காத அம்மக்களின் தேவைகளுக்காக ஒரு சதமேனும் செலவிடாதவர்தான் இப்போது திடுக்கிட்டு எழுந்து போர்க்குற்றம் நடந்த மண்ணில் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்று கூடுவதற்கு தமது கண்டனத்தை தெரிவிக்கிறார்.

யார் ஐயா உங்களிடம் கருத்துக் கேட்டது?

கருத்துக்காக பல தடவைகள் தொலைபேசியிலும் தொடர்புகொண்டபோது சாமர்த்தியமாக நழுவிக்கொண்டு இப்போது அதுவும் 2010 ஜூன் மாதத்திற்குப்பின்னர் அறிக்கையும் அவுஸ்திரேலியாவை குறிபார்த்து வனொலி பேட்டிகளும கொடுப்பதன் மர்மம் என்ன? இவற்றின் ரிஷிமூலம் என்ன?

மகாநாட்டுக்கான நிதிவளம்:

பச்சைத்தண்ணீரில் பலகாரம் பொறிக்க முடியாது. 2009 ஜனவரி 3 ஆம் திகதி கொழும்பில் நடந்த ஆலோசனைக்கூட்டத்திலும் அதற்கு முன்னர் 27-12-2009 ஆம் திகதி கொழும்பு தினக்குரல் ஞாயிறு இதழிலும் இந்த மகாநாட்டிற்கான செலவுகளுக்கு எப்படி நிதி சேகரிக்கப்போகின்றோம் என்பது பற்றி தெளிவாகவே சொல்லியிருக்கின்றோம்.

இலங்கையில் வாழ்க்கைச்செலவு உயர்வினாலும் போருக்குப்பின்னரான பொருளாதார நெருக்கடியினாலும் பெரிதும் கஷ்டமுறும் படைப்பாளிகளிடமிருந்து நிதியுதவி பெறாமல், உலகெங்கும் வாழும் ஈழத்து படைப்பாளிகள் சுமார் 500 பேரிடமிருந்து தலா ஒருவர் கூ100 வெள்ளிகளை நன்கொடையாக தருவதன் மூலம் இந்த மகாநாட்டை சிறப்பாகவும் கலை, இலக்கிய கனதியுடனும் நடத்த முடியும் என்று கூறியிருக்கின்றேன். அத்துடன் பாதிப்புற்ற தமிழ்ப்படைப்பாளிகளின் குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக உதவுவதற்காக ஒரு நம்பிக்கை நிதியத்தை உருவாக்கும் எண்ணத்தையும் வெளியிட்டிருக்கின்றேன்.

இதற்கெல்லாம் உதவப்போகிறவர்கள் புகலிடத்தில் வாழும் மனிதநேயப் படைப்பாளிகளே தவிர போலி முகங்கள் அல்ல.

கிடைக்கப்பெறும் நிதி நன்கொடைகளுக்கு பற்றுச்சீட்டுகள் தரப்படுவதுடன் மகாநாடு முடிந்து ஒரு மாத காலத்துள் வரவு-செலவு அறிக்கை அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வாளரிடம் (Auditor) காண்பிக்கப்பட்டு உதவியவர்களுக்கும் படைப்பாளிகள் சமூகத்துக்கும் சமர்ப்பிக்கப்படும்.

இந்த ஒன்று கூடல் தனிப்பட்ட விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துகொள்ளும் முயற்சியாகவே நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்படும் என்றும் பேசியிருக்கின்றேன். பல பத்திகளில் எழுதியுமிருக்கின்றேன்.

இலங்கையில் நடந்த திரைப்பட விழா ஒரு கேளிக்கை களியாட்ட நிகழ்ச்சி. அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்டது. அதனை எதிர்தார்கள் பகிஷ்கரித்தார்கள். அதற்கு ஒரு நோக்கம் இருந்தது.

ஆனால் எமது எழுத்தாளர் ஒன்று கூடலானது மிகவும் சாதாரண எளிமையான சிறுகச்சிறுக சேமித்து ஒரு ஏழைக்குடும்பம் நடத்தும் எளிமையான வைபவத்துக்கு நிகரானது.

இதனை அரசியலாக்கி அதற்குப்பின்னால் சிங்கள, தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள் என்றெல்லாம் கற்பனையில் பிதற்றி சிறியதொரு நிகழ்வை பூதாகரமாக்கி தமது பொறமைப் பொச்சங்களை அம்பலப்படுத்தி அதற்கு நெருப்பூட்டி அதில் குளிர் காய்ந்து கொண்டிருப்பவர்களை நாம் என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?

எந்த ஆதாரத்தில் நாம் இலங்கை அதிபரிடம் லஞ்சம் வாங்கித்தான் இதனை நடத்துகின்றோம் என்று நாக்கூசாமல் சொல்கிறார்கள்?

தமது இருப்பை வெளிப்படுத்திக்கொள்வதற்கும் சவாரி செய்வதற்கும் இச்சந்தர்ப்பத்தில் தோதான வாகனமாக இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை கருதுகிறார்கள்.

இலங்கையில் நடத்தாமல் மலேசியாவில் நடத்தலாம் என்று மகத்தான யோசனைகளை அவுஸ்திரேலியாவிலிருந்து சொல்லுபவர்கள் அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவரும் மிகச்சாதாரண தமிழ் எழுத்தாளர் விழா நடந்த மண்டபத்தின் பக்கமே எட்டியும் பார்த்ததில்லை. அதனை நடத்திய சங்கத்தின் சிறுசேமிப்புக்கோ கோரிய நிதியுதவிக்கோ ஒரு சதமேனும் கொடுத்ததும் இல்லை.

எழுத்தாளர் விழாக்களினதும் நடத்தவிருக்கும் மகாநாட்டினதும் பூர்வீகம் தெரியாமல் ஏதோ தாமும் இருக்கிறோம் பேர்வழிகள் எனச்சொல்லிக்கொண்டு தமக்கேயுரித்தான காழ்ப்புணர்வுகளுக்கு சொல் அலங்காரம் அணிவித்து போலி அரிதாரம் பூசி பவனி வருகிறார்கள்.

இதனை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது ஐரோப்பாவிலிருந்து (பிரான்ஸ்) ஒரு இலக்கிய நண்பர், நீண்ட காலத்திற்குப்பின்னர் தமது மனைவி பிள்ளைகளுடன் இலங்கை சென்று வடக்கு, கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களிலும் கொழும்பிலும் சுமார் 46 நாட்களை மகிழ்ச்சியோடும் பிரிந்தவர்களை மீண்டும் பார்த்த குதூகலத்துடனும் விரிவான கடிதம் ஒன்றை எனக்கு மின்னஞ்சல் செய்துள்ளதுடன். மகாநாட்டுப்பணிகளிலும் ஒத்துழைக்கின்றார்.

இதுவரையில் நாம் பல புலம்பெயர் படைப்பாளிகளிடமிருந்து மகாநாட்டு மலர்கள், நூல்கள் ஆகியனவற்றுக்கு பல படைப்புகளை பெற்றிருப்பதுடன் நிதிப்பங்களிப்பையும் பெற்றுள்ளோம்.

மகாநாட்டிற்காக இலங்கையில் பிரத்தியேகமாக ஒரு வங்கிக்கணக்கும் திறக்கப்பட்டு உதவ விரும்பும் படைப்பாளிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இப்படியொரு சர்வதேச நிகழ்வு நடக்கப்போகும் விடயமே அங்குள்ள எந்தவொரு அரசியல் வாதிகளுக்கும் சொல்லப்படவில்லை. நாம் அரசியல்வாதிகளோ, வியாபாரிகளோ, பரபரப்பான விளம்பரம் தேடும் போலிகளோ இல்லை.

காலம் கடந்து குடும்பங்கள் எங்காவது ஓரிடத்தில் ஒன்றுகூடுவதுபோன்று கலை இலக்கிய குடும்பத்தினர் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சந்தித்துக்கொள்ள விரும்பியிருக்கிறார்கள்.

இதனைவைத்துத்தான் இலங்கை அரசாங்கம் தனக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெறப்போகிறது என்று சொன்னால்...

ஆடிவேல் விழாவையும் நல்லூர்க்கந்தன் உற்சவத்தையும் மாத்தளை முத்துமாரியம்மன் ரதோற்சவத்தையும் அங்கே நாடுபூராவும் தமிழ்ப்பாடசாலைகளில் நடைபெற்றுவரும் தமிழ்த்தின விழாக்களையும் வாராந்தம் நடக்கும் நூல் வெளியீட்டுவிழாக்களையும் தொடர்புபடுத்தியும் தனக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டிருக்கலாமே?

வெளியிலிருந்து வரப்போகிறவர்கள் தமது விடுமுறை மற்றும் வசதிகருதித்தான் வருவார்கள். வரவசதியில்லாதவர்கள் தமது கட்டுரைகளை படைப்புக்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு அரங்கு, படைப்புகளில் செவ்விதாக்கம், சிறுவர் இலக்கியம், நாடகம், கூத்து, குறும்படம் வலைப்பதிவு உட்பட பல நுண்கலைகள் தொடர்பான கருத்தரங்கு அமர்வுகள் நடைபெற விருக்கின்றன.

தமிழகம் மலேசியா சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலுமிருந்து வருகைதரும் சிற்றிதழ் ஆசிரியர்களின் கருத்தரங்கு அமர்வும் நடைபெறவிருக்கிறது.

