Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் கைகோர்த்து திரியும் இளம் காதல் ஜோடிகள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக பழக்க வழக்கங்கள் யாழ்ப்பாணத்துக்குள் ஊடுருவுவது என்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல. இன்று அது துரிதமாக நிகழும் ஏனெனில்.. புலம்பெயர்ந்த கூட்டத்தில் அநேகம் பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அவர்களின் தொடர்புகள் நெருக்கங்கள் அதிகரிக்க அதிகரிக்க.. அத்தோடு தென்னிலங்கையினரின் வருகையும் அதிகரிக்க..

மகிந்த சிந்தனை இலகுவாக இளையோர் மனதில் புகுத்தப்பட்டுவிடும்.

மேற்குலகில் இளைய சமூகம் அரசியல் பற்றியோ.. அல்லது அரசுகளின் நகர்வுகள் பற்றியோ சிந்திப்பதே இல்லை எனலாம். அந்தளவுக்கு பாலியலும் பப்பும் செல்வாக்குச் செய்கிறது. அல்லது செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒரு இனத்தின் விடுதலைக்காக பல அர்ப்பணிப்புள்ள நீண்ட போராட்டத்தை நடத்திய இளைய சமூகம் மீண்டும் மீண்டும் போராட்ட சிந்தனையில் இருக்க விரும்புவதை எதிரிகள் ஒருபோதும் அனுமதிக்கமட்டார்கள்.

அந்த வகையில் தான் யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்த்தப்படும் இசை நிகழ்ச்சி கலாசாரங்கள்.. சினிமா ஸ்ரார்களின் வருகைகள்.. கலாசார சீரழிவு அம்சங்களின் ஊக்குவிப்புக்கள் அமைகின்றன.

போராட்டத்தின் இயங்கு சக்தியாக மாணவர்களும் இளைஞர்களுமே இருந்தனர். இதனை சிங்களமும் பிற அந்நிய உளவாளிகளும் நன்கு அறிவர். அந்த மாணவ சமூகத்தின் இளைய சமூகத்தின் சிந்தனையை வேறு திசைப்படுத்துவதன் மூலமே போராட்டம் புத்துயிர்ப்பு பெறுவதை தடுக்க முடியும். அதுமட்டுமன்றி தமது அரசியல் குத்துவெட்டுக்களை எதிர்ப்புக்கள் இன்றி சாதிக்க முடியும்.

நாம் வெறுமனவே இதை யாழ்ப்பாணத்திற்கான ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு விமர்சித்துக் கொண்டிராமல்.. நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப அறிவும் பாவனையும் இளையோர் மத்தியில் வளர்க்கப்படும் அதேவேளை அதைப் பயனுள்ள வகைக்குள் வைத்திருப்பது பற்றி பாடசாலைகளூடு போதிக்கலாம். பாலியல் கல்வியை போதிப்பதும்.. பாதுகாப்பான உறவுகளும் பல பிரச்சனைகளை குறைக்க வழி செய்யும்.

பாடசாலைகளை வெளிநாடுகளில் உள்ள அவர்களின் பழைய மாணவ சங்கங்கள் அணுகி இதனை அமுல்படுத்தலாம். வெறுமனவே பழைய மாணவர்கள் வெளிநாடுகளில் குத்தாட்டமும் இந்திய சினிமா நட்சத்திரங்களை அழைத்து இரவு களியாட்ட நிகழ்வுகளும் நடத்திக் கொண்டிராமல்.. எமது சமூகத்தினை 21ம் நூற்றாண்டின் தேவைகள் நோக்கி தயார் படுத்தும் அதேவேளை எமது இனத்தின் நிலையை அதன் உரிமைக்கான தேடலை.. அது சாத்தியப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் காவிச் செல்ல வேண்டும்.

இளையவர்கள் அரசியல் அறிவின்றி.. வெறும் பாலுணர்வுக்கு அடிமையாகும் ஜந்துகளாக வளர்க்கப்படுவதை எதிரி நிச்சயம் ஊக்குவிப்பான். ஏனெனில் அதில் அவனின் எதிர்பார்ப்பும் ஈடேறுகிறது. நாம் விமர்சனங்களை அள்ளி வீசிக் கொண்டிராமல்.. எதிரியின் நகர்வுகளுக்கும் செயற்பாடுகளுக்கும் மத்தியில் எமது சமூகத்தை பின்னோக்கி வைத்திருக்காமல்.. நவீன உலகோடு அதன் தேவைகளோடு அறிவியலோடு ஒருங்கிணைத்து அதேவேளை எமது சமூக விழுமியங்களையும் அரசியல் விடுதலைக்கான தேவையையும் உணர்த்திச் செல்லும் திட்டங்களை அமுல்படுத்த முனைய வேண்டும். அதுவே சிறந்தது என்று நான் கருதுகிறேன்.

இதனை புலம்பெயர் இளையோர் அமைப்புக்கள் ஒரு கட்டமைப்பினை நிறுவி முன்னெடுத்துச் செல்லலாம். அதற்கு பிற அமைப்புக்கள்.. பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள்.. கோவில்கள்.. தேவாலயங்கள் போன்றவற்றை அணுகலாம். பல்கலைக்கழகங்களோடு நேரடித் தொடர்புகளை வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி லியோ லயன்ஸ் இன்ரர்க்கழகம் இப்படியான சமூக அமைப்புக்களூடும் சர்வதேச தொண்டு அமைப்புக்களோடும் இணைந்து இந்த திட்டங்களை செயற்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரின் கருத்தை ஆமோதிக்கிறேன்.