ஏற்கனவே திருக்குறள், பாரதி கவிதைகள் சிங்களத்தில் மொழிபெயரக்கப்பட்டுவிட்டன. தமிழக படைப்பாளிகள் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கு.சின்னப்பபாரதி ஆகியோரின் படைப்புகளும் இலங்கையில் டொமினிக்ஜீவா, திக்குவல்லை கமால், மேமன் கவி, செங்கைஆழியான், சாந்தன், மலரன்பன். தி.ஞானசேகரன் உட்பட பல படைப்பாளிகளின் நாவல்கள் சிறுகதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. அத்துடன் மார்டின் விக்கிரமசிங்கா, கருணாசேன ஜயலத், குணசேனவிதான, ஜி.பி.சேனநாயக்கா உட்பட பலரது சிங்களப்படைப்புகள் தமிழுக்கு மொழிபெயரக்கப்பட்டுவிட்டன.

(இத்தருணம் ஒரு சிறுதகவல்: ஜெயகாந்தன் ஆசிரியராகவிருந்து முன்னர் வெளியான கல்பனா இதழில் குணசேனவிதானவின் சிங்களச்சிறுகதை தமிழில் மொழிபெயரக்கப்பட்டு வெளியானது.)

தமிழர் புகலிட நாடுகளில் எம்மவரின் தமிழ்ப்படைப்புகள் (நாவல், சிறுகதை, கவிதை, வாழ்க்கை வரலாறு) ஆங்கிலத்திற்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் பெயர்க்கப்பட்டுள்ளன.

எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 6 ஆவது எழுத்தாளர்விழாவில் (07-01-206) நான் தொகுத்து வெளியிட்ட ‘உயிர்ப்பு’ சிறுகதைத்தொகுப்பில் அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்கள் 20 பேரின் சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டேன்.

தற்போது இக்கதைத்தொகுதியை கனடாவிலுள்ள மொழி பெயர்ப்பாளரும் இலக்கிய ஆர்வலருமான ஒரு சகோதரி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பியுள்ளார்.

இத்தொகுப்பில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் - முன்பு வசித்த 20 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இருக்கின்றன.

பின்னர் இங்கு வதியும் 45 கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து வானவில் என்ற தொகுப்பை 7 ஆவது எழுத்தாளர் விழாவில் (27-01-2007) வெளியிட்டேன். எனினும் இந்த தொகுப்பு நூல்களிலும் எனது எந்தவொரு படைப்பும் இல்லை என்பது அவற்றை பார்த்தவர்களுக்கும் படித்தவர்களுக்கும் நன்கு தெரியும்.

மொழிபெயர்ப்புத்துறையில் எதிர்நோக்கப்படும் சவால்கள் சங்கடங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்வதற்காகத்தான் சர்வதேச மகாநாட்டில் மொழிபெயர்ப்பு அரங்கு நடைபெறவிருக்கிறது.

சிங்கள படைப்பாளிகளுடன் நாம் புரிந்துணர்வுடன் இயங்குவதையும் சிலர் கொச்சைப்படுத்தி அரசியலாக்கப் பார்க்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்துடன் பல வருடகாலமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர்ப்pரச்சினை இருந்தாலும் தமிழ்வாசகர்கள் கன்னடப்படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பை படிக்காமலா இருக்கிறார்கள்.

பிறப்பால் கன்னடராகப்பிறந்த நடிகர், நடிகையர்கள் தமிழ்த்திரையுலகில் கொடிகட்டிப்பறந்துகொண்டுதானே இருக்கிறார்கள்!

நாடு,மொழி, இனம், மதம், சாதி கடந்து சிந்திப்பவனே ஆரோக்கியமான கலைஞன், படைப்பாளி. எதனையுமே அரசியலாக்கி அதில் ஆதாயம் தேட முனைபவர்களுக்கு காலம் பதில் சொல்லிக்கொண்டே இருக்கும்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்.

தீதும் நன்றும் பிறர்தர வரா.

மகாநாடு திட்டமிட்டபடி நடக்கும். வருகைதர விரும்புபவர்கள் இலங்கையராகவிருந்தால் தாயகத்தின் யதார்த்த நிலையையும் அங்குள்ள படைப்பாளிகளின் ஆதங்கங்களையும் நேரில் பார்ப்பார்கள். தமிழகம் உட்பட ஏனைய நாடுகளைச்சேர்ந்தவர்கள் வந்தால் அவர்களுக்கு இந்தப்பயணம் சிறந்ததொரு வாழ்வனுபவமாக மனதிலும் எதிர்காலப்படைப்புகளிலும் பதிவாகும்.

International.twfes@yahoo.com.au

21-08-2010 ஆம் திகதி எழுதப்பட்டது.

தகவல் மூலம்: முருகபூபதி, மின்னஞ்சல், நன்றி.

தோழர் குரும்பு ஒரு பக்கம்... அதாவது தங்களை போல சிங்களவன் சார்ந்து இயங்குவதல்ல எனது நோக்கம் ... தமிழ் தேசியத்தினை குத்தகைக்கு வாங்கியவர்களை விட்டு தள்ளுங்கள்....அல்லது தங்களை போன்றவர்களே வைத்து கொள்ளுங்கள்....தங்களிடம் ஒரே கேள்வி இந்த மாநாட்டில் சிங்கள கைத்தடிகளை ஐ மீன்... ராட்சச பக்சேக்களை போட்டு தாக்க முடியுமா ....முடியாதா?

எதிர்தாவது சிறுகண்டனம் பதிவு செய்யமுடியுமா? முடியாதா? கூட்டத்தினை ஒழுங்கு படுத்துபவர்களிடம் கேட்டு சொல்லுங்கள் :lol:

ஜனநாயகம் இருக்கிறதா.... இப்போ...... என்று தாஙகள் உறுதி கூறுங்கள்... ஒரு மொழி பேசும் இனத்தினரை அழித்துவிட்டு சிறு கண்டனம் கூட தெரிவிக்காது மாநாடு நடத்துதல் ஒம்போதுகளின் செயலாக வே எனக்கு படுகிறது இது பற்றி தங்களது கருத்து என்ன?

டிஸ்கி: சூடு சொரணை உள்ளவர்கள் யாரும் தமிழகத்தில் வரமாட்டார்கள் இந்த பிரியாணி கோஸ்டிகள் வேண்டுமானால் வருகைதர வாய்ப்புள்ளது :unsure:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

ஜனநாயகம் இருக்கிறதா.... இப்போ...... என்று தாஙகள் உறுதி கூறுங்கள்... ஒரு மொழி பேசும் இனத்தினரை அழித்துவிட்டு சிறு கண்டனம் கூட தெரிவிக்காது மாநாடு நடத்துதல் ஒம்போதுகளின் செயலாக வே எனக்கு படுகிறது இது பற்றி தங்களது கருத்து என்ன?

தாங்கள் இன்னமும் நான் இணைத்த கீழ் உள்ள விடயத்தை முழுமையாக வாசிக்கவில்லை, அல்லது வாசித்தும் அது உங்களுக்கு விளங்கவில்லை என்பதே இதுபற்றிய எனது கருத்து தோழர் வரட்சி. :lol:

இதை பார்த்தால் எங்க கல்லூரி அரைகுறை கணக்கு வாத்தியார் தான் நினைவுக்கு வருது தோழர் குரும்பு ... அவருக்கே ஏதும் தெரியாது.... ஏதாவது கேட்டால் வேறு ஒன்றை சம்பந்தம் இல்லாதை கேட்பார்.... அனைவரும் திரு... திரு... என முழிக்கும் போது ... இது கூட தெரியல அது எப்படி உனக்கு தெரியும் என்பார்... பலே நல்ல டெக்னிக்கு... அதே பாலோ செய்யுங்கள் ... நான் அல்ல அனைவரும் கேட்பது இந்த நேரத்தில் மாநாடு அங்கு தேவையா என்பதே??? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - நிச்சயமாக நாங்கள் இல்லை!!

2010 சனவரி மத்தியில் கொழும்பு சென்றிருந்த வேளையில், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் செம்மொழி மாநாடு பற்றி கருத்துக்கள் கேட்டார்கள். செம்மொழி மாநாட்டின் உயிர் நிலையானது அரசியல் ஆதாயம் பெறுவதில் தங்கியுள்ளது பற்றி- அதற்கான எதிர்வினைகள் எங்களிடமிருந்து தொடங்கியுள்ளது பற்றி எடுத்து வைத்தேன்.

அவர்களுடன் உரையாடிய வேளையில் 2011 – சனவரியில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை ஒழுங்கு செய்யவிருப்பதாகவும், அதன் பொருட்டான ஆலோசனைக் கூட்டம் சனவரி 3ம் நாள் நடத்தப் பெற்றதெனவும் தெரிவித்தார்கள். பேரா.கா.சிவத்தம்பி முன்னிலை வகித்துள்ளார். ஆஸ்திரேலியாவிலுள்ள முருகபூபதி, நடேசன், லண்டனிலுள்ள ராசேஸ்வரி பாலசுப்பிரமணியம் முன்கை எடுத்துச் செய்கிறார்களெனக் குறிப்பிட்டார்கள்.

eelam_401.jpg

தமிழினப் படுகொலை முழு வீச்சில் நடந்துள்ள நிலையில், இன்னும் அந்த வங்கொடுமை வெப்பத்தினை இராஜபக்ஷே சகோதரர்கள் இறக்கிக் கொள்ளாத சூழலில் மாநாடு சாத்தியமா என்ற ஐயம் எழுந்தது. அரசு அனுமதியுடன் தான் நடக்கும் என்றார்கள். பன்னிரண்டு பணிகளை முன்னெடுக்கும் ஒரு அறிக்கையினை என் கையில் அளித்து தமிழகம் திரும்பியதும், எழுத்தாள நண்பர்களிடம் விநியோகிக்குமாறு தெரிவித்தார்கள். சில ஐயங்கள் தெளிவுpபடுத்தப்படாததால் அதை நான் ஒருவருக்கும் விநியோகிக்கவில்லை. அறிக்கையில் அவர்கள் எழுதியுள்ள 12 அம்சங்கள் பற்றி ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. எழுப்பியுள்ள கேள்விகள் தருக்க ரீதியில் அர்த்தமுள்ளவை.

“இந்த மாநாட்டிற்கான நோக்கம் உலகத் தமிழர்களிடம் நன்மதிப்பைப் பெற்று இலங்கையில் ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை மறைப்பது தான்” (புதிய பார்வை-16 .5.2010) என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலர் சி.மகேந்திரன் குறிப்பிட்டது, மாநாட்டின் பிரதான அரசியல் நோக்கம் பற்றியதாக இருந்தது.

செம்மொழி மாநாட்டின் ஆரவாரம் காதுகளிலிருந்து அகலும் முன்பே, கொழும்பில் மாநாட்டு முயற்சியினை தீவிரப்படுத்தியுள்ளார்கள் சிலர். இந்தச் சிலர் அங்கும் இங்கும் உள்ள சிலராகும். முன்னது தமிழர் செவிப்பறை கிழித்து – அவர் தம் புத்திமங்கச் செய்ய நடந்த ஆரவாரம் பின்னது இரைச்சல் ஏற்படுத்தாது அதே பாதையில் நடக்கும் அடக்கமான முயற்சி.

கொழும்பு என்றவுடன் இலங்கையும், இலங்கை என்றதும் இராஜபக்ஷேக்களும், இராஜபக்ஷேக்களைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் படுகொலையும் நினைவில் மேலெழுதல் ஒவ்வொரு தமிழனுக்கு மட்டுமல்ல, மனிதனான எவரொருவருக்கும் வருதல் தவிர்க்க இயலாதது. மனிதன் சிந்திப்பு சக்தி கொண்டவன்.

2010 சனவரி இந்தியக் குடியரசு நாள் விழாவில் தென்கொரிய அதிபர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது இவ்வாண்டின் இந்தியத் திரைப்பட விழா தென்கொரியாவில் நடைபெறுமென இந்தியப் பிரதமர் உறுதிமொழி அளித்தார். முள்ளிவாய்க்காலினுள்ளிருந்து உலக முழுதும் வீசுகின்ற பிணநாற்றத்தை திரைப்பட விழா என்னும் மாயாஜாலத்தால் மறைத்திடலாமென அதைக் கபளீகரம் செய்து கொழும்பில் நடத்திட வந்தார் ராஜபக்ஷே. குடியரசு நாளின் உறுதிமொழி பற்றி பிரதமர் கவலைப்படவில்லை. உலகமயமாதலின் இந்திய நாயகனான பிரதமர், இலங்கையைக் கபளீகரம் செய்யும் முயற்சியாக கண்டதால் ஜஃபா நிகழ்ச்சியினை நடத்த தடையேதும் இல்லாமல் போனது.

இந்தியத் திரைப்பட விழாவினை ஏற்பாடு செய்வது ஃபிக்கி - இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும். சாதாரண மக்களை வீழ்த்த திரைப்பட விழா; சர்வதேச மூலதனத்தை இறக்க இந்திய தொழில் வர்த்தக விழா - என்ற இரு பிரிவாக இலங்கையை வளைப்பதில் இந்தியப் பிரதமருக்கும் இலங்கை அதிபருக்கும் உடன்பாடுதான். இருவரும் ஒருவழிப் பயணிகளே. இலங்கையின் ராசபக்ஷேக்கு கூடுதலான ஒரு குறிக்கோள் உண்டு. அது கெட்டுப்போய்க் கிடக்கும் உலகை வளைப்பது. இந்த ஃபிக்கி அமைப்பின் ஊடக பொழுதுப்போக்குத்துறையின் தலைவராக இருப்பவர் நடிகர் கமலஹாசன். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றபோது, முதல் பாராட்டைத் தெரிவித்தது இந்த அமைப்பு.

தமிழகத்தில் இதற்கான முதல் எதிர்ப்பைக் கையிலெடுத்தனர் மே-17 இயக்கத்தினர் ஃபிக்கியின் ஊடகத் துறைத் தலைவரான கமலஹாசன் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்கள்.

இலங்கையில் நடைபெறும் விழாவில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கமலஹாசன் வாக்குறுதி கொடுத்தார். ஃபிக்கி அமைப்பின் ஊடகத் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகவில்லை. அதிலிருந்து விலகுவதால் தமிழருக்கு என்ன பயன் என்கிற ரீதியில் தர்க்கம் செய்தார். தமிழர்களுக்கு நன்மை விளைகிறதோ இல்லையோ, ஃபிக்கி அமைப்பின் நிரந்தரச் சுரண்டலுக்கு துணை செய்வதால் அவருக்கு கோடி கோடியாய்ப் பயன் விளைகிறது. தமிழ்த் திரையுலகம்- ஐஃபா விழாவினைப் புறக்கணிப்பது என்ற திடமான முடிவை எடுத்தத பின் கமலஹாசனுக்கு வேறு வழியில்லை என்பதாலும், இந்தி திரைப்பட நடிகர்களின் வீடுகளுக்கு முன், மும்பைத் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களினாலும், இலங்கை ராசபக்ஷேக்கள் நடத்த நினைத்த நாடகம் வெற்றியடையவில்லை.

எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவு ஜீவிகளது, மூளையில் இலங்கையின் பயங்கரவாதம் பற்றி ஆழமாக நடப்பட்டுள்ள வேர்களைக் களைவது இலங்கையின் அடுத்த உடனடித் தேவை. அங்கும் இங்குமுள்ள சாதாரண சனக்கூட்டத்தைக் கவர எடுத்த முயற்சி தோல்வியுற்ற நிலையில் சிந்தனையாளர்களை இழுக்க சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்று கூடலுக்கு இலங்கை தன் ஆதரவாளர்களை இறக்கி விட்டுள்ளது.

“சர்வதேச ரீதியாகப் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களைத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒன்றிணைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் முயற்சி’’

மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் விடுத்துள்ள அறிக்கை இவ்வாறு தொடங்குகிறது. ஈழத் தமிழராயினும், புலம்பெயர் தமிழராயினும் தமக்கென ஒரு தாயகம் கண்டு, சுயநிர்ணய உரிமையைக்கொண்டாடுதல் அவர்களின் விருப்பமாகும்’ அதைத் தடுத்து தமிழின அடையாளமே இல்லாமல் செய்கிற சிங்களப் பேரினவாதத்தின் மீதானது அவர்களது வெறுப்பு. இந்த இரு எல்லைகள் மட்டுமே தமிழினத்தின் விருப்பாகவும்,வெறுப்பாகவும் இருக்க முடியும். இந்த யதார்த்தத்தைப் புறக்கணித்து, புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றிணைதல் என்பது, புலம்பெயர்ந்த தமிழர்களில் தமிழீழ விடுதலைக்கு எதிராகவும், குறிப்பாய் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் நிற்கும் சிலரை ஒன்று கூட்டும் காரியமாகக் காணமுடியும். அவ்வாறான புலம்பெயர் அறிவு ஜீவிகளை இணைத்து ஒற்றைச் சிங்கள நோக்கத்துக்கு உள்ளடக்கமாய் ஆக்குவது என்பதாகவே முடியப் போகிறது.

விடுதலைப்புலிகள் காலத்தில் சாத்தியப்படாததை - இந்தச் சுதந்திர ஆட்சியில் சாத்தியமாக்குகிறோம் என்று சில ஓட்டை உடைசல்கள் முனங்குவதை அறிய முடிகிறது.

எழுத்துச்சுதந்திரம், கருத்துரிமை மறுக்கப்பட்ட இராணுவ பூமியில் எதைப்பேச, எழுத வேண்டுமென அவனே வரையறுக்கிறான். மாநாட்டில் இலங்கை அரசினையோ, இராஜபக்ஷேக்களையோ விமரிசித்துப் பேச இயலுமா? அவ்வாறு விமரிசிக்காமல் தமிழினத்தை அழித்தவனை விமரிசிக்காமல் தமிழை செழுமைப்படுத்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்.?

“அவன் ஒரு ஆங்கிலேயன் என்ற கவிதை உண்டு.”