நெடுக்ஸின் கருத்துக்கு ஒரு பச்சை

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

en yaarlpaanathila kathalika koodatho?

இல்லை சுண்டு, யாழ்ப்பாணத்தில காதல் சோடிகள் கைகோர்த்து திரிகிறதால கோயிலுக்கு தூக்கு காவடி எடுக்கிறதுக்கும், மோர்ப்பந்தலில சக்கரைத்தண்ணி குடிக்கிறதுக்கும் ஆக்கள் இல்லை என்று கவலைப்படுகிறீனம். நீங்கள் எமக்காக எவ்வளவு செய்து இருக்கிறீங்கள். ஓர் சின்ன உதவி செய்யமாட்டீங்களா... அடுத்தவருசம் ஒருக்கால் நல்லூருகு போய் தூக்குக்காவடி எடுத்து மோர்த்தண்ணியும் கொஞ்சம் குடிச்சுப்போட்டு வாறது.. :D

கருக்கலைப்புகள் உடல்நலத்திற்கு நல்லதில்லை ஆகவே ஆணுறை பெண்ணுறை பாவிப்பது குறித்த விழிப்புணர்வை இளைய சமூகத்திற்கு போதிப்பது அவசியமாகின்றது. அத்தோடு பாதுகாப்பான உறவுமுறைகள் குறித்த விழிப்புணர்வால் பல்வேறுவிதமான பால்வினை நோய்களில் இருந்து எதிர்காலச் சமுதாயத்தை பாதுகாக்கமுடியும். மற்றபடி காதல்ஜோடிகள் கைகோர்கின்றார்கள் செல்போன் கதைக்கின்றார்கள் முத்தம் கொடுக்கின்றார்கள் குய்யோ மையோ கலாச்சரம் கவிண்டுபோகின்றது என்று கத்தி ஒன்றும் நடக்கப்போவதில்லை. இயற்கையான காதல் காமம் போன்ற விடயங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பல்வேறு எதிர்வினைகளை தோற்றுவிக்கின்றது. ஒருவனுக்கு ஒருத்தி என்று கற்பு வலியுறுத்தப்படும் கலாச்சார இந்தியாதான் இன்று எயிட்சில் முதலிடம். உலகில் அதிகம் பாலுறவு திரைப்படங்களை தேடுபவர்களும் இந்தியர்கள்தான். இன்று யாழ்பாணத்தில் பல்வேறு குழுக்கள் தனிநபர்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றனர். குடும்ப மானம் கெளரவம் போன்ற விடயங்களால் நூற்றுக்கு ஒன்றே வெளிச்சத்திற்கு வருகின்றது. இயற்கையான இந்த விடயங்கள் மீதான பயித்தியக்காரத்தனமான கட்டுப்பாடுகளால் பாதகமே அதிகம். நேரான ஒரு வளிமூடப்படும்போது கள்ளத்தனமானதும் வன்முறையானதுமான பத்துவளிகள் திறக்கப்படும். வேலி பாய்தல் அதிகமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக எந்த ஒரு கலாச்சாரப் போதனைக்கு கீழும் அதுசார்ந்த அமைப்புகளுக்கு கீழும் தனிநபர்கள் இனிமேல்காலத்தில் கட்டுப்பட மாட்டார்கள். சமூகத்தின் மையக் கரு தகர்த்தெறியப்பட்டுவிட்டது. தேர் திருவிழா சப்பறம் மோர்த்தண்ணி திருக்கலியாணம் என்று குறுகிய வட்டத்துள் நின்று இதுதான் தமிழ் தமிழினம் கலாச்சாரம் பண்பாடு என பினாத்துவதை செவிமடிக்க நூற்றுக்கு 95 வீதமானவர்கள் தயாராக இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய உலகம் இப்பிடித்தான் இருக்கும்.

எந்த கத்துகத்தினாலும் ஒண்டும் நடக்கப்போறேல்லை.

அதுவும் யாழ்ப்பாணம் அந்தமாதிரி முன்னேறிட்டுது

...

போராட்டத்தின் இயங்கு சக்தியாக மாணவர்களும் இளைஞர்களுமே இருந்தனர். இதனை சிங்களமும் பிற அந்நிய உளவாளிகளும் நன்கு அறிவர். அந்த மாணவ சமூகத்தின் இளைய சமூகத்தின் சிந்தனையை வேறு திசைப்படுத்துவதன் மூலமே போராட்டம் புத்துயிர்ப்பு பெறுவதை தடுக்க முடியும். அதுமட்டுமன்றி தமது அரசியல் குத்துவெட்டுக்களை எதிர்ப்புக்கள் இன்றி சாதிக்க முடியும்.