“அவர் ஓர் ஆங்கிலேயர்

அவரே அதைக் கூறினார்

அந்தப்பெருமை அவரையே சாரும்

அதாவது அவர் ஓர் ஆங்கிலேயர்

அவர் ஒரு ருசியனாக இருக்கலாம்

ஒரு பிரெஞ்சுக்காரரார், ஒரு துருக்கியர்

இத்தாலியனாக இருக்கலாம்;

பிற தேசங்களினவராக மாற

அனைத்து ஆசைகளிருந்தாலும்

அவர் ஓர் ஆங்கிலேயராகவே இருக்கிறார்

-கில்பர்ட் 1878

அதுபோல், எந்த தேசத்தில் வாழ்ந்தாலும், அத் தேசத்தவராக மாறும் ஆசைகளிருந்தாலும் புலம்பெயர் ஈழர்-தானொரு ஈழத்தமிழராக இருக்கவே விரும்புகிறார். ஈழத் தமிழர் என்றொரு பெருமித அடையாளத்துடன் நடவடடிக்கைகளை ஒழுங்கு செய்யவே எண்ணுவார். அவர்களுடைய இந்தப் பெருமிதம் கடந்த காலம் சார்ந்ததல்ல; சமகாலத்தின் உரிமைப் போராளி என்ற பெருமிதத்தினை அடியாகக் கொண்டது. அது இன விடுதலைப் போராட்டப் பெருமிதம். இனவிடுதலைப் போராளி என்ற உணர்வுடன், உரிமைப் போராட்டச் செயல்பாட்டுனுள்ள புலம்பெயர்தமிழர்களால் ஈழத்தாரின் வாழ்வு, பண்பாடு, மொழிக்காப்பு என அனைத்தும் அவர்களின் வழிகாட்டலில் அமையும்; அவர்களை உரிமைப் போராட்டத் தடத்திலிருந்து இறக்கி, சிங்கள இனக் கரைப்புக்குள் செலுத்தும் தடம்மாறு வேலையை - கொழும்பில் நடக்கும் மாநாடு செய்ய இருக்கிறதா? கொழும்பில் நடக்கும் என்றால் சிங்கள அதிகாரத்தின் இசைவுடன் தானே நடக்க முடியும்?

ஈழத்தில் நசுங்கி, நைந்துபோன மக்களது உணர்வு நிலையிலிருந்து- மேலோங்கிய இன்னொரு மட்டத்தில் புலம்பெயர் ஈழர்கள் இருந்தாலும், அதுவே மற்றொரு சாதகமாக மாறியுள்ளது. உலக அளவில் பரந்து வாழுவதால், வாழுகிற நாடுகளில் உரிமைக்குரல் எழுப்புவதும், ஒன்றிணைப்பதும் சாத்தியமாகியுள்ளது. லண்டனில் ஓரிரு மாதங்கள் முன்னர் உலகத் தமிழர் பேரவை நடத்திய மாநாட்டில் வெளி விவகாரத்துறை அமைச்சர் மிலிபாண்ட், பிரிட்டன் பிரதமர் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழின உரிமை மீட்டெடுக்கப்படட வேண்டுமெனப் பேசினார்கள். இலங்கைப் பிரதமர் ரத்னசிறிவிக்கிரம நாயக உடனே “வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கிளைகளை வலுப்படுத்த சில வல்லரசுகள் முயற்சிகளை மேற்கொள்கின்றன. இலங்கை ஆசிய நாடுகளில் வலுவான நாடாக வளருவது சில சக்திகளுக்குப் பிடிக்கவில்லை’’ என சீற்றத்தைக் கொட்டினார்.

ஈழத்தமிழர் பிரச்சனையைக் கையாண்டதில் உலக நாடுகளுக்கு அவரவர் நலனே முதன்மையாக வந்தது. அதைக் கையாண்டது குறித்து அவர்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் கிடையாது. ஓரினத்தின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டதில் அவை பெரும் பங்கு வகித்ததை ஓரங்கட்டி விட முடியாது. அந்த நாடுகளின் காதுகளில் மறுபடி நுழைக்கவும், அழுத்தம் தரவுமான கடமையினை புலம்பெயர் ஈழர்கள் செய்து வருகிறார்கள். அவர்களைக் குறிவைத்து சலனப்படுத்தும் காரியத்தை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் செய்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

இந்த நேரத்தில் 1974-ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ்ஆராய்ச்சி மாநாடு நிகழ்வு ஒரு படிப்பினையாக அமைகிறது. கொழும்பில் நடத்த முயலுதலை ஏன் தமிழ்மக்கள் மட்டுமே செறிவாய் வாழும் யாழ்நகரில் நடத்தக்கூடாது, ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது.

1972ல் புதிய யாப்பைக் கொண்டு வந்தது சிங்கள மொழி, மத, பண்பாட்டு, அரசியல் ஆதிக்கத்தை நிலைப்படுத்தியதன் காரணமாய் சிறீமாவோ பண்டார நாயகாவின் முகம் சர்வதேச அளவில் சர்வாதிகாரத்தின் கோரமுகமாக ஆகியிருந்தது. தானொது இனச்சமத்துவம் பேணுபவர், சனநாயகவாதி என்ற புதிய முகத்தை மாட்டிக் கொள்ளும் தேவையில் கொழும்பில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தி, பெயர்வாங்கிக் கொள்ள நினைத்தார். தமிழ் வளர்த்த யாழ் மண்ணில் தமிழர்கள் தங்களின் தலைநகரில் அம்மாநாட்டை நடத்தியே தீருவோம் எனப் போராடி வெற்றி பெற்றார்கள். அந்த வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாத சிரிமாவோ பண்டாரநாயகா ஒன்பது தமிழ் உயிர்களை மாநாட்டு அரங்கிலேயே கொன்று களிப்படைந்தார்.

eelam_thamil_agathy_358.jpg

“அன்று பண்டார நாயகா இருந்த நிலையைப் போல இராசபக்ஷே இன்று பன்னாட்டுஅளவில் முகமிழந்து போயிருக்கிறார். அங்கு நடக்கும் கொடுமைகளை விசாரிக்க பன்னாட்டு அவை(ஐ,நா) முயலும்போது அதைக் கூட மோசமான முறையில் தாக்கி மூடச் செய்த அரசாக அவருடைய அரசு அமைந்திருக்கிறது. புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள், பன்னாட்டு எழுத்தாளர்கள் ஆகியோரைக் கொழும்பிற்கு அழைத்து அவர் மாநாடு நடத்துவதற்குக் காரணமே தான் மனித உரிமைகளை மதிப்பவன் என்று ஒப்பனை செய்து பன்னாட்டு அரங்கில் காட்டிக் கொள்ளத்தான்’’ என்று மூத்த ஈழ எழுத்தாளர் எஸ்.பொ கூறுவது உண்மை.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை கொழும்பிலே நடத்த வேண்டுமென சிரிமாவோ முனைப்புச் செலுத்தியபோது, மறுப்புக் காட்டாமல் அதற்கு முட்டுக்கொடுத்தவர் கா.சிவத்தம்பி. அதனால் யாழ் நகரில் 1974ல் நடைபெற்ற மாநாட்டில் சிவத்தம்பி பங்கேற்கவில்லை என்று உண்மையையும் இங்கு கருதிப் பார்க்க வேண்டும். அந்த சிவத்தம்பிதான் இப்போதும் கொழும்பு மாநாட்டுக்கு முன்னிலைப் படுத்தப்படுகிறார்.

சிங்கள அரசை நம்பி ஒருபோதும் காரியம் ஆற்றக்கூடாது என்பதை உலக நாடுகள் பல உணர்ந்துள்ளன. உலக நாடுகள் உணர்ந்த அளவு கூட ஈழத் தமிழர்கள் குறிப்பாய் கொழும்புத் தமிழர்கள் உணரவில்லையோ என்கிறபோது, ரணமாகக் காந்துகிறது. சிங்கள அரசை நம்பி இது போன்ற காரியங்களை முன்னெடுக்கிறார்கள் என்றால் உள்ளறுப்பு வேலைகள் செய்கிறவர்கள் யார் என்ற கேள்வி சரியே.

இன்றைய தகிக்கும் நிலையில், தமிழர் கோருவது தமிழை வளர்ப்பது அல்ல; தமிழை வளர்ப்பதற்கான அரசியல் அதிகாரத்தையே. சிங்களத்துக்கு சமமாகத் தமிழ் என்று நிறுவுவதற்கான அரசியல் அதிகாரத்தைக் கேட்பதே முதன்மைப் பணியேயன்றி உலகத்துக்கும் மேலாகத் தமிழைக் கொண்டு செல்லும் பணி அல்ல. அதைச் செய்வதாகக் கூறித்தான் 350 கோடி செலவில் செம்மொழி மாநாடு எல்லா ஒப்பாரிகளையும் பாடி முடித்துவிட்டதே! மொழி வளர்ச்சிக்கு அரசியல் உரிமையே முதற்தேவையாகும் என்பதை எவரும் உணர்வர். ஆட்சியில், நிர்வாகத்தில், கல்வியில், வேலை வாய்ப்பில் எல்லா இனங்களின் வாழ்வையும் நிர்ணயிப்பதில் சிங்களம் எதனால் சாத்தியமாயிற்று? அரசியல் மேலாண்மையில்தான். சிங்களத்திற்கு சமமாக தமிழ்மொழியை வளர்ச்சி செய்ய வேண்டுமெனில் மொழி வளர்ச்சிக்கு முன்னிபந்தனையாய் ஈழத்து மண்ணில் அரசியல் அதிகாரம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அரசியல் பற்றி எண்ணிப் பார்க்காமல் மொழி வளர்ச்சிக்கு தலைகொடுக்கப் போகும் வித்தையை எவ்வாறு செய்யப் போகிறார்கள்?

தமிழர் பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல் என்ற போர்வையில் ராஜபக்ஷேக்கள் வேறொரு காரியத்துக்கு வழிவகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அடிமைச் சமூகமாக ஆக்கப்பட்ட தமிழினத்தை - சிங்கள இனக் கரைப்பில் செலுத்துவதுதான் அது. தமிழ் மக்களுக்கு இப்போது தேவைப்படுவது அதிகாரமல்ல; அபிவிருத்திதான் என்று மொழி வளர்ச்சிக்கு வழி அமைப்பதுபோல் காட்டுவதும் ஒரு உத்தியாகும்.

“வளர்ச்சியை விரும்புகிற ஒரு தேசிய இனம் முதலில் தனது சுதந்திரத்தைப் பெற வேண்டும். அவர்களுடைய தேசிய சுதந்திரம் இரண்டாம் பட்சம் என மற்றவர்கள் அவர்களுக்குக் கூறுவது தேவையற்ற வேலை’’ என்று ஒரு சமயத்தில் போலந்து பற்றி காவுட்ஸ்கிக்கு மார்க்ஸும் ஏங்கல்ஸும் எழுதினார்கள்.

அயர்லாந்திலுள்ள நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற அமைப்பு அளித்த டப்ளின் அறிக்கை “போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இலங்கை அரசு, சூலை 2006-ல் போர் தொடங்கிய நாள் முதல் ஏப்ரல் 2009 வரை அய்க்கிய நாடுகள் அவையின் ஆவணங்கள்படி, வான்வழித் தாக்குதல், கனரக ஆயுதத் தாக்குதல், காரணமாய் நாளொன்றுக்கு 116 பேர் கொல்லப்பட்டனர். இறுதிச் சில நாட்களில் மட்டும் 20000 பேர் கொல்லப்பட்டதாக பிரெஞ்சு, பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டன’’ என முன்வைக்கிறது. அதன்படி சூலை 2006 முதல் ஏப்ரல் 2009 வரை கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரம். அதன் பின் 20000 என்றால் ஒரு லட்சத்து 42 ஆயிரம். ஆனால் கடைசி நாட்களில் கொல்லப்பட்ட மக்கள், போராளிகளின் எண்ணிக்கையையும் கணக்கிட்டால் இரண்டு லட்சம் பேர் என்று வருகிறது.

இதன் காரணமாக மட்டுமல்ல எல்லாக் காரணங்களின் படியும் “இலங்கை அரசிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே தமிழர்களுக்கு ஏற்புடையது. பன்னாட்டுச் சட்டதிட்டங்களின்படி, இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனிநாடு ஒன்றை உருவாக்கிக்கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும்’’ என மனித உரிமையாளரும், பேராசிரியருமான பிரான்சிஸ் பாய்ல் கூறியுள்ளார்.

இவ்வாறான சிந்தனைகளால் வார்க்கப்பட்டு, வழி நடக்கும் புலம்பெயர் ஈழர்களை தடம் மாறச் செய்ய – மொழி வளர்ச்சி, கலை, இலக்கிய வளர்ச்சி என்ற பெயரில் கொழும்புத் தமிழர்கள் முயலுகிறார்கள். இதனை இராஜபக்ஷேயிசத்தின் இன்னொரு பக்கம் என்கிறோம். தடம் மாறுதல் ஆபத்தானது. ஆசிய தடகளப்போட்டி நடைபெற்றபோது, ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவதாய் வருவார் என எதிர்பாக்கப்பட்ட ஒரு இந்திய வீராங்கனை முதல் சுற்றின் இறுதியில் தடம் மாறி ஓடியதால், தகுதி இழந்தவராய் ஆக்கப்பட்டார். என்ன இப்படிச் செய்துவிட்டாயே என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வருத்தப்பட்டதாகக் கூறுவார்கள். அதுபோல் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களை மொழிவளர்ச்சி, கலை, இலக்கிய மேம்பாடு என்று தடம் மாற்றி ஓட வைக்கும் பொறுப்பு கொழும்புத் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தமிழர் கோருவது மொழி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி அல்ல என்பதை, ஈழத்து அரசியல் ஆய்வாளர் தனபாலா முன்வைக்கிறார். “தமிழர் கோருவது அபிவிருத்தி செய்வதற்கான அரசியல் அதிகாரத்தைத் தான். அதைத்தான் நாம் தீர்வு என்கிறோம். அதாவது நாம் அபிவிருத்தியை நிராகரிக்க வில்லை. எமது வாழ்நிலை, பழக்க வழக்கம், பண்பாடு என்பவற்றிற்கு இசைவான அபிவிருத்தியை நாம் செய்வதற்கு எமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்று கோருகிறோமே தவிர, தமிழினத்தைச் சிங்கள இனமாகக் கரைப்பதற்கு ஏதுவான பண்பாட்டுக் கொலையைச் செய்யவல்ல சிங்கள மேலாதிக்க அரசியல் ஆதிக்கத்தை அல்ல; இங்கே இலங்கை அரசு ஒடுக்கு முறையை இன்னொரு தளத்திற்கு அபிவிருத்தி என்ற அழகான வார்த்தைப் பிரயோகம் மூலம் இராசதந்திர ரீதியாக நகர்த்தியுள்ளது. எனவே அரசியலைப் பற்றிக் கதைக்க மாட்டோம்; அபிவிருத்தி பற்றி கதைப்போம் என்பது ஒடுக்குமுறைக்கான இன்னொரு பெயராகும்” (பொங்கு தமிழ் இணையம் - 23.7.2010)

அரசியல் பற்றி உதடு பிரிக்காமல், மொழிவளர்ச்சி, கலை இலக்கிய மேம்பாடு என்ற உச்சாடனம் செய்து, ஒடுக்கு முறைக்கு துணை போக ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்பது தெளிவாய்ப் புலப்படுகிறது; அதுவும் இராசபக்ஷேக்கள் மீதான போர்க்குற்ற விசாரணை தீவிரப்பட்டுக் கொண்டிருக்கிற வேளையில் உலக அளவில் அதனை உடைக்க எடுக்கும் முயற்சிக்கு இந்த நேரத்தில் அறிவூஜீவிகளின் ஒன்றிப்பு தேவைப்படுகிறது. இந்த வகைச் செயல்பாட்டுக்குள் கண்டு கொள்ள முடியாதவகையில் ஒளிந்து கொண்டுள்ளது சிங்கள ராசதந்திரம்; அரசியல் மேலாண்மையில் இருப்பவர்கள் அறிவுச் சூழ்ச்சியிலும் மேலாண்மை கொண்டிருப்பார்கள். அந்தச் சிங்களர் ஒருபோதும் “மோட்டுச் சிங்களர்” (முரட்டுச் சிங்களர்) அல்ல; அடிமைச் சமூகமாக்கப்பட்ட நாம் தான் முட்டாள்களாக இருக்கிறோம்.

இந்திய அரசும் இலங்கை அரசும் கை கோர்த்து நடத்திய திரைப்பட விழாவைத் தோல்விகாணச் செய்த தமிழர் ஒற்றுமை நமக்கு ஒரு முன்மாதிரியாகும். இந்த ஒற்றுமை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிக்கவும் அவசியப்படும் தருணமிது. குறிப்பாக தமிழக எழுத்தாளர்களை, புலம்பெயர் எழுத்தாளர்களை அழைக்கிறோம். நடைபெறப் போகும் கொழும்பு மாநாட்டில் நிச்சயமாக நாங்கள் இல்லை என்போம்.

- பா.செயப்பிரகாசம் ( jpirakasam@gmail.com)

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10747:2010-08-31-01-30-13&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சிலர் உலக தமிழர்கள் ஈழதமிழர் அழிவின் போது அனைவரும் சாப்பிடாமலா இருந்தார்கள் ..பெண்டு திரியாமலா இருந்தாரகள் என கேள்வி கேட்பார்கள்... இயற்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு இவர்கள் உதாரணம் வேறு... அட தாயோளிகளா போராடுகின்ற புலிகள் கூட இயற்கை உபாதை என்றால் ஒண்ணுகடித்துவிட்டு தான் சண்டை செய்வார்கள்... செய்திருப்பார்கள்... எதை எதை உதாரணம் காட்டுவது என்று ஒரு விவஸ்தை கிடையாது???

உதாரணம் சொல்கின்ற இவர்களும் அவ்வாறு தான் இருந்தார்கள் ஒன்றும் கண்ணீர் வடித்து லிட்டர் லிட்டராக கொட்டவில்லை.... அல்லது மட்டைக்கு ரெண்டாக கிழிக்கவில்லை... இதெல்லாம் ஒரு உதாரணம்... இப்போ ராக்சபட்செ கமல் விஜய் படம் காட்டுரானாம் ... அதனால் அமைதி வந்துவிட்டதாம்... அதனால் கலந்து கொள்ளூவதில் தவறு இல்லையாம்.... வியாக்கானம் வேறு.... அவன் படம் காட்டுவதை விட இவர்கள் காட்டும் படம் ஸ் அப்பா...

215.gif

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகர தமிழ்த்தேசியனின் கருத்துக்கு பச்சை குத்தியுள்ளேன்.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைக் கொச்சைப்படுத்துவது இழுக்கு

வாகுலன் - netcomment.

கொழும்பில் 2011 ஜனவரியில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த மகாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் தமிழ் நாட்டிலிருந்து எழுகின்றது. இலங்கையின் இனப்பிரச்சினையைக் கையாளத் தெரியாமல் நந்தவன ஆண்டியைப் போலப் போட்டுடைத்துத் தமிழ் மக்களை அவல நிலைக்குத் தள்ளியவர்களுக்குத் துதிபாடியவர்களே புறக்கணிப்புக் கோரிக்கையை முன்வைக்கின்றார்கள். இலங்கைத் தமிழ் எழுத்தாளர் என்ற முத்திரையைக் குத்திக்கொண்டவர்களும் இருவர் இந்தக் கூட்டத்தில் உள்ளனர். இவர்கள் இலங்கை மண்ணில் காலடி வைத்துப் பல தசாப்தங்கள் ஆகிவிட்டது.