நாம் வெறுமனவே இதை யாழ்ப்பாணத்திற்கான ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு விமர்சித்துக் கொண்டிராமல்.. நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப அறிவும் பாவனையும் இளையோர் மத்தியில் வளர்க்கப்படும் அதேவேளை அதைப் பயனுள்ள வகைக்குள் வைத்திருப்பது பற்றி பாடசாலைகளூடு போதிக்கலாம். பாலியல் கல்வியை போதிப்பதும்.. பாதுகாப்பான உறவுகளும் பல பிரச்சனைகளை குறைக்க வழி செய்யும்.

...

இதனை புலம்பெயர் இளையோர் அமைப்புக்கள் ஒரு கட்டமைப்பினை நிறுவி முன்னெடுத்துச் செல்லலாம். அதற்கு பிற அமைப்புக்கள்.. பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள்.. கோவில்கள்.. தேவாலயங்கள் போன்றவற்றை அணுகலாம். பல்கலைக்கழகங்களோடு நேரடித் தொடர்புகளை வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி லியோ லயன்ஸ் இன்ரர்க்கழகம் இப்படியான சமூக அமைப்புக்களூடும் சர்வதேச தொண்டு அமைப்புக்களோடும் இணைந்து இந்த திட்டங்களை செயற்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

நெடுக்ஸின் கருத்து வரவேற்கத் தக்கது. icon_plusSign_green.jpg

அதே நேரம் புலத்தில் இயங்கும் இளையோர் அமைப்பு இதனை கருத்தில் கொண்டு முன்னெடுத்துச் செல்வார்களா?

Edited by குட்டி

யாழ்ப்பாணத்திலை என்ன எண்டு நாங்கள் ஆராய முந்தி எங்கடை புலம்பெயர் வாழ் அவலங்கள் மிக மோசமாக போவது பற்றி பலர் பேசவே முன்வருவதில்லை.. அண்மையில் 12 வயது தமிழ் பெண் தன் சொந்த பாட்டானால் கருவுற்றது நடைபெற்றது யாழ்ப்பாணத்தில் அல்ல! லண்டனில்! கனடாவில் ஒரு 13வயது பெண் சொந்த சகோதரனால் பாலியல் வனடமுறைக்குள்ளாகிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இதை விட மிக மோசமான பல செயற்பாடுகள் பெற்றோர்களின் அறிவீனத்தால் நடைபெறுவது இங்கு மறைக்கப்பட்டு வருகிறது. இதை மறைப்பதை விட இவ்வாறு நடைபெறும் பிரச்சனைகளை நாம் கூடி ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தலைக்கு மேல் வெள்ளம்ட வந்த பின் குழறுவதால் ஒரு பிரழியோசனமும் இல்லை!

பாண்டு இடைக்கிடை இப்படி நாலு நல்ல வார்த்தையும் சொல்லுறிங்கள்.

நன்றி. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

"நிலையான நிலை என்பது கலாச்சாரத்தில் இல்லை"

காலத்திற்கேற்ப அது மாறிகொண்டே இருக்கும்...... 50 வருடங்களுக்கு முன்பு பெண்கள் குட்டை பாவாடை அணிவது என்பது யாழ்பாணத்தில் இயல்பாக இருந்தது. அது ஆங்கிலேயர் விட்டு சென்ற எச்சமாக ஒட்டிகொண்டது. இந்தியாவுடனான தொடர்பு அதிகளவில் இல்லாதிருந்ததாலும் இலங்கை தமிழர்கள் இந்திய தமிழர்களிலும்விட உசத்தி என்ற ஒரு மாயைக்குள் வீழ்ந்ததாலும் வந்த நவநாகரீகம் அது. பின்பு ஆங்கில மோகம் தணிய இந்திய தமிழ் சினிமா உட்புகுந்து இந்தியவழி கலாச்சாரத்தை உட்புகுத்த. இழுத்து மூடினார்கள் குதிக்கால்வரை. எப்போதும் ஒரு திகில் ஆண்களுக்கு எந்த விதியுமில்லை அவர்கள் இலகுவாக எதையும் பற்றி கொள்கிறார்கள் சமூகசிக்கல் எதுவுமில்லை. கலாச்சார அடையாளங்களை பெண்களே சுமக்க வேண்டும் என்ற ஆணாதிக்க வெறிதான் பெண்கள் கொஞ்சம் காலை எட்டி நடந்தாலும் கூயோ மாயோ என்று எம்மை கத்த தூண்டுகின்றது.

கலாச்சார மாற்றம் காலத்திற்கேற்ப மாறுகிறது.... (இயற்கை)

மாற்றபடுகின்றது (செயற்கை)

அடுத்தடுத்து இந்திய அழகிகள் உலக அழகிகள் ஆனது என்பதற்குள் மறைந்திருந்த மர்மத்திற்கு தற்போதைய இந்திய வாரபத்திரிக்கைகளே ஆதாரம். வெளிநாடுகளில் உற்பத்தியாகும் பெண்களின் அழகு பூச்சுக்களுக்கு விளம்பரம் போடத வார பத்திரிகை ஒன்றை தமிழில் இப்போது காணவே முடியாது. அவர்களுடைய பணம்தான் யார் அழகி என்பதை தீர்மானிக்கும் தவிர ஒரு பதினைந்தோ இருபது பெண்கள் எல்லாவற்றையும் களட்டிபோட்டுவிட்டு ஒரு கச்சை துணியுடன் அங்கும் இங்கும் நடக்க வேண்டியதுதான். தமது வியாபரத்திற்கு யாரை தெரிவு செய்தால் கோடி வரும் என்பதே அழகிபோட்டியின் முடிவு.