இலங்கையில் எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் வாழ்கின்றது. நல்ல தமிழ் வாழ்கின்றது. எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் தமிழுக்கு விழா எடுக்கவும் தமிழின் வளத்தைப் பேணி வளர்க்கவும் இலங்கை வாழ் தமிழர்கள் பின்னிற்பதில்லை. இலங்கையில் வாழ்பவர்களும் புலம் பெயர்ந்தவர்களுமான இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் கூட்டு முயற்சியாகச் சர்வதேச தமிழ் எழுத்தாளர்களின் மகாநாடொன்றை இலங்கையில் நடத்துவதற்குத் தமிழகத்திலிருந்து ஏன் எதிர்ப்பு வரவேண்டும் என்பது விளங்கவில்லை.

இதுபோன்ற மகாநாடுகள் தமிழகத்தில் மட்டுமே நடைபெற வேண்டுமென்ற மேலாதிக்க மனோபாவம் காரணமா? அல்லது இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை இரண்டாந்தரமானவர்கள் எனக் கருதும் மனோபாவம் காரணமா?

மகாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பவர்களே இலங்கையில் தமிழ் அழிந்துபோகின்றது என்று அடிக்கடி கூச்சல் போடுகின்றார்கள். தமிழை அழியவிடாமல் காப்பது மட்டுமன்றித் தமிழை வளர்ப்பதும் இலங்கைத் தமிழ் மக்களின் பேரவா. இதற்காக எத்தனையோ விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. இவை போன்றதே சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடும்.

புறக்கணிப்புக் கோரிக்கையை முன்வைப்பவர்கள் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் விழாக்களை வந்து பார்க்க வேண்டும். அங்கு பேசப்படும் நல்ல தமிழைக் கேட்க வேண்டும். தமிழ் மொழியை வளர்ப்பதில் இலங்கைத் தமிழ் மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தை அப்போது இவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

உடன் பிறப்புகள் என்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் ஒரே குடும்பம் என்றும் அடிக்கடி பேசும் தமிழகப் பிரமுகர்கள் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களைத் தனிமைப்படுத்துவது வேடிக்கையாக இருக்கின்றது.

தமிழ் மொழியை வளர்ப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் வேறெந்தத் தமிழ் எழுத்தாளர்களிலும் பார்க்க எவ்விதத்திலும் குறைந்தவர்களல்ல. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை நடத்துவதற்கு இலங்கைத தமிழ் எழுத்தாளர்களுக்கு உள்ள உரிமையை எவரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது.

தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் அனைவரும் அரசியல் வேறுபாடுகளுக்கும் இன, மத வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒன்றிணைந்து நடத்தவுள்ள இந்த மகாநாட்டைக் கொச்சைப்படுத்துவது தமிழகப் பிரமுகர்களுக்கு இழுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடத்தக் கூடாது சரி அதே நேரத்தில் இந்தியாவிலும் நடத்தக்கூடாது :lol:

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைக் கொச்சைப்படுத்துவது இழுக்கு

தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் அனைவரும் அரசியல் வேறுபாடுகளுக்கும் இன, மத வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒன்றிணைந்து நடத்தவுள்ள இந்த மகாநாட்டைக் கொச்சைப்படுத்துவது தமிழகப் பிரமுகர்களுக்கு இழுக்கு.

பாண்டண்ணா, உங்களுக்கே தெரியும் இந்தக்கூத்துக்களை யார் ஒழுங்கு செய்வதென்று!!! ஆமா, இக்கூத்துகளுக்காக தலை கீழாக எல்லாம் நடக்கப்பார்க்கிறீர்களுங்கோ ... அங்கை தமிழர்களுக்கு தற்போது பிரட்சனை இல்லை, தமிழர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று காட்டுவதற்கு!!! ... என்னா சாந்தோசம்???????

  • கருத்துக்கள உறவுகள்

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=299123&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

மாநாடு நடாத்தப்படுபவர்களின் நோக்கம் நல்லதாக இருந்தாலும் இலங்கையில் நடாத்தப்படுவது சிங்கள அரசின் இனப்படுகொலையை மூடி மறைக்க நாமே முண்டு கொடுப்பதாக தான் இருக்கும்.ஏற்கனவே கருணாநிதி தனது பணபலத்தை காட்ட நடாத்திய ஆராட்சி(??) மாநாடு 80 மில்லியன் தமிழ் மக்களையும் அடுத்த மட்டத்துக்கு கொண்டு வந்து விட்டது. :lol::wub:

இலங்கை தமிழன் இன செத்த வீட்டை தவிர வேறை எதையும் செய்யக் கூடாது! அந்த சனம் இனி என்ன செய்தாலும் அதிலை அரசியலை செய்து என்ன பிரியோசனம்? நீங்கள் உதுக்குளாலை வெளியலை வரும் மட்டும் தாயகத்திலை தமிழனுக்கு ஒரு விடிவும் கிடையாது. 30 வருட போர் அதிலை ஆமைகள் போலை 6மணிக்கு உள்ளை போய் காலை 8 மணிக்கு வெளியிலை வநடத சனங்கள் வங்கடை வாழ் நாளை பயத்திலையே கழிச்சுதுகள். இப்பதான கொஞ்சம் அப்படி இப்பிடி என்று ஏதோ இந்தமாதிரி சின்ன சின்ன சந்தோசங்கள். அதையும் குழப்ப இந்நத தென்னிந்திய திரைப்படச்சங்களம். மே 19 களோபரங்கள் நடக்கேக்கை ஒரு 3மாசம் கோடம்பாக்கத்தை இழுத்து மூடியிருக்கலாம் தானே? அப்பிடி செய்திருந்தால் ஏதாவது ஒரு பலனாவது கிடைச்சிருக்கும். சும்மா சாட்டுக்கு குந்தி எழும்பி போட்டு நாங்கள் எப்பவும் சாவீடு கொண்டாட வேணுமாம். அட போங்கடா நீங்களும் உங்கடை உழுத்துப்போன போராட்டமும். வாயிலை அடிச்சு சொல்ல அப்பவும் கேக்கேல்லை இப்பவும் இப்பிடி..

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை தமிழன் இன செத்த வீட்டை தவிர வேறை எதையும் செய்யக் கூடாது! அந்த சனம் இனி என்ன செய்தாலும் அதிலை அரசியலை செய்து என்ன பிரியோசனம்?

நான் இதில எழுதுவதால் என்ன வரப்போகுது , ஆனால் இதைபார்த்த பிறகு இரண்டு வரி போடுவம் என்று...

இலங்கையில் அல்லது ஸ்ரிலகங்கவில் இன்னும் தமிழ் காதைகிற சனம் இருக்குது.. அதுகளுக்கு என்று ஏதும் கூடி செய்தா அதை குறை பிடித்தால் எங்களுக்கும் அவர்களுக்குமான இடைவெளி கூடுமே தவிர குறையாது. இது தொடர்பாக பலரும் எழுட்தியிருந்தாலும் எனக்கும் சரி என்கிற விடயத்தை, ஓரிடத்தில் கரும்பு பாவித்திருந்தார் , இதில் உள்ள ஒரு (ஒரேஒரு) பிரச்சனை "சர்வதேச" தமிழ் விழா என்று போட்டதுதான். அந்த சர்வதேசத்தை எடுத்தால் எல்லாருக்கும் ஓகே. ஏனெனில் கொழுப்பில் தமிழ் ஆட்கள் செய்யாத விழா அல்லது செயற்பாடு ஏதாவது உண்டா? இங்கே புலம் பெயந்த தமிழர்களை விடவும் வெற்றிகரமாக வாழுகிற பல தமிழர் அங்கே உண்டு. எனவே இந்த சர்வதேசம், எதோ முழுதமிழர்களையும் பிரதிநிதுவத்துவதாக அவர்களும் காட்ட கூடாது, அப்படி காட்டுகிறார்கள் என நாங்களும் கருத தேவையில்லை. எதோ நாலு பேர் சேர்ந்து கூட்டம் போடுகிறார்கள், அந்தளவில் விட வேண்டியது. அதைவிட்டு, இதை வைத்து சிங்களவன் அது செய்வான் இது செய்வான் என்றால், அவன் எதுதான் செய்யமாட்டன் அல்லது எதுதான் செய்யவில்ல?

இதை அதை நடத்துரவர்களும் கவனித்தால் நல்லம். மற்றது இதைவைத்து ஆள் ஆள் சண்டை போடுவதுதான் நாங்கள் பிளவு பட்டிருக்கிறோம் என்பதை கட்டுமே தவிர..வேறு எதற்கும் உதவாது.

தோழர் வரட்சி, கையுக்கு வந்தகணக்கு எதையும் எழுதிவிட்டு செல்வது இலகு. ஒருபக்கம் சார்ந்து கருத்து எழுதுவது அல்ல எனது நோக்கம். குறிப்பிட்ட மகாநாட்டின் அமைப்பாளர் என்ன கூறுகின்றார் என்பதையும் சற்று காதுகொடுத்து கேளுங்கள் தோழர்.

நான் நினைக்கின்றேன் இங்கு.. "சர்வதேச" எனும் பதம் பயன்படுத்தப்பட்டதே பலருக்கு வயிற்றினுள் புளியைக் கரைத்து ஊற்றுவதுபோல் உள்ளது என்று.