கீழைநாடுகளில் பெண்கள் புகைபிடிக்காது இருப்பது பற்றி பெரும் கவலையில் இருக்கின்றன அமெரிக்க சிகரட் கொம்பனிகள்.......... நாம் எப்போதாவதுதான் சிந்திக்கிறோம். அவர்கள் ஆட்களை வேலைக்கு அமர்த்தி 24மணிநேரமும் சிந்திக்கின்றார்கள். எமக்கு இப்போது நம்ப கடினமாகத்தான் இருக்கும்............. ஆனால் எப்படியாவது யாழ்பாணத்தில் பெண்களின் கைகளில் சிகரட் பாக்கட்டுகள் போய்சேர ஒரு வழியை கண்டுபிடித்துவிடுவார்கள்.

அறிவுஇல்லாத இடங்களில் இருக்கும் ஜனங்களை அறிவுசார்ந்தோராக சித்தரித்து ஒரு மாயையை உருவாக்குவது...... அதற்கு பலிக்கடாவாக யாழ்தமிழனுக்கு யாரும் சொல்லிகொடுக்க தேவையில்லை. உயர்ஜாதியாக உய்யாரமா இருந்தவர்கள் இப்போ சிங்களவன் காலை கொடுத்தாலும் நக்க தயார். தற்காலிகமாக ஜாதியையும் அதன் புனிதங்களையும் உயர்பார்ப்பாண வங்கி ஒன்றில் அடைவு வைத்திருக்கு காலம் நேரம் கனிந்து வந்தால்? மீண்டும் எடுத்துகொள்ளலாம். பின்பு அந்த முடங்களிடம் தமது தயாரிப்புகளை உட்புகுத்தி அதற்கு அடைமையாக்கிவிட்டு அவர்களை தமது அடிமை கழுதைகளாக்கி அவர்களது ஊதியங்களை பறித்தெடுப்து.

இதை நவரீகம் என்று நம்பி ஏமாறுபவர்களுக்கு எமாந்த விடயமே சாவு வந்து கதவை தட்டும் காலங்களில்தான் புரியும்.

பாணகார வர்க்கத்தின் ஆழுமைகள் பற்றிய விழிப்புணர்ச்சி கீழைநாடுகளில் எள்ளளவும் இல்லை. உதாரணத்திற்கு ஜி8 மாநாடுகளுக்கு எதிராக எத்தனையோ வெள்ளைகாரர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். புலம்பெயாந்து 20-30 வருடங்களாக வாழும் தமிழ்ர்களுக்கு அங்கு நடப்பது எதுவுமே தெரியாது. அந்தளவில்தான் பணக்கார ஆதிக்கம் இருக்கின்றது.

காலச்சாரம் மாற்றம் நிறுத்த முடியாதது............ நல்ல திசையிலா அழிவு திசையிலா என்பது நாட்டு மக்களின் அறிவை பொறுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய இந்திய நவநாகரீக வளர்ச்சி இந்தளவிற்கு முன்னேறிவிட்டது.

இது வளர்ந்துவந்த ஒவ்வொரு படிக்கல்லிலும் பணக்கார நாய்களின் ஆதிக்கமே இருந்திருக்கும். அவர்களது ஊடகங்கள் இந்த பெண்களை ஒரு உயர்ந்தவர்களாக சித்தரித்து ஒரு தாக்கத்தை உள்ளுரில் உருவாக்கும். நாம் இப்படியாவதற்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனையையே சாதாரண பெண்களுக்கும் கொடுக்கும்............. பணமே வாழ்வென்றாகிவிட்டால்? பணம்தான் வேண்டும் எப்படி வந்ததென்று யாருக்கும் தேவையில்லை.

உதாரணத்திற்கு யாழ் உயர் ஜாதிகாரர்களுக்கு புலத்தில் இருந்து பணமே தேவை. அது அங்கே தொழிலால் அவர்களால் கீழ்ஜாதி என்று கொடுமைக்குள்ளாவோர்கள் செய்யும் அதே தொழி;லை அவர்களது சொந்த பிள்ளைகளே செய்து சேமித்து அனுப்புகிறார்கள் (மலசலகூடங்களை கழுவுதல் அதிலும் ஓவர்டைம்) உண்மைகளை தேட யாருக்கும் இஸ்டமில்லை. தம்மை உயர்வாக காட்டும் ஒரு மாய தோற்றம் வேண்டும் அதற்கு விபச்சார தொழிலே ஒரு நவநாகரிக தொழிலாக மாறலாம்............. மாறிவிட்டது மேலைநாடுகளில். செக்ஸ்படங்களில் நடிக்கும் நடிகைகளை அழைத்து பிரான்சில் அதிபரே விருது கொடுக்கிறார்....... அவர்கள் கௌவுரவமாக சிவப்பு கம்பளத்தில் நடந்துவந்து விருது வாங்கி செல்கிறார்கள். செலவு நாட்டு மக்களின் வரி பணம்.

post-1409-053204400 1284184653_thumb.jpg

யாழ் கீழ்சாதி ஏழைகளுக்கு பொறாமை போல... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கீழ்சாதி ஏழைகளுக்கு பொறாமை போல... :rolleyes:

போலிகளில் வெறித்து கிடப்பவர்களை பார்த்தால் பாவமும் சிரிப்புத்தான் வருமே தவிர.

ஏழைகளுக்கு பொறாமைவராது........... அடுத்தவர்களுடைதற்கு ஆசைபடுபவர்களல்ல...

தற்போதைய இந்திய நவநாகரீக வளர்ச்சி இந்தளவிற்கு முன்னேறிவிட்டது.

இது வளர்ந்துவந்த ஒவ்வொரு படிக்கல்லிலும் பணக்கார நாய்களின் ஆதிக்கமே இருந்திருக்கும். அவர்களது ஊடகங்கள் இந்த பெண்களை ஒரு உயர்ந்தவர்களாக சித்தரித்து ஒரு தாக்கத்தை உள்ளுரில் உருவாக்கும். நாம் இப்படியாவதற்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனையையே சாதாரண பெண்களுக்கும் கொடுக்கும்............. பணமே வாழ்வென்றாகிவிட்டால்? பணம்தான் வேண்டும் எப்படி வந்ததென்று யாருக்கும் தேவையில்லை.

உதாரணத்திற்கு யாழ் உயர் ஜாதிகாரர்களுக்கு புலத்தில் இருந்து பணமே தேவை. அது அங்கே தொழிலால் அவர்களால் கீழ்ஜாதி என்று கொடுமைக்குள்ளாவோர்கள் செய்யும் அதே தொழி;லை அவர்களது சொந்த பிள்ளைகளே செய்து சேமித்து அனுப்புகிறார்கள் (மலசலகூடங்களை கழுவுதல் அதிலும் ஓவர்டைம்) உண்மைகளை தேட யாருக்கும் இஸ்டமில்லை. தம்மை உயர்வாக காட்டும் ஒரு மாய தோற்றம் வேண்டும் அதற்கு விபச்சார தொழிலே ஒரு நவநாகரிக தொழிலாக மாறலாம்............. மாறிவிட்டது மேலைநாடுகளில். செக்ஸ்படங்களில் நடிக்கும் நடிகைகளை அழைத்து பிரான்சில் அதிபரே விருது கொடுக்கிறார்....... அவர்கள் கௌவுரவமாக சிவப்பு கம்பளத்தில் நடந்துவந்து விருது வாங்கி செல்கிறார்கள். செலவு நாட்டு மக்களின் வரி பணம்.

மருதங்கேணி

கடந்த முப்பது வருடகால மாற்றத்தில் குறிப்பாக புலப்பெயர்வு என்பது ஒரு புதிய வர்க்க நிலையை தோற்றுவித்துள்ளது. தாயகத்தில் உள்ள மக்களில் வெளிநாட்டு உதவி உள்ளவர்கள் உதவி இல்லாதவர்கள் என்ற இரண்டு பிரிவு தோற்றம் பெறுகின்றது. உதவி உள்ளவர்கள் உதவியற்றவர்களை ஆதிக்கம் செய்யும் நிலை பொருளாதார அடிப்படையில் உருவாகின்றது. போர்ச்சூழல் இந்த அடிப்படையை மிகமோசமாக விரிவாக்கம் செய்கின்றது. வெளிநாட்டு உதவி பெறும் ஒவ்வொருவரும் விவசாயத்துக்கு முதலீடு செய்வதோ உழவு இயந்திரங்கள் வாங்குவதோ அல்லது பிற வாகனங்கள் சிறுதொழிகள் செய்வதோ எதுவோ ஒன்றை ஆரம்பிக்கின்றபோது தவிர்க்க முடியாமல் அவர்கள் முதலாளிநிலையை அடைகின்றனர். புதிய ஏற்றதாழ்வு உருவாகின்றது. இதற்கு அடிப்படையாக தற்போதைய சூழ்நிலையில் புலம்பெயர்ந்த நாமே இருக்கின்றோம். நாம் எவ்வளவுதான் தேசியம் பொதுஉடமை சுயநிர்ணயம் என்று உணர்ச்சி பொங்க கூறினும் இந்த வகையில் தாயக மக்களை இரண்டாக வர்க்க அடிப்படையில் பிளக்கின்றோம். எமக்குள் இருக்கும் ஏற்றதாழ்வுகளை கடந்து பணம் எந்தவகை தொழிலில் இருந்து வந்தது என்பதை கடந்து இது நடைபெறுகின்றது. பொருள் எம்மை ஆள்கின்றது. ஒருவகையில் புலம்பெயர் தேசத்தில் அடிமைத்தனத்துடன் சம்பாதித்த பணம் தாயகத்தில் என்னுமொருவரை அடிமைப்படுத்த பயன்படுகின்றது என்றும் சொல்ல முடியும். சுட்டுவிரல் என்னுமொருவரை சுட்டிக்காட்டினும் மற்ற நான்கு விருல்களும் எமது நெஞசையே சுட்டுகின்றது என்பது உண்மையே.