தமிழ்த் தேசியத்தின் பெயரால், தமிழ்த்தேசியத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட ஒரு சிலரினால் செய்யப்படும் அடாவடித்தனங்களில் - Bullying ஒன்றாகவே இந்தப் புறக்கணிப்புக்களை நான் பார்க்கின்றேன்.

புறக்கணிப்பு என்றால் boycott ,bullying அல்ல.புறக்கணிப் என்பது மக்களின் ஜனனாயகப் போரட்டங்களின் ஒரு வடிவம்.பல பேர் புறக்கனிப்பிற்கான காரணங்களை பலவாறாக விளக்கிய பின்னும் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை.இந்த மா நாட்டின் லண்டல் ஏற்பாட்டாளர் இராஜேசுவரி ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்தவுக்காகத் தேர்தல் பிரச்சாராம் செய்தவர்.இவர்கள் எல்லோரும் சேர்ந்து நாடாத்தும் விழாவுக்கு அரசியற் பின்னணி நோக்கம் இல்லை என்று வாதிடுவது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது.

  • தொடங்கியவர்

புறக்கணிப்புக்களுடன் நின்று விடுவது புறக்கணிப்பாளர்களின் வேலையாக இருக்க முடியாது. அதற்கான மாற்று வேலைத்திட்டங்களை முன் வைக்க வேண்டும் , முன் நகர்த்த வேண்டும், முன் கூட்டியே யோசிக்க வேண்டும்.

இன்னும் பல மா நாடுகள் அரங்கேற முன்னர் நாமும் சிந்திக்க வேண்டும்.

போரின்போது பணிபுரிந்த ஊடகவியலாளர்களை அழைத்து சர்வதேச ஊடகவியாலர்களையும் அழைத்து சேர்ந்து கூட்டம் வைப்பதுடன் தமிழர்கள் அவர்கலை கெளரவிக்க வேண்டும்.

போர்க்கால பதிவுகளை பதிவாக்க எழுத்தாளர்களை ஒன்றிணைத்து ஏதாவது செய்யவேண்டும்.

இதனை இந்தியாவில் உள்ள ஆர்வலர்கள் செய்யலாம் அல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் எல்லாம் செய்ய கூடாது தோழரே!!.... சைடு கெப்பில் பகத்பாஸ்பர்... குப வீ.. போன்ற கோஸ்டிகளும் நாங்களூம் தமிழர்கள்தான் என நாதஸ்வரம் வாசித்து கொண்டு பின்னால் வந்து விடுவார்கள்...

1900.gif

அதிலும் நக்கீரன் காமராஜ் கோஸ்டிகளை பற்றி சொல்லவே வேண்டாம்... மேலும் செம்மொழியாம் கனிமொழி... மற்றும் அவரது தோழிகள் சல்மா.... தமிழச்சி தங்காத பாண்டியன்.... என்று எல்லாம் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள்

முதலில் யாரும் தமிழக அரசியலை இழுக்க கூடாது என்றாலும் இழுத்து வந்துவிடுவார்கள்...

மலேசியா அது கூட வேண்டாம்... இவன் கெ.பி கைதுக்கு உதவியன் ... அல்லது அவராக கைதானாரா என்பது என தெரியாது...ஆனாலும் சிக்கல் தீரும் வரை அவசரபடுதல் கூடாது

தென்னாப்பிரிக்கா ... இது ஒரளவுக்கு பரவாயில்லை.. :lol:

கனடா ... ரொம்பசரி ... அனைவரும் கலந்து கொள்ளுவார்கள் :wub:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

தாமதமாக வேலைக்கு வந்த ஊழியாரிடம் மேலதிகாரி கேட்டார் ஏன் வேலைக்கு தாமதம் என்று அதற்கு ஊழியர் சொன்னார்

'வேலைக்கு வரும் வழியில் புகையிரத தரிப்பிடத்தில் ஒருவர் 100 ரூபாவை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருந்த்தார்..

ஊழியர் முடிக்குமுன் மேலதிகாரி குறுக்கிட்டு

ஓ!! கருணை வள்ளல் அந்த்த நுறு ரூபாவை தேடிக்கொடுத்தீராக்கும் என்றார்,

அதற்கு

இல்லை இல்லை நான் அந்த ரூபா நோட்டின் மீது நின்று கொண்டு பணத்தை தொலைத்தவர் போகும் வரை காத்திருந்த்தேன் அதுதான் வேலைக்கு தாமதம் என்றார்.

இங்கு சிங்களத்தின் குலிகள் பலர் எதோ தாம் பாதிக்கப்பட்ட மக்களிற்கு பேசுவதாக காட்டிக்கொள்வதனை வழக்காக கொண்டுள்ளனர்

போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் இவர்கள் ஆபத்தானவார்கள்

தங்களுடைய வாக்கு 100 க்கு 100 சரி தோழர் வசி... :lol:

கொழும்பில், 'சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு': யாரைத் திருப்திப்படுத்த..?

'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம்

சில விடயங்களை நாம் முன்னர் பார்த்தது போன்று இப்போது பார்க்கவும் முடியாது, சில விடயங்களை முன்னர் விவாதித்தது போன்று இப்போது விவாதிக்கவும் முடியாது. புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் சிக்கலான நிலைமை இது.

இந்த பின்புலத்தில்தான் கொழும்பில் நடைபெறவிருப்பதாக கூறப்படும் 'சர்வதேச எழுத்தாளர் மகாநாடு' தொடர்பான கண்டனங்கள் குறித்து பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்த மகாநாடு தொடர்பாக எதிர்க் குரல்கள் எழுப்புவோரின் வாதம், இது கொழும்பின் நிகழ்சி நிரலின் கீழ் இடம்பெறுவதாகவும் எனவே இதனை புறக்கணிக்க வேண்டும் என்பதாக இருக்க, மறுபறத்தில் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களோ இது தமது சொந்த முயற்சியில் மேற்கொள்ளப்படும் செயற்பாடு என்றும் தம்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சிலர் சுமத்த முற்படுவதாகவும் கூறுகின்றனர்.

இது தொடர்பாக முதலில் ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் 'எஸ்.பொ' எனப்படும் எஸ்.பொன்னுத்துரையே எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இது ஒரு அரசசார்பு செயற்பாடு என்னும் வகையிலான அறிக்கைகள் வெளியாகின. இவர்கள் இவ்வாறு கூறுவதை மட்டுமே வைத்துக் கொண்டு இது ஒரு அரசிற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுதான் என்ற முடிவுக்கு ஒருவர் வந்துவிட முடியாது. எனவே அவ்வாறான சந்தேகங்களின் உண்மைத்தன்மை குறித்து முதலில் பார்ப்போம்.

விடுதலைப் புலிகளின் அழிவுக்கு பின்னர் தமிழ் அல்லது தமிழர் என்ற நிலையில் இலங்கைத் தீவில், அரசின் மேற்பார்வை அல்லது ஆதரவு இன்றி எந்தவொரு நிகழ்வும் நடைபெற முடியாது அதிலும் குறிப்பாக கொழும்பில்.

அடுத்து இந்த மகாநாட்டுடன் தொடர்பானவர்கள் என புலம்பெயர் சூழலில் வெளிக்காட்டப்பட்ட நபர்களான அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த நோயல் நடேசன், இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசும்பிரமணியம் போன்றவர்கள் சமகால அரசின் ஆதரவாளர்கள் என்பது இரகசியமான ஒன்றல்ல. :lol:

முள்ளிவாய்க்கால் இரத்தம் காய்வதற்கு முன்னரேயே கொழும்பின் ஏற்பாட்டின் கீழ் இவர்கள் அடங்கிய குழு வடகிழக்கின் பல இடங்களுக்கு பயணம் செய்து அங்கு நிலைமைகள் அப்படியொன்றும் மோசம் இல்லை என்பதாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அத்துடன் தடுப்பு முகாம்களில் உள்ள வன்னி மக்கள், வெளியில் உள்ளவர்கள் சொல்லுவது போன்று மோசமாக நடத்தப்படவில்லை, அரசு அவர்களுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

அந்தச் சூழலில் பல்வேறு சர்வதேச அமைப்புக்களும் கொழும்பின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தன. இந்த பின்புலத்தை கருத்தில் கொண்டு பார்த்தால் இது அரச நிகழ்சிநிரலின் கீழ் நடைபெறும் நிகழ்வு என்ற பார்வை சரியானதே! இந்தச் குற்றச் சாட்டை முன்னிறுத்தி வெளிவரும் கண்டனங்களும் சரியானதே ஆகும்.

இந்த இடத்தில் பிறிதொரு கோணத்திலும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஏன் அரச ஆதரவுடன் நாங்கள் ஒரு எழுத்தாளர் மகாநாட்டை நடாத்தினால் என்ன? அதில் தலையிட நீங்கள் யார்? ஒருவர் இவ்வாறு நம்மை நோக்கி கேள்வி எழுப்பினால் நமது பதில் என்னவாக இருக்கும்.

இந்தக் கட்டுரையின் பதில் நடத்தலாம், அரசுடன் இணைந்து செயற்படலாம் என்பதாகும் ஆனால் அதனை நேர்மையாகச் சொல்லக் கூடிய வெளிப்படைத்தன்மையும் [Transparency] அது தொடர்பில் மற்றவர்களுக்கு பொறுப்புக் கூறக் [Accountability] கூடிய தன்மையும் உங்களிடம் இருக்க வேண்டும் என்பதை இந்தக் கட்டுரை எதிர்பார்க்கிறது.