மேலும், அரசனின் தவறுகளை கெளரவமாக அந்தப்புரத்துள் அடங்கிவிடும். கடவுளின் தவறுகள் லீலைகள் என்று கெளரவிக்கப்படும். பெரும் முதலாளிகள் கனவான்கள் வைப்பாட்டி வைத்திருப்பதும் கெளரவம். இன்று எம்மவர்கள் கெளரவமாக ஆடும் பரதநாட்டியம் தேவதாசிகளிடம் இருந்து பிடுங்கப்பட்டதுதான். பரத்தை ஆட்டம் அல்லது தேவடியா ஆட்டம் என்றது பரதமுனவர் உருவாக்கினார் என்று இன்று கெளரவமான கலையாகிவிட்டது. எமது பண்பாடு கலாச்சாரத்தின் அடிப்படையே மிகச் சிக்கலானது.

செக்ஸ் பட நடிகைக்கு விருது கொடுக்கும் நாடுகள் முன்னேறித்தான் உள்ளது. அவ்வாறான நாடுகளுக்கு எப்படியாவது வந்துவிடவேண்டும் என்று எமது சமூகம் கிடையாய் கிடக்கின்றதே ஏன்? நாங்கள் வந்து வாழ்கின்றோமே ஏன்? செக்ஸ்சை தூக்கி தலையில் வைத்து அதை ஒரு பூதகரமான பிரச்சனையாக உருவாக்கி மிக கடுமையான மன இறுக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம். செக்ஸை அடிப்படையாகவைத்து இன்றும் மரணதண்டனைகளை நிறைவேற்றுகின்றார்கள். இதெல்லாம் எமது கண்ணோட்டத்தில் உள்ள குறைபாடு, எமக்கான பித்தியோக மனநோய். கையெடுத்து கும்பிடுவது கூட தாழ்ந்தவர்களை தொடுவதை தவிர்க்கும் அடிப்படையில் வந்த பண்பாட்டு அடயாளம்தான். இயற்கையான பாலுறவு மீதான கடும்போக்கும் இந்தத அடிப்படையில் வந்ததுதான். இன்று அதையே கலாச்சாரம் என்று வாய்கிழிய கத்துகின்றோம். என்னத்தை கண்டோம்? யாழ்பாணத்தில் கைகோர்த்து திரியும் இளம் காதல் ஜேடிகள்? கேள்விக்குறி போட்டு தலைப்பு போட்டு ஏதோ நடக்கக் கூடாதது நடந்தவிட்டமாதிரி ஒரு அங்கலாய்ப்பு. இந்த இறுக்கம் தான் எம்மை பிளந்து பிரித்து சிதைத்தது. ஆயிரம் பெண்கள் சிங்களப்படைகளால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதை தடுக்கும் வக்கற்ற நிலையை உருவாக்கியது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய நிலைபாடே எனதும் என்று கருதுகிறேன்.....

ஈழம் கிடைத்திருந்தால் கூட ஈழத்திற்காக தமது உயிரையும் இழந்து உடமைகளையும் இழந்த மக்களை எதுவித பாதிப்பும் இல்லாது பணம் பணம் என்று வெளிநாடுகிளில் கிடந்த பணபேய்கள் போய் அடிமைகளாக்க விலைபேசும் வியாபாரமே நடந்திருக்கும் என்றே நான் பல தடவைகள் நினைத்திருக்கிறேன்.

ஈழ விடயத்தில் எதிர்மறையான முடிவு வந்தாலும் ஆதிக்ககாரர்களின் அடிமைபடுத்தும்; நிலைபாட்டடில் மாற்றங்களை காணமுடியாது உள்ளது.

போலிகளுக்குள் மிக இலகுவாக புதையுண்டு போகிறார்கள்.

சுகன் ஆழமான கருத்துக்கள் நன்றி.

தனக்குத்தானே தானே வரிந்து கொண்ட மூடநம்பிக்கைகள் வரட்டுக் கொளரவங்களில் இருந்து விடுதலை பெற முடியாத இனம் எப்படி 2ஆம் 3ஆம் தரப்பு அடக்கு முறையில் இருந்து விடுதலை பெற முடியும்.

உண்மை சுகன்..

இந்த பிந்தங்கிய கூட்டம் கெட்டகேட்டுக்கு சுதந்திரம் ஒரு கேடா.....

உண்மை சுகன்..

இந்த பிந்தங்கிய கூட்டம் கெட்டகேட்டுக்கு சுதந்திரம் ஒரு கேடா......"பனங்காய்"

எமது போராட்டதில் சமூகத்திற்கான மாற்றமும் ஒரு முக்கியபங்காக இருந்தது.பின்னர் ஆயுத மோகத்திலும், தனிநபர் வழிபாட்டிலும்,சிங்களவனை பழிக்குபழி வாங்கவேண்டும் என்ற எண்ண்முமே மேலோங்கிச் சென்றதால் எதையுமே சாத்திக்க முடியாமல் போய்விட்டத்து.

அதற்காக எமது இனத்தை நாம் இப்படியே விட்டுவிட முடியாது.கடைசி ஒரு நாலு பேராவது கற்பனையுலகில் இருந்து விடுபட்டு இன்றைய யதார்த்த நிலை உணர்ந்து எம்மை முதலில் இலங்கையில் தக்கவைப்பதற்கு முன்வரவேண்டும்.பின்னர் ஒரு அடிப்படைமாற்றத்தை ஆரம்ப பாடசாலை கல்வியில் இருந்து கொண்டுவரவேண்டும்.இவ்வளவு தமிழன் புலம் பெயர்ந்து நாகரீக உலகில் இருந்து படித்த அனுபவித்த நல்ல நாலுவிடயங்களை எமதுமக்களுக்கு கொண்டுபோய் சேர்க்காவிட்டால் நாம் ஒன்றுமற்றவர்களாகிவிடுவோம்.

நான் அறிய எனது நண்பரொருவர் ஒரு சிறிய திட்டத்தை எந்த வித அரசியல் கலப்புமின்றி ஆரம்பித்துவிட்டார்.இப்படியான நிகழ்வுகளே இப்போது எமதுமக்களுக்கு தேவை

"விதை" என்ற விஜய் டீ.வீ நிகழ்சியை பார்க்கவும்.சூரியா,கோபினாத் இணைந்து நடாத்தியது.இப்படியான திட்டமிட்ட மிகவும் ஒழுங்கான அமைப்புக்களே எமக்கு இப்போது தேவை.

ஒரு அடிப்படைமாற்றத்தை ஆரம்ப பாடசாலை கல்வியில் இருந்து கொண்டுவரவேண்டும்.

சிங்களவன் அனுமதிக்கமாட்டான்.. முண்டினால்.. நாலாம் மாடிக்கு கொண்டு போய் முள்ளுக்கம்பியால் குதத்தை கிண்டுவான்..

எதுக்கு வம்பு.. எல்லோரும் சிங்களவனை அண்டிவாழ்வோம்.. நக்கிப்பிழைப்பதுதான் எமக்கு கைவந்த கலையாச்சே...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சுகன்..

இந்த பிந்தங்கிய கூட்டம் கெட்டகேட்டுக்கு சுதந்திரம் ஒரு கேடா......"பனங்காய்"

எமது போராட்டதில் சமூகத்திற்கான மாற்றமும் ஒரு முக்கியபங்காக இருந்தது.பின்னர் ஆயுத மோகத்திலும், தனிநபர் வழிபாட்டிலும்,சிங்களவனை பழிக்குபழி வாங்கவேண்டும் என்ற எண்ண்முமே மேலோங்கிச் சென்றதால் எதையுமே சாத்திக்க முடியாமல் போய்விட்டத்து.

அதற்காக எமது இனத்தை நாம் இப்படியே விட்டுவிட முடியாது.கடைசி ஒரு நாலு பேராவது கற்பனையுலகில் இருந்து விடுபட்டு இன்றைய யதார்த்த நிலை உணர்ந்து எம்மை முதலில் இலங்கையில் தக்கவைப்பதற்கு முன்வரவேண்டும்.பின்னர் ஒரு அடிப்படைமாற்றத்தை ஆரம்ப பாடசாலை கல்வியில் இருந்து கொண்டுவரவேண்டும்.இவ்வளவு தமிழன் புலம் பெயர்ந்து நாகரீக உலகில் இருந்து படித்த அனுபவித்த நல்ல நாலுவிடயங்களை எமதுமக்களுக்கு கொண்டுபோய் சேர்க்காவிட்டால் நாம் ஒன்றுமற்றவர்களாகிவிடுவோம்.

நான் அறிய எனது நண்பரொருவர் ஒரு சிறிய திட்டத்தை எந்த வித அரசியல் கலப்புமின்றி ஆரம்பித்துவிட்டார்.இப்படியான நிகழ்வுகளே இப்போது எமதுமக்களுக்கு தேவை

"விதை" என்ற விஜய் டீ.வீ நிகழ்சியை பார்க்கவும்.சூரியா,கோபினாத் இணைந்து நடாத்தியது.இப்படியான திட்டமிட்ட மிகவும் ஒழுங்கான அமைப்புக்களே எமக்கு இப்போது தேவை.

தலப்பையும் ஒருக்கால் அண்ணாந்து பார்த்துவிட்டு எழுதினால் நல்லது அண்ணாச்சி..............

எதையெழுதினாலும் புலிவாந்தி எடுப்பதே பிழைப்பாய்போய்விட்டது.... ஏன் கஸ்ரபட்டு தட்டச்சு செய்கிறீர்கள் வேறொரு தலைப்பில் எழுதியதை அப்படியே கொப்பி பேஸ்ட் பண்ண வேண்டியதுதானே? எல்லாத்திலும் ஒரே வாந்திதானே...

முன்பு இந்த நிலை யாழில் இருக்கவில்லை........

ஈழவிடுதலை போர் களத்தில் நடந்துகொண்டீருந்த அதே நேரம் பெண்விடுதலை சமூகசீரழிவுகளில் இருந்து விடுதலை போலிசாதியத்தில் இருந்து விடுதலைபோன்றவை தமிழ்நிலத்தில் நடந்துகொண்டிருந்தது.