அவ்வாறான வெளிப்படைத்தன்மை இல்லாத போதுதான் இவ்வாறான நிகழ்வுகள் குறித்து சந்தேகங்களும் குற்றச்சாட்டுக்களும் வெளிக்கிளம்புகின்றன.

அடுத்தது, ஒரு எழுத்தாளர்களின் நிகழ்வு என்ற வகையில் இது பிறிதொரு அவதானத்திற்கு உரியதாகிறது.

ஒரு எழுத்தாளன், கலைஞன் என்பவன் யார்? இதற்கு ஒவ்வொருவரும் தத்தமது கருத்து நிலையில் இருந்து பதில் அளிக்கக் கூடும்.

ஒருவர் சொல்லக் கூடும், தன்னைச் சுற்றி நிகழும் ஒடுக்கு முறைக்கு எதிராக தனது படைப்பு சார்ந்து குரல் கொடுப்பவர்களே எழுத்தாளர்கள் ஆவர். தான் நிலைகொண்டுள்ள புறச் சூழல் அனுபவங்களை உள்வாங்கி தனது காலத்தின் சாட்சியாக இருப்பவனே படைப்பாளி என்று இன்னொருவர் சொல்லக் கூடும்.

காய்த்தல் உவத்தல் இன்றி கலை நேர்த்தியுடன் தனது சூழல்சார் அனுபவங்களை தனக்கே உரித்தான அழகியல் நேர்த்தியுடன் பதிவு செய்வர்கள் அனைவரும் படைப்பாளிகளே, இதில் நீதி, கொள்கை, அரசியல் என்பதெல்லாம் படைப்பை அணுகுபவர்களின் பிரச்சனை என்றும் ஓரு சாரார் வாதிடலாம்.

இந்த வகைமையில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது நமது நிலைப்பாடு, நாம் சார்ந்து நிற்கும் கருத்தியல் என்பவற்றுடன் தொடர்பான ஒன்று. இதில் எதனையும் ஒருவர் சார்ந்திருக்க முடியும், அது அவரின் சுயாதீனத்திற்கு உட்பட்டது.

ஆனால் ஒருவர் எதனைச் சார்ந்திருந்தாலும் ஒரு எழுத்தாளருக்கே உரித்தான சமூகத்தின் பாலான தார்மீக பொறுப்பு, நீதியின் பாலான கரிசனை, ஒடுக்கு முறைக்கு எதிரான தார்மீக கோபம் இவற்றிலிருந்து எந்தவொரு எழுத்தாளரும் விலகிச் செல்ல முடியாது. அவ்வாறு விலகிச் செல்பவர்கள் தனது காலத்திற்கு விசுவாசமான எழுத்தாளரும் அல்ல.

இந்த வகையில் கொழும்பில் நடைபெற இருப்பதாகச் சொல்லப்படும் இந்த சர்வதேச எழுத்தாளர் மகாநாட்டை ஒழுங்கு செய்திருக்கும் எழுத்தாளாகள் என்பவர்கள் மற்றும் அதில் பங்கு கொள்வதை பெருமையாகக் கருதும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்போர் எழுத்தாளர்களுக்குரிய தார்மீக பொறுப்பிலிருந்து விலகிச் சென்றிருப்பவர்களாகவே கருத வேண்டியுள்ளது.

விடுதலைப் புலிகள் மீது எத்தகைய விமர்சனங்களும் ஒருவருக்கு இருக்க முடியும், ஆனால் விடுதலைப் புலிகள் மீதான எந்தவொரு விமர்சனத்தாலும் முள்ளி வாய்க்காலில் நமது மக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்திவிட முடியாது.

விடுதலைப் புலிகளின் போராளிகள் சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்திவிட முடியாது. விடுதலைப் புலிகள் பெண் போராளிகளை மானபங்கப்படுத்தி கொலை செய்ததை நியாயப்படுத்தி விட முடியாது. தொடர்ந்தும் நமது வன்னி மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை நியாயப்படுத்திவிட முடியாது.

இவைகள் பற்றியெல்லாம் ஒரு வார்த்தைதானும் பேச முடியாத சர்வதேச எழுத்தாளர் மகாநாட்டில் ஒரு எழுத்தாளர் பங்கு கொள்வதன் தார்மீக பொறுப்பு என்ன, தார்மீக நியாயம் என்ன? ஆகக் குறைந்தது இது குறித்து ஒரு கண்டனத்தைக் கூட தெரிவிக்க முடியாத இந்த மகாநாட்டின் அடிப்படை என்ன? தார்மீக நெறி என்ன?

2009, மே18க்கு பின்னர், ஈழத் தமிழர்களின் அரசியல் பூச்சிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம், நமது எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கும் பூச்சியமே நம் முன் பதிலாக இருக்கலாம், நிச்சயமின்மையும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் மட்டுமே நம்மை சூழ்ந்திருக்கலாம். நாம் போக வேண்டிய திசை எது என்று கண்டு கொள்ள முடியாதளவிற்கு ஒரு வெறுமை நம்மை அலைக்கழிக்கலாம்.

ஆனால் இவைகள் எல்லாம் எந்தளவிற்கு உண்மையோ அந்தளவிற்கு தார்மீக பொறுப்பு, நீதியின் பாலான தேடல், இவைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமூகத்தின்பாலான அக்கறையாளர்களை விட்டு அகன்று விடுவதில்லை.

இதில் முதன்மையான பங்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள், கருத்துருவாக்கப் பிரிவினருக்கு உண்டு. அந்தவகையில் அவ்வாறானவர்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டியது காலக் கடமையாகும்.

இக்கட்டுரை குறித்த கருத்துகளை எழுத: arinanthan@gmail.com

http://www.puthinappalakai.com/

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளையெல்லாம் திருத்த முடியாது!

திருத்தம் என்பது மனிதர்களின் வாழ்விலேயே சாத்தியம்! சில மிருகங்களுக்கும் கூட அது சாத்தியம். ஆனால் இதுகளுக்கு அது அப்பாற்பட்டது.

தனிமனித புகழ்பாடல் என்பது தமிழ் பணி என்றாகிவிட்டு பணகொடையால் தமிழகத்தில்......

சிங்களவனே தமிழ் வளர்த்தான் மகிந்த ஐயா பண்ணிடையினார் என்றாகிவிடும் இலங்கையிலே....

அடுத்து இந்த மகாநாட்டுடன் தொடர்பானவர்கள் என புலம்பெயர் சூழலில் வெளிக்காட்டப்பட்ட நபர்களான அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த நோயல் நடேசன், இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசும்பிரமணியம் போன்றவர்கள் சமகால அரசின் ஆதரவாளர்கள் என்பது இரகசியமான ஒன்றல்ல.

... பாண்டரின் நெருங்கிய நண்பர்கள் இவர்கள்! அதிலும் ஒருவா, கண்ணாகியின் பக்கத்து வீட்டில் பிறந்தவர்! ஆண்களைக் கண்டாலே அலேஜியாம்!!?? கடந்த காலங்களில், ஐரோப்பிய நாடுகளில் இலக்கிய சந்திப்பு என்று இவர் போட்ட கலவைகளை, கதை கதையாக பாண்டர் சொல்லியிருக்கிறார். பிரதேசவாதத்தை கையில் எடுத்த இந்த எழுதியது என்று ஒன்றுமில்லாத எழுத்தாளர், ஓரிரு வருடங்களுக்கு முன் புலத்திலிருந்து ஒரு மாற்றுக்கருத்துக்குழு, யுத்தத்துக்கு முன் இலங்கை அரசின் அழைப்பில் கொழும்பு சென்றது, அப்போது இவர் மகிந்தவுடன் போட்டோவுக்கு போட்ட துள்ளல்களை போனவர்களே கதை கதையாக சொன்னார்கள் என்று பாண்டண்ணாவே சொன்னார். ... பாண்டண்ணா இப்போது மறுக்கப்போகிறீர்களா????

மற்றவரைப் பற்றி சொல்லத்தேவையில்லை மொத்தத்தில் பிரபல்யத்துக்காக அம்மணமாக உரிந்து விட்டுட்டு ஓடும் கோஷ்டியின் கூத்தே இந்த எழுத்தாளர் மாநாடு!!!

ஆமா, சரி இந்த எழுத்தாளர் மாநாட்டுக்கு, தமிழ் எழுத்தாளர்கள் எல்லோரும் ஆதரவளிக்க வேண்டும், சிறப்பாக நடந்து முடிய ஒத்துளைப்பு வழங்க வேண்டும், போகவேண்டும்/சரி போவார்கள் என்று வைத்துக்கொண்டு ... அங்கு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள், யுத்தக்குற்றவாளிகள், தமிழர்களின் இன்றைய நிலை, இனப்பிரட்சனைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக அங்கு கதைப்பார்களேயாயின் என்ன நடக்கும்??? அல்லது அவற்றைப்பற்றி கதைக்கவாவது அனுமதிப்பார்களா???

எழுத்தாளர்கள் தாம் சார்ந்த சமூகத்தின் அவலங்களை கதைக்க முடியாதா????

இவற்றுக்கு பதில் தர ஜனநாயகவாதிகளாக தம்மை காட்டிக்கொள்ளும் எம் இன தோன்றல்கள் பதிலளிப்பார்களா???? இவற்றுக்கு பதிலளிக்கட்டும், நாமும் பகிரங்கமாக இம்மாநாட்டு நடைபெற ஆதரவு தருகிறோம்!!!!!!!

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.