சில அரசியல் தர்க்க யாதார்த்த நிலைமையினால் ஒரு சமன்பாட்டு கோட்பாட்டை தோற்றுவிக்க முடியாது போயிருந்தது. அது அந்தகாலத்தில் ஆகத விடயமுமாக இருந்தது. அன்ரன் பாலசிங்கம் அவர்களே அடிக்கடி கூட்டங்களில் கூறுவார் ஆரம்பகாலங்களில் கொமினிசியம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது ஆனால் தற்போதைய உலக யதாhத்தத்தில் எமக்கு ஒத்துவராத ஒன்று அது என்று.

இப்போ சிங்களவனின் கழிவறைக்குள் இருந்தவர்கள் வெளியில் உலாவ வருவதாலும்......... சில புலம்பெயர் பொறம்போக்குகள் அங்கு போவதாலுமே வழி தடுமாறுகிறது. அறிவுசார்ந்த நிலமையை நாடு பெறுவதற்கு மக்களும் முயற்சிக்க வேண்டும். போலிகளுக்குள் புதையுண்டு.......... போலியாடைகளை அணிந்து நிர்வாணமாக திரிய பெரும்பாண்மை கூட்டம் ஒன்று தயாரக இருக்கும்போது. சட்டரீதியான அறிவு மாற்றம் எதிர்வினையையே தோற்றுவிக்கும்............ இது சினிமாபடங்கள் சம்பந்தமாக புலிகள் கூறிவந்தவிடயம். படங்களை தடைசெய்ய முடியாது செய்வும் கூடாது முடிந்தளவில் கூடாததுகளை தணிக்கை செய்தே நகரவேண்டும் என்று கலைகலாச்சார பிரிவினர் எழுதியிருந்தார்கள்.

இனி மதங்கள் சார்ந்து வந்த சமூக கொடுமைகளுக்கும் புலிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்போல்?????

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திலை என்ன எண்டு நாங்கள் ஆராய முந்தி எங்கடை புலம்பெயர் வாழ் அவலங்கள் மிக மோசமாக போவது பற்றி பலர் பேசவே முன்வருவதில்லை..

அண்மையில் 12 வயது தமிழ் பெண் தன் சொந்த பாட்டானால் கருவுற்றது நடைபெற்றது யாழ்ப்பாணத்தில் அல்ல! லண்டனில்! கனடாவில் ஒரு 13வயது பெண் சொந்த சகோதரனால் பாலியல் வனடமுறைக்குள்ளாகிய சம்பவம் நடைபெற்றுள்ளது.இதை விட மிக மோசமான பல செயற்பாடுகள் பெற்றோர்களின் அறிவீனத்தால் நடைபெறுவது இங்கு மறைக்கப்பட்டு வருகிறது. இதை மறைப்பதை விட இவ்வாறு நடைபெறும் பிரச்சனைகளை நாம் கூடி ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தலைக்கு மேல் வெள்ளம்ட வந்த பின் குழறுவதால் ஒரு பிரழியோசனமும் இல்லை!

இது பற்றி எழுதவேண்டும் ஏனெனில் இங்கு சில பச்சைகள் குத்தப்பட்டள்ளன

இங்கு திரியின் நோக்கமென்ன...?

யாழில் நடப்பதை கிண்டலடிப்பதோ அல்லது எமக்கென்ன வெளியில் சுத்தமாக இருக்கின்றோம் என்றோ இத்திரி கொண்டுவரப்பட்டதா...???

இல்லை எம்மால் ஏதாவது செய்ய முடியுமா அல்லது நாமும் இதற்கு ஏதாவது ஒருவிதத்தில் காரணமா அதைத்தடுக்க எம்மால் ஏதாவது செய்யமுடியுமா என்று இத்திரி ஆரம்பிக்கப்பட்டதா...?

அப்படி கிண்டலடிப்பதாக அல்லது எம்மை சுத்தமானவர்கள் என்று சொல்லப்பட்டாலே தங்களது கருத்து சரி

மாறாக இரண்டாவது காரணமெனில் தங்கள் கருத்து தப்பு

தவறைத்திருத்த அல்லது குறையை நிவர்த்தி செய்ய முனைபவனிடம் நீ சுத்தமா என்று கேட்பது எப்படி நியாயமாகும்..???

நீங்கள் சுமத்திய அதே அசுத்தங்கள் ஊரிலும் நடந்துள்ளன என்று சொல்ல என்னிடமும் ஆதாரம் உண்டு

ஆனால் அது என்னுடைய நோக்கத்தை கெடுத்துவிடும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்டால் ஒன்டுமட்டும் விளங்கவில்லை.யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலத்தில் உள்ளவர்கள் எதுவும் செய்யலாம்.ஆனால் அங்கு உள்ளவர்கள் எது செய்தாலும் தப்பு.ஏன் இந்த நிலை.இங்கிருந்து விடுமுறைக்கு செல்பவர்கள் என்ன ஆட்டமும் போடலாம் ஆனால் அங்கிருப்பவர்கள் ஒன்றும் செய்யக்கூடாது.நான் எனது காதால் கேட்டது(காதால் கேட்க்காமல் மூக்காலையா கேப்பது என்டு கேட்ப்பது விளங்குது :( )யாழில் ஒரு முன்னேற்றமும் வரக்கூடாது அப்பதான் இங்கிருந்து போய் பிலிம் காட்டலாமாம் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